Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம் சிறப்புப் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம் சிறப்புப் பேட்டி:-
01 ஜனவரி 2014


உங்கள் மீதான விமர்சனங்களுக்கு வருவோம். தமிழ் மக்கள் பிரச்சினைகளில் நீங்களும் சரி ‘தி இந்து’வும் சரி… தமிழ் விரோத அணுகுமுறையோடே செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?


ram_CI.jpg

 

இந்தியாவின் முக்கியமான, மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.

எந்த வயதில் பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது?

பள்ளிக்கூட நாட்களிலேயே. குடும்பத்திலும் அதை எதிர்பார்த்தார்கள். ஒரு பத்திரிகையை நடத்தும் குடும் பத்தில் இது சகஜம் இல்லையா?

உங்கள் தந்தை நரசிம்மன் பத்திரிகையாளர் அல்ல; நிர்வாகத்தில்தான் இருந்தார் அல்லவா?

ஆமாம். குடும்பத்தில் அப்போதே எங்கள் எல்லோருக்கும் இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பத்திரிகையின் நிர்வாக இலாகா அல்லது ஆசிரியர் இலாகா. அதற்கேற்ற கல்வியும் பயிற்சியும் முக்கியம். எனக்குச் சின்ன வயதிலிருந்தே எழுத்து ஆர்வம் இருந்ததால், ஆசிரியர் இலாகாவையே தேர்ந்தெடுத்தேன். இந்த விஷயத்தில் எனக்கு முன்மாதிரி என்றால், கஸ்தூரி ரங்க ஐயங்கார். நேரில் பார்க்கவில்லை என்றாலும், அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்களே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் பத்திரிகையாளர் மட்டும் அல்ல; சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்தவர்.

திலகரின் ஆதரவாளர். பூரண சுதந்திரத்துக்காகக் குரல்கொடுத்த காங்கிரஸின் தீவிரமான குரல்களில் ஒன்று அவருடையது. அடுத்து, நீண்ட கால ஆசிரியர்களாக இருந்த கஸ்தூரி ஸ்ரீனிவாசனும் ஜி. கஸ்தூரியும். கஸ்தூரி ஸ்ரீனிவாசனின் கச்சிதத்தை எல்லோருமே குறிப்பிடுவார்கள். அதிகம் எழுத மாட்டார். ஆனால், எல்லாப் பிரதிகளையும் பார்த்துத் திருத்துவார். சின்னத் தவறுகள்கூட அவரை ரொம்பவும் சங்கடப்படுத்தும். ஜி. கஸ்தூரி வடிவமைப்பிலும் அச்சு நேர்த்தியிலும் பத்திரிகையை அடுத்த தளத்துக்கு எடுத்துச்சென்றவர்.
இவர்களை எல்லாம் அருகில் இருந்து பார்த்தபோது, எழுத்தார்வம் கொண்ட ஒருவனுக்கு ஆசிரியர் இலாகாதானே ஆசையைத் தூண்டும்? ஆனால், வேலையில் விசேஷ சலுகை எல்லாம் கிடையாது. நிருபராகத்தான் சேர்ந்தேன். அடுத்து உதவி ஆசிரியர் பணி. என். ரவி, கே.வேணுகோபால், மாலினி பார்த்தசாரதி எல்லோருமே இப்படித்தான் உருவானோம்.

பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம் உங்களுடையது. ஒரு காலகட்டம் வரை ‘தி இந்து’வும்கூட காங்கிரஸை ஆதரிக்கும் பத்திரிகையாகவே இருந்தது. நீங்கள் இடதுசாரியாக ஆனதையும் தீவிர அரசியலில் பங்கேற்றதையும் குடும்பம் எப்படிப் பார்த்தது?

அதிர்ச்சியாகத்தான் பார்த்தார்கள். கொஞ்சம் பேர் எதிர்க்கவும் செய்தார்கள். அதே அளவுக்கு ஆதரவும் இருந்தது. ஆனால், அரசியலில் தீவிரமாக இறங்கியபோது, நானே பத்திரிகையை விட்டு விலகியிருந்தேன். கிட்டத்தட்ட ஏழு வருஷம் கட்சி வேலைகளில் தீவிரமாக இருந்தேன். நெருக்கடிநிலைப் பிரகடனத்தின்போதெல்லாம் அதை எதிர்த்து வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு காலகட்டத்தில் ‘தி இந்து’ நிர்வாகத்துக்கு எதிராக நடந்த ஒரு பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது நான் ஊழியர்கள் பக்கம் இருந்தேன். ஆனால், குடும்பத்தினர் யாரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடவில்லை.

போபர்ஸ் செய்தி ‘தி இந்து’வுக்கே புலனாய்வு இதழியல் மீது ஒரு புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. ஆனால், அதற்குப் பின்னர் - நீங்களே தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த காலகட்டத்திலும்கூட - அப்படிப்பட்ட ஒரு பெரிய ‘ஸ்கூப்’ செய்தி வெளிவரவில்லை. ஏன்?

போபர்ஸுக்கு முன்பே 1981-ல் ஒரு பெரிய சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினோம். இந்தியா நெருக்கடியில் இருந்த காலகட்டம் அது. சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) உதவ முன்வந்தது. அதேசமயம், ஏராளமான நிபந்தனைகளை இந்தியா ஏற்க வேண்டியிருந்தது. அந்த நிபந்தனைகளின் பின்னணியை அம்பலப்படுத்தினோம். அதேபோல, தாராப்பூர் அணு உலைக்கு அமெரிக்கா எரிபொருளைப் படிப்படியாகக் குறைத்தபோது, இந்தியா நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தையை வெளியே கொண்டுவந்தோம்.

இவை எல்லாம் அன்றைக்குப் பெரிய செய்திகள். போபர்ஸ் செய்திக்குப் பிறகும் அவ்வப்போது செய்திருக்கிறோம். சமீபத்திய உதாரணம் ‘விக்கிலீக்ஸ்’. ஆனால், போபர்ஸுடன் இவற்றை ஒப்பிட முடியாது என்பது உண்மைதான். அப்படி ஒரு காலச் சூழல் அமையவில்லை என்றும்கூடச் சொல்லலாம். உண்மையில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டுவர ஒரு அணியே செயல்பட்டோம்.

செய்தியில் கோணம் கலக்கக் கூடாது என்ற கொள்கையை வலியுறுத்துபவர் நீங்கள். ஒரு காலத்தில் பத்திரிகை படித்தால்தான் செய்தியைத் தெரிந்துகொள்ளலாம் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படியல்ல; இணையம் - சமூக ஊடகங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், 24 மணி நேரத் தொலைக்காட்சிகளே திணறுகின்றன. முந்தைய நாளே எல்லாச் செய்திகளும் வாசகர்களை அடைந்துவிடும் நிலையில், மறுநாள் பத்திரிகையிலும் வெறும் தகவல்களே செய்தியாக வந்தால் எடுபடுமா?

