Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

கவிஞரும் யாழ் கள உறுப்பினருமான ஜெயபாலன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக முகப்புத்தகம் வாயிலாக அறிந்தேன்.

 

இந்தச் செய்தியை கள உறுப்பினர் என்ற வகையில் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

 

இது குறித்த மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் இணைக்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

அடப்பாவத்த.

தகவலுக்கு நன்றிகள், நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பொயட் மீண்டுவர ஏதாவதுன்செயமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கைதாகத் தெரியவில்லை. அன்பான உபசரிப்புப் போலவே தெரிகிறது. அதுவும் பொயட் போன்ற பலமான இந்திய.. சிறீலங்கா அரசியல் தொடர்புகள் உள்ள ஒருவரை கைது செய்ய வேண்டிய அவசியம்..???! :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

எந்த நாட்டில்? எதுவாகினும் பாதுகாப்புடன் அவர் விடுதலையாக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி நீங்க கவலைப்படுற அளவுக்கு அவர் சாதாரண தமிழன் அல்ல. பின்புலங்கள் பல உள்ள ஒரு வி ஐ பி. :icon_idea:

Link to comment
Share on other sites

விசாரித்து விட்டு விடுதலையாக்கி விடுவார்கள் என நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியைப் பார்க்க (இது இப்ப இராணுவத்தினரின் பண்ணை / முகாம் பிரதேசத்தில் இருப்பதாக முன்னர் அறிந்து இருந்தேன்) செல்லும் போது கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது. இன்னும் முழுவிபரமும் கிடைக்கவில்லை,

Link to comment
Share on other sites

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால்; கைது:-

 

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.


மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள்; உறுதி செய்துள்ளனர்.  


நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை  தமிழகத்தில் கழித்து வந்தார்.


கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்  பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை அடைத்து வைக்குமளவுக்கு சிறிலங்கா அரசுக்கு எதிரானவர் அல்ல, ஆகையால் விரைவில் விடுதலையாவார்.  

Link to comment
Share on other sites

கவிஞரின் கைது எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது .அவர் நலமாக மீண்டும் வரவேண்டும் என்பதே எனது பிரார்தனை  :(  :(  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா ஐ ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

 

 

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன தெரிவித்தார்.

சுற்றுலா விசாவில் வந்திருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ரோஹன தெரிவித்தார்.

 

அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

 

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131122_jeyapalan.shtml

Link to comment
Share on other sites

பொயட் அவர்களை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் குலைப்பவர் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

 

அவர் முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்களே யாழில் அவரக்கு பல எதிர்ப்பாளர்களை உருவாக்கியது. அப்படியிருக்க அவர் எப்படி இன முரண்பாட்டை வளர்ப்பவரானார் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

பி பி சி தலைப்பு செய்தி இன்று இதுதான் .

சிங்களவனின் பேச்சை கேட்க அலுப்பு கொடுத்தாலும் கொடுப்பார்கள் போலிருக்கு .

Link to comment
Share on other sites

கள உறவு விசரனுடன் முகனூலில் உரையாட சந்தர்பம் கிடைத்தது .தான் கவிஞருடன் உரையாடியதாகக் குறிப்பிட்டு பின்வரும் செய்தியை என்னுடன் பகிர்ந்தார் . " ஜெயபாலன் அண்ணணுடன் பேசக்கிடைத்தது. தற்போது போலீஸ் நிலையத்தில் உள்ளதாகவும் மிக விரைவில் வீடுசெல்ல அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்."

Link to comment
Share on other sites

மாற்றுக்கருத்து கொண்டவராக இருந்தாலும் அவரின் கைதை இட்டு சிலர் சந்தோசப்படுவது ஏனோ தெரியவில்லை. அவரும் ஒரு  தமிழர் என்பதை மறந்து விடுகிறார்கள். எம்மவரில் ஒருவர் கைதானால் அவர் நிச்சயமாக சந்தோசப்பட மாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

131122151042_jeyapalan_poet_actor_304x17131122145245_visjayapalan.jpg

இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா ஐ ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன தெரிவித்தார்.

சுற்றுலா விசாவில் வந்திருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ரோஹன தெரிவித்தார்.

அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131122_jeyapalan.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால்; கைது:-

 

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.

மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள்; உறுதி செய்துள்ளனர்.  

நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை  தமிழகத்தில் வழித்து வந்தார்.

கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்  பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx

 

கழித்துவந்தார் என்று எழுதுவதற்கு பதிலாக வழித்து என்று தவறுதலாக எழுதியுள்ளார் குளோபல் தமிழ் செய்தியாளர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன தெரிவித்தார்.

சுற்றுலா விசாவில் வந்திருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ரோஹன தெரிவித்தார்.

