Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

07 அக்டோபர் 2013

2ஆம் இணைப்பு



வட மாகாண முதலமைச்சராக திரு. சி.வி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் அலரிமாளிகையில்இன்றுமுற்பகல் 9.30மணியளவில் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

முதலில் திரு சி.வி விக்னேஸ்வரன் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், விக்னேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், அரச தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, அஸ்வர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை நேரம் சற்று முன்னதாக வட மாகாணத்தின் முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

இலங்கை நேரம் சற்று முன்னதாக வட மாகாணத்தின் முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

வட மாகாண முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்



இலங்கை நேரம் சற்று முன்னதாக வட மாகாணத்தின் முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.



குhல் நூற்றாண்டின் பின் வடமாகாணத்தில் கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டி 36 அசனங்களில் 28 ஆசனங்களை கைப்பற்றி மேலதிகமாக 2 போனஸ் ஆசனங்களையும் பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கமான இலங்கை தமிழரசுக் கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சி.வி. விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளை பெற்றார்.



வடக்கு கிழக்கு தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பெருமையும் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனையே சாரும்.



இதன் பின்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சராக கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி ஏகமனதாக தெரிவு செய்தனர்.



இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வடமாகாண மக்களை கருத்திற் கொண்டு முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என கூட்டமைபபின் ஏனைய கட்சிகள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பகிரங்கமாக வலியுறுத்தினர்.

எனினும் முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வது நல்லிணக்கத்துக்கான வழி எனவும் அதுவே இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் விருப்பம் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97386/language/ta-IN/article.aspx

பதவியேற்பு வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்று முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

02%28699%29.jpg

04%28348%29.jpg

03%28512%29.jpg

05%28250%29.jpg

06%28180%29.jpg

08%2899%29.jpg

09%2880%29.jpg

10%281432%29.jpg

11%28866%29.jpg

12%28641%29.jpg

13%28438%29.jpg

14%28350%29.jpg

15%28322%29.jpg

ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம்: விக்னேஸ்வரன்.

 

இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம் என்று தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணத்தின் பின்னர் விடுத்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன்.

என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவியாகும். தூரநோக்கின் அடிப்படையிலும் குறுகியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது.

 இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம். எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது.

போருக்குப் பின்னரான எமது மக்களின் தேவைகளை காலதாமதம் இன்றி பூர்த்தி செய்வதான குறுகிய நோக்கை உதவுவதாகவும் எமது செயற்பாடு அமைந்துள்ளது. சிங்கள மக்கள், பாதிக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் விடிவை ஏற்படுத்த தம்மாலான சகலதையும் தமது பிரதிநிதிகள் மூலம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும். சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இங்கு வன்முறைக்கு இடமில்லை. பலாத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும். எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக! இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக! என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilmirror.

 

  • கருத்துக்கள உறவுகள்

இது 2009 இல் சிங்களம் தமிழர்களை அழித்தும் பெற்ற வெற்றி..._45793438_007345387-1.jpg

 

இது சிங்களம் 2013 இல் சம்பந்தனை வைச்சுப் பெற்ற வெற்றி...

 

