Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மார்கத்தில் ஏ ஆர் ரகுமான் வீதி

Featured Replies

1397834_10151751303151720_2078473558_o.j

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவர் மார்க்கம் நகர மக்களுக்கு என்ன சேவை செய்தார்?

ஏன் இவர் மார்க்கம் நகர மக்களுக்கு என்ன சேவை செய்தார்?

 

 

உப்பிடி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது வாலி. அடுத்தது றம்பா வீதியாயும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பு இது கிடக்கு...நல்ல குப்பையுக்கை நிக்கிறார்..

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள்... சினிமா பைத்தியங்கள் என்பதற்கு, இது... நல்ல உதாரணம்.
வேறு நல்ல பெயர்கள் சூட்டத் தெரியாமல், தள்ளாடுது.... தமிழ்ச்சனம்.

ரகுமான் உலகப்பிரபலங்களில் ஒருவர். எனவே, அவர் வாலைப்பிடித்து ஏதோ அலுவல் பார்ப்பதற்கு யாரோ முயற்சித்துள்ளார்கள். மார்க்கத்தில் தாராளமாய் இந்தியர்களும் உள்ளார்கள். எனவே, வால்பிடித்த விசுவாசி இலங்கைத் தமிழராகவே இருக்கவேண்டும் என்றும் இல்லை.

தவிர, இது மார்க்கம் நகரசபையின் ஓர் விளம்பர உக்தியாகவும் அமையலாம்.

உயிருடன் உள்ள நபர்களின் பெயர்கள் இவ்வாறு பயன்படுத்தப்படுவது சரியா/தவறா என்று காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

1385780_10151780687468918_1959644326_n.j


1462909_10151780687268918_1022650240_n.j


1422588_10151780686793918_396347894_n.jp


1422588_10151780686793918_396347894_n.jp


கனடாவில் உள்ள வீதி ஒன்றிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ar.jpg
பொதுவாக ஒருவரைக் கௌரவிப்பது என்றால் அவரது சிலையை நிறுவுவார்கள் அல்லது அவரது பெயரைக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சூட்டுவார்கள்.
 
அந்த வகையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கௌரவிக்கும் வகையில் கனடாவில் உள்ள வீதி ஒன்றிற்கு இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை சூட்டியுள்ளனர்.
 
இந்திய சினிமாவின் 100ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், கனடாவில் றொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
 
உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கிய இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பொலிவுட் மற்றும் ஹொலிவுட் சாதனைகள் குறித்து புகழப்பட்டது.
 
பின்னர் அதன் தொடர்ச்சியாக, கனடாவின் மர்கம் பகுதியில் உள்ள பிரதான வீதி ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் (அல்லாஹ் - ரக்ஹா ரஹ்மான்) வீதி என பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கத்தில்தான் வன்னி வீதியும் உள்ளது என நினைக்கிறேன்.. பிராம்ப்டனில் குருத்வாரா வீதியையும் கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி இளையராஜாவுக்கு கனடாவில் ஆதரவு காணாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெயரை வெள்ளைகாரர் உச்சரிக்கும் போது எத்தனை எழுத்துக்களை சாப்பிட்டு விட்டு.சொல்லப் போறார்களோ ஆண்டவனுக்குத் தான் தெரியும்.சாதரணமாக நீண்ட பெயர்களை சொல்லும் போது விட்டு..விட்டுத் தானே சொல்கிறார்கள்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி இளையராஜாவுக்கு கனடாவில் ஆதரவு காணாது. :)

இசைஞானி தெருவில் நில்லாது எங்கள் நெஞ்சத்து வீதிகளில் நிறைந்துள்ளார்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி பேர் சூட்டு விழாவுக்கு பிரியாணிபார்சல் ஏதும் குடுத்தவையோ?

