Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?

 

 

குழந்தையின்மை என்பது 

நவீன சமுதாயத்தைப் 

பீடித்திருக்கும் புற்றுநோய்! - Vicki Donor படத்திலிருந்து.

மீப காலமாகவே புதுமணத் தம்பதிகளிடம் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது வாழ்க்கையை எஞ்சாய் பண்ண வேண்டும், இருவரும் வேலை பார்த்து பணம் சேமித்துக்கொள்ள வேண்டும என பல நியாயமான காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவானது தம்பதிகளால் எடுக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய முடிவை எடுக்கும் முன், நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

 

Baby-1.jpg

சொல்லு..கேட்போம்!

 குழந்தையற்ற ஒரு தம்பதியால் தத்தெடுத்து வளர்க்கஏப்பட்டவன் என்ற முறையில், ஒரு பெண் மலடிப்பட்டத்துடன் வாழ்வதன் கொடுமையை நான் மற்றவரை விட நன்கறிவேன். என்ன தான் சமூகம் நாகரீகம் அடைந்துவிட்டதாகக் கூறினாலும், சொந்தக்காரர்கள் மத்தியில், விஷேச தினங்களில் சமூகத்தின் உண்மைக் குணம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். யாராவது தற்செயலாக ஏதாவது கூறினால்கூட, அதுவும் சமூகத்தின் கேலியாகவே தாய்மையடையாத பெண்ணால் உணரப்படும். தவிர்க்கப்பட வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாத உளச்சிக்கல் அது.

இரண்டு ஆண்டுகள் சந்தோசமாக புதுமண வாழ்வை அனுபவிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது, பின்னாளில் உங்களுக்கு வேதனையான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதே உண்மை. ரெண்டு வருசம் தள்ளிப்போட்டால் குழந்தை பிறக்காதென்று மருத்துவம் சொல்கிறதா? என்று நீங்கள் என்மீது பாயலாம். நான் மருத்துவன் அல்ல, நான் கண்ட பலரின் அனுபவங்களின் அடிப்படையிலேயே இதைப் பேச விழைகின்றேன்.

முதலாவதாக, புதுமணத் தம்பதிகள் குறிப்பாக பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆண்களைப் பொறுத்தவரை, திருமணம் ஆகும்வரை பெண் என்பவள் வெறும் சதைப்பிண்டம் தான். அவளுக்குள்ளும் ஒரு மனது உண்டு என்பதோ. அவளும் வலியும், வேதனையும், வருத்தமும், அவமானமும் அடையக்கூடிய ஒரு உயிர் என்றோ ஆண்களுக்கு உறைப்பதில்லை. ஆணைப் பொறுத்தவரை, பெண் என்பவள் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டும் ஒரு டாய், அவ்வளவே!

baby2.jpg

அடப்பாவி!

ஆனால் திருமணத்திற்குப் பின், 24 மணி நேரமும் ஒரு பெண்ணுடன் வாழும்போதே, ஆண் அவளை செக்ஸைத் தாண்டி பார்க்கத் துவங்குகிறான். இன்னொருவகையில் சொல்வதென்றால், பார்க்க வைக்கப்படுகின்றான். அவளும் தன்னைப் போலவே கோபப்படுவாள்/வருத்தப்படுவாள், தனக்கு தன் வீட்டார் போலவே அவளுக்கும் ஒரு பின்புலமும், பாசம் காட்டும் ஜீவன்களும் உண்டு, அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு என்று ஆண் கல்யாணத்திற்குப் பிறகே புரிந்து கொள்கிறான்.

பெரும்பாலும், ஒரு வருட காலமாவது ஆகிறது அவனுக்கு உறைக்க! இது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் இது பெண்ணின் மீதான ஈர்ப்பைக் குறைத்துவிடுகிறது. இதையே பெரியவர்கள் நாகரீகமாக ‘ஆசை அறுபது நாள்..மோகம் முப்பது நாள்’ என்று சொல்லி வைத்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பெண் (இப்போது பெண்மணி) மீதான ஈர்ப்பு என்பது, அவர்களுக்கிடையிலான உறவின் தன்மையைப் பொறுத்ததாக ஆகிவிடுகிறது. அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்.........!

