Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“எனக்கு சினிமா இயக்குவது செக்ஸ் வைத்துக்கொள்வது போல...”: பாலுமகேந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்டு ஆண்டுகள் ஆயிற்று ஒரு படம் இயக்கி... மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 'தலைமுறைகள்’ என்ற படத்தோடு களம் காண இருக்கிறார் பாலுமகேந்திரா. படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார்.

ஒருபுறம் புத்தகங்கள், மறுபுறம் உலக சினிமா டி.வி.டி.கள். பின்னணியில் 'ஓம்’ ரீங்காரம் ஒலிக்க இருவரிடமும் உரையாடியதில் இருந்து...

'' 'உங்களைச் சந்திக்கணுமே சசி’னு சார்கிட்ட இருந்து ஒருநாள் போன் வந்தது. 'நானே வர்றேன் சார்’னு சொன்னேன். 'இல்ல நான் வர்றதுதான் முறை’னு சொன்னவர், கொஞ்ச நேரத்தில் என் அலுவலகம் வந்தார். அப்ப சார் என்னிடம் சொன்ன கதைதான், இந்தத் 'தலைமுறைகள்’. கதை பிடிச்சிருந்தது... 'நானே தயாரிக்கிறேன் சார்’னு சொன்னேன். ரொம்பக் குறைவான பட்ஜெட்ல அழகா பண்ணித் தந்திருக்கிறார். இதுதான் இன்னைக்குத் தேவையான சினிமா!'' என்று உரையாடலைத் தொடங்கிவைக்கிறார் சசி.

''இந்தப் படத்துல சார் நடிச்சிருக்கார். ஆனா, அந்தக் கேரக்டர்ல அவர்தான் நடிக்கப்போறார்னு எனக்குத் தெரியாது. கதை சொல்லி முடிச்ச பிறகு, 'உங்களுக்கு ஒரு விஷயம் காட்டுறேன்’னு சொல்லி ஒரு தாத்தாவின் போட்டோ காட்டினார். 'யார் சார் இவர்? கண்ணு பவர்ஃபுல்லா இருக்கே. உங்களுக்கு இன்னொரு சொக்கலிங்க பாகவதர் கிடைச்சிட்டாரு’னு சொன்னேன். 'நான்தான் இது. அந்தக் கேரக்டர்ல நான்தான் நடிக்கப்போறேன்’னு  சார் சொன்னார்!'' என்று சசிகுமார் முடித்த இடத்தில் இருந்து தொடங்குகிறார் பாலுமகேந்திரா.

''நம் குடும்பங்களின் அடிப்படை உறவுகள்தான் படத்தின் கரு. நம் குடும்பங்களைத் தூக்கிச் சுமந்து கரைசேர்ப்பது நம் பெண்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதை. பெண்கள் மீது எனக்குள்ள ஆராதனை கலந்த மரியாதையும் மதிப்பும் படத்தில் வெளிப்படும்!''

''நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்குகிறீர்கள். ஏதேனும் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?''

''திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர்... இந்த நாலு பேரும்தான் படத்தின் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்தப் படத்தில் அந்த நாலுமே நான்தான். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. என் படத்தை நானே எழுதி, நானே ஒளிப்பதிவு பண்ணி, நானே இயக்கி, நானே எடிட் செய்தால்தான் எனக்குத் திருப்தி. ஒரு படம் எடுப்பது என்பது, எனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணோட செக்ஸ் வெச்சுக்கிற மாதிரி. 'நீ பாதி பண்ணு, நான் பாதி பண்றேன்’னு அதை என்னால் யார்கிட்டயும் பிரிச்சுக் கொடுக்க முடியாது.

