Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் ....வாங்கோ ..2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருசமும் நான் விடுறதா இல்லை ,யாருடைய தலையிலாவது அடிச்சு சத்தியம் பண்ணி 

புதுவருச சத்தியப்பிரமாணம் செய்யுற முடிவோடதான் இருக்கிறேன் .பெரிசா ஒண்டுமில்லை 

இப்ப நாலஞ்சு வருசமா  எனக்கு நானே சொல்லுற விசயம்தான் .  உடம்பைக் குறைக்க வேணும் 

தொன்னூற்றி மூண்டு கிலோ எண்டது உங்களுக்கு சின்ன விசயமா தெரியலாம் .ஆனா 

அதை தூக்கி திரியுற எனக்குத்தான் தெரியும் அதின்ர பாரம் .வழமை போலவே மனுசி ஒரு 

பார்வை பாத்தா இதெல்லாம் நடக்கிற விசயமா எண்டு .

 

 

ஆனாலும் நான் முடிவோடதான் இருக்கிறேன் .வயசு கூடக்கூட  வாழ்க்கை  உயிர்ப்பயமும் 

மெல்ல மெல்ல எட்டிப்பாக்குது ,கடமை ,கண்ணியம்  எண்டு இருந்திட்டு  முத்திப்போன 

நேரத்தில கலியாணம் கட்டினதின்ர அருமை பெருமையாய் ரெண்டு சின்னனுகளும்

காலுக்க நிக்கேக்கதான் .நாட்டுக்கு நேர்ந்து விட்ட காலத்தில் நெஞ்சை நிமித்திக்கொண்டு 

எப்பவும் மேல போக ரெடியாய் திரிந்தது .ஞாபகமா வந்து தொலைக்குது .பிள்ளைகள் 

வளர்ந்து தங்கள் முயற்சியில் நிற்கும் வரைக்குமாவது நான் இருக்கோணும் .

 

ஆகவே நான் ஒரு முடிவோடதான் இருக்கிறேன் .புது வருசத்தில் முயற்சி செய்து பார்ப்பதாக ,

 

யாழ் உறவுகளே நீங்கள் என்ன விதமான சத்தியப்பிரமாணத்தில் இருக்கிறீர்கள் 

 

 

 

  • Replies 52
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரி ஆசைப்படுறியள். முயற்சி செய்து பாருங்கோ. வாழ்த்துக்கள். :D

 

 

பாஸ் நானும் சில வருடங்களுக்கு முன் என் உடம்பை இறுக்கமாக ,இரும்பாக வைத்திருந்தேன் பாஸ் ....................ஆனால் தற்போது அப்பி வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் fitness  செய்ய வெளிக்கிட்டேன் சில மாதங்கள் ஒழுங்காய் சென்றேன் .ஆனால் இப்போ அந்தப்பக்கம் போக சாத்தான் தடுக்கிறான் .அனால் மாதாந்தம் காசு மட்டும் வங்கியில் இருந்து ஓட்டமட்டிக்காக போகுது .அதை தடுக்கவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்.என் நிலை பாஸ் .............. :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் நானும் சில வருடங்களுக்கு முன் என் உடம்பை இறுக்கமாக ,இரும்பாக வைத்திருந்தேன் பாஸ் ....................ஆனால் தற்போது அப்பி வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் fitness  செய்ய வெளிக்கிட்டேன் சில மாதங்கள் ஒழுங்காய் சென்றேன் .ஆனால் இப்போ அந்தப்பக்கம் போக சாத்தான் தடுக்கிறான் .அனால் மாதாந்தம் காசு மட்டும் வங்கியில் இருந்து ஓட்டமட்டிக்காக போகுது .அதை தடுக்கவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்.என் நிலை பாஸ் .............. :D  :D

நம்மால முடியாத செயலை ஒருபோதும் முயற்சி செய்யக்கூடாது  :o  :lol:

சரி ஆசைப்படுறியள். முயற்சி செய்து பாருங்கோ. வாழ்த்துக்கள். :D

நன்றி அக்கா ,நீங்களும் முயற்சி செய்யுங்கோ  :D

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை குடிப்பதில்லை என்று சத்தியப்பிரமாணம் எடுத்து ஒரு வருடம் பட்ட கஷ்டத்தால் உந்த வேலைகளை இப்ப பார்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் சபதம் சத்தியம் ஒண்டும் எடுக்கிறேல்லை.....எல்லாம் மனக்கட்டுப்பாடுதான்......வைச்சால் குடுமி...அடிச்சால் மொட்டை எண்டுற அளவுக்கு வாழ்க்கையை இறுக்கிக்கொண்டு போற அளவுக்கும் வாழமாட்டன்.
 
