Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!!

http://tamilcinema.com/2013/11/tamil-board-bus-in-german/

  • கருத்துக்கள உறவுகள்

german_tamil_board_bus.jpg

"ஹம்" அம்மன் கோவில், வழித்தடத்தில் இயங்கும்... பேரூந்து போல் உள்ளது.
பார்க்க மகிழ்ச்சியாக உள்ள‌து. ஜேர்மன் பஸ்சில்.. தனித் தமிழை எழுத வைத்த அம்மாளச்சியின் பெருமைக்கு... இதுவே சான்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவிலையும் எப்பவோ தமிழ்ப்பெயரிலை பெயர்ப்பலகைகள் வந்துட்டுது...

canada_tamil_hospital_zpscb6cc577.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிலயே தமிழ் வரும் போது, இதெல்லாம் என்னய்யா பெரிய அதிசயம் :rolleyes: 

398164_10151088256105615_285934935_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கம் கோயில் திருவிழாக் காலத்தில் இப்படித் தமிழ்ப் பெயருடன் விட்டிருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

 ஜெர்மனிப்   பேரூந்துப் பெயர்ப் பலைகயில் கொலுவீற்றிருக்கும் தமிழ்த் தாய்க்கு வணக்கங்கள்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

paavam_zpsb952ecfc.jpg

மாற்றுக்கருத்துக்களை கர்ஜிக்கும் எங்கடை சிங்கங்கள் இதுகளுக்கும்  நாக்கு நுனியிலை ஏதாவது காரணம் வைச்சிருப்பினம்..... 

 ஜெர்மனிப்   பேரூந்துப் பெயர்ப் பலைகயில் கொலுவீற்றிருக்கும் தமிழ்த் தாய்க்கு வணக்கங்கள்! :D

சரி.......துலைஞ்சுது போ.....சனம் தேவாரம் படிக்க வெளிக்கிட்டுது  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில நடந்த ஒரு "ஆர்ப்பாட்டம்"

Sri Lanka Freedom Tamil Alaince
222330_10150579368545615_91019_n.jpg

அப்புறம் "we condem"
150514_10150341910710615_7695747_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஹம் புகையிரத நிலையத்தில் இருந்து ஹம் அம்பாள் ஆலயம் வரை நடைபெறும்

இந்தப் பேரூந்துச் சேவை அம்பாள் ஆலயத் தேர்த் திருவிழா அன்று மட்டும் நடைபெறும்.
 
கம் கோயில் திருவிழாக் காலத்தில் இப்படித் தமிழ்ப் பெயருடன் விட்டிருக்கலாம்

கடந்த சில வருடங்களாகவே திருவிழாக் காலங்களில்மட்டும் ஹம் புகையிரத நிலையத்தில் இருந்து காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு இந்த வஸ் தமிழ் பெயர்ப்பலகையுடன் இலவசமாகவே ஓடுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில வருடங்களாகவே திருவிழாக் காலங்களில்மட்டும் ஹம் புகையிரத நிலையத்தில் இருந்து காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு இந்த வஸ் தமிழ் பெயர்ப்பலகையுடன் இலவசமாகவே ஓடுகிறது. 

 தேர்த்  திருவிழா அன்று மட்டும் தான் என நான் நினைத்தேன்

தகவலுக்கு நன்றி சோழியன் அண்ணா

ஒரு தேர்த் திருவிழாவில் உங்களுடன் நான் பேசியிருக்கின்றேன்

அடுத்த முறை அடையாளத்துடன் பேசுகின்றேன் :D

 தேர்த்  திருவிழா அன்று மட்டும் தான் என நான் நினைத்தேன்

தகவலுக்கு நன்றி சோழியன் அண்ணா

ஒரு தேர்த் திருவிழாவில் உங்களுடன் நான் பேசியிருக்கின்றேன்

அடுத்த முறை அடையாளத்துடன் பேசுகின்றேன் :D

ஆகா.. பேசினீர்களா?  அடுத்தமுறைக்கு காத்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல.. தினசரி மதியம் குழையல் சோறும் கிடைக்கிறதாம்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. பேசினீர்களா?  அடுத்தமுறைக்கு காத்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல.. தினசரி மதியம் குழையல் சோறும் கிடைக்கிறதாம்.  :lol:

அந்தக் குழையல் சாதத்தின் சுவை  ஒரு தனிச்சுவை  :D

சிறிலங்காவிலயே தமிழ் வரும் போது, இதெல்லாம் என்னய்யா பெரிய அதிசயம் :rolleyes: 

398164_10151088256105615_285934935_n.jpg

அருமை இது செங்கொடி.

இதில் பெரிய பகிடி தமிழில் இருப்பது அல்ல சிங்களத்தில் இருப்பதுவே. இலங்கைத்தீவு தனது என்று கொண்டாடும் மோடயாவிடம் ராமன் பாலத்திற்கு ஒரு சொல் இல்லாதது மட்டும் அல்ல 5000 வருடங்களுக்கு மேல் பாவனையில் இருக்கும் அந்த தமிழை கூட தன்னும் இன்றுவரையில் உள்ளே சரியாக வாகங்க முடியவில்லை.  200 ஆண்டுகளுக்கு முன்னர் வந்து அதை ஆங்கிலத்தில் ஆதாம் பிறிட்ஜ் என்று அழைத்த வெள்ளைகளைப் பின் பற்றி ஆதம்கே என்று சிங்கள்த்தில் போட்டிருக்கிறான்.

