Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தி சசிதரனும் வியாழக்கிழமை அமெரிக்கா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ananthy-seithy-20131002.jpg

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாக தமிழ் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை சந்தித்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பயணம் வெற்றியளித்தால் வேறு நாடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர்களில் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது உறுப்பினர் அனந்தி சசிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், மாகாண சபை உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் இன்று திங்கட்கிழமை அமெரிக்கா பயணமாகியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் ஆகியோரே அமெரிக்கா பயணமாகவுள்ளனர். அங்கு நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் அமெரிக்கா செல்கின்றனர். இதன் போது அவர்கள் இந்த நிகழ்வுக்கு மேலதிகமாக, அமெரிக்காவின் அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=95968&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த ஒரு விடயம் இது. புலத்தில் நிதிதிரட்ட அனந்தி அவர்களை இனி பயன்படுத்தப் போகிறார்கள். ஒரு கதைக்கு திரட்டப்படும் முழு நிதியும் அனந்தியவர்களின் கைக்குச் செல்லுமானால் கூட, அந்தத் தொகையை இலங்கையரசுக்கு கணக்குக் காட்டாமல் அவரால் பயன்படுத்தமுடியுமா?  வரும் மாவீரர் நாள் நினைவுக்கு அய்ரோப்பாவின் ஒரு நாட்டுக்கு அனந்தி அக்கா நிச்சயம் அழைக்கபடக் கூடும்.

நீங்கள் சொல்வதில் பல உண்மைகள் இருக்கின்றன. அதோடு மாகாணசபை கொள்கை திடமிடல் பணிகளில் அடுத்த சில மாதங்களை செலவழிக்க உள்ளது. அதோடு வட மாகாண ஆட்சியை இராணுவ கவனரை அகற்றி சிவில்மய படுத்தவேண்டியுளாதது. மேலும் நிதி, வெளிநாட்டு/புலம் பெயந்தோர் முதலீடுக்கான வழிவகைகைளை கொள்கை அடிப்படியில் உருவாக்கவேண்டியுளாதது. இவற்றை விட புதிதாக வந்துள்ள அமைச்சர்களை பயிற்றுவித்து அவர்களை சுற்றி ஆலோசனைக்குழு உருவாக்கி அமைச்சுகளின் செயல்திறனை விரைவில் ஊக்குவிக்கவேண்டியுளாதது. இப்படி பல சவால்கள் இருங்கின்ற வேளையில் புலம்பெயர் அமைப்புகள் பொறுப்புணர்வுடன் செயல் படவேண்டும். நிதி சேகரிப்பு என்று வந்தால் அதை எப்படி முதலமைச்சர் நிதியம் அமைத்தவுடன் அங்கு அனுப்பலாம் என்று யோசிக்கலாம். இந்த மாகாணசபையின் பெயரை வைத்து மோசடி நடந்தால் அதனால் அங்குள்ள மக்களுக்கும் எமது ஆட்சிக்கும் வரபோகின்ற பிரச்சனைகளை உணர்த்து புலம்பெயர் சமூகம் இயங்கவேண்டும்.

சில நாட்களுக்கு முன் அங்கு வந்த புலம்பெயர் தனவந்தார் உல்லாச பயண துறையை விரைவாக அபிவிருட்தி செய வேண்டும், அதில் தான் முதலீடு செய்யயுள்ளதாகவும் கூறி மாகாணசபை இந்த விடயங்களில் மந்த கதியில் போவதாகவும் குறைப்பட்தார். இவர் போல பலர் அங்கே இருக்கின்ற உடனடியாக கவனிக்க வேண்டிய விடயங்களை பின்தள்ளி தமது முதலீடுகள் வர என்ன செய்யலாம் என்ற சிறு வட்டத்துக்குள் மட்டும் நின்று சிந்திக்கின்றாரகள். அங்கே கடந்த பல தசாப்தங்களாக தமிழரின் கட்டமைப்புகள் சிதைவடைந்து இன்று நாங்கள் உண்மையில் பூசியத்தில் இருந்து மீள எழும்பாவேண்டியுலமை பற்றி சித்தித்து இந்த அரச கட்டுமானத்தை சரியாக நீண்ட கொள்கை நோக்குடன் இயங்க வைத்து அந்த கொள்கையின் அடிப்படையில் நிதி முதல் எல்லா வளங்களும்/பலன்களும் அதட்கு உரித்தானவர்களை சென்றடைய புலம்பெயர் சமூகம் இதய சுத்தியுடன் இயங்கவேண்டும். ஆவாரு நடந்தால் நிச்சயம் நிதியும் எல்லா வளங்களும் எமது ஆற்றலும் எம்மை உயர்ததிவைக்கும். 
 