இருக்கும் வரைக்கும் முடிந்தளவு நாலுபேருக்கு உதவிசெய்து.......நானும் குடும்பமும் வாழ வேண்டும். நான் பிறக்கும்போது எதுவும் கொண்டு வரவில்லை.இறக்கும் போதும் போதும் எதுவுமே கொண்டு செல்லப்போவதில்லை... :D
 
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் நல்ல முயற்சி! 

 

தளராது முயற்சி செய்யுங்கள்! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

 

என்னைககேட்டால் சூரிய நமஸ்காரத்துடன் ஒரு அஞ்சே, அஞ்சு ஆசனங்கள் மட்டும் சொல்லித் தருவேன்! 

 

மொத்தமாக எடுக்கும் நேரம், அதிகாலையில் 'முப்பது நிமிடங்கள் ' 

 

ஆயத்தம் எண்டு சொன்னால் தெரிவிக்கவும்! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தடவை குடிப்பதில்லை என்று சத்தியப்பிரமாணம் எடுத்து ஒரு வருடம் பட்ட கஷ்டத்தால் உந்த வேலைகளை இப்ப பார்ப்பதில்லை.

 

இப்ப என்ன பிராண்ட் பாவிக்கிறியள்?  :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை குடிப்பதில்லை என்று சத்தியப்பிரமாணம் எடுத்து ஒரு வருடம் பட்ட கஷ்டத்தால் உந்த வேலைகளை இப்ப பார்ப்பதில்லை.

நன்றி கிருபன் ,ஒரு முறை சந்தித்தாலும் உங்கள் உருவம் என் மனத்திரையில் இப்பவும் இருக்கு 

தொன்னூற்றி மூண்டு கிலோ எண்டது உங்களுக்கு சின்ன விசயமா தெரியலாம் .ஆனா 

அதை தூக்கி திரியுற எனக்குத்தான் தெரியும் அதின்ர பாரம் .

 

நந்து அண்ணா அவ்வளவு உடம்பா? :o நீங்கள் ஒல்லியாக இருப்பீர்கள் என நான் கற்பனை பண்ணியிருந்தேன். :rolleyes::)

உடற்பயிற்சி செய்வது நல்லது. :) (அதுக்கு பஞ்சியா இருக்குமே? :lol: )

 

உணவுக்கட்டுப்பாட்டை பேணுவது நல்லது.

  • கண்ட கண்ட இனிப்பு வகைகளை உட்கொள்வதை தவிர்ப்பது..
  • கொழுப்பு உணவு வகைகளை உட்கொள்வதை குறைப்பது.

அல்லது இந்த முறையை பின்பற்றுங்கள். :rolleyes:

 

1 kg குறைக்க வேண்டுமானால் 7700 கலோரி குறைக்க வேண்டும். :rolleyes:

 

ஒரு நாளில் சராசரியாக உடலில் தகனமடையும் (பயன்படுத்தப்படும்) கலோரி அளவு: 2000

 

சாதாரணமாக ஒரு நாளுக்கு நாம் உள்ளெடுக்க வேண்டிய ஆக குறைந்த கலோரி அளவு (minimum Calorie).
பெண்களுக்கு 1200
ஆண்களுக்கு 1500

 

எனவே தற்போதைய நிறையை தொடர்ந்து பேணுவதனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் 2000 கலோரியை உள்ளெடுக்கலாம்.

 

நிறையை குறைக்க விரும்பினால் 1500 ஐ உள்ளெடுக்கலாம். (அதன்படி ஒவ்வொருநாளும் 500 கலோரி படி குறைத்தால் 1kg குறைக்க கிட்டத்தட்ட 15 நாளெடுக்கும். :rolleyes:) விரைவில் குறைக்க வேண்டுமெனின் இக்கட்டுப்பாட்டுடன் சிறிதளவில் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். :D அல்லாமல் கொஞ்ச நாளிலேயே நிறையை குறைத்துக்காட்டுகிறேன் என வெளிக்கிட்டு ஒரு நாளுக்கு உள்ளெடுக்கும் கலோரிகளின் எண்ணிக்கையை நன்றாக குறைத்து விட்டால் மயக்கம் தான் வரும். :D சிலவேளை 1000 வரைக்கும் உள்ளெடுத்தால் உங்கள் உடல் நிலையை பொறுத்து போதுமாக கூட இருக்கலாம். 1000 ஐயும் விட குறைத்து உள்ளெடுக்காதீர்கள்.

