Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது அருந்துவது தவறா ,???????

Featured Replies

என்னடா இவன் லூசன் போல ஒரு தலைப்பை கொண்டு வந்திட்டான் ...ஏறிட்டிதாக்கும் ........நினைக்கிறீங்க .அது தவறு .................
 
அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் பொறுப்புக்கள் ,பிரச்சனைகள் இவற்றிற்கு முகம் கொடுத்து வாழ்க்கை என்னும் சக்கரத்தை வெற்றி கரமாக  சுழல வைத்து ,மேலும் மேலும் வேகமாக சுழல வைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தியாகங்கள் ,பல புரிந்து சொந்த சுமையை சுமந்து அன்றாடம்  மன உழைச்சல்களை சந்தித்து ........வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன் .................
 
அவனுக்கு ஓர் ஆறுதல் ,அன்பு  ,அரவணைப்பு தேவை இவை அனைத்தும் இருந்தும் அவனுக்கு அதற்கு மேல் ஓர் இளைப்பாறல் தேவை ,தனது முழு மன அழுத்தத்தையும் ஒரு சில கணங்கள் மறக்க நினைக்கிறான் ................அது தவறா ???????
அது தவறு இல்லை என்று நினைத்தால் அதற்கு அவன் தேடும் மருந்துதான் மது ........
 
மது எடுப்பது தவறா ??????????????
ஆனால் பைபிள் கூறுகிறது நீ திராட்சை மதுவை [இரசத்தை ] புசித்து உற்சாகமாய்,ஆனந்தமாய்  ஓய்வாய் இரு ,,,,,,,,,,,,,,,,,,,,,,
 
இங்கே ஏவு கணைகளையும், துப்பாக்கி ரவைகளையும் ,வெடி குண்டுகளையும் பதிலாக எதிர் பார்க்கிறேன் .................அவற்றை நான் பூமாலையாக அணியத்தயாராய் இருக்கிறேன்  :D
  • Replies 53
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் வடிகட்டி அதன் பகுதி ஒன்றை உடலுக்குத் தருவது நல்லதல்ல என்பது என் கருத்து.. மனிதன் உணவைப் பிரித்து அதில் நல்லவற்றை தானே எடுத்துக்கொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறான்.. அந்த இயற்கையை மீறி வடித்தவைகளை (extracts) எடுத்துக்கொள்ளும்போது உடலின் சில பயன்பாடுகள் தேவையற்றவை ஆகின்றன.. இது வேறு விதமான பக்க விளைவுகளை கொடுக்கின்றன.. :unsure:

விற்றமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல என்பது என் கருத்து.. மதுவை சொல்ல வேண்டுமா? :D ஆனால் எப்பவாவது இருந்திட்டு ரெண்டு பெக் உள்ளை விடலாம்.. தப்பில்லை.. :lol:

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்

எதையும் வடிகட்டி அதன் பகுதி ஒன்றை உடலுக்குத் தருவது நல்லதல்ல என்பது என் கருத்து.. மனிதன் உணவைப் பிரித்து அதில் நல்லவற்றை தானே எடுத்துக்கொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறான்.. அந்த இயற்கையை மீறி வடித்தவைகளை (extracts) எடுத்துக்கொள்ளும்போது உடலின் சில பயன்பாடுகள் தேவையற்றவை ஆகின்றன.. இது வேறு விதமான பக்க விளைவுகளை கொடுக்கின்றன.. :unsure:

விற்றமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல என்பது என் கருத்து.. மதுவை சொல்ல வேண்டுமா? :D ஆனால் எப்பவாவது இருந்திட்டு ரெண்டு பெக் உள்ளை விடலாம்.. தப்பில்லை.. :lol:

அது நண்பா தேங்க்ஸ் ................. :D

  • கருத்துக்கள உறவுகள்

அருந்துவது தவறல்ல,குடிப்பதுதான் தவறு

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதையும் வடிகட்டி அதன் பகுதி ஒன்றை உடலுக்குத் தருவது நல்லதல்ல என்பது என் கருத்து.. மனிதன் உணவைப் பிரித்து அதில் நல்லவற்றை தானே எடுத்துக்கொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறான்.. அந்த இயற்கையை மீறி வடித்தவைகளை (extracts) எடுத்துக்கொள்ளும்போது உடலின் சில பயன்பாடுகள் தேவையற்றவை ஆகின்றன.. இது வேறு விதமான பக்க விளைவுகளை கொடுக்கின்றன.. :unsure:

விற்றமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல என்பது என் கருத்து.. மதுவை சொல்ல வேண்டுமா? :D ஆனால் எப்பவாவது இருந்திட்டு ரெண்டு பெக் உள்ளை விடலாம்.. தப்பில்லை.. :lol:

 

நிர்வாகத்தினருக்கு வணக்கங்கள்! தயவுசெய்து இந்த கருத்தை அழித்து விடுங்கள். இல்லையேல் மறைத்து விடுங்கள். :D

 

நடு வீட்டுக்கையே வில்லனப்பா.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்


மனைவி

மக்கள் 

குடும்பத்தையே............

பட்டை  குடிக்கும்

 

நான் நேரில் கண்டிருக்கின்றேன்...

பிரான்சில்

2  நண்பர்கள்

ஒருத்தன் போயிட்டான்

இன்னொருத்தன் குடும்பத்தால் விரட்டப்பட்டு றோட்டில் திரிகிறான்.

 

எனக்குத்தெரிந்த ஒருத்தர்

நண்பர்களை  குடும்பத்துக்கும் மேலாக  நம்புபவர்

மதிப்பவர்

அவரது 2 பெண் குழந்தைகளையும் அவரது குடி நண்பர் கெடுத்துவிட்டார்........... :(  :(  :(  :(

 

உங்கள் அற்ப  சந்தோசங்களுக்காக................. :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=tlRoxHawqw8#t=0

 

 

(நன்றி  சோழியான்)

 

 

கள்ளுக்குடி உன் குடியை  கெடுத்திடும்

கடன்காறனாக உன்னை  மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியிலே கட்டையிலே  கொண்டு போய் விட்டிடும்..........

:(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மது அருந்துவது தவறா, சரியா என்ற கேள்விக்கப்பால்....
நாம் மதுவிற்கு அடிமையாக இருக்காமல்... எம்மை தயார் படுத்தும் மனப் பக்குவம் இருக்க வேண்டும்.
நான் கிழமைக்கு ஒரு முறை மட்டும், பியர் அருந்துவேன்.
நான் பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ... எவரும் மது அருந்துவதில்லை.
திருமணம் முடித்த புதிதில்... நான் பியர் குடித்த‌தைப் பார்த்து...
என்னை குடிகாரனுக்கு கட்டி வைத்து விட்டார்களே... என்று அழுது, ஒப்பாரி வைத்து விட்டார்.
இப்போது... அவ‌ரே, உட‌ம்பு கெட்டுப் போயிடும் என்று...  "ரேஸ்றுக்கு" முறுக‌லாக... சத்தானுகள் க‌டிக்க பொரித்துத் த‌ருவார். :D

 

எனக்கு... பியர் குடிக்கும் போது,
கடந்த‌ கிழமை வேலை அலுப்பும், அடுத்த கிழமைக்கு புதிய யோசனையுடன் என்னை தயார் படுத்திக் கொள்ளும் சுய அலசலை மேற்கொள்ள மது குடிக்கும் நேரம் பிரயோசனப் படுகின்றது.
முதலாவது நான்... வீட்டில் வைத்துத்தான் மது குடிப்பேன். (அத‌ற்கென்று இடம், நானே... செற் ப‌ண்ணி வைத்துள்ளேன்)
வெளியிடங்களில்  பப், ரெஸ்ரோறன்ற் போன்றவற்றில் குடிப்பதேயில்லை. அநியாய ப‌ண‌ச் செல‌வு, அந்நிய‌ருட‌ன் குடிப்ப‌தால்... ஏற்ப‌டும் பிர‌ச்சினைக‌ளை த‌விர்ப்ப‌தே முக்கிய‌ நோக்க‌ம்.
முக‌ முக்கிய‌மாக‌... என‌து வீட்டு நில‌ அறையில், நண்பர்கள் ப‌ரிசாக‌த் த‌ந்த‌ விலை உய‌ர்ந்த.. வைன், விஸ்கி போன்றவை இருந்தாலும்...
புலி பசித்தாலும், புல்லை தின்னாது என்பது போல்... எனது பிரான்ட் பியர் மட்டும் தான் குடிப்பேன்.

 

வேலை நாட்களில்... 10,000 ஐரோ தந்து ஒரு கிளாஸ் பியர் குடி என்றால். பத்தாயிரத்தை... நீயே.. வைத்துக் கொள், எனக்கு ஒரு கப் கோப்பி, ரீ தா... என்பேன்.