ஓர் எழுத்தாளன், 'இது என் சிறுகதை’னு சொல்றான். ஓர் ஓவியன், 'இது என் ஓவியம்’னு சொல்றான். ஆனா, ஒரு சினிமாக்காரன், 'இது என் படம்’னு சொல்ல முடியலை. காரணம், சினிமா இங்கே ஒரு கூட்டுத் தயாரிப்பு. ஆனா, சரியோ தப்போ என் படத்துக்கு நான்தான் பொறுப்பு. 'எ ஃபிலிம் பை பாலுமகேந்திரா’னு போட்டேன்னா, அதை ஒரு திமிரோடதான் போடுவேன்!''

''சினிமா 100 விழாவைப் புறக்கணித்து உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தீர்கள். அந்த நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு ஏதேனும் நன்மை விளைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?''

''கலந்துக்கலைனுதான் சொன்னேனே தவிர, என் ஆதங்கத்தை எங்கேயும் நான் வெளிப்படுத்தலை. அதைப் பத்தி ஏன் என்கிட்ட கேக்குறீங்க? இப்படி சிண்டு முடிந்துவிட்டு கலைஞர்களை சிக்கலில் மாட்டிவிடும் வேலை வேண்டாமே?''

''இது சிண்டு முடிவதற்கான கேள்வி அல்ல. அரசு, மக்களின் வரிப் பணத்தில் இருந்து 10 கோடி ரூபாயை அந்த நிகழ்வுக்கு அளித்திருக்கிறது. அது சினிமாவுக்கு ஆக்கபூர்வமான நன்மைகளை விளைவித்திருக்கிறதா என்று ஒரு சினிமா படைப்பாளியான உங்களிடம் கேட்கிறேன்!''

''அரசைக் கேளுங்கள். அல்லது இந்த மாதிரி கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள். ஆனால், ஒரு விஷயம் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொக்கிஷம்னா, அது பழைய படங்கள்தான். அதோட நெகட்டிவ்களைக் காப்பாத்த, பாதுகாக்க ஒரு காப்பகம் தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவை. இதை மூணு வருஷமா சொல்லிச் சொல்லி தலப்பாடா அடிச்சுட்டு இருக்கேன். ஆனா, அதை யாரும் கண்டுக்கவே இல்லை!''

''இதை ஏன் அரசாங்கம் செய்யணும்னு நினைக்கிறீங்க? சினிமாத் துறையினரே சேர்ந்து செய்யலாமே!''

''செய்யணும்தான்! அதுக்கான முறையையும் சொன்னேன். கேளிக்கை வரி மூலம் அரசாங்கம் வருமானம் ஈட்டுவதால், பாதி பணத்தை அரசாங்கம் போடட்டும். சினிமாத் துறையினர் மீதியைச் செலவழிக்கட்டும். மேற்கொண்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, சினிமாவில் ஆர்வமுள்ள ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் சில சிப்பந்திகள் மட்டுமே போதும். இப்படியான ஒரு காப்பகம் இல்லாமல் நிறைய தமிழ்ப் படங்கள் அழிஞ்சிருக்கு. 'அழியாத கோலங்கள்’, 'வீடு’, 'சந்தியா ராகம்’, 'மூன்றாம் பிறை’, 'மறுபடியும்’ போன்ற என் படங்களின் நெகடிவ்கள் இப்போது இல்லை. அவையெல்லாம் 50 வருடங்களுக்கு முன் வந்த படங்கள் இல்லை. வெறும் 20 வருடங்களுக்குள் வந்த படங்கள். சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள், இந்தப் புள்ளியிலிருந்து தங்கள் பணிகளைத் தொடங்கலாம்!''

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=89739

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணியம் என்றால் என்ன என்று யாரவது சொல்லிக் கொடுக்க வேண்டும் இந்த இலங்கைத் தமிழர் பாலு மகேந்திராவிற்கு.

இவரது வயதுக்கு, இந்த மாதிரி ஒப்பீடு செய்வது, அறுவருப்பினை அல்லவா உண்டாக்குகின்றது.

நல்லா படிக்கும் ஒருவர் இப்படி சொன்னால் (படிப்பது எனக்கு......) எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது இந்த தாத்தாவின் ஒப்பீடும். 

