Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறீலங்கா அரசு நினைக்குது.. உலகம் இன்னும் தன் கைக்குள்ளைன்னு. உலகம்.. இப்ப குக்கிராமம். நாங்க சொல்ல நினைக்கிறதை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்க்க பல வழிமுறை வந்தாச்சு. நோட்டீஸ் ஒட்டி கூட்டம் போட்டுத்தான் அதனைச் சொல்லனும் என்ற நிலை இன்றில்லை. அந்த வகையில்... சிறீலங்கா தமிழ் மக்களை முன்னைய காலங்கள் போன்று ஏமாற்ற ஏலாது. ஏமாற்றவும் முடியாது. அந்த அரசியல் மலையேறிட்டுது. அப்படி ஒரு கணக்கை இன்னும் வைச்சிருந்தா.. அதனை முடிக்கச் சொல்லுறது தான் நல்லம்.

 

இன்றைக்குள்ள பிரச்சனை.. சிங்களத்திடம் உள்ள சீன சார்பு தான். அதற்கான பிரதிபலனை.. கமரூன்.. தமிழர்களோடு மொட்டைமாடியில் நின்று ஒரு சிம்பாளிக்கா காட்டிட்டு வந்திட்டார். அது வெறும் காட்சி அல்ல. அறிவிப்பு. ஆக.. எந்தச் சீனாவை வைச்சு இவ்வளவு காலகமும் சதுரங்கத்தை தனக்கு சாதகமா ஆக்கிச்சோ அதே சீனாவால.. வரப்போற நெருக்கடிகளுக்கும் சிறீலங்கா முகம் கொடுக்கனும். ஆனால்.. இது சதுரங்கம். தமிழர்கள் தாறுமாறா காய் நகர்த்தி.. ஆட்டத்தை மோசமா ஆடினா.. கமரூன் நாளை கொழும்பில் போய் நிற்கவும் வாய்ப்பு வரலாம். எல்லாம் எங்கள் காய் நகர்த்தலில் தான் உள்ளது.சீனாவோடும்.. இந்த வேளையில் தமிழர்கள் பேரம் பேச வேண்டும். கடந்த காலம் போல.. சீனாவை ஒதுக்கி வைக்கிறது தமிழர்களுக்கு நல்லதல்ல.

 

இந்த சதுரங்கத்தில்.. இவர்கள் எல்லாம் சுண்டக்காய்கள்.கோத்தா எறிஞ்சு பிடிச்சு விளையாடுறார். நாங்கள் விடுப்புப் பார்க்கிறம். சுண்டக்காய் தானாப் போய் கோத்தா கையில சிக்கிட்டுது. அவ்வளவும் தான். இது தான் யதார்த்தம். இதுவரை கூட்டமைப்பு இவர் கைது.. விடுதலை பற்றி ஒன்றுமே சொல்லேல்ல. கூட்டமைப்பு மட்டுமல்ல.. தமிழ் தேசிய சக்திகள் ஒன்றுமே சொல்லேல்ல. அதில் இருந்து விளங்கிக் கொள்ளனும். இது மாற்றுக்கருத்துப் பாசறைகளின் கூடாரத்துக்கு கோத்தா அடிச்ச ஆட்லறி மட்டுமே. அடிச்ச ஆட்லறிக்கு பயந்து கோத்தா கையில உள்ள என்ன புரஜெக்டோட வெளில வருனமோ யார் அறிவார். அந்த வகையில் எனி இந்தச் சுண்டக்காய்கள் தொடர்பில் இரட்டிப்பு அவதானம் அவசியம்.  :icon_idea:

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

Posted

தடுப்பு முகாமில் தன்னை எவ்வித அசௌகரியமும் இன்றி கண்ணியமாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடாத்தினார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனிடம்  கவிஞர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

 

கவிஞர் ஜெயபாலன் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 9.20 மணிக்கு புறப்படும் விமானத்தில் துருக்கி வழியாக பயணமாகி நாளை முற்பகல் 27.11.2013 நோர்வே சென்றடைவார் என பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எச்.எச்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் ஜெயபாலன் கைதும் மரபு சார் எழுத்துலக வக்கிரங்களும்…

சிவாசின்னப்பொடி

 

jeyapalan-new.jpg?w=630

 

தோழர் ஜெயபாலன் கைது செய்யப்பட்ட விடயம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசப்படு பொருளாக இருக்கிறது.

ஏற்கனவே ஈழத்துக்கு சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் தோழர் ஜெயபாலனுக்கு இருக்கும் கவிஞர் நடிகர் என்ற ஊடக வெளிச்சம் அவரது கைதுக்கு அதிக ஒளியை பாச்சியிருக்கிறது.

தோழர் ஜெயபாலனின் கைது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் யாழ் மையவாத கருத்து கந்தசாமிகள் ….

ஓட்டுக் குழு உறுப்பினன்

ரோ ஏஜண்ட்

சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி….

 

ஏன்றெல்லாம் தங்களது வழமையான கருத்தியல் வறுமையின் பாற்பாட்ட சேறடிப்புக்களை செய்திருக்கின்றனர்-செய்தும் வருகின்றனர்.

ஜெயபாலனின் கைது ஒரு நாடகமாக ஏன் இருக்கக் கூடாது? என்றும்

கைது செய்யப்பட்டவரை தொலைபேசியில் பேச அனுமதித்தது? எப்படி என்றும் இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

முகநூலில் தாயகம் செல்லப் போகிறேன் என்று ஜெயபாலன் அறிவித்துவிட்டு சென்றதன் மூலம் தன்னை அவர் விளம்பர படுத்த முயன்றிருக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

 

ஆனால் இவர்கள் எல்லோருமே ஜெயபாலனின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் குறைபாடுகளுக்கு அப்பால் அவரது கைதின் மூலம் மகிந்த அரசாங்கம் தமிழர் பேசும் மக்களுக்கு சொல்ல வந்த செய்தியை கவனிக்க மறந்துவிட்டனர்.அல்லது அதை கவனித்தும் அது மக்களைச் சென்றடையக் கூடாது என்று திட்டமிட்டு மறைக்கின்றனர்.

யாழ்ப்பாணம் சென்ற ஜெயபாலன் அங்கு மீள் குடியேறியுள்ள முசுலீம் தலைவர்களை சந்தித்து தமிழ் முசுலீம் ஒற்றுமை பற்றியும் முசுலீம்களின் பாதுகாப்பு தமிழர்களுடன் ஒன்றுபட்ட இருப்பதிலே தான் தங்கியிருக்கிறது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.இதைத் தான் அவர் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்திருக்கிறார்.தற்போது முசுலீம்களுக்கு எதிராக பௌத்த சிங்கள பேரினவாதிகள் தாக்குதலை தொடுத்திருக்கும் நிலையில் தமிழர்களையும் மோதவைத்து பிளவுபடுத்தி அதன் மூலம் தமிழின அழிப்பையும் தாயக சிதைப்பையும் மேற்கொண்ட வந்த சிறீலங்கா ஆட்சியாளர்களும் ஜெயபாலன் முகமறிந்த ஒரு நடிகானாக வந்து தமிழ் முசுலீம் ஒன்றுமை பற்றி பேசியது பயத்தை உண்டாக்கியது.

 

தோழர் ஜெயபாலனின் நடிகன் கவிஞன் என்ற ஊடக விளம்பரத்தை வைத்தே தமிழ் பேசும் மக்களுக்கு ‘எவராவது தமிழ் முசுலீம் ஒன்றுமைக்கு முயற்சி எடுத்தால் அல்லது அது பற்றிப் பேசினால் அவர்கள் கடத்தப்படுவார்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கை செய்தியை மகிந்தவும் கோத்தபாயவும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் செய்தி உலகளவில் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் அவரை தொலை பேசியில் பேச அனுமதித்திருக்கிறார்கள்.