 

மது குடிப்பதை... ஊக்குவிப்பது, எனது நோக்கம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சிறி

 

எனது எழுத்து

பலரையும் எழுதாது தடுத்தவிடுமோ என்று பயந்தேன்

நீங்கள்

இன்னொரு பக்கத்தை எழுதியுள்ளீர்கள்

வரவேற்கத்தக்கது

குடிக்கு எதிரானவன்  அல்ல நான்

ஆனால்

அளவை  நிர்ணயிப்பது எவ்வாறு???

கட்டுப்பாடு என்பது எதுவரை??

அதை நிர்ணயிக்கும்  அக  மற்றும்   புறக்காரணிகளிடமிருந்து எம்மை எவ்வாறு பாதுகாப்பது????

மற்றவர்களும் எழுதட்டும்

பார்க்கலாம்

ஆண்டவனைப் பார்க்கணும்.... அவனுக்கும் ஊத்தணும்..... அப்ப நான் (இந்தக்) கேள்வி கேக்கணும்....!! :lol:

 

http://www.youtube.com/watch?v=P-KEnO5KuaQ

குடியால் குடி முழுகிய குடும்பங்கள் ஏராளம் ,எம்மவர் மட்டுமல்ல உலகம் பூரா இது நடக்கின்றது .

குடி ,சூது இரண்டும் தான் மிகப்பெரிய  அளவில் தனி மனித வாழ்வை கெடுப்பன,இருந்தும் பல நாடுகளில் அரசாங்கங்களே  இவற்றை பொறுப்பேற்று நடாத்துகின்றது .

முதலாவது வருமானம் இரண்டாவது மன கட்டுப்பாடு இல்லாவிட்டால் இந்த உலகில் வாழ தகுதி இல்லை என்பதுதான் அர்த்தம்.

நிம்மதியை தொலைக்கும் போது குடித்தால் போய் விடும் என்பெதெல்லாம் பொய் வாதம் .இருக்கும் நிம்மதியையும் அது கெடுத்துவிடும் .

குடி தரும் போதை எம்மை சுயநினைவை தாண்டி வேறொரு நிலைக்கு தள்ளுகின்றது அந்த சுகமே பலரை மீண்டும் மீண்டும் குடிக்கவைக்கின்றது .

தமிழ்சிறியின் கருத்து விதி விலக்கு,இப்படி கட்டுப்பாட்டுடன் குடிப்பவர்கள் பத்து வீதமும் வராது .குடிக்க தொடங்கி அதற்கு அடிமையானவர்கள் தான் அதிகம் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சிறி

 

எனது எழுத்து

பலரையும் எழுதாது தடுத்தவிடுமோ என்று பயந்தேன்

நீங்கள்

இன்னொரு பக்கத்தை எழுதியுள்ளீர்கள்

வரவேற்கத்தக்கது

குடிக்கு எதிரானவன்  அல்ல நான்

ஆனால்

அளவை  நிர்ணயிப்பது எவ்வாறு???

கட்டுப்பாடு என்பது எதுவரை??

அதை நிர்ணயிக்கும்  அக  மற்றும்   புறக்காரணிகளிடமிருந்து எம்மை எவ்வாறு பாதுகாப்பது????

மற்றவர்களும் எழுதட்டும்

பார்க்கலாம்

 

விசுகு, குடித்ததேயில்லை என்பதால்...

உங்களுக்கு மதுவின் எல்லையை... விபரிப்பது சிரமம் என்றாலும்...

வேறு வகையில்... விபரிக்க முயல்கின்றேன்.

 

மனிதருக்கு... பெண்ணாசை, மண்ணாசை, பண ஆசை, என்று பல உள்ளது.

பெண்ணாசை உள்ளவன், 35 திருமணம் முடித்தும்...

மண்ணாசை உள்ளவன், பல நாடுகளைப் பிடித்தும்...

பண ஆசை உள்ளவன், திருடிய பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டும்...

எல்லையில்லாம‌ல்... க‌டைசியில், மாண்டு போகின்றான்.

 

ஆனால்.... ம‌துகுடிப்ப‌வ‌ன், க‌ன‌க்க‌ ஆசைப் ப‌ட‌ முடியாது.