நண்பர்களுடன் கதைப்பது வேறு, மீடியாவில் சொல்வது வேறு என தெரியவில்லையே, இவருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தமிழ் ஆக்களுக்கு தான் இந்த குணம் எதோ வயசு போனால் அதைப்பற்றியே பேச கூடாது என்று Hollywood நடிகர்களை பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தமிழ் ஆக்களுக்கு தான் இந்த குணம் எதோ வயசு போனால் அதைப்பற்றியே பேச கூடாது என்று Hollywood நடிகர்களை பாருங்கள்

ஹொலிவூட் நடிகர்களின் ஆடியன்சே வேற!

கோலிவூட் ஆடியன்ஸ் வேற!

அங்கே எடுப்பது போல் 'முழு நிர்வாண படங்களை' தரவே தமிழ் திரை உலகம் நினைக்க கூட  முடியாது.

இரண்டையும் எப்படி ஒப்பிடமுடியும் சுண்டல்?

நாம் பேசுவதை வைத்து தான் எம்மை மதிப்பார்கள்!.

இவருடைய வாழ்க்கையில் நடிகைகள் சோபா, அர்ச்சனா போன்றவர்களது தொடர்பு எப்படியானது என்று ஊருக்குத் தெரியும்.

இவர் தொடர்ந்து இது போல பேசினால் யார் மதிப்பார்கள்?

ரஜனி, கமல் போன்றவர்கள் இப்படியா அலம்பரை பண்ணுகிறார்கள்?

எங்க, என்ன பேச வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்ற விவஸ்தை தான் கண்ணியம்.

Edited by Nathamuni

கண்ணியம் என்றால் என்ன என்று யாரவது சொல்லிக் கொடுக்க வேண்டும் இந்த இலங்கைத் தமிழர் பாலு மகேந்திராவிற்கு.

இவரது வயதுக்கு, இந்த மாதிரி ஒப்பீடு செய்வது, அறுவருப்பினை அல்லவா உண்டாக்குகின்றது.

நல்லா படிக்கும் ஒருவர் இப்படி சொன்னால் (படிப்பது எனக்கு......) எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது இந்த தாத்தாவின் ஒப்பீடும். 

நண்பர்களுடன் கதைப்பது வேறு, மீடியாவில் சொல்வது வேறு என தெரியவில்லையே, இவருக்கு!

இதில் எந்த தவறும் இல்லை. அவரின் கூற்றை உள்வாங்கிக்கொள்வதில்தான் தவறு இருக்கின்றது.

செக்ஸ் அருவருப்பு என்றால் ஒவ்வொருவரின் பிறப்பும் அருவருப்பாகிவிடும்.

உடற்சேர்க்கையின் விழைவு ஒரு மனிதனின் உருவாக்கமாக இருக்கின்றது. அதுபோல் ஒரு நல்ல படைப்பு இவ்விடத்தில் ஒப்பிடப்படுகின்றது.

சமைப்பதும் செக்ஸ் செய்வது போன்றதாக உணரும்போது நல்ல சுவையான உணவு விழைவாக இருக்கின்றது. விருப்பப் பட்ட ஒரு காரியத்தின் விழைவு நன்றாகவே இருக்கும்.

செக்ஸை பயங்கரவாதம் போல் அணுகி அதற்காக மண்டையில் போட்ட குறுகிய மனப்பான்மை உள்ள சமூகத்துக்கு அந்த வர்த்தையே பிரச்சனைக்குரியதாக இன்னும் இருப்பது ஆச்சரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் என்பதுக்குப் பதிலாக காமம் என்று சொல்லியிருந்தால் இலக்கியம்போல் இருந்திருக்கும்.. :D

அவர் கோயில் தேர் சிற்பங்களிலை பார்த்த அனுபவத்திலை… சினிமாவையும் கலை என்று நினைச்சுச் சொல்லியிருப்பார்!  :)

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்துக்கு செக்ஸை பற்றி கூறியதில் என்ன பிழை? கம்பனின் சுந்தரகாண்டம், வள்ளுவனின் காமத்துப்பால்  கூறாத ஒன்றையா பாலு மகேந்திரா கூறிவிட்டார்??