 

இதை விட தோழர் ஜெயபாலனின் கைது இன்னொரு செய்தியையும் புலம் பெயர்ந்த தமிழருக்கு உணர்த்தியிருக்கிறது.

அதாவது அங்கே இப்போது சமாதானம் சகவாழ்வு வந்துவிட்டதாக கூறிக்கொண்டு இங்கேயிருந்து செல்லும் பலர் காணிவாங்குவது கட்டிடம் கட்டுவது முதலீடு செய்வது என்று மறைமுகமாக சிறீலங்கா பௌத்த சிங்கள பேரினவாத அரசின் பொருளாதார இருப்புக்கு துணை புரிந்துகொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பெரும் தமிழ் நிறுவனங்கள் சிலவும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உவுகிறோம் என்ற கறிவேப்பிலை காரணங்களை சொல்லிக்கொண்டு திரை மறைவில் மகிந்த அன் கொம்பனியுடன் பெரும் வணிக ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன.

ஆனால் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சொத்துக்கள் முதலீடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது சமாதனம் சகவாழ்வுக்கு இடையூறானது என்று கையகப்படுத்தப்படலாம் நீங்களும் கைகழுவிவிடப்படலாம் கைது செய்யப்படலாம் அல்லது நாடுகடத்தப்படலாம் என்பதே அந்த செய்தியாகும்.

 

இவற்றை முதன்படுத்துவதை விடுத்து—

ஜெயபாலன்

ஓட்டுக் குழு உறுப்பினன்;….

ரோ ஏஜண்ட்…

சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி…

என்று சேறடிப்பதன் முலம் இந்த கருத்து கந்தசாமிகள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்? யாரை காப்பாற்ற விரும்புகிறார்கள்

 

 

http://sivasinnapodi.wordpress.com/2013/11/26/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரியவர் நாடு திரும்பி விளக்கம் கொடுக்க முதலே சின்னவர் விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். உண்மையில்.. இவர்கள்.. தமிழ் -  முஸ்லீம் மக்களிடையே சிங்களம் தூண்டிவிட்ட.. முரண்பாடுகளில் குளிர்காய்ந்து அரசியல் செய்ய முனைகிறார்கள் போலவே தெரிகிறது. முஸ்லீம் காங்கிரஸின் தோற்றம் வளர்ச்சி கூட இந்த முரண்பாட்டுத் தளத்தை வலுப்படுத்தி உருவான ஒன்று. அதனால் தமிழ் - முஸ்லீம் நெருக்கடியை சிக்கலாக்கி அதில் ஆதாயம் தேடியவர்களில் அஷ்ரப்.. ஹிஸ்புல்லா.. ஹக்கீம் போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

 

தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே இருக்கும் பிரச்சனையை ஓரிரு வால்பிடிகள் தீர்க்க முடியுமுன்னா அதனை எப்பவோ தீர்த்திருக்கலாம். அதன் கருவூலம்.. ஆதி மூலம் தெரியாமல்.. இவ்வளவு காலம் இருந்த.. சின்னவர் இப்ப... அளிக்கும் விளக்கமோ செமக் காமடி.!

 

இவர் இப்ப கண்டுபிடிக்கும் காரணத்தை தான் புலிகள் அன்று சொன்னார்கள். தமிழ் - முஸ்லீம் மக்களிடையே பிரேமதாச அரசு சீண்டு முடிகிறது. கிழக்கில் இரு இனங்களிடையேயும்..இன விரோதத்தை வளர்க்கிறது. அதனை வடக்கிலும் பரவ அனுமதிக்க முடியாது. வடக்கிலும் கிழக்குப் போல சில கைக்கூலிகளை வைச்சு அரசு தமிழ் முஸ்லீம் விரோதத்தை வளர்க்க முனைகிறது. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வாக முஸ்லீம் மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு நகர்வதன் மூலம் சிங்கள அரசின் திட்டத்தை முறியடிப்பதோடு சரியான காலம் கனியும் போது மீண்டும் அவர்களின் வாழ்விடம் நோக்கித் திரும்பலாம். அவர்களின் அசையும் அசையாத சொத்துக்களுக்கு புலிகள் பொறுப்பு என்று தான் அன்று அறிவிப்புத் தரப்பட்டது.

 

அதை பெரியவர் இவ்வளவு காலமும் தனக்கு வசதியா மாற்றி உருமாற்றி சோடிச்சு பேசி.. தன்னை.. இரண்டு இனங்களிடையேயும் இயற்கையாக உருவான பகையை போக்கும் இரட்சகர் போல.. காட்டி வந்தார். பிரச்சனைக்குரிய காரணிகளை இனங்காணவோ.. சுட்டிக்காட்டவோ.. நீக்கவோ முற்படல்ல. இப்ப கூட அதை அவர் செய்யல்ல. இப்ப புதிசா கோத்தா தான் இப்படிச் செய்வது போல.. சின்னவர் செம விளக்கம் அளிக்கிறார்.

 

கோத்தா.. செய்வது பிரேமதாச அரசின் கொள்கைத் தொடர்ச்சியையே. அதனை புலிகள் கையாண்ட போது விளங்கி அதற்கு ஒத்துழைத்து இரு இனங்களும் நடந்திருந்தால்.. உவர் பெரியவர் போன்ற இரட்சகர்கள்.. என்று.. தம்மை காட்டிக் கொள்வோர் மக்கள் முன் உருவாகி இருக்க முடியாது. ஆனால் அன்று புலிகள் நல்லெண்ண அடிப்படையில் எடுத்த ஓர் நகர்வை மோசமாக விபரிச்சு.. அதில் ஆதாயம் தேடிக் கொண்ட நபர்களில் பொயட்டும் ஒருவர். அதனை எந்தச் சின்னவர் பெரியவர் வந்தாலும் மறுக்க முடியாது. பொயட் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாக இது விடயத்தில் நடந்து கொண்டதுமல்ல.. அதனைக் காட்டியே புலிகளை எதிர்மறையாக.. விமர்ச்சித்து இந்தியா மற்றும் பிற தமிழ் தேசிய எதிர்ப்புக் கூடாரத்தில் தனக்கென்று ஒரு அணிசேரா.. முகமூடியை உருவாக்கி அணிந்து கொண்டு.. அதில் பிழைத்துக் கொண்டு வருகிறார்.

 

அதனையே தொடர்ந்து கொண்டும் இருக்கிறார். அதுதான் அவர் மீதான மக்களின் வெறுப்புக்குக் காரணம். ஒரு கலைஞன் என்பதற்கு அப்பால் அவர் மக்களால் வெறுக்கப்பட இது தான் முக்கிய காரணம்.

Posted

தோழர் ஜெயபாலன் கைதும் மரபு சார் எழுத்துலக வக்கிரங்களும்…

சிவாசின்னப்பொடி

 

 

 

 கவிஞர் நடிகர் என்ற ஊடக வெளிச்சம் அவரது கைதுக்கு அதிக ஒளியை பாச்சியிருக்கிறது.

தோழர் ஜெயபாலனின் கைது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் யாழ் மையவாத கருத்து கந்தசாமிகள் ….

ஓட்டுக் குழு உறுப்பினன்

ரோ ஏஜண்ட்

சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி….

 

ஏன்றெல்லாம் தங்களது வழமையான கருத்தியல் வறுமையின் பாற்பாட்ட சேறடிப்புக்களை செய்திருக்கின்றனர்-செய்தும் வருகின்றனர்.

உண்மையான சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகள் மையவாதிகளே ! அதற்கு அடுத்த கட்டமாகவே எவரும் யாருக்கும் அடிவருடிகளாக இருக்கமுடியும்.

 

மையவாதம் எப்போதும் பேரினவாதக் கனவுகளை நனவாக்கும்.

