Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் இதுவரை வெளிவராத, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் உரை. (வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.) சாவகச்சேரி நகர சபையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், "கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். 
 
விக்னேஸ்வரனின் உரையின் சுருக்கம்: 
"இலங்கையில் முதலாவது கல்வி நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகின. யாழ்ப்பாணத் தமிழர்கள் படிப்பில் சிறந்து விளங்கினார்கள். பொதுநலவாய நாடுகளில் சிறந்த கல்விமான்கள், யாழ்ப்பாண தமிழர்கள்.  சேர் பொன் இராமநாதன், முதன் முதலில் படித்த இலங்கையர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றும் சிறந்த கல்விமான்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (யாழ்ப்பாணத்) தமிழரின் கல்வி அறிவு கண்டு பொறாமை கொண்ட சிங்களவர்கள், தரப்படுத்தல் (விக்னேஸ்வரன் "சமப்படுத்தல்" என்ற சொல்லைப் பாவிக்கின்றார்.) மூலம் தமிழர்களின் கல்வி உரிமையை பறித்தார்கள். 
 
தற்போது போதைவஸ்து, மதுப் பழக்கத்தை அறிமுகப் படுத்தி யாழ் மாணவர்களை பாழாக்குகிறார்கள். அரச ஆதரவு கட்சிகளே இந்தக் கலாச்சார சீரழிவுக்கு காரணமாகும். மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதன் மூலம், யாழ்ப்பாண தமிழரின் கல்விச் சீரழிவை தடுத்து நிறுத்த முடியும்." 
 
 "ஈழத் தமிழ் தேசிய அரசியலில், வர்க்கம் எங்கே வந்தது? வர்க்கம், முதலாளியம் போன்ற மார்க்சிய சொல்லாடல்கள், அந்த இடத்திற்கு எப்படிப் பொருத்தமாகும்?" என்று சிலர் கேட்கின்றனர். 
 
இலங்கையில் வாழாத, தமிழரல்லாத ஒருவர், விக்னேஸ்வரனின் உரையை கேட்க நேர்ந்தால், அவர்  "யாழ்ப்பாணத் தமிழர்கள் எல்லோரும் (அல்லது பெரும்பான்மை) உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள்." என்றே நினைத்துக் கொள்வார். உலகில் வளர்ச்சியடைந்த நாட்டில் கூட, உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாக இருக்கும். ஒட்டு மொத்த யாழ் மக்கட் தொகையில், உயர்கல்வி கற்றவர்கள் எண்ணிக்கை ஐந்து சதவீதம் கூட இருக்க முடியாது. ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்த காலமும் முதல், சிங்களவனுக்கு அடிமையான காலம் வரையில் அந்த நிலைமை மாறவில்லை. 
 
ஆகவே,  "அந்த ஐந்து சதவீத சிறுபான்மைத் தமிழர்களைப்" பற்றித் தான், விக்னேஸ்வரன் கவலைப் படுகின்றார். மிகுதி  உழைக்கும் வர்க்கத் தமிழர்களைப் பற்றி, அவர்களது பிரச்சினைகள் பற்றி, அவருக்கு எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால், அவர் பிறந்து வளர்ந்த வர்க்கம் வேறு.  உயர்கல்வி கற்ற சிறுபான்மை சமூகத்தை, சமூக விஞ்ஞானம் "மத்திய தர வர்க்கம்" என்று பெயரிட்டு அழைக்கிறது. மார்க்சியம் அந்தப் பிரிவுக்கு "குட்டி முதலாளிய அல்லது குட்டி பூர்ஷுவா வர்க்கம்" என்று பெயரிட்டது.
 
ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், யாழ்ப்பாணத்தில் கல்வி நிலையங்களை கட்டினார்கள் என்று விக்னேஸ்வரனே கூறுகின்றார். "வெள்ளையர்கள்" வந்து பத்து, பதினைந்து வருடங்களில் கல்லூரிகளை கட்டியதாக விக்னேஸ்வரன் கூறுகின்றார்.ஆங்கிலேயர்கள் மட்டுமே வெள்ளையர்கள் அல்ல, அவர்களுக்கு முன்னர் இலங்கையை காலனிப் படுத்திய டச்சுக் காரர்கள், போர்த்துக்கேயர்களும் வெள்ளையர்கள் தான். 

