Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதப் போராட்டத்தை; தியாகு இன்று கைவிட்டார்

Featured Replies

நான் ஒரு அரசியல்வாதியோ,நடிகையோ இல்லை அப்படி இருந்தால் யாழில் குப்பை கொட்டிக் கொண்டு இருக்க மாட்டேன்.தமிழ்நாட்டு அரசியல்வாதியாக நான் இருந்தால் ஈழத்தை வித்து பிழைக்க மாட்டேன்.
 
கூட்டத்தை கூட்டுவது பெருதுதில்லை.கூட்டம் கூட்டி என்ன சாதிக்கிறது/சாதிச்சது என்பது தான் முக்கியம்

மனமோகன் சிங் தான் மகாநாட்டுக்கு போவதில்லை என்ற முடிவுதான். இதை ஊடகங்களில் படித்துக்கண்டுபிடிக்க முடியவில்லையா?

முன்னர் சாதித்தவை:

கருணாநிதி தேர்தலில் தோற்றது, ஐ.நா வில் இந்தியா இரண்டுதடவைகள் இலங்கையை எதிர்த்து வாக்களித்தது, பல சிங்கள தலைக்காடாகள் சவால் விட வடமாகாணாதேர்தல் கொண்டுவந்தது, மகிந்தா 13ம் திருத்தத்தை நீக்க என்று தெரிவுக்குழுவை அமைத்து விட்ட சவால்களை மிஞ்சி தெரிவுக்குழுவை கிடப்பில் போட வைத்தது.....  

மாற்றுக்கருத்துகள் வீரப்புராணம் பாட பாட கயிற்றை கட்டி ஒவ்வொரு குலையாக தேங்காய் சந்தடி இல்லாமல் இறக்கப்பட்டுவிட்டது. அவர்கள் தொடர்ந்து பாடுவதும் நன்மைக்குத்தான். இவர்களால் சாதிக்கப்பட்டவை பூச்சியமாக்காட்டப்படும் போது சிங்கள மக்கள் அந்த தெம்மாங்கில் அயர்ந்து தூங்குவார்கள். புதியவை இலகுவாக சாதிக்கப்படும்.

  • Replies 54
  • Views 5.3k
  • Created
  • Last Reply

1397228_1425486094331226_1246329653_o.jp
நள்ளிரவில் களப்பணி செய்யும் பெண்மணி from face book

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மக்கள் பற்று என்றால் அது இதுதான்.. அரசியல்வாதிகளைப்பற்றிக் கவலை இல்லை.

இங்கு சிலருக்கு எந்தப் போராட்டத்தையும் போராடுபவர்களையும் தூற்றுவது தான் தொழிலாக இருக்கிறது.

இவர்கள் தமிழர்களுக்கு என்ன வழியைத் தான் காட்டுகிறார்கள்? என்ன தான் செய்கிறார்கள்?

இப்படி வீடுகளில் இருந்து கொண்டு கணனி வழியாக இழிந்து பேச எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தைக் கூட்டி என்ன சாதிக்கிறார்கள் என்பதற்கு பொதுவான ஒரு அளவீடு இல்லை.. ஆகவே இந்த விவாதம் அவ்வளவு கெதியில் முடியாது.. :blink:  எதற்கும் இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு தலைவர்கள் ஒன்லைனில் மீட்டிங் வைக்க பரிந்துரைக்கிறேன்.. :icon_idea:

இசை கூட்டத்தை கூட்டி சாதிக்கிற ஆட்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை ஆனால் இவர் என்னத்தை சாதிச்சார் என்று என்னுடைய கேள்வி

மனமோகன் சிங் தான் மகாநாட்டுக்கு போவதில்லை என்ற முடிவுதான். இதை ஊடகங்களில் படித்துக்கண்டுபிடிக்க முடியவில்லையா?

முன்னர் சாதித்தவை:

கருணாநிதி தேர்தலில் தோற்றது, ஐ.நா வில் இந்தியா இரண்டுதடவைகள் இலங்கையை எதிர்த்து வாக்களித்தது, பல சிங்கள தலைக்காடாகள் சவால் விட வடமாகாணாதேர்தல் கொண்டுவந்தது, மகிந்தா 13ம் திருத்தத்தை நீக்க என்று தெரிவுக்குழுவை அமைத்து விட்ட சவால்களை மிஞ்சி தெரிவுக்குழுவை கிடப்பில் போட வைத்தது.....  

மாற்றுக்கருத்துகள் வீரப்புராணம் பாட பாட கயிற்றை கட்டி ஒவ்வொரு குலையாக தேங்காய் சந்தடி இல்லாமல் இறக்கப்பட்டுவிட்டது. அவர்கள் தொடர்ந்து பாடுவதும் நன்மைக்குத்தான். இவர்களால் சாதிக்கப்பட்டவை பூச்சியமாக்காட்டப்படும் போது சிங்கள மக்கள் அந்த தெம்மாங்கில் அயர்ந்து தூங்குவார்கள். புதியவை இலகுவாக சாதிக்கப்படும்.