15%28322%29.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணதேர்தலை நடத்தியது இலங்கை அரசு விருபத்தின்பேரில் அல்ல.வெளிநாட்டு அழுத்தங்கள்(அமெரிக்கா)காரணமாகவும்,கொமன்வெல்த்மாநாட்டைநடத்துவதற்கு முன் தமிழருக்கு உரிமைகளை வழங்கிவிட்டோம் என்று உலகநாடுகளை பேய்காட்டுவதற்கும்தான் நடத்தியது.முதலமைச்சர் ஜனாதிபதியிடம்தான் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற சட்டநியதி இல்லாதபோது போர்க்குற்றவாளி என்று தமிழ்மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட ஒரு கொடுங்கோலனுக்கு முன்னால் சத்தியப்பிரமாணம் எடுப்பது அவர் செய்த குற்றங்களை ((தமிழ்மக்கள்)தமிழ்மக்களின் பிரதிநிதி)மன்னிப்பதற்குச் சமம்.தேர்தல் மேடைகளில் மகிந்தமீது குற்றங்களை அடுக்கிய கூட்டமைப்பு அதே மகிந்தவின் கீழ்காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது சக உறுப்பினர்களின் கடும் எதிரப்;புக்கு மத்தியில் தன்னிச்சையாக சம்பந்தன் மகிந்தவைச் சந்தித்ததும் அதைத்தொடர்ந்து மகிந்த முன்னால் பதவியேற்றதும் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழ்மக்களால் தேர்தலில் தூக்கி வீசப்பட்ட மகிந்தவிடமே அரசியல் பிச்சை கேட்பது கூட்டமைப்பின் கையாலாகத்தனம்.தமிழ்மக்களின் பெரும்பான்மைப்பலத்தோடு தமிழ்மக்களின் தனித்துவத்தைக்காட்டவேண்டிய இந்த நேரத்தில் இப்படிச் சரணாகதி அடைவது தமிழ்மக்களுக்கு எங்த விடிவையும்பெற்றுத்தராது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்னும் மாயமானைத் துரத்திச் செல்லும் சம்பந்தனின் 'சாணக்கியம்', தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு, ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு தீர்வை, என்றுமே தந்துவிடப்போவதில்லை என்பது எமக்கு வரலாறு தந்து விட்ட பாடம்! சிங்களத்தின் 'ஆளுமையின்; முன்பு இந்திய வல்லரசு மட்டியிட்டுள்ளது என்பது தான் மறுக்கப்படவியலாத உண்மையாகும்!

 

இந்தியாவுக்கு வேண்டுமானால், 'சம்பூர்' அனல் மின் நிலையமும், சில முதலீட்டு சந்தர்ப்பங்களும்,குறுகிய கால வெற்றிகளாக அமையக்கூடும்!

 

மேற்குலக நாடுகளின் முதுகில் சவாரி செய்தபடி, இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முடியும் என இந்தியா நம்புமெனில், இது வெறும் பகற்கனவாகவே முடியும்!

 

எல்லாரும் எறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறியிருக்கிறார்! 

 

காலம் பதில் சொல்லட்டும்! :o

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது 2009 இல் சிங்களம் தமிழர்களை அழித்தும் பெற்ற வெற்றி..._45793438_007345387-1.jpg

 

இது சிங்களம் 2013 இல் சம்பந்தனை வைச்சுப் பெற்ற வெற்றி...

 

15%28322%29.jpg

 

2009 இல் ஆயுத முதலாளிகள் பெற்ற வெற்றி.......2013 ஜனநாயக முதலாளிகள் பெற்றவெற்றி....இரண்டிலும் ஏமாற்றமடைந்தவர்கள் அப்பாவிபொதுமக்கள்

தொடர்புபட்ட செய்தி ஒன்று.

 

உரிய அமைச்சுக்கள் வழங்கப்படாவிடின் அவற்றை ஏற்காதிருக்க 3 கட்சிகள் ஆலோசனை.

 

 

வட மாகாண சபையின் அமைச்சரவை நியமனம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை. உரிய அமைச்சுக்கள் தமது கட்சியினருக்கு வழங்கப்படாவிடின் அத்தகைய அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அமைச்சரவை நியமனம் தொடர்பில் நேற்று முன்தினம் மாலையும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கட்சித் தலைவர்களது கூட்டம் இடம்பெற்றது. இதன்போதும் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து அமைச்சுப் பதவிகள் தெடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே தீர்மானிப்பார் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இக்கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே உரிய அமைச்சுக்கள் வழங்கப்படாவிடின் அமைச்சுப் பதவிகள் எதனையும் ஏற்காது விடுவது குறித்து ரெலோ, ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அமைச்சுக்களுக்கு நாம் அலைய மாட்டோம். அமைச்சுக்களை ஏற்கவில்லை என்பதற்காக நாம் குழப்பங்களில் ஈடுபடமாட்டோம். கூட்டமைப்பில் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நாம் தொடர்ந்தும் எமது பங்களிப்பை செலுத்துவோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ்.பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=7542

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும்  மிகவும் வரலாற்று ரீதியான

பொறுப்புடன் செயற்படவேண்டிய  காலம் இது.

 

உணர்ந்து கொள்ளணும்

 

முக்கியமாக

புலிகள் இல்லாது விட்டால்  கிழிப்போம் என்பவர்களுக்கு மிகமிக நல்ல  சந்தர்ப்பம்

தமது மக்கள்  சேவையைக்காட்டுவதற்கும்

மக்களிடம் நல்ல பெயரெடுக்கவும். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு கூட்டணி எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் ஒப்புதல் கொடுத்திருந்தனர். தேர்தலின் பின்னர் தீர்மானத்தில் உள்ளவாறு செயற்பட கூட்டணியால் முடியவில்லை.

