Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2005ல் பிரபாகரன் இதனை விரும்பினாரோ? மகிந்தவை ஆட்சிஏற்றினால் சர்வதேசத்திடம் சிக்குவாரென நினைத்தாரோ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய தலைமைப் பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு  என்பதை தவிர  யாழ்ப்பாண  பயணத்தை முக்கியப்படுத்திய சர்வதேசம்-

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன், நியுஸிலாந்து வெளியுறவு அமைச்சர் மரேமெக்கலி மற்றும் கனடா பிரதிநிதிகள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு சென்றமையினால் பொதுநலவாய மாநாட்டின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமைப் பொறுப்பை ஏற்றார் என்ற செய்தியை விட சர்வதேச செய்திகளில் யாழ்ப்பாணம் முக்கியத்துவம் அடைந்துள்ளது. அதுமட்டுமல்ல மாநாட்டைப் பற்றி பேசுவதைவிட இன்னும் இரண்டு விடயங்களுக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கினறன. ஓன்று வெளிநாட்டுத் தலைவர்களை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் பெருமளவு நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட சிறப்புவாகனங்களை பிரித்தானிய பிரதமர், இளவரசர் சாள்ஸ் மற்றும் சில வெளிநாட்டு பிரதிநிதிகள் பயன்படுத்தாமல் கொழும்பில் உள்ள தமது தூதுவராலயங்களின்  வாகனங்களை பயன்படுத்திமை. இரண்டாவது சன்ல் 4 ஊடகவியலாளர்கள் உட்பட சர்வதேச ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக சென்று வரதடை விதித்தமை.

எடுத்த முயற்சி தோல்வி

இந்த இரண்டு விடயங்களும் முக்கியத்துவம் பெற்றதுடன் வெளிநாட்டு பிரதிநிதிகளின் யாழ்ப்பாண பயணமும் மக்களின்  போராட்டங்களும் அரசாங்கம் இதுவரையும் கூறிவந்த சமாதானம் என்ற வாக்கியத்துக்கான அர்த்தங்களையும் மாற்றியுள்ளது. பொதுநலவாய மாநாட்டை நடத்தி போர்க்குற்றங்கள், மனித உரிமைகள்  மீறல்  குற்றச்சாட்டுக்களை  மூடி  மறைத்து புகழ் சேர்க்க நினைத்த அரசாங்கத்துக்கு வெளிநாட்டு தலைவர்களின் யாழ்ப்பாணபயணம் மற்றும் தமிழ் மக்களின் போராட்டம் மீண்டும் ஒருயுத்தத்தையும் ஞாபகப்படுத்தியுள்ளது. அதுவும் சர்வதேச தலையீடு வரக்கூடாது அந்த சிந்தனையை அறவே நீக்க வேண்டும் என்று நினைத்த அரசாங்கத்துக்கு இந்த மாநாட்டின் மூலம் புதிய தலையிடி ஒன்று உருவாகியுள்ளது.

தலைநகர் கொழும்பில் பெரும் செலவில் மாநாட்டை அரசாங்கம் நடத்த தமிழ் மக்களின் 60 ஆண்டுகால அரசியல் போராட்டம் இருந்த இடத்தில் சர்வதேசமயப்பட்டுள்ளது. பெரும் உயிரிழப்புகள் சொத்து இழப்புகள் என்று பல்வேறு துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் சென்று சந்தித்தமை ஒரு பொருட்டல்ல. ஆனாலும் 2009ஆம் ஆண்டு மேமாதத்தின் பின்னரான கால கட்டத்திலும் எந்த ஒருதீர்வும் முன்வைக்கப்படவில்லை என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது வெளிநாட்டு பிரதிநிதிகள் வன்னிக்கு சென்று வந்தமை வேறு. ஆனால் சர்வதேச தலைமைப் பதவி ஒன்றுக்காக பெரும் செலவில் மாநாடு நடத்தியபோது அதில் பங்குகொள்ள வந்த தலைவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றமை உலக அரசியல் பார்வையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறியமாற்றம் எனலாம். பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்தில் மக்களை சந்திக்காது விட்டாலும் போர் நடைபெற்ற பிரதேசத்திற்கு சென்றார் என்பது தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒரு புள்ளியாகும்.