மன்மோகன் உறுதியாகவே போக மாட்டாரா? எழுத்து மூல வாக்கு முலம் கொடுத்து விட்டாரா?
 
சரி அப்படியே மன்மோகன் போகாமல் விட்டால் அதன் மூலம் தமிழர்கள் என்னத்தை சாதிச்சிட்டனம்?...மகிந்தா போர்க் குற்றவாளி அதனால் தான் சிங் புறக்கணிச்சிட்டார் என்று சொல்லு உங்களுக்கு நீங்களே சந்தோசப்படுவீங்கள் அவ்வளவு தானே!...சிங்குக்குப் பதிலாக வேறு யாராவது போனால் என்ன செய்வீர்கள்? அப்பவும் தியாகுவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று போட்டு உங்களை நீங்கள் சந்தோசப்படுத்த வேண்டியது தான் இல்லையா

ஈழத்தை சிங்களவனுக்கு வித்து பிழைக்க நீங்கள் முயற்சி செய்வது உங்களது கருத்துக்களை பார்த்தாலே தெரியும்.

ரதி, தமிழ் நாட்டிற்கு உங்கள் சிறி லங்கா சக்கரவர்த்தி வரமுடியுமா?

இது ஈழதமிழ் ஆதரவாளர்கள் சாதிச்சது.

கூட்டத்தை கூட்டி இலண்டனில் இருந்து விரட்டி அடித்தார்கள்.

கனடாவில் கூட்டத்தை கூட்டி சிறி லங்காவை சாத்தான் என்று அழைக்க வைத்தார்கள்.

நீங்களோ உங்களது மற்றைய இரண்டு சிறி லண்கனுகளோ இல்லை.

நீங்களும் உங்கட பீரிசிண்ட பப்புரையும்!

ஓ நான் சிங்களவனுக்கு வித்துப் பிழைக்கிறன்.நீங்கள் அங்கிருந்து கடைசி வரைப் போராடி உயிர் தப்பி இங்கு வந்தும் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள்
 
உங்கள மாதிரி ஆட்கள் மற்றாக்கள் செய்தவைற்றை தாங்கள் செய்தது மாதிரி சந்தோசப்பட்டு கொண்டு இருப்பினம்.திரும்ப,திரும்ப பழசையே சொல்லிக் கொண்டு இருப்பினம்...உணர்ச்சி அரசியல் பேசுகின்ற உங்களோட் எழுதி என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை

இங்கு சிலருக்கு எந்தப் போராட்டத்தையும் போராடுபவர்களையும் தூற்றுவது தான் தொழிலாக இருக்கிறது.

இவர்கள் தமிழர்களுக்கு என்ன வழியைத் தான் காட்டுகிறார்கள்? என்ன தான் செய்கிறார்கள்?

இப்படி வீடுகளில் இருந்து கொண்டு கணனி வழியாக இழிந்து பேச எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது?

நீங்கள் எதாவது உருப்படியான வழியைக் காட்டலாமே...ஒர்,இரு நாளைக்கு மக்களை உணர்ச்சி அரசியலில் வைத்திருந்தால் சரி இல்லையா நாரதர்
 
நாங்கள் வீட்டில் இருந்து கணணியில் எழுதுகிறோம் நீங்கள் இரவு,பகல் பாராது வருடக்கணக்காய் வீதியில் இறங்கி போராடுகிறீர்கள் <_<
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலருக்கு எந்தப் போராட்டத்தையும் போராடுபவர்களையும் தூற்றுவது தான் தொழிலாக இருக்கிறது.

இவர்கள் தமிழர்களுக்கு என்ன வழியைத் தான் காட்டுகிறார்கள்? என்ன தான் செய்கிறார்கள்?

இப்படி வீடுகளில் இருந்து கொண்டு கணனி வழியாக இழிந்து பேச எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது?

அது தான் எனக்கும் தெரிய வில்லை...தினம் தினம் ஊதிய சங்கை தான் தொடர்ந்து ஊதீனம்...அவர் என்ன செய்து கிழிச்சார் இவர்ட்ட போராட்டாத்தால் என்ன நன்மை.....தானும் செய்யான் மற்றவனையும் செய்ய விடான் என்றது தான் எனக்கு ஞாவகத்துக்கு வருது......தூற்றி கதைக்கிறவங்கள் அவங்கட வாழ்க்கையே அதே பிழைப்பாய் போச்சு....தினம் தினம் அடுத்தவனை தூற்றி இதுங்கள் சாதிச்சது என்ன.... பூச்சியம்  :wub:

மன்மோகன் உறுதியாகவே போக மாட்டாரா? எழுத்து மூல வாக்கு முலம் கொடுத்து விட்டாரா?
 