ப‌த்து பிய‌ர் அடித்த‌வ‌ன்... க‌ல‌ங்காமால் நிற்பான், இர‌ண்டு பிய‌ர் அடித்த‌வ‌ன் ம‌ட்டையாகி.... சுருண்டு போவான்.

பிய‌ர் மூடியை... ம‌ண‌ந்த‌வ‌ன், த‌ள்ளாடி.... த‌வ‌ண்டு போன‌தும் உண்டு. :D  :lol:

விசுகு, குடித்ததேயில்லை என்பதால்...

உங்களுக்கு மதுவின் எல்லையை... விபரிப்பது சிரமம் என்றாலும்...

வேறு வகையில்... விபரிக்க முயல்கின்றேன்.

 

மனிதருக்கு... பெண்ணாசை, மண்ணாசை, பண ஆசை, என்று பல உள்ளது.

பெண்ணாசை உள்ளவன், 35 திருமணம் முடித்தும்...

மண்ணாசை உள்ளவன், பல நாடுகளைப் பிடித்தும்...

பண ஆசை உள்ளவன், திருடிய பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டும்...

எல்லையில்லாம‌ல்... க‌டைசியில், மாண்டு போகின்றான்.

 

ஆனால்.... ம‌துகுடிப்ப‌வ‌ன், க‌ன‌க்க‌ ஆசைப் ப‌ட‌ முடியாது.

ப‌த்து பிய‌ர் அடித்த‌வ‌ன்... க‌ல‌ங்காமால் நிற்பான், இர‌ண்டு பிய‌ர் அடித்த‌வ‌ன் ம‌ட்டையாகி.... சுருண்டு போவான்.

பிய‌ர் மூடியை... ம‌ண‌ந்த‌வ‌ன், த‌ள்ளாடி.... த‌வ‌ண்டு போன‌தும் உண்டு. :D  :lol:

 தமிழ் சிறி தாங்கள் எழுதியது மதுவை விட மாதுவுக்கு கூட பொருந்தும் :D   

எதுவும் அளவுடன் இருந்தால் தீங்கிழைக்காது. நான் வாரத்தில் வெள்ளி சனி நாட்களில் இரவு வேளைகளில் மது அருந்துவேன். விடுமுறையில் நிற்கும் போது (on vacation days) வார நாட்களில் சில வேளைகளில் இரவு வேளைகளில் மது அருந்துவதுண்டு. வேலை நாட்களில் ஒருக்காலும் மது அருந்துவதில்லை. ஒரு போதும் கிளப்புகளுக்கோ, bar களுக்கோ சென்று அருந்துவதில்லை. அலுவலகப் பாட்டிகளில் வைன் மட்டும் அருந்துவதுண்டு.

 

ஆரம்பமே மென்டிஸ் ஸ்பெசல் சாராயத்துடன் A/L செய்யும் காலங்களில் ஆரம்பித்தது. முதல் நாள் இரவு தண்ணி அடித்து விட்டு அடுத்த நாள் பாடசாலையில் மிதப்பில் இருந்த நாட்களும் உண்டு. அந்த நாட்களில் நான் ரியூசன் கொடுத்தன் மூலம் கிடைத்த வருவாயில் குடிக்க முடிந்தது. பின் வேலை கிடைத்த ஆரம்ப நாட்களில் வார இறுதியில் மட்டும் குடிப்பது என்று உறுதி எடுத்து இன்று வரைக்கும் தொடர்கின்றது.

 

எக் காலத்திலும் அப்பாவின் காசில் குடித்ததில்லை.

 

டுபாயில் இருக்கும் போது தான் உயர்தர விஸ்கியின் அறிமுகம் கிடைத்து சிவாஸ் ரீகல், Black label என்று தொடர்ந்தது. குடிச்சால் சிவாஸ், குப்புறக் கிடந்தால் black label என்று இருந்த நிலை கனடா வந்த பின் மாறிவிட்டது.  எவராவது அன்பளிப்பாகத் தந்தால் அன்றி, St Remy Brandy யினைத் தவிர வேறு ஒன்றும் குடிப்பதில்லை.

 

இப்பவும் வார இறுதி நாட்களில் குடிக்கத் தொடங்கினால் ஒரே இரவில் அரைப் போத்தலாவது (375 ml) குடிப்பேன் (இரண்டு நாட்களில் 750ml). இனி 2014 இல் இதன் அளவை மிகவும் குறைக்க எண்ணியுள்ளேன். அதே நேரத்தில் எவ்வளவு மது அருந்தினாலும் கண்டிப்பாக வயிறு முட்ட சாப்பிட்டு விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன். குடிக்கின்றவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டு. எக்காரணம் கொண்டும் மதுவால் மட்டும் வயிற்றை நிரப்பி விட்டு வெறுமனே படுக்க கூடாது.

