Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அளவெட்டி அபிவிருத்தி மன்ற புதிய நிர்வாகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தவில் மேதை போற்றப்பட வேண்டியவர். அதற்காக என் ஊரவரைத் தம்மூரவர் ஏன்று கூறும் அளவெட்டியாரை என்ன செய்வது ????

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

அளவையூர் பாரதி காலமன்றம்(என்று நினைக்கிறேன்) வழங்கிய  'வடக்கும் தெற்கும்' நான் பிரமிப்போடு பார்த்த நாடகம். அதில் வரும் நகைச்சுவை நடிகர், வாள்ச்சண்டைகள், பாடல்களில் உடைமாற்றும் பாங்கு என அரங்கிலே திரைக்கு நிகராக காட்சிகளைத் தருவதில் வல்லவர்கள். அதிலும் சுழல் மேடையெனில் சொல்லவும் வேண்டுமா? பாராட்டப்பட வேண்டிய கலைஞர்கள்......


இவளவு வசதி வாய்ப்புகளோடு புலத்திலிருந்தும் நாடக அரங்கு தென்றலென்று இவர்களால் இப்படியான நாடக அரங்குகளைத் திறக்கமுடிவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

உது சரியான பேராசை அன்றி வேறொன்றும் இல்லை. :lol:

 

தவில் வித்துவான் தத்தனா மூர்த்தி அவர்கள் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமணம் செய்ததுதான் அளவெட்டியில்.

 

சுமேரியரே, ஆசை கொண்டவன் மனிதன். பேராசை கொண்டவன் மாமனிதன். :icon_idea: 

 

எனக்கு நீதி கிடைத்தபின் பதவி ஒரு பொருட்டல்ல. வாத்தியாரிம் சொல்லி தற்போது நீங்கள் வகித்துவரும் கங்காணிப் பதவியை நீடிக்க வைக்கிறேன். அழவேண்டாம், ஆத்திரப்படவேண்டாம், சிரியுங்கள். :D :lol:  :D  :lol:  

 

தத்தனா மூர்த்தியும் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவரா?. உங்களுக்குச் சொந்தமா?. அவரும் வாழ்க்கை வாழ்வதற்கு அளவெட்டியைத்தான் தேடிச் சென்றாரா...? :o  :o 

அளவெட்டி அருணோதய கல்லூரி சில  வருடங்கள் நல்ல உதைபந்தாட்ட அணியை வைத்திருந்தது .மகாகவியும் அளவெட்டிதானே?

பஞ்சாபிகேசன் என்று ஒரு நல்ல நாதஸ்வர வித்துவான் இருந்தார் அவரும் அளவெட்டி என்றுதான் நினைக்கின்றேன் .

பரமேஸ்வரா கல்லூரி அதிபர்களாக இருந்த ஞானப்பிரகாசம் ,கனகலிங்கதை தெரியுமா பாஞ்சுவிற்கு ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அளவெட்டி அருணோதய கல்லூரி சில  வருடங்கள் நல்ல உதைபந்தாட்ட அணியை வைத்திருந்தது .மகாகவியும் அளவெட்டிதானே?

*பஞ்சாபிகேசன் என்று ஒரு நல்ல நாதஸ்வர வித்துவான் இருந்தார் அவரும் அளவெட்டி என்றுதான் நினைக்கின்றேன் .

பரமேஸ்வரா கல்லூரி அதிபர்களாக இருந்த ஞானப்பிரகாசம் ,கனகலிங்கதை தெரியுமா பாஞ்சுவிற்கு ?