கல்வி கற்பது அனைத்துப் பிரஜைகளின் பிறப்புரிமை என்பதால், ஆங்கிலேயர்கள் இலங்கையின் எல்லா பிரதேசங்களிலும் கல்வி நிலையங்களை கட்டி இருந்திருந்தால், போற்றுதலுக்கு உரியவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் மட்டும் கற்றவர்களை உருவாக்க நினைத்த செயலானது, ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியாக கருதப்படும். அதுவே பிற்காலத்தில், இன முரண்பாடுகளை தோற்றுவித்திருக்கும் என்பதை விக்னேஸ்வரன் இங்கே குறிப்பிட மறந்து விட்டார். 

 
மேலும், ஆங்கிலேய காலனியாதிக்க வாதிகள், கல்வி நிலையங்களை கட்டியதன் நோக்கம், தமிழரை முன்னேற்றுவதற்காக அல்ல. அன்று, காலனிய நிர்வாகத்தை திறம்பட நடத்தும் தேர்ச்சி பெற்ற மத்தியதர வர்க்கம் ஒன்று தேவைப் பட்டது. அதிலும், உயர்சாதியினரில் வசதி படைத்த ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஐம்பதுகளில் கூட, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழர்களுக்கு, கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது.
 
விக்னேஸ்வரன், தரப்படுத்தலுக்கு, சமப்படுத்தல் என்ற சொல்லை பிரயோகிக்கக் காரணம் என்ன? கல்வியில் சிறந்த தமிழர்களுக்கு சமமாக, சிங்களவர்களை முன்னேற்றுவதா? தரப்படுத்தல் மாவட்ட வாரியாக கொண்டு வரப் பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள் என்ற ரீதியில், மறைமுகமாக சிங்களப் பிரதேசங்களுக்கு சலுகைகள் வழங்கப் பட்டன. ஆனால், (ஆங்கிலேயர் காலத்தில்) கல்வி நிலையங்கள் கட்டப்படாத தமிழ்ப் பிரதேசங்களும் இருந்தன. வன்னி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருந்தன. 
 
யாழ்ப்பாண மாணவர்களிடையே பரவும் மது, போதைவஸ்து பழக்கம், சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப் படுகின்றது என்ற குற்றச்சாட்டில், ஓரளவு உண்மை இருக்கிறது. விக்னேஸ்வரன் இந்த உரையில் "கண்ணுக்குத் தெரியாத சக்தி" ஒன்று இயங்குவதாக தெரிவிக்கிறார். ஆனால், முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்திய பூதமே அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தி என்பதை, மக்களுக்கு கூறாமல் மறைக்கிறார். மேலைத்தேய ஏகாதிபத்தியம் என்ற "கண்ணுக்குத் தெரியாத சக்தி" தான் ஸ்ரீலங்கா அரசின் எஜமான் என்பது, விக்னேஸ்வரனுக்கு தெரியாமல் இருக்காது.

கட்டற்ற முதலாளித்துவம், உலகமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றங்களும், மாணவர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன. இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் அந்தப் பிரச்சினை உள்ளது. முதலாளித்துவம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டமே அதனை தடுத்து நிறுத்தும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் யாரும் அந்தச் சொற்களையே உச்சரிப்பதில்லை. எந்த ஒரு கட்டத்திலும், தங்களது கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் முன் வைக்கவில்லை. ஆகவே, விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபை ஆட்சியில் இருந்தாலும், யாழ் மாணவர்களின் கல்வி சீரழிவதை தடுத்து நிறுத்த முடியாது. 

 
விக்னேஸ்வரனின் முழுமையான உரை:
  • Replies 71
  • Views 3.6k
  • Created
  • Last Reply

இது எப்படியோ?

 

அருவருப்பான பிரதேச வாத தலையங்கம். 

 

உங்களில் சிலரைத் தவிர உங்களுக்கு மற்றவர்கள் எல்லாரும் இளக்காரமா?

 

நீங்கள் சொன்ன மேட்டுக்குடிக்கு நீங்கள் வரிந்து கட்டும் மக்களே வாங்களித்துலார்களே?

 

அந்த வாக்குரிமையை கொச்சைப்படுத்துவதா? 