ஒரு தமிழகத்து தமிழ் கலைஞனை நூற்றாண்டு காணும் இந்திய சினிமாவின் அடையாளமாக கண்டு பெருமைப்படுத்துவதையிட்டு மனம் மகிழ்கின்றேன். வாழ்த்துகள் ரகுமான்!

எனக்கு  இது வரையில் ரகுமானின் எந்த பாடலும் பிடிக்கவில்லை. ஆனால் இது இந்திய கலைஞர்களுக்கு கொடுக்கும் மரியாதையாக செய்திருக்கிறார்கள். இதற்குள் தமிழ் வரவில்லை. நடிகர்களின் பெயர்களை கனேடிய வெள்ளைகாரர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள். அதனால் அமிர்தாபச்சனோ அஸ்வரி ராவோ வர முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானியின் இசை மேல் உருவாக்கமே ரகுமான் மற்றுபடி ஒரு தமிழனின் புகழ் உயிருடன் உள்ள காலத்திலேயே புகழபடுவதையிட்டு மனம் வாழ்த்துகிறது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழனாக பெருமைப்படக்கூடிய விடயம்

நன்றி  ரகுமான்!

 வாழ்த்துகள் ரகுமான்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர் விருது பெறும் போது மேடையில் ஏறி "எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே" என்று தமிழில் முழங்கிய இவருக்கு இந்த மதிப்பளித்தது மகிழ்ச்சி. 

 

தமிழ் நிகழ்ச்சிகளிலேயே தமிழ் வராத போது... தமிழை உலக மேடையில் உச்சரித்தற்கு நாம் பாராட்டவில்லை. அடுத்தவன் அவரின் திறமைக்கு மதிப்பளிக்கின்றான் அதனை கேலிசெய்கின்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி தெருவில் நில்லாது எங்கள் நெஞ்சத்து வீதிகளில் நிறைந்துள்ளார்..! :lol:

 

இவருக்கு பொறாமை........

:lol:  :D

என்ன இருந்தாலும் சில சினிமாகாரர் மேடையேறினா 'அக்சுவலா ' என்று தொடங்குவினம் ஆனால் ரகுமான் ஒஸ்கார் மேடையில் முதலில் தமிழில் சொன்ன எல்லா புகழும் இறைவனுக்கே என்பதுதான் இப்ப நினைவு வருது .

 

வாழ்த்துக்கள் திலீப்குமார் :D

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் போர் உச்சக் கட்டத்தை அடந்திருந்த நேரம் அது. உலகத் தமிழினமே ஏங்கித் தவித்துக்கொண்டிருந்த தருணமது. தமிழன் ஒருவன் ஆஸ்கார் விருது பெறுகின்றான். வேறு ஒன்றும் செய்திருக்கத் தேவையில்லை. இந்த விருதை ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் என் இன மக்களுக்கு அர்ப்பணிக்கின்றேன் என்று சொல்லியிருந்தால் அது பெருமளவில் எடுபட்டிருக்கும். ஆம், இனம் நாதியற்றுக் கருவழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது எல்லாப் புகழையும் இறைவனுக்குக் கொடுக்கத் தமிழன் ஒருவனாலேயே முடியும். (இதில் இளையராஜாவை போட்டுக் குழப்ப வேண்டிய தேவையில்லை).

 

வாழ்க தமிழன்! வளர்க தமிழினம்!

  • கருத்துக்கள உறவுகள்

சரி. எல்லா புகழும் ஈழத்தமிழனுக்கு என்று சொன்னவுடன் என்ன ஆகியிருக்கும் வாலி.

  • கருத்துக்கள உறவுகள்

சரி. எல்லா புகழும் ஈழத்தமிழனுக்கு என்று சொன்னவுடன் என்ன ஆகியிருக்கும் வாலி.