அடுத்ததாக, பொருளாதாரப் பிரச்சினைகள். பணத்தேவை என்பது  இரண்டாயிரம் சம்பளத்தில் ஆரம்பித்து இரண்டு லட்சத்தைத் தாண்டினாலும் தீருவதில்லை. நாம் இது தான் இலக்கு என்று ஒரு ஸ்டேட்டஸுக்கு உயரும்போது, மற்றொரு இலக்கு வந்து நிற்கிறது. இன்று பெரும்பாலும் ஆண்-பெண் இருவரும் சம்பாதிக்கும் நிலையில், அது உண்டாக்கும் ஈகோ சார்ந்த பிரச்சினைகள் வேறு. இவை உண்டாக்கும் மன அழுத்தங்கள், பாலியல் ஈர்ப்பைக் குறைப்பது மட்டுமல்லாது விந்தணு எண்ணிக்கையையும் குறைப்பதை இன்றைய மருத்துவம் கண்டுகொண்டுள்ளது.

அடுத்ததாக, சம்பந்தி வீட்டார் தொல்லை. நமது சமூகத்தைப் பொறுத்தவரை திருமண வாழ்வு என்பது இரு மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. அது இரு குடும்பங்களின் உறவு மட்டுமல்ல. அது இருவேறு வம்சங்களின் உறவு. ‘எங்க செய்முறை வேற..இப்படிச் செய்யலியா? நாங்க என்ன குறைஞ்சவங்களா?’ என்று சொந்தபந்தங்கள் கிளப்பும் பஞ்சாயத்துகளிலேயே, பாதி மனநோயாளியாக ஆக வேண்டியிருக்கும். மாமியார் பிரச்சினை போனஸ். கூடவே நாத்தனாரும் இருந்துவிட்டால், அமோகம் தான்.

குறித்துக்கொள்ளுங்கள் புதுமணத் தம்பதிகளே...ஒரு குழந்தையைப் பெற்றெடுக்காதவரை மாமியாரும் நாத்தனாரும், அந்தப் பெண்ணை இந்தக் குடும்பத்தின் அங்கத்தினராக, பையனின் மேல் உரிமையுள்ளவளாக மனதளவில் ஏற்றுக்கொள்வதே இல்லை. என்னுடைய பல நண்பர்களும், குழந்தையைப் பெற்றபிறகே தங்கள் சகோதரி(நாத்தனார்)களிடம் இருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். (‘இவங்களுக்கு குழந்தை இல்லாட்டியும் நல்லதே’ என்று எண்ணும் நல்ல உள்ளங்களையும் நான் கண்டிருக்கிறேன்!)

இன்றைய வாழ்க்கை முறை, நம் உடலில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். சீக்கிரமே வயதிற்கு வருவது, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, கருவுறாமை, கருச்சிதைவு என்று முந்தைய தலைமுறை கண்டிராத பல விஷயங்களையும், பெரும்பாலான இன்றைய தலைமுறை கண்டுகொண்டிருக்கிறது. குறிப்பாக அதிக உடல் உழைப்பற்ற, ஏ.சி.வாழ்க்கை முறையின் விளைவுகளோ இவை என்று நான் ஐயுறுகிறேன்.

3.jpg

ஓகே..யோசிக்கிறேன்!

எனவே தான் நவீன வாழ்க்கைமுறை உங்கள் உடலை சிதைக்கும் முன், ஆண்-பெண் ஈர்ப்பு குறையும் முன், சமூக-பொருளாதார சிந்தனைகள் உங்களை முடக்கும் முன் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுங்கள். இந்த விஷயத்தில் எந்தவொரு தாமதத்தையும் அனுமதிக்காதீர். ‘இன்னும் விஷேசமில்லையா?’ எனும் பெரியோரின் கேள்வியை தொல்லையாக எடுத்துக்கொள்ளாதீர். அது தொல்லை அல்ல, அனுபவத்தால் விளைந்த எச்சரிக்கை.

‘ஆண்டவன் நமக்கு கொடுப்பது என்று முடிவு செய்திருந்தால், இரண்டு வருடம் கடந்தாலும் கொடுக்கத்தானே செய்வான்?’ என்று தத்துவரீதியாக நீங்கள் யோசிக்கலாம். இருந்தாலும், எளிதாக உங்களுக்குள் முடிய வேண்டிய விஷயத்தை சிக்கலாக்கி, ஆண்டவனை வேறு தொந்தரவு செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த

மக்கட் பேறல்ல பிற.

 

http://sengovi.blogspot.co.uk/2013/10/blog-post_7.html

  • கருத்துக்கள உறவுகள்

தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?