போர் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களைக் கொத்து கொத்தாக கொன்றழித்ததற்கும், போர் முடிவடைந்தும் அடக்குமுறைகள் தொடர்வதற்கும் எதிர்ப்பாகவும், தமிழர்களை வென்றவர்கள் என்ற மமதையில் இருக்கும் சிங்களவர்களின் அடிமைகளாக வாழமுடியாது என்று உணர்த்தவுமே மக்கள் மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள். ஆனாலும் மக்களின் உள்ளக்கிடக்கைகளையும் அரசியல் அபிலாசைகளையும் சரிவரப் புரியாமல் இந்தியாவும் மேற்கு நாடுகளும் விரும்பும் இணக்க அரசியல் செய்வதற்குத்தான் கூட்டமைப்பு முனைகின்றது. தமிழர்களின் கோரிக்கைகள் எதற்குமே இணங்காத சிங்கள அரசிடன் இணங்கிப் போவது என்பது சரணாகதி அரசியலாகத்தான் முடியும் போலுள்ளது.

"உரிய அமைச்சுக்கள் தமது கட்சியினருக்கு வழங்கப்படாவிடின் அத்தகைய அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன."

 

"அமைச்சுக்களுக்கு நாம் அலைய மாட்டோம்."

 

 

இந்த ரண்டு கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. நீங்கள் உங்களுக்கு இந்த அமைச்சு வேணும் அந்த அமைச்சு வேணும் என்று அடம் பிடிக்கின்ற அதே வேளை அலையவும் மாட்டோம் என்று புளுடா வேறை

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு கூட்டணி எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் ஒப்புதல் கொடுத்திருந்தனர். தேர்தலின் பின்னர் தீர்மானத்தில் உள்ளவாறு செயற்பட கூட்டணியால் முடியவில்லை.

போர் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களைக் கொத்து கொத்தாக கொன்றழித்ததற்கும், போர் முடிவடைந்தும் அடக்குமுறைகள் தொடர்வதற்கும் எதிர்ப்பாகவும், தமிழர்களை வென்றவர்கள் என்ற மமதையில் இருக்கும் சிங்களவர்களின் அடிமைகளாக வாழமுடியாது என்று உணர்த்தவுமே மக்கள் மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள். ஆனாலும் மக்களின் உள்ளக்கிடக்கைகளையும் அரசியல் அபிலாசைகளையும் சரிவரப் புரியாமல் இந்தியாவும் மேற்கு நாடுகளும் விரும்பும் இணக்க அரசியல் செய்வதற்குத்தான் கூட்டமைப்பு முனைகின்றது. தமிழர்களின் கோரிக்கைகள் எதற்குமே இணங்காத சிங்கள அரசிடன் இணங்கிப் போவது என்பது சரணாகதி அரசியலாகத்தான் முடியும் போலுள்ளது.

பதவியேற்பு வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்று முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)

14%28350%29.jpg

 

 

உண்மைதான்  கிருபன்

இந்தப்படம்  சொல்லி  நிற்கும் செய்திகள் பல..

  • கருத்துக்கள உறவுகள்

vikneswaran%20-%20rajapakse.jpg

 

 

 இலங்கையில் வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பதவியேற்றார். விக்னேஸ்வரனுக்கு அதிபர் ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நடந்த வடக்கு மாகாண கவுன்சிலுக்கு கடந்த மாதம் 21–ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களை பெற்று வரலாற்று சிறப்பு மிகு வெற்றி பெற்றது.

 

இதைத்தொடர்ந்து தேர்வு பெற்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண முதல்–மந்திரியாக விக்னேஸ்வரனை தேர்ந்து எடுத்தனர். இவர், முன்பு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்தவர்.

 

 வடக்கு மாகாண முதல்–மந்திரியாக 73 வயதான விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றார். இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், அவருக்கு ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 

விக்னேஸ்வரனுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்வது பெரும்பாலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=108865

  • கருத்துக்கள உறவுகள்

மனம்விட்டு சிரித்தேன்.. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனம்விட்டு சிரித்தேன்.. :lol: :lol: :lol:

 

நானும் தான்

இறுதியில் கவுண்டமணியும் செந்திலும் பார்த்த  பார்வையில்

சம்பந்தரை :lol:  நினைத்துக்கொண்டேன்...