 

மனசு கவலையாக இருந்தாலோ, அல்லது சோகமான ஒரு விடயம் நடந்தாலோ அது வார இறுதி நாள் என்றாலும் குடிப்பதில்லை. அர்ஜுன் சொல்வது  சரி. குடி ஒரு போதும் கவலைக்கு மருந்தாகாது. ஒரு பிரச்சனை ஏற்படும் போது மதுவை அருந்துவது அந்தப் பிரச்சனையை மிகவும் சிக்கலாக்கும். அதே போன்றுதான் கவலையையும் அதிகரிக்கும். மனசு சந்தோசமாக இருந்தால் தான் மதுவை அருந்த வேண்டும். அதே போன்று சிலர் நித்திரை சரியாக வருகுது இல்லை என்று குடிப்பர். அதுவும் தவறு. Alcohol உடனடியாக நித்திரையை தருவது போன்று இருந்தாலும், இடையில் குழப்பி விடும். அத்துடன் எம் Sleeping pattern இனையும் மாற்றிவிடும்.

 

நான் நினைக்கின்றேன், மது அருந்துதல் சரியா தவறா என்ற வாதம் மனித நாகரீகம் தொடங்கிய காலத்திலேயே ஆரம்பித்து இருக்கும் என்று. மனித நாகரீகங்கள் எல்லாவற்றுடனும் மதுவும் சேர்ந்து தான் நடந்து வந்திருக்கின்றது. இறை வழிபாடுகளிலும் மதுவும் ஒரு அம்சமாக இருந்து வந்து இருக்கின்றது.

 

நான் எழுதுவது மதுவுக்கு சார்பாகவும் இல்லை; எதிராகவும் இல்லை.  குடிக்கின்றவர்கள் அது அவருக்கும் அதனால் பிறருக்கும் தீங்கிழைக்காத வண்ணம் குடிக்கலாம். குடியை வெறுப்பவர்கள், நிறுத்த நினைப்பவர்கள் குடிக்காமல் இருக்கலாம். என்னைக் கேட்டால் குடிக்கும் அளவினை குறைப்பேனே தவிர சாகும் வரைக்கும் குடிப்பேன் என்றுதான் சொல்வேன். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

அளவோடு இருந்தால் மதுவும் மருந்தாகலாம், அதிகமாக எடுத்தால் அமிர்தமும் நஞ்சாகலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சூரியன் அண்ணா,  என்ரை மனசிலை இருந்ததை எப்படியப்பா இப்படிச் சரியா கண்டு பிடிச்சனிங்கள்? :o

நான் எழுத வேணும் என்று நினைச்சனான். நீங்கள் எழுதிப்போட்டிங்கள். நாங்கள் சொல்லுறதாலை குடிக்கிறவன் யாரும் கேட்கப்போறதில்லை. ஆனால் குடிக்காமல் கூட இருக்கிறவங்களைப் பற்றி மட்டும் யோசியுங்கோப்பா என்று தான் சொல்லுவன்.

குடி ஒருத்தரின் வாழ்வை என்னவாக்கும் என்று சாகும் கணத்தில் கூட பார்த்திருக்கிறேன். எழுத்துக்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் அவை.

 

அண்ணாவிற்கு ஒரு கிழமை நத்தார் விடுமுறை இருந்ததால் நேற்று அவனுடைய நண்பர் ஒருவருக்கு  வீட்டில் பெயின்ட் அடிச்சு குடுத்திட்டு வந்து எங்கள் வீட்டிலிருந்து கதைத்து விட்டு அண்ணி பேசுவா என்று என்னுடைய வீட்டில் இருந்து இருவரும் மது அருந்திக்கொண்டிருக்கிறார்கள். நான் போகவும் கதை நடக்குது. நான் காலமை  8 மணிக்கு கடை திறந்து வீட்டை போக இரவு 12.30 கடுப்புத்தான் வந்திச்சு. போய்க் குளிச்சிட்டு உடுப்பு மாத்தி படுப்பம் என்டாலும் கதைச்சிட்டே இருக்கிறாங்கள், நான் கலைக்க பட்ட பாடு இருக்கே ஸப்ப்பப்பா.. 2.30 க்கு தான் முடிச்சாங்கள். :(   நான் படுக்க 3 மணி. எப்படி கடுப்பா இருக்கும் யோசியுங்க மக்கா. :o  அதனாலை நான் சொல்லவாறது என்ன என்றால் குடிக்காத அப்பிராணியளை தொல்லை பண்ணாமல் என்னவோ பண்ணுங்கப்பா. :icon_idea:

 

என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எது என்றாலும் நேசிக்கவும்,வெறுக்கவும் ஒரு நொடி போதும். ஒரு நிமிட கலக்கம்,கவலை அத்துடன் சரி. அதற்கு மதுவும் வேறு எதுவும் தீர்வாய் அமைந்திடாது. :icon_idea:

 

 

  • தொடங்கியவர்
மகா பிரபுக்களே வணக்கம் 
 
இந்த திரியை நான் மது என்னும் மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட பானத்தை அருந்தும் வேளைதான் திறந்தேன் .திரியை மட்டுமல்ல மனதையும் .............................
 
ஆனால் இன்று கூட ஒரு இசை முயற்சியை முடித்து விட்டு இந்த திரிக்குள் மீண்டும் வருகிறேன் ...........உண்மையில் இரண்டு போலியான விடயம் ,தவறான பார்வை மது அருந்துபவர்கள் பற்றி எம் சமூகத்தில் போலியாக சிந்திக்கப்படுகிறது .
 
* மது அருந்துபவர்கள் கெட்டவர்கள்
* மது  அருந்துபவர்கள்  இழிவானவர்கள் 
 
இதை கூறும் பலர் வாழ்க்கையின் அர்த்தம் ,புரியாமல் ,தட்டு தடுமாறி நிதானமின்றி வாழ்வோரையே என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் .............ஒரு வீதம் கூட மனித சிந்தனை ,செயல் அற்று வாழ்வோரே இதை பெரிது படுத்தி தம்மை உத்தமனாக காட்ட முனைந்திருக்கின்றனர் ,,,,,,,,,,,,,இது நான் பார்த்த அனுபவம் ............. :)
 
ஆனால் சிறி அண்ணா ,அர்ச்சுன் அண்ணா ,நிழலி கூறிய உண்மையான ,தம்மை ஏற்றுக்கொண்டு மனித மாண்புடன் .அவற்றை மதிக்கும் முகமாக ,தயக்கமின்றி கூறிய கருத்துக்களில் அவர்களின் மனித மாண்பை கண்டேன் ...........வாழ்க்கை என்பது நாம் வாழ்வதற்காகவே .நாம் இன்னொரு கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும் எம் கலாச்சாரம் என்னும் தெய்வீக வாழ்க்கைக்குள் வாழும்போது ........எமக்குத்தான் வாழ்க்கயின் சுவை ,இன்பம் திருப்தி அதிகமாக தெரியும் .அந்த வாழ்கையில் எந்த மனிதனும் தனது நாளாந்த ,கடமைகளை ,பொது நலன் சார்ந்த கடமைகளை ,தனது வாழ்வில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை ,கடமையை சரி வர செய்து கொண்டு ,தனக்கு கிடைக்கும் ஓய்வு நாளில் தன்னை உற்சாகமாக வைத்திருப்பது எந்த தவறும் இல்லை என்ற நான் கருதுகிறேன் .
 
நிழலி சொன்னது போல மனிதன் உருவாகிய காலத்தில் இருந்தே ,,,,,,,,,,,,,அதாவது இறைவன் மனிதனை படைத்த காலத்தில் இருந்தே இந்த மனிதனை உற்சாகப்படுத்தும் பானம் உருவாக்கப்பட்டுள்ளது ................நான்  பின்பற்றும் பைபிளின் படி கூட அதற்கான சான்றுகள் உண்டு ........6 நாட்களும் வேலை செய்து 7 ஆவது நாள் ஓய்வேடு என்றொரு வசனம் சொல்கிறது 
 
இன்னொரு வசனம் சொல்கிறது  உழைத்து களைத்த நீ  உனக்கு உற்சாகம் தரும் திராட்சை மதுவை அருந்தி நன்றாக உன்னை உற்சாகமாக வைத்துக்கொள் /...........
 