 

இஸ்லாமியத்தமிழர்களும் ஏனையவர்களும் பிளவுபடவேணும் என்று பேரினவாதம் நினைக்கும் போது மையவாதம் அதை நிறைவேற்றும் பாதையிலேயே சென்றது இன்னும் செல்லும்.

 

தமிழர்கள் சிதிலமாக சிதைவுடவேண்டும் என்று பேரினவாதம் நினைக்கும் போது சாதியாக மதமாக பிரதேசவாதமாக வர்க்கமாக தனிமனித காழ்ப்புணர்வுகளாக குரோத விரோதங்களை வளர்த்து பேரினவாதக் கனவை நனவாக்குவதே வரலாறு கண்ட மையவாதச் செயற்பாடாக இருக்கின்றது. - இவை மிகக் தெளிவாக தெரிந்தே நடைபெறுகின்றது என்பது வெளிப்படையான உண்மை.

 

எப்போதும் சொல்வதுபோல் மையவாதமும் பேரினவாதமும் கூட்டாளிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Posted

மையவாதம் என்றால் என்ன? மதில்மேல் பூனை நிலை எடுப்பதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயபாலன் “TK731 Turkis” என்ற விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டார்:-

 

நோர்வே பிரஜையும் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் இலங்கை நேரம் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் நாடுகடத்தப்பட்டார்.

வீஸா விதிமுறைகளை மீறியமை தொடர்பில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு 9.20 மணிக்கு துருக்கி ஊடாக அவர் நோர்வேக்கு நடு கடத்தப் பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா  தெரிவித்துள்ளார்.

 

'வுமு731 வுரசமளை'  என்ற விமானம் மூலம் அவர் துருக்கி நோக்கி அனுப்பப்பட்டதுடன் அங்கிருந்து நோர்வேக்கு அவர் நாடு கடத்தப் படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சென்று சுற்றுலா விஸா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று ஜெயபாலன் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

வவுனியா,  மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைதுச் எய்யப்பட்டிருந்தார்.

 

இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை முதல் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட ஜெயபாலன் குடிவரவு குடியகல்வு அதிகாரிகரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அந்த விசாரணைகளில் ஜெயபாலன் வீஸா விதிமுறைகளை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டியதுடன் அதனை அடுத்தே அவரை நாடுகடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

ஜெயபாலனை ஞாயிரன்று நோர்வே தூதரக அதிகாரிகளும் சந்தித்திருந்தனர். இன்னிலையிலேயே இந்த நாடுகத்தல் இடம்பெற்றுள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99536/language/ta-IN/article.aspx

Posted

கவிஞர் ஜெயபாலன் பத்திரமாக திரும்பிவர வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை ,

ஜெயபாலனின் கைதின் மூலம் ,

இலங்கை அரசு ஒரு செய்தியை சொல்லுகின்றது ,

கவிஞரில் கரிசனை உள்ளவர்கள் ஒரு கதை சொல்லுகின்றார்கள் ,

பிடிக்காதவர்கள் சயிக்கிள் கப் இல் விமானம் ஓட்டுகினார்கள்,

ஒரு பொதுமகனாக இலங்கை அரசின் முகத்தை கிழிப்பதை விட எமக்கான தேவைகளும் இவர் யார் என்பதும் தான் முன்னிலை வகிக்கின்றது .

 

இவை எல்லாவற்றையும் விட பல விடயங்கள் ஜெயபாலனுக்கு மட்டுமே உரித்தானவை ,அவர் அப்படித்தான் .

 

Posted

பெரியவர் நாடு திரும்பி விளக்கம் கொடுக்க முதலே சின்னவர் விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். உண்மையில்.. இவர்கள்.. தமிழ் -  முஸ்லீம் மக்களிடையே சிங்களம் தூண்டிவிட்ட.. முரண்பாடுகளில் குளிர்காய்ந்து அரசியல் செய்ய முனைகிறார்கள் போலவே தெரிகிறது. முஸ்லீம் காங்கிரஸின் தோற்றம் வளர்ச்சி கூட இந்த முரண்பாட்டுத் தளத்தை வலுப்படுத்தி உருவான ஒன்று. அதனால் தமிழ் - முஸ்லீம் நெருக்கடியை சிக்கலாக்கி அதில் ஆதாயம் தேடியவர்களில் அஷ்ரப்.. ஹிஸ்புல்லா.. ஹக்கீம் போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

 

தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே இருக்கும் பிரச்சனையை ஓரிரு வால்பிடிகள் தீர்க்க முடியுமுன்னா அதனை எப்பவோ தீர்த்திருக்கலாம். அதன் கருவூலம்.. ஆதி மூலம் தெரியாமல்.. இவ்வளவு காலம் இருந்த.. சின்னவர் இப்ப... அளிக்கும் விளக்கமோ செமக் காமடி.!

 

இவர் இப்ப கண்டுபிடிக்கும் காரணத்தை தான் புலிகள் அன்று சொன்னார்கள். தமிழ் - முஸ்லீம் மக்களிடையே பிரேமதாச அரசு சீண்டு முடிகிறது. கிழக்கில் இரு இனங்களிடையேயும்..இன விரோதத்தை வளர்க்கிறது. அதனை வடக்கிலும் பரவ அனுமதிக்க முடியாது. வடக்கிலும் கிழக்குப் போல சில கைக்கூலிகளை வைச்சு அரசு தமிழ் முஸ்லீம் விரோதத்தை வளர்க்க முனைகிறது. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வாக முஸ்லீம் மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு நகர்வதன் மூலம் சிங்கள அரசின் திட்டத்தை முறியடிப்பதோடு சரியான காலம் கனியும் போது மீண்டும் அவர்களின் வாழ்விடம் நோக்கித் திரும்பலாம். அவர்களின் அசையும் அசையாத சொத்துக்களுக்கு புலிகள் பொறுப்பு என்று தான் அன்று அறிவிப்புத் தரப்பட்டது.

 

அதை பெரியவர் இவ்வளவு காலமும் தனக்கு வசதியா மாற்றி உருமாற்றி சோடிச்சு பேசி.. தன்னை.. இரண்டு இனங்களிடையேயும் இயற்கையாக உருவான பகையை போக்கும் இரட்சகர் போல.. காட்டி வந்தார். பிரச்சனைக்குரிய காரணிகளை இனங்காணவோ.. சுட்டிக்காட்டவோ.. நீக்கவோ முற்படல்ல. இப்ப கூட அதை அவர் செய்யல்ல. இப்ப புதிசா கோத்தா தான் இப்படிச் செய்வது போல.. சின்னவர் செம விளக்கம் அளிக்கிறார்.

 

கோத்தா.. செய்வது பிரேமதாச அரசின் கொள்கைத் தொடர்ச்சியையே. அதனை புலிகள் கையாண்ட போது விளங்கி அதற்கு ஒத்துழைத்து இரு இனங்களும் நடந்திருந்தால்.. உவர் பெரியவர் போன்ற இரட்சகர்கள்.. என்று.. தம்மை காட்டிக் கொள்வோர் மக்கள் முன் உருவாகி இருக்க முடியாது. ஆனால் அன்று புலிகள் நல்லெண்ண அடிப்படையில் எடுத்த ஓர் நகர்வை மோசமாக விபரிச்சு.. அதில் ஆதாயம் தேடிக் கொண்ட நபர்களில் பொயட்டும் ஒருவர். அதனை எந்தச் சின்னவர் பெரியவர் வந்தாலும் மறுக்க முடியாது. பொயட் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாக இது விடயத்தில் நடந்து கொண்டதுமல்ல.. அதனைக் காட்டியே புலிகளை எதிர்மறையாக.. விமர்ச்சித்து இந்தியா மற்றும் பிற தமிழ் தேசிய எதிர்ப்புக் கூடாரத்தில் தனக்கென்று ஒரு அணிசேரா.. முகமூடியை உருவாக்கி அணிந்து கொண்டு.. அதில் பிழைத்துக் கொண்டு வருகிறார்.