எனது உறவுகள் அங்கே சென்று மாகாணசபைக்கு உதவுவதால் அவர்கள் என்னுடன் பகிரும் ஆதங்களை உங்களுடன் நான் பகிர்கிறேன்
  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்கா பேசாமல் அசைலம் அடிச்சிட்டு கம் என்று.. இருங்கோ..! உங்க தத்துவம் பேசுற ஆக்கள் எல்லாம் கள்ளப் பொய் சொல்லி அசைலம் அடிச்ச ஆக்கள். ஆனால் உங்களுக்கு அதற்கான நியாயமான காரணம் உள்ளது..! உதுகளை நம்பி.. வீணா ஏன் உங்களை இன்னும் கஸ்டப்படுத்துறீங்க..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் வையகம் 

மத்திய அரசோ மாகாண அரசோ நேரடியாக அபிவிருத்தி செய்வதை விட புலம்பெயர்ந்தவர்கள் கிராம அடிப்படையில் அபிவிருத்தி மேற்கொள்ளுவது மேலானது. அனாவசிய நிர்வாக செலவுகள் தவிக்கப்படும். இடைத்தரகர்களின் கொள்ளை அடிப்புக்களுக்கு வாய்ப்பு இல்லை. மேற்கு நாடுகளைப் போல அரசு திட்டமிடுதலிலும் கொள்கை வகுப்பதிலும் அதை நெறிப் படுத்தலிலுமே ஈடுபடவேண்டும். மிக நல்ல உதாரணமாக ஒரு கிராமத்தில் புலம் பெயர்ந்தவர்களால் அமைக்கப்பட்டுவரும் கிராமிய கட்டமைப்பின் பாருங்கள். சிறுவர் பாடசாலை, கேட்போர் கூடம், சிறுவர் பூங்கா, திறந்த வெளியரங்கு, விளையாட்டுத்திடல், கணனி மையம்  என பல அமைப்புக்கள் உள்ள ஒரு அபிவிருத்தியின் முதல் கட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

நல்ல கருத்த்து ஹாசன். "மேற்கு நாடுகளைப் போல அரசு திட்டமிடுதலிலும் கொள்கை வகுப்பதிலும் அதை நெறிப் படுத்தலிலுமே ஈடுபடவேண்டும்". நீங்கள் சொல்கிற கிராமிய அளவிலான திட்டங்கள் பல அங்கே சிறப்பாக நடக்கின்றது. மகாணசபபயை பொருட்தமத்டில் பெரிய தொகை முதலீடுகளை ஒரு கொள்கை அடிப்படயில் அணுகவேண்டிய அவசியம் உள்ளது. இததட்கு இன்னொரு காரணமும் உள்ளது. இலங்கை அரசு தனது BOI சட்டம் ஊடாகவும் கேந்திர முதலீடு சட்டம் (strategic investments act) ஊடாகவும் எங்கள் பகுதிகளில் காணிகளையும் எமது வளங்களையும் சுரண்டும் வேலையை கனககச்சிதமாக செய்து வருகிறது. எனவே நாங்கள் எங்கள் கொள்கைகளை நீதி மற்றும் நலன் அடிப்படியில் சிறுபான்மையனரான எம்மை முணிறுத்தி வடிவமைத்தால் தான் நாங்கள் கூடிய பயன் பெறலாம். 

எதிர்பார்த்த ஒரு விடயம் இது. புலத்தில் நிதிதிரட்ட அனந்தி அவர்களை இனி பயன்படுத்தப் போகிறார்கள். ஒரு கதைக்கு திரட்டப்படும் முழு நிதியும் அனந்தியவர்களின் கைக்குச் செல்லுமானால் கூட, அந்தத் தொகையை இலங்கையரசுக்கு கணக்குக் காட்டாமல் அவரால் பயன்படுத்தமுடியுமா?  வரும் மாவீரர் நாள் நினைவுக்கு அய்ரோப்பாவின் ஒரு நாட்டுக்கு அனந்தி அக்கா நிச்சயம் அழைக்கபடக் கூடும்.