எனக்கு 5 நாட்களும் வேலை ...........சனி ஞாயிரு லீவு .இந்த சனி ஞாயிரை இசை சம்பந்தமான முயற்சிக்கு பயன்படுத்துவேன் ,,,,,,,,,,,,,வெள்ளிக்கிழமை ஒன்றுதான் அதுவும் வேலை முடிந்த பின் .......என்னை ஓய்வாக வைத்திருக்கும் நாள் .நிச்சயம் மது அருந்துவேன் ...........ஆனால் அதற்கு மேல் சாப்பிடுவேன் ..............அதற்கு எனது உடம்பே ஒரே ஒரு ஆதாரம் ........... :D
 
மற்றபடி எனக்கு நேரம் கிடைப்பதே அரிது /////////////அப்பிடி கிடைத்தால் நிச்சயம் வாசிப்பேன் ..
 
எனது பாடசாலை நண்பர் ஒருவருடன் மட்டுமே அதை பகிர்ந்து கொள்வேன் ...வேறு எவருடனும் சேர்ந்து வாசிக்க நான் விரும்புவதில்லை .தமிழ் கொண்டாட்டங்களுக்கு சென்றால் அந்தப்பக்கம் போவதும் இல்லை ..............ஆனால் கம்பனி பாட்டிகளிற்கு தவறாமல் வாசிப்பேன் ..................ஒட்டு மொத்தத்தில் உன்னை நீயே அறிவாய் என்பதற்கிணங்க வாழும் மனிதர்கள் மது அருந்துவது தப்பில்லை ..............ஆனால் தன்னையே தன்னால் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தயவு செய்து தொட்டும் பார்த்திடாதேயுங்க ................வரப்புயர ..............கோன் உயர ...............குடி உயர ................ :D  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

அப்பு ராசா நானும் கருத்து போட்டேனடா  :(  :D

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனும், நிழலியும், தமிழ் சிறியும் கருத்துக்களைப் பகிர்ந்த விதம் அருமை!

 

எனக்கு மதுவுடன் ஏற்பட்ட அறிமுகம் கொஞ்சம் வித்தியாசமானது!

 

ஒரு முறை கசூரினா பீச்சில், எனது நண்பனொருவன் 'மெண்டிஸ் ஸ்பெசல்' அடிச்சுப் போட்டுக்......

 

கண்களிரண்டும் ஒன்றை, ஒன்று தேடுதே.... காலமினி மேல் வந்து ஒன்றாய் நம்மை சேர்க்குமோ..... என்ற மாதிரிப் பாடத் தொடங்கினான்! அதுவரை அவனுக்கு ஒரு ' காதல்' இருந்தது எம்மில் ஒருவருக்குமே தெரியாது!

 

அன்று பின்னேரம், இன்னுமொருவன் பஸ்சிலிருந்து இறங்கும்போது, யாழ் பஸ் நிலையத்தில் சத்தி எடுத்து விட்டான்!

 

அடுத்ததாக, அவன் சொன்ன வசனம் இன்னும் ஆச்சரியமாக இருந்தது!

 

மச்சான் ஆராவது பாக்கிறாங்களா? :D

 

இதுக்குப் பிறகு, கன காலம் மதுவைத் தொடப் பயமாக இருந்தது!

 

அதன் பின்னர், குடும்ப உறவுகளில் இருந்து தூர வாழ வேண்டிய நிலைமை, தனிமை, வெறுமை போன்ற காரணங்களால், பார்டிகளில் மது அருந்தத் தொடங்கினது நினைவில இருக்கு! பொதுவாக, மது அருந்துபவர்களிடம் நல்ல மனம் இருக்கும்! சில பிரச்சனைகளை, மனம் திறந்து கதைக்க, மது சில சந்தர்ப்பங்களைத்  திறந்து விட்டிருக்கின்றது என்பது உண்மை!

 

ஆனால் என்றுமே தனியாக இருந்து மது அருந்த என்னால் முடியாது! ஏனோ தெரியாது, என்றைக்கும் மதுவைத் தேடிப்போனதில்லை! அது இல்லாமல், வருடக்கணக்கிலும் என்னால் இருக்க முடியும்!