வெளிநாட்டு பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் சென்று வந்துவிட்டனர் என்பதற்காக தமிழ் மக்களுக்கு உடனடியாக எதுவும் கிடைத்து விடும் என்று கூற முடியாது. ஆனாலும் பொதுநலவாய மாநாட்டின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு இன்று சர்வதேசரீதியில் யாழ்ப்பாண பிரதேசமே முக்கியம் பெற்றிருக்கின்றது. வெளிநாட்டு பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக சென்று நிலைமைகளை அறிந்ததன் மூலம் இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் இருக்கின்றது என்ற உணர்வையும் அதுஏற்படுத்தியுள்ளது.

ஜ.நா செயலாளர் நாயகம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சியில் 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் படையினரால் கைப்பற்றப்பட்டபோது ஐந்து இலட்சம் தமிழ் மக்கள்  வெளியேறி அவதிப்பட்டதை கண்டித்து அப்போதைய ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பூட்டரஸ் பூட்ரஸ்காலி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் கண்டனமும் வெளியிட்டிருந்தார். சர்வதேச உதவிகள் நேரடியாக செல்வதை அப்போதை அரசாஙகம் தடுத்தது. அதேபோன்று இறுதிப் போர் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டும் சர்வதேசஉதவிகள் நேரடியாக வருவதை தற்போதை அரசாங்கம் தடுத்தது. ஆனாலும் சர்வதேச அழுத்தங்களினால் சர்வதேச நிவாரணங்கள் மக்களுக்கு கிடைத்தன. தற்போதைய ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமுன் உட்பட சர்வதேச தலைவர்கள்  பலர்  வவுனியாவுக்கு சென்று  இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த மக்களை பார்வையிட்டனர்.

ஆனாலும்  அரசாங்கம்  சர்வதேச பிரதிநிதிகளுக்கு கடிவாளம் இட்டது. இன்றுவரை கூட பிரச்சினைகளை மூடி மறைக்கவே அரசாங்கம் முற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இரண்டு வகையானது

இந்த மூடி மறைப்பு இரண்டு வகையானது. ஓன்று 60 ஆண்டு காலஅரசியல் போராட்டத்தின் நியாயத்தை இல்லாமல் செய்து அதன் காலப் பகுதியை குறைப்பது. விசேடமாக இனப்பிரச்சினை இல்லை என்ற தோற்றப்பாடும் அது வெறுமனே விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை என்ற கருத்தை சர்வதேசத்துக்கு கொடுப்பது.—

இரண்டாவது 30 ஆண்டுகால யுத்தத்தினால் ஏற்பட்ட பக்க விளைவுகளை மூடி மறைப்பது. குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுதல், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைத்தல், சொத்து இழப்புகளின் விபரங்களையும் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் விபரங்களைதகவல்களையும் மறைப்பது. இன விகிதாசாரத்தை குறைக்கும் செயற்திட்டங்களை  இரகசியமாக வைத்திருப்பது.

இந்த இரண்டு விடயங்களிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றது அவற்றில் சில விடயங்களில் அரசாங்கத்திற்கு தற்காலிக வெற்றியும் கிடைக்கிறது. பொதுநலவாய மாநாட்டை நடத்தி மேற்படி இரண்டு வகையான விடயங்களையும் முன்நகர்த்தி மேலும் மூடி மறைத்து இனப்பிரச்சினை இருந்தது, யுத்தம் நடந்தது என்ற அடையாளத்தை யே மாற்றியமைக்கஅரசாங்கம் முற்பட்டது. ஆனால் வெளிநாட்டு பிரதிநிதிகளின் யாழ்ப்பாண பயணம் அரசாங்கம் நினைத்த அந்த திட்டத்தை தலை கீழாக்கியுள்ளது. இனப்பிரச்சினை வரலாற்றை நோக்கினால் ஸ்ரீலங்கா சுதத்திரகட்சியின் ஆட்சியில் தான் தமிழர்கள் மிகவும் மோசமான பின்னடைவுகளையும்  தோல்விகளையும்  எதிர் நோக்கியிருந்தனர்.