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்துக்கு செக்ஸை பற்றி கூறியதில் என்ன பிழை? கம்பனின் சுந்தரகாண்டம், வள்ளுவனின் காமத்துப்பால்  கூறாத ஒன்றையா பாலு மகேந்திரா கூறிவிட்டார்??

இங்கு பிரச்சினை  அவரது கருத்து அல்ல

சொல்கின்றவர் யார் என்பது தான்.

பாலுமகேந்திராவால் சிதைக்கப்பட்டவர்கள் மீது உள்ள அனுதாபம் காரணமாக

அவர் இன்னும் மாறவில்லை என்பதை உணர்ந்த பயத்தால் இக்கருத்துக்கள்  வந்திருக்கும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்சு பாலு மகேந்திரா மீது எந்த பாலியல் வல்லுறவு வழக்கும் இல்லையே? ஒரு பெண்ணை மடக்கி அவளை படுக்கை அறை வரை கொண்டு செல்ல பாலுக்கு தெரிந்திருக்கு அங்கெ இருவரும் ஒத்து தான் அதை செய்கின்றார்கள் அது எப்பிடி அவரால் சீரழிக்கப்பட்டது என்று கூறுவீர்கள்?

மற்றும்படி செக்ஸ் பற்றி பேச அதை அனுபவிக்க வயதெல்லாம் ஒரு தடை இல்லை பாலு அதை ரசிக்க தெரிந்தவர் அதை ஒரு வாழ்க்கையின் அங்கமாக பார்ப்பவர் அதை ஒரு கலையாக நோக்குபவர் எல்லாத்தையும் செய்து விட்டு அமசடக்காமாக இதுக்கும் கலைஞர்களை விட வெளிப்படையாக பேசும் பாலுக்கு அந்த தகுதி உண்டு

சுண்டல் நீங்கள் சொல்வது வேறு கோணத்தில்!.
 
நான் சொல்வது வேறு கோணத்தில்!!!
 
செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமையே நமது செல்வம். அந்த தொழிலில் திறமை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது குடும்பம், குழந்தை, குட்டிகளுக்கு சோறு போடுகிறது.
 
தொழிலை தெய்வமாக மதிக்கும் மக்கள் நாம். 
 
நம்மூரில் எல்லாம் விவசாயிகள், காலில் செருப்பு போட்டுக் கொண்டே அவர்கள் விவசாயம் செய்யும் தோட்டத்தில் இறங்கினால், காளி ஆடி உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். வெளிய பொய் செருப்பை கழட்டி வந்த பின்னர்,  பொன் விளையும் பூமி, சோறு போடும் மண், தம்பி கோவியாத! என்று, சமாதானம் சொல்வார்கள். 
 
தனது தொழிலை செய்வது  'செக்ஸ் வைத்துக் கொள்வது போல' என்று இவர் சொல்வதற்க்கு காரணம், பணம் இன்னும் ஒருவரது. அவரது அல்ல. இவரது கருத்தை 'bad taste' என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். அனேகமாக அந்த தயாரிப்பாளர் பின்னடிப்பார் என்று நினைக்கிறேன்.
 
காலையில் கணணியை திறந்தால், அந்தாள் சொன்னதை பார்த்து கோபம் வந்தது. தொழிலில் திறமை இருக்கலாம், அந்த திறமையினை எண்ணி பெருமிதம் கொள்ளலாம், தலைக்கனம் இல்லா அளவுடன்!. 
 
இவர் சொல்வது எந்த வகை?
 
நீங்கள் கணனியில் வேலை செய்கிறீர்கள் என்றால், keyboard ல் டைப் பண்ணுவது, அல்லது கோடிங் எழுதுவது உங்களுக்கு செக்ஸ் வைப்பது போல என்று உங்கள் manager இடம் சொல்ல முடியுமா? அல்லது அப்படி ஒரு எண்ணம் தான் மனதில் வருமா?
 