 

 

நாங்கள் நாகரிகத்தில் உயர்ந்தவர்கள் என்பதனை எங்கள் எழுத்துகளில் என்றாலும் கடைப்பிடிப்போம்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி அடிப்படையில் எழும் மேட்டுக்குடி என்ற சிந்தனையே தவறு.

 

யாழ் மாவட்டம் கல்வியில் முன்னணியில் இருந்த மாவட்டங்களில் ஒன்று... என்ற யதார்த்தத்தை மேட்டுக்குடி.. பிரதேசவாதச் சிந்தனைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். அது இன்று பிந்தங்கியப் போவதற்கு திட்டமிட்ட சிங்கள இன அழிப்பு நடவடிக்கைகளும் காரணம் என்பதை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

 

யாழ் மாவட்டம் மட்டுமன்றி தமிழீழத்தின் பிற மாவட்டங்களும்.. பிந்தங்கி நிற்கின்றன. ஏலவே பிந்தங்கிய மாவட்டங்கள் மிகப் பிந்தங்கிய நிலையில் உள்ளன.

 

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்தை ஆண்ட போது யாழ் மாவட்ட ஆசிரியர்களை வன்னியின் பிற மாவட்டங்களுக்கு தாமாகவே அழைத்துச் சென்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவினார்கள். இதனால் கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் வளர்ச்சி கண்டன. அதேபோல்.. கிழக்கில் இருந்தும் மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து கல்வி கற்கும் நிலையை தோற்றுவித்திருந்தார்கள். அவர்களுக்கு என விசேட தனியார் வகுப்புகளும் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டன..!

 

மேலும் கிழக்கிலும் பிந்தங்கிய இடங்களில் கல்வி வளர்ச்சியில் கோட்ட.. வட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

 

ஆனால் இன்று தமிழீழம் எங்கும் தமிழ் இளையோரின் ஆற்றலை கல்வியை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளை சிங்கள அரசும்.. அதன் இராணுவ இயந்திரமும் ஒட்டுக்குழுக்களும் மேற்கொண்டு வருகின்றன.

 

ஒரு காலத்தில் கல்வியில் மிகப் பிந்தங்கிய நிலையில் இருந்த வவுனியா 1995 யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின்.. தமிழ் மாணவர்கள் பிரகாசிக்கும் இடமாக மாறியுள்ளது. மக்கள் இடம்பெயர்வு.. ஆசிரியர் இடம்பெயர்வுகள் இதற்கு உதவி உள்ளன. அதேபோல் திருமலையிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. பல யாழ் ஆசிரியர்கள் அங்கு இடம்பெயர்ந்து போனதுவும் ஒரு காரணம்.

 

ஆனாலும்.. சிங்களம் இவற்றை எல்லாம் நாசம் செய்து வருகின்ற இன்றைய நிலையில்.. இந்தக் கருத்துக்களைப் பிரதேசவாத.. மேட்டுக்குடி சிந்தனையில் வைத்து நோக்காமல்.. பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்க இன அழிப்புச் சிந்தனைக்குள் ஆக்கிரமிப்புக்குள் இருந்து எமது இளைய தலைமுறையை மீட்கவும் வளமாக வளர்க்கவும் உரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் சிந்திப்பதே நல்லது..!

 

எடுத்ததற்கு எல்லாம்.. சாதியமும்.. பிரதேசமும்.. வர்க்கமும் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால்.. இவை வெறும் ஏட்டுச்சுரக்காய்களாக.. சிலரின் சுய தம்பட்டத்திற்கு  விளம்பரத்திற்கு.. உதவலாமே தவிர மக்கள் இன்றைக் களத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முடிவுகளைத் தரா. மக்களின் இன்றைய பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு தேடாவிடின்.. அதுவே எமது இன அழிப்பாளர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகவும் அமையும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

கல்வி அடிப்படையில் எழும் மேட்டுக்குடி என்ற சிந்தனையே தவறு.

 

யாழ் மாவட்டம் கல்வியில் முன்னணியில் இருந்த மாவட்டங்களில் ஒன்று... என்ற யதார்த்தத்தை மேட்டுக்குடி.. பிரதேசவாதச் சிந்தனைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். அது இன்று பிந்தங்கியப் போவதற்கு திட்டமிட்ட சிங்கள இன அழிப்பு நடவடிக்கைகளும் காரணம் என்பதை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

 

யாழ் மாவட்டம் மட்டுமன்றி தமிழீழத்தின் பிற மாவட்டங்களும்.. பிந்தங்கி நிற்கின்றன. ஏலவே பிந்தங்கிய மாவட்டங்கள் மிகப் பிந்தங்கிய நிலையில் உள்ளன.

