Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வெளியிட்ட 'இசைப்பிரியா உயிருடன் கைதாகும்' காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதாக சேனல் 4 வெளியிட்ட வீடியோ உண்மையானதுதான் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திப்பதற்காக ப.சிதம்பரம் வந்திருந்தார்.

அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம், தாம் கருணாநிதிக்கு தீபாவளி வாழ்த்து கூறவே வந்ததாகத் தெரிவித்தார்.

மேலும் இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார்.

இலங்கையில் இசைப்பிரியா கொலை செய்யப்பட்டதாகக் காட்டப்படும் சேனல் 4 வீடியோ உண்மையானதுதான் என்று கூறிய ப.சிதம்பரம், இந்தப் படுகொலை மனித உரிமையை மீறிய செயலாகும்.

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது என்றும், இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://news.tamilstar.com/archives/52527#more

  • Replies 197
  • Views 29.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இசைப்ப்ரியாவின் உயிருடன் இழுத்துசெள்ளப்படும் காணொளி பார்த்துவிட்டு மகிந்த, சோனியா போன்றோரை வெறியுடன் பழிவாங்கும் கோபத்துடன் பதிவுகள் பல எழுதப்பட்டுள்ளது. உண்மை, அவர்கள் பழிவாங்கப்பட வேண்டிய எதிரிகள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஆனால் எப்படி? ராஜீவ் காந்தியை போட்டதைப்போல இவர்களையும் போடுவதா? இல்லை, ஒட்டுமொத்த இந்தியன் சிஸ்டமும் தான் எங்கள் எதிரி. அதில் சோனியா, ராஜபக்ச எல்லாம் ஒரு துரும்பு. எங்கள் அழிவுக்கு காரணம் அந்த சிஸ்டம் தான். கண்ணுக்கு தெரிந்த எதிரிகள் தான் அரசியல்வாதிகள். அவர்களையே தீர்மானிக்கும் சக்த்திகள், அவர்களை தாங்கிப்பிடிக்கும் சக்திகள் எல்லாம் இருக்கிறது. இந்தியன் சிஸ்டம் என்பது பல லட்சம் கோடி பணம் பரிமாற்றம் செய்யப்படும் ஒரு சந்தையாக மாறி நிற்கிறது. அரசியல்வாதிகளுடன் சேர்த்து ஒரு 5000 பேராவது இந்த அமைப்புமுறையில் லாபம் சம்பாதித்துக்கொண்டு அடங்கியிருப்பார்கள். தலைவர் பிரபாகரனின் போராட்டம் வென்றால் இந்தியன் சிஸ்டம் பிரச்சினை வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் கொடூரமான போரை தொடுத்தது இந்தியா. ராஜபக்ச வெறும் அடியாள் தான். இந்தியன் சிஸ்டம் உடைக்கப்படவேண்டும். இந்தியன் சிஸ்டத்தை உடைத்தால் சோனியா அல்ல, சோனியாவின் ஒட்டுமொத்த கூட்டத்தையும் தட்டிவிடலாம், 

டெல்லியை வீழ்த்தினால் கொழும்பு தானாக வீழும். கொழும்பையும் தான்கிப்பிடித்துக்கொண்டு இருப்பது இந்தியன் சிஸ்டம் தான்.

 

ச.உ. விவேக்

  • கருத்துக்கள உறவுகள்

தங்கையே இயலாமையில் நிற்கிறேன் என்று சொல்லும் பொழுதுகளில் வெட்கத்தில் உயிர் குறுகிப் போகிறது. மன்னித்துவிடு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தில் அவர் இறக்கவில்லைபோல் தெரிகிறது..

ராஜவன்னியனுக்கு... தெலுங்கு தெரியும். அவரைத்தான், களத்தில் காணவில்லையே...

தனிமடல் போட்டுப் பார்க்கின்றேன், துளசி.

நன்றி அண்ணா. :) வேறு சிலரும் அந்த இலக்கத்துக்கு அழைத்து கதைத்துள்ளார்கள், கதைப்பதாக கூறியுள்ளார்கள்.

 

Arun Kumar

I spoke to them and asked them rewrite the fact in next issue, Dear all i would like to request call them and request them to publish correct news....

 

Arul Ramasamy

நமக்கு தெரிந்த தெலுங்கு நண்பர்களிடம் இது சம்மந்தமாக பேசி அவர்களை விட்டும் பேச சொல்கிறேன்

 

ராஜவன்னியன் அண்ணா களத்துக்கு வந்தால் அவரையும் கதைக்கும்படி கூறுங்கள். :)

 

அத்துடன் முடிந்தால் Andhra Jyothy இலும் இசைப்பிரியா பற்றிய செய்தியை போடும்படி கேட்குமாறு கூறுங்கள். http://www.abnandhrajyothy.com/contact-us முன்னர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான செய்தியை போட்டிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப்பார்க்கும் ‘மன தைரியம் கூட எனக்கு இல்லை!