உண்மைதான். பெரிய சவால்தான் இது. ஆனால், இன்றைக்கும் இணையமோ தொலைக்காட்சிகளோ பத்திரிகைகளைப் போல செய்திகளை ஆழமாகக் கொடுப்பதில்லை. இத்தகைய சூழலில், பத்திரிகைகள் ஒரு நிகழ்வைத் தருகின்றன என்றால், வெறும் சம்பவத்தை மட்டும் செய்தியாகத் தராமல், அதன் பின்னணி, அதையொட்டிய தகவல்கள் என்று ஒரு திரட்டாகவும் சுவையாகவும் செய்தியை அளிப்பதன் மூலம் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு காரணத்தை நாம் சாக்காக்கிக் கொள்ளலாம். ஆனால், செய்தியில் நம் பார்வைகளையும் முன்முடிவுகளையும் கலந்து கொடுத்தால் என்னவாகும்? ஆளாளுக்குச் செய்தியில் கை வைத்தால், படிக்கும் வாசகருக்குக் குழப்பம்தான் வரும்.

எப்போதுமே மதவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் ‘தி இந்து’ கடுமையாக இருந்திருக்கிறது. ஆனால், மதவாத எதிர்ப்பில் காட்டப்படும் தீவிரம், சாதிய எதிர்ப்பில் இல்லை என்ற விமர்சனம் ‘தி இந்து’ மீது உண்டு…

உண்மைதான். இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். சாதி நம் நாட்டின் பெரும் சாபம். அதை ஒழிக்க வேண்டிய கடமை எல்லோருக்குமே இருக்கிறது. முக்கியமாக ஊடகங்களுக்கு. ஒரு காலகட்டம் வரை நாம் போதிய கவனம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் நினைத்தோம். ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கும்போது அதன் போதாமை புரிகிறது. அதே சமயம், இதற்கான பின்னணியில் பல காரணிகள் உண்டு.

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலும் சரி; சுதந்திரம் அடைந்த சூழலிலும் சரி, மக்களிடம் பிளவை உண்டாக்கும் செய்திகளைத் தவிர்க்க வேண்டும்; ஒற்றுமைதான் முக்கியம் என்ற கொள்கையை அன்றைய பத்திரிகைகள் பலவும் கடைப்பிடித்தோம். அப்புறம், சாதியப் பிரச்சினைகள் பல வெளியே தெரியவராமல் உள்ளூருக்குள்ளேயே அசமடக்கப்பட்டன. அப்புறம், இந்தத் தொழிலில் ஏனையோருக்கு இல்லாமல் இருந்த பிரதிநிதித்துவம். இன்றைக்கும் பத்திரிகைத் துறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இப்படிப் பல காரணிகள். ஆனால், இப்போது சரியான திசையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன்.

ஊழியர்கள் நலனுக்குப் பேர்போனது ‘தி இந்து’ குழுமம். ஆனால், 135 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாகக் குடும்ப நிர்வாகத்திலிருந்து தொழில்முறை நிர்வாகத்துக்கு (புரொஃபஷனல் மேனேஜ்மென்ட்) மாற்றப்பட்ட பின் கொண்டுவரப்பட்ட ஆசிரியர், தலைமை நிர்வாக இயக்குநர் இருவரும் ஒரே நாளில் பணியிறக்கம் செய்யப்பட்டபோது, ஊழியர் பணிப் பாதுகாப்பில் நீங்கள் காட்டும் அக்கறை கேள்விக்குள்ளானது…

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. ‘தி இந்து’ குழுமத்தின் பெறுமானம் என்பது அதன் வியாபாரம், சந்தை மதிப்பை மட்டும் உள்ளடக்கியது இல்லை; அது காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் மதிப்பீடுகள், அறநெறிகளையும் உள்ளடக்கியது. அது கேள்விக்கு உள்ளானபோதுதான் மீண்டும் குடும்ப நிர்வாக முறைக்குத் திரும்பினோம். ஏனென்றால், இந்த மாதிரி அடிப்படை மதிப்பீடுகளைப் பேணுவதில் உரிமையாளர்களும் இயக்குநர்களுமாகிய எங்களுக்குள் என்றைக்குமே இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.

அதேசமயம், தொழில்முறை நிர்வாகத்தை (புரொபஷனல் மேனேஜ்மென்ட்) குறைத்து மதிப்பிட முடியாது; தொழில்முறை நோக்கு (புரொபஷனலிஸம்) இல்லாத ஓர் ஊடக நிறுவனம் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாது என்பதையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். ஆகையால், இனி தொழில்முறைப் பாதையில்தான் செல்லப்போகிறோம்; ஆனால், வெளியாட்களும் குடும்பத்து ஆட்களும் இணைந்து பங்கேற்பதாக அது இருக்கும்.

தமிழ் அடித்தளத்திலிருந்து எழுந்த ‘தி இந்து’ தமிழ்க் கலைகளுக்கும் நுண்கலைகளுக்கும் பெரிய கவனம் கொடுத்திருக்கிறது. ஆனால், தமிழ் அடையாளத்தின் மையமான மொழி விஷயத்தில் எப்போதும் விளிம்பு நிலையிலேயே இருந்திருக்கிறது. என்ன காரணம்?

அக்கறை இல்லாமல் இல்லை. அதைச் செய்யக் கூடிய ஆட்கள் எங்களில் இல்லை என்பதும் செய்யக்கூடியவர்களை எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதும்தான் காரணம். அந்தக் குறையை எல்லாம் போக்கத்தான் இப்போது தமிழில் ‘தி இந்து’வைக் கொண்டுவந்திருக்கிறோம்.

ஆங்கிலத்திலிருந்து பிராந்திய மொழிகளில் அடி எடுத்துவைக்கும் முயற்சியைத் தமிழிலிருந்து தொடங்கியிருக்கிறீர்கள். தமிழ் அனுபவம் என்ன சொல்கிறது?

தமிழில் நல்ல விஷயங்களைக் கொடுத்தால் அதை வரவேற்க ஒரு பெரும் வாசகர் கூட்டம் இருக்கிறது என்பதும், ஆங்கிலத்தைவிட தமிழில் நாம் சொல்லும் விஷயம் எல்லாத் தரப்பு மக்களையும் போய்ச் சேர்கிறது என்பதும் தமிழ்ச் சூழல் சார்ந்து புரிந்துகொண்டது. சந்தை சார்ந்து சொல்ல வேண்டும் என்றால், பிராந்திய மொழி இதழியலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பது புரிகிறது. எனினும், ஆங்கிலத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவில் அது ஆழ வேரூன்றி இருக்கிறது. ஆங்கில இதழியல் நாடு முழுவதும் சென்றடைவதோடு, சர்வதேசக் கவனத்தையும் பெறுகிறது.