எதில் என்ன தவறு இருக்கு என்று தெரியவில்லை, ஆனந்தி அவர்கள் இந்த துறைக்கு வந்ததே ஏதாவது செய்யவேண்டுமென்றே. 

புலம்பெர்ந்தோர் இதை செய்வதற்கு நதிமூலம் பார்த்தால் எப்படி?

ஆயுத போராட்டத்துக்கு பிறகு நாங்கள் எந்த வகையில் எங்களை மாற்றினோம், புலத்தில் இருந்து புதிய சூழலுக்கு எவ்வாறு உதவப் போகிறோம் என்று ஏதாவது திட்டம் இருக்குதா?

அனந்தி அக்காவின் நிலைப்பாட்டில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் அவவுடைய முயற்சிக்குக் கிடைக்கும் முழுநிதியும் அவவுடைய கரங்களுக்குப் போய்ச்சேருமா? எனக்குள்ள கேள்வி என்னவென்றால் திரட்டப்படும் நிதியுதவி எவ்வாறு பயன்படுத்தப்படபோகிறது. அரச நிர்வாக இயந்திரத்தின் ஊடாகவா அல்லது தனிப்படச் செயற்படப்போகின்றாவா? எவ்வகையான திட்டங்கள் அவவிடம் உள்ளது என மக்கள் அறிந்துகொள்வதில் தவறில்லை என நினைக்கிறன்.

இப்படித்தான் ஸ்ரீதரனும் ஆரம்பத்தில் செயல்பட்டவர் .இப்பொழுது அடக்கிவாசிக்கின்றார் .ஆனந்தி சிந்தித்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கின்றோம் .

அனந்தி அக்காவின் நிலைப்பாட்டில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் அவவுடைய முயற்சிக்குக் கிடைக்கும் முழுநிதியும் அவவுடைய கரங்களுக்குப் போய்ச்சேருமா? எனக்குள்ள கேள்வி என்னவென்றால் திரட்டப்படும் நிதியுதவி எவ்வாறு பயன்படுத்தப்படபோகிறது. அரச நிர்வாக இயந்திரத்தின் ஊடாகவா அல்லது தனிப்படச் செயற்படப்போகின்றாவா? எவ்வகையான திட்டங்கள் அவவிடம் உள்ளது என மக்கள் அறிந்துகொள்வதில் தவறில்லை என நினைக்கிறன்.

புலம்பெயர் மக்களின் நிதி பங்களிப்பு அவவுடைய கரங்களுக்குப்போனால் என்ன நடக்கும்? அதை அவ எவ்வாறு பயன்படுத்துவா? 

நிச்சயமாக ஏதோ ஒரு கட்டமைப்புக்கூடாகத்தான் செய்யமுடியும் செய்யப்படவும் வேண்டும். இது அவவுக்கும் நல்லது சமூகத்துக்கும் நல்லது. இப்போது புலத்தில் உதவி செய்வோர் நாளைக்கே அவ பணத்தை முறைகேடா அல்லது பக்கச்சார்பா பயன்படுத்தினா என்று சொல்ல எவ்வளவு காலம் செல்லும்?

இப்போது அவர்கள் போவது வேலைத்திட்டம் ஒன்றுக்காக கூட இருக்கலாம், காரணம் இலங்கை அரசாங்கத்தாலோ அல்லது வேறும் பல அமைப்புக்களாலோ செய்ய முடியாத சில விடயங்களை மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மக்கள் நன்கொடைகள் மூலம் செய்ய முடியும். 

இதுக்கு மத்திய அரசையோ அல்லது அயல் நாடுகளை நம்புவது வெறும் அரச பொறிமுறைக்குள் அகப்பட்டு வாத பிதிவாதங்க்களை அதிகரிக்கச்செய்யும் அனால் காரியம் மட்டும் நடக்காமல் தள்ளப்படுக்கொண்டு போகும். 

மாகாண சபையில் தெரியுசெய்யப்படர்களுக்கு தனிய மந்திரிப்பதவி கேட்டு சண்டை இடுவதோடு கடமை முடியாது அதையும் தாண்டி பல காரியங்கள் செய்யப்படவேண்டும். எல்லாத்தையும் வீரகேசரி லேயும் உதயன் பேப்பரிலையும் போட்டுவிட்டு செய்யேலாது.

