Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிக்கை 2 - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வமாகாண தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு அனந்தி மற்றும் ஐங்கரநேசனுக்கு வாக்களிக்குமாறு நான் எழுதியது தொடர்பாக கோவை நஎன்னை எச்சரித்தார். இந்தியாவில் இருந்துகொண்டு என்ன துணிச்சலில் புலி ஆதரவாளர்களுக்கு சார்பாக எழுதுகிறாய் என அச்சுறுத்தினார். உன்னை இந்தியாவை விட்டு விரட்டி அடிப்பேன் என எச்சரிக்கும் தொனியில் இருந்தது அவரது எச்சரிக்கை.இப்ப இலங்கையை விட்டு நான் விரட்டி அடிக்கப் பட்டிருக்கிறேன்.

பின்னர் 9ம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் நடந்த கூடமொன்றில் ரவீந்திரனுக்குப் பக்கத்தில் கோவை ந இருந்தார். என்னை மிரட்ட வேண்டாமென நட்போடு கோவை நந்தனிடம் கூறினேன். அது அவரைக் கோபமடைய வைத்தது.  ரவீந்திரன் புலியும் ஜேவீப்பியும் பயங்கரவாதிகள் அரசு அவர்கள் இருவரையும் ஒடுக்கியது என்கிற தோரணையில் பேசினார்.. மேலும் தங்களது  பிரச்சினையை சிங்கள மக்களுக்கு விளங்கப்படுத்த தவறியது தமிழரின் குற்றம் என்கிற தொனியில் ரவீந்திரன் பேசிபோது நான் கோபப்பட்டேன். ரவீந்திரனுக்குப் பக்கத்தில் இருந்த கோவை ந அப்போதும் கோபமடைந்தார்.

பயங்கரவாத விசாரனைப் பிரிவு வைத்திருந்த என் பேச்சின் திரிக்கப்பட்ட சாரம் யாரால் தயாரிக்கப் பட்டது என்பது இப்போது எனக்கு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

Edited by poet

  • Replies 72
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி Poet:

உங்களுக்கும் அதிக விடயங்கள் கிடைக்க/ தெளிவு பெற உண்மையில் நடந்தது என்ன என்று இன்னும் கொஞ்ச பேர் அறிய சந்தர்ப்பம் கிடைக்கும் .

இதில் உள்ள நீங்கள் சொல்லுகிற கோவை நந்தன் யார் என்று எனக்கு ஒன்றும் தெரியாது . என்னைப்பொறுத்த வரையில் நீங்கள் வெளிவந்ததிர்ற்கு காரணம் முதலில் உஙகள் "வெளிநாட்டு பாஸ் போர்ட்" . அதைத் தவிர மிச்சம் எல்லாம் ஒன்றும் இல்லை . எரிக் சோல்கேம்க்கு நீங்கள் தனது நாட்டு காரன் என்பதே முதலில். காக்கீம் மற்ரவர்களின்  " வலு" எல்லோருக்கும் தெரியும் . உஙகளுக்கு கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி இன்னும் நாலு பேருக்கு உண்மையை சொல்லுவதுதான் உங்கள் தாயின் கல்லறைஐ பிடித்து வைத்த்திருப்பவர்களை விலக வழி செய்யும் .

சிங்கள இரத்த கறை படிந்த சுவர்களுக்கு வெள்ளை அடிக்க வேண்டாம்.

அழுத்தி சொல்லுங்கள் வெளி நாட்டு பிராசையான எனக்கே இந்த நிலை என்றால் மற்ரவர்களின் நிலை என்ன என்று .ஆனால் அதை தவிர்த்து அவர்கள் கைது செய்ததிற்கு ஆனா காரணங்களை தேட வேண்டாம்.

நன்றி ...

  • கருத்துக்கள உறவுகள்

அழுத்திச் சொல்லலாம் எரிமலை.. ஆனால் அடுத்தமுறை ஊருக்குப்போக விசா கிடைக்குமா? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுத்திச் சொல்லலாம்.... ஆனால் அடுத்தமுறை ஊருக்குப்போக விசா கிடைக்குமா? :blink:

நான் எனக்கு தோன்றியதை சொல்லுகிறேன் அவர் தன்னால் இயன்றதை செய்வார் என்கிற நம்பிக்கையில்.