 

‘இசைப்பிரியா’ பெயருக்கு ஏற்ப குரலால் மனதோடு பிரியாமல் இருந்தவர்.  ‘ஆனால்......எந்தக்காரணத்துக்காக இவர்கள் எதைநம்பி அங்கே இருந்தார்கள் என்பதுதான் இன்னும் விளங்கவில்லை.

 

மனசுக்கு மிகக்கஷ்டமான ஒரு காணொளி!! இறைவா!!!!!!!!!!!!!!!...........

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 எந்த நோக்கத்திற்காக இப்படி வெளியிடுகின்றது என்பதில் எமது கவனத்தை செலுத்தத்தேவையில்லை. அவை வெளியிடுவதை நாம் எப்படி பயன்படுத்துகின்றறோம் என்பதே முக்கியமானது. இவைகள் உணர்வுபூர்வமாக அணுகப்படுவதை தவிர புத்திசாலித்தனமாக அணுகப்படவேண்டியது.

 

- இவ்வாறான கணொளிகளை தரவிறக்கம்செய்து வெவ்வேறு சம்மந்தமில்லாத தலைப்புகளில் தரவேற்றம் செய்யலாம். உதாரணமாக மான் வேட்டைக்குக் கீழ் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒளிப்பதிவுகள் இருக்கின்றது அவ்வாறான தலைப்புகளுக்குள் இவை நுளையவேணும். இந்த உலகம் தவிர்க்கமுடியாமல் இவற்றைப் பார்க்கவேணும். எல்லா வகைக்குள்ளும் இவை அதுசார்ந்த தலைப்புகளோடு வைரஸ்போல் நுளைக்கப்படவேணும். இது சார்ந்த திட்டமிடலுக்கும் வழிநடத்தலுக்கும் எதிர்பார்த்து நிற்கத்தேவையில்லை. கணணி பயன்படுத்தத்தெரிந்தவன் தன்னாலானதை செய்யமுடியும்.

 

சிரியா எகிப்த்து போன்ற நாடுகளில் மனித உரிமை மீறலுக்காக மேற்குலகம் குரல்கொடுக்கும்போதும் அக்கறைப்படும்போதும் நாம் சிரிய முகமூடியுடன் இவ்வாறான மனிதஉரிமை மீறல்களை முன்வைத்து மேற்குலகை எதிர்த்து அதன் நேர்மையை கேள்விக்குள்ளாகக்க முனையலாம். இவ்வாறு எங்கெங்கு மனித உரிமை மீறல் நடக்கின்றதோ அங்கெல்லாம் மீறுபவர்வர்கள் தம்மை நியாப்படுத்தும் பேச்சுப்பொருளாக எமது அவலங்களை காவிச்செல்ல முனையலாம்.

 

தந்திரமும் புத்திசாலித்தனமும் இருந்தால் தகவல்தொழில்நுட்பத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாம். தமிழர்களுக்குள் தமிழர்கள் பகிரந்து ஒப்பாரிவைப்பது பெட்டிசம் போடுவதைக் கடந்து இதை ஒரு உலகின் தலையிடியான விசயமாக மாற்றமுனையலாம். நேர்மை உணர்ச்சிவசம் எமக்குள் நாம் என்ற நிலையை கடந்து இந்த விசயங்களை எப்படி புத்திசாலித்தனமாக அணுகமுடியும் பயன்படுத்தமுடியும் என்று தனிமனிதர்களாக சிந்தித்து அல்லது நம்பிக்கையான சிறு குழுக்களாக ஒருங்கிணைந்து செயற்படுவது பிரயோசனமானது.

 

இதைத்தான் நான் எனக்கு தெரிந்த பாணியிலை எழுதினன். எப்பவுமே விளக்கமாக  எழுதினால்தான் புரிந்து கொள்ளும் அளவிற்கு  புலம் பெயர்ந்த பின்னரும் . வளர்ச்சி என்பது குறைவு எம்மவர்க்கு

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே....
இந்த... உலகத்தில்,
சிங்களம், வாழத் தகுதியில்லாத சனம்.
நீதி... என்று, ஒன்றிருந்தால்....
அதற்கு.... தாமதம் ஏன்...
யார்... யாரைக் காப்பாற்ற முற்படுகின்றார்கள்.
ஐக்கிய நாடு சபை ஏன்... ஏன்....
இனி, எவனாவாது, அகிம்சை... உண்ணாவிரதம், தீக்குளிப்பு என்று செய்யாதீர்கள்.
எவன் தமிழினத்திற்கு விரோதியாக... இருக்கின்றானோ... .
அவனின்... கதையை, முதலில் முடியுங்கள்.
 