சரி அப்படியே மன்மோகன் போகாமல் விட்டால் அதன் மூலம் தமிழர்கள் என்னத்தை சாதிச்சிட்டனம்?...மகிந்தா போர்க் குற்றவாளி அதனால் தான் சிங் புறக்கணிச்சிட்டார் என்று சொல்லு உங்களுக்கு நீங்களே சந்தோசப்படுவீங்கள் அவ்வளவு தானே!...சிங்குக்குப் பதிலாக வேறு யாராவது போனால் என்ன செய்வீர்கள்? அப்பவும் தியாகுவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று போட்டு உங்களை நீங்கள் சந்தோசப்படுத்த வேண்டியது தான் இல்லையா

உங்களின் கேள்விகளுக்கும் நீங்கள் முதல் எழுதியவற்றுக்கும் எந்த தொடர்பையும் காணவில்லை. அத்தனை கேள்விகளும் மாற்றுக்கருத்துகளுக்கு எழுத இல்லாமல் தவிப்பதை பறை அறைக்கிறது. இந்தியாவிலிருந்து இலங்கை வராமல் எல்லோரும் தடுக்கப்பட்டுவிட்டார்களா என்று ஒரு கேள்வியை கேட்காதது ஆச்சரியம். தேவையானவர்கள் எல்லோறையும் பிடித்து உள்ளே போட்டாலும், தனி நாடு கிடத்தாலும் தோற்றுப்போய்விட்ட கேள்விகளை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கதான் இனி மாற்றுக் கருத்துக்களுக்கு முடியும். இனி மாற்றுக்கருத்துகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தமிழ் மக்கள் முன்னால் போகத்தக்க பாதைகள் திறந்து விட்டன. ஒட்டுக்குழுகள் சி.வி யிடம் போகத்தொடங்கியிருப்பது இன்னும் மாற்றுக்கருத்துகளுக்கு கிடைத்த செய்திகளில் வந்தும் சேரவில்லை. 

நான் எழுதியவற்றை படிக்கவும். உங்களில் சிலர் வலிந்து வலிந்து எதுவும் நடக்கவில்லை என்று காட்டிகொண்டிருப்பதை தவிர இன்றைய நாளில் தமிழருக்காக அலுவல்களை முன்னால் தள்ளிக்கொடுப்பது எதுவும் இல்லை. 

மன்மோகன் சிங் போகமாட்டர் என்பது மட்டுமல்ல, அதற்கு மேல் நான் கேள்விட்டபவைகளை இங்கே எழுத முடியாது. பலரின் கதி நிர்க்கதியாகிவிட்டது. சீனாவை கை விட்டாலும் ஏதும் பலன் பல்ன் வரபோவத்தில்லை என்ற பரிதாப நிலை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோது இந்திய அரசு தலையிட்டு யுத்தத்தினை நிறுத்த சொல்லி கருணாநிதி அவர்கள் மன்மோகன் சிங்கிட்கு கடிதம் தந்தி என்று அனுப்பியபோதும் பதில் அனுப்பாத மன்மோகன் தியகுவிட்காக பதை பதைத்து பதில் கடிதம் எழுதியிருக்கிறார் .அதே நேரம் தமிழர்களின் நலனை முன் நிறுத்தியே கொமன் வெல்த் மகாநாடு பற்றி சிந்திக்கப்படும் என்றும் சொல்லியுள்ளார் .

இவர் எறிந்த கல்லில் விழுந்த முதலாவது மாங்காய்.....இந்தியா மகா நாட்டில் கலந்து கொண்டாலும் இல்லாது விட்டாலும் அது ஈழத்தமிழர்களின் நலன் களிட்காகவே என்றொரு மாயையை உருவாகியிருக்கிறார்

மாங்காய் இரண்டு ..உண்ணாவிரதம் இருந்தவர் தியாகு .மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெயலலிதா அவர்கள்.ஆனால் உண்ணாவிரதத்தினை நிறுத்த சொல்லி கடிதம் எழுதியதோ கருணாநிதிக்கு .எனவே அடுத்த தேர்தலிலும் காங்கிரசுக்கு கருணாநிதிதான் நண்பேண்டா

மாங்காய் மூன்று ...இரண்டாவது தடவையாகவும் தியாகுவின் உயிரை தாயுள்ளத்தோடு தமிழினத் தலைவர் கருணாநிதி காப்பாற்றியுள்ளார் .

மாங்காய் நான்கு.....தனது தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகாமல் அவை திசை திருப்பப்பட்டு தன்னை தியாகியாக்கிய திருப்தியோடு வெற்றி அல்லது வீர மரணம் என்கிற கோசத்தோடு உண்ணாவிரதம் இருந்த தியாகு அவை இரண்டும் இல்லாமலேயே உண்ணாவிரதத்தை கை விட்டுள்ளார் .

எனவே ஈழத் தமிழர்களே இந்த நான்கு மாங்காய்களையும் பொறுக்கி ஊறுகாய் போட்டு வையுங்கள் இனியும் ஈழத் தமிழர்களிக்காக சாகாத ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வருவார்கள் அவர்கள் தொட்டு நக்கி கொள்ள உதவும் .