ஆங்கிலத்தை கொலை செய்து ஆதம்கே என்றும் தமிழை கொலை செய்து பாலம என்றும்தான் சிங்களத்தில் எழுதியிருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அப்படித் தான் செய்வான் என்பது ஒரு புறமிருக்க, இதை விடக் கேவலமாகச் சொற்பிழையோடும இலக்கணப் பிழையோடும் தானே பலர் தமிழில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கோபம் அந்த விடயத்தில் வருவதில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். மொழி தொடர்பாடல் விசயத்தில் மேற்கு நாட்டவர்கள் எப்பவும் முன்னோடிகள் தான். அண்மையில் அமெரிக்காவின் வட-மேற்கில் இருக்கும் சியாற்றில் நகரத்திற்குப் போயிருந்தேன். விமான நிலையத்திற்குள் ஓடும் சிறு தொடரூந்தில் அறிவிப்புகள் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தன (ஸ்பானிய மொழியில் இருக்கவில்லை!). " விமான நிலையத்திற்கு நிறைய சீனர்கள் ஆங்கில அறிவுக் குறைவுடன் வருகிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொருவராக திசை காட்டி விளக்கம் சொல்ல நிறைய மனித வளம் செலவாகிறது. அதனால் இலகுவாக அவர்கள் மொழியிலேயே அறிவித்தல் வைத்து விட்டார்கள்" என்றார் வாடகை வண்டி ஓட்டுனர். இப்படி சிக்கல் இல்லாமல் நேரடியாகச் சிங்களவர்கள் சிந்தித்திருந்தால் சிறிலங்காவின் பிரச்சினை இப்படி சிக்கலடைந்திருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

german_tamil_board_bus.jpg

"ஹம்" அம்மன் கோவில், வழித்தடத்தில் இயங்கும்... பேரூந்து போல் உள்ளது.

பார்க்க மகிழ்ச்சியாக உள்ள‌து. ஜேர்மன் பஸ்சில்.. தனித் தமிழை எழுத வைத்த அம்மாளச்சியின் பெருமைக்கு... இதுவே சான்று.

இன்னுமொரு பதிவில் இப்படி சொல்லி இருந்தேன்:
 
லண்டன்காரர், கோவில் அமைக்கிறது பத்தி ஜெர்மனி ஹம் அம்மன் 'பாஸ்கரன் ஐயா' விடம் டியூஷன் எடுக்க வேண்டும்.   
 
இந்த 'பாஸ்கரன் ஐயா' பெரும் வியாபார மூளை உள்ள கில்லாடி: இவர் இந்த கோவில் அமைக்கும் போது தானும் மேலும் இரு பங்குதாரர்கள் கொண்டே தொடங்கினார்.
 
ஒருவர், 3 மில்லியன் டொட்ச்   மார்க் கடன் கொடுத்த வங்கி.இது கொடுத்து முடிந்து விட்டது.
 
மற்றையது, ஜெர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் இருந்து பல சுற்றுலாப் பயணிகளை வரவைப்பேன் என்றதை நம்பி,   ஆற்று ஓரமாக கோவில் கட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்த உள்ளூர் அதிகார சபை.
 
சொன்ன படி செய்வதால் பஸ் ஓடுகிறது. தமிழுடன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் அப்படித் தான் செய்வான் என்பது ஒரு புறமிருக்க, இதை விடக் கேவலமாகச் சொற்பிழையோடும இலக்கணப் பிழையோடும் தானே பலர் தமிழில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கோபம் அந்த விடயத்தில் வருவதில்லையே!

சொற்பிழை இலக்கணப்பிழைகள் அன்றுதொடக்கம் நிலவி வருகின்றன.இது அவ்வப்போது திருத்தப்படுகின்றது.
ஒரு உலகளாவிய மாபெரும் பிரச்சனையை எமக்குள் இருக்கும் சிறுபிரச்சனைகளோடு ஒப்பிட்டது உங்கள் சிறுமைத்தனத்தையே எடுத்துக்காட்டுகின்றது. 
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு பதிவில் இப்படி சொல்லி இருந்தேன்:
 
லண்டன்காரர், கோவில் அமைக்கிறது பத்தி ஜெர்மனி ஹம் அம்மன் 'பாஸ்கரன் ஐயா' விடம் டியூஷன் எடுக்க வேண்டும்.   
 
இந்த 'பாஸ்கரன் ஐயா' பெரும் வியாபார மூளை உள்ள கில்லாடி: இவர் இந்த கோவில் அமைக்கும் போது தானும் மேலும் இரு பங்குதாரர்கள் கொண்டே தொடங்கினார்.
 