 

அய்யா, ரகுமான் எல்லாப் புகழும் ஈழத்தமிழனுக்கு என்று சொல்லத் தேவையில்லை, அந்த விருது மேடையில் அவ்விருதை ஈழத்தமிழருக்காக டெடிக்கேட் செய்திருக்கலாம், அதனால் அவர் இழந்துபோவது எதுவும் இல்லை. தமிழன் என்று நாங்கள் அவரைக் குறித்து பெருமைப்பட அங்கு ஒன்றுமில்லை. ஒரு இசையமைப்பாளன் அவரின் இசையைக் கேட்கிறம் அவ்வளவுதான். வங்கத்து இசையமைப்பாளர் சலீல் சௌத்திரியைக் கூட ரசிக்கின்றோம் அந்தவகையில் ரகுமானும் ஓரு சிறந்த இசையமைப்பாளர் அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தொன்றுதொட்டு திறமைசாலிகள் இருந்து வந்துள்ளார்கள்.. ஆனால் அது தொண்ணூறுகளில் ஒரு திறந்த பொருளாதாரமாக மாற்றப்பட்ட பின்னர்தான் அதன் திறமைகளும் சந்தைப்படுத்தப்பட்டன. ஐஸ்வர்யா ராய் தொடங்கி வெளிவந்த அழகிகள் அழகிகள் ஒரு உதாரணம்.. திடீரென்று இப்போது அந்த அழகிகள் வரவு நின்றுவிட்டது.. பல சந்தை நிறுவனங்கள் தங்கள் பொருட்களுடன் காலூன்றி விட்டார்கள்.

இதே வரிசையில் அடுத்தகட்டமாக, இந்திய அதிகாரிகள் பல அரசு சாரா நிறுவனங்களுக்குள் நுழைய வழி ஏற்பட்டது.. இதற்கு ஐநாவும் தப்பவில்லை.. இந்தியாவின் 65 ஆண்டு வரலாற்றில் இவ்வளவு உலக அரசியல் செல்வாக்கு அவர்களுக்கு இருந்ததில்லை.. ஆனால் அதை அவர்கள் போட்டுடைக்கும் வேைலயைத்தான் செய்து வருகிறார்கள். கமலேஷ் சர்மாவும், விஜய் நம்பியாரும் நல்ல உதாரணங்கள்.

அதேநேரத்தில் இந்திய எதிர்ப்பும் கிளம்பாமல் இல்லை.. ஸ்லம்டாக் மில்லியனர் அதன் ஒரு அங்கம்.. அதில் இந்தியாவை கேவலமாகச் சித்தரித்துவிட்டு அதற்கு விருதுகளும் வழங்கினார்கள். அமிதாப் பச்சன்மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்..

இந்தப் படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்ததற்காக ரகுமான் விருது பெற்றார்.. அதில் உள்ள பாடல் எந்த அளவுக்கு உலக அளவில் பிரபலமானது என்று ஆராயப்போனால் உண்மை தெரிந்துவிடும்.. பாடல்களை விடுத்து ரகுமானின் திரைப்படப் பின்னணி இசையமைப்பு என்ன ரகம் என்பது இந்தியாவிலேயே தெரிந்த விடயம்தான்.. அவரின் ஏதாவது படத்தின் பின்னணி இசையை உங்களால் நினைவு மீட்டல் செய்ய முடியுமா என்று பரிசோதித்தால் உண்மை தெரிந்துவிடும்.

ஆக, உலக பொருளாதாரமயமாக்கலின் பக்கவிளைவுகள்தான் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், ப்ரியங்கா சோப்ரா, ஏ.ஆர். ரகுமான், ஐபிஎல் எல்லாம்.. ஐபிஎல்லில் ஆனானப்பட்ட ஆஷஸ் கிரிக்கட் தொடரே அடிபட்டுவிட்டது..