அடுத்து என்ன மாதிரியான திட்டங்களில் ‘தி இந்து’ இறங்கும்?

பேசிக்கொண்டிருக்கிறோம். தென்னக மொழிகளிலிருந்து வரிசையாகத் தொடரலாம்.

சரி, பத்திரிகையாளர் பார்வையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இந்தியாவைப் பார்த்திருக்கிறீர்கள். இந்தியாவின் பலம், பலவீனம், அது எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

பலம் - சோதனைகளுக்கு நடுவிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு நாம் வளர்ந்துகொண்டிருப்பது. பலவீனம் - சமத்துவமின்மை; பாகுபாடு; அதனால் விளைந்திருக்கும் வறுமை. மிக அடிப்படையான தேவைகள் கல்வியும் மருத்துவமும். இங்கு ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் கிடைக்கும் கல்வி, மருத்துவ வசதிகளை ஒப்பிடுங்கள். எவ்வளவு பெரிய வேறுபாடு? இந்தப் பிளவுதான் நம் முன் இருக்கும் பெரும் சவால் என்று நினைக்கிறேன்.

இந்திய வரலாற்றில் நடந்த மாபெரும் வரலாற்றுத் தவறு என்று எதைச் சொல்வீர்கள்?

இந்திரா பிரகடனப்படுத்திய நெருக்கடிநிலை.

சமகாலத்துக்கு வருவோம். மோடி X ராகுல்: உங்கள் கருத்து என்ன? மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுமா?

மோசமான சூழல். தேர்தலில் என்னவாகும் என்று கேட்டால், காங்கிரஸின் ஊழல்கள், மோசமான கொள்கைகளின் விளைவாக, பந்தயத்தில் மோடி முந்தலாம்; ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா என்று கேட்டால், எனக்கு ஆழமான சந்தேகம்தான்.

மோடியின் பேரலை ஒட்டுமொத்த இந்தியாவையும் சூழும் என்று பலரும் ஆரூடம் கூறும் நிலையில், நீங்கள் தொடர்ந்து மோடியை எதிர்த்து எழுதியும் பேசியும் வருகிறீர்கள். மோடி ஏன் கூடாது என்று நினைக்கிறீர்கள்?

சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு மாபெரும் பிளவு சக்தி. எல்லோராலும் பழிக்கப்படும் அவரது பெருமை 2002 கலவரங்களில் அவருக்கும் அவரது அரசுக்கும் இருந்த பங்கில் வேர்கொண்டது. அந்தப் பெயரை நீக்குவதற்கான தந்திரம்தான் ‘விகாஸ் புருஷ்’ அல்லது ‘வளர்ச்சியின் நாயகன்’ படிமம். சட்டம், அரசியல், தார்மீகம் ஆகிய எந்த அடிப்படையில் பார்த்தாலும் 2002-ல் நடந்தவை இப்போதைக்கு மறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

2002-ல் நடந்ததற்கும் இந்துத்துவச் சக்திகளின் அடிப்படை நோக்கங்களுக்கும் இடையே அறுக்க முடியாத தொடர்பு இருக்கிறது. மோடி பிரதமராகும்பட்சத்தில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகவே ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி பிரதமராவது இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பேரபாயமாக அமையும் என்பது தெளிவாகத் தெரியும்.

ஒருபுறம் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருக்கிறது; இன்னொரு பக்கம் பா.ஜ.க-வையும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், இடதுசாரிகள் எப்படி வலுவாக இருக்க வேண்டும்? ஆனால், அவர்களோ காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஓர் இடதுசாரியாக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இடதுசாரி இயக்கம் என்பது, எந்நேரமும் வேட்டையாடப்படும் அபாயத்தின் நடுவே செயல்படுவதுதான். வெற்றிகள், தோல்விகள், எழுச்சிகள், வீழ்ச்சிகள் எல்லாம் இடதுசாரிகளுக்கு சகஜமானவை. அதேசமயம், இப்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது. ஆனால், இந்தப் பின்னடைவிலிருந்து மீண்டெழுவோம் என்றும் இந்தியாவில் ஒருநாள் இடதுசாரிகள் மாபெரும் சக்தியாக உருவெடுப்போம் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

உங்கள் மீதான விமர்சனங்களுக்கு வருவோம். தமிழ் மக்கள் பிரச்சினைகளில் நீங்களும் சரி; ‘தி இந்து’வும் சரி… தமிழ் விரோத அணுகுமுறையோடே செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்குக் கொஞ்சம் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஓர் உண்மை தெரியுமா? இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி இந்திய அளவில் வேறு எந்தப் பத்திரிகையைவிடவும் அதிகமாக எழுதியிருப்பது ‘தி இந்து’தான். அதிலும் 1983 இனப்படுகொலைக்குப் பின், தமிழ் ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகளையும் தமிழர் போராட்டங்களையும்பற்றி விரிவான செய்திகளையும் கட்டுரைகளையும் ‘தி இந்து’ வெளியிட்டிருக்கிறது.

நானும் டி.எஸ். சுப்பிரமணியனும் சேர்ந்து எடுத்த பிரபாகரனின் விரிவான பேட்டி இந்திய அளவில் பேசப்பட்ட ஒன்று. ஜெயவர்த்தனே அதிபராக இருந்தபோது ‘தி இந்து’ செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார். நான் கொழும்பு சென்று ஜெயவர்த்தனேவுடன் பேசினேன்; சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில் குரல் எழுப்பினோம்; அவர் விடுவிக்கப்பட்டார். இவை எல்லாம் வரலாறு.

விடுதலைப் புலிகளை ஆரம்பத்தில் நாங்கள் பரிவோடு தான் அணுகினோம்; அவர்களுடைய நியாயங்களை எழுதினோம். ஆனால், ரொம்ப சீக்கிரமே அவர்கள் மிகக் குரூரமாகத் தங்கள் முகத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனைய ஆயுதக் குழுக்கள், போராட்டத் தலைவர்கள் எல்லோரையும் அழித்தொழித்தார்கள். பின், வெவ்வேறு காலகட்ட உரையாடல்களின்போது பிரபாகரனின் அரசியல் அறியாமையும் அவருடைய நோக்கங்களும் புரிந்து விட்டன. உண்மையில், பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட்.

துப்பாக்கிகள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையில் துளியும் பேச்சுவார்த்தைகளிலோ ஜனநாயகத்திலோ இல்லை. ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதே இது எனக்குத் தெளிவாகிவிட்டது. தொடர்ந்து அவர்கள் நடத்திய அரசியல் படுகொலைகள், செய்த அட்டூழியங்கள், பேச்சுவார்த்தைகளில் அவர் வீணடித்த பொன்னான வாய்ப்புகள், எல்லாவற்றுக்கும் மேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை… புலிகளை எதிர்த்து எழுத இவை எல்லாம்தான் காரணங்கள். புலிகள் எதிர்ப்பு என்பது எப்படி இலங்கைத் தமிழர்கள் அல்லது தமிழ் விரோதப் போக்காகும்?