ஒருவர், 3 மில்லியன் டொட்ச்   மார்க் கடன் கொடுத்த வங்கி.இது கொடுத்து முடிந்து விட்டது.
 
மற்றையது, ஜெர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் இருந்து பல சுற்றுலாப் பயணிகளை வரவைப்பேன் என்றதை நம்பி,   ஆற்று ஓரமாக கோவில் கட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்த உள்ளூர் அதிகார சபை.
 
சொன்ன படி செய்வதால் பஸ் ஓடுகிறது. தமிழுடன்.

81´ல் இருந்து 85 வரை... ஹம் நகரில் வசித்து வந்தேன்.

87´ம் ஆண்டின் பின் தான், கோவில் ஆரம்பிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

இன்னும்... அந்தக் கோவிலுக்கு போகவில்லையெ... என்ற மன ஏக்கம் உள்ளது நாதமுனி.

கோயில் வரலாறு

உள்ளூர் அதிகார சபையை பங்குதாரர் ஆக்கியதன் காரணம் வேறு. ஒரு அமைப்பு அந்த கோயில் சபை நிர்வாக சபைக்கூட்டத்தில் புதிய அங்கத்தினரைச் சேர்த்து அந்தக் கோயிலைக் கைப்பற்ற முயற்சித்தது. அதன் காரணமாக எதிர்காலத்திலும் அப்படியான முயற்சிகளைத் தடுப்பதற்காகவே அவர் உள்ளூர் அதிகார சபையை பங்குதாரர் ஆக்கினார்.   :D 

  • கருத்துக்கள உறவுகள்

இதை  பெரிய  விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது

இது  ஒரு வியாபாரநிலை

இதைப்போல்

பிரான்சிலிருந்து

பிரித்தானியா

சுவிஸ் 

மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு என பலமுறை

ரயிலிலும் பஸ்களிலும்

புலிக்கொடியேற்றி தமிழில் எழுதிச்சென்று வந்துள்ளோமே........

விசுகர்,

ஒரு நிகழ்வுக்கு போகும்போது வாடகைக்கு பிடிக்கும் வாகனங்களில் வைக்கும் தமிழ் பதாதைகளுக்கும், இதுக்கும் வித்தியாசம் உள்ளதே!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோயில் போன வருட திருவிழாவிற்கு பலத்த மழையிலும் குளிரிலும் நடந்து முடிந்தது (சித்திரை மாதம் என நினைக்கின்றேன்). இதனால் மக்கள் வருகையும் குறைந்திருந்தது. எனவே லாபத்தில் ஓட்டை விழுந்துள்ளதாக தகவல். அதனால் அடுத்த வருட திருவிழா சம்மர் ரைம் நடைபெறுமாம். இது உண்மையா?

மற்றும் அங்கே நிர்வாகத்தினர் ஒவ்வொருத்தரும் மைக்கில் பேசினார்கள். அதில் ஒருவர் தான் பல ஆயிரம் கடன் பெற்று தான் இந்த கோயிலை நடத்துவதாகவும். இந்த கோயிலை சிலர் பிடுங்க நினைக்கிறார்கள். அவர்களிற்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன், இந்த கோயிலை எப்பாடு பட்டாவது எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நான் தனியே நின்று நடத்துவேன் என மார் தட்டடியது வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. 

முட்டை போட்டு சுட்ட ரொட்டியை பின்னர் மரக்கறி கொத்துரொட்டியாக்கி விற்ற போது சுவை நச்சென்றிருந்தது என்று சாப்பிட்டவர்கள் பேசிக்கொண்டனர்.  :icon_idea: 

வராலாற்று பங்கங்களில் இருந்து:

மூல விக்கிரகம் (காமாக்ஷி அம்பாள்) இந்தியா காஞ்சி காமாக்ஷி அம்பாளின் திருவுருவத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இப்ப விளங்குது கோயிலின் பெயர் எங்க இருந்து வந்தது என்று. வெறும் சொற்ப நூறு வருடங்களேயான இந்தியன் எனது ஆயிரங்காலத்து தமிழை விழுங்கிவிட்டான். 

ஒரு நாள் குருக்கள் அவர்களின் கனவில் அகிலாண்ட கோடி ப்ரமாண்ட நாயகி அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தோன்றி ஆலயத்தை அமைப்பதற்கான இடத்தை தெரியப்படுத்தி மறைந்தாள். 

:D  :D  :D  :D 

Edited by செங்கொடி

81´ல் இருந்து 85 வரை... ஹம் நகரில் வசித்து வந்தேன்.

87´ம் ஆண்டின் பின் தான், கோவில் ஆரம்பிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

இன்னும்... அந்தக் கோவிலுக்கு போகவில்லையெ... என்ற மன ஏக்கம் உள்ளது நாதமுனி.

என்ன சிறி அண்ணா கத்தொலிக்கனாகிய நானே மனைவியின் ஆசையால் [ வற்புறுத்தலால் :icon_mrgreen:  ]
 
3 முறை கம் அம்மனை தரிசித்து வந்துவிட்டேன் .................ஒருமுறை போய்வாருங்கள் . :)  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.