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா, ரகுமான் எல்லாப் புகழும் ஈழத்தமிழனுக்கு என்று சொல்லத் தேவையில்லை, அந்த விருது மேடையில் அவ்விருதை ஈழத்தமிழருக்காக டெடிக்கேட் செய்திருக்கலாம், அதனால் அவர் இழந்துபோவது எதுவும் இல்லை. தமிழன் என்று நாங்கள் அவரைக் குறித்து பெருமைப்பட அங்கு ஒன்றுமில்லை. ஒரு இசையமைப்பாளன் அவரின் இசையைக் கேட்கிறம் அவ்வளவுதான். வங்கத்து இசையமைப்பாளர் சலீல் சௌத்திரியைக் கூட ரசிக்கின்றோம் அந்தவகையில் ரகுமானும் ஓரு சிறந்த இசையமைப்பாளர் அவ்வளவே.

 

ஏன் அவர் அப்படி ஈழத்தமிழருக்கு எனச் சொல்ல வேண்டும். அவரது வெற்றியில் பங்கெடுத்தோமா? அன்றி அவரது வெற்றிக்காகக் கூட இருந்தோமா? தவிர அவது கருத்து என்பது அவரது மனதில் இருந்து வருவது, அதில் எப்படி 3ம் மனிதர் தலையிட முடியும். அவரைத் தமிழன் எனப் பெருமைப்படவில்லை எனில் அவரிடம் இருந்து ஏன் இதை இரந்து கொண்டு நிற்கின்றீர்கள்.

சந்தனம் மிஞ்சினால் ------- எல்லாம் தடவுவார் என்பதுபோலவே "இந்தா பிடி உனக்கும் ஒன்று" என ரகுமான் பெயரிலும் வீதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் எத்தனையோ ஆயிரம் கனேடியப்படையினர் தமது வாழ்க்கையை ஆகுதியாக்கினார்கள். கனேடிய நாட்டின் உருவாக்கம், வளர்ச்சியின் பின்னால் எத்தனையோ ஆயிரம் பெரியவர்கள், சமூகத்தொண்டர்கள், மக்கள் இருக்கின்றார்கள். இவர்களது உழைப்பும், வியர்வையும், இரத்தமும் இல்லையானால் இப்போது நாம் வாழ்ந்து மகிழும் கனடா நாடே இல்லை. கனடா நாட்டிற்கு தமது வாழ்வை அர்ப்பணித்த தியாகிகளில் எத்தனை சதவீதம் நினைவுகூறப்படுகின்றார்கள்?

பெரிய தொகைகளில் (மில்லியன் கணக்கில்) நன்கொடை வழங்கும்போது நன்கொடையாளியின் பெயரில் நிறுவனங்களிற்கு முழுமையாகவோ, பகுதியாகவோ பெயர் சூட்டுவதும் வழமை. உ+ம்: Ted Rogers School of Management (Ryerson University).

ஆனால், தமது விசுவாசத்தை காட்டுவதற்காகவோ அல்லது வால் பிடிப்பதற்காகவோ சில உள்ளூர் அரசியல்வாதிகள் கனடாவின் சரித்திரத்தை மறந்து, அதை உருவாக்கி கட்டியெழுப்பிய தியாகிகளை மறந்து தமது சபலபுத்தியினதும், சுயநலத்தின் செளகரியங்களினதும், அதிகார போதையிலும் ஆடுகின்ற ஆட்டங்களிற்கு வீதிகளின் நாமங்களும் இலக்காகியுள்ளது.

ரகுமானின் பெயரில் வீதியை ஒதுக்குவது மார்க்கம் மாநகரசபையின் பெருமைந்தன்மையைக் காட்டவில்லை, மாறாக சந்தனம் மிஞ்சினால் ----- எல்லாம் தடவுவான் என்பதான அறிவற்ற உள்ளூர் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளின் பகுதியையே பிரதிபலிக்கின்றது. இந்த அரசியல்வாதிகளை கனடாவைவிட்டு ரகுமான் வாழும் இந்தியாவுக்கே அனுப்பினால் (நாடு கடத்தினால்) கனடா வெளிக்கும்.

Edited by நிழலி
அநாகரீக வார்த்தை பிரயோகம் நீக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.