 

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்தை ஆண்ட போது யாழ் மாவட்ட ஆசிரியர்களை வன்னியின் பிற மாவட்டங்களுக்கு தாமாகவே அழைத்துச் சென்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவினார்கள். இதனால் கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் வளர்ச்சி கண்டன. அதேபோல்.. கிழக்கில் இருந்தும் மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து கல்வி கற்கும் நிலையை தோற்றுவித்திருந்தார்கள். அவர்களுக்கு என விசேட தனியார் வகுப்புகளும் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டன..!

 

மேலும் கிழக்கிலும் பிந்தங்கிய இடங்களில் கல்வி வளர்ச்சியில் கோட்ட.. வட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

 

ஆனால் இன்று தமிழீழம் எங்கும் தமிழ் இளையோரின் ஆற்றலை கல்வியை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளை சிங்கள அரசும்.. அதன் இராணுவ இயந்திரமும் ஒட்டுக்குழுக்களும் மேற்கொண்டு வருகின்றன.

 

ஒரு காலத்தில் கல்வியில் மிகப் பிந்தங்கிய நிலையில் இருந்த வவுனியா இன்று.. தமிழ் மாணவர்கள் பிரகாசிக்கும் இடமாக மாறியுள்ளது. மக்கள் இடம்பெயர்வு.. ஆசிரியர் இடம்பெயர்வுகள் இதற்கு உதவி உள்ளன. அதேபோல் திருமலையிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. பல யாழ் ஆசிரியர்கள் அங்கு இடம்பெயர்ந்து போனதுவும் ஒரு காரணம்.

 

ஆனாலும்.. சிங்களம் இவற்றை எல்லாம் நாசம் செய்து வருகின்ற இன்றைய நிலையில்.. இந்தக் கருத்துக்களைப் பிரதேசவாத.. மேட்டுக்குடி சிந்தனையில் வைத்து நோக்காமல்.. பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்க இன அழிப்புச் சிந்தனைக்குள் ஆக்கிரமிப்புக்குள் இருந்து எமது இளைய தலைமுறையை மீட்கவும் வளமாக வளர்க்கவும் உரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் சிந்திப்பதே நல்லது..!

 

எடுத்ததற்கு எல்லாம்.. சாதியமும்.. பிரதேசமும்.. வர்க்கமும் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால்.. இவை வெறும் ஏட்டுச்சுரக்காய்களாக.. சிலரின் சுய தம்பட்டத்திற்கு  விளம்பரத்திற்கு.. உதவலாமே தவிர மக்கள் இன்றைக் களத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முடிவுகளைத் தரா. மக்களின் இன்றைய பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு தேடாவிடின்.. அதுவே எமது இன அழிப்பாளர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகவும் அமையும்..! :icon_idea:

 

விரைந்து தீர்வு யாரிடம் கேட்பது அழித்தவர்கள் யார் சிங்களத்தின் பங்கு பத்து வீதம் மிகுதி இந்த உலகம் மகிந்த வெறும் அம்பி எய்தவர்கள் வல்லரசு மேதவிகள் இந்த நாடக மேடையில் அழிந்து போனது தமிழர் எப்படி இவர்கள் தீர்வு தர முடியும் அழிக்கும்போது செய்மதியூடா பார்த்து ரசித்தவர்களுக்கு தெரியாதா என்ன நடந்தது என்று எல்லாம் கண்துடைப்பு நாங்கள் கத்தி கத்தி எங்க காலம் போயிடும் விடுங்க நடக்கிறது எதுகும் இல்லை எம்மை நாங்கள்தான் இனி காக்க வேணும் என்னும் நிலைமையில் இப்ப இருக்குறம் வீரவசனம் பேசலாம் சுகமா நடைமுறை ஒன்று இருக்கு அது இப்ப உள்ள உலக ஒழுங்கில் கடினம் அண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர் சொல்லுறார் தானே.. என்ன செய்யனுன்னு. பார்ப்போம்.. கல்வி அமைச்சு கொண்ட மாகாண சபையை வைச்சிருக்கிற அவர்.. இந்த நிலையை மாற்ற என்ன செய்கிறார் என்று.