  • கருத்துக்கள உறவுகள்

கோவை நந்தன் ஈ.பி.டி பிக்கு வாக்கு கேட்கும்போது நீங்கள் அனந்திக்கும் ஜங்கர நேசனிற்கும்  வாக்கு போடச் சொன்னால் கோபம் வராதா??பின்னை சரி இரண்டாவது அறிக்கை  சின்னாய் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வமாகாண தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு அனந்தி மற்றும் ஐங்கரநேசனுக்கு வாக்களிக்குமாறு நான் எழுதியது தொடர்பாக கோவை நந்தன் என்னை எச்சரித்தார். இந்தியாவில் இருந்துகொண்டு என்ன துணிச்சலில் புலி ஆதரவாளர்களுக்கு சார்பாக எழுதுகிறாய் என அச்சுறுத்தினார். உன்னை இந்தியாவை விட்டு விரட்டி அடிப்பேன் என எச்சரிக்கும் தொனியில் இருந்தது அவரது எச்சரிக்கை.இப்ப இலங்கையை விட்டு நான் விரட்டி அடிக்கப் பட்டிருக்கிறேன்.

பின்னர் 9ம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் நடந்த கூடமொன்றில் ரவீந்திரனுக்குப் பக்கத்தில் கோவை நந்தன் இருந்தார். என்னை மிரட்ட வேண்டாமென நட்போடு கோவை நந்தனிடம் கூறினேன். அது அவரைக் கோபமடைய வைத்தது. ரவீந்திரன் புலியும் ஜேவீப்பியும் பயங்கரவாதிகள் அரசு அவர்கள் இருவரையும் ஒடுக்கியது என்கிற தோரணையில் பேசினார்.. மேலும் தங்களது பிரச்சினையை சிங்கள மக்களுக்கு விளங்கப்படுத்த தவறியது தமிழரின் குற்றம் என்கிற தொனியில் ரவீந்திரன் பேசிபோது நான் கோபப்பட்டேன். ரவீந்திரனுக்குப் பக்கத்தில் இருந்த கோவை நந்தன் அப்போதும் கோபமடைந்தார்.

பயங்கரவாத விசாரனைப் பிரிவு வைத்திருந்த என் பேச்சின் திரிக்கப்பட்ட சாரம் யாரால் தயாரிக்கப் பட்டது என்பது இப்போது எனக்கு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

ஆமாம் ஆமாம் அனந்திக்கும் ஐங்கர நேசனுக்கும் நீங்கள் எழுதியதால் தான் மக்கள் பெருமளவு வாக்கு போட்டு ஜெயிக்க வைத்திருந்தார்கள்....முதல்ல யாழ்ப்பான மக்களுக்கு நீங்கள் யார் என்றே தெரியாது அதுவும் இந்த தலைமுறைக்கு தெரியவே தெரியாது சோ சும்மா அடிக்கடி இப்பிடி எழுதி சுண்டலுக்கு கிச்சு கிச்சு மூட்ட வேண்டாம்

இரண்டாவது அறிக்கை யாழ்க் களத்துக்கு எனத் தயாரிக்கப்படிருக்கிறது என நினைக்கிறேன் அது தான் சிறுயதாக இருக்கிறது.எல்லாரையும் திருப்திப் படுதிறது கஸ்ட்டம் தான். புலிக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டி இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். முதலில் என்னை கோட்டுக்கு கொண்டுபோய் சிறைபடுத்தவே முடிவெடுத்தார்கள்.