அப்படி வரும் என்று நேர்மையாக சொல்வீர்கள் ஆனால், நான் எனது வாதத்தினை பின் வாங்கி நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். 
 
இன்னுமொரு தகவல்: அன்று சோபா உயிர் இழந்த விடயத்தில் MGR உதவி இவருக்கு கிடைத்தால் தப்பினார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்துக்கு செக்ஸை பற்றி கூறியதில் என்ன பிழை? கம்பனின் சுந்தரகாண்டம், வள்ளுவனின் காமத்துப்பால்  கூறாத ஒன்றையா பாலு மகேந்திரா கூறிவிட்டார்??

நுனாவிலார், நீங்களே பதிலைக் கூறி விட்டீர்களே!
 
செக்ஸை பற்றி தான் கம்பனின் சுந்தரகாண்டம், வள்ளுவனின் காமத்துப்பால்  சொல்கிறது. 
 
அவ்வாறு கவிதை சொல்வது செக்ஸ் வைப்பது போல என்று அவர்கள் சொல்லவில்லையே!
 
உலகம் கொண்டாடும் கவிஞர்களை, இவருடன் ஒப்பிடுகிறீர்களா?  :icon_mrgreen:  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

இதில் எந்த தவறும் இல்லை. அவரின் கூற்றை உள்வாங்கிக்கொள்வதில்தான் தவறு இருக்கின்றது.

செக்ஸ் அருவருப்பு என்றால் ஒவ்வொருவரின் பிறப்பும் அருவருப்பாகிவிடும்.

உடற்சேர்க்கையின் விழைவு ஒரு மனிதனின் உருவாக்கமாக இருக்கின்றது. அதுபோல் ஒரு நல்ல படைப்பு இவ்விடத்தில் ஒப்பிடப்படுகின்றது.

சமைப்பதும் செக்ஸ் செய்வது போன்றதாக உணரும்போது நல்ல சுவையான உணவு விழைவாக இருக்கின்றது. விருப்பப் பட்ட ஒரு காரியத்தின் விழைவு நன்றாகவே இருக்கும்.

செக்ஸை பயங்கரவாதம் போல் அணுகி அதற்காக மண்டையில் போட்ட குறுகிய மனப்பான்மை உள்ள சமூகத்துக்கு அந்த வர்த்தையே பிரச்சனைக்குரியதாக இன்னும் இருப்பது ஆச்சரியமில்லை.

நுனாவிலாருக்கும், சுண்டலுக்கும் சொன்ன பதிலே உங்களுக்கும்!
 
செக்ஸ் வைப்பது மிகவும் பிடிக்கும் அதே போல படம் எடுப்பதும் பிடிக்கும் என்று சொல்லி இருந்தால் சரியாக இருக்கும்
 
நாமும் நாலு பகிடிகளை ஜாலியாக சொல்லி இருப்போம்.
 
இவர் எதையும், எதையும் முடிச்சுப் போடுகிறார் என்பதை பாருங்கள் என்றே சொன்னேன்!

நுனாவிலார், நீங்களே பதிலைக் கூறி விட்டீர்களே!
 
செக்ஸை பற்றி தான் கம்பனின் சுந்தரகாண்டம், வள்ளுவனின் காமத்துப்பால்  சொல்கிறது. 
 
அவ்வாறு கவிதை சொல்வது செக்ஸ் வைப்பது போல என்று அவர்கள் சொல்லவில்லையே!
 
உலகம் கொண்டாடும் கவிஞர்களை, இவருடன் ஒப்பிடுகிறீர்களா?  :icon_mrgreen:  :icon_mrgreen:

இவரும் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்தானே.. ஒளிப்பதிவாளர்கள் இவரை கொண்டாடுவார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்...

நல்ல படைப்பாளிகளை தலை எடுக்க விட மாட்டார்கள்.

