Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு
[ வெள்ளிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2013, 07:44 GMT ] [ கனடா செய்தியாளர் ]


ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை :

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்கான தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு நாட்டிலும் பலத்த போட்டி எதிர்பார்க்கப்பட்டுத், தேர்தல் ஆணையம் அதனை எதிர் நோக்கியிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் பங்குபற்ற இருந்தவர்கள் பலர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் தேர்தலில் இருந்து ஒதுங்க எடுத்துக் கொண்ட முடிவு, புலம் பெயர் நாடுகளில் தமிழரின் ஒற்றுமைப் பலம் நிலைநாட்டப் பட்டிருப்பதை வலியுறுத்துவதாக அமைகிறது.

இந்த யதார்த்தத்தின் காரணமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்கான தேர்தல் பெரும்பாலான நாடுகளில் போட்டியில்லாத் தேர்வுகளாக அமைந்திருப்பதைக் காணலாம்.

மக்களால் போட்டியின்றி அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் பட்டியல் வருமாறு:

கனடா:

திரு. ஜோசப் பொன்ராஜா அன்ரனி, திரு. ஈழவேந்தன் எம் கே, திரு. ஹென்றி கிருபைராஜா, திரு. மரியராசா மரியாம்பிள்ளை, திரு. நிமல் விநாயகமூர்த்தி, திரு. ரமணன் குமாரசாமி, திரு. ரவீந்திரன் தர்மலிங்கம், திருமதி. செல்வஜோதி ரவீந்திரன், திரு. செல்வராசா ஐயாத்துரை, திருமதி. சாந்தினி சிவராமன், திரு. ஸ்ரீநாராயணதாஸ் நவரத்தினம், திரு. ஸ்ரீசங்கர் (சியான்) சின்னராசா, திருமதி. பிரியா அஜெய், திரு. சுரேன் மகேந்திரன், திரு. விமலராஜா குலசிங்கம், திரு. இராமசந்திரன் துரையப்பா, திரு. நந்தகுமார் மகாராசா, திரு. சிவானந்தன் முத்துக்குமாரு, திரு. யோகேந்திரன் வைசிகமாகாபதி, திரு. தனுசன் இராசையா, திரு. இரட்ணா முத்துக்குமாரசாமி, திரு. மார்க்கண்டு மோகனசிங்கம், திரு. நவநேசன் முருகண்டி, திரு. எரிக் சேவியர், திருமதி. கோசலாதேவி சிவானந்தன்

ஐக்கிய இராச்சியம்:

திரு. மோகன் தியாகராஜா, திரு. ருத்திராபதி சேகர் ,திரு. அம்பலவாணர் அகிலவாணர், திரு. தில்லை நடராஜா, திரு. வன்னியசிங்கம் குணசீலன், திரு. கந்தப்பு ஆறுமுகம் , திரு. மணிவண்ணன் பத்மநாபன், திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம், திருமதி. வாசுகி முருகதாஸ், திரு. அருணாசலம் இராஜலிங்கம், திரு. தாமோதரம்பிள்ளை முருகதாஸ், திரு. அருண் வி. கோபித், திருமதி. பாலாம்பிகை முருகதாஸ், செல்வி. கார்த்திகா விக்னேஸ்வரன், செல்வி. லவண்யா பாலசிங்கம், திரு. திருக்குமரன் இராசலிங்கம், திரு. அப்பாத்துரை வைரவமூர்த்தி, திரு. நிமலன் சீவரட்ணம், திரு. தேவராஜா நீதிராஜா, திரு. வடிவேலு சுரேந்திரன்

ஐக்கிய அமெரிக்கா:

திரு. விக்ரர் சின்னா இராஜலிங்கம், திரு. ஜே கனகரட்ணம் ஜெயந்தன், திரு. விசுவநாதன் ருத்திரகுமாரன், திரு. ரஞ்சன் மனோரஞ்சன், திரு. ஜெயக்குமார் ஐயாத்துரை Dr. திருமதி.சர்வேஸ்வரிதேவி தேவராஜா, திரு. சுரேந்திரா துரைரட்ணம், Dr. தவேந்திரா அம்பலவாணர் ராஜா, திரு. சந்திசேகரம் கந்தையா திரு. சண் சுந்தரம்

அவுஸ்திரேலியா:

திரு. கனகசபாபதி சிறிசுதர்சன், திரு. குணசிங்கம் தர்சன், திரு. கந்தசாமி பாஸ்கரசோதி, திரு. சுப்;பையா ஸ்கந்தகுமார், Dr. திருமதி.அபிராமி விசுவநாதன், திரு. டொமினிக் சந்தியாபிள்ளை, திரு. சண்முகம் சபேசன், திருமதி. உதயகுமாரி சிங்கராசா, திரு. கனகேந்திரம் மாணிக்கவாசகர்

ஜேர்மனி:

திரு. நடராசா பத்மநாதன், திரு. சின்னையா றீமன் லோகநாதன், திரு. கந்தையா சுப்பிரமணியம், திரு. செபஸ்ரியன் தனிநாயகம், திரு. சுப்பிரமணியம் பரமானந்தன், திரு. சுப்பையா லோகநாதன், திரு. வேலாயுதபிள்ளை ரவீந்திரநாத், திரு. அம்பலம் நேமிநாதன், திரு. ஹறோல்ட் இரத்தினகுமாரன், திரு. செல்வவிநாயகம் மணிமாறன்

அயர்லாந்து :

திரு. இளையதம்பி லோகேஸ்வரன்

சுவிற்சலாந்து:

திரு. சதாசிவம் ஜெகசீலன், திரு. மார்க்கண்டு தேவராஜா, திரு. செல்வராஜா ஜெயம், திரு. இராஜதுரை செந்தில்குமாரன், திரு. புவனேந்திரன் மோகனராஜ், திரு. முருகையா சுகிந்தன், திருமதி. ரஜினிதேவி செல்லத்துரை, திரு. கஜந்தன் கனகசுந்தரம், திரு. அருளானந்தம் தெய்வேந்திரன்

பிரான்ஸ்:

திரு. கலையழகன் கார்த்திகேசு (77), திரு. சுதர்சன் சிவகுருநாதன் (92), திரு. மகிந்தன் சிவசுப்பிரமணியம் (93), திரு. கமலேந்திரா பாலசந்திரன் (94), திரு. சவரிமுத்து கொன்ஸ்ரின் - தெற்கு

குறிப்பு:

1. பிரான்ஸ் நாட்டில் இரு தேர்தல் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. 'தேர்தல் நடைமுறைக் கைநூல்' விதிகளுக்கமைய நிவர்த்தி முனைப்புகள் எடுக்கப்படுகின்றன.

2. வடக்குப் பிரான்ஸ் மாநிலத்தில் கிடைக்கப்பெற்ற வேட்புமனு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப் படுவதால் இத்தொகுதியில் வேட்புமனு மீளக் கோரப்படுகின்றது. இத்தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது. விபரம் தேர்தல் ஆணையத்தின் www.tgte-ec.com இணையத்தளத்தில் தரப்படும்.

டென்மார்க்:

திரு. அனிசன் குலசிங்கம், திரு. சார்ல்ஸ் ஆனந்தம்

நோர்வே:

திரு. சயன்ரா சண், திரு. தோமஸ் அக்குவைனஸ் அலோசியஸ்

நியுசீலண்ட் :

திரு. ஆறுமுகம் தேவராசன், திருமதி. ஆன் உமா ஜோஜ்

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் செ. ஸ்ரீதாஸ் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு பிறிதொரு அறிக்கையில் மறுதொகுதி மக்கள் பிரதிநிதிகளின் ஒளிப்படங்கள் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://www.puthinappalakai.com/view.php?20131018109274

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் தேர்தலில் இருந்து பலர் ஒதுங்க எடுத்துக் கொண்ட முடிவு, புலம் பெயர் நாடுகளில் தமிழரின் ஒற்றுமைப் பலம் நிலைநாட்டப் பட்டிருப்பதை வலியுறுத்துவதாக அமைகிறது.

ஜனநாயகம் மிளிரும் நாடுகளில் போட்டியின்றியே பிரதிநிதிகள் தெரிவாகியிருப்பது ஒன்றில் நாடு கடந்த அரசாங்கம் செயற்பாடுகள் எதுவும் இல்லாத வெறும் பொழுதுபோக்குக் கூட்டமாக இருக்கவேண்டும் அல்லது நா.க.அரசில் சேர்வதால் எதுவித வருமானமும் கிட்டாது என்று காட்டுகின்றது.

பிரித்தானியாவில் குடும்பமாகவே பிரதிநிதிகளாகியிருக்கின்றார்கள் போலிருக்கு.

பிரித்தானியாவில் குடும்பமாகவே பிரதிநிதிகளாகியிருக்கின்றார்கள் போலிருக்கு.