"அவனின்... கதையை, முதலில் முடியுங்கள்."

 

யாழில் பலரில் எனக்கு பிடித்ததே இதுதான் .தங்கள் சொந்த வாழ்வில்  மிக கவனமாக இருப்பது .

  • கருத்துக்கள உறவுகள்

Channnel 4 எல்லா ஆதாரங்களையும் வைத்திருந்து முக்கியமான நேரங்களில் வெளியிடுகின்றது என்பது உண்மையா பொய்யா தெரியாது. ஆனாலும் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை, மனித உரிமைப் பிரச்சினைகளை உலகநாடுகள் மறக்காமல் இருக்க முக்கியமான நேரங்களில் இவ்வாறான புதிய ஆதாரங்கள் வரவேண்டும்.

இதைத்தான் நான் எனக்கு தெரிந்த பாணியிலை எழுதினன். எப்பவுமே விளக்கமாக  எழுதினால்தான் புரிந்து கொள்ளும் அளவிற்கு  புலம் பெயர்ந்த பின்னரும் . வளர்ச்சி என்பது குறைவு எம்மவர்க்கு

 

தாங்க முடியாத இழப்புகள், சோகங்களை பகிரும்போது மெளனத்தின் மூலமும் ஒருவருக்கொருவர் அதை தாங்கும் பலத்தை கொடுக்கக்கூடிய ஆறுதல் வார்த்தைகளும் ஒற்றுமையும் சாதாரண மனித இயல்பு. இங்கு யாழ் களத்திலோ இழப்பிலும் சிலர் ஒருவருக்கொருவர் சீண்டல் கருத்துக்கள், மனதை புண்படுத்தும் வசன நடைகள்  உபயோகிப்பது என்ன இயல்பு? இங்கு கருத்து தெரிவிக்கும் நாம் எல்லோரும் சாதாரண மக்கள் தானே அவர்களின் பலவிதப்பட்டவர்கள் இருப்பது இயல்பு தானே. அதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கு இல்லாமல் இருப்பது ஏன்? அதாவது எனக்கு தெரிந்த பாணி என்பது என்பது உலக பொது மொழி. அதை புரியாதவர்கள் வளர்ச்சி குறைந்தவர்கள் அப்படிதானே நண்பரே.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

Channnel 4 எல்லா ஆதாரங்களையும் வைத்திருந்து முக்கியமான நேரங்களில் வெளியிடுகின்றது என்பது உண்மையா பொய்யா தெரியாது. ஆனாலும் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை, மனித உரிமைப் பிரச்சினைகளை உலகநாடுகள் மறக்காமல் இருக்க முக்கியமான நேரங்களில் இவ்வாறான புதிய ஆதாரங்கள் வரவேண்டும்.

 

எல்லோருமே மனித உரிமை உரிமை என்றே முழக்கமிடுகிறாக்கள். இது மனித உரிமைகளையும் கடந்த இன அழிப்பு. மனிதர்கள் மிருகங்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய நேரம். இதனை உரத்துச்சொல்ல எம்மவரும் தயக்கம் கொள்வது ஏன்........ ????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
மேலும் இவ் ஆதாரங்கள்  சனல் 4 சேர்த்து வைத்து பகுதி பகுதியாக போடுகிறார்கள் என்பதிலும் அவ்வப்போது கிடைப்பதை (பணம் கொடுத்து ராணுவத்திடம் இருந்து பெறுகிறார்கள்)போடுகிறார்கள் போலவே உள்ளது.இராணுவம் முன்பு போல் உழைக்க முடியாததால் இப்படியான ஆதாரங்களை விற்கவே செய்யும்.

 

நீங்கள் சொல்வது உண்மை. லட்சத்திலிருந்து  கோடிகணக்கில் விலை பேசப்படுவதாக சொல்கின்றார்கள்.

அது தான் எமக்கு ஒரு நன்மை..சகல சிங்கள இராணுவ சிற்பாய்களிடமும் கைத் தொலைபேசி இருந்து இருக்கின்றது. இணையத் தளங்களுடாக விலை பேச வேண்டியது தான்...

என்ன சொல்வது என்று தெரிய வில்லை..காணொளியை பார்க்க மனம் வலிக்குது :(

Edited by anuja

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமே மனித உரிமை உரிமை என்றே முழக்கமிடுகிறாக்கள். இது மனித உரிமைகளையும் கடந்த இன அழிப்பு. மனிதர்கள் மிருகங்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய நேரம். இதனை உரத்துச்சொல்ல எம்மவரும் தயக்கம் கொள்வது ஏன்........ ????