இதுக்கு மேலயும் அரசியல் புரியாமல் நம்ம ஆழுகள் இதுகளை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பக்கம் பக்கமா எழுதிகொண்டே தான் இருப்பாங்கள்

புலம்பெயர்ந்தவர்களுக்கு சிங்கள அருவருடிகளும்  இந்திய ஏவல்களும் சில தமக்கு மட்டுமே உடம்பு முழுக்க மூளை என்று அலையும் எழுத்தாளர்களும்  (அப்படி என்று அவர்களே அவர்களை சொல்லி கொள்கிறார்கள்)  வாரா வாரம் உடனுக்குடன் ஊறுகாய் போட்டு தருகிறார்கள்.
அப்படி ப்ரசாக (fresh) ஊறுகாய் கிடைக்க வசதி இருக்கும்போது. இப்படி பழைய  ஊறுகாய்களை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
 
ஆனால் ஊறுக்காய் தொழிற்சாலை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு...........
இப்படி மலிவு விலையில் மாங்காய் கிடைக்கும்போது சேமித்து வைக்க வேண்டிய தேவை  இருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிற்குள் சிறி லங்கா சக்கரவர்த்தி போக முடியாத நிலை.

நமீதாவின் பவரிலும் பார்க்க சின்ன பவர் உள்ள ஈழ ஆதரவாளருக்கு அவ்வளவு பயமா?

இந்தியாவின் வாகன உற்பத்தி ஊற்று தமிழகம், தொழில் நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை முழுக்க.

உங்களின் சக்கரவர்த்தி போய் வியாபார, கலாசார ரீதியாக தொடர்புகளை ஏற்படுத்தி வர்த்தகத்தை உயர்துகிறாரா?

நீங்கள் 4 வருடமா என்னத்தை சாதித்தீர்கள்?

ஆனால் என்ன சாதிச்சம் என்ற கிளி பிள்ளை கேள்வி தொடர்கிறது.

நீங்கள் தொடர்ந்து என்னுடன் கருத்தாடல் செய்யாமல் இருப்பதற்கு நன்றி.

உங்களுக்கு அரசியல் சரித்திரமோ , முதிர்ச்சியோ இருப்பதாக தெரியவில்லை.

அற்புதம்...உலகம் எத்தப் பெரிசு என்று தெரியாத ஆட்களுக்கு உங்களின் கருத்தை விளங்கி கொள்ள நாள் எடுக்கும் அண்ணா.......தமிழ் நாட்டு இளைஞருக்கு ஈழ உணர்வு அதிகரித்திட்டே போகுது இப்ப...2009ம் ஆண்டு ஈழத்தில்  நடந்த இன அழிப்பு நூற்றுக்கு 60 விததில் மக்களுக்கு தெரியாது தமிழ் நாட்டில் அப்ப‌....இப்ப புகைப் படத்தை பார்த்து தான் அவர்களுக்கே தெரியுது பெரிய ஒரு இன அழிப்பு ஈழத்தில் நடந்து இருக்கு என்று.....
 
தமிழ் நாட்டு இளைஞன் எனது முகப்புத்தகத்தில் எனக்கு எழுதினதை இங்கே இணைக்கிறேன்.....
 
ztog.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கேள்விகளுக்கும் நீங்கள் முதல் எழுதியவற்றுக்கும் எந்த தொடர்பையும் காணவில்லை. அத்தனை கேள்விகளும் மாற்றுக்கருத்துகளுக்கு எழுத இல்லாமல் தவிப்பதை பறை அறைக்கிறது. இந்தியாவிலிருந்து இலங்கை வராமல் எல்லோரும் தடுக்கப்பட்டுவிட்டார்களா என்று ஒரு கேள்வியை கேட்காதது ஆச்சரியம். தேவையானவர்கள் எல்லோறையும் பிடித்து உள்ளே போட்டாலும், தனி நாடு கிடத்தாலும் தோற்றுப்போய்விட்ட கேள்விகளை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கதான் இனி மாற்றுக் கருத்துக்களுக்கு முடியும். இனி மாற்றுக்கருத்துகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தமிழ் மக்கள் முன்னால் போகத்தக்க பாதைகள் திறந்து விட்டன. ஒட்டுக்குழுகள் சி.வி யிடம் போகத்தொடங்கியிருப்பது இன்னும் மாற்றுக்கருத்துகளுக்கு கிடைத்த செய்திகளில் வந்தும் சேரவில்லை. 

நான் எழுதியவற்றை படிக்கவும். உங்களில் சிலர் வலிந்து வலிந்து எதுவும் நடக்கவில்லை என்று காட்டிகொண்டிருப்பதை தவிர இன்றைய நாளில் தமிழருக்காக அலுவல்களை முன்னால் தள்ளிக்கொடுப்பது எதுவும் இல்லை. 