*இந்த அநியாயத்தை கேக்க யாருமேயில்லையா? :o  :D

பராமேஸ்வராக் கல்லூரி முன்னைய அதிபர் திரு. சிவபாதசுந்தரமும் அளவெட்டியைச் சேர்ந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டியில் property விலை எல்லாம் high இல் இருக்கும்போலை இருக்கு.. :D

*இந்த அநியாயத்தை கேக்க யாருமேயில்லையா? :o  :D

அண்ண கொஞ்சம் விபரமாய் சொன்னால் எங்களுக்கும் விளங்குமல்ல ........... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண கொஞ்சம் விபரமாய் சொன்னால் எங்களுக்கும் விளங்குமல்ல ........... :lol:  :D  :D

டைனோசருக்கும் அடி தவறும்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
*பஞ்சாபிகேசன் என்று ஒரு நல்ல நாதஸ்வர வித்துவான் இருந்தார் அவரும் அளவெட்டி என்றுதான் நினைக்கின்றேன் .

 

 

பஞ்சாபிகேசன் , சங்கத்தானையை சேர்ந்தவர்.

அப்படி ஒரு ஆள் இருந்தார் என்று தெரிவதே பெரிய விடயம் அதற்குள் :icon_mrgreen: ,அதுவும் நினைகின்றன் என்று தான் எழுதினேன் :D

பஞ்சாபிகேசன் உசனை சேர்ந்தவர் .அண்ணை சரியா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவில் வித்துவான்கள் உதய ஷங்கர் ப்னாதச்வர வித்துவான் பத்மநாதன்

சிதம்பர நாதன்

மற்றும் விநாசித்தம்பி மாஸ்டர் எல்லாம் அளவெட்டி தான்

அளவெட்டி வாழ்ந்த புலவர்களில் மிக முக்கிய மான ஒருவர் விநாசித்தம் பிப் புலவர். இவரை அருட் கவியெனவும்ää கவியோகி யெனவும்ää வரகவியென வும் அறிஞர்கள் பாராட்டுவர். இவர் ஒரு புலவராக மட்டுமல்லாமல் ஒரு சோதிடராகவும் மருத்துவராகவும் பேய்பிணித் தொல்லைப் போக்கும் அருளாளராகவும் மக்களுக்கு நன்கு பயன்பட்டவர். அளவெட்டி தெற்கு அருணாசலம் வித்தியாசாலையில் தமிழும் அளவெட்டி ஆங்கில பாடசாலையில் ஆங்கிலமும் கற்றவர். ஆரம்பத்தில் சங்கக்கடையொன்றில் கடமையாற்றினார். பின்னர் மலை நாட்டிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகவிருந்தார். அதன் மேல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையிற் பயிற்சி முடித்து பூரணத்துவம் வாய்ந்த ஆசிரியராக மலர்ந்தார்.

--------------------------------

கனடாத் தமிழ் எழுத்தாளர்களில் அளவெட்டி சிறிசுக்கந்தராசாவுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. கனடாவிலிருந்து வெளிவந்த நான்காவது பரிமாணம் தாயகம் செந்தாமரை மற்றும் தமிழர் மஞ்சரி போன்ற சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரது பல படைப்புகள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைத் தொகுதியான ‘சிறிசுவின் சில கதைகள்’ எஸ்.பொ.வின் மித்ர வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்துள்ளது. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்றவரான அளவெட்டி சிறிசுக்கந்தராசா மரபுகளைத் துணிச்சலுடன் தனக்கேயுரிய மொழி நடையில் தகர்ப்பதில் வல்லவர். இவரது கதைகளைப் பற்றி எழுத்தாளர் க.நவம் அவர்கள் “புகலிட வாழ்வின் வினோத ஆனுபவங்களை இடையிடையே ஊரின் காற்றை அங்கிருந்தும் சில வேளைகளில் இங்கிருந்தும் சுவாசிக்கும் கரிசனை மனவெளியிலும் மாய விசித்திரங்களிலும் மொய்க்கிற பிரமைகளின் பிரதிபலிப்பு என்கிற சூழ்முழுமை அமசங்கள் யாவற்றையுமே தனக்குரிய மாறுபட்ட பாணியில் குழைத்து இவரால் அழகாக வரையப்பட்ட சித்திரங்கள்’ என்பார். அத்துடன் அரசியல் சூழல் காரணமாக புலம்பெயர்ந்த ஈழந்த்தமிழர்களின் புலம்பெயர் அனுபவங்களை அனுகூலமாக்கிக் கொண்ட் தமிழ்ப் ப்டைப்பாளிகளில் அளவெட்டி சிறி முக்கியமான ஒருவர் என்றும் குறிப்பிடுவார்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் விநாசித்தம்பி மாஸ்டர் எல்லாம் அளவெட்டி தான்