இன அழிப்புத்தான் நடைபெற்றது/நடைபெறுகின்றது என்பது உண்மைதான். ஆனால் முதலில் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதற்காகத்தன்னும் இலங்கை அரசு தண்டிக்கப்படவில்லையே. இலங்கை அரசு சிங்கள மக்களின் ஆதரவோடு பலமாக இருப்பதால் உலகநாடுகள் அனுசரித்துப் போகத்தான் முயற்சிக்கின்றன. எப்போது சிங்கள மக்களின் ஆதரவு குறையத் தொடங்குகின்றதோ, அப்போதுதான் உலகநாடுகளும் (மேற்கு நாடுகள் என்று வாசியுங்கள்) அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள். அந்த சந்தர்ப்பத்தில் இன அழிப்பு நடந்தது என்று உலகநாடுகளும், ஐ.நாவும் சொல்லக்கூடும். ஆனால் அப்படியான நிலைமை வருவதற்கான ஏதுநிலைகளைக் கூடக் காணவில்லை.

எல்லோருமே மனித உரிமை உரிமை என்றே முழக்கமிடுகிறாக்கள். இது மனித உரிமைகளையும் கடந்த இன அழிப்பு. மனிதர்கள் மிருகங்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய நேரம். இதனை உரத்துச்சொல்ல எம்மவரும் தயக்கம் கொள்வது ஏன்........ ????

எனக்கு மிகச்சில உபயோகமான கூட்டங்களில் பங்கு கொள்ள் இடம் கிடைத்தது. விவாதம் இப்படித்தான் இருந்தது. "முளையில் கிள்ளியேறியப்படுவிடாமல் இந்த போராட்டங்கள் பாதுக்காக்கப்ப்பட வேண்டும்" என்பதாகும். இதில் நாம் மேற்குநாடுகள் நமது போர்ராடங்களை அழித்துவிடாமல் அவர்களை கேட்டு நடப்பதால் நாம் அரசுக்கு ஒன்றும் உண்மையில் உதவவில்லை. போர்க்குற்றம் சாட்டுதல் அரசுக்கு அப்படி ஒன்றும் எளிதாக இருக்காது.

 

மேலும் நான் பங்கு பற்றிய கூட்டம் ஒன்றில் செஞ்சிலுவை சங்க மேற்குநாட்டு அங்கத்தவர்கள் "இந்த இடத்தில் இன அழிப்பென்பது மிகப்படுத்தப்பட்டது. அங்கு நடந்த போர்குற்றத்திற்கான ஆதரங்கள் மட்டும்தான் இருக்கு" என்று வாதாடினார். எனது நெஞ்சில் பட்ட புள்ளி இவரகள்தான் கோட்டில் வந்து தாங்கள் வைத்தியசாலை நிலையமாக அரசிடம் கொடுத்த ஆள்கூறுகளை நோக்கி இலங்கை அரசால் செல் அடிக்கப்பட்டது என்று சாட்சி சொல்ல வேண்டியவர்கள் என்பது.   

 

20 தொடக்கம் 35 நாடுகள் வரை இலங்கை அரசுக்கு உதவியதாக  வேறு வேறு எழுதுக்கள் காணப்படுகின்றன. எங்களுக்கு இலக்கம் பிரயோசனமானது அல்ல. இதில் உண்மை இவற்றில் தான் நாங்கள் வாழ்கிறோம் என்பதுதான் உண்மை. இவற்றில் நமது சொந்த அனுபவம் துணிந்து சொல்வதால் அவை மாறப்போவத்தில்லை. இசைபிரியாவின் காணொயியை வைத்து கூட மாற்றுவது கடினம். கனாடா, இங்கிலாந்து மாதிரி அங்கு தமிழர்கள் வாழ வேண்டும். கூட்டத்தை (தங்களுக்கு வாக்களிக்க கணிசமான சனம் எங்களிடம் இருக்கு என்பதைக்) கண்டால் மட்டும் மாறுவார்கள். இது நியாயமானது அல்ல என்றாலும் அதுதான் அவர்கள் வாழும் ஜனநாயக நாடுகளின் பண்பு. நாம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அவர்கள் சொல்வதையும் கேட்டு சொல்ல வேண்டிய நிலை இருக்கு.