இலங்கைப் பிரச்சினை மட்டும் அல்ல; காவிரி, முல்லைப் பெரியாறு என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் பெரிய அளவிலான கவனம் கொடுக்கவே செய்திருக்கிறோம். ஆனால், எது உண்மையில் சாத்தியமோ, எது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறதோ அதையே எழுதுகிறோம். போலித்தனமோ, இரட்டை வேடமோ போடுவது இல்லை.

புலிகள் எதிர்ப்புதான் தமிழீழ எதிர்ப்பாகவும் உருவெடுத்ததா?

இல்லை. தொடக்கம் முதலே ‘தி இந்து’ தனித் தமிழீழம் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் அதுதான். அரசியல் சாத்தியமே இல்லாதது தமிழீழம்; அது அமைந்தால் நல்லதும் அல்ல.

தமிழீழம் சாத்தியம் இல்லை; நல்லது இல்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள் தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்; அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்; அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு அனுமதிக்கப்படுவதுகூட இல்லை.

அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.

உங்கள் நண்பர் ராஜபக்‌ஷ முன்னெடுத்த இறுதிப்போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும் போர்க் குற்றங்கள் நடந்ததும் இப்போது அம்பலமாகிவிட்டது. என்ன சொல்கிறீர்கள்?

போர்களை ஆதரிப்பவன் அல்ல நான். முன்னரே சொன்னேன் – பிரிவினையும் துப்பாக்கிகளும்தான் தீர்வு என்ற முடிவில் பிரபாகரன் தீர்மானமாக இருப்பதை உணர்ந்த பின்தான் விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன் என்று. இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசே நடவடிக்கை எடுக்க ராஜபக்‌ஷ தயக்கமின்றிச் செயல்பட வேண்டும். அதேசமயம், இந்த விவகாரம் மட்டும் பிரதானம் இல்லை; மீள்கட்டமைப்பும் உச்சபட்ச அதிகாரப் பகிர்வும் வேண்டும். அவைதான் தமிழர்களின் எதிர்கால நலனை நிர்ணயிக்கும்.

ஒரு காலத்தில் திராவிட நாடு கோரிக்கை இங்கு இருந்தது; அந்த அளவில் இல்லாவிட்டாலும், தனித் தமிழ்நாடு கோரிக்கை இன்றும் உயிரோடு இருக்கிறது. பிராந்திய உணர்வுகள் மேலெழும் சூழலில், இன்னும் நூறாண்டுகளுக்குப் பின் தமிழகம் எப்படி இருக்கும்; இந்தியா எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

கற்பனைக்கு அப்பாற்பட்ட கேள்வி இது. எப்படி இருக்கும் என்பதைவிட, எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்லலாம். ஏழை - பணக்காரர் பிளவுகள் அற்ற மக்கள் நலன் பேணும் நாடாக இந்தியாவும் அதன் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

the hindu

- தொடர்புக்கு: samas@kslmedia.in

படம்: ம.பிரபு

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101117/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

kslmedia என்பது இந்து நாளிதழை நடத்தும் குழுமம்தானே.. தங்களைத் தாங்களே பேட்டி கண்டு போடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹஹா ஹிந்து தமிழுக்காக பேட்டி எடுத்து போட்டு இருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம மு .க  எழுதுற மாதிரிதான் இதுவும்.  நானே கேள்வி ,நானே பதில் <_<

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சாத்தியமாகக் கூடாததை... சாத்தியமாக்கிக் காட்டியதற்காகத் தானே புலிகளை அழித்தீர்கள். தெரிஞ்ச விசயம் போங்கடா.. போய் மேல போற வழியைப் பாருங்க. வந்திட்டார் எங்களுக்கு புத்தி சொல்ல.  :rolleyes:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி என்ற பொடியர் இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வண்ணம் இந்திய சுதந்திரம் என்ற கோரிக்கையை வைத்தபொழுதும் இப்படித்தான் சாத்தியமே இல்லை என பலர் வாதிட்டனர்.

 

காந்தியும் தளராமல் முயற்சித்தார், முடிவை காலமே கணித்தது. விடுதலையை தீர்மானிப்பது இந்து ராம் மாதிரி குளிரூட்டப்பட்ட அறையில் அமர்த்து மேதாவித் தனமாக எழுதும் மேட்டுக்குடி மாக்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர் விரோத போக்கை, (நடு நிலை அல்ல) பத்திரிகை நாகரீகத்துடன் சொல்லுகிறார் போலும் . ஐயா இனியாவது ஈழ தமிழருக்கு தீர்வை சொல்லுவீங்களா. சொல்ல மாட்டீங்கள்.

எத்தனை பேர் வந்தாங்க..... நடு நிலைமை என்றாங்க, சகோதர படுகொலை என்றாங்க, புலி என்றால் கிலி. வாந்தி எடுத்தாங்க.

இப்பவும் எடுக்கிறாங்க. தீர்வை கேட்டா 1948 இல் போய் நிக்கிறாங்க.

நீங்கள் ஸ்ரீ லங்காவில் பெற்ற சலுகைகள்??, உமக்கும் அந்த சொறி லங்காவிக்கும் தான் வெளிச்சம்.

உண்மைகள் கசக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கசக்கும் என்று தெரிந்தும் கனடாவுக்கு அகதியா ஓடி வரவா புளொட்டில் போய் சேர்ந்தீர்கள். வந்திட்டார்ய்யா நாட்டாமை.. தீர்ப்புச் சொல்ல.  :D  :lol:


தமிழீழம் ஒன்றும் வெறுமனவே புலிகளின் கனவல்ல. தமிழீழம் என்பதை தங்களின் இயக்கங்களின் பெயரில் பதித்தவர்கள் எல்லாம்.. மக்களுக்குச் சொல்லிக் கொண்டது தமிழீழம் அமைக்கவே போராடிறம் என்று என்பதை சிலர் சுய வசதிக்கு ஏற்ப மறந்து நின்று ஆடுகிறார்கள். தங்கள் இருப்பு மேற்கு நாடுகளில் பலமாகிவிட்ட சந்தோசத்தில்..!  :D  :icon_idea:

உண்மைகள் கசக்கும் .

 

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஒரு தமிழரே தமிழ் ஈழம் அமையக் கூடாதது என்பது தான், யூதன் எப்போதும் இஸ்ரேல் அமைய வேண்டும் என யோசிப்பான், ஈஸ்ட் டீமோர்காரன் தனக்கு தனி நாடு வேண்டும் என யோசிப்பான்,குரேசியா,பொஸ்னியன்,மசிடொனியன்,ஸ்லொவாக்கியன்,ஸ்லொவினியன்,கொசொவன் என் எல்லா இனமும் தனக்கு ஒரு நாடு வேணும் என யோசிப்பன், ஆனால் தமிழன் மட்டும் தன் தனக்கு நாடு கிடைக்கது என் யோசிப்பான், அந்தளவுக்கு ஒரு கேடு கெட்ட இனம்.

