Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

 
1528620_10151920979618002_1428696802_n.j
பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு.

1.பீப்பி செய்து ஊதலாம்.(இதனால் இரவில் ஊதி பாம்பு வரும் எண்டு அடி வாங்கிய நாட்கள் பல உண்டு).

எங்கட ஒழுகையால போகும் ராகினி மச்சாளை பாத்து பம்பலா பகிடி பண்ண பீப்பி ஊதி அவளிட்ட கிழிய கிழிய வாங்கின அனுபவமும் மறக்கமுடியாது.

2.வடை மற்றும் பணியாரம் அதில் வைத்துத்தான் தட்டுவார்கள்.

3.அதன் காம்பை ரப்பர் பாண்டில் வைத்து இழுத்து சுண்டி வில் போல் அடித்தால் சுள் எண்டு வலிக்கும்.இப்பிடி பள்ளிக்கூடத்தில அடிச்சு ,என்னோட படிச்ச பிள்ளை சாந்தினியில பட்டு ..அவள் அழுதுகொண்டுபோய் ராணி ரீச்சரிட்ட சொல்ல , அவா பிறின்சிப்பலிட்ட சொல்ல.. அந்த ஆள் பூவரசம் காம்பால வெளு வெளு எண்டு துடையில ரத்தம் வர அடிச்சது ஒரு கதை.அதை வீட்ட சொல்லாமல் ஒழிச்சது பெரிய கதை.

4.கள்ளு குடித்துவிட்டு பூவரசம் இலையை சப்பி துப்பினால் மணம் போகும். இதனால் ஊரில பல பெரும் குடிமக்கள் மனிசியின்ர "அரிச்சனையில்" இருந்து ஓரளவு தப்பி இருக்கினம்.

(கொய்யா இலை திறம் சாமான்.ஆனால் கொய்யா இலை தேடி அலையுறதுக்கிடையில வெறி முறிஞ்சிடும்.அதனால கையுக்கெட்டின தூரத்தில கிடைக்கிற பூவரசம் இலைதான் அருமையான MOUTH FRESHENER)

5.சோறு, கறி எல்லாவற்றையும் ஒண்டாய் பிரட்டி பினைந்து அதை கவளமாக உருட்டி பூவரசம் இலையில் வைத்து அம்மா தரும் அந்த உணவு ...அமிர்தம்.

6.அஞ்சாம்மனை கோயில்ல புக்கை வாங்க அவசரமா உதவும் பாத்திரம் இதுதான்.

கன இலைகளை ஈக்கிலால ஒண்டா வட்டமா கோப்பை போல குத்தி அதில கோயில்ல தரும் புக்கையோ இல்லை அன்னதான சோறோ வாங்கி திண்டால் அதில வாற ருசி சொல்லி வேலையில்லை.

7.பூவரசம் தடி....!!! இதனால் பாதிக்கப்படாத யாரும் எங்களின் ஊரில் இல்லை.

வீட்டில குழப்படி செய்தால் அம்மா உடனடியாய் வேலியடிக்கு போய் முறித்து அப்பாவிடம் கொடுக்கும் ஆயுதம் இது.குண்டியில் விழும் அடி சுள் என்று ஏறும்.

பள்ளிக்கூடத்தில் குழப்படி செய்தால் "ஐங்கரன் சேர்" போட்டு வெழுக்கும் ஆயுதமும் இதுதான்.

8.ஊரில "கள்ளக்காணி" பிடிக்க உடனடியா பயன்படுத்தும் உபகரணம் பூவரசம் கதியால்.

வேலிச்சண்டை,ஒழுங்கைச்சண்டை,காணிச்சண்டை,எல்லைச்சண்டை இப்படி பல பிரச்சினைக்கு காரணம் இந்த "பூவரசம் கதியால்" தான். கொஞ்சம் தண்ணி ஊத்தினா காணும் சும்மா கிசுகிசு எண்டு வளரும்.

9.அம்மா அடித்தால் கோபத்தில் புலம் பெயர்ந்து ஏறித்தங்கும் தங்குமிடம் "பூவரச மரம்" தான்.

10.கோடை வெயிலில் பள்ளிக்கூடம் விட்டு ஒழுங்கையால் சுடு மணலில் ஓடி வரும் போது "நிழல்" தந்து எங்களின் பிஞ்சுக்கால்கள் பொக்கிழிக்காமல் காத்ததும் இந்த பூவரச நிழல்தான்.

11.எங்கட ஊரில கன காதலர்களின் தபால்ப்பெட்டி இதுதான். வேலியோரத்து பூவரச மரத்தில தான் தங்களின் காதல் கடிதங்களையும் அன்பளிப்பு பொருள்களையும் சொருகிப்போட்டு போறவை.

12.ஆரேனும் வீட்ட போகும் போது அவையள் ஆரும் வீட்டில இல்லையெண்டா,

நாங்கள் வந்து போன விசயத்தை சொல்ல "பூவரசம் கொப்பொண்டை" முறிச்சு படலியடியில குத்திப்போட்டு போனா அவையளுக்கு தெரியும் ஆரோ வீட்ட வந்திட்டு போயிருக்கினம் எண்டு.

-தமிழ்ப்பொடியன்-

poovarasu9.JPG

 

Edited by தமிழ்ப்பொடியன்

  • கருத்துக்கள உறவுகள்

11)  தோட்டத்துக்கு தாழ்ப்பதற்கு... பூவரசம் இலை நல்ல, இயற்கை பசளை.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாததும் இவை தமிழ்ப் பொடியா!