 

இந்த 20-35 நாடுகள் தான் புலிகளை பயங்கரவாத  இயக்கமாக பட்டியல் போடுபவர்கள். அரசை தண்டிப்பதோ இல்லையோ புலிகளையும் தண்டிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். எனவே போர்குற்றத்தில் புலிகளையும் தண்டிக்க ஒரு வழி இருக்கு, ஆனால் இனவழிப்ப்பில் புலிகளைத்தண்டிக்க ஒரு பாதையும் ஒன்று இல்லை. இதனால்த்தான் அவர்கள் கொண்டுவர முயலும் போர்க்குற்ற பிரேரணைகளின் பாதைகளை நாங்களும் தடுத்தால் விசாரணை இன்னும் இழுத்தடிபடும். இவர்கள் இந்த விசாரணையைக்கொண்டுவந்தால், இதில் சரியான ஆவணங்கள் வைக்கப்பட்டால் அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை நிரூபிக்கப்பட்டு, நோக்கமும் நிரூபி பட்டால் அவர்களால் அதை இனப்படுகொலை என்பதை மறுக்க முடியாமல் போகும். இப்போது அவசரப்படு அவர்களெ தடை கல்லுகள் போட நாம் வைத்துவிடாமல் இருப்பது நல்லது. 

 

புலிகளை வ்சிசாரிக்க வேண்டுமாயின் பிடிபட்டவர்களை விசாரிக்கட்டும். அவர்கள் நேர்மைக்கு சிறந்தவர்கள் தலைமைகள் கொடுத்த கட்டளைகளைத்தான் பெரும்பாலும் நிறை வேற்றிவர்கள். அதில் போர்க்குற்றம் இருந்தால் அது தலைமகளின் பொறுப்பு. அவர்கள் மட்டும்தான் தண்டிக்கப்பட வேண்டும். அரசு தலைமைகள் பற்றிய உண்மைகளை அடியோடு மறைத்துவிடுவத்தால் வழக்கொன்றின் போது அரசால் KP, கருணா, தயா மஸ்டரைத்தான் கொண்டுவர முடியும். சர்வ்தேச நீதி மன்றம் இவர்களைத்தான் புலிகளின் தலைமைகள் என்று தண்டிக்குமாக இருந்தால் எம்மையும் அதில் ஒரு சாட்சியமாக போட்டுக்கொள்ளட்டுமே.

 

எனவே வழக்கு எப்படி தொடங்க வேண்டும் என்று நாம் பெரித்தாக அலட்டிகொள்ளத்தேவை இல்லை. போர்க்குற்றமா? இண்வழிப்பா? அதில் நமக்கொன்றும் பிரச்சனை இல்லை. வழக்குகளை முதலில் கொண்டுவாருங்கள் என்பதுதான் எமது கோரிக்கை. வழக்கு முடியும் போது வெறும் போர்குற்றமாக முடிந்து பிரயோசனமில்லாத பொன்சேக்காவோ அல்லது ஒரு சின்ன ஆமி கொமாண்டரோ மட்டும் தண்டிக்கபட்டால்த்தான் நமது தவறு ஆரம்பமாகும். 

சண்டமாருதன் எழுதியதற்கு அவரிடம் சில வேண்டுகோள்களை முன் வைந்திருந்தேன் அவர் இதுவரை பதில் சொல்ல வில்லை. அவர் எழுதிய மாதிரி அவரின் யோசனை ஏன் சாத்தியப்படாது, பிழையானது  என என்னால் நூறு காரணங்கள் எழுத முடியும், அப்படி எழுதி எனது மேதாவிலாசத்தைக் காட்ட நான் முனயவில்லை.ஏனெனில் எமக்கு செயற்பாடே அவசியம் அன்றி எமது மேதாவிலாசம் அன்று.

 

செயற்படுபவர்களை செயற்படாமல் இருக்க எழுதுவது , போராடுபவர்களை நோக்கிய தாக்குதல்கள் இவற்றின் பயன் என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன் எழுதியதற்கு அவரிடம் சில வேண்டுகோள்களை முன் வைந்திருந்தேன் அவர் இதுவரை பதில் சொல்ல வில்லை. அவர் எழுதிய மாதிரி அவரின் யோசனை ஏன் சாத்தியப்படாது, பிழையானது  என என்னால் நூறு காரணங்கள் எழுத முடியும், அப்படி எழுதி எனது மேதாவிலாசத்தைக் காட்ட நான் முனயவில்லை.ஏனெனில் எமக்கு செயற்பாடே அவசியம் அன்றி எமது மேதாவிலாசம் அன்று.

 

செயற்படுபவர்களை செயற்படாமல் இருக்க எழுதுவது , போராடுபவர்களை நோக்கிய தாக்குதல்கள் இவற்றின் பயன் என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

நாரதர்..