அணுகு முறை வேறுபட்டது.

ஐக்கியதேசிய கட்சியின் ஆட்சியின் 1983இல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டன. வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. இன விகிதாசாரத்தை குறைக்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, கிழக்கு மாகாணத்தை தமிழ்பேசும் மக்களின் பூர்வீக பிரதேசம் என்ற கருத்தில் இருந்து மாற்றியமைத்தல் போன்றவை பச்சை நிறத்தைக் கொண்ட ஐக்கியதேசிய கட்சியின் திட்டங்கள். ஆனால் இவற்றை செயற்படுத்திக் கொண்டிருப்பது நிறீPலங்கா சுதந்திரக் கட்சி. இரண்டு கட்சிகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தாலும் வடக்கு கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை அவர்களின் கொள்கை ஒன்றுதான். ஆனால் அணுகுமுறை வேறுபட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இந்தமாநட்டில் பங்குபற்றியுள்ளமை சிநீலங்கா சுதந்திரகட்சிக்குரிய பெருமை என்ற அடிப்படையில்தான்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

ஐக்கியதேசியகட்சி, தமிழத்தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகியகட்சிகள் மாநாட்டை புறக்கணித்தன. ஆனால் சந்திரிகா புறக்கணிக்கவில்லை. அது மேற்படி காரணங்களின் அடிப்படையில் என்பது வெளிப்படை. ஐக்கியதேசிய கட்சியும், ஜே.வி.பியும் புறக்கணித்தாலும் வெளிநாட்டு பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் சென்றமை மனதுக்குள் புகைச்சல்தான். ஏன்ன செய்வது? எதற்காக தமிழத்தேசிய கோட்பாடு எழுந்தது என்பதை சரியாகபுரிந்து கொண்டு செயற்படுத்த--- தமிழ் மக்களின் அரசியல் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி முன்நகர்த்த ஒருதேசியரீதியான ஒன்றுபட்ட தொலைநோக்குடைய தேசிய இயக்கம் ஒன்று தேவை என்பதை சமீபகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99047/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்சிலை பிடிக்க நினைத்த மகிந்தருக்கு அது குரங்காக முடிந்துள்ளது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்சிலை பிடிக்க நினைத்த மகிந்தருக்கு அது குரங்காக முடிந்துள்ளது.. :D

யாழ் களத்திலிருக்கும் போது சில கருத்துக்களினால் சோர்வடையும் வேளைகளில், உங்கள் 'ப்ரோபைல்' க்குப் போய்ப்பார்ப்பது உண்டு!

 

உங்கள் மீதுள்ள அளவுகடந்த அன்பு மட்டும் காரணமல்ல ! :D

 

நீங்கள் அன்றொருநாள் எழுதிவைத்த பின் வரும் வாக்கியங்கள் தான் காரணம்!

 

அன்று சிங்களவனிடம் இருந்தது "பயங்கரவாதம்" எனும் அரசியல் ஆயுதம். இன்று தமிழனுக்குக் கிடைத்திருப்பது "போர்க்குற்றம்" எனும் பிரம்மாஸ்திரம்.

pdated 04 Dec · 0 c

 

இந்த வாக்கியங்கள், அவற்றை வாசிக்கும் ஒவ்வொரு தடவையும், ஒருவிதமான புத்துணர்வையும், நம்பிக்கையும் தந்திருக்கின்றன!

 

இந்தப் பிரமாஸ்திரத்தை உபயோகிப்பதற்கான, ஆரம்ப மந்திரங்கள் உச்சரிக்கப்படத் தொடங்கிவிட்டன!