 

அதனையே தொடர்ந்து கொண்டும் இருக்கிறார். அதுதான் அவர் மீதான மக்களின் வெறுப்புக்குக் காரணம். ஒரு கலைஞன் என்பதற்கு அப்பால் அவர் மக்களால் வெறுக்கப்பட இது தான் முக்கிய காரணம்.

நான் இதுவரை இந்த திரியில் எழுதவில்லை.நான் எனது வலைப்பதிவில் எழுதியதை இங்கே சிலர் பதிவிட்டிருக்கிறார்கள்.இவன் ஆர் எழுதுவதற்கு?
சின்னவன் பெரியவன் என்ற காழ்புணர்ச்சி இல்லாமல் நேர்மையோடு நான் எழுதியை படித்தால் நான் சொல்ல வந்த விடயம் தெளிவாகப் புரியும்.
நான் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் அங்கே என்ன நடந்தது என்ற பலவேறு தரப்பிலும் தகவல் சேகரித்து சமவ்பங்களை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் தான் என்னுடைய வலைப்பதிவில் எனது கருத்தை எழுதினேன்.
ஜெயபாலன் மட்டுமல்ல இன்னொரு எக்சோ வையோ போய் தமிழ் முசுலிம் ஒன்றுமை பற்றிப் பேசினால் இதுதான் நடக்கும்.
 
ஜெயபாலன் கைது அல்லது கடத்தப்பட்டார் என்ற செய்தியின் மூலம் அவருக்கு விளம்பரம் கிடைத்தாக சொல்லிக் கொண்டாலும் ஒரு கவிஞனை கடத்தினார்கள். கருத்துச் சொன்னதற்காக கைது செய்தார்கள் அங்கே சனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் கிடையாது என்று எல்லைகளற்ற ஊடகர் அமைப்பு, கருத்துச்சுதந்;திரத்துக்கான அனைத்தலக அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றன.
 
ஜெயபாலன் நல்லவரா கெட்டவரா சுயவிளம்பரம் தேடுபவரா என்பதற்கு அப்பால் அங்கே இயல்பு நிலை திரும்பிவிட்டது சிங்ப்பூர்மாதிரி வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு சுற்றுலா சென்று மகிந்த அரசின் பொருளதார சுமையை குறைப்பவர்களுக்கு அங்கே போனால் கைது செய்யப்படுவிர்கள்.கடத்தப்படுவிர்கள் என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்பட்டிருக்கிறதே.இதைத் தானே சிறீலங்காவை புறங்கணி புறக்கணி என்று நாங்கள் சொல்லக் கொண்டிருக்கிறோம்.
இதைத் தானே நான் எழுதினேன்.இது ஏன் நெடுக்காலபாவான் என்ற பெயரில் எழுதுவபருக்கு குத்தல் குடைச்சலைக் கொடுக்கிறது.
எனக்கு வரும் 12ம் திகதி 59 வயது  ஆகிறது   அவருக்கு    நான் சின்னவன்.
எனக்கு தெரியும் அவர் என்ன அர்த்தத்தில் என்னை சின்னவர் என்று சொன்னார் என்பது.
நான் எழுதிய கருத்து தவறு என்றால் சிவா சின்னப்பொடி எழுதினது பிழை.இது தான் உண்மை.இது இ;ப்படித்தான் இருக்கவேண்டும்.என்று வெளிப்படையாக எழுதுவது தானே ஆக்கபூர்வமான விமர்சனம். 
தமிழ் முஸ்லீம் முரண்பாட்டின் சூத்திரதாரிகள் அமிர்தலிங்கமும். இராஜதுரையுமே.
செல்வநாயகத்தக்குப் பின்  தமிழரசுக்கட்சிக்கு தலைமை தாங்குவதில் 
அமிர்தலிங்கத்துக்கும் இராஜதுரைக்கும் பனிப் போர் நடந்தது.அஷ;ரப் அப்போது தீவிரமான தமிரசுக்கட்சி செயற்பாட்டாளர்.
இராஜதுரையை மட்டம் தட்ட அஷ;ரப்பை அமிர்தலிங்கம் தூக்கிப்பிடிக்க கிழக்கில் தனக்கு போட்டியாக அஷ;ரப்பை வந்துவிடக் கூடாது என்பதற்காக இராஜதுரை அவரை மட்டம் தட்ட இந்த அரசியல் சதுரங்க விளையாட்டு இரண்டு சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக பர்ணிமித்தது.சிறீமா அரசாங்கம் அதற்கு தூபம் போட்டு வளர்த்தது.
எப்படி அமிர்தலிங்கம் இயங்கங்கள் தன்னை மிஞ்சி வளரக் கூடாது என்று  வடக்கில் காய் நகர்த்தினாரோ அதே வேலையைத்தான் கிழக்கில் அரசியலில் செய்தார்
 
இறுதியாக எனது பதிவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு ........
 
(ஜெயபாலன்
ஓட்டுக் குழு உறுப்பினன்;….
ரோ ஏஜண்ட்…
சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி…
என்று சேறடிப்பதன் முலம் இந்த கருத்து கந்தசாமிகள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்? யாரை காப்பாற்ற விரும்புகிறார்கள்)
 
நெடுக்காலபோவான் பதிலழித்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.
ஜெயபாலன் மீதான காழ்ப்புணர்ச்சியால் மகிந்த அன் கொம்பனியை அவர் மறைமுகமாக நியாயப்படுத்தியிருக்கிறார்.
Posted

சிவா அண்ணை ..!

 

எனக்கு நீங்கள் சொல்வதில் பூரணமாக உடன் பாடு இருக்கிறது...  ஆனால் உள்ளுக்குள் பலரை போல் கேள்வியும் இன்னும் பதில் இல்லாமல் இருக்கிறது...

 

அதை அவர் திரும்பி வரும் போது அவரிடமே காரசாரமாக கேட்கலாம் எண்று இருந்தேன்... அதை பொதுவாக கேட்கிறேன் திரும்பி வந்து அவர் பதில் அளிக்கட்டும் ... அவரின் மீதான மரியாதையை நிலைத்து வைத்திருக்க எனக்கு இதற்கு பதில் வேண்டும்... !!!

கேள்வி 1

ஊர் அறிந்த அரசியல் செயற்பாட்டாளர், உலகறிந்த கவிஞர் எந்த பாதுகாப்பு முனேற்பாடும் இல்லாது ஏன் இலங்கை போனார்...??? இலங்கையில் இராணுவத்தால் நடந்த நடக்கும் கொடுமைகளை இந்த தமிழ் சர்வதேச ஊடகங்கள் சொன்னவைகளையும் அவர் நம்பவில்லையா...??

இதில் விடுதலை புலிகளின் முன் யோசனையும் தந்திரமும் போதாது எண்ற கவிஞருக்கு இப்படி என்பதை நம்பமுடியாமல் இருக்கிறமையை தவிர்க்க முடியவில்லை...

கேள்வி 2

கைது செய்த பின் கவிஞரின் பேட்டியை கேட்டேன்... தனது கைதை அவர் எதிர்பார்த்து இருந்து இருக்கவில்லை என்பது புலப்பட்டது... இப்போ கேள்வி என்ன எண்றால் புலிகளை விமர்ச்சித்து புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய் வந்த போது புலிகள் கொடுத்த அதே மரியாதையையும் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் தனக்கு தரும் எண்று எதிர்பார்த்தாரா...??

Posted

சிவா அண்ணை ..!

 

எனக்கு நீங்கள் சொல்வதில் பூரணமாக உடன் பாடு இருக்கிறது...  ஆனால் உள்ளுக்குள் பலரை போல் கேள்வியும் இன்னும் பதில் இல்லாமல் இருக்கிறது...