 

இதே போன்ற ஒரு வேலைத்திட்டத்தை நான் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2009 நடுப்பகுதி வரையில் தன்னிச்சையாக மேற்கொண்டிருந்தேன். சிறு அளவில் சலனங்கள் ஏற்பட்டன.. ஆனால் சிங்கள கயவர்கள்தான் முன்னணியில் வந்து எதிர்க்கருத்து எழுதிக்கொண்டிருப்பார்கள். அதை எதிர்த்துக் கருத்து எழுதுவதற்கு கூட பல தமிழர்கள் முன்வருவதில்லை. முள்ளிவாய்க்காலின் பின்னர் முற்றிலுமாக கைவிட்டுவிட்டேன். 

இசை ,

 

சண்டமாருதனும் இறங்கி வேலை செய்தால் அவருக்கும் அந்தப்பட்டறிவு வரும், நாம் எத்தகைய பலவீனம் உள்ளவர்கள் என்பது புரியும்.

உங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் எல்லோருக்குமே தொடர் தோல்விகள் தரும் படிப்பினையும், மன அழுத்தமும் அதிகம்.அதற்காக நாம் விட்டு விட முடியாது.

இதற்கு இடையில் இந்த இணைய விமர்சகர்களின் தொல்லை தாங்க முடியாது. இறங்கி வேலை செய்து பாருங்கோ இதன் சுமை தெரியும் என்பதே எனது பதில்.

எழுதுவது சுலபம் செயற்படுவதே கடினம்.

சிதம்பரமும் இசைப்பிரியா கொலை பற்றிப் பதில் சொல்லிய ஒரு பேட்டி இப்போது ஜிடிவியில் ஒளிபரப்பாகியது. சனல் நான்கு இதனை இப்போது வெளியிட்டிருக்காவிட்டால் இது நடந்து இருக்குமா?

 

இதன் தாக்கம் பாரியது. இதனை எமக்கு உபயோகமாக எவ்வாறு பயன்படுதுவது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இசை ,

 

சண்டமாருதனும் இறங்கி வேலை செய்தால் அவருக்கும் அந்தப்பட்டறிவு வரும், நாம் எத்தகைய பலவீனம் உள்ளவர்கள் என்பது புரியும்.

உங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் எல்லோருக்குமே தொடர் தோல்விகள் தரும் படிப்பினையும், மன அழுத்தமும் அதிகம்.அதற்காக நாம் விட்டு விட முடியாது.

இதற்கு இடையில் இந்த இணைய விமர்சகர்களின் தொல்லை தாங்க முடியாது.

இறங்கி வேலை செய்து பாருங்கோ இதன் சுமை தெரியும் என்பதே எனது பதில்.

எழுதுவது சுலபம் செயற்படுவதே கடினம்.

 

 

மாவீரச்செல்வங்களையும்

தாயக  மக்களையும் நெஞ்சில் இருத்தி

சில  மணித்துளிகள்  ஒதுக்கி

புலம் பெயர் மக்கள்  ஒவ்வொருவரும் 

வேலை  செய்தால்

சிங்களம் மட்டுமல்ல

சர்வதேசமே எம் குரலைக்கேட்கும்

செய்வோமா.......?????????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்செல்வன் அண்ணாவின் வீரமரணச்செய்தி கேட்ட பொழுதில் எப்படி மனம் வருந்தி ஒரு வெறுமை படர்ந்ததோ அதே வெறுமை மீண்டும் ‘இசைப்பிரியா மீது கொடும் வன்மங்கள் தலைவிரித்தாடிய காணொளியைப்பார்க்கும் போது ஏற்படுகின்றது.

 

வார்த்தைகளும் வெறுமையாகிப்போய்விட்டன!....என்ன கொடுமை இது?!...இந்தச்சமூகமும், இந்த உலகமும் மீண்டும் ‘கண்மூடிக்கிடந்துவிடுமா?! ‘எங்கள் செல்வங்களின் தியாகத்திற்கு எந்தப்பலனுமே கிடைக்காதா?!. ‘சத்யம் வெல்லும் என்பதும், தர்மம் தலை காக்கும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களா?!

 

மண்டிக்கிடக்கும் கேள்விகளெல்லாம் முண்டியடிக்கின்றன!..... ‘பதில் எப்போதும் போல ‘காலத்தின் கையில்!’ :((

இசைப்பிரியா: கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும்- சிதம்பரம்

Audio in tamil

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/11/131102_chidambarammanmohan.shtml

 

 

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஊடகவியலாளராக அறியப்பட்ட 'இசைப்பிரியாவை கொடூரமாக கொலைசெய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை' என்று இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

இறுதிக்கட்டப் போரின்போது, இலங்கை இராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளான நிலையில் கொல்லப்பட்டுள்ளதாக சேனல் 4 வெளியிட்டுள்ள புதிய காணொளிப் பதிவு உண்மையானது என்று தான் நம்புவதாகவும் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சேனல் 4 காணொளி வெறும் நாடகம் என்று பிபிசி தமிழோசையிடம் நேற்றுக்கூறிய இலங்கை இராணுவம், அதுபற்றி தாங்கள் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் கூட இல்லை என்று கூறிவிட்டது.