நான் வெளியே வந்ததற்க்கு முஸ்லிம் மக்களது ஆதரவும் என் நீண்ட்டகால  நண்பர்கள் ரவ்ககீம் எரிக் சொல்கைம் பசீர் சேகுதவூத் என்பவர்களது உறுதியான செயல்பாடுகளும்தான் காரணம். இதுபற்றி எலாம் தயவு செய்து உண்மை நிலை களநிலமை தெரியாமால் உங்கள் உங்கள் ஊகங்களை விவாதிக்க வேண்டாம். அத்தகைய பேச்சுக்களை இன்று யாரும் பொருட்ப்படுத்துவதில்லை.நோர்வீஜிய அரசும் சிங்களதோழன் பாசனாவும் ஏற்படுத்திய அழுத்தத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும். நோர்வீஜிய தூதர் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

உரிமை வேட்க்கையும்  அரசியல் கருத்தும் உள்ளவர்களுக்கும் கப்பம் கொடுக்கக்கூடிய பணபலம் உள்ள தமிழர்களுக்கும் இலங்கையில் பாதுகாப்பில்லை. உரிமை அரசியல் உணர்வில்லாத அல்லது பேசாத பெருமளவில் கப்பம் பெறக்கூடிய அளவுக்கு பணமில்லாத இல்லாத புலம் பெயர்ந்த தமிழருக்கு இலங்கை போய்வருவதில் தற்போதைக்குச் சிக்கல் இல்லை.  

அரசியல் பேசியவர்கள் மற்றும் பணக்கார வெளிநாட்டுப் பிரசைகள் பலர் கடத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலரும் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுப்பதற்க்காக பல லட்சக்கணக்கில் கப்பம் கட்டி வெளியில் வந்திருக்கிறார்கள். வெளிநாட்டுப் பாஸ்போட் அவர்களுக்கு பெருமலவில் உதவவில்லை.  இதுதான் தற்போதைய நிலை.

சர்வதேச சமூகத்தின் கண்கானிப்பாளர்கள் பலர் பல்வேறு வடிவத்தில் களத்தில் இருக்கிறார்கள். வல்கனோ தீபா நீங்கள் சொல்லுவதுபோல பொத்தாம் பொதுவாக கள யதார்த்தத்துக்கு வெளியில் பேசினால் சர்வதேச சமூகம் ஒத்துக்கொள்ள மாட்டாது.

இன்றைய யதார்த்தத்தில் ஒடுக்குதல்கள் எப்படி இருக்கோ அப்படி எடுத்துரைப்பது முக்கியம். யதார்த்தம் சார்ந்து பேசினாலன்றி சர்வதேச சமூகம் எங்கள் பேச்சுக்கு மதிப்பளிக்காது. கள நிலமைகளை அறிந்தவர்களும் பொருட்படுத்த மாட்டார்கள். இணைய தளங்களில் மட்டுமே நாம் அவற்றை எழுதலாம்.

போதிய கள ஆய்வுகளை ஊக்குவித்து தகவல்களைப் பெறாமல் இன்று இடம்பெறும் அரசின் ஒடுக்குதல்கள் மனித உரிமை பிரச்சினைகளின் வடிவத்தை புரிந்து கொள்வதோ ஆணித்தரமாகப் பேசுவதோ சாத்தியமில்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. 

புலம் பெயர்ந்த அரசியல் செயற்பாட்டாலர்கள் அதனை புரிந்துகொள்ளவேன்டும்

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல யாழ்ப்பான மக்களுக்கு நீங்கள் யார் என்றே தெரியாது அதுவும் இந்த தலைமுறைக்கு தெரியவே தெரியாது  - சுண்டல்

2010 க்குமுன்னம் என்னை  கவிதை ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கிறவர்களுக்குத்தான் தெரிந்திருந்தது. ஆடுகளம் வெளிவந்தபிறகு உள்ள நிலமை வேறு. நான் இலங்கை என்பதற்காகவே பலதடவை நான் நடித்த படங்களை பார்த்ததாக சொன்னார்கள்.

இங்கு சிலரது பிரச்சினை நெடுங்காலத்துக்கு முந்திய கணிப்புகளுடன் விவாதிக்க வருவதுதான். 2013 களநிலமை  பற்றிய ஊகங்கள்கூட இல்லாமல் இருப்பதுதான். 

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஜெயபாலன் அவர்களே! எதற்காக? எப்போது? நாட்டை விட்டு வெளியேறினீர்கள்? என்னகாரணத்திற்காக நோர்வேயை புலம்பெயர்நாடாக தெரிவு செய்தீர்கள்? எதற்காக இந்தியாவில் வசிக்கின்றீர்கள்?