மன்மோகன் சிங் போகமாட்டர் என்பது மட்டுமல்ல, அதற்கு மேல் நான் கேள்விட்டபவைகளை இங்கே எழுத முடியாது. பலரின் கதி நிர்க்கதியாகிவிட்டது. சீனாவை கை விட்டாலும் ஏதும் பலன் பல்ன் வரபோவத்தில்லை என்ற பரிதாப நிலை.

நீங்கள் மேலே என்ட கருத்திற்கு என்ன பதிலை எழுதினீங்கோ அதற்கு தகுந்த பதிலைத் தான் நான் உங்களுக்கு எழுதலாம் மல்லை
 
இதில் என்ன தனி மனித தாக்குதல் இருக்குது என்று நிர்வாகம் வெட்டியது

நீங்கள் மேலே என்ட கருத்திற்கு என்ன பதிலை எழுதினீங்கோ அதற்கு தகுந்த பதிலைத் தான் நான் உங்களுக்கு எழுதலாம் மல்லை
 
இதில் என்ன தனி மனித தாக்குதல் இருக்குது என்று நிர்வாகம் வெட்டியது

இதை கேளுங்கோ ரதி அக்கா: நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பது எனக்குத் தெரியாது. நாங்களும் நெஞ்சாலை மாரடிச்சு மாரடிச்சு எழுதுவதை நிர்வாகம் வெட்டுகிறது. நீங்கள் எழுதினது தமிழரின் விடுவுக்காகத்தான் எழுதியிருந்தனீர்களானால் நானும் சேர்ந்து கவலைப்படுகிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் வெட்டிய மட்டுவின் வாய்க்குச் சர்க்கரை கொடுத்தேன் என்று நினைத்துக்கொண்டு அடுத்த முறை வெட்டாமாலிருக்கத்தக்கதாக உருப்படியாய் (மட்டுவின் நேரத்திற்கும், எனது நேரத்திற்க்கும் பிரயோசனப் படத்தக்கதாக) ஏதாவது எழுதுங்கோ. BYE

<_<

தனிமனித தாக்குதல் இல்லாவிட்டாலும் பிரயோசனமாக எழுதாததை வெட்டினால் ஒன்றும் குடி முழுகிப் போகாது.  :)

Edited by மல்லையூரான்

இசை கூட்டத்தை கூட்டி சாதிக்கிற ஆட்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை ஆனால் இவர் என்னத்தை சாதிச்சார் என்று என்னுடைய கேள்வி

மன்மோகன் உறுதியாகவே போக மாட்டாரா? எழுத்து மூல வாக்கு முலம் கொடுத்து விட்டாரா?
 
சரி அப்படியே மன்மோகன் போகாமல் விட்டால் அதன் மூலம் தமிழர்கள் என்னத்தை சாதிச்சிட்டனம்?...மகிந்தா போர்க் குற்றவாளி அதனால் தான் சிங் புறக்கணிச்சிட்டார் என்று சொல்லு உங்களுக்கு நீங்களே சந்தோசப்படுவீங்கள் அவ்வளவு தானே!...சிங்குக்குப் பதிலாக வேறு யாராவது போனால் என்ன செய்வீர்கள்? அப்பவும் தியாகுவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று போட்டு உங்களை நீங்கள் சந்தோசப்படுத்த வேண்டியது தான் இல்லையா

ஓ நான் சிங்களவனுக்கு வித்துப் பிழைக்கிறன்.நீங்கள் அங்கிருந்து கடைசி வரைப் போராடி உயிர் தப்பி இங்கு வந்தும் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள்
 
உங்கள மாதிரி ஆட்கள் மற்றாக்கள் செய்தவைற்றை தாங்கள் செய்தது மாதிரி சந்தோசப்பட்டு கொண்டு இருப்பினம்.திரும்ப,திரும்ப பழசையே சொல்லிக் கொண்டு இருப்பினம்...உணர்ச்சி அரசியல் பேசுகின்ற உங்களோட் எழுதி என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை

நீங்கள் எதாவது உருப்படியான வழியைக் காட்டலாமே...ஒர்,இரு நாளைக்கு மக்களை உணர்ச்சி அரசியலில் வைத்திருந்தால் சரி இல்லையா நாரதர்
 
நாங்கள் வீட்டில் இருந்து கணணியில் எழுதுகிறோம் நீங்கள் இரவு,பகல் பாராது வருடக்கணக்காய் வீதியில் இறங்கி போராடுகிறீர்கள்தி

ரதி ,

உணர்ச்சி அரசியல் என்றால்  என்ன? உருப்படியான வழி என்பது போராடும் வழி. போராட்டம் என்றால் உண்ணா நோன்பு இருப்பது, ஊர்வலமாச் செல்வது, ஆர்ப்பாட்டம் செய்வது, பரப்புரை செய்வது, கூட்டம் போடுவது, நோட்டிஸ் ஒட்டுவது ,பகீஸ்கரிப்பது,கடிதம் எழுதுவது,பத்திரிகைச் செய்தி எழுதுவது எனப் பல வகைப்படும். இவை எல்லாவற்றையும் செய்வது தவறு சுய நலம் என்று சொல்லும் நீங்கள் என்ன வழியைக் காட்டுகிறீர்கள் ? என்ன செய்துள்ளீர்கள் என்பதே எனது கேள்வி.