புலிகள் நாங்கள் நாங்கள் போராட போன போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றி எதையுமே சாத்தியமில்லாமல் ஆக்கிவிட்டார்கள் .

அதுதான் திரும்ப வெளிநாடு வரவேண்டிவந்தது .

இவ்வளவு அராஜகங்களையும் கண்டும் காணாமல் இருந்தவர்கள் இப்ப ஒப்பாரி வைப்பதுதான் வேடிக்கை .

ராமை நானே சந்தித்து   இருக்கின்றேன் எவ்வளவு எமக்கு ஆதரவாக இருந்தவர் இப்படி மாறிவிட்டார் ,ராம் மட்டும் அல்ல உலகையே எமக்கு எதிராக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள் அவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மட்டும் தடை செஞ்சிருக்காட்டி இண்டைக்கு தமிழ் எல்லாம் எடுத்து தந்திருப்பம்....

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் நாங்கள் நாங்கள் போராட போன போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றி எதையுமே சாத்தியமில்லாமல் ஆக்கிவிட்டார்கள் .

அதுதான் திரும்ப வெளிநாடு வரவேண்டிவந்தது .

இவ்வளவு அராஜகங்களையும் கண்டும் காணாமல் இருந்தவர்கள் இப்ப ஒப்பாரி வைப்பதுதான் வேடிக்கை .

ராமை நானே சந்தித்து   இருக்கின்றேன் எவ்வளவு எமக்கு ஆதரவாக இருந்தவர் இப்படி மாறிவிட்டார் ,ராம் மட்டும் அல்ல உலகையே எமக்கு எதிராக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள் அவர்கள் .

கப்பல் என்றால் பெரும்அலைகடலையும்.பெரும்புயலை எதிர்பார்த்துதான் கட்டபடுகிறது அது போல்தான் போராட்டமென்றாலும் நம்மை பொறுத்தவரை முப்பது வருடங்களுக்கு முன்பு வரவேண்டிய தற்போதைய இலங்கைபேரிணவாதசூழல் தற்போதுதான் வந்திருக்கு கொஞ்ச ரத்தத்தையும் நாலு சாவையும் பார்த்தவுடன் பின்னங்கால் பிடரியிலை அடிபட கனடாவில் வந்து செற்றில் ஆகிய பின் "சை நாங்க போரட வெளிக்கிட இந்த புலி வந்து எல்லாத்தையும் கெடுத்துபோட்டாங்கள்" என்று பார்ட்டிகளில் புலம்புவது அழகல்ல நடக்க வேண்டியது என்ன என்று சிறிதாவது ஆக்கபூர்வமாய் சிந்திச்சு எழுதவும்.ஓயாமல் பழி போடும் புலியும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக, ராம் ஒரு தமிழர் என்பதைவிட பிராமனியர். பிராமனியர்களுக்கு மொழியென்று ஒரு கட்டுப்பாடு கிடையாது. அவர்கள் எங்கு வாழ்கிறார்களோ அந்த மொழியைப் பேசுபவர்கள். தம்மை எந்த மாநில மொழியுடனும் சேர்த்துக்கொள்ளாமல் "இந்தியப் பிராமனர்கள் " என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். இவரைப் போலவே சோ ராமலிங்கம் போன்ற பத்திரிக்கையாளர்களையும், இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் கடமையாற்றும் கேரள, தமிழ்நாடு பிராமணர்களையும் குறிப்பிட முடியும். பொதுவாகவே திராவிட கொள்கைக்கு பரம வைரிகளான இவர்களின் ஜாதி அரசியல், தமிழருக்கு எதிராக செயற்படுவதில் எந்த வியப்புமில்லை என்பதுதான் எனது கருத்து. ஆகவே தமிழருக்காக ராம் பேசவில்லை என்பதால் நாம் வருத்தப்படுவதில் எந்த நியாயமுமில்லை. உண்மையில் அவர் தமிழருக்காக முன்னர் பேசியிருந்தால் அவர் தமிழர் என்ற அடிப்படையில் இல்லாமல் தனது அரசியல் நலனுக்காக அதைச் செய்திருக்கலாம் என்பதே உண்மை. 

 

அடுத்தது, அர்ஜுனின் கருத்து. புலிகளால்த்தான் ஈழம் சாத்தியமில்லாமல் போனதென்பது. இவ்வளவு அரசியல் தெரிந்தவர், இந்திய அரசியல்வாதிகளையும், ஊடகவியலாளர்களையும் சந்தித்துப் பேசியவர்..இவருக்கு இதன் காரணம் புரியாமல்ப் போனது வியப்புத்தான். ராமே மேல் இணைக்கப்பட்ட செவ்வியில், ஈழம் என்பது சாத்தியமற்றது என்று சொல்லியிருப்பது புலிகளைக் காரணம் காட்டி அல்ல. மாறாக, இந்தியாவின் நலன்கள், கிழக்கில் வாழும் பல்லினங்கள், மலையக மக்கள் என்று காரணம் காட்டியிருக்க, அர்ஜுனோ புலிகளை இதற்குக் காரணமாகக் காட்டி, முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போட எத்தனிப்பது அவரது புலியெதிர்ப்பின் அளவை காட்டுகிறதேயன்றி வேறொன்றுமில்லை. ராமே தனது புலியெதிர்ப்பிற்கும், ஈழ எதிர்ப்புக்குமான காரணங்களை தனித்தனியே வெளிப்படுத்தி இருந்தாலும் கூட அவை இரண்டையும் ஒன்றென்று அர்ஜுன் நிறுவ முயல்வது வேடிக்கை. இங்கே அர்ஜுன் மறைக்க முயல்வது தனது "நண்பன்" ராமின் தமிழ் விரோத போக்கைத்தான். ராமே தனது ஈழ விரோதப் போக்கிற்கு புலிகளைக் காரணமாகச் சொல்லாவிட்டாலும் கூட அர்ஜுன் புலிகளால்த்தான் ஈழவிரோதப் போக்கு உருவாகியது என்று புலம்புவது அவரின் அரசியல் சாணக்கியத்தைத்தான் காட்டுக்கிறது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ராம் எதற்க்காக எமக்கு தமிழீழம் சாத்தியமில்லாமல் ஆக்கினார்களோ அது வெகுவிரைவில் நடக்கும் ஆம் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா உடைவதற்க்கான சூழலே அதிகம் நேற்று வால்மார்ட் இன்று tesco,nokia என பல்துறை சுரண்டல் அறிவு ஜீவிகளின் வெளி நாட்டு புலம் பெயர்வு அரசபழைய இராணுவ ஆயுதங்கள் இப்படி இன்னோரன்ன விடயங்கள் ராக்கட் தொழில் நுட்பம் விதி விலக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்றையகால கட்டத்தில் இந்தியாதான் எமது பிரச்சனையை தீர்க்கவெண்டுமென்றால் தமிழீழத்தை கை விட்டு விட்டு வேறு வழிகளில்......எமது பிரச்சனைகளை அவர்கள் மூலம் தீர்க்க முயலவேண்டும்.
 