 

மேலும்.. நாங்களும் நாங்கள் கல்வி கற்ற பல்கலைக்கழக மாணவ சங்கங்களின் பிரதிநிதிகளோடு கதைத்து.. முக்கிய நூலகங்களுக்கு  அண்மைக் காலங்களில் வெளியான.. முக்கிய நூல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்திருக்கிறம். அவையும் அனுப்புவம் என்று உறுதிமொழி தந்திருக்கிறார்கள்.

 

எல்லோரும் தன்னலம்சாராது மக்கள் நலன் சார்ந்து.. செயற்பட்டால் அன்றி.. இதற்கு சும்மா கருத்தெழுதிப் பிரயோசனம் இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனாலும் சில கருத்துக்கள் சிலரையாவது.. சிந்திக்க.. செயற்பட வைக்கும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தவித அதிகாரமும் இல்லாத மாகாண சபை இது. சர்வதேசத்துக்கு  தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சி என்று காட்டுவதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிட்டார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். அதற்காக மாகாணசபை கல்வி அமைச்சை வைத்து என்ன செய்ய முடியும? முதலில் தமிழரசுக் கட்சி, இனப் பிரச்னையை தீர்க்கட்டும். அதன்பின் அங்குள்ளவர்களின் கல்வியை கவனிக்கலாம்..

 

வடக்கும் கிழக்கும் இணைந்தால்தானே தமிழீழம். அவை எப்பொழுதும் இனி இணையக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறாராம்..... !

அதைக் கதைக்கிறதுக்கு இவருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் என்ன சம்மந்தம்....????? சம்மந்தன் கொண்டுவந்த கோடாரிக் காம்பு.......... ! சம்மந்தன் இவரை ஏன் கொண்டுவந்தவர்.... ? யாருக்கவது தெரியுமா????

   

 

 

இதைப்பற்றி கதைக்கவே கூடாது என இருந்தாலும்... முடியல.........! கடுப்பாகுது.....!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கும் கிழக்கும் இணைந்தால்தானே தமிழீழம். அவை எப்பொழுதும் இனி இணையக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறாராம்..... !

அதைக் கதைக்கிறதுக்கு இவருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் என்ன சம்மந்தம்....????? சம்மந்தன் கொண்டுவந்த கோடாரிக் காம்பு.......... ! சம்மந்தன் இவரை ஏன் கொண்டுவந்தவர்.... ? யாருக்கவது தெரியுமா????

   

 

 

இதைப்பற்றி கதைக்கவே கூடாது என இருந்தாலும்... முடியல.........! கடுப்பாகுது.....!!!

கவிதை..

 

சம்மந்தன் கொண்டுவந்த கோடாரிக் காம்பு” என்று சும்மா சொல்லக்கூடாது. சம்மந்தனை கொண்டுவந்தவர் தேசியத் தலைவர் ஆவார். இறுதிவரை சம்மந்தனையே த.தே.கூ. தலைவராக வைத்திருந்தார் தேசியத் தலைவர். அப்படிப்பட்ட சம்மந்தனை நீங்கள் குறை கூறுவது தேசியத் தலைவரை அவமதிப்பது ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாணவர்களிடையே பரவும் மது, போதைவஸ்து பழக்கம், சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப் படுகின்றது என்ற குற்றச்சாட்டில், ஓரளவு உண்மை இருக்கிறது.

 

 

முக்கி முனகிக்கூடச் சொல்லமுடியாது தவித்துத் தயக்கம் காட்டும் என்னே ஒரு சிங்கள அரச விசுவாசம்....... இப்படித்தான் இதனை புரிந்துகொள்ள முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
யாரையும் நோக்கி விரலை நீட்டாமல் நாமே (புலம்பெயர் தமிழர்கள்,கூட்டமைப்பு, அங்குள்ள சமூக ஆர்வலர்கள்)முன்னின்று எமது சமூகத்தை கல்வியிலும், பொருளாதாரத்திலும் கட்டி எழுப்ப முன்னிற்க வேண்டும்.எம்மை அழிக்க உதவியவர்களை கொண்டே எமக்கு சாதகமான சூழ்நிலைகள் உள்ள போது அரசியல் தீர்வையும் பெற்று தர நிர்பந்திக்க வேண்டும். இடையில் புகுந்து விளையாடுபவர்கள் பற்றி மிக அவதானமாக இருக்க வேண்டும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1377591_632767450109464_2122467955_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன கூத்துக்கு வேசம் போட்ட மாதிரி? உதாலையெல்லாம் என்ன பிரயோசனம் வரப்போகுது.  நம்மளின்ர சனங்கள் திருந்தமாட்டாது போலயெல்லே இருக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன கூத்துக்கு வேசம் போட்ட மாதிரி? உதாலையெல்லாம் என்ன பிரயோசனம் வரப்போகுது.  நம்மளின்ர சனங்கள் திருந்தமாட்டாது போலயெல்லே இருக்குது.