 

இல்லை உடனயே வேலையத் தொடங்கீரணும்! :D

தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா? ம் 2, 3 வருடங்களுக்குத் தள்ளிப் போடலாம் இளம் தம்பதியினராயின். 30 க்கு மேற்பட்ட (இருவரும்) ம்கூம் தள்ளிப் போடக் கூடாது
  • கருத்துக்கள உறவுகள்

மிக இளம் வயதில் :D (30 இல் ) கட்டினால்  மூண்டு நாலு வருஷம் தள்ளிப் ...போட்டு :icon_mrgreen: பிறகு பெற்றுக்கொள்ளலாம் :icon_idea:

ஒரு வருடம்  தேவை.  சேர்ந்தவர்கள் முதல் அன்பை பரிமாறட்டும், பின் மூன்றாம் ஆள் வரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

23 வருடங்கள் முன்னோக்கிப் பார்க்கும்போது...
 

அப்போது இந்தச் சிந்தனை எல்லாம் வரவில்லை
காதல் கல்யாணம் குழந்தை என  எல்லாம் தொடராகச் சென்றது. :D

 

இப்போது சில நாடுகளில் குழந்தைகளை விரைவில் பெற்றுப் பணமும் சம்பாதிக்கின்றனர். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைப் பிறப்பை யாரும் தள்ளிப் போட முடியாது.. ஒன்பது மாச சொச்சத்தில் பிறந்தே ஆகும்.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது தலைப்பிற்குக் கருத்து எழுதுவது என்று :D  :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

இள‌வ‌ய‌தில் திரும‌ண‌ம் செய்ப‌வ‌ர்க‌ள்... இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் வாழ்க்கையை சுற்றுலா மூல‌ம் ந‌ன்றாக‌ அனுப‌வித்து விட்டு குழ‌ந்தை பெறுவ‌தே... ந‌ல்ல‌து.
த‌ம‌து குடும்பச் சுமைக‌ளையும், ப‌டிப்பையும்..... முடித்து, 30-33 வ‌ய‌தில் திரும‌ண‌ம் செய்ப‌வ‌ர்க‌ள்... தாம‌திக்காது குழ‌ந்தை பெற்றுக் கொள்வ‌தே ந‌ல்ல‌து. அவ‌ர்க‌ள் தாம‌தித்து குழ‌ந்தை பெற்றால்... அத‌ற்குப் பின் 20 வ‌ருட‌ங்க‌ளாவ‌து பிள்ளையின் வ‌ள‌ர்ச்சியில்... அவ‌ர்க‌ளின் உழைப்பையும், க‌வ‌னிப்பையும் செய்வ‌து சிர‌ம‌மாக‌ இருக்கும்.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பெற்று..?????! அது வளர்ந்து குழந்தை பெற்று...????!

 

சும்மா போய் வேற அலுவல் இருந்தால் பாருங்க...! உள்ள சனத்தொகைக்கே ஒழுங்கா சாப்பாடு போடக் காணம். பாதி நோயிலும் பசியிலும் சாவுது..! அதற்கு முதலில உதவுங்க..! :)

 


  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

554091_442712065813191_1017522922_n.jpg

 

நன்றி FB

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தை பெற்று..?????! அது வளர்ந்து குழந்தை பெற்று...????!

 

சும்மா போய் வேற அலுவல் இருந்தால் பாருங்க...! உள்ள சனத்தொகைக்கே ஒழுங்கா சாப்பாடு போடக் காணம். பாதி நோயிலும் பசியிலும் சாவுது..! அதற்கு முதலில உதவுங்க..! :)

http://www.youtube.com/watch?v=lylDPo6O1oA&feature=player_embedded#t=207

 

 

பணக்கொழுப்பிலை தன்ரை புகழுக்காக புளிச்சல் ஏவறை விடுறான். டேவிட் பெக்காமின்ரை சொந்த வாழ்க்கையை பாத்தால் வயித்தை பிரட்டும்......தன்ரை கூடப்பிறந்த சகோதரத்தை கவனிக்க யோக்கியதையில்லை ..முதல்த்தார பிள்ளையை?????..இதுக்கை????

  • கருத்துக்கள உறவுகள்
இதுலே தள்ளுவதற்கு இனி என்ன இருக்கு?
அப்படி  என்று ஒரு நிலை வரும்போது.......... 
நாளை தள்ளாமல். வாழ்வுடன் தங்கிவிட வேண்டும்.
 
முக்கியமான ஒரு விடயம்......
இந்த கர்ப்பத்தடை மாத்திரைகள். இவைகளை தள்ளி விட வேண்டு.
இதுகளை போட்டால் பல சிக்கல் பின்பு வர சாத்தியம் உண்டு. மேலை நாடுகளில் இது சகயம் என்பதானால் மருத்துவர்கள் இதை தள்ளுங்கள் என்று உங்களை தள்ள மாட்டார்கள்.
இங்கே  வியாபரிகளே எதையும் முடிவு பண்ணுகிறார்கள். உங்களை பற்றிய முடிவுகளை நீங்கள்தான் தள்ளாமல் எடுக்க வேண்டும்.
 