(என்னிட்டையே  கதை விடுகிறாயா. நானும் இதைத்தானே  செய்கின்றேன் என்பது போல.. :lol:  :D )

குறிப்பு : சிரிப்பதற்கு மட்டும்

இரத்தம் தோய்ந்த கரங்களை ஈவிரக்கம் இன்றி பற்றிப்பிடித்த விக்கியை ஒருபோதும் மன்னிக்காது வரலாறு 

  • கருத்துக்கள உறவுகள்

பதவியேற்பு வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்று முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)

15%28322%29.jpg

 

 

தமிழர்களை மிகக்கொடூரமாக இனப்படுகொலை செய்த மனித மிருகத்தை தமிழ்மண்ணில் இருந்து விரட்டுவதற்குத், தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்கள், இன்று ஓநாய்க்கு இரையாகிப்போகும் ஆடுகளாகி நிற்கின்றனரா? அல்லது சிங்கத்தினைத் தந்திரமாக வெல்லும் முயல்களாகி நிற்கின்றனரா? காலம்தான் பதில்சொல்ல வேண்டும்!.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரை நம்பி ஆற்றில் இறங்கிவிட்டார்கள்.. சிங்களவர்கள் ஐதே கட்சியை தேர்ந்தெடுத்தால் இலங்கை மேற்கின் பக்கம் சாயும். அப்போது கூட்டமைம்பின் இந்த அரசியல் வாயைப் பிளக்கும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த தமிழர்களின் தன்மான சிங்கங்களாம்

மாவை சேனாதி ராஜா

சிறிதரன்

சுரேஷ்

செல்வம்

மற்றும் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி

சம்மந்தன் குழு ரொம்ப ஆட்டம் போட்டு தமிழர்களை ஏமாற்ற நினைத்தால் சுலபமாக இவர்களை ஆட்ச்சியில் இருந்து அகற்றலாம்

வடக்கை பொறுத்த வரை தமிழரசு கட்சியில் சம்மந்தனை விட மாவை க்கு நல்ல செல்வாக்கு இருக்கு கிளிநொச்சியில் மாவையின் தம்பியாம் அரசியல் கள முனை தளபதியாம் சிறிதரனுக்கு நல்ல செல்வாக்கு இருக்கு சோ கூடி கழிச்சு பாத்தால் தமிழர்களின் நலன் சார்ந்து சம்மந்தன் குழு செயல்ப்படாமல் விட்டால் மிகச் சுலபமாக 22 மாகாண சபை உறுபினர்களையாவது மாவை தலைமையில் மற்றைய கட்சிகளின் துணையுடன் இணைத்து புதிய ஆட்சியை அமைக்கலாம் ஆக எல்லாம் விக்கின் செயல்ப்பாடுகளை பொறுத்து இருக்கு

77ம் ஆண்டில் வெற்றி பெற்ற பின் கொழும்புக்குப் போய் தமது முகத்தை மாற்றிய அமிர் சிவசிதம்பரம் கோஸ்டியின் செயலினைக் கண்டு யோகேஸ்வரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறுப்படைந்திருந்ததாகவும் ஆனாலும் தலைமையின் முடிவுக்குக் கட்டுப் பட்டுச் செயற்பட்டதாகவும் எனது தந்தையார் உள்ளிட்டவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

ஆனாலும் இன்றைய தலைமுறையினர் தமது தலைமை செய்யும் விரும்பாத நிகழ்வைத் துணிச்சலுடன் புறக்கணிப்பது நல்ல முன்னேற்றம்.

 

ஒரு அணி என்பது தலைமையின் கீழ் கட்டுப்பட்டுச் செயற்படுவது தான் ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கும் என்பது உலகநியதி என்றாலும் சில புற நடைத் தலைவர்கள் விடயத்தில் இந்தக் கருத்தையும் புறநடை என ஒதுக்கி விடலாம்.

 

அந்த வகையில் மாவை, சிறிதரன், உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உள்ள துணிச்சலை பாராட்ட வேண்டும்... 