 

அதை அவர் திரும்பி வரும் போது அவரிடமே காரசாரமாக கேட்கலாம் எண்று இருந்தேன்... அதை பொதுவாக கேட்கிறேன் திரும்பி வந்து அவர் பதில் அளிக்கட்டும் ... அவரின் மீதான மரியாதையை நிலைத்து வைத்திருக்க எனக்கு இதற்கு பதில் வேண்டும்... !!!

கேள்வி 1

ஊர் அறிந்த அரசியல் செயற்பாட்டாளர், உலகறிந்த கவிஞர் எந்த பாதுகாப்பு முனேற்பாடும் இல்லாது ஏன் இலங்கை போனார்...??? இலங்கையில் இராணுவத்தால் நடந்த நடக்கும் கொடுமைகளை இந்த தமிழ் சர்வதேச ஊடகங்கள் சொன்னவைகளையும் அவர் நம்பவில்லையா...??

இதில் விடுதலை புலிகளின் முன் யோசனையும் தந்திரமும் போதாது எண்ற கவிஞருக்கு இப்படி என்பதை நம்பமுடியாமல் இருக்கிறமையை தவிர்க்க முடியவில்லை...

கேள்வி 2

கைது செய்த பின் கவிஞரின் பேட்டியை கேட்டேன்... தனது கைதை அவர் எதிர்பார்த்து இருந்து இருக்கவில்லை என்பது புலப்பட்டது... இப்போ கேள்வி என்ன எண்றால் புலிகளை விமர்ச்சித்து புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய் வந்த போது புலிகள் கொடுத்த அதே மரியாதையையும் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் தனக்கு தரும் எண்று எதிர்பார்த்தாரா...??

செயபாலனை பற்றி தெரிந்த பலர் இங்கே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.அவர் ஒரு கலகக் காரன்.தான் இருக்கும் இடத்தில்  த னக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் அங்கு அதற்காககத்தி ஆர்ப்பாட்டம் செய்து சண்டை பிடிப்பபார்.இதன மூலமு; அந்தகளத்தை தன் பக்கம் நோக்கி  திரு ப்புவார்.
2004 ல் அவர் வன்னிக்கு வந்த போதும் அங்கிருந்த பேராளிகளுடன் போட்ட  சத்தங்களும் சண்டைகளும் பலருக்கு தெரிந்திருக்கும்புளட்டில் இருந்த போது தலைமையுடன் அவர் போட்ட சண்டைகள் இந்த களத்தில் உள்ள அர்ச்சுன் பொன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.இது அவரது இயல்பான குணாம்சம்;அவரோடு நெருங்கி பழகியவர்கள் இதை அவர் திட்டமிட்டு செய்கிறார். என்று கூறமாட்டார்கள்.இது அவரது பலவீனம் என்று கூடச் சொல்லலாம்.தான் நினைப்பது சரி என்ற இறதிவரை வாதாடுவார்..கத்துவார் கோபிச்சுக் கொண்டு போவார் .பிறகு திரும்பி வருவார்.இது தான் செயபாலன் என்ற மனிதனின் உண்யான பிம்பம்.
இதிலே ஊருக்கு அறிவித்துவிட்டு செல்வதன் மூலம் தன்னுடைய பயணத்தை ஒரு திறpல் பயணமாக்க அவர் விரும்பியிருக்கலாம்.
இதிலே என்னுடைய கேள்வி என்னவென்றால் சிறீலங்கா அரசுக்கு எதிரான பரப்புரைக்கு இந்த கைதை அல்லது நாடுகடத்தலை நாங்கள் பயன்படுத.தவதில் என்ன தவறு என்பது தான்.
Posted

சிவா அண்ணை... 

 

கவிஞர் தனக்கு இருக்கும் இருந்த  அச்சுறுத்தலை மீறி ஊர் போனார் அரசியலமைப்புகளை சந்தித்தார் என்பதுவே போதுமானது அவரின் போர்க்குணத்தையும் துணிவையும்  சொல்ல.... !!!   

 

விமர்சகர்களில் இரண்டு வகை....  புலிகளை விமர்சிப்பவர்களையும் கூட அப்படி வகைப்படுத்தலாம்....   ஒண்று அரசாங்கத்தை அண்டி நிண்டு கொண்டு தங்கள் தரப்பை நியாயப்படுத்த விமர்சிப்பது...  மற்றது   புலிகள் மீது அதிகப்படியான ஈடுபாட்டால்  வருவது...   கவிஞர் புலிகளிடமே போய் புலிகளை விமர்சிக்கும் இரண்டாவது வகை.... !!   அதில் சந்தேகம் கிடையாது... 

 

இலங்கை அரசு  எந்தக்காலத்திலும் கருத்து சுதந்திரத்தையோ தனிமனித சுதந்திரத்தையோ மதிப்பது கிடையாது...  இது அனைவருக்கும் தெரிந்த ஒண்று...   அங்கு சுதந்திரமாக போய் அரசியல் வேலை செய்யலாம் எண்று  கவிஞர் நினைத்து போய் இருந்து இருப்பார் ஆகில் இது அவரின் மிகப்பெரிய தவறு... 

 

இல்லை இணக்க அரசியல் செய்து தமிழ் மக்களுக்கு வேண்டியதை பெற  போய் இருந்து இருப்பார் ஆயின் அவருக்கு இந்த நிலை வந்து இருக்க வாய்ப்பே இல்லை....   

 

இண்டைக்கு கவிஞர் வெளியால் விடப்பட்டதுக்கும் கூட தமிழ் ஊடகங்களே மிகமுக்கிய காரணம்...  கவிஞரின் கைதை செய்தவர்கள் எந்த சீருடையிலும் வரவில்லை என்கிறது தகவல்கள்...   வளக்கமான காணமல் போனோர் பட்டியலில்  போய் இருந்து இருக்க வேண்டியவரை முக்கிய செய்தியாக்கி காப்பாத்திய அனைத்து ஊடகங்களுக்கும் முதலில்  நண்றி... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொயட்டே விரும்பவில்லை.. தன் கைதை சிறீலங்கா அரசிற்கு எதிராக பாவிக்க. அந்த வகையில் தான் அவரது செயற்பாடுகள் இருந்தன. நான்.. ஹக்கீமோடு பேசி இருக்கிறேன்.. பசில்லோடு அவர் பேசி இருக்கிறார்.. எல்லாம் நல்லா போய்க்கிட்டு இருக்குது.. நான் இன்ன உயர் அதிகாரியோடு அமைச்சரோடு தொடர்பில் இருக்கிறேன்.. கைதில் இருந்தாலும்.... ஊடக வாயிலாக..வெளி உலகத்தோடு தொடர்பில் இருக்கிறேன்.. எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை.. எவரும்..எந்த அசெளகரியமும் தரவில்லை... இப்படியான வாக்குமூலகங்களை அளித்துக் கொண்டிருக்கும்.. ஒரு கைதின் அடிப்படையில் சிறீலங்கா அரசிற்கு.. எதிராக என்ன பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும் என்பது.. சின்னவருக்கே வெளிச்சம்..! இதனை உதாரணமாகக் காட்டினால்.. சிறீலங்காவில் கைதிகள் மேற்குலக தரத்திற்கும் மிக மேலாக சகல உரிமைகளோடு கையாளப்படுப்பவதாக எல்லோ உலகம் கருதும். மேலும்... விசா விதிகளை மீறிய தமிழர் ஒருவர் மீது கூட.. இவ்வளவு இலகு வழியில் நெகிழ்வோடு.. கண்ணியத்தோடு..சிறிலங்கா அரசு நடந்து கொள்கிறது.. அங்கு என்ன இனத்துவேசம் இருக்கு என்று தான் உலகம் நினைக்குமே தவிர.. இதனை எப்படி சிறீலங்காவிற்கு எதிராக பிரச்சாரப்படுத்த முடியும்..???! இவை உள்ளதைக் கெடுக்கும் நடவடிக்கையாக அமைவதோடு உண்மையான உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான மக்களை பெரிதும்... ஆபத்தான சூழலில் தள்ளிவிடுவதையே செய்யும்..!!!