நான் மேற்கொண்டவற்றில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டு அதனைச் செய்பவர்களையும் ஊக்கப் படுத்துகின்றேன்.

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை கேளுங்கோ ரதி அக்கா: நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பது எனக்குத் தெரியாது. நாங்களும் நெஞ்சாலை மாரடிச்சு மாரடிச்சு எழுதுவதை நிர்வாகம் வெட்டுகிறது. நீங்கள் எழுதினது தமிழரின் விடுவுக்காகத்தான் எழுதியிருந்தனீர்களானால் நானும் சேர்ந்து கவலைப்படுகிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் வெட்டிய மட்டுவின் வாய்க்குச் சர்க்கரை கொடுத்தேன் என்று நினைத்துக்கொண்டு அடுத்த முறை வெட்டாமாலிருக்கத்தக்கதாக உருப்படியாய் (மட்டுவின் நேரத்திற்கும், எனது நேரத்திற்க்கும் பிரயோசனப் படத்தக்கதாக) ஏதாவது எழுதுங்கோ. BYE

<_<

தனிமனித தாக்குதல் இல்லாவிட்டாலும் பிரயோசனமாக எழுதாததை வெட்டினால் ஒன்றும் குடி முழுகிப் போகாது.  :)

நீங்கள் மற்றவர்களது கருத்தை வாசிக்காமல் பதில் எழுதுகிறீர்கள் என்பதற்கு இந்தக் கருத்தே உதாரணம்.நான் ஒன்றும் நிர்வாகம் வெட்டின கருத்தைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை[அது நிர்வாகத்திற்காக எழுதினது.]அதற்கு அவசியமுமில்லை
 
எனது 27வது கருத்திற்கு நீங்கள் 29 கருத்தில் பதில் சொல்லி இருக்கிறீர்கள் அதற்கு நான் 34 கருத்தில் பதில் எழுதி உள்ளேன்.அதற்கு நீங்கள் 36 கருத்தில் பதில் எழுதியுள்ளீர்கள்.அதில் நான் தொடர்பு இல்லாமல் எழுதியுள்ளாத சொல்லீர்கள்.அதுக்குத் தான் நீங்கள் எழுதியவற்றுக்குத் தான் பதில் எழுதலாம் என்று எழுதினேன்.நீங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் எழுதினால் நானும் அப்படித் தானே எழுத வேண்டும் :lol: 
  • கருத்துக்கள உறவுகள்

ரதி ,

உணர்ச்சி அரசியல் என்றால்  என்ன? உருப்படியான வழி என்பது போராடும் வழி. போராட்டம் என்றால் உண்ணா நோன்பு இருப்பது, ஊர்வலமாச் செல்வது, ஆர்ப்பாட்டம் செய்வது, பரப்புரை செய்வது, கூட்டம் போடுவது, நோட்டிஸ் ஒட்டுவது ,பகீஸ்கரிப்பது,கடிதம் எழுதுவது,பத்திரிகைச் செய்தி எழுதுவது எனப் பல வகைப்படும். இவை எல்லாவற்றையும் செய்வது தவறு சுய நலம் என்று சொல்லும் நீங்கள் என்ன வழியைக் காட்டுகிறீர்கள் ? என்ன செய்துள்ளீர்கள் என்பதே எனது கேள்வி.

நான் மேற்கொண்டவற்றில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டு அதனைச் செய்பவர்களையும் ஊக்கப் படுத்துகின்றேன்.

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நாரதர்,போராட்டம் என்றால் உண்ணா நோன்பு இருப்பது, ஊர்வலமாச் செல்வது, ஆர்ப்பாட்டம் செய்வது, பரப்புரை செய்வது, கூட்டம் போடுவது, நோட்டிஸ் ஒட்டுவது ,பகீஸ்கரிப்பது,கடிதம் எழுதுவது,பத்திரிகைச் செய்தி எழுதுவது எனப் பல வகைப்படும். இவை எல்லாவற்றையும் செய்வது தவறு சுய நலம் என்று நான் சொல்லவில்லை.இவற்றை செய்பவர்கள் தங்கட சொந்த,சுய நலத்திற்காக இதைச் செய்கிறார்கள் என்பதே என் கருத்து.கொஞ்சப் பேர் பெரும்பாலும் தமிழக அரசியல் தலைவர்கள்அப்படி செய்வர்களைத் தான் நான் கண்டிக்கிறேன்.
 