  • கருத்துக்கள உறவுகள்

பின்கதவு வழி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிங்க கொடி சம்மந்தர் கட்சி தாவி பாராளுமன்ற உறுப்பினரான விநாயக மூர்த்தி இந்த 3 பெரும் தான் போய் இருக்கினம்

3 பேரும் கூடுதல் வாழ்கையை கொழும்பில் வாழ்ந்தவர்கள்

3 பேரும் சட்டத்தரணிகள்

3 பெரும் தமிழ் தேசியத்தின் எதிர்ப்பு சக்திகள்

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழர்களின் யுத்த கால வடுக்களை அறியாதவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பும் முதல்வர் விக்னேஸ்வரனும்  புலம்பெயர் கூத்தாடிகளின் நிகழ்ச்சி நிரலைப் புறக்கணித்து செல்லவேண்டும். அதையே செய்கிறார்கள். வாழ்த்துக்கள்!

தான் பதவிப் பிரமாணம்  ஏடுப்பதற்க்காக முதலமைச்சர் தெரிந்திருந்திருந்த சத்தியப்பிரமாணம் எடுக்கும் வழி முறைகள், தமிழ் மக்களின் உரிமைகளை பெற தெரிவு செய்யப்பட்டிருந்த  முதல்வர் அரசுடன் இணைய விழைகிறாரா, அரச பக்கம் சரிகிறாரா அல்லது அரசுக்கு அஞ்சி  தலை சாய்ப்பதை தன்னும் செய்கிறாரா எனற பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இதில் இணைக்கப்பட்டிருக்கும் படங்களைப்பார்க்கும் போது. விக்கினேஸ்வரனின் சத்தியப்பிரமாணம் சம்பிரதாயங்களையும், சட்டங்களையும் மீறிக் கொண்டடாட்டம் என்ற திசையில் ஒரு அங்குலம் தன்னும் நகரவில்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொல்கிறது. மகிந்தாவுடன் கௌரவமாகவே விக்கினேஸ்வரன் நடந்து கொண்டார். அதாவது முறைக்கவும் இல்லை, கண்டு முளிக்கவும் இல்லை, மிரளவும் இல்லை, இளிக்கவும் இல்லை. மிகவும் பொறுப்பாகவும், பொறுமையாகவும். நிதானமான Statesman ஆகவே நடந்து கொண்டிருக்கிறார். 

 

சர்வதேச நாடுகள்(இந்தியா பிரதானமாக) மகிந்தாவின் கைகளை முறுக்கியே தேர்தலைக் கொண்டுவந்தன. மகிந்த அந்த தோல்வியை தனது நடத்தைகளில் காட்டவில்லை. மாறாக புன்னகையைக்காட்டிக்கொண்டு அவர் தனது பொறிகளை தாயாரிப்பதில் கண்ணாக இருப்பார். அதில் முதல்வர் விழுந்தாலும் அதுவும் தமிழ்மக்களால் விளங்கிக் கொள்ளப்படகூடியது, தப்பித்துக்கொண்டாலும் விள்ங்கிக்கொள்ள கூடியது.

 

சத்தியப்பிரமாணத்தின் போது, அதில், தான் அளித்த வாக்குறுதியை வெளியே வந்து நினைவு படுத்தியிருக்கிறார் முதல்வர். " 'என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன்' என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்திருந்தேன்" என்கிறார். அது அவர் ஒரு சட்ட மேதை என்றதை காட்டுகிறது. சட்டத்தின் முன்னால் தன் கடமை என்ன என்பதை அவர் அந்த சத்திய பிரமாணத்தின் சொற்றோடரால் மக்களுக்கு சொல்ல விளைகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். அவருக்கு மக்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அவர் பிரதி நிதிப்படுத்தும் மக்களும், அவர் பங்கெடுத்துக்கொள்ளும் அரசங்கமும் இரண்டு வேறு வேறாக தங்களைத் தாங்கள் காணும் போது இப்படியான சத்திய பிரமாண சொற்றொடர்கள் மிக மிக சிக்கலான சட்ட விவாதங்களை,  விளங்கங்களை தூண்டும். சட்டநுணுகங்களை துளைத்தெடுக்கமுடியாத எங்கள் சமானிய தரங்களில், நாம் இந்த கேள்வியை இப்படித்தான் போடுவோம். அரசும் மக்களும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக பார்க்கும் போது முதல்வர் "அரசாங்கத்தை நோக்கிச் சாய்வாரா? அல்லது மக்களுக்கருகில் இருப்பாரா" என்பதுதான் நமது கேள்வியாக இருக்கும்.