ஒரு 25 வயது வந்துவிட்டால் ஒன்றுமே இல்லாமலே இருக்கலாம் மாதத்தில் ஓர் 8 நாள்தான் சிக்கலை கொடுக்க கூடிய நாட்கள். அதையும் இயற்கையாய் சிக்கிவிடாமல் பார்த்தால் சிசு பிரச்சனை இருக்காது.
 
இந்த 8 நாள் பிரச்சனை தெரியாமல்தான் பலபேர் 2 வருடமாய் 3 வருடமாய் பிள்ளை இல்லை என்று கொண்டு அலையின,ம். இடம் பொருள் காலம் அறிஞ்சு செயலில் இறங்க வேண்டும் என்று  வள்ளுவர் சொல்கிறார்.
அதை தள்ளுவது கூடாது. 
  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் ஆனவுடன் உடனேயே குழந்தையைப் பெற்று கொள்வது வரவேற்கக்கூடிய விடயம் இல்லை குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தள்ளிப்போடுதல் அவசியமானது. குழந்தையைப் பெற்று வளர்க்கும் தயார் நிலைக்கு இருவரும் வரவேண்டும். அவசரப்பட்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவதிப்படுவது ஆரோக்கியமான குடும்ப வாழ்வுக்கு இடந்தராது. ஒருவரை ஒருவர் தெளிவாக உணரமுன்னர் பிள்ளை பெற்றுக் கொள்வது இன்றைய காலத்தில் அன்பை வளர்க்காது மாறாக வெறுப்பையும் கண்களுக்குப்புலப்படாமல் மனதில் சுமையையும் மட்டுமே தோற்றுவிக்கும். அழகான குடும்பம் ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறிது காலம் தள்ளிப்போடுவதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான்

எனது அண்ணரின் மகன்

திருமணம் முடித்து 2 மாதத்தில்  தொலைபேசி  எடுத்து

ஒரு நல்ல  செய்தி 

மருமகள் முழுகாம இருக்கா என்றான்

எனக்கு கோபம் வந்தது

கலியாணம் கட்டினா பிள்ளை  பெறணும் என்று எவண்டா உனக்கு சொல்லித்தந்தது.

எதை  எதையோ   எல்லாம்  கேட்கிறீர்கள்

இதற்குவழிகளை  கேட்கக்கூடாதா???

சரி  இனி  அவா வீட்டோட

நீ   மூன்று வேலைக்கு ஓடித்திரி  என பேசிவிட்டு  தொலைபேசியை  வைத்துவிட்டேன்.

பக்கத்தில்  நின்ற  மனைவி  எனக்கு சரியான கிழியல்

அவன் முதன் முதலாக உங்களுக்கத்தான் சொல்லியிருக்கிறான்

இப்படியா பேசுவது என்று.......

 

இன்று அந்தப்பிள்ளைக்கு 4 வயசு

அவா வீட்டில

ஐயா 3 வேலை செய்கிறார்............. :(  :(  :(

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளிப்போட்டு 40களில் பிள்ளையை பெற்றால் பிள்ளைக்குரிய புரிதல்களில் சிலவில்லங்கமாய் விளங்கிக்கொள்ளுதுகளோ என்டு சந்தேகமாய் இருக்கு பிள்ளைபிறப்பென்ன கல்யாணத்தை தள்ளிப்போடுவதையே யோசிக்க வைக்கிற விடயம் உதாரணத்துக்கு நேற்று தமிழ் பள்ளியில் படிப்பிப்பவர் சொன்ன சம்பவம் சிங்கம் பார்தனீங்களோ? 80வீதமான பிள்ளைகள் சரியான விடை 40 களில் பிறந்த பிள்ளைகளோ ஓம் சிங்கம் சீடி 2 dvdயில் பார்த்தணாங்கள்  என்கிற ரீதியில் பதில்கள் வருகின்றன இதற்குரிய காரணங்கள் ஏன் என உங்களிடமே விட்டு விடுகின்றேன் . 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிள்ளை பெத்தெடுக்கிறதை ஒரு நாளும் தள்ளிப்போடக்கூடாது...... :icon_idea:
அதுக்காக தாயும் மோளும் போட்டிக்கு ஒரே காலகட்டத்திலை  பம்பஸ் பால்போச்சி எண்டு  இழுபறிப்படக்கூடாது....baby184.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.