558422_632767193442823_1654212904_n.jpg1377591_632767450109464_2122467955_n.jpgsampanthan.jpg

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன கூத்துக்கு வேசம் போட்ட மாதிரி? உதாலையெல்லாம் என்ன பிரயோசனம் வரப்போகுது.  நம்மளின்ர சனங்கள் திருந்தமாட்டாது போலயெல்லே இருக்குது.

 

உலகமே  ஒரு நாடகமேடை

எல்லோரும் நடிகர்கள்

பார்க்கலாம்

வேசம் எடுக்கிறார்களா?

விசயம் இருக்கா என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

princess.jpgprincess makeup set in a box

 

Edited by பெருமாள்

கவிதை..

 

சம்மந்தன் கொண்டுவந்த கோடாரிக் காம்பு” என்று சும்மா சொல்லக்கூடாது. சம்மந்தனை கொண்டுவந்தவர் தேசியத் தலைவர் ஆவார். இறுதிவரை சம்மந்தனையே த.தே.கூ. தலைவராக வைத்திருந்தார் தேசியத் தலைவர். அப்படிப்பட்ட சம்மந்தனை நீங்கள் குறை கூறுவது தேசியத் தலைவரை அவமதிப்பது ஆகும். 

 

எவன் சொன்னது சம்மந்தனைக் கொண்டுவந்தது தேசியத் தலைவர் என்று...????? விசர்க்கதை கதைக்கக் கூடாது..... சம்மந்தனைப்பற்றி தெரியாவிட்டால்....  தயவுசெய்து விசரைக் கிளப்பாமல் இருங்கோ! எல்லாத்துக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு..... அது உங்களுக்கு புரியுமோ எண்டு எனக்குத் தெரியேல! :(

1384184_589239204469069_720620331_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி.. சம்பந்தன்.. உட்பட்ட தலைவர்களின் முன்னால் சிறீதரனின் ஆற்றிய காத்திரமான உரை......

 

https://soundcloud.com/tamilnet/s-sritharan-11-oct-2013-mp3

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா நினைக்காததை எல்லாம் நினைத்திருப்பார் என்கிறாரே.. :D

அதுசரி எப்ப நீங்கள் "தமிழ் மேட்டுக்குடி" மாமனிதர் குமார் ஐய்யா, அவர்தம் புதல்வர் கஜான் மற்றும் புலிகளுக்கு பேச்சுவார்த்தையில் உதவியவர்கள் போன்றோரின் உரையை இங்கு கொண்டுவந்து இணைப்பீர்கள்?

வடமாகான ஆட்சி புலி கேசியின் ஆட்ச்சியை விடக் கேவலமாப் போகும் போல கிடக்கு. சுழியன் சம்பந்தருக்கு ஏற்ற கிரீடம்.

 

 

558422_632767193442823_1654212904_n.jpg1377591_632767450109464_2122467955_n.jpgsampanthan.jpg

 

 

சபேசனின் தேசியத் தலைவருக்கு ஒரு  அரோகரா.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு...!

 

எங்களின் (தமிழ் மக்களின்) முன்னாலுள்ள முதன்மைத் தெரிவு நிச்சயமாக நீங்கள் அல்ல. ஆனால், 'இருப்பதில்' ஓரளவுக்கு திருப்திப்படக்கூடிய தெரிவாக நீங்களே இருக்கிறீர்கள்.