 

எனக்கு தெரிந்தது இவ்வளவு தான். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அடிக்கவராதீர்கள். :rolleyes: அதிக விபரங்கள் தேவைப்பட்டால் நெடுக்ஸ் அண்ணா போன்ற இது சம்பந்தமாக நன்றாக தெரிந்தவர்கள் வந்து பதிலளிப்பது நல்லது. :)

 

பி.கு: கலோரிகளின் அளவை நீங்கள் வாங்கும் உணவு பொருட்களின் உறைகளில் பார்க்கலாம்.

 

சில நாடுகளில் Calorie (C - capital) என்றும் சில நாடுகளில் kcal என்றும் போட்டிருப்பார்கள். இரண்டும் ஒன்றுதான்.
1 Calorie = 1 kilocalorie = 1000 calories

 

சிலநேரம் small c இல் ஆரம்பிக்கும் கலோரியையும் kcal என பயன்படுத்துவார்கள்.

50 calories = 50 kcal (50,000 calories)

 

எனவே உணவு தொடர்பில் calorie, kilocalorie போன்றவற்றில் குழப்பம் கொள்ளாதீர்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் நல்ல முயற்சி!

தளராது முயற்சி செய்யுங்கள்! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

என்னைககேட்டால் சூரிய நமஸ்காரத்துடன் ஒரு அஞ்சே, அஞ்சு ஆசனங்கள் மட்டும் சொல்லித் தருவேன்!

மொத்தமாக எடுக்கும் நேரம், அதிகாலையில் 'முப்பது நிமிடங்கள் '

ஆயத்தம் எண்டு சொன்னால் தெரிவிக்கவும்! :icon_idea:

அதென்ன ஐந்து ஆசனங்கள்?? :unsure: சொன்னால் நாங்களும் செய்வமில்ல.. :D

உடற்பயிற்சி விடயத்தில் எப்பவுமே போராட்டம்தான்.. கடந்த ஆறுமாசமா ஏதோ பரவாயில்லாமல் போகுது.. ஒரு அஞ்சு கிலோ குறைக்கவேணும் எண்டு கனகாலமா கனவு காணுறன்.. :wub:

நானும் பத்து இறாத்தல் குறைக்க வேணும்!

கஷ்டமான காரியம், என்றாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு... ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போது,
புது வருட சபதம் எடுப்பது வழக்கம்.
வருடம் பிறந்து, ஒரு மாதம் கழிந்த பின்... என்ன சபதம் எடுத்தேன் என்று, எனக்கே... மறந்துவிடும்.
ஆதலால்... இப்போ சபதம் என்று எதுவும் எடுப்பதில்லை.
ஒவ்வொரு நாள் பிறக்கும் போதும்... இந்தந்த‌ விடயங்களில் அவதானமாக இருக்க வேண்டும் என்று, அதன் படி நடந்து வருகின்றேன்.

 

பிள்ளைகள் வளர்ந்து தங்கள் முயற்சியில் நிற்கும் வரைக்குமாவது நான் இருக்கோணும் .

 

ஆகவே நான் ஒரு முடிவோடதான் இருக்கிறேன் .புது வருசத்தில் முயற்சி செய்து பார்ப்பதாக ,

 