 --------

 

ஸ்ரீலங்காவுக்கு சுற்றுலா போகாதேங்கோ, புறக்கணி ஸ்ரீலங்கா என்று... எத்தனை தரம் சொல்லியிருப்போம்.

அதனை கடைப்பிடிந்திருந்தால்... ஜெயபாலனின் கைது நடந்திருக்காது.

அவர் விரைவில் விடுதலையாகி வந்திடுவார் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

பொயட் அவர்களை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் குலைப்பவர் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

 

அவர் முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்களே யாழில் அவரக்கு பல எதிர்ப்பாளர்களை உருவாக்கியது. அப்படியிருக்க அவர் எப்படி இன முரண்பாட்டை வளர்ப்பவரானார் என்று தெரியவில்லை.

முஸ்லீம்களுக்கு ஆதரவாக மனோகனேசன், சம்பந்தர், விக்கினேஸ்வரன், சுமந்திரன் எல்லோரும் கருத்து வைக்கிறார்கள். இதில் சுமந்திரனை தவிர மற்ற்வர்கள் தம்மல் அமோக ஆதரவை மக்களிடம் இருந்து பெற்றுக்காட்டி தமது கருத்துகள் மக்களால் ஏற்றுகொள்ள்பட்டவையாக நிரூபித்து இருக்கிறார்கள். எனவே இந்த வசனம் பொருள் இல்லாதது. 

 

நஜிப் மஜீத்தை தமிழ மக்களோ தமிழ் அரசியல் தலைவர்களோ எற்றுக்கொள்ள போகும் சந்தர்ப்பம் எள்ளவும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வெளியே... வந்த பின்,
அவரிடம்... கைது அனுபவத்தைப் பற்றி, ஒரு நீண்ட கட்டுரை எழுத யாழ் உறவுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

கவிஞர் வெளியே... வந்த பின்,

அவரிடம்... கைது அனுபவத்தைப் பற்றி, ஒரு நீண்ட கட்டுரை எழுத யாழ் உறவுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

 

அத்தோடு சின்ன சின்ன பொய்களையும் சேர்க்க அனுமதிக்க வேண்டும். :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

பொயட் உடன் சில கருத்து முரண்கள் இருந்தாலும், அவர் எவ்விதக் கெடுதல்களும் இல்லாமல் விடுதலையாக வேண்டும் என விரும்புகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்தாளர்களுக்குள் சில வெளியே தெரியாத இரகசியங்கள் இருக்கலாம் அதை மறைக்க சிலர் மாற்றுக்கருத்து முகமூடி போடுவதுண்டு,இந்த கைது அப்படியிருக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்தாளர்களுக்குள் சில வெளியே தெரியாத இரகசியங்கள் இருக்கலாம் அதை மறைக்க சிலர் மாற்றுக்கருத்து முகமூடி போடுவதுண்டு,இந்த கைது அப்படியிருக்கக்கூடாது.

 

"ஊருக்கு சாத்திரம் சொல்லும் பல்லி தான், கூழ்ப் பானைக்குள்ளை விழுமாம்..."

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக வெளிநாட்டவர்கள் செய்யும் அஜாரங்களால் தான் மாற்றுக்கட்சியினர் எழுச்சி அடைகின்றார்கள்.  
    • மலிவான இன்பம் என்பது அந்த நாட்டிற்கு அபகீர்த்தியை தான் தரும். இந்த மலிவான இன்பம் அனுபவிப்பவர்கள் அடுத்த மலிவு வரை தான் இங்கே குலாவுவார்கள். இதுவரை கியூபா, பாங்கொக்,  தாய்லாந்து என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும் ...
    • முன்னுக்கு நீங்கள் எத்தனை  0.  உம். போடலாம்    தடையில்லை    பெறுமதியும்.  மாறப்போவதில்லை     ஆனால் பின்னுக்கு.  போட முடியாது   போடவும் கூடாது      0.  அதிகூடிய   பெறுமதியுள்ள.  இலக்கம்  🤣
    • பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்).  1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)  ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)  இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )  இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம்  20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)  ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) -தமிழரசு கட்சி(3) 28) வன்னி - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ( 1) 29) மட்டக்களப்பு - தமிழரசு கட்சி(2) 30)திருமலை- ஐக்கிய மக்கள் சக்தி(3) 31)அம்பாறை - தேசிய மக்கள் சக்தி( 3)  32)நுவரெலியா - ஐக்கிய மக்கள் சக்தி( 4) 33)அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி (5) 34)கொழும்பு - தேசிய மக்கள் சக்தி(11) 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் - தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி - தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசு கட்சி 42) மன்னர் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு - தமிழரசு கட்சி 44) வவுனியா -  தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு -  தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசு கட்சி 47) திருகோணமலை  - ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி   49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி  51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 1 54)தமிழரசு கட்சி - 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) - 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) -  5 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 115 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 20  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.