 

இருந்தாலும்.. இத்தனைக்குள் இருந்தும்.. இந்தக் கைதை வெளியில் இருந்தவர்கள் சிறீலங்கா அரசிற்கு எதிராக பயன்படுத்தத் தவறவில்லை. ஆனால் சின்னவர் அவர்களையும் விடுவதாக இல்லை.

 

ஒரே படத்தில் நடித்து விருது தட்டிச் சென்றது போல.. ஒரே கைதில்.. சிறீலங்காவிற்கு நல்ல விருதை வாங்கியும் கொடுத்திருக்கிறார் பொயட். எல்லாம் நன்மைக்கே..!

 

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை..???!

 

Posted

எனக்குத் தோன்றுவது ஒன்றுதான்.. வன்னிக்குள் போனவரை யாரென்று சரியாக அறியாதவர்கள் பிடித்துவிட்டார்கள். மேலிடத்துக்குச் சொன்னதும், மரியாதையுடன் அனுப்பி வைத்துள்ளார்கள். கவிஞரின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது.. :D

Posted

முதல் அறிக்கை FIRST REPORT

 

https://www.facebook.com/jaya.palan.9

நான் நோர்வே வந்து சேர்ந்திருக்கிறேன். 

நவம்பர் 6ம் திகதி அம்மாவின் நினைவுதினம். நவம்பர் 8ம் திகதி பின்வரும் சேதியை என் முகநூலில் வெளியிட்டேன்.
. ''இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்' 

நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அஞ்சுகிறவனல்ல. அது என் தோழர்களுக்கு தெரியும். 1967ல் சாதிப்போராட்டக் களங்களில் தோழனான புதுவை இரத்தினதுரை என்னை எப்போதும் தேச பக்தனும் கலகக்காரனுமான கவிஞன் என்றே அழைப்பார். 

1984ல் புளொட் இயக்கம் பொட்டம்மானை பட்டுக்கொட்டையில் வைத்துக் கைதுசெய்தபோது நான் முகுந்தனில் அலுவலகத்துக்குள் புகுந்து செய்த கலாட்டாவை அப்போது அங்கிருந்த தோழர் சிவா சின்னப்பொடி அறிவார். கொலைகாரன் டம்பிங் கந்தசாமியிடம் என்னைக் கொல்ல சொல்வதா அல்லது பொட்டம்மானை விடுதலை செய்வதா என முதலில் குழம்பிய முகுந்தன் இறுதியில் பொட்டம்மானை விடும்படி உத்தரவிட்டார். இதை இறுதிவரை பொட்டம்மான் மறக்கவில்லைனிதை நான் அறிந்திருந்தேன்.

1990ல் முஸ்லிம்களை குழப்புகிறேன் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் வைத்து கரிகாலனும், டேவிட்டும் என்னை கடத்தினார்கள். முஸ்லிம் மக்கள் தொடர்பான என் நிலைபாட்டை மாற்றிக்கொள்ள மறுத்தேன். கருணா என்னை வந்து பார்த்தபோது வன்னிக்கு அறிவிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சத்தியம் வாங்கினேன். ஒரிரு நாட்க்களின் பின்னர் கிரான் சுடலைக்கு மண்வெட்டி சகிதம் அழைத்துச் சென்றபோது இறுதி நேரத்தில் பொட்டம்மான் தலையிட்டு என்னை விடுவித்தார். 

கருணா பிரிந்தபோது மட்டக்களப்பு போராளிகளை சுட பிரபாகரனுக்கு மக்கள் ஆணை இல்லை பிரபாகரன் அவர்களை வீடுகளுக்கு போகும்படி சொல்லல்லாம் என அறிக்கை வெளியிட்டேன். குளோபல் செய்தி நடராஜா குருபரன் இந்த அறிக்கையை உடனேயே சூரியன் எவ் பெம்மில் ஒலிபரப்பினார். வீரகேசரி வாரமலரும் அதனை வெளியிட்டது. பின்னர் வன்னிக்கு சென்றபோது உறவினர்களும் நண்பர்களும் செத்தவீடு கொண்டாடினார்கள். எனினும் வன்னியில் எனது நிலைபாட்டை ஏற்றுக்கொண்டார்கள். நானும் அவர்கள் கேட்ட சில உதவிகளைச் செய்தேன். இதுபோலத்தான் நான் இலங்கைக்கு போகும் முடிவையும் சென்ற 8ம் திகதி அன்று எடுத்தேன். தடுத்துவிடுவாள் என்பதால் என் பயணம் பற்றி இறுதிவரை மனைவிக்கும் சொல்லவில்லை. 

நான் இலங்கை வரும் செய்தியை அறிந்து தோழர் தலைவர் ரவ்கக்கீம் என் கடவு சீட்டு இலக்கத்தை கேட்டு பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் சிக்கல் இருக்கவில்லை.
கொழும்பிலிம் யாழிலும் பல நிகழ்வுகளுக்குக்குப் பின்னர் 
22.11.13 மாலை ராணுவம் கைப்பற்றி வைதிருக்கும் எங்கள் குடும்பப் பண்ணையில் உள்ள எங்கள் அம்மாவின் சம்மாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றேன். மறுநாள் காலை முள்ளிவாய்க்கால் செல்ல திட்டமிட்டிருந்தேன்.

புலனாய்வாளர் என் தொடர்புகள் கருத்துக்கள் என்னைச் சந்திப்பவர்கள் மற்றும் என் பயணத்தடங்கள்போன்ற சகலதையும் எனதும் என்னோடு தொடர்புகொள்கிறவர்களதும் மொபைல் போண்கள் மூலம் கண்காணித்து வந்துள்ளனர். 

அம்மாவின் சமாதிக்கு 3 கிலோமீட்டர் முன்னே வன்னிவிழான்குளம் கோவில்முன்றலில் வைத்து இலங்கை பயங்கரவாத தடை பிரிவு (TID) என்னை தடுத்தது. சுற்றுலா விசாவில் குடிவரவு சட்டத்தைமீறி நாட்டுக்கெதிராக செயல்பட்டது இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விழைவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது என குற்றம் சாட்டினார்கள். 
தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி வடகிழக்கு மாகாணங்களில் போராடத்தை ஆரம்பிக்கும் நோக்கம் எனக்கிருக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினார்கள். 

கைதா என கேட்டதற்க்கு தடுப்புக் காவல் என்றார்கள். அதனால் என் தொலைபேசியை அவர்கள் பறிக்கவில்லை. மேலும் என் தொலைபேசிதான் என் தொடர்பு வலைப்பின்னலைக் கண்காணிக்க அவர்களுக்குள்ள ஒரே சாதனமாகவும் இருந்தது. 

நான் உறுதியாக அம்மாவின் சமாதிக்கு போகவேணும் என்றேன். சாத்தியமில்லை என்றார்கள். நான் என் உச்சத்தாயியில் சுடுகிறதென்றால் சுடு கொல்வதென்றால் கொல் அம்மாவின் சமாதிக்கு போகாமல் நான் எங்கும் வரமாட்டேன் என கத்தினேன். நான் எதிர் பார்த்ததுபோலவே சம்பவத்துக்குச் சாட்ச்சியாக என்னை நன்கறிந்த வன்னி விளான்குள மக்கள் வேலிகளுக்கும் வீதிக்கும் வந்துவிட்டார்கள். 