 

முழுவதையும் சரியாக உச்சரிக்கும் போது, அந்தப் 'பிரம்மாஸ்திரத்தின்', முழு வலியும் வெளிப்படும்!

 

அதைச் சரியாகச் செலுத்தும் பொறுப்பும், எமது கரங்களிலேயே உள்ளது!

 

சிறிய தவறு ஏற்பட்டாலும், அது பயனற்றுப் போய்விடும்! :o

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்சிலை பிடிக்க நினைத்த மகிந்தருக்கு அது குரங்காக முடிந்துள்ளது.. :D

 

சூப்பர்..... காமெண்ட். இசை. :D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்சிலை பிடிக்க நினைத்த மகிந்தருக்கு அது குரங்காக முடிந்துள்ளது.. :D

பச்சையை கொஞ்சமாய் தருகினம் இசை இன்று யாழ் வந்து 10 நிமிடத்தில் முடிந்துவிட்டுது தாயக செய்திகளை உற்சாகமாய் நீண்ட காலத்தின் பின் தமிழ்கடைகளில் நம்மவர்கள்  கதைபடுனம் அதுவும் எம் தேசத்தின் வீரர்கள் மாவீரர் நினைவுநாளை நெருங்கும் வேளை! 

இவ்வளவு மக்கள் ,போராளிகள்  இறந்ததும் இன்னமும் நாட்டில் மக்கள் நிம்மதியில்லாமல் அலைவதும் புலிகளது ராஜதந்திரம் என்று எவனாவது சொன்னால் அல்லது நினைத்தால் அவனை விட கேவலமான மனித பிறவி இவ்வுலகில் இல்லை .

போற போக்கில் இசைப்பிரியாவின் ஆடைகளை கழட்டி ஓடவிட்டு சிங்களத்தை மாட்டி விட்டோம் என்றும் சொல்லுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையை கொஞ்சமாய் தருகினம் இசை இன்று யாழ் வந்து 10 நிமிடத்தில் முடிந்துவிட்டுது தாயக செய்திகளை உற்சாகமாய் நீண்ட காலத்தின் பின் தமிழ்கடைகளில் நம்மவர்கள்  கதைபடுனம் அதுவும் எம் தேசத்தின் வீரர்கள் மாவீரர் நினைவுநாளை நெருங்கும் வேளை! 

 

எனது... ஆதங்கமும், இது தான்....

பல நல்ல... கருத்துக்களை வாசித்து விட்டு, பச்சை குத்த முடியாமல் போய்... விட்டதே..... என்ற ஏக்கம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது... ஆதங்கமும், இது தான்....

பல நல்ல... கருத்துக்களை வாசித்து விட்டு, பச்சை குத்த முடியாமல் போய்... விட்டதே..... என்ற ஏக்கம் வரும்.

நிர்வாகத்திடம் பச்சை கடண் கொடுக்கும் திட்டம் ஏதும் இருக்கோஎன விசாரிக்கனும் ஆமா யாரோ ஒருஆள் கோட்டு சூட்டோடு தண்ணிபோட்டபடி யாழ் வாசலில் அமர்ந்து புலம்பினபடி இருக்காரே ஏம்பா தமிழ்சிறி உங்கடை காதிலை விழுந்ததா பாவம் நவீண அரசியல் பிச்சைகாரணாக்கும் . :)

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன், நியுஸிலாந்து வெளியுறவு அமைச்சர் மரேமெக்கலி மற்றும் கனடா பிரதிநிதிகள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு சென்றமையினால் பொதுநலவாய மாநாட்டின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.

 

 

 

முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது

 

யாழ்ப்பாணம் சிங்களப்பேரினவாததை தாங்கும் தூண். அதை பார்வையிடுவது சிங்களப்பேரினவாதத்திற்கு சாதகமானதே அன்றி பாதமாகாது.

 

பேரினவாதம் தனது ஜனநாயகத்தன்மையை பரந்தளவில் வெளிப்படுத்தியுள்ளது.