உரிமை வேட்க்கையும்  அரசியல் கருத்தும் உள்ளவர்களுக்கும் கப்பம் கொடுக்கக்கூடிய பணபலம் உள்ள தமிழர்களுக்கும் இலங்கையில் பாதுகாப்பில்லை. உரிமை அரசியல் உணர்வில்லாத அல்லது பேசாத பெருமளவில் கப்பம் பெறக்கூடிய அளவுக்கு பணமில்லாத இல்லாத புலம் பெயர்ந்த தமிழருக்கு இலங்கை போய்வருவதில் தற்போதைக்குச் சிக்கல் இல்லை.  

அரசியல் பேசியவர்கள் மற்றும் பணக்கார வெளிநாட்டுப் பிரசைகள் பலர் கடத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலரும் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுப்பதற்க்காக பல லட்சக்கணக்கில் கப்பம் கட்டி வெளியில் வந்திருக்கிறார்கள். வெளிநாட்டுப் பாஸ்போட் அவர்களுக்கு பெருமலவில் உதவவில்லை.  இதுதான் தற்போதைய நிலை.

புலம் பெயர்ந்த அரசியல் செயற்பாட்டாலர்கள் அதனை புரிந்துகொள்ளவேன்டும்

இதில் சில உண்மைகள் இருக்கிறது. 

இதை வைத்துதான் அரசு யாரை உள்ளே வைத்திருக்க விரும்புகிறது அல்லது வெளியே போக விடுகிறது என்பதை கணிக்கலாம். அரசு தான் யாராவது உரிமை வேட்கையுடன் அரசியல் பேசினார்கள் என்று கணக்குப் போட்டால் அவர்களை வெளியே போகவிடாது. அதே நேரம் வெளிநாட்டு ராஜதந்திரிகள் தங்கள் பலத்தை பாவித்து உள்ளெ ஒன்றும் செய்ய முடிவதில்லை. கமருன் தங்காலை கொலையை விசாரிக்க வைக்க முடியவில்லை இதே நிலைதான் எரிக் சொல்கெயுமுக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி Poet:

நீங்கள்  இதில் சொல்லும் விடயங்களை BBC போன்ற செய்தி நிறுவனங்களுக்கு சொல்லுவதில் என்ன தடை இருக்கிறது?  அண்மையில் BBC சிங்கள சேவையை சேர்ந்தவர்கள் சிலரை விசாரணைக்கு உட்படுதித்தின போல தமிழ் சேவையை சேர்ந்தவர்களுக்கும் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது, ஆனால் அவர்கள் பொதுவில் தமிழர் விரோத போக்கை கடைபிடிக்கிற ஊடகவிலாளர்கள் / ஊடகம் . -நாராயணசாமியை இருத்தி வைச்சி சொல்லுகிறது எல்லாத்தையும் கேப்பார்கள் ஆனால் இவ்வளவு சிக்கலான காலத்திலும் மாவீரர் தினம் ஒழுங்கு படுத்தி செய்தால் அதற்க்கு கணக்கு வழக்கு , ஏன் இதை விட உஊரில உதவி செய்திருக்கலாமே என்று கதை விடுவார்கள் ...

எனது எதிர்ப்பார்ப்பு எல்லாம்அவர்களுக்கு செய்திகள் சொல்லும் போது உங்களுக்கு தெரிந்ததை அறிந்ததை சொல்ல வேண்டியது தானே ! நீங்கள் சொல்லுவது போல பல வெளிநாட்டவர்களை அவர்கள் பிடிக்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறல் இல்லையா?  அதை ஏன் உங்கள் முஸ்லீம் நண்பர்கள்  ஊடகவும் சர்வதேச சமூகதிற்கு எடுத்து செல்ல முடியாது . எனக்கு தெரிய யாராவது பிடிபட்டால் , கூட்டமைப்பு அந்த பக்கத்திற்கே வருவது இல்லை, எனவே அவர்களை வைத்து இந்த மாதிரி விடயங்கள் செய்ய முடியாது . அந்த வகையில் முஸ்லீம் அரசியல் வாதிகளை நாடித்தான் சில காரியம் செய்ய வேண்டும் ...ஆனால் ஆவர்கள் உங்களுக்கு "உதவின" மாதிரி சாதாரண தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள் ...எனவே உங்களுக்கு செய்த உதவிக்காக அவர்களை "இயல்பாகவே " உதவும் தன்மை உள்ளவர்கள் என்று சொல்லுவது கடினமாக இருக்கிறது . மற்றும் படி நீங்கள் சொல்லுகிற செய்தி இன்னும் பயத்தைதான் கூட்டுது .

