Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தசங்கரி ஐயாவிற்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன்! - தம்பிராசா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
THAMBIRASA-150-news.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட மாகாண சபையில் கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் எனவும் இவ்வாறு ஆனந்தசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து தீக்குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என தம்பிராசா (தம்பி) தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

  

கிளிநொச்சியில் கூட்டணியின் தலைவர் சங்கரி ஐயா திட்டமிட்ட முறையில் தோற்கடிப்பட்டுள்ளார். அவராலேயே கிளிநொச்சி தனி மாவட்டமாக உருவானதை மக்கள் மறந்து விடாது வாக்களிக்கத் தயாரான வேளையில் சக கட்சியில் போட்டியிட்ட சிலர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர் வெற்றியைத் தடுத்து விட்டதாகவும் தம்பிராசா தெரிவித்தார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=93814&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் ஒரே தொண்டருக்கும் ஆபத்து.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் ஒரே தொண்டருக்கும் ஆபத்து.. :lol:

 

 

அதையும் இழக்கும்   போதாவது

அவருக்கு  தான் செல்லாக்காசு  என்று

அறிவுக்கண் திறக்க வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி குளியுங்க ராசா ,செலவை நான் ஏற்கிறேன்

தம்பி குளியுங்க ராசா ,செலவை நான் ஏற்கிறேன்

தண்ணியிலை தானே...?? கிளிநொச்சியிலைதான் நல்ல குளங்கள் இருக்கே...??   :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அவர் டீ குடிக்கப்போறதாய் சொல்லி இருப்பார், இந்த ஊடகங்கள்தான். . . .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீக்குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்- ஏன் இரண்டுவகைப் போராட்டம் ...... ? போராட்டம் வெற்றி பெறவேண்டுமாயின் தீக்குளிப்புதான் இதற்க்கான தீர்வைப் பெற்றுத்தரும் . :blink:  :icon_mrgreen:  

  • கருத்துக்கள உறவுகள்

தீக்குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்- ஏன் இரண்டுவகைப் போராட்டம் ...... ? போராட்டம் வெற்றி பெறவேண்டுமாயின் தீக்குளிப்புதான் இதற்க்கான தீர்வைப் பெற்றுத்தரும் . :blink:  :icon_mrgreen:  

 

அது தானே

இசை    சொன்னது போல்

கடைசித்தொண்டனும் போக

கூட்டணி மூடியாச்சு என்ற தீர்வு தரும்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி குளியுங்க ராசா ,செலவை நான் ஏற்கிறேன்

பெண்னொருவர்க்குத்தானாம் சீட். செலவை ஏற்பதாக சொன்னவர் எங்கிருந்த்ஹாலும் உடனடியாக அரிச்சனை மண்டபத்துக்கு வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்னொருவர்க்குத்தானாம் சீட். செலவை ஏற்பதாக சொன்னவர் எங்கிருந்த்ஹாலும் உடனடியாக அரிச்சனை மண்டபத்துக்கு வரவும்.

 

 

இந்த விடயத்தில் மட்டும்    எல்லோரும் ஒன்றாகி  விடுகிறார்கள் :D  :D

விட்டால் எல்லாருமாய் சேர்ந்து பெற்றோல் ஊத்தி கொழுத்துவியள் போல கிடக்கு...?? 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்னொருவர்க்குத்தானாம் சீட். செலவை ஏற்பதாக சொன்னவர் எங்கிருந்த்ஹாலும் உடனடியாக அரிச்சனை மண்டபத்துக்கு வரவும்.

 

நான் ரெடி ,இப்ப எதை ஏற்கனும் :D

சந்தோசமாய்க்கிடக்கு   ஒண்டு துலையப்போகுது
மற்றக்கிழடு?    

அவன் குளிக்கிறான் விடுங்க அதுக்குமுதல் இந்தாள் ஆனந்தசங்கரி இன்னும் உயிரோட இருக்குதா கிழடு கருணாநிதிக்கு அடுத்து உலகத்தில் கூடின கடிதம் எழுதி போட்டது இந்தாள் மட்டும்தான் . :D

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை ஆயிரம் சொந்த இன.. மக்களைப் பலியிட்டவனுக்கு வக்காளத்து வாங்கின ஒரு சீவனுக்காக.. தீக்குளிக்கப் போறவர் சொல்லிக்கிட்டு இருக்கிறதிலும்.. செய்து செத்துத் தொலைவது மேல்..! :lol::icon_idea:

போனஸ் ஆசனங்கள் வெற்றியால் ஈட்டப்படுவது. அது வென்றவர்கள் தமது கட்சிக்கு பெற்றுத்தந்தவை. அதைப்பற்றி பேச வென்றவர்களுக்குத்தான் உரிமை.  எனவே சாதாரண நிலைமைகளில் வென்ற பிரதிநிதிகளின் முடிவை நியாயமான முடிவாக பார்க்க வேண்டும். தம்பிராசாவுக்கு அதில் பங்கு கிடையாது.