 

வடமாகாண சபையை கொண்டு நடத்துவதில் முதல்வர் எடுக்க போகும் தீர்மானங்கள், அரசு பக்கம் சாய்ந்தாலும், மக்கள் பக்கம் சாய்ந்தாலும் மிக மிக சட்ட சிக்கல் நிறைந்தவையாக இருக்க போகிறது. நிறையக் கல்லெறிகள், பந்தடிகள், வாதப் பிரதிவாதங்கள் என்று போகலாம் என்பதற்கான நிழல் அடையாளமாக அவர் இந்த வசனங்களை அழுத்துவதை எடுத்துக் கொள்ளலாம். அவரின் தனிப்பட்ட சட்ட ஆழுமைக்கு மேலாக, கூட்டமைப்பில் இருக்கும் மற்றைய சட்ட அறிஞ்ஞர்கள், வித்துவான்களின் ஆலோசனைகளுக்கு மேலாக, அரசியல் ஆலோசனைகளுக்கான கூட்டமைப்பின் வெளித்தொடர்புகளுக்கு மேலாக, வெளிநாட்டு தூதுவராலயங்கள், தமது தலை நகரங்களின் கருத்துக்களை விக்கினேஸ்வரனிடம் கொண்டுவந்து சேர்க்கும் செயல்கள் நடை பெறவும் சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே வடக்கு மாகாணத்தின் சபையின் அரசியல், சட்ட, ராஜதந்திர நகர்வுகளின் சிக்கல் எவ்வாறு இருக்க போக்கிறது,  அதற்கு முதல்வரின்  அசைவுகளின் தராதரம் எப்படி இருக்க போகிறது, இரண்டும் ஒன்றுக்கு ஒன்று, குறைந்தபட்டசம், சமனாகத்தன்னும் இருக்குமா என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் கூட்டமைப்பு தேர்தல் காலத்திலும், தேர்தலுக்கு முன்னரான காலத்திலும் தனது திட்டமிடல்களை சரியாக செய்திருக்கும் என்ற மனசாந்தியை தமிழ் மக்கள் வரவளைத்துக் கொள்வதும், புதிதாக கூடும் மாகாண சபையையின் ஆயுள்காலம் வரையில் அளவான, ஆரோக்கியமான சலனங்களை மட்டும் வெளிப்படுத்துவதற்கு மட்டும் மக்கள் தங்களை மட்டுப்படுத்தினால் சிக்கல்கள்கள் இலகுவாக இறங்கிவர சில சந்தர்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அவர் இந்த சத்தியப்பிரமாண வாக்கியத்தை வெளியே வந்து சொல்வதை, "முதலில் நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெரிந்திருக்கிறீர்கள். இப்போது நான் உங்களிடம் கேட்பது, தொடந்தும் நீங்கள் என்மீது நம்பிக்கை காட்டுங்கள். இந்த நம்பிக்கை ஒளிக்கீற்றை பற்றி நாம் இருபக்கமும் தொடந்து பயணிப்போம்" என்பதாகவும் எடுத்துகொள்ளலாம். 

 

அவர் சத்திய பிரமாணம் எடுத்த பின்னர் ஒரு புதிய கருத்தொன்றையும் வைத்திருக்கிறார் முதலமைச்சர். "என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவியாகும். தூரநோக்கின் அடிப்படையிலும் குறுகியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். "  உண்மையில் தேர்தலில் தெரியப்பட்ட தலமை வேட்பாளர் அவர் என்ற முறையில், குறுகியகால-தூர நோக்கு பார்வைகள் சமபந்தமான கருத்துக்கள்  அவரிடமிருந்து வரும் போது அவர் புதியனவாக கருத முடியாது. ஆனால் வடக்கு மாகாண சபை சந்திக்க இருக்கும் சிக்கல்களை கையாள்வதற்கு தேர்தல் காலங்களில் அவர் வெளியே வைத்திருக்காத ஒரு புதிய தளத்தில் இதை வைத்திருப்பதாகக் கொள்ளலாம். அரசாங்கம் தான் வடக்கில் வசந்தம் என்ற பெயரில் அபிவிருத்திகளை செய்வதாக கூறி, அதை தொடர மக்களிடம் வாக்கு கேட்டது. முதல்வரின் கூட்டமைப்பு, தேர்தல் விஞ்ஞாபனத்தில் உரிமைகளை அழுத்திக் கூறியிருந்தது.  இந்த இரண்டுக்கும் இடையில் "போரில் தங்கள் இயல்பு வாழ்வுகளைத் தொலைத்திருந்த வடக்கு மக்களுக்கு புனர் வாழ்வு" என்ற கேள்வியும் இருந்து வந்தது. தேர்தல் நேரம், அரசு, தான் செய்துவரும் அபிவிருத்திகளால் மீள்க்குடியேற்றங்கள், காணிகள் மீள்ளளிப்பு எல்லாவற்றையும் முடித்துவிட்டதாக நடித்தது. அபிவிருத்திகளின் பலன்கள் மக்களைச் சென்றடைய மக்களுக்கு மேலதிக புனர்வாழ்வுக்கோ, உரிமைகளுக்கோ தேவை இருக்காது என்று பூசி மெழுகப் பார்த்தது. கூட்டமைப்பின் பக்கத்திலிருந்து "உரிமை, பணஉதவிகள் பெற்றல்த்தான் இதை ஆரம்பிக்கலாம்" என்பதே பதிலாக இருந்தது. முடிவில் அரசின் அபிவிருத்திகளை மக்கள் ஏற்காது கூட்டமைப்பின் "உரிமைகளை முதல் பெறும் திட்டத்"திற்கே வாக்களித்தார்கள். 