அளவெட்டி வாழ்ந்த புலவர்களில் மிக முக்கிய மான ஒருவர் விநாசித்தம் பிப் புலவர். இவரை அருட் கவியெனவும்ää கவியோகி யெனவும்ää வரகவியென வும் அறிஞர்கள் பாராட்டுவர். இவர் ஒரு புலவராக மட்டுமல்லாமல் ஒரு சோதிடராகவும் மருத்துவராகவும் பேய்பிணித் தொல்லைப் போக்கும் அருளாளராகவும் மக்களுக்கு நன்கு பயன்பட்டவர். அளவெட்டி தெற்கு அருணாசலம் வித்தியாசாலையில் தமிழும் அளவெட்டி ஆங்கில பாடசாலையில் ஆங்கிலமும் கற்றவர். ஆரம்பத்தில் சங்கக்கடையொன்றில் கடமையாற்றினார். பின்னர் மலை நாட்டிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகவிருந்தார். அதன் மேல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையிற் பயிற்சி முடித்து பூரணத்துவம் வாய்ந்த ஆசிரியராக மலர்ந்தார்.

 

திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையை நிறுவுவதற்கு நிலம் வழங்கியவர்களுள் என் பாட்டனும் ஒருவர் என்று பெரியப்பா கூறக் கேட்டுள்ளேன். அளவெட்டி பெருமைபெற என் பிறந்தமண் திருநெல்வேலியும் காரணம் என்று சுண்டல் தெரிவித்த செய்தி, தாளித்துத் தேங்காயும் கலந்த சுண்டல்போல் சுவைக்கிறது. :D   

  • கருத்துக்கள உறவுகள்

 

பரமேஸ்வரா கல்லூரி அதிபர்களாக இருந்த ஞானப்பிரகாசம் ,கனகலிங்கதை தெரியுமா பாஞ்சுவிற்கு ?

 

நான் மாணவனாக இருந்தபோது குருகுலத்தின் பிரதமகுரு மதிப்பிற்குரிய சிவபாதசுந்தரம் அவர்கள். நீங்களும் அங்கு மாணவனாய் பயின்றதுபோல் தெரிகிறது. நான் பயின்றபோது அங்கு மகாபாரதம் ஒரு பிரதான பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டது. அதில்வரும் அர்யுன், பெரும் வள்ளலான தன் அண்ணனை, அண்ணன் என அறியாமலே அம்புவிட்டுக் கொன்றுவிடுவானாம். நீங்களும் அங்கு மாணவனாய் இருந்தபோது மகாபாரதம் பயிற்றுவிக்கப்பட்டதா?. உங்கள் பெயரும் அர்யுன் அதுதான் கேட்டேன். வேறொன்றுமில்லை. :unsure:  :rolleyes: 

அளவெட்டி சிறிசு மொன்றியலில் இருக்கின்றார் ,அவர் "பெயர் சொல்ல பயந்தவன் " என்ற பெயரில் தான் தாயகத்தில் எழுதி வந்தார் .அவரின் சிறு கதை தொகுப்பு என்னிடம் இருக்கு ,பல கதைகள் எஸ்.பொ வைவிட பச்சையாக எழுதியுள்ளார் .