ஐக்கிய இராச்சியம்:

 

திருமதி. வாசுகி முருகதாஸ்,திருமதி. பாலாம்பிகை முருகதாஸ், திரு. தாமோதரம்பிள்ளை முருகதாஸ்

 

 

கிருபன் லண்டனின் இந்தபக்கம்தான் போயிருக்கார் போலிருக்கு. அப்புறம் "அட லண்டனில் குடியிருக்கும் முருகனுக்கு மட்டுமல்ல முருகனின் தாசனுக்கு முடிகிறதே" என்று நினைத்து கடுப்பேறியிருக்கிறார். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இராச்சியம்:

 

திருமதி. வாசுகி முருகதாஸ்,திருமதி. பாலாம்பிகை முருகதாஸ், திரு. தாமோதரம்பிள்ளை முருகதாஸ்

 

 

கிருபன் லண்டனின் இந்தபக்கம்தான் போயிருக்கார் போலிருக்கு. அப்புறம் "அட லண்டனில் குடியிருக்கும் முருகனுக்கு மட்டுமல்ல முருகனின் தாசனுக்கு முடிகிறதே" என்று நினைத்து கடுப்பேறியிருக்கிறார். :D

 

என்ன சொல்லவாறீங்க.. முருகதாஸுக்கு 3 மனைவிகள் என்றா..???!

 

அது வேற வேற முருகதாஸுங்க போலவே தெரியுது. அதில் ஒருவர் கிழக்கு லண்டனில் கவுன்சிலராக நின்றவர் என்று அறியக் கிடைக்கிறது.

 

தேர்தல் ஒன்றின் செலவு.. மற்றும்.. இன்றைய சூழ்நிலையில் எதிர் நிலை.. தேட வேண்டிய அவசியமின்மைகளால்.. இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

 

போட்டி உள்ள இடங்களில் தேர்தல் நடத்தப்படவும் உள்ளது..!

 

சிறீலங்காவிலும் போட்டியிடாத உள்ளுராட்சித் தொகுதிகளில்... அல்லது எதிர்தரப்பின்.. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் இன்றி வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் தானே. தமிழகத்திலும் கூட இவ்வாறு நிகழ்ந்துள்ளன. இதில் ஒரு ஜனநாயக விரோதமும் இல்லையே..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

பிரான்ஸ்:

 

திரு. கலையழகன் கார்த்திகேசு (77), திரு. சுதர்சன் சிவகுருநாதன் (92), திரு. மகிந்தன் சிவசுப்பிரமணியம் (93), திரு. கமலேந்திரா பாலசந்திரன் (94), திரு. சவரிமுத்து கொன்ஸ்ரின் - தெற்கு

 

 

இதில் எது விசுகு என்று சொல்ல முடியுமா? அதன் பின்னர் அவரை "விசுகு அப்பப்பா" என்று அழைக்க முடியும். " :lol: 

Edited by மல்லையூரான்

பிரான்ஸ்:

திரு. கலையழகன் கார்த்திகேசு (77), திரு. சுதர்சன் சிவகுருநாதன் (92), திரு. மகிந்தன் சிவசுப்பிரமணியம் (93), திரு. கமலேந்திரா பாலசந்திரன் (94), திரு. சவரிமுத்து கொன்ஸ்ரின் - தெற்கு

 

 

அடைப்புக் குறிக்குள் இருப்பது வயதல்ல, அவர்கள் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களின் இலக்கம்.  :)

ஐக்கிய இராச்சியம்:

 

திருமதி. வாசுகி முருகதாஸ்,திருமதி. பாலாம்பிகை முருகதாஸ், திரு. தாமோதரம்பிள்ளை முருகதாஸ்

 

 

கிருபன் லண்டனின் இந்தபக்கம்தான் போயிருக்கார் போலிருக்கு. அப்புறம் "அட லண்டனில் குடியிருக்கும் முருகனுக்கு மட்டுமல்ல முருகனின் தாசனுக்கு முடிகிறதே" என்று நினைத்து கடுப்பேறியிருக்கிறார். :D

 

 

பின்னால் இருப்பவர்கள் கணவன் மனைவி தான். கடந்த காலத்தை விட இந்த முறை நாடு கடந்த தமிழீழஅரசு களை கட்டத்தான் போகிறது.  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எமக்கு மிகவும் நன்றாகவே பொழுது போகும்.  அதுவும் இலண்டனிலும் கனடாவிலும் மிகவும் காஸ்யமாக இருக்கப் போகிறது.     :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வயித்தெரிச்லை  கிளப்பாமல் போங்கப்பா..கனடாவிலை இருந்து இரண்டு பேர் வந்து திரும்ப புத்துயுர்  கொடுப்பம் என்று கதைச்சிட்டு போனாங்கள். ஏதவது செய்வம் எண்டால் யாரும் உருப்படியில்லை