சிலருக்கு இயற்கையாகவே... உடம்பு அதிகமாக இருக்கும்.
சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும்.. ஒல்லியாகவே இருப்பார்கள்.
கூடுதலாக கோலா போன்றவற்றை அடிக்கடி பருகினாலும்... உடம்பு வைக்கும்.
உங்கள் சிறிய பிள்ளைகளை அடிக்கடி நினைத்தீர்களானால்...
உங்கள் உடம்பை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இது சுலபம். முதலில் காரை வில்லுங்கள். அப்புறம் இயன்ற வரை நடவுங்கள். வீட்டில.. கூவர் பண்ணுறது.. மாடிப்படியில் ஏறிறது இறங்கிறது.. வீட்டு வேலைகளை கவனித்துச் செய்து வந்தால்.. நிச்சயம்.. முன்னேற்றம் ஏற்படும். அத்தோடு ஒரு நல்ல சைக்கிள் வாங்கி (பாதுகாப்பு அணிகள் உட்பட) அதில் பயணியுங்கள். நிச்சயம்.. சிலிம்மா இருப்பீங்க. இன்றைய காலத்தில் பிள்ளையைப் பெத்துப்போட்டா காணும். அரசாங்கங்கள் வளர்த்துக் கொள்ளும். ஆகவே.. ஆரோக்கியமான வாழ்வு.. என்பது மனிசி.. பிள்ளைக்கு என்று சிந்திக்காமல்.. நான் இந்தப் பூமியில்.. தக்க வரை.. அதாவது.. வாழும் வரை நீடித்து வாழனும் என்று நினைச்சுக் கொண்டு வாழ்ந்தீங்கள் என்றால்.. அதனால்.. நீங்கள் மட்டுமல்ல.. உங்களைச் சார்ந்த அனைவரும் மகிழ்ச்சி உறுவர். வெறுமனவே மனசி.. பிள்ளைக்கு என்று இந்த உலகில்.. யாரும் வாழ்வதில்லை. அப்படியான குறுகிய வட்ட சிந்தனை கூட மனிதன் நோயில் வீழக் காரணமும் ஆகிறது. பரந்து சிந்திக்கனும்.. தனக்கான வாழ்வை தானே தெரிவு செய்து வாழும் போதுதான்.. மனிதன் பூரிப்படைவான். அதுதான் அவனுக்கு நித்திய சந்தோசம். அது உடலைக் கவனிக்க இயல்பாகத் தூண்டும். மனிசி பிள்ளைக்காக வாழ்பவர்கள்.. அவர்கள் வளர.. வயதாக.. தங்களின் மீதான ஈர்ப்பை இழந்து.. கவனிப்பை விட்டு.. நோயில் வீழ்ந்து மடிந்துவிடுவார்கள். சிந்தியுங்கள் மனிதர்களே. வரும் போது மனிசி பிள்ளைகுட்டியோட யாரும் வருவதில்லை. தனியனாக வருகிறோம். தனியனாக இந்தப் பூமியில் வாழ முடியும் என்ற இயல்பில் தான். இடையில் வருவது இடையில் போகும். ஆனால்.. நான் என் வாழ்க்கையை சுகித்து வாழனும் என்ற நினைவே உங்களை சுகத்தோடு வாழ வைக்கும். சுத்தமும்.. சுகாதாரமும் நிறைவான (எல்லா வகை சத்துக்களும் சரியான அளவில் உள்ள உணவு) உணவும்.. நோயற்ற வாழ்விற்கு எவ்வளவு முக்கியமோ.. நீடித்த கவலையும்.. மன அழுத்தமும்.. குடியும்.. புகையும்.. கெட்ட மாதும் அற்ற வாழ்க்கை கூட அதே நோயற்ற வாழ்க்கைக்கு முக்கியம். இவற்றை வீடு நிறைய வைச்சுக் கொண்டு.. மனசி.. பிள்ளை பற்றிய கவலையை வைச்சுக் கொண்டு நோயற்ற வாழ்வை தேடுவது கூட நோயை தான் கொண்டு வரும். மனதை எந்தப் பிடிமானமும் இன்றி வைச்சுக் கொள்ளும் போது தான்.. உடல் ஆரோக்கியம் அடைகிறது.இளமை பேணப்படுகிறது.  :)  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நூல்களில் இருந்து படித்துவிட்டுச் சொல்லவில்லை. வாழ்க்கையில் கடைப்பிடிப்பதால் சொல்கிறோம். இந்த வாழ்க்கையை எனது. நான் தான் தீர்மானிக்கிறது. மற்றவர்கள் அல்ல. நான் நல்லா நலமாக இருந்தால்.. நான் உறுதியாக மகிழ்வோடு இருக்க முடியும். அதனால் என்னைச் சூழ்ந்துள்ள.. சிலருக்கு என்றாலும்.. நன்மை கிட்டும். இந்த அடிப்படையில் தான் வாழ்க்கை இருக்கனுமே தவிர நான் வாழ்ந்தால் தான் மற்றவர்கள் வாழுவார்கள் என்ற கட்டாயத்தை மனதில் இறுக்கிக் கொண்டு வாழ்ந்தால்.. அந்த இறுக்கமே மரணத்திற்கு வழிசேர்க்கும். மனம் எப்போதும் எதிர்பார்ப்பற்ற இலகு நிலையில் இருப்பதே ஆரோக்கியம். எதிர்பார்ப்புக்களோடு வாழ அல்ல.. நாம் பூமிக்கு வந்தோம். எதிர்பார்ப்பற்ற இயற்கையோடு கலந்த வாழ்வுக்கே வந்தோம். அதனை சுகிப்பதே வாழ்க்கை ஆகும். மனிசி பிள்ளைக்காக வாழுதல்.. என்ற அந்த அழுத்தமே எம்மவர் பலரின் வாழ்வை நாசமாக்கிறது.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆண்டில் யாழிற்கு வருவதை.. 50% மாகக் குறைக்கலாம்... என்றும்.. வேண்டாத விடயங்களில்.. கருத்துச் சலசலப்புக்களில் இருந்து ஒதுங்கி  இருந்து.. மனதை இலகுபடுத்தி வைக்கனும் என்று முடிவு கட்டி இருக்கிறம். யாழிற்கு வருவதை குறைப்பது.. புதியவர்களின் வரவை கூட்டும். அரைச்ச மாவை அரைக்கிறதைக் குறைக்கும்.  :)  :icon_idea:

எது எது எப்பப்ப செய்யணுமோ அது அதை அப்பப்ப செய்திடணும்! காலம் நேரம் எல்லாம் பார்க்க இதென்ன சுபமுகூர்த்தமே? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

soup குடித்து வயிறை நிறைய பண்ணி சோறு போன்ற உணவுகளை குறைத்து உண்பது நல்லது. :)


நீங்கள் வீட்டில் தயாரிக்கலாம். :)

 

DSC_5135.JPG

அல்லது கடையில் வாங்கலாம். (packet soup ஐ விட பெட்டி soup சுவையானது. :))

 

packet soup

 

083302.jpg

 

பெட்டி soup (அனேகமாக ஒரு பெட்டிக்குள் 4 சிறிய soup packet வைத்திருப்பார்கள்.)

020698.jpg

(படங்கள்: google)

  • கருத்துக்கள உறவுகள்
நந்தன் அவர்களுக்கு!
 
பல உறவுகள் உங்களுக்கு உதவ வந்திருப்பது கண்ட பூரிப்பில் உங்களுடைய உடம்பு இன்னமும் பருத்து எடையும் கூடிவிடும். ஆகவே நான் தரும் அறிவுரை;... இத்திரியை மூடிவிட்டு ஏதாவது வெட்டிக் கொத்தும் மதத்தில் சேரந்துவிடுங்கள். அவர்கள் வெட்டி எடுத்து மேலதிக எடையைக் குறைத்துவிடுவார்கள். :D  :D  :icon_idea:   
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன பிராண்ட் பாவிக்கிறியள்? :icon_mrgreen:

பிராண்ட் என்று பார்ப்பதில்லை. ஆனால் தனியக் குடிப்பதில்லை. கூட்டு இல்லாவிட்டால் போத்தல் பக்கத்தில் இருந்தாலும் தொடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆண்டில் யாழிற்கு வருவதை.. 50% மாகக் குறைக்கலாம்... என்றும்.. வேண்டாத விடயங்களில்.. கருத்துச் சலசலப்புக்களில் இருந்து ஒதுங்கி  இருந்து.. மனதை இலகுபடுத்தி வைக்கனும் என்று முடிவு கட்டி இருக்கிறம். யாழிற்கு வருவதை குறைப்பது.. புதியவர்களின் வரவை கூட்டும். அரைச்ச மாவை அரைக்கிறதைக் குறைக்கும்.  :)  :icon_idea:

 

அப்பாடா இப்பவாவது அரைச்ச மாவே அரைக்கிறீர்கள் என்று ஒத்துக் கொண்டீர்களே மிக்க நன்றி :lol:
 
பிகர் செட்டாயிடிச்சா வாழ்த்துக்கள் :rolleyes:  :D
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில பேப்பர் , விளம்பரம்  போடுற கம்பனி இருந்தால் அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது  இரண்டு மாதம் வேலை வாங்கிச் செய்யுங்கள். எல்லாம் சுமூகமாய் முடியும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.