 

பாஞ்ச்,நான் பரமேஸ்வராவில் படிக்கவில்லை ,அது பல்கலைக்கழகமாக மாறும் போது திறப்பு விழாவிற்கு வந்தேன் ,பின்னர் யாழ் பல்கலைகழக அணியுடன் எதிராக உதைபந்து விளையாட போயிருக்கின்றேன் (பல்கலைக்கழாக அணி ஒரு மொக்கை அணி ).

பரமேஸ்வரா மறக்கமுடியாத அனுபவம் ,துரையப்பா மைதானம் திருத்த வேளைகளுக்காக மூடியிருந்த நேரம் யாழ்ப்பாண உதைபந்தட்ட போட்டிகள் பரமேஸ்வரா மைதானத்தில் தான் நடந்தது .இறுதி போட்டி மகாஜனா -யாழ் மத்திய கல்லூரி .பட்டிக்காடா பட்டணமா என நோட்டிஸ் அடித்து விலாசமாக மத்திய கல்லூரி விளையாட இறங்கியது .மரத்தில் இருந்து விளையாட்டு பார்த்தவர்கள் கொப்பு முறிந்து விழுந்ததும் நடந்தது .மகாஜனா 5-1கணக்கில் பெரும் வெற்றி ஈட்டியது .

பாவம் அந்த வருடம் எனது அண்ணரும் மத்திய கல்லூரிக்காக விளையாடினார் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன், நீங்கள் ஞானப்பிரகாசம், கனகலிங்கம் ஆசிரியர்களைக் குறிப்பிட்டதால் அங்கு படித்தவர் என்ற எண்ணமேற்பட்டது. ஆனாலும் அது பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது அதுபற்றி சிலவற்றை இங்கு குறிப்பிடவும் தூண்டிவிட்டது. :rolleyes: 

 

திருவாளர்கள். ஞானப்பிரகாசம், கனகலிங்கம் இருவரும் ஆசிரியர்களாக இருந்தபோது அவர்களிடம் படித்துள்ளேன். ஆசிரியர் கனகலிங்கம் அவர்கள் எப்போதும் தனக்குத்தானே சிரித்து அலாதியாக ஒரு நடை நடப்பார். வில்லன் அசோகனைப் போன்று ஒரு சிரிப்புடன் காட்சியளிப்பார். வகுப்பிற்குள் வந்தால் எல்லோருக்கும் கதிகலங்கும். ஆசிரியர் ஞானப்பிரகாசம் அவர்கள் ஞானப்பழம், தீவிர முருகபக்தர். சாந்தமே உருவானவர். ஆனால் அதற்கு அப்பால் அவரிடம் குடிகொண்டிருந்த வெறித்தனத்தை, ஒரு நாள் அனுபவித்தோம். பெளதிக பாடம் நடாத்தியபோது சூரிய ஒளியானது நேர்கோட்டில் அல்லாது நெளிந்து நெளிந்து இப்படித்தான் வரும் என்று கரும்பலகையில் அவர் கோடு கீறியபோது, கோட்டின் நெளிவுகளுக்கேற்ப அவர் தலையும் மேலும் கீழும் ஆடியது. அவர் தலை ஆடியதை அப்படியே பிரதிபலித்துக் காட்டிய எங்கள் சக மாணவனான அனுவரதவினாயகம்பிள்ளையின் கோமாளித்தனம் எங்களைச் சிரிக்க வைத்தது. சிரிப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிய ஆசிரியரின் கண்களை அவன் கேலிபண்ணிய காட்சிபட்டுச் சிவக்க வைத்தது. மாணவன் தன்னைக் கேலிசெய்தது அவரை வெறியனாக்கியது. 'மொனிற்றர் பிரம்பு' என்றார். மொனிற்றர் மகாலிங்கம் அதிபரின் அறைக்கு ஓடிச்சென்று பிரம்பை எடுத்துவந்தான். அன்றைய பெளதிக பாடம் இரு பாடநேரங்களைக் கொண்டது. பாடம் தொடங்கிய சில நிமிடமளவில் அந்தச் சம்பவம் நடைபெற்றது. மிகுதிப் பாடநேரம் அத்தனையும் அந்த மாணவனை அடித்துத் துவைத்ததைத்தான் பார்த்தோம். பாடத்தைத் தொடங்குவது உடனே பற்களை நற நற வென்று கடித்து அவனைக் கூப்பிட்டு பிரம்பால் விளாசு, விளாசென்று அன்றைய பாடநேரம் முழுவதும் விளாசியதை, இப்போ நினைத்தாலும் ஈரல்குலை நடுங்குகிறது. :blink: 