 

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

எம்பசி ஒன்று திறந்து இருந்தார்கள். அதற்கு என்ன நடந்தது?? :)

வயித்தெரிச்லை  கிளப்பாமல் போங்கப்பா..கனடாவிலை இருந்து இரண்டு பேர் வந்து திரும்ப புத்துயுர்  கொடுப்பம் என்று கதைச்சிட்டு போனாங்கள். ஏதவது செய்வம் எண்டால் யாரும் உருப்படியில்லை

 

சாத்திரியார் எதாவது உருப்படியாய் செய்ய, எழுத என்று பல திட்டங்களுடன் இருக்க கனடாவில் இருந்த வந்த புலுமாசுகள் இரண்டு அதை எல்லாம் குழப்பிவிட்டு......

 

ஒண்டும் உருப்படியானதுகள் இல்லை.

 

உருப்படியாய் ஒன்டும் எழுதவிடாமல் சாத்திரியாரைக் கூட குழப்புறாங்கள். :o

எம்பசி ஒன்று திறந்து இருந்தார்கள். அதற்கு என்ன நடந்தது?? :)

 

அது எம்பசி அல்ல நுணா.  சூடானில் ஒரு அலுவலகம் திறப்பதற்குத்தான் முயற்சிகள் நடந்தன.  அதற்காக அங்கு அனுப்பப்பட்டவர் செய்த செயல்களால் அங்கிருந்து அவரை வெளியில் எடுப்பதே பெரும்பாடாகிவிட்டது.  அதற்குப் பின்னர் அங்கு யாரும் செல்ல முடியாத நிலையே உள்ளது.   :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எது விசுகு என்று சொல்ல முடியுமா? அதன் பின்னர் அவரை "விசுகு அப்பப்பா" என்று அழைக்க முடியும். " :lol: 

 

தயவு செய்து என்னைவிட்டுவிடுங்கள்

இந்த தேர்தல்

அது நடந்தவிதம்.............

 

என்னை  நாடுகடந்த அரசுக்கு சுபம் சொல்லவைத்துவிட்டது. :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களின் பங்களிப்பு இதில் எங்கே வருகிறது....  ஓட்டளிப்பு நடந்தாற்தானே, மக்கள் இவர்களை ஆதரிக்கிறார்களா அல்லது புறக்கணிக்கிறார்களா என்று பார்க்கமுடியும். ஒரே சிரிப்புப் பொலிஸ்காரங்கதான் போங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து என்னைவிட்டுவிடுங்கள்

இந்த தேர்தல்

அது நடந்தவிதம்.............

 

என்னை  நாடுகடந்த அரசுக்கு சுபம் சொல்லவைத்துவிட்டது. :(  :(  :(

நோட்டீஸ் அடிச்ச காசு நட்டம் போலிருக்கு!

தமிழர்களிடையே ஒற்றுமையை நிலைநாட்ட தேர்தல் இல்லாமலே பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்தப் பிரதிநிதிகள் தெரிவையிட்டுப் பெருமைப்படவேண்டும் <_<

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஒருவர் படிவத்துடன் கொடுக்க பத்து பவுன்ஸ் இல்லாமல் பக்கத்தில் நின்றவரிடம் கடன் வாங்கிக் கட்டினார் என்று கேள்விப்பட்டேன். கடந்த தேர்தலில் நிராகரிக்கப் பட்டவர்கள் எல்லோருமே இம்முறை லண்டன் பொறுப்பாளர் சேகரால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அந்தக் கணவன் மனைவியில் கணவன் பி ரித்தானியத் தமிழர் பேரவையின் உலகாகத் தமிழ் மகாநாட்டில் குழப்பம் விளைவிக்க ஆரம்பித்து மற்றவர்கள் அவரை அடக்கிய கண்கொள்ளாக் காட்சியை நான் கண்டேன். இவர்களெல்லாம் ......... ஆனால் அவர் பரிதியின் சகோதரியும் கணவனுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஒருவர் படிவத்துடன் கொடுக்க பத்து பவுன்ஸ் இல்லாமல் பக்கத்தில் நின்றவரிடம் கடன் வாங்கிக் கட்டினார் என்று கேள்விப்பட்டேன்.