மீண்டும் ரிடிஐ அலுவலர்கள் அம்மாவின் சமாதிக்கு போகமுடியாது என்றார்கள். நான் ஒன்றில் அம்மாவின் சமாதிக்கு போய்விட்டு விசாரணைக்கு வருகிறேன் அல்லது என்னைச் சுட்டுவிட்டு சடலத்தை விசாரணைக்கு எடுத்துச் செலுங்கள் என கத்தினேன். சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போதே வன்னிவிளான்குள மக்கள் நோர்வேயில் வசிக்கும் சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளைக்கு தகவல் சொல்லிவிட்டார்கள். நல்லகாலமாக அவர் உடனேயே குளோபல் தமிழ் குருபரனுக்கு செய்தி கொடுத்துவிட்டார். நான் பசீர் சேகுதாவுத்துக்கு செய்தி சொன்னேன். சேதி உலகெல்லாம் பரவ ஆரம்பித்தது. இதுபற்றி ரிடிஐ அலுவலர்களுக்கும் தகவல் கிடைத்தது. அவர்கள் உறுதி தளர ஆரம்பித்தது. 
இறுதியில் என்னை அம்மாவின் சமாதிக்கு அழைத்துச் செல்ல உடன்பட்டார்கள். முன்னர் இராணுவ முகாமாய் இருந்து தற்போது இராணுவ சிவில் பிரிவின் கட்டுப்பட்டில் இருக்கும் 
என்கள் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்மாவின் சமதியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு குறிப்பில் கற்பூரம் கொழுத்தி வணங்கினேன். பின்னர் என்னை விசாரணைக்காக வவுனியா அழைத்துச் சென்றார்கள்.

வழியில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ரக் வண்டியில் இருந்த என்னுடன் மாங்குளம் பொலிஸ் அதிகாரி முரட்டுதனமாக பேசினார். நானும் அதே பாணியில் பதிலளித்தேன். ஆனாலும் பபயங்கரவாத விசாரணைப் பிடரிவினர் (TID) அவரை என்னுடன் தொடர்ந்துபேச அனுமதிக்கவில்லை.

சுந்தரலிங்கத்துக்கும் குளோபல் தமிழ் செய்தி ஆசிரியர் நடராஜா குருபரனுக்கும் நன்றி. வவுனியா செல்ல முன்னமே என் கைது சர்வதேச செய்தியாகிவிட்டிருந்தது பற்றி TID அலுவலகர்கள் ஆச்சரியமடைந்தார்கள். ஒரிரவு, ஒருகாலைப்பொழுது விசாரணைக்குப் பிறகு கொழும்பில் குடிவரவு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டேன். உடனே விடுதலை சாத்தியமில்லை என தோன்றியது.

முதலில் நெஞ்சுவலியென்றதால் கழுபோவில வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டேன். மறுநாள் அங்குள்ள பொலிசார் எனக்கெதிராக நோயாளிகளை தூண்டி சதி செய்ததார்கள். அதிஸ்ட்டவசமாக அங்குவந்த குடிவரவு துறை அதிகாரி அமித் பெரரோ என்னை அங்கிருந்து குடிவரவு பிரிவின் வெளிநாட்டவர்களுக்கான தடை முகாமுக்கு அழைத்துச் சென்றார். அதனால்தான் இன்று உயிரோடு இருக்கிறேன்.

என் விடுவிப்புக்கு வழி வகுத்த காரணிகள்.
1. அமைச்சக வளமைக்கு மாறாக அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதை வலுவாக்கவேண்டிய நீதி அமைச்சர் ரவ் ஹக்கீம் அரசின் கருத்துக்கு எதிராக நான் குற்றமிழைக்கவில்லை என்ற நிலைபாட்டை துணிச்சலுடன் எடுத்தது.
2. ராஜதந்திர வளமைக்கு மாறாக தோழர் எரிக் சோல்கைம் என்னை நியாயப்படித்தியதும். இலங்கை அரசுக்குச் சவாலாக உறுதியான எச்சரிக்கை விடுத்ததும். இது போர்குற்ற விசாரணை பற்றிய ஐநா மனித உரிமை ஆணையக கூட்டம் இடம்பெறவுள்ள சூழலில் இலங்கைக்கு ஒரு அதிற்ச்சி வைத்தியமாகும். 
3. பசீர் சேகுதாவுத்தின் அயராத ராசதந்திர முன்னெடுப்புகள். தயங்கிய இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் ஜெயபாலனை விடுங்கள் அவன் பொய்சொல்லமாட்டான். பாதுகாவலர்கள் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொய்ப்பிரசாரம் செய்ய மாட்டான் என பசீர் என்னைக் கேட்க்காமலே உத்தரவாதம் கொடுதிருக்கிறான். 
4.நோர்வீஜிய அரசின் உறுதியான நடவடிக்கைகள் 
5.இலங்கை ஒருபோதும் எதிர்பார்க்கத அளவுக்கு சர்வதேச ரீதியாக ஊடகங்களும் கலைஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்னெடுத்த கிளர்ச்சிகள். இதில் விரைந்து செயல்ப்பட்ட குருபரனும் தமிழ உறவுகளும் புலபம்பெயர்ந்த சமிழர்களும் பாசன மற்றும் மஞ்சுள வெடிவர்த்தன தலைமையில் சிங்கள தோழர்களும் முன்னணி வகுத்தார்கள்.
குமரகுருபரன் எனது மருமகன் ரமணன் தமிழக தோழன் டாண் அசோக், தமிழக மற்றும் புலம்பெயர் உறவுகள் பாசன் மஞ்சுள வெடிவர்த்தன போன்ற சிங்கள தோழர்கள். எனது தம்பி பாரதி மக்கள் ஆதி இளவேனில் மனைவி வாசுகி எல்லோருக்கும் என் நன்றிகள். 
விரைவில் விரிவாக எழுதுவேன்.

 

https://www.facebook.com/jaya.palan.9

 

கவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் நாடுகடத்தப்பட்ட பின்னர் வழங்கிய நேர்காணல் - நோர்வே தமிழ் 3 வானொலி (27.11.2013) தொடர்புகளுக்கு: radiotamil3@gmail.com

http://www.youtube.com/watch?v=4dOgJclq0Bk&feature=youtu.be

 

 

நான் எழுத வேன்டிய பலவற்றை எழுத நாளாகும். என்னை சந்தித்த எனக்காக பாடுபட்ட பலரின் பாதுகாப்பு பற்றி முதலில் உறுதி செய்யவேன்டியுள்ளது. அதற்க்கு எனக்கு 2 வாரமாவது வேன்டும். அதன்பின்னர் என்னுடைய 2ம் அறிக்கையை எழுதுவேன். 

 

Posted

என் விடுதலையை விரும்பி கருத்துத் தெரிவித்த அனைத்து யாழ்க்கள தோழ தோழியர்களுக்கும் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.

நன்றி. என்னைக் கொச்சைப் படுத்தியவர்கள்மீதும் வருத்தமில்லை.

 

இனி சில வாரங்களின்பின் யாழ்களத்துக்கு வரும்போது உங்களோடு தொடர்புகொள்வேன். நன்றி  - வ.ஐ.ச.ஜெயபாலன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிஞரை மீண்டும் கண்டது மிகவும் மகிழ்ச்சி! :D

 

ஆனாலும் 'குரைப்பது' அல்லது 'கோபப்படுவது' இரண்டுமே கோழைகளின் செயல் என்பதே எனது கருத்து!

 

ஒரு நாய் கடிக்கும் என அறிந்தும், நானும் திரும்பக் கடிக்கத் தான் போகின்றேன் என்று பிடிவாதம் பிடிப்பது வீரமாகாது!

 

தனது மரணப்படுக்கையிலும், நீங்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, உங்களிடம் சத்தியம் வாங்கிகொண்ட ஒரு தாயின் மனதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்!