இதில் நான் பெரிதாக அலட்டிகொள்ளஎதுவுமில்லை , எமது போரட்டத்தில் நடந்தது எல்லாம் கறுப்பு வெள்ளையாக பதிய பட்டுவிட்டது .

ராம் இந்திய அரசியலின் கொள்கை வகுப்பாளர் இல்லை பார்த்தசாரதி இருந்தார் .இதை நான் பலமுறை பதிவு செய்துவிட்டன் .அவர் மிக தெளிவாக ஒன்றை சொன்னார் ,இந்திய மாநில அமைப்புக்கு மேல் எதையும் எடுத்து தர நாங்கள் தயாரில்லை ஆனால் நீங்கள் தமிழ் ஈழம் தான் தீர்வு என்றால் அதற்கும் நாங்கள் தடையில்லை .

அனைத்து தரப்பையும் ஏமாற்றி "தமிழ் ஈழம் " அதுவும் எங்களால் மட்டும் என்று அவர்கள் நின்று கொண்டார்கள் .

நினைக்க சிரிப்பாக இருக்கு ஆரம்ப புலிகளின் மத்திய கொமியிட்டியில் எத்தனை தெளிவானவர்கள் இருந்தார்கள் எவரும் பின்னர் இந்த முடிவுகள் எடுக்கும் போது இல்லை .

கொலை கொள்ளை மட்டும்தான் மிஞ்சியது அதற்கு உடன் போக நாம் என்றும் துணையில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றையகால கட்டத்தில் இந்தியாதான் எமது பிரச்சனையை தீர்க்கவெண்டுமென்றால் தமிழீழத்தை கை விட்டு விட்டு வேறு வழிகளில்......எமது பிரச்சனைகளை அவர்கள் மூலம் தீர்க்க முயலவேண்டும்.

 

 

 

குசா, நீங்கள் சொல்வதும் வாஸ்த்தவம்தான். முதலில் இந்தியா தானே இணைத்து இன்று சிங்களத்தால் வலுக்கட்டாயமாக பிரித்துப் போடப்பட்ட வடக்கையும் கிழக்கையும் இணைக்கிறதா என்று பார்ப்போம். பிறகு இந்தியா எமக்கு என்னத் தீர்வைத் தரப்போகிறதென்று யோசிக்கலாம்.

 

தமிழர் தாயகத்தில் இன்றும் கூட திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பு நடந்துவருகிறது, இது இந்தியாவிற்குத் தெரியாதது அல்ல. இன்னொரு வழியில் சொல்வதானால் இது இந்தியாவின் ஆசீர்வாதத்துடன்தான் நடக்கிறது. ஏனென்றால் இதுவரை இவ்வாறான குடியேற்றங்கள் பற்றி இந்தியா மூச்சுக்கூட விடவில்லை. அப்படியிருக்க இந்தியா ஈழத் தமிழருக்கு என்னவகையான தீர்வொன்றை தர உத்தேசித்திருக்கிறது என்று அறிய ஆசைதான். 

இதில் நான் பெரிதாக அலட்டிகொள்ளஎதுவுமில்லை , எமது போரட்டத்தில் நடந்தது எல்லாம் கறுப்பு வெள்ளையாக பதிய பட்டுவிட்டது .

ராம் இந்திய அரசியலின் கொள்கை வகுப்பாளர் இல்லை பார்த்தசாரதி இருந்தார் .இதை நான் பலமுறை பதிவு செய்துவிட்டன் .அவர் மிக தெளிவாக ஒன்றை சொன்னார் ,இந்திய மாநில அமைப்புக்கு மேல் எதையும் எடுத்து தர நாங்கள் தயாரில்லை 

அப்படியிருக்க, நீங்கள் புலிகளால்த்தான் தமிழீழம் என்பது சாத்தியமில்லாமல்ப் போனதென்று ஏன் புலம்புகிறீர்கள் ? 

புலிகள் நாங்கள் நாங்கள் போராட போன போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றி எதையுமே சாத்தியமில்லாமல் ஆக்கிவிட்டார்கள் .

 

 இங்கே எதைச் "சாத்தியமில்லாமல் ஆக்கிவிட்டார்கள்" என்று அழுகிறீர்கள்?? தமீழத்தையா?? தமிழீழம் சாத்தியமில்லை என்று இந்தியா அன்றே உறுதிப்படுத்தி விட்டதென்று வேறு புலம்புகிறீர்கள், இன்னும் புதுவருட போதை இறங்கவில்லையா?

ஏகபிரதிநிதித்துவதற்கு ஆசைப்பட்டதும் பயங்கரவாத செயல்களில் இறங்கியதும் தான் தமிழனின் அழிவு .

உங்களுக்கு அது விளங்காமல் போகலாம் ஆனால் உலகிற்கு தெரிந்த உண்மை அது .

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்ட கேள்விக்குப் பதிலில்லை, ஆனால் ஏக பிரதிநிதித்துவம் அது, இதுவென்று புலம்புகிறீர்கள். சரி, உங்கள் கருத்திற்கே வருவோம். புலிகள் உங்களையும் செயற்பட விட்டிருந்தால் என்ன வித்தியாசமாகச் செய்திருப்பீர்கள்? தமிழீழம் பெற்றுத் தந்திருப்பீர்களோ (அதை இந்தியாவே தரமுடியாதென்று முடிவு செய்துவிட்ட பின்னரும் கூட )?? தமிழீழம் எடுக்கவென்று போராட வெளிக்கிட்டு இந்திய அரசின் கூலிப்படைகளாக மாலைதீவு பிடிக்க ஓடிய உங்களைவிட புலிகளின் ஏக பிரதிநிதித்துவம் பரவாயில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். உள்வீட்டுக் கொலைகளையே கழக கொள்கையாகக் கொண்டியங்கிய உங்களுக்கும் பிரதிநித்துவம் தரப்படவில்லை என்று என்று நீங்கள் கவலைப்படுவதும் நியாயம்தான்.