நேர்மை, நியாயம் என்று வாழ்பவர்கள்தான் பணமில்லாமல் கஷ்டப்படுகின்றார்கள். அப்படியானவர்கள்தான் நா.க.த. அரசில் சேர்ந்து சேவை செய்கின்றார்கள் என்று சொல்லுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்கின்றேன் <_<

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மை, நியாயம் என்று வாழ்பவர்கள்தான் பணமில்லாமல் கஷ்டப்படுகின்றார்கள். அப்படியானவர்கள்தான் நா.க.த. அரசில் சேர்ந்து சேவை செய்கின்றார்கள் என்று சொல்லுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்கின்றேன் <_<

கக்கன் மாதிரி வருவார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர் கட்டுக்காசு இழக்கலாம் ஆனா இங்க தேர்தலில் போட்டியிட போதுமான வேட்ப்பாளரே கிடயாதளவுக்கு இருக்கிறது நட்டு கழண்ட அரசின் மக்களாதரவு.

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில் தெரியும் ,

நாங்க இதை அப்பவே சொல்லிட்டம் ஆனால் சிலர் இப்பவும் நம்புகின்றார்கள் .

முயல் பிடிக்கிற நாய்கள் எல்லாம் எஜமானுக்காகத்தான் முயல் பிடிக்கிறது. இந்த பூனை புலி இல்லாவிட்டாலும் முயல் பிடிக்கிறதே தன்ரை சொந்த பசிக்கு இனத்தின் போராட்டத்திற்கு. இதை மூஞ்சையில் பார்த்து மதிப்பிட இது எஜமானின் வளர்ப்பு நாய் அல்ல.

 

http://youtu.be/HEIUkNP4qZs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தெரிவு!
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தலில் போட்டியின்றி அரசவைப்பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் தொடர்பிலான தனது இரண்டாம் அறிக்கையினை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், பிரான்ஸ் நாட்டுக்குரிய மொத்த இதர ஐந்து உறுப்பினர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கை:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்கான தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளையும் சனநாயக நியதிகளுக்கமைவாகச் செய்வதில் ஈடுபட்டிருந்தது. தேர்தலை வழிநடத்தும் ஆவணங்கள் தயாரிப்பதிலிருந்து தேர்தல் நாளன்று தேர்தலை நடாத்தி முடிப்பதற்கான வாக்குச் சாவடிகளை அமர்த்திக் கொள்வது ஈறாகச் சகல முன்னெடுப்பு வேலைகளும் நடந்து முடிந்தன. அந்தந்த நாடுகளில் தேர்தல் ஆணையங்கள் தேர்தலுக்கான தயார் நிலையில் இருந்தன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட, பல கட்சிக்காரர்கள் கலந்து கொள்ளும், அரசாங்கங்களின் தேர்தலை ஒத்ததல்ல. ஒரே கொள்கைக்காகப் போட்டி போட்டுத் தமது சேவையைத் தமிழீழ மலர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வரும் ஆர்வலர்களிடையே ஏற்படும் போட்டி.

ஒவ்வொரு நாட்டிலும் கணிசமான அளவு போட்டி எதிர்பார்க்கப்பட்டுத் தேர்தல் ஆணையம் அதனை எதிர் நோக்கியிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் பங்குபற்ற இருந்தவர்கள் பலர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் தேர்தலில் இருந்து ஒதுங்க எடுத்துக் கொண்ட முடிவு, புலம் பெயர் நாடுகளில் தமிழரின் ஒற்றுமைப் பலம் நிலைநாட்டப்பட்டிருப்பதை வலியுறுத்துவதாக அமைகிறது. இந்த யதார்த்தத்தின் காரணமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்கான தேர்தல் பெரும்பாலும் போட்டியில்லாத் தேர்வுகளாக அமைந்திருப்பதைக் காணலாம்.

 

 


da1df9bc-60f4-427d-a947-e6067eb3df1f1.jp



பிரான்ஸ் நாட்டுக்கு இதர ஐந்து பிரதிநிதிகளின் விபரங்கள்:

திரு.பாலச்சந்திரன் நாகலிங்கம், திரு.ஜெயசந்திரன் கந்தசாமி, திரு.ஜோசப் மைக்கல் கொலின்ஸ், திரு.லோகராசா பார்த்திபன், திரு.கதிர்காமநாதன் கோகுலவேந்தன் (வட பிரான்ஸ்)

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் தேர்வாகிய மக்கள் பிரதிநிதிகளின் இரண்டாம் ஒளிப்பட தொகுப்பினையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதாக நாதம் ஊடகசேவை தெரிவித்துள்ளது.
 
http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=da1df9bc-60f4-427d-a947-e6067eb3df1f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.