லெப்டினன் கர்ணல் இசைப்பிரியா இராணுவத்துடனான மோதலிலேயே கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, அந்த வீடியோ காட்சிகள் உண்மையானது என்று தான் நம்புவதாக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவரின் இந்தக் கருத்து வந்திருக்கிறது.

சிதம்பரம்- கருணாநிதி பேச்சு
131102165229_chidambaram_and_karunanidhi

கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவுடனேயே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது

திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் சிதம்பரம் இன்று சனிக்கிழமை காலை பேச்சு நடத்தினார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் பேசிய சிதம்பரம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் அரசு தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார் என்று முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்றும் கூறினார்.

மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா இல்லையா என்று இன்னும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டம் முடிவு எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சிதம்பரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதை காங்கிரஸ் கட்சி மறுக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாகப் புறக்கணிக்க வேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஆனால், கொழும்பு மாநாட்டில் தான் கலந்துகொள்வேன் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதிபடக் கூறிவிட்டார்.

ஆனால், 'இந்தியாவிலிருந்து சிறு துரும்புகூட காமன்வெல்த் மாநாட்டுக்கு போகக்கூடாது, அப்படி போனால் அதன் பலாபலன்களை அவர்களே அனுபவித்துக்கொள்ளட்டும்' என்று திமுக தலைவர் கருணாநிதியும் அறிக்கை விட்டிருந்தார். இந்த நிலையிலேயே, அமைச்சர் சிதம்பரம் கருணாநிதியை இன்று சந்தித்து பேச்சுநடத்தியிருக்கிறார்.

கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டது.

அழுத்தத்தில் மன்மோகன் சிங்
121224051111_manmohan_singh_304x171_afpg

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே முடிவு எடுக்கப்படும் என்று கருணாநிதிக்கு பிரதமர் ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்

இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி, மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து திமுக விலகிவிட்டபோதிலும் இருதரப்பு உறவுகளில் பெரியளவு பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சூழ்நிலையில், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழுத்தங்களைக் கொடுத்துவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் பலரும் இந்திய அரசு தமிழக மக்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

53 உறுப்பு நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் உச்சிமாநாடு இன்னும் இரண்டு வாரங்களில் கொழும்பில் நடக்கிறது. அதில் கனேடிய பிரதமர் கலந்துகொள்ளப் போவதில்லை. ஆனால் அங்கிருந்து கீழ்மட்ட தூதுக்குழுவொன்று செல்கிறது என்று முடிவாகிவிட்டது.

தமிழர்களின் மனநிலையை கருத்தில் எடுத்தே முடிவு எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதிக்கு ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றார். அதன் அர்த்தம் என்னவென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

இசைப்பிரியா குறித்த காணொளிக்கு போரை நடத்தியவர்கள் பொறுப்புடன் பதிலளித்தே ஆக வேண்டும் - மனோ கணேசன் Top News
[saturday, 2013-11-02 16:38:40]
News Service
இசைப்பிரியா தொடர்பாக புதிய காணொளி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னாலும் இவர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலைமையில் இறந்து கிடக்க காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. தற்போது அவர் உயிருடன் படையினரால் பிடிக்கப்பட்டு அழைத்து வரப்படுவதை புதிய காணொளி காட்டுகிறது. இந்த காணொளி ஆதாரம் உலகை உலுக்கியுள்ளது. இது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கான பதில்களை போரை முன்னின்று நடத்திய தரப்பும், போரை நடத்துவதற்கு அரசுக்கு ஆதரவு அளித்த தரப்பினரும், இன்று அரசிற்கு உள்ளே இருந்தபடி அரசை தாங்கி பிடித்து நிற்கின்ற தரப்பினரும் பொறுப்புடன் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வெளியிடப்பட்டுள்ள காணொளியில் காட்டப்படும் சம்பவங்கள் மிக பாரதூரமானவை. இவற்றை ஒன்றுமில்லையென அரசாங்கம் ஒதுக்கிவிட முடியாது. இத்தகைய ஆதாரங்கள் படைத்தரப்பினரிடமிருந்து பெறப்பட்டவை என்றும் ஆதாரங்களை காணொளி படுத்திய ஊடக நிறுவனம் கூறுகிறது. இது அடுத்த பாரதூரமான குற்றச்சாட்டு. பொறுப்பு கூறல் இலங்கை அரசாங்கத்தின் பிரதான கடப்பாடு என்பதை ஐநா சபை ஏற்கனவே எடுத்து கூறிவிட்டது. இந்நிலையில் போர்க்குற்ற ஆதாரங்களுக்கு பதிலளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96294&category=TamilNews&language=tamil