ஆராவது.. மலையாளத்தில் இருந்து, வந்தால்.. கொண்டாடுவார்கள்.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் இறைச்சி சாப்பிடறது தான்!

ஆனால் கொஞ்சப்பேர் தான், எலும்புகளைக் கழுத்தில கட்டிக்கொண்டு திரியிறது!

அதிலை வரும் ஒருவர்! :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹஹஹா எனக்கு பிடிச்சதே இந்த புங்கை அண்ணாவின் உவமான உவமேயங்கள் தான் முடியல்ல :D

சினிமா இயக்குவது எனக்கு 'காம உச்சம்'  தருகிறது என்பது மாதிரி சொல்லியிருந்தால் விமர்சனம் இல்லாது இருந்திருக்கும்.

சீதையின் கண்ணீர் பெருகி, அவள் முலை வழியே வழிந்தோடிய 'வம்பராமாயானத்தை' பாடமாக்கி பரிட்சை எழுதின நமக்கு இது பிரச்னை தந்திருக்காது.

செக்ஸ் என்பதுக்குப் பதிலாக காமம் என்று சொல்லியிருந்தால் இலக்கியம்போல் இருந்திருக்கும்.. :D

இசை யாரு அது இலக்கியா கேப்பில நிங்க சொல்லுற பெண்ணு :D

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா இயக்குவது எனக்கு 'காம உச்சம்'  தருகிறது என்பது மாதிரி சொல்லியிருந்தால் விமர்சனம் இல்லாது இருந்திருக்கும்.

சீதையின் கண்ணீர் பெருகி, அவள் முலை வழியே வழிந்தோடிய 'வம்பராமாயானத்தை' பாடமாக்கி பரிட்சை எழுதின நமக்கு இது பிரச்னை தந்திருக்காது.

கம்பன், இப்பிடியெல்லாம் எழுதியிருக்கிறானா? :o

இதிலிருந்து எனக்கு விளங்குவது என்னவென்றால், சீதை நிச்சயமாகப் படுத்திருந்த படி அழுதிருக்க மாட்டாள்! :D

ஆதாரம்: நியூட்டனின் இரண்டாம் விதி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ...என்ரை கடவுளே!! சனம் இப்ப வரவர நியூட்டன் விதியெல்லாம் போட்டு எழுத வெளிக்கிட்டுது..என்னைப்போலை ஆக்களுக்கு என்ன விளங்கப்போகுது..எங்கைபோய் முடியப்போகுதோ ஈஸ்வரா.. :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்...

நல்ல படைப்பாளிகளை தலை எடுக்க விட மாட்டார்கள்.

ஆராவது.. மலையாளத்தில் இருந்து, வந்தால்.. கொண்டாடுவார்கள்.

நல்ல படைப்பாளிகள், தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுத்து,  திருமண பந்தத்திற்க்கு வெளியான பெண்கள் தொடர்பினால் எல்லாம் இழப்பதற்கு,  இவர் மட்டுமல்ல பல உதாரணங்கள் பல உண்டு.
 
தமிழ் நாடு மட்டுமல்ல, உலகெங்கும் கொடி கட்டிப் பறக்கும் சரவணபவன் ஸ்தாபகர் ராஜகோபால், பெண்கள் தொடர்பினால், கொலை வழக்கில் சிக்கி தண்டனை: இப்போது மேல்முறை ஈடு செய்து வெளியில் உள்ளார்.
 
பிரித்தானியாவின் முன்னால் மன்னர், இன்றைய ராணியின் பெரியப்பா, வேலைக்காரப் பெண்ணுக்காக முடி துறந்து, பிரான்சில் அந்த பெண்ணுடன் வாழ்ந்து மடிந்தார்.
 
முதல் முதலாக, மனித இதயத்தினை இன்னுமொரு மனிதருக்கு பொருத்திய, அதன் மூலம் உலகப் புகழ் அடைந்த, தென் ஆபிரிக்க டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட், இவ்வாறான தவறான தொடர்பால், தொழிலையே விட்டு விலகி பித்துப் பிடித்து மடிந்தார்.
 