போராட்டம் என்பது உள் மனதில் இருந்து எழ வேண்டும்.தாங்கள் பிழைக்க வேண்டும் என்பதற்காக எங்கட போராட்டத்தை கையில் எடுக்க கூடாது

சரி அவர்கள் பிழைப்புக்காகத் தான் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இதனால் உங்களுக்கு என்ன கெடுதல்? அவர்கள் எங்களுக்காகப் போராடுவது எமக்கு நல்லது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

சரி அவர்கள் பிழைப்புக்காகத் தான் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இதனால் உங்களுக்கு என்ன கெடுதல்? அவர்கள் எங்களுக்காகப் போராடுவது எமக்கு நல்லது தானே?

Thousand-Sri-Lanka-Rupee.jpg

???

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அடப்பாவிங்களா உங்களுக்காக ஒருவர் உண்ணா விரதம் இருந்தாரே அவரை சொல்லனும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி அவர்கள் பிழைப்புக்காகத் தான் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இதனால் உங்களுக்கு என்ன கெடுதல்? அவர்கள் எங்களுக்காகப் போராடுவது எமக்கு நல்லது தானே?

அவர்கள் எங்களை பேய்ப் பட்டம் காட்ட நினைப்பார்கள்.நாங்கள் காலம்,காலமாக ஏமாந்து போக வேண்டுமாக்கும்.இப்படித் தான் இங்கிருந்து கொண்டு புலம் பெயர் புலிகள் மக்களை மாயையில் வைத்திருந்தார்கள்.
 
இந்தப் போராட்டத்தினால் என்ன பிரயோசனம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.கொஞ்ச மக்கள் கொஞ்ச நாள் ஒன்று கூடினார்கள்.இப்ப என்ன செய்கிறார்கள்?

என்னே ஒரு வெறி உங்களுக்கு?

ஒருவரின் போராட்டத்தை பற்றி குறைகூறுவது தார்மீக நீதியில் சரியானதா? 

  • கருத்துக்கள உறவுகள்

குருதி அழுத்தம்.. மற்றும் நீரிழிவு நோயாளியான தோழர் தியாகு ஐயா நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது என்பது உண்மையில்.. நூலில் மலை உச்சியில் இருந்து அந்தரத்தில் தொங்குவதற்கு ஒப்பானது..! மருத்துவர்களின் எச்சரிக்கை நியாயமானதும்.. மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட்டதும் ஆகும்.

உண்மையில்.. இத்தனை ஆபத்துக்கள் மத்தியிலும்.. தனக்கென ஒரு இலக்கை.. தீர்மானித்து தோழர் தியாகு ஐயா.. வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்தோடு 9 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் என்பது தமிழ் இனத்திற்கு ஆற்றிய மகத்தான செயலாகும். குறிப்பாக பொதுநலவாய நாடுகள் கூட்டத்தொடர் இன அழிப்புச் சிறீலங்காவில் நடக்க உள்ள நிலையில்.. இந்தியாவின் தென்பிராந்தியத்தின் நிலைப்பாட்டை சாற்றும் வகைக்கு இது இன்று அமைந்து நிற்கிறது.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக.. தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் இந்தக் கூட்டத்தொடரை புறக்கணிக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டும் உள்ளார்.

இதற்கு எல்லாம்.. சும்மா யாழ் களத்தில் விசமக்கருத்து எழுதி காள்கோளிட முடியாது. தோழர் போன்று குறைந்த பட்ச செயற்பாட்டை காட்டி மக்களை உணர்வூட்டுதலின் மூலமும் விழிப்பூட்டுவதன் மூலமுமே செய்ய முடியும். தோழர் தியாகுவின் நோக்கமும் அதுவே. அது நிறைவேறியது அவருக்கு கிடைத்த வெற்றியே..! தமிழ் மக்களுக்கும் அது வெற்றி தான்..! :icon_idea:

----------------------

புறக்கணிப்பதன் ஊடாகவே அழுத்தம்கொடுக்கலாம்: ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2013
 
Jayalalitha.jpg
 
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.   பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.   

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளைக் கருத்திற்கொண்டு இலங்கையில் இடம்பெறும் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.   பொதுநலவாய மாநாட்டைக் கனடா புறக்கணித்துள்ளதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இம்மாநாட்டை புறக்கணிப்பதனூடாக இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE

முன்பு எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் இன எழுச்சி எற்பட்டுள்ளது, மே மாதம் நடைபெற்ற மாணவர் போரட்டங்களை யாரும் எளிதில் மறக்க இயலாது. நிற்சயம் இவை பாரிய தாக்கங்களை எற்படுத்தி உள்ளது, மீண்டும் மாணவர் போரட்டங்கள் உருவாக கூடாது என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். சுய லாபத்திற்காக இயங்கும் தமிழக அரசியற் கட்சிகளினாலே இன்று இந்திய அரசின் நிலைப்பாடுகள் மட்டப்படுத்தப் பட்டுள்ளன. 13A விற் கூறப்பட்டுள்ள தீர்வையே பெற்றுத்தர இயலாது என்று தெரிந்திருந்த போதும் அவர்களின் பக்கம் இருப்பதையே கூட்டமைப்பு விரும்புகிறது. இலங்கயின் அரசியலமைப்பிற்குட்பட்ட எந்த அதிகாரத்தையும் கூட்டமைப்பு பெற்றுத்தர இயலாது என்று தெரிந்த போதும் கூட்டமைப்பின் பக்கம் சார்ந்து இருப்பதை நீங்கள் விரும்புகிறிர்கள். போரடுகிறவர்களையும் தூற்றுகின்றீர். அயுத போரட்டம் முடிந்து மக்கள் போரட்டம் துவங்கியுள்ளதை எற்க மறுக்கின்றீர்.