 

அடுத்தது, பயங்கரவாதம். எது உலகிற்குத் தெரிந்த உண்மை ? சிரியாவில் ஆசாத்தின் அரசுக்கு நிகராக போராளிகளும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள். லிபியாவிலும் இது நடந்தது. இதுவும் உலகிற்குத் தெரியும். அப்படியிருக்க ஏன் அமெரிக்காவும், பிரான்ஸும் இந்தப் போராளிகளுக்கு உதவுகிறார்கள் ?   80 களின் இறுதிப்பகுதியில் அங்கோலாவின் அரசுக்கெதிராகப் போராடிய ஜொனாஸ் சவிம்பியின் யுனிட்டா கிளர்சியாளர்கள், பலமுறை பொதுமக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியபோதும்கூட, அமெரிக்க அரசு அவர்களுக்கு ஆயுத, ஆலோசகர் உதவிகளைத் தொடர்ந்து வழங்கியதே, அது ஏன் ? அதேபோல நிக்கராகுவாவில் கென்ரா கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை பயங்கரவாத தாக்குதல்களில் கொன்றபோதும் கூட அமெரிக்கா அவர்களுக்கு உதவியதே, அது ஏன் ? வட அயர்லாந்தில் ஐ. ஆர். ஏ கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியபோதும் கூட அமெரிக்கா அவர்கள் மேல் ஆதரவுப் போக்கைக் கடைப்பிடித்ததே, அது ஏன் ? இன்றுவரை பாலஸ்த்தீனர்கள் மீது ஆக்கிரமிப்பு யுத்தமொன்றை நடத்தி, ஆயிரக்கணக்கில் அவர்களைக் கொன்றுவருகிறதே இஸ்ரேல், ஆனாலும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை அது, இது ஏன் ? பாலஸ்த்தீனத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்த்தீனர்களுக்கு எதிராகவும் இயங்கிய பல கிறீஸ்த்தவ ஆயுதப்படைகள் பல பலஸ்த்தீனர்களைக் கொன்றபோதும் கூட அமெரிக்காவும், இஸ்ரேலும் அவர்களுக்கு உதவிசெய்து, லெபனானில் ஒரு சிவில் யுத்தம் நடைபெற பின்னின்றார்களே அது ஏன் ? 

 

மற்றையவர்களுக்கு அரசியல்ப் பாடம் எடுக்குமுன்னர் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே நீங்கள் வெளியில் இருந்து பார்க்கும் உலகிற்கும், உண்மையில் நடப்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. பிராந்திய, சர்வதேச அரசுகளின் நலன்களிற்கு ஏற்றவாறே பயங்கரவாதிகளாகவும், நல்லவர்களாகவும் அதே போராளிக் குழுக்கள் பார்க்கப்படுகின்றன. புலிகளின் கஷ்ட்ட காலம், அவர்கள் அமெரிக்க, இந்திய பார்வைகளில் பயங்கர வாதிகளாக பார்க்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய தேவை இவர்களுக்கு  இருந்தது (உண்மையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கு புலிகள் அழிக்கப்படவேண்டியதற்கான காரணங்கள் வேறு வேறாக இருந்தபோதும் கூட ). அதானால் அழிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் அழிக்கப்பட்டதிற்கு முன்வைக்கப்பட்ட காரணம் பயங்கரவாதம். உண்மையிலேயே பயங்கரவாதம் புரியும் எவருமே அழிக்கப்பட வேண்டுமென்றால், புலிகளைவிடவும் ஆயிரம் மடங்கு மக்களை அழித்த சிங்கள அரசு முதலில் தண்டித்திருக்கப்பட வேண்டும் (சிரியா, லிபியாவைப் போல்). ஆனால் அது நடந்ததா?? அதேபோல உலகின் அனைத்து மனித அழிவுகளுக்கு  பிரதான காரணமாகிய அமெரிக்காவும், ரஷ்ஷியாவும் அழித்திருக்கப்பட வேண்டும், ஆனால் நடந்ததா? இவை எதுவுமே நடக்கப்படவில்லை. அப்படியானால் பயங்கரவாதம் புரியும் எவரும் அழிக்கப்பட்டார்கள் எனும் உங்களின் வாதம் புஸ்வானமாகி விடுகிறது. 

 

உலக அரசியல் தெரிந்த மேதாவி என்று பீற்றிக்கொள்ளும் நீங்களே, இந்த வெளிப்படையுண்மையைத் தெரியாது இருந்தது வியப்புத்தான் (அப்படி உண்மையாகவே மேதாவியாக இருந்திருந்தால் ).

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரைக்கும் கூடுதலான சந்தர்ப்பங்கள் எம்மை தாண்டி போய்விட்டன. பந்து எமது கையில் இருந்த போது ஒரு கோல் போட முடியவில்லை.அது எமது துர்ப்பாக்கியம்.இப்போது பந்து அவர்கள் கையில் !!!!! அவர்களின் பின்னால் ஓடி ஒரு கோலாவது போடுவதுதான் இன்றைய காலகட்டத்தின் சாமர்த்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏகபிரதிநிதித்துவதற்கு ஆசைப்பட்டதும் பயங்கரவாத செயல்களில் இறங்கியதும் தான் தமிழனின் அழிவு .

உங்களுக்கு அது விளங்காமல் போகலாம் ஆனால் உலகிற்கு தெரிந்த உண்மை அது .

புளொட் ஆயுத எடுத்துப் போராடேக்க.. உலகம் உங்களைக் கூப்பிட்டு வைச்சு பேசினது எல்லோ. மண்டேலாவுக்கு அடுத்த நிலையில் நீங்கள் இருந்தனீங்கள் எல்லோ. உந்தக் குறுகிய சிந்தனைகளால் சுய காட்டிக் கொடுப்புகளால் தான் நாங்கள் அழிஞ்சதே.. தமிழீழம் சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டதே தவிர.. புலிகளால் அல்ல. ஈழத்தில் ஆயுதம் தூக்கிய எல்லோரும் உலகின் பார்வையில் பயங்கரவாதிகள் தான். இந்தியாவின் பார்வையில் தனக்கு கீழ்ப்பட்ட அடிமைகள் தான். அதற்குள் இருந்து தான் எமது விடுதலை சாத்தியப்படனும் என்ற நிலையில்.. அது தெரிந்தும்.. சுய முரண்பாடுகளையும்.. காட்டிக்கொடுப்புக்களையும் செய்து... பிராதன இலக்கை விட்டு எதிரிக்கு சாதகமாக நானா நீயா போட்டியை முன்னெடுத்து.. எல்லாத்தையும் நாசம் பண்ணினது என்றால் அதனை தொடக்கி வைச்சது என்றால் புளொட் தான். சர்வதேச அரங்கில் தமிழர்கள் அண்டை நாடுகளை ஆயுத ரீதியில் அச்சுறுத்துவார்கள் என்று சும்மா இருக்கேலாம மாலைதீவில கைவைக்கப் போய் அதுவும் எங்களைப் பயங்கரவாதமாக காட்டிவிட்டுது. புலிகளை விட எங்கள் போராட்டத்தை ஆரம்பம் முதல் தவறான பாதையில் கொண்டு சென்றது புளொட்டும் இதர அமைப்புக்களுமே. அலன் தம்பதிகள் கடத்தல்.. தமிழக மோதல்கள்.. மாலைதீவு ஆயுதப் புரட்சி என்று தேவையில்லாத எல்லைகளை நோக்கி ஆயுதங்களை பிரயோகிக்கப் போய் தான்.. நாங்கள் பயங்கரவாதிகள் ஆனதே தவிர வெறுமனவே எல்லாம் புலிகளால் என்பது இயலாமையில் குற்றச்சாட்டு ஆகும். தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ளாத எவரும் மக்களுக்காக போராடியவர்களாகக் கருத முடியாதவர்களே.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