அதுதான் அடிப்படை யதார்த்தம். அதை நீங்கள் அடிக்கடி மறப்பது தான் புரியாத விடயமாக இருந்து தொலைக்கிறது.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், மக்கள் தீர்மானிக்கும் வரையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அடையாளம். மக்களிடம் ஏற்கனவே உங்களின் மீதான அதிர்ப்தியுண்டு. அவற்றை பெரிதாக மாற்றி காணாமற்போகும் வேலையைப் பார்த்து தொலைக்காதீர்கள்.

மாகாண சபையொன்றின் அதிகாரத்தினை எங்களின் (மக்களின்) ஒருமித்த தெரிவின் மூலம் கையளித்திருக்கிறோம். அந்த ஒரு சபையை வைத்துக் கொண்டே இவ்வளவு பிரச்சினைகளை 10- 20 நாட்களுக்குள் செய்கிறீர்கள். உங்களின் சில்லறைத்தனங்களை மக்கள் கண்டாலும், காணாதது மாதிரியே இருக்கிறார்கள். புரிந்து கொள்ளுங்கள் உள்வீட்டு பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொண்டு இயல்பாக இயங்க முன்வாருங்கள். அதுதான் இப்போது உங்களின் முன்னாலுள்ள பிரதான கடமை.

வடக்கு அமைச்சர்களின் தெரிவின் போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்தும் கூட. இறுதிமோதல்களின் கோரத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற பகுதி. அந்தப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் அங்கு தேவை. அதுபோக, முல்லைத்தீவு திருகோணமலை, அம்பாறை போல மாறிவிடக்கூடாது என்பதற்காக காக்கப்பட வேண்டிய பகுதி. அவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைமைகள் உணர்ந்தது மாதிரியே தெரியவில்லை. 5 மாவட்டங்களுக்கும் அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்படுவதே சிறந்த வழி. முதலமைச்சர் யாழ்ப்பாணத்தையும், முழுமாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆக, மற்றைய நான்கு அமைச்சுக்களும் ஏனைய மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்க எப்படி முல்லைத்தீவு கைவிடப்பட்டிருக்கிறது? சில நேரங்களில் உங்களின் முடிவு எரிச்சலூட்டுகிறது.

இறுதியாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு…, பாரம்பரியமிக்க கட்சி அடையாளத்தை விட்டுக் கொடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அடையாளத்துக்குள் பூரணமாக சங்கமிக்க முடியாது என்கிற உங்களின் கொள்கை தற்போதைய அரசியற்சூழ்நிலையில் சரியானது அல்ல. வீம்புக்கானது என்று தோன்றுகிறது. அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முழுமையாக தமிழரசுக் கட்சியே நிர்வகிக்க வேண்டும் என்கிற தோரணையிலானது. 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை' கட்சியாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ந்தும் இருந்து வருகிறது. ஆனால், அவற்றை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கண்டுகொள்வது போல தெரியவில்லை. இது, மக்களின் ஆணையையும் மீறுவதாகவே இருக்கின்றது.

புரிந்து கொள்ளுங்கள் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் வரையிலேயே மக்களின் அபிமானம் குறிப்பிட்டளவில் இருக்கும். அதைப் புரிந்து கொண்டு மற்ற கட்சிகளுக்கும் உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து தீர்மானங்களை மேற்கொள்ளுங்கள். அதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்யுங்கள். அதுதான், பல பிரச்சினைகளை குறைக்க வழி செய்யும். இல்லாத பட்சத்தில் தமிழரசுக் கட்சியின் கை மாத்திரம் ஓங்கி மற்ற கட்சிகள் அலைக்கழிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். அப்போது, மக்களின் ஆணை பெறுமதியற்றதாகிவிடும். அப்போது மக்கள் வேறொங்கோ சென்றிருப்பார்கள்...!

4தமிழ்மீடியாவிற்காக : புருஷோத்தமன் தங்கமயில்

தங்கள் பிள்ளைகளை வெளி நாட்டிற்கு அனுப்பி விட்டு, மாணவர்களை சூடேற்றி ஆயுதம் தூக்க வைத்ததின் பெரும் பங்கு 'தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உண்டு.

 

விக்னேஷ்வரனே வினை தீர்ப்பவனே

ரோம முகத்தோனே

யாழின் முதல்வனே

 

விக்கி ஐய்யா பதவிக்கு வந்ததும் எவ்வளவோ வேலை இருக்க.............

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் இதில எல்லாம் எடுபடக் கூடாது என்கிறது.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.