 

ஆனால் ஒன்று மட்டும் பிடிக்கவே பிடிக்காது! ஒருவர் குடிப்பதைக் காரணம் காட்டி, மற்றவர் தன்னைப் 'பெரிய மனிதர்' ஆக்குவது! :D

  • தொடங்கியவர்

அப்பு ராசா நானும் கருத்து போட்டேனடா  :(  :D

ஐ ஆம் சோ சொறி பாஸ் நீங்கள் என் இரத்தம் அதனால் அங்க போடல .என்னைப்போல நீங்க ஒருவர் பாஸ் .............. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு ராசா நானும் கருத்து போட்டேனடா  :(  :D

 

திருப்பித்திருப்பி "குடி குடியை கெடுக்கும்" எண்டு சொல்லுவாங்கள் எண்டு போட்டு நான் இந்தப்பக்கம் வரவேயில்லை...freu.gif

  • கருத்துக்கள உறவுகள்
இங்கு குடிப்பவர்கள் பெரும்பான்மையானோர் தாங்கள் வீட்டில் இருந்து டீசன்டாக குடிக்கிறோம் என எழுதி இருக்கிறார்கள். ஏன் அவர்கள் வெளியில் போய் குடிப்பதில்லை? ஓவராய்க் குடிச்சால் தேவையில்லாமல் கதைக்கப் போய் அடி,பிடி சண்டையில் முடியும்;அவர்கள் உள் மனதில் இருக்கும் நாத்தங்கள் வெளியில் வரும் என்று தானே!.மான,மரியாதைக்குப் பயந்து வீட்டில் இருந்து அமசடக்காய் குடிக்கிறார்கள் :)
 

 

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பழக்கங்களோடு வாழவேண்டும் என்ற கொள்கை பற்று நிறைந்த குடும்ப சூழல் காரணமாக குடிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் பதின்ம வயதில் இருந்த போதிலும் குடிக்கவில்லை. 14 வயதில் கொப்புளிப்பான் வந்த போது கருப்பணி குடிப்பது நல்லது என்ற அறிவுரையைக் கூட வைராக்கியமாக மறுத்துவிட்டேன். இலண்டன் வரும் வழியில் என்போன்ற இளைஞர்கள் எல்லாம் குடித்துக் கவிழ்ந்து குப்புறக்கிடந்தபோதும் மதுவுக்குக் கிட்டவும் போகவில்லை! அதே வைராக்கியம் இலண்டன் வந்தும் சில வருடங்கள் நீடித்தது. யூனிவேர்சிற்றிக்குப் போன முதல் நாள் தந்த சீஸையும் வைனையும் குடிக்காமல் இருந்தது மறக்கமுடியாதது. ஆனால் நண்பர்கள்/நண்பிகளை பெருக்க பப்பிலும் கிளப்பிலும் நேரத்தைச் செலவழிக்க வேண்டி வந்ததால் படிக்கப் போன மூன்று மாதங்களிலேயே அரைப் போத்தல் பிராண்டியை கலக்காமல் குடிக்கப் பழகியாயிற்று.

குடிப்பதற்கு என்று சில சட்டங்கள்/கட்டுப்பாடுகள் வைத்திருக்கின்றேன்.

1. மற்றவர்கள் விருப்பத்திற்காக/வற்புறுத்தலுக்காகக் குடிப்பதில்லை

2. தனிய இருந்து குடிப்பதில்லை

3. பகல் பன்னிரண்டு மணிக்கு முன்னர் மதுவைத் தொடுவதில்லை

4. எவ்வளவு குடிப்பது எப்ப நிறுத்தவது என்பதை தீர்மானிக்கும் அளவிற்கு நிதானம் வைத்திருப்பது

5. எனக்குத் தெரியாமல் மற்றவர்கள் ஊத்தித் தருவதைக் குடிப்பதில்லை

6. பார்ட்டிகள் நடக்கும்போது கிச்சனில் அல்லது கார்ப்பாக்கில் ஒளித்து இருந்து குடிப்பதில்ல. அப்படிக் குடிப்பவர்களுக்கு மரியாதையும் கொடுப்பதில்லை.

7. கவலை, துன்பம், வருத்தம் என்பதற்காக மதுவை நாடுவதில்லை.

இப்படி எல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தும் குளிருக்குள் நடைபாதையில் வெறியில் படுத்துக்கிடந்ததும் (விதி மீறல் #5), நெருங்கிய நண்பர்களின் கன்னத்தைப் பதம் பார்த்ததும் (விதி மீறல் #4), தெருப் பிச்சைக்காரனோடு கூடியிருந்து ஒரே சப்பட்டையைப் பகிர்ந்து குடித்ததும் (விதி மீறல் #4, #5) நடந்திருக்கின்றன. இனியும் நடக்கலாம்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.