Guruparan K ‏@rkguruparan 2 Jan

N. Ram's (@nramind) interview with Mr. V. Prabaharan, Leader of the LTTE in 1986. Well worth a re-read. http://www.hindu.com/nic/prabakaran-interview.htm #lka #tamil
Retweeted by TAMIL YOUTH ORG UK

 

 

N. Ram interview with Velupillai Prabakaran (September 1986)

 

Is peace near at hand in Sri Lanka? Is a political settlement in sight? Or will the armed conflict in the Tamil areas continue? What will come out of the Colombo talks? How will the militants involve themselves in an India-promoted follow-up? Is Eelam negotiable? In this extended tape-recorded interview with N. Ram of The Hindu, the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Mr. Velupillai Prabakaran responds to these questions and also some on the ideology, strategy and tactics of his organisation and on his own political evolution. Mr. Prabakaran's responses in Tamil have been translated; the interview is being published in two parts (on September 4 and 5, 1986).

 

Part I - The view from the Tigers (PDF)

 

Part II - Making of a militant leader (PDF)

 

http://www.hindu.com/nic/prabakaran-interview.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொடுமைக்குள் இருப்பவனுக்கு சொல்லும் வசனமாகத்தெரியவில்லை

அதற்குள்   இருப்பவனுக்கே

அது  புரியும்............

 

இவர்கள் வரவு செலவுக்கணக்கு பார்க்கவே  சரியானவர்கள்

மக்கள் மனங்களை  அறிய  அல்ல....

ரகுவிற்கு சில குறிப்புகள் .

புலிகள் இல்லாவிட்டால் வேறு யாரும் ஈழம் எடுத்திருப்பார்கள் என்று நான் எங்கும் சொல்லவில்லை .

ராம் ஒரு பிராமணர் அவர் அப்படிதான் இருப்பார் - இது எனக்கு ஏற்புடையதல்ல .

பிராமணர் ,மலையாளிகள் என்று இன்று வரை திட்டிக்கொண்டு இருக்கின்றோம் .இந்தியாவுடனான உறவு விரிசல் அடைய தொடங்க புலிகள் இந்திய வெளியுறவு கொள்கையை வகுப்பவர்களை திட்டி பிரச்சாரம் தொடங்கினார்கள்.அதில் பெரும்பாலும் பிராமணரும் மலையாளிகளும் இருந்ததால் ஓட்டு மொத்தமாக அவர்கள் இலக்கானார்கள் .

ராம் மட்டும் இந்த கருத்தை சொல்லவில்லை , இலங்கையில் சிங்கள அரசுகளின் அடக்குமுறைக்குள் இருக்கும்   தமிழர்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று எமது போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த பெரும்பாலான சக்திகளை எமக்கு எதிராக திருப்பியது புலிகளின் அரசியல் தான் .

தமிழனின் தீர்விற்காக போராட போன ஆயுத இயக்கங்கள் ,அரசியல் தலைமைகள் ,தமிழ்நாட்டு அரசியல் சக்திகள் ,இந்தியா ,மேற்குலகு  ,ஐநா என்று அனைவரும் புலிகளின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை .இதுவே சிங்கள அரசுகளுக்கு தமிழனை அழிக்க கிடைத்த பெரிய அங்கீகாரம் .புலிகளும் புலி ஆதரவார்களும் மட்டும் எவன் எதிர்தாலென்ன தலைவர் தமிழ்  ஈழம் பிடிப்பார் என்று நம்பியே இருந்தார்கள். தமது ஆயுதப்போராட்டம்  தோற்றால் முழு தமிழனுக்கும் அது பெரும் அழிவை தேடிவிடும் என்று அவர்கள் சிந்திக்கவில்லை .

இதனால் தான் புலிகள் மீது கோபம் ,அப்ப புலிகள் இந்த பிழையை விடாவிட்டால் மற்ற இயக்கங்கள் ஒரு தீர்வை எடுத்திருப்பார்களா என்றால் ? இருக்கலாம் அல்லது இல்லை என்பதுதான் பதில்.

புலிகள் ஏகபிரநிதித்துவ நிலை எடுத்து போராட போன எவ்வளவோ திறமையானவர்களை வேட்டையாட தொடங்காவிட்டால் காலப்போக்கில் அனைத்து இயக்கங்களில் இருந்த முற்போக்கு சக்திகளும் சேர்ந்து போராட்டம் நிச்சயம் திசை மாறியிருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை .

கலவரத்துடன் முண்டியடித்துக்கொண்டு ஏதாவது இயக்கம் என்று  இணைந்தவர்கள் அவர்தம் இயக்கங்களின் தலமைகளுடனும் செயல்பாடுகளிலும் வெறுப்படைந்து மாற்று வழி தேட ஆரம்பித்திருந்தார்கள் .இதற்கான சில செயற்பாடுகள் வேறு  ஆரம்பித்திருந்தது (85,86).

மாற்று கருத்தாளர்களே நாட்டில் இருக்க கூடாது என்ற புலிகளின் கொள்கை தான் தமிழனின் இன்றைய இந்த இழிவு நிலைக்கு முக்கியகாரணம் என்பதுதான் எனது கருத்து .

ஏன் புலிகள் முப்படையும் வைத்திருந்து எவ்வளவு போர் வெற்றிகளை குவித்தவர்கள் அவர்களே தீர்வை எடுத்திருப்பார்கள் தானே ? பிறகு ஏன் மாற்று அமைப்பு ஒன்று கேட்கலாம் .புலிகள் தாம் ஆரம்பித்த கொலை அரசியலில் இருந்து தாம் அழியும் வரை அதை மாற்ற முயலவில்லை .அதை அவர்கள் சரியென்று நம்பியதால் அதை கை விட யோசிக்கவில்லை .உலக அரசியல் ,அங்கீகாரம் பற்றி எல்லாம் அவர்கள் அக்கறை செலுத்தியிருந்தால் முதல் தடை வந்தபோதே விழித்திருப்பார்கள் ,நாட்டை அங்கு நாட்டை பிடிக்க சர்வதேச அங்கீகாரம் தானாகவரும் என்றுதான் பு.பெ.பு சொல்லி திரிந்தார்கள் .

இப்படியே எழுதிக்கொண்டே போகலாம் .

 

ஆஸியில் தான் கோர்டன் வைஸ் இருக்கின்றார் .முடிந்தால் சந்திக்கவும் .இன்னமும் தெளிவாக நடந்தவற்றை சொல்லுவார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.