நன்றி உங்கள் பதில்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் மாறப் போவதில்லை! எரிக் சொல்கைம் நோர்வேயின் ஒரு அமைச்சர் (அல்லது முன்னாள் அமைச்சர்). சிறிலங்காவில் பிறந்த ஒரு நோர்வேக் குடிமகனுக்காக அவர் பகிரங்கமாகக் கதைத்த பிறகும், ஹக்கீம், சேகு தாவூத் தான் தூக்கி விட்டார்கள் என்கிறார்! கொஞ்ச நாட்களில் இந்தியாவும் தனது விடுதலைக்கு உதவியது என்று இந்திய விசுவாசத்தைப் புதுப்பிப்பார்! இதே ஹக்கீமின் அமைச்சுத் தான் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை போர் முடிந்த பிறகும் சிறையில் வழக்கு ஏதுமின்றி வைத்திருக்கிறது! நீதியமைச்சர் ஹக்கீமினால் அகுரணையில் முஸ்லிம் இளைஞர்கள் 12 பேரை மிக அருகில் நின்று சுட்டுக் கொன்ற ரத்வத்தையின் மகன் மீது ஒரு குற்றப் பத்திரிகை தன்னும் இன்னும் பதிவு செய்ய இயலவில்லை. சிறி லங்காவில் யார் கயிற்றை வைத்திருக்கிறார்கள் என்று ஒரு சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும்! பாவம், கவிஞருக்குத் தெரியாது! அல்லது, தெரிந்திருந்தாலும் தமிழ்-முஸ்லிம் உறவு பலப் பட வேண்டி தனது script ஒன்றை இப்படி வெளியிட்டுத் திரிவார்! இதை மறுதலிக்கும் நபர்கள் யதார்த்தம் தெரியாதவர்கள் என்பார்! சிறைக்குள் இருப்பவன் கம்பிகளூடாக வெளியே இருப்பவனைப் பார்த்து வெளியே இருப்பவன் தான் சிறைப்பட்டிருப்பதாக நினைத்துக் கொள்ளும் delusion தான் கவிஞரின் நிலை! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லையூரான், நன்றி வல்கனோ. 

ஜஸ்ரின், நீங்கள் நடந்ததுபற்ரி ஆராயாமல் உங்கள் ஊகங்களின் அடிப்படையில் பேசுகிறீங்க. சர்வதேச சமூகமளவுக்குக்குட  நாம் ஆய்வுகளை முன்னெடுபதில்லை. நாட்டில் ஆய்வில் ஈடுபடக்கூடிய பல பல்கலைக்களக மாணவர்கள் ஊடகவியலாளர்கள் பலர் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் உள்ளார்கள். புலம் பெயர் சமூகம் அவர்களை அவர்கள் ஆய்வுகளை ஆதரித்து தனது அறிதலை தொடர்ந்தும் இன்றைய இறுதிநிலைக்கு வளர்த்துக்கொள்ள ( update பண்ண) வேண்டும்.யாழ் கலம் இதில் முன்னணி வகுக்க வேன்டும். 

Justin இலங்க அரசு, பாதுகாப்பு செயலாலர் அலுவலகம் என்னை குற்றவாளி என்கிறது. அந்த நாட்டின் நீதி அமைச்சர் எனக்கு ஜெயபாலனை தெரியும் அவர் குற்றமிழைக்கவில்லையென அழுத்தமாக சொல்கிறார். இப்படி நிகழ்வுகள் உலக அரசியலில் அதிகமில்லை.என் பதவியைவிட ஜெயபாலனின் விடுதலை முக்கியமென்ற தோழன் ரவி கக்கீமுக்கு எனது நன்றிகள்.