 

நீங்கள் நடந்து கொண்ட விதமானது, உங்களைப்பற்றி,அனாவசியமான வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது! 

 

மேலுள்ள உங்கள் அறிக்கையானது போதுமான 'விளக்கத்தை' அளிக்கவில்லை என்றே கருதுகின்றேன்!

 

இது எனது தனிப்பட்ட கருத்தேயாகும்!

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகிழ்ச்சி....poet

Posted

நன்றி புத்தன்.

புங்கையூரானுக்கு. நான் வணிக புலவன் இல்லை. தர்ம கோபம் என் அடையாளம்.

 கோபப்படுவது கோழைத்தனம் என்பது அபத்தமானது.

உலக வரலாற்றின் திருப்பு முனைகள்பல சத்திய ஆவேசங்களில்  தர்ம கோபங்களில் இருந்தே ஆரம்பமாகியுள்ளது.

என்னைக் கைது செய்தவர்களிடம் நான் கோபப்படாமல் கெஞ்சியிருக்கவேண்டும் என்கிறீர்களா?

நான் எதிர்பார்த்ததுபோல என் சத்தம் கேட்டு வீதிக்கு வந்த வன்னிவிளான்குளம் மக்கள் ஆமி மெதுவாய்ப் பேசுது ஜெயபாலன் கோபமாய் கத்திக்கொண்டு நிற்கிறார் என்று நோர்வே நண்பன் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கத்துக்கு சொல்லியிருக்கிறார்கள். அவர்தான் குளோபல் செய்தி ஆசிரியர் நடராசா குருபரனுக்கு உடனே செய்தி கொடுத்தார். நான் எதிர்பார்த்ததுபோலவே சற்றைக்கெல்லாம் என் கைதுச் செய்திகள் எரிக் சொல்கைம் உட்பட எனது சர்வதேச நண்பர்கள் பலரை உலுப்பிவிட்டது.

என்னைக் கைது செய்தவர்களையும் செய்தி பரவிய வேகம்  ஆச்சரியப்படவைத்தது.

என் கைபேசி தலைமை அலுவலகத்தில் இருந்து ஒட்டுக்கேட்க்கும் புலநாய்வுப்பிரிவினரால் கட்டுப்படுத்தப்பட்டது. . அவர்கள் விரும்பியபோது என் தொடர்புகளை அவர்கள் துண்டித்தார்கள்.  

நான் அன்று கோபப்படாமல் மெதுவாக பேசி இருந்தால் இலகுவாகத் தனிமைப் படுத்தப் பட்டிருப்பேன்..

என்னுடைய கோபமும் சத்தியமும் இராசதந்திரமும்தான் என்னைக் காப்பாற்றிது. உங்கள் கூற்று அபத்தமானது நண்பரே.

இனி யாழ்வர இரண்டு வாரங்களுக்கு பிறகுதான் நேரம்கிடைக்கும்.  அப்போது அவசியமானால் மேலதிகமாக எழுதுகிறேன்.

அதுவரை நன்றிகூறி விடைபெறுகிறேன்..

2 வாரங்களின்பின்னர் சந்திக்கிறேன்.

அப்போது உருப்படியான கருத்துக்களுக்கு பதிலளிப்பேன். அவதூறுகளை பொருட்படுத்த மாட்டேன்..

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலையில் ஒரு நல்ல  செய்தி

தோழரைக்கண்டது.

வாழ்க  வளமுடன்.......

Posted

உங்களை மீண்டும் இங்கு காண்பது மிக மகிழ்ச்சி கவிஞர் ஐயா.. அதுக்காக, புங்கை சொன்னதுக்கு புத்தன் பேச்சு வாங்கிறது ரொம்ப ஓவர்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களை மீண்டும் இங்கு காண்பது மிக மகிழ்ச்சி கவிஞர் ஐயா.. அதுக்காக, புங்கை சொன்னதுக்கு புத்தன் பேச்சு வாங்கிறது ரொம்ப ஓவர்.. :D

 

நன்றி புத்தன்.

 

 

புங்கையூரானுக்கு.   நான் வணிக புலவன் இல்லை. தர்ம கோபம் என் அடையாளம்.

 

 

 

நன்றாக  கவனியுங்கள் ராசா... :lol:  :D

Posted

அடடா.. அவர் தணிக்கை செய்தாற்பிறகு பார்க்கவில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் இப்போது எந்தப் பக்கம் நிற்கின்றீர்கள். எங்களின் பக்கமா? அவர்கள் பக்கமா? அதை வைத்துத் தான் ஏதும் சொல்ல முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எரிக்சொல்கைம் யார்..???! புலிகளுக்கு அப்பால் அவர் தமிழ் மக்களுக்கு எந்த வகையில் சொந்தம்..???! புலிகளால் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் சொல்கைம். அந்தச் சொல்கைமின் தயவில் தான்.. இன்று இணக்க அரசியல் செய்யப்புறப்பட்ட ஐயா உயிரோடு வந்திருக்கிறார்.

 

ஹக்கீம்.. சொல்லி 72 மணி நேரமாகியும்.. கோத்தா அசறவேயில்லை. ஆனால் ஹக்கீமிற்கு முதல் வாக்கு..!

 

இப்ப கூட கோத்தாவிற்கு காயப்படாத கல்லெறிகள்.. இது தான் ஹக்கீம்.. சோவுதாவுக் சொல்லி அனுப்பினது..???!

 

ஆனால்.. புலம்பெயர் மக்களின் முன்னெடுப்பில் சர்வதேச விசாரணை என்பது தான் ஐயாவையும் காப்பாற்றி இருக்குது. இந்திய ஊடகங்களுக்கு இந்தியாவை.. சிறீலங்காவை புகழ்ந்தளித்த.. புலிகளை விமர்சித்து அளித்த மோசமான செவ்விகள் அல்ல. மீண்டும் பொட்டம்மான்.. செஞ்சோற்றுக் கடனுக்காக.

 

இந்தச் சம்பவத்தின் பின்னாவது ஐயாவின் மனநிலைகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டால் உண்டு. இன்றேல்.... நாய் வால் கதை தான்.

 

எதுஎப்படியோ சக கள உறவாக ஐயாவை.. மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விநாயகர் ஜோதிட நிலையம் nsdetSporo 133 fi9479df38uabml,021c4e162a0:f9r07l9mée2cu7h3i  ·  சாப்பிட்ட தட்டை கழுவுங்கள் (நீங்கள்) சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுங்கள்.... (உங்கள் உங்கள் பிள்ளைக்கு) இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார். "அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்" என்று சொல்லியும் கேட்பதில்லை. "ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா " என்று கேட்டேன். "இல்ல... இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது". மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்காக எங்க அம்மா கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும். நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை அம்மாவுக்கு குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்... சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்.... மனைவிதான் கழுவி வைப்பாள். அதில ஒரு பெருமை. இதுல என்ன இருக்கோ தெரியாது... முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள். நேரம் கிடைக்கையில் உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,... (வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் முடித்து பார்) என்பது ஒரு பழமொழி.. . இந்த பழமொழியோட உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார். என்றும் சேர்த்து கொள்ளலாம். சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் அது ஒரு பெரிய சுமை.. ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்.... பெண்களின் நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும்... படித்த பதிவு சற்று எனது கருத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளேன். ..ஆம் !மனிதநேயம் மற்றும் சமத்துவம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது........!  👍   கந்த கணேசதாஸக் குருக்கள்
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • ரஸ்யா, ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாகவே அசாத்தின் அரசு கலைக்கப்பட்டது - துருக்கிய வெளிவிவகார அமைச்சர்.  We paved the way': Turkey negotiated fall of Assad with Russia, Iran, Turkish FM says - report https://m.jpost.com/middle-east/article-833382
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.