எம்மவர் என்று பெருமிதம் கொள்ள வைத்த பாலு மகேந்திரா, சோபா வழக்கில் சிக்கி, இவரது அன்றைய படைப்புத் திறமை காரணமாக MGR உதவி பெற்று தப்பினார்.
 
தனது திறமை எதனால் அழிந்தது அல்லது வீணானது என்ற சிந்தனை இல்லாமல், அதே 'ஊத்தை' சிந்தனையுடன் பேசினால் கோபம் வரும் தானே சிறியர்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இயலாத வயசில் ரெண்டையும் நினைச்சுப்பாக்கவே விடுறியல் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்சு பாலு மகேந்திரா மீது எந்த பாலியல் வல்லுறவு வழக்கும் இல்லையே? ஒரு பெண்ணை மடக்கி அவளை படுக்கை அறை வரை கொண்டு செல்ல பாலுக்கு தெரிந்திருக்கு அங்கெ இருவரும் ஒத்து தான் அதை செய்கின்றார்கள் அது எப்பிடி அவரால் சீரழிக்கப்பட்டது என்று கூறுவீர்கள்?

மற்றும்படி செக்ஸ் பற்றி பேச அதை அனுபவிக்க வயதெல்லாம் ஒரு தடை இல்லை பாலு அதை ரசிக்க தெரிந்தவர் அதை ஒரு வாழ்க்கையின் அங்கமாக பார்ப்பவர் அதை ஒரு கலையாக நோக்குபவர் எல்லாத்தையும் செய்து விட்டு அமசடக்காமாக இதுக்கும் கலைஞர்களை விட வெளிப்படையாக பேசும் பாலுக்கு அந்த தகுதி உண்டு

இவர்  மூலமாக

தேசிய  விருது பெற்ற  ஒரு சிறு பெண் தற்கொலை (கொலை) செய்யப்பட்டார்.

பாலுமகேந்திரா என்றதும் இதுவே  எவருக்கும்   ஞாபகத்துக்கு வரக்கூடியது.

தற்கொலையே (கொலையே)  நடந்தபின்

வல்லுறவு சிறு விடயம். :(

மற்றும்படி

செக்ஸ் பற்றி பேச அதை அனுபவிக்க வயதெல்லாம் ஒரு தடை இல்லை பாலு அதை ரசிக்க தெரிந்தவர் அதை ஒரு வாழ்க்கையின் அங்கமாக பார்ப்பவர் அதை ஒரு கலையாக நோக்குபவர் எல்லாத்தையும் செய்து விட்டு அமசடக்காமாக இதுக்கும் கலைஞர்களை விட வெளிப்படையாக பேசும் பாலுக்கு அந்த தகுதி உண்டு

இந்தக்கருத்தில்  எனக்கும் உடன்பாடுண்டு

ஏனெனில் நானே அதிகம் அதைத்தான் பேசுகின்றேன் :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்
இதனால் எல்லோருக்கும் ஆன படிப்பினை என்னவெனில், எதிலேயும், செக்ஸ்சாயிருந்தாலும், நல்லா ஜாலியாக, வயது விட்டுக் கொடுக்கும் வரை, என்ஜாய் பண்ணுங்க!
 
ஆனால், 'பகிடி பகிடியாய் இருக்க வேண்டும், பறியுக்கை கை போடாத' என்பது போல வேறு துறையில் இருக்கும் உங்கள் திறமையை, செக்ஸ்சின் மூலம் தான் வெளிப்படுத்துவது எண்டு முடிவு செய்தால், கதை கந்தல் தான்!!
 
இந்தாளுக்கு storke வந்து, கடன் பட்டு, தப்பி பிழைத்து வந்து இருக்குது. கதை எண்டால், விட்டால் இரண்டு, மூண்டு பிள்ளையள் பெத்து விடுவார் போல!! 
 
Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.