நஞ்சூட்டப்படக்கூடுமென்ற சந்தேகம் எனக்கிருந்ததால் முதல் நாள் இரவு விசாரணையின்போதும் மறுநாள் காலையும் விசாரித்தவர்கள் பகிர்ந்துகொண்ட மலிபன் பிஸ்கட்டும் தண்ணீரும் மட்டுமே அருந்தினேன், மறுநாள் பின் காலையில் வவுனியா நெல்லி உணவகத்தில் மட்டும் சாப்பிடுவேன் என உறுதியாக சொல்லிவிட்டேன்.

கொழும்பில் பட்ஜெட் தொடர் நடந்தபோதும் பட்ஜட் தொடரின்போது பாரளுமன்றத்தில் பிரசன்னமாய் இருக்கவேன்டும் என ஜனாதிபதியின் கட்டளை இருந்தபோதும் என் நிலை உணர்ந்து தோழன் பசீர் சேகுதாவுத் வீட்டில் சமைத்து மூன்றுவேளையும் உணவும் கொண்டுவந்தான்.  வெளியில்விட்டால் தன்னைச் சித்திரவதை செய்ததாக ஜெயபாலன் பிரச்சாரம் செய்வார் என பாதுகாப்பு செயலர் தயங்கியபோது ஜெயபாலனை எனக்கு தெரியும் அவன் பிரசாரத்துக்காக பொய் சொல்ல மாட்டான் என தோழன் பசீர் உறுதிப்படுதியிருக்கிறான். அதுதான் என் விடுதலையை துரிதப் படுத்தியது. இல்லையென்ரால்  விடுவிக்கும் முடிவுக்குப்பின்னரும் என்னை வைதியசாலை நீதிமன்றமென்று பலநாள் அலைக்களித்திருப்பார்கள்.

சர்வதேச அரங்கில் நுட்பமாக எடுதுரைக்கப்படும் உண்மையைவிட பலமான பிரச்சாரம் எதுவுமில்லை.

Edited by poet

வமாகாண தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு அனந்தி மற்றும் ஐங்கரநேசனுக்கு வாக்களிக்குமாறு நான் எழுதியது தொடர்பாக கோவை நஎன்னை எச்சரித்தார். இந்தியாவில் இருந்துகொண்டு என்ன துணிச்சலில் புலி ஆதரவாளர்களுக்கு சார்பாக எழுதுகிறாய் என அச்சுறுத்தினார். உன்னை இந்தியாவை விட்டு விரட்டி அடிப்பேன் என எச்சரிக்கும் தொனியில் இருந்தது அவரது எச்சரிக்கை.இப்ப இலங்கையை விட்டு நான் விரட்டி அடிக்கப் பட்டிருக்கிறேன்.

பின்னர் 9ம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் நடந்த கூடமொன்றில் ரவீந்திரனுக்குப் பக்கத்தில் கோவை ந இருந்தார். என்னை மிரட்ட வேண்டாமென நட்போடு கோவை நந்தனிடம் கூறினேன். அது அவரைக் கோபமடைய வைத்தது.  ரவீந்திரன் புலியும் ஜேவீப்பியும் பயங்கரவாதிகள் அரசு அவர்கள் இருவரையும் ஒடுக்கியது என்கிற தோரணையில் பேசினார்.. மேலும் தங்களது  பிரச்சினையை சிங்கள மக்களுக்கு விளங்கப்படுத்த தவறியது தமிழரின் குற்றம் என்கிற தொனியில் ரவீந்திரன் பேசிபோது நான் கோபப்பட்டேன். ரவீந்திரனுக்குப் பக்கத்தில் இருந்த கோவை ந அப்போதும் கோபமடைந்தார்.