நீங்களும் நம்பனும் நாங்களும் நம்பனும் அவங்களும் செய்யனும்.

நடக்காமல் போனால்?  இது மாத்திரம் என்ன முதல் முறையா?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன் தான்... இப்போதைய, சூப்பர் ஸ்ரார்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு transparent பொறுப்புகூறக்கூடிய பொறிமுறை வரும் வரை பணம் சேர்ப்பது உசிதமல்ல. விக்கியர் இந்த பொறிமுறையை விரைந்து செய்வராக.

முன்பு ஏவுகணை வாங்க கொடுத்த காசு டொராண்டோ வீதிகளில் பிஎம்டபிள்யூக்களாய் வழுக்கிச்செல்லவும், கடை போடவும் நடிகைகளை திருமணம்செய்யவும் பயன்பட்டது போலல்லாமல்.

அடச்சீய்... ச்சும்மா... போங்கையா...

நீங்களெல்லாம்.... இந்தியாவிலிருந்து, வெங்காயம் இறக்கின கப்பல்ல இருந்து, ஆயுத்தத்தை இறக்கி... முழு இலங்கையும்... பிடிக்காமல்,

மாலை தீவை... பிடிக்கப் போன ஆக்கள் தானே...

உங்களளாலை... இப்ப, இந்தியாவே... வெங்காயத்துக்கு கஸ்ரப்படுது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு transparent பொறுப்புகூறக்கூடிய பொறிமுறை வரும் வரை பணம் சேர்ப்பது உசிதமல்ல. விக்கியர் இந்த பொறிமுறையை விரைந்து செய்வராக.

முன்பு ஏவுகணை வாங்க கொடுத்த காசு டொராண்டோ வீதிகளில் பிஎம்டபிள்யூக்களாய் வழுக்கிச்செல்லவும், கடை போடவும் நடிகைகளை திருமணம்செய்யவும் பயன்பட்டது போலல்லாமல்.

இப்படித்தான்

எதுவுமே கொடுக்காதவன்

ஒரு நிமிடம் செலவு செய்யாதவனெல்லாம்...........

உதவி  செய்தவன்

எமக்காக உழைத்தவன் எல்லோரையும்  சொல்லி  சொல்லி

அவர்கள் ஒதுங்கியாச்சு

இனி  எவன் கொடுப்பான் பணம்

பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்

எவ்வளவு சேர்க்கின்றீர்கள் என்று

சேர்த்தக்கொடுக்கின்றீர்கள்  என்று........

  • 3 weeks later...

வணக்கம்!

உங்கள் எல்லோரையும் இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..

உங்களின் சந்தேகங்கள் குழப்பங்களைப் புரிந்து கொள்ள முடிகின்றது!

எனது அமெரிக்க பயணத்தின் நோக்கம் ஊடகங்களில்  தவறாக நிதி சேகரிப்புக்கு என முன்னிலைப்படுத்தப்பட்டது!

உறவுகளைச் சந்தித்து உதவி கோருவேன் எனவே சொல்லியிருந்தேன். எனது பயண பிரதான நோக்கம் தமிழ் சங்க மாநாடு மற்றும் இராஜ தந்திர சந்திப்புக்கள். அது நான் எதிப் பார்த்ததுக்கும் மேலாக சிறப்பாக நடைபெற்றது..

நன்றி

நன்றி  சகோதரி...

இங்கு கருத்துக்களத்தில் 

கருத்து வேற்றுமைகள் இருந்தாலும்

அனைவரும் தாயகம்  சார்ந்து உணர்வோடுதான்  எழுதுவார்கள் சகோதரி.

இவற்றைக்கண்டு 

தடுமாற்றமடையவோ

உங்கள் நேரத்தை அவற்றிற்காக எழுதி வீணாக்கவோ தேவையில்லை சகோதரி.

உங்கள் ஒவ்வொரு வினாடியும் பொன்னானது என்பதை நாம் அறிவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

உங்கள் எல்லோரையும் இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..

உங்களின் சந்தேகங்கள் குழப்பங்களைப் புரிந்து கொள்ள முடிகின்றது!

எனது அமெரிக்க பயணத்தின் நோக்கம் ஊடகங்களில்  தவறாக நிதி சேகரிப்புக்கு என முன்னிலைப்படுத்தப்பட்டது!