 

ஆனந்த சங்கரியை மக்களும் விரும்பவில்லை. கூட்டமைப்பின் இடைநிலையிலும் ஆதரவு இல்லை. தலைமைகள் ஏதோ சரிக்கட்டுகிறார்கள். அப்படியானால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை பெற்ற கூட்டணியை விடுவிப்பதில் ஆர்வம்காட்ட வேண்டும். எனவே அவரையும் கொண்டு இழுப்பதுதான் சரி.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் தேர்தல் நேரத்தில் விக்கினஸ்வரனின் படத்தில் தன்னுடைய இலக்கத்தைப் போட்டு போஸ்டர் அடிச்சு தில்லுமுல்லு பண்ணியதாக இணையத்தளமொன்றில் பார்த்தேன்.சாகும்வரை உண்ணாவிரதம் நாடகமாடியும் தோல்வியடைந்தார்.இப்ப தீக்குளிப்பு நாடகம்??????

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி அவர்களுக்குப் பின்னர் இல்லாத கூட்டணியின் தலமைக்கு இப்போதே...

ஆசை யாரைத்தான் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி புதிய சாம் சுங் கலக்சி போன் ன கையில வைச்சு கொண்டு கேம்ஸ் விளையாடுறத விட்டிட்டு இது என்ன சின்னப்புள்ள தனமா தீ குளிப்பு அது இதுனுட்டு.......(தம்பி ஒரு Samsung galaxy வைச்சு இருந்து அதில தான் அங்கஜன் அப்பா துவக்கு காட்டி மிரட்டினதெல்லாம் ரெகார்ட் பண்ணி வைச்சு இருக்கார் )

துணைக்கு விளையாட அங்கஜனோட அப்பாவும் வருவார்

இருக்கும் ஒரே தொண்டருக்கும் ஆபத்து.. :lol:

இன்னொரு தொண்டன் நான் இருக்கிறேன் சார் . :D  :D

இன்னொரு தொண்டன் நான் இருக்கிறேன் சார் . :D  :D

 

நீங்கதானா பத்த வைக்கிறது?! :lol::D

 

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரியரின் குள்ள விளையாட்டுக்களுக்கு குறைவே இல்லை.


கூட்டமைப்பின் வேட்பாளர் பொலிஸ் நிலையம் முன்பதாக போராட்டம்!
யாழ்.சாவகச்சேரி பிரதேசத்தில் வைத்து சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்.சாவகச்சேரி பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதனுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞன் மீது அப்பகுதிக்கு வந்த உறுப்பினர்கள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
thambirajah1.jpg
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இரண்டு உறுப்பினர்களும் நேற்று சனிக்கிழமை இரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யபட்டவர்கள் இணங்கிப்போகச்செல்ல சம்மதித்ததையடுத்து இன்று சனிக்கிழமை மேற்படி பிரதேசசபை உறுப்பினர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயனது தந்தை  இராமநாதன் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களை கைது செய்யக்கோரி கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா யாழ்.பொலிஸ்நிலையம் முன்பதாக  அடையாள எதிர்ப்புப்போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.தன் மீது யாழ்.நகரினில் வைத்து அங்கயனது தந்தை இராமநாதன் மற்றும் அவனது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பினில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரினில்

அவர்களை கைது செய்யக்கோரியே தனித்து அடையாள எதிர்ப்புப்போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
thambirasa-1.JPG
அவரது போராட்டம் இரவு வரை நீடித்திருந்த போதும் அதனை கண்டுகொள்ளாத பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக வேறு எவரும் கலந்து கொள்ள அனுமதித்திருக்கவில்லை.
நேற்று நடத்திய பொலிஸ் பத்திரிகையாளர் மாநாட்டினில் தம்பிராசா எவரது பேரையும் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டியிருக்கவில்லையென கூறியதுடன் அதனால் எவரையும் கைது செய்திருக்கவில்லையென தெரிவித்திருந்தனர்.எனினும் இதனை கண்டித்தும் தான் அளித்த முறைப்பாட்டினில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்யக்கோரியே இப்போராட்டத்தை அவர் ஆரம்பித்திருந்தார்.
thambirasa-2.JPG
அவரா இவரு??
 
  • கருத்துக்கள உறவுகள்

மேரி என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது.

என்ன போராட்டமேன்டாலும் தலைவரையும் சேர்த்து போராடுங்கோ.

 

தீக்குளிப்பதா இருந்தாலும் தலைவரையும் சேர்த்து குளியுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.