 

சிங்களத்துக்கு உறுதுணையாய் நின்றதன் ஊடாக தமிழர்களின் அழிவில் பங்கெடுத்த கூட்டுக் களவாணிகளான  உலகத்தலைவர்கள் தமிழர் பகுதிகளில் தாங்களும் நல்லவர்கள் என்று முகத்தைக் காட்ட முற்பட்டுள்ளனர்.

 

பொதுநலவாய மநாட்டுக்குப் போகக் கூடாது என்ற போராட்டங்களும் யாழ்பாணம் வரவேண்டும் என்ற பேரினவாதத்தின் உற்ற நண்பர்களான மையவாதிகளின் அழைப்பும் குறிப்பிடத்தக்க கூட்டுக் கூத்து.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

---

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மக்கள் ,போராளிகள்  இறந்ததும் இன்னமும் நாட்டில் மக்கள் நிம்மதியில்லாமல் அலைவதும் புலிகளது ராஜதந்திரம் என்று எவனாவது சொன்னால் அல்லது நினைத்தால் அவனை விட கேவலமான மனித பிறவி இவ்வுலகில் இல்லை .

போற போக்கில் இசைப்பிரியாவின் ஆடைகளை கழட்டி ஓடவிட்டு சிங்களத்தை மாட்டி விட்டோம் என்றும் சொல்லுவார்கள் .

 

வேலியால் எட்டிபார்தவர்கள் நீங்கள் உங்களுக்கு இப்படிதான் தோன்றும். அதுகும் நீங்களாக  பார்க்கவில்லை. சோபா சுத்தி போன்றவர்கள் படம் கீறி காட்டியது. 
 
வேலிக்கு  உள்ளே நின்றவனுக்குதான் உண்மை தெரியும்.
(மேலே உள்ள கருத்தில்  எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் யார்வந்தாலும் இருள் சூழ்ந்து  இருந்திருந்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். இதுதான் இறுதிப்போர் ஒன்றில் இறந்திருப்போம் அல்லது வென்றிருப்போம் என்றுதான் சொல்லி வந்தார்கள்) 
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மக்கள் ,போராளிகள்  இறந்ததும் இன்னமும் நாட்டில் மக்கள் நிம்மதியில்லாமல் அலைவதும் புலிகளது ராஜதந்திரம் என்று எவனாவது சொன்னால் அல்லது நினைத்தால் அவனை விட கேவலமான மனித பிறவி இவ்வுலகில் இல்லை .

போற போக்கில் இசைப்பிரியாவின் ஆடைகளை கழட்டி ஓடவிட்டு சிங்களத்தை மாட்டி விட்டோம் என்றும் சொல்லுவார்கள் .

 

 

அண்ணை புளட்டின் ஒரு நாளீல் இலைங்கையை அடித்து பிடிக்கும் இரசதந்திரம் எனக்கு பிடிச்சிருக்கு. அந்த பாசறையில் வளர்ந்த ஒராள் அல்லோ நீங்கள். :)

இவ்வளவு மக்கள் ,போராளிகள்  இறந்ததும் இன்னமும் நாட்டில் மக்கள் நிம்மதியில்லாமல் அலைவதும் புலிகளது ராஜதந்திரம் என்று எவனாவது சொன்னால் அல்லது நினைத்தால் அவனை விட கேவலமான மனித பிறவி இவ்வுலகில் இல்லை .

போற போக்கில் இசைப்பிரியாவின் ஆடைகளை கழட்டி ஓடவிட்டு சிங்களத்தை மாட்டி விட்டோம் என்றும் சொல்லுவார்கள் .

 

புலிகளுக்கு பின்  தமிழர்களுக்கு அரசியல் எண்று ஒண்றும் இருக்காது இதுதான்  நடேசன் அண்ணை இறுதியாக குடுத்த பேட்டியில் சொன்னது...  

 

மகிந்த  இரணிலைவிட  சாதூர்யம் குறைந்தவர்... !!     இதுதான் உண்மை.... 