உறவுகளைச் சந்தித்து உதவி கோருவேன் எனவே சொல்லியிருந்தேன். எனது பயண பிரதான நோக்கம் தமிழ் சங்க மாநாடு மற்றும் இராஜ தந்திர சந்திப்புக்கள். அது நான் எதிப் பார்த்ததுக்கும் மேலாக சிறப்பாக நடைபெற்றது..

நன்றி

ஊடகங்கள் இந்த கதையை எங்கிருந்து பிடித்தன? யாழ். பஸ் நிலையம் அருகே அலுவலகம் வைத்திருக்கும், கொழும்பு ஆங்கில பத்திரிகையின் தமிழ் இணையத்தள ஊடகத்துக்கு நீங்கள் கொடுத்த தொலைபேசி பேட்டியின் ஒரு வாக்கியத்தில் இருந்து!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனந்தி அக்கா

அனமியில் பிரித்தானிய பிரதமருக்கு முன்னாள் நீங்கள் செய்த ஆர்ப்பாட்டம் தங்களுக்கு கடைசி நேரத்தில் தான் சொல்லப்பட்டதாகவும் தன்னிடம் மகஜரை தருமாறும் தான் அவரிடம் கொடுப்பதாக கூறியும் நீங்கள் தரவில்லை என்றும் சுமந்திரன் அவர்கள் உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்து இருகின்றார் இது எந்தளவுக்கு உண்மை?

சுண்டல் இது விடயமாக நான் அறிந்தவை. சுமந்திரன் சொன்னது சரி என்று தகவல். ஆனால் நான் தொடர்பில் உள்ளவர்களுக்கு  கூறியது இதுதான். முன்னர், அதாவது ஆனந்தி அக்கா தேர்தலில் நீட்கும் பொழுது, நவி பிள்ளை வந்தார். அப்பொழுது ஆனந்தி அக்கா நவி பிள்ளையை சந்திக்க வழி செய்வதாக முன்னர் கூறிவிட்து பின்னர் எல்லா கட்சி தலைவர்களும் தங்கள் ஒன்றாக சந்திக்க வேண்டும் என்றும் அதனால் 5 பெருக்கு மேல் பிள்ளையை சந்திக்க அனுமததில்லாமையால் உங்களை கொண்டுபோகமுடியாது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் கடைசி நேரத்த்தில் அந்தரித்து வேறு வழியை தேடி மன்னர் ஆயரின் உதவியுடன் இனோரு குழுவூடாக பிள்ளையை சந்தித்தார். இன்று இந்த நிலை வர அன்று இவர்கள் விட்ட பிழை இந்த தலமையின் மீது வந்த நம்பிக்கையீனமே காரணம் என்று. எனவே தலமை என்று சொல்பவர்கள் தான் நம்பிக்கையை கட்டி எழுப்பவேண்டுமே தவிர ஆனந்தி அக்கா அல்ல. அன்று அவர்கள் விட்ட பிழை பெரிய பிழை என்பது மட்டுமல்ல நம்பிக்கை துரோகம். அந்த பிழை கடந்து நம்பிக்கை வளர அவர்கள் தான் உணர்ந்து திருந்தவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அண்ணா உண்மை தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

இதே... பிழையை, கூட்டமைப்பு தலைமையில் இருக்கின்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்...

முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் செய்ததாக அறிந்தேன்.

எல்லாக் கச்சேரிக்கும், ஒரு சிலர் மட்டும்... பிரயோசனமில்லாமல் ஆள்கணக்குக்கு வழ‌க்கமாய் போய்...

கதிரைக்குப் பாரமாக இருப்பதை, தவிர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

sampantha_sumanthiran_0808131.jpgஇந்த இரண்டும் வெளியேறினாலே கூத்தமைப்பு கூட்டமைப்பு ஆகும் அருமையான தமிழர் சார்பு சூழ்நிலையை மடைத்தனமாய் கெடுத்து துலைக்குதுகள்.

இவர்கள் இருந்தாலும் போனாலும் எங்கள் எங்கள் பிரச்சனை தீரப்போவதில்லை.

எமது பிரதிநிதித்துவம் பறிபோகாமல் இருக்கவே கூட்டமைப்பு போக தீர்வு வரும் என்று கருதவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.