பயங்கரவாத விசாரனைப் பிரிவு வைத்திருந்த என் பேச்சின் திரிக்கப்பட்ட சாரம் யாரால் தயாரிக்கப் பட்டது என்பது இப்போது எனக்கு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

வணக்கம் கவிஞர்  ஐயா !!! கோவை நந்தன் எனது ஊரைச் சேர்ந்தவர் . தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய தூண்களில் ஒருவர். இளைஞர் பேரவையில் இருந்தவர் . அவரிடம் நீங்கள் சொல்வது போல் மிரட்டல் அடிதடி அரசியல் இல்லை என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும் . இப்பொழுது அவரது எச்சரிக்கை தான் உங்களை நாடுகடத்தலுக்கு  மூல காரணமாய் இருந்தது என்ற மாயத் தோற்றத்தை மக்களுக்கு உருவாக்குகின்றீர்கள். உங்களது விடுதலை , புகலிடத் தமிழர்களது பரப்புரை மற்றும் , நோர்வே அரசின் அழுத்தங்கள் என்பதாலேயே இலகுவானது. உங்கள் சுயநலங்களுக்காக மற்றயவர்களை முட்டாள்கள் ஆக்குவதை நிறுத்துங்கள் .கோவை நந்தன் யாழ் இணையத்தில் கள உறுப்பினர் இல்லாத காரணத்தால் நீங்கள் சொல்வதெல்லாம்  உண்மையாகிவிடாது .கோவை நந்தன் முக நூலில் இதற்கான விளக்கங்களை அளித்தால் மக்களும் தெரிந்து கொள்வார்கள் .நன்றி  .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்,

நான் என்தகவல்களின் அடிப்படையில்தான் பேசுகிறேன். மற்றபடி அவர் எனக்கு 1971ல் இருந்து அரசியல் ரீதியாக அறிமுகமானவர்தான். அவர்மீது தனிப்பட்ட கோபம் எல்லாம் இல்லை. என்மீதான கைதுக்கு பின்னணியில் இருந்தவர்களோடு அவர் தெரிந்தோ தெரியாமலோ சூழ்நிலைக் கைதியாகவோ சம்பந்தப் பட்டிருக்கிறார்.. நான் யாழில் கூட்டமைப்பை எதிர்த்துப் பேசி இருந்தால் ஒருவேழை வடக்கில் சிக்கல் எனக்குச் வந்திருக்க வாய்ப்பு அதிகம் இருந்திருக்காது.

விசாரனையில் தமிழர் முஸ்லிம் ஒற்றுமைப்பட்டு போராட நான் பணிபுரிவதாகவே அழுத்தப்பட்டது. அதனால் தெற்க்கில் சிக்கல் வந்திருக்கலாம்.

இதுப்போல ஏனையவர்களுக்கும் நிகழக்கூடாது. ஏனெனில் பலருக்கு பலமான பின்புலம் இல்லை. 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய சென்னையில் பேரவை நந்தன் என்பவர் இருந்துள்ளார் அவர் வேதாரணியத்தில ஒரு பெண்ணைக் காதலித்து பெண்ணின் பெற்ரோருக்கு அது பிடிக்காது பின்பு துக்கிக் கொண்டு ஓடினவர். இவருடன் பழகுபவர்கள் இந்தியாவில் கொஞ்சம் இரண்டாம் தர வியாபாரம் செய்பவர்கள், அதாவது பெட்டி அல்லது ரொக்கர் அடிகாரர்கள்.

தவிர சென்னைப்புறநகரப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமும் இவர் நடாத்தியது தெரியும். கோமகன் நான் சொல்லும் பேர்வளி உங்கள் நட்புவட்டத்தில் என்றால் நீங்கள் கொஞ்சம் பிரச்சனையான ஆள்தான்.

உங்களில் தவறுகளை வைத்துக்கொண்டு காரண காரியங்களை மற்றையவர்களில் போடுவது ஓர் பண்பட்ட இலகியவாதிக்கோ கவிஞருக்கு  அழகல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்து உள்ளே வைத்திருந்தது கோத்தபாய.. அப்படிப்பட்ட வில்லனை விட்டிட்டு சைடில் காமடி பண்ணிய வடிவேலு, விவேக்கின் உதவிகளை சிலாகிக்கிறார் கவிஞர்.. போதாக்குறைக்கு பக்கத்தில் நின்று சும்மா முறைத்தவரை வில்லனாக்க முயற்சிக்கிறார்.. :blink:

சரி விடுங்கப்பா எப்புட்டு நேரம்தான் வலிக்காதது போலவே நடிக்கிறது அழுதுடுவன் ஆமா ....அடிச்சும் கேட்பாங்க சொல்லக்கூடாது என்று சொல்லிட்டு தான் விட்டாக நீங்க வேற துருவி துருவி கேட்டா என்ன தான் பண்ண முடியும் விட்டுடுங்க பிளிஸ் :D:icon_idea:

நான் அறிய சென்னையில் பேரவை நந்தன் என்பவர் இருந்துள்ளார் அவர் வேதாரணியத்தில ஒரு பெண்ணைக் காதலித்து பெண்ணின் பெற்ரோருக்கு அது பிடிக்காது பின்பு துக்கிக் கொண்டு ஓடினவர். இவருடன் பழகுபவர்கள் இந்தியாவில் கொஞ்சம் இரண்டாம் தர வியாபாரம் செய்பவர்கள், அதாவது பெட்டி அல்லது ரொக்கர் அடிகாரர்கள்.

தவிர சென்னைப்புறநகரப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமும் இவர் நடாத்தியது தெரியும். கோமகன் நான் சொல்லும் பேர்வளி உங்கள் நட்புவட்டத்தில் என்றால் நீங்கள் கொஞ்சம் பிரச்சனையான ஆள்தான்.

நீங்கள் குறிபிடுகின்ற பேரவை நந்தன் இவர் இல்லை . கோவை நந்தன் பிரான்ஸில் பலருக்குப் பரீச்சயமானவர் . எனக்கு அவரின் அரசியல் பாதைகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் , தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது . அந்தவகையில் கோவை நந்தன் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றார் . கவிஞர் ஐயா தனது தவறுகளுக்கு மற்றயவர்களை காரணம் காட்டுவது கடும் கண்டனத்துக்குரியது . கோவை நந்தனது பேட்டி ஒன்று கீற்று இணயத்தில் வெளியானது . அதில் சில அனுபவ உண்மைகளை பகிர்ந்திருக்கின்றார் . அதனுடைய சாராம்சம் பலருக்குப் பிடிக்காது என்பதே எனது கணிப்பு . அதனுடைய இணைப்பு தருகின்றேன் .

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1908:2010-01-08-14-55-59&catid=969:09&Itemid=223

Edited by கோமகன்

முடியல சாமி. முதல்ல உங்கட கானியை டக்ளஸ் வச்சிருக்கிறததை வெளிப்படையாக சொல்லுங்க.. வெளியால எட்டி பார்த்து அடிச்சு துராத்தினத்தை பிறகு கதைபம்

 ஜெயபாலன் அவர்களே! எதற்காக? எப்போது? நாட்டை விட்டு வெளியேறினீர்கள்? என்னகாரணத்திற்காக நோர்வேயை புலம்பெயர்நாடாக தெரிவு செய்தீர்கள்? எதற்காக இந்தியாவில் வசிக்கின்றீர்கள்?

எதற்காக இலங்கை சென்றீர்கள் அதை முதலில் செய்யாமல் எதற்காக வேலியாலை எட்டி பார்க்கிற வேலை செய்தீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா எதையோ கட்டிக்காக்க விரும்புகிறார். விடுங்க.. பாவம். அவருக்கும் அரசியல் ஆசை வந்திருக்குது.. செய்திட்டுப் போகட்டுமேன். :lol::D

முடியல சாமி. முதல்ல உங்கட கானியை டக்ளஸ் வச்சிருக்கிறததை வெளிப்படையாக சொல்லுங்க.. வெளியால எட்டி பார்த்து அடிச்சு துராத்தினத்தை பிறகு கதைபம்

இதுதான் விடையம் .  தங்களது தனிபட்ட பிரச்சனைகளுக்கு போய் வந்து அதில் அரசியல் சாயமும் பூசி இவ்வளவு ஆலாபனைகளும் பில்டப்புகளும் தேவையா ????

ஆமாம் நண்பரே இதில வேற அவன் காப்பாத்தினான் இவன் பிடிச்சான் எண்டு கருணாநிதியை விட மோசமான கதையாளப்பு......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.