  • கருத்துக்கள உறவுகள்
இதை தான் விஸ்வா தமிழில் சொல்வது "தானும் கிடவான் தள்ளியும் கிடவான்" என. எமக்கு ஏதாவது யாரும் செய்யும் போது தனது சுயநலம் சிறிதோ பெரிதோ இருக்க தான் செய்கிறது. அவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
உ+ம்: Steven Harper பொதுநலவாய நாடுகளுக்கு போவதிலும் பார்க்க போகாமல் விடுவதால் அவருக்கு அரசியல் லாபம் ஒன்ராறியோவில் உண்டு. இருந்தாலும் அவர் போகாமல் விடுவதால் அரசியல் ரீதியான லாபங்கள்  ஈழதமிழருக்கு உண்டு. இதைப்பற்றி யாரும் கட்டுரை எழுத மாட்டார்கள்.மாறாக தியாகு பற்றி பந்தி பந்தியாக விமர்சிக்கிறார்கள். (win win )
  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்கரின் பொதுவான மருத்துவ ரீதியான விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியது.ஆனால் தியாகுவின் உ.விரதத்தைப் பற்றி நெடுக்கர் எழுதுவது "சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது" :lol:  :D  :icon_idea:
 
முன்பு எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் இன எழுச்சி எற்பட்டுள்ளது, மே மாதம் நடைபெற்ற மாணவர் போரட்டங்களை யாரும் எளிதில் மறக்க இயலாது. நிற்சயம் இவை பாரிய தாக்கங்களை எற்படுத்தி உள்ளது, மீண்டும் மாணவர் போரட்டங்கள் உருவாக கூடாது என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். சுய லாபத்திற்காக இயங்கும் தமிழக அரசியற் கட்சிகளினாலே இன்று இந்திய அரசின் நிலைப்பாடுகள் மட்டப்படுத்தப் பட்டுள்ளன. 13A விற் கூறப்பட்டுள்ள தீர்வையே பெற்றுத்தர இயலாது என்று தெரிந்திருந்த போதும் அவர்களின் பக்கம் இருப்பதையே கூட்டமைப்பு விரும்புகிறது. இலங்கயின் அரசியலமைப்பிற்குட்பட்ட எந்த அதிகாரத்தையும் கூட்டமைப்பு பெற்றுத்தர இயலாது என்று தெரிந்த போதும் கூட்டமைப்பின் பக்கம் சார்ந்து இருப்பதை நீங்கள் விரும்புகிறிர்கள். போரடுகிறவர்களையும் தூற்றுகின்றீர். அயுத போரட்டம் முடிந்து மக்கள் போரட்டம் துவங்கியுள்ளதை எற்க மறுக்கின்றீர்.

மாணவர்கள் போராட்டம் வரும் என அஞ்சுகிறார்களா :o அது தானா மாணவர்களை ஜெ.அரசு அடக்கி வைத்திருக்குது :( மாணவர் போராட்டம்  உக்கிரம் பெற்று எழ வாழ்த்துக்கள் :)                                                                                                                                            
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இருந்திட்டுப் போகட்டும். நாங்க சாத்தானாகவும்.. தோழர் தியாகு ஐயா உண்ணாவிரதம் பற்றிச் சொல்லும் கருத்து வேதமாகவும் இருந்தால் போதும். அது தான் இங்கு அவசியம்..! உங்களுக்கு விளங்கப் படுத்தி ஒன்று விளங்குது என்றால்.. அது இந்த உலகில் எதுவுமேயாவும் இருக்க முடியாது. சாரி சிஸ்டர். :):lol:

Edited by nedukkalapoovan

அவர்கள் எங்களை பேய்ப் பட்டம் காட்ட நினைப்பார்கள்.நாங்கள் காலம்,காலமாக ஏமாந்து போக வேண்டுமாக்கும்.இப்படித் தான் இங்கிருந்து கொண்டு புலம் பெயர் புலிகள் மக்களை மாயையில் வைத்திருந்தார்கள்.
 
இந்தப் போராட்டத்தினால் என்ன பிரயோசனம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.கொஞ்ச மக்கள் கொஞ்ச நாள் ஒன்று கூடினார்கள்.இப்ப என்ன செய்கிறார்கள்?

ரதி நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்? அவர்கள் போராடுவதால் உங்களுக்கு என்ன நட்டம் ஏற்பட்டது? முதலில் இதற்குப் பதில் சொல்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.