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் பூட் பால் என்றால் எங்கள் மகாஜனா தான் சொல்லி வேலையில்லை அதுவும் மகாஜனாக்கும் ஹென்றிஸ் க்கும் நடக்கும் போட்டி சூப்பர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாஜனா கல்லூரியை மீண்டும் அதே பழைய நிலைக்கு சாதனைகளை புரியும் கல்லூரியாக மாற்றுவதற்க்கு கொழும்பு சுகபோக வாழ்க்கையயும் தூக்கி எறிந்து விட்டு நல்ல ஒரு கல்லூரிக்கு அதிபராக இருந்தும் தான் படித்த பாடசாலையை மீண்டும் அதே நிலைக்கு கொண்டு வந்தே தீருவேன் என்ற தற்போதைய அதிபர் திரு வேல்சிவானந்தன் அவர்கள் கல்லூரியை கடந்த சில வருடங்களாக அதிபராக பொறுப்பெடுத்து இருகின்றார் மகாஜனாவும் மெல்ல மெல்ல துளிர் விட தொடங்கி இருகின்றது

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாஜனக் கல்லூரி அதிபர் திரு .கு.வேல்சிவானந்தன் அவர்கள் அடுத்த வாரம் ஓய்வு பெறவுள்ளார். எனபதை அனைத்து மகாஜனன்களுக்கும் கவலை உடன் தெரிவிக்கின்றோம்..................

மகாஜனா கல்லூரியை மீண்டும் அதே பழைய நிலைக்கு சாதனைகளை புரியும் கல்லூரியாக மாற்றுவதற்க்கு கொழும்பு சுகபோக வாழ்க்கையயும் தூக்கி எறிந்து விட்டு நல்ல ஒரு கல்லூரிக்கு அதிபராக இருந்தும் தான் படித்த பாடசாலையை மீண்டும் அதே நிலைக்கு கொண்டு வந்தே தீருவேன் என்ற தற்போதைய அதிபர் திரு வேல்சிவானந்தன் அவர்கள் கல்லூரியை கடந்த சில வருடங்களாக அதிபராக பொறுப்பெடுத்து இருகின்றார் மகாஜனாவும் மெல்ல மெல்ல துளிர் விட தொடங்கி இருகின்றது

 

நல்ல விடயம்

மகாஜனக் கல்லூரி அதிபர் திரு .கு.வேல்சிவானந்தன் அவர்கள் அடுத்த வாரம் ஓய்வு பெறவுள்ளார். எனபதை அனைத்து மகாஜனன்களுக்கும் கவலை உடன் தெரிவிக்கின்றோம்..................

 

 

ஒண்டுமே புரியேலையே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 2 பருடங்களுக்கு மேலாக அதிபராக இருந்து பல சேவைகளை ஆற்றி இருந்தார் இன்னினும் ஓய்வு வயது வந்ததனால் இளையவர்களுக்கு வழிவிட்டு போவதாக இருக்கலாம் இல்லை வழமையான அரசியலுக்கு அவரால் ஈடு கொடுக்க முடியாமல் இருக்கலாம்

ஆனாலும் இவரின் தலைமையின் கீழ் மகாஜனா கல்வியிலும் விளையாட்டிலும் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறி இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.