 

தேர்தல் முடிந்தாலும் அரசு தேர்தலை நீட்ட முயல்கிறது. அதாவது மக்கள் தனக்கு வாக்களித்திருக்க வேண்டும் என்பதை நினைவூட்டவே, உரிமைகளை பற்றிய கதைகளை அடித்து மூட உயர் நீதி மன்ற தீர்ப்பு மூலம் அரசியல் அமைப்பில் இருக்கும் காணி அதிகாரங்களை மீளப்பெற்றது.  எனவே இதன் மூலம் உரிமைகள் பெற்று மாகாணம் சுயாதீனமாக இயங்குவதென்பது ஒரு நீண்ட இழுபறியாக இருக்கப்போகிறது என்ற செய்தியை அரசு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு சொல்லியிருக்கிறது. அதனால்தான் உரிமையை கேட்டு தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தாலும், புனர்வாழ்வா உரிமையா முதலில் என்ற கேள்வி ஏற்கவனவே எழ ஆரம்பமாகிவிட்டது. ஒருசாரார் கூட்டமைப்பு தேர்தலில் வாக்குக்கொடுத்தபடி அரசுக்கு தலைசாய்க்காமல் தொடர்ந்து உரிமைக்கு போராட வேண்டும் என்கிறார்கள். முதலமைச்சர் தெரிந்தெடுத்திருந்த இந்த சத்தியபிரமாண வழிமுறை இந்த "கூட்டமைப்பின் தேர்தல்கால வாக்குறுதியான உரிமை முதல்" கோரிக்கையின் கீழ் பலத்த கூச்சலான சாடல்களை தாங்கியிருக்கிறது. குரல் அதிகம் வெளியே கேட்காவிட்டாலும் பட்டியை இறுக்க கட்டியிருக்கும் வயிறுகளின் அழுகைகளும் கூட்டமைப்பை இன்னொரு கரையில் இடிக்கின்றன. இதனால் அரசை அது இருக்கும் இந்த நிலையிலாவது வைத்து பெற்த்தக்கவைகளை பெற்று உதவிகதேடி  நீளும் கரங்களை ஒதுக்கினால்தான் உரிமைக்காக முன்னால் போகலாம் என்பதையும் கூட்டமைப்பு தேர்தலின் பின்னால் விளங்க்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.  பணமானதை அரசு தரப்போகிறதா, அல்லது வெளிநாடுகள்,  புலம் பெயர் தேசங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள அதற்கு தேவையான உரிமையை அரசு தரப்போகிறதா என்ற கேள்வி ஒருபக்கம் இருக, உள்ளே எழுந்திருக்கும் மந்திரிப்பதவி போட்டிக்களுக்கு மேலாக சென்று அரசிடமிருந்து கிடைப்பவறை தேவையானவர்களுக்கு பங்கிட ஒரு பொறிமுறையை அமைப்பது முதல்வரின் குறுகியகால திட்டமாக இருக்க போகிறது. அதைத் தான் அவர் இந்த சத்திய பிரமாண நிகழ்வுகளின் பின்னாலான் பேச்சுக்கள் மூலம் தெரியப்படுத்துகிறார். 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.