 

 

 

 

 

 

இசைப்பிரியாவின் படுகொலைக்கு போரை நடத்திய அனைத்து தரப்பும் பதிலளித்தாக வேண்டும்!இசைப்பிரியாவின் படுகொலைக்கு போரை நடத்திய அனைத்து தரப்பும் பதிலளித்தாக வேண்டும்!November 2, 2013  12:09 pmBookmark and Share
இசைப்பிரியா தொடர்பாக புதிய காணொளி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னாலும் இவர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலைமையில் இறந்து கிடக்க காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. தற்போது அவர் உயிருடன் படையினரால் பிடிக்கப்பட்டு அழைத்து வரப்படுவதான காட்சியை புதிய காணொளி காட்டுகிறது.

இந்த காணொளி ஆதாரம் உலகை உலுக்கியுள்ளது. இது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கான பதில்களை போரை முன்னின்று நடத்திய தரப்பும், போரை நடத்துவதற்கு ஆதரவு அளித்த தரப்பினரும், இன்று அரசிற்கு உள்ளே இருந்தபடி அரசை தாங்கி பிடித்து நிற்கின்ற தரப்பினரும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கும், உலக மனித உரிமை சமூகத்துக்கும் பொறுப்புடன் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நேற்று வெளியிடப்பட்டுள்ள காணொளியில் காட்டப்படும் சம்பவங்கள் மிக பாரதூரமானவை. இவை இன்று அனைத்து மொழி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுக்க வியாபித்துள்ளன. இது தொடர்பில், கண்ணை மூடிக்கொண்டு பாலை திருடி குடிக்கும் திருட்டு பூனையை போல் இந்த அரசாங்கம் நடந்துகொள்ள முடியாது.

எடுத்த எடுப்பிலேயே இதை வெறும் நாடகம் என்று சொல்லி விடுவதைவிட, இதற்கு ஆதாரபூர்வமாக அரசாங்கம் பதில்கூற வேண்டும்.

இத்தகைய ஆதாரங்கள் படைத்தரப்பினரிடமிருந்து பெறப்பட்டவை என்றும் ஆதாரங்களை காணொளிப்படுத்திய ஊடக நிறுவனம் கூறுகிறது. இது அடுத்த பாரதூரமான குற்றச்சாட்டு.

முன்னாள் படைத்தளபதியும், இன்றைய எதிரணி அரசியல் கட்சி தலைவருமான சரத் பொன்சேகா, இது தொடர்பாக அரசு ஆதாரபூர்வமாக பதிலளிக்க கடமைபட்டுள்ளது என கூறியுள்ளார். போரின் இறுதி கட்டத்தில் இரானுவத்திடம் சரணடந்தவர்கள் பற்றிய ஆவணங்கள் இருக்கின்றன என்றும் அவற்றை பரிசீலிக்க வேண்டுமென்றும் அவர் கூறுகிறார்.

இது பற்றிய பொறுப்பு கூறல் இலங்கை அரசாங்கத்தின் பிரதான கடப்பாடு என்பதை ஐநா சபை ஏற்கனவே எடுத்து கூறிவிட்டது. இந்நிலையில் ஆதாரங்களுடன் வரும் போர்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

உலகத்தரம் வாய்ந்த ஒரு ஊடக நிறுவனத்தால், வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய காணொளி காட்சிகள், இந்நாட்டிலும், உலகம் முழுக்கவும் வாழும் தமிழர்களுக்கும், பெண்ணிய போராளிகளுக்கும் மிகவும் உணர்வுபூர்வமானதாகும். ஆனால், இது உணர்வுபூர்வமானது மாத்திரம் அல்ல, சர்வதேச சட்டரீதியானதாகும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சி தலைவன் என்ற முறையிலும், மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றவன் என்ற முறையிலும், இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச சட்டத்தை ஞாபகப்படுத்துகிறேன்.

 

http://tamil.adaderana.lk/news.php?nid=47103

Edited by மல்லையூரான்

மனோகணேசன் அவர்களுக்கு நன்றி. இலங்கையிலிருந்துகொண்டே இவ்வாறு சொல்வதற்கும் ஒரு துணிவு வேண்டும். உங்களிடம் அது நிறையவே உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.