 

இணைத்தலைமை நாடுகளை உருவாக்கி கூட்டு ஒப்பந்தம் போட்டு  அன்னிய முதலீடுகளையும் இராணுவ  உதவிகளையும் சமாதான காலங்களில் பெற்று  இலங்கை இராணுவத்தை பலப்படுத்தியதில் இரணிலே புலிகளை ஒடுக்க காரணமானவர்.... 

 

அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள்  இந்தியாவின் இரஜீவ் பாணியில்  பேச்சுவார்த்தையை நகர்த்தி புலிகளை அழைத்து கட்டளைகள் போட முயண்றமையே புலிகளை பேச்சுக்கு போகாமல் தடுத்தது... 

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சக்கணக்கில் அதற்கும் மேலாக யூத இன மக்களும் ,அவர்கள் போராளிகளும் இறந்தபின்னரும் எஞ்சியவர்கள் நாடின்றி நிம்மதியின்றி உலகெங்கும் அலைந்தபோதும் யூத இனத்தின் ராஜதந்திரமே இசுரவேல் நாட்டை மீட்டெடுத்தது.

 

பிரபாகரன் படை இன்றைய உலகத்தின் போக்கோடு ஒன்றாமல் மனிதர்களாக வாழ முற்பட்டமையும் அவர்கள் அழிவிற்கு ஒரு காரணம். அதுபோன்று இன்று யூதர்கள் உலகத்தின் போக்கோடு ஒன்றாமல் மனிதர்களாக வாழ முற்பட்டிருந்தால், இசுரவேல் என்ற நாடே உலக வரைபடத்தில் இல்லாது போயிருக்கும்.

 

இசைப்பிரியாவின் அவலத்தை காமக்கண்ணுடன் பார்த்துத் தம்மை தமிழனென்றும் அடையாளப் படுத்தும் கேவலமான மனித பிறவிகளும் இவ்வுலகில் உண்டு.

 

'Phan Thi Kim Phuc'. என்ற சிறுமி வியட்நாம் வீதியில் அம்மணமாக ஓடியதை மக்கள் ஆபாசமாகப் பார்கவில்லை ஆவேசமாகப் பார்த்தனர். வியட்நாம் மக்கள் இன்று அவளை ஒரு 'போரின் அடையாளச் சின்னமாக' வடித்து நினைவுகூருகின்றனர்.

 

 

The Girl in the Picture : வியட்நாம் சிறுமி

 


TrangBang.jpg

ஜூன் 8, 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது இப்படம் எடுக்கப்பட்டது. தன் கிராமத்தின் மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்டு தீக்காயங்களோடு ஓடிவரும் இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அந்த ஆண்டுக்கான 'புலிட்சார் விருது' பெற்ற இப்படத்தை எடுத்தவர் 'Nick Ut' என்னும் வியட்நாமியப் புகைப்படக்காரர்.

 

இந்த திரியில் எனக்கு உடன்பாடில்லை.

ரணிலை ஜனாதிபதியாக்கினால் மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்குள் மாட்டுப்பட்டு விட வேண்டும். அதுவும் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதால் தான் ரணிலை புறக்கணித்து மகிந்த ஜனாதிபதியாவதற்கு காரணமாக அமைந்தார்கள். மகிந்தவாலும் பாதிப்பே என தெரிந்தே இருந்தார்கள்.

போரில் ஏற்பட்ட அழிவு தான் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளதே தவிர இந்த நிலைக்கு வருவோம் என நினைத்து தலைவர் மகிந்தவை ஜனாதிபதியாக்கவில்லை. ஆனால் இறுதிக்கட்ட போர் நேரத்தில் அந்த போரே எமக்கான எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் என கணித்திருக்கலாம். (அதற்கும் மகிந்தவை ஜனாதிபதியாக்கியதற்கும் சம்பந்தமில்லை)

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த முற்பட்டமை இலங்கைக்கு வெற்றியேயானாலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை. என்றுமில்லாத அளவுக்கு சர்வதேச ஊடகங்களில் தமிழர்கள் பிரச்சினைகள் இந்த குறுகிய காலத்தில் வந்தது. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.