 

இடியப்ப உரல் செய்வதும் பூவரசில்தான்.

 

பூவரசம் பூக்களை வாயில் வைத்து ஊதிகன்னத்தில் அடிப்போம்.( மச்சாளுக்கு அடிக்கவில்லையா).

 

எந்ந்த வீட்டிலும் வேலியில் நாலு பூவரசு நிக்கும், ஒரு மரணம் நிகழ்ந்தால்  உடனே இரண்டு மரத்தைத் தறித்து நேரத்துக்கே மயானத்துக்கு அனுப்பி விடுவார்கள் .அங்கு அது தனக்கு  நீர் வார்த்த எஜமானனை  அம்புறாப் படுக்கையாய்  வரவேற்கும்...!  :rolleyes::D

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றிவேசன் பாட்டு.

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?v=E1m-E3-xR4I

Edited by தமிழ்ப்பொடியன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தமிழ்ப்பொடியன்.. ஊர் ஞாபகங்கள் வந்து போயின..

  • தொடங்கியவர்

    நன்றி இசைக்கலைஞன்

vm-11-27-ma-10.jpg

  • கருத்துக்கள உறவுகள்

2005062700840201.jpg

இதற்க்கு பின்னால் பல மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளன ....
 
நினைவு படுத்தியதற்கு நன்றி தமிழ்ப்பொடியன்.

பூவுக்கு அரசனை மண் வாசத்தோடு குழைத்து தந்த தமிழ் பெடிக்கு என்ன தந்தாலும் தகும் . வாழ்த்துக்கள் பெடியா .

http://www.youtube.com/watch?v=SVKygIzHlaA

 

:lol: 

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வோடு பின்னிப் பிணைந்த மரம், பூவரசு!

 

நானும் கனகாலத்துக்குப் பிறகு, ஊருக்குப் போறபோது முதல்ல செய்யிற வேலை, பூவரசம்  இலையில ' பீப்பீ' செய்து, ஒரு சினிமாப்பாட்டு வாசிக்கிறது தான்!

 

அந்தக் காலம் முதல் ஒரே ஒரு பாட்டுத்தான் பாட வரும்!  

 

' அடி என்னடி ராக்கம்மா.....' அந்த மாதிரி இருக்கும்!

 

பூவரசம் பூவின், இதழின் ஒரு பகுதியையும், நாக்கில் வைத்து, ஒரு விதமான இசை எழுப்பலாம்!

 

அனுபவமுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

நினைவு மீட்டலுக்கு நன்றிகள், தமிழ்ப்பொடியன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பூவரசையும் ஈழத்து கிராமத்தவனையும் பிரித்து பார்க்கவே முடியாது. 
தாலாட்டு பாட பூவரசம் பூ....... நெஞ்சாங்கட்டைக்கு பூவரசம் அடிக்கட்டை.
 
வணக்கம் தமிழ்ப்பொடியன்! :)

பூவரசின் கிளையின் அடியில் இருக்கும் முற்றிய இலை ஒன்றை நம்மில் ஒருவர் பறித்து முதலில் இலகுவாக கைவிரல்களால் சுருற்றி பின்னர் உள்ளங்கையில் வைத்து உருட்டி, குழல் சிறுத்து இலை வெடிக்க ஆரம்பிக்கமுதல் நிறுத்தி பின்வழத்தை பெருவிரல், ஆள்காட்டிவிரல்களுக்கு இடையில் வைத்து மெதுவாக நசுக்கி  ஊதும் வாய் பக்கத்தை தயார் செய்து கொள்வோம். இது மெல்லிய குழல் என்று அழைக்கப்படும். பின்னர் கிளையின் நடுப்பாகத்தில்  இருக்கும் அவ்வளவு குருத்தில்லாத  இலையை இன்னொருவர் பறித்து அதே மாதிரி செய்து கொள்வார். ஆனால் இதன் குழல் பாகம் முதலாவதை விட சற்று விட்டம் கூடியதாக இருக்கும். இதை கட்டைக் குழல் என்று அழைத்துக்கொள்வோம். இதன் முன்னர் இரண்டு பப்பா இலைத் தண்டுகளில் நீளத்திசைவாட்டில் ஏழு ஓட்டைகள் போட்டு குழாயின் ஒரு பக்கத்தை வேறு இலைகளை பிடிங்கி செருகி அடைத்துவிட்டு முன்னர் தாயாரித்து வைத்திருந்த பூவரசமிலை வாய் பாகங்களை பப்பா குழல்களின் திறந்த வாய்களுக்குள் செருகி இரண்டு வேறு வேறு கட்டை சுருதியில் இசை எழுப்பும் நாதஸ்வரங்கள் செய்து கொள்வோம்.  பழைய பானைகளை அல்லது, கைவிடப்பட்ட கள்ளுமுட்டிகளை எடுத்து கவனமாக வயிற்றுப்பக்கத்தை கற்களால் தட்டி உடைத்துவிட்டு, வாய் பாகத்தை மூடி காங்கேசந்துறை சீமெந்து பக்கேற்றுக்களின் மரத்தாள் கடதாசிகளால் கட்டி வைத்துகொள்வோம். (கொஞ்சம் வேலை தெரிந்தவன்கள் அதை ஒட்டி காயவைத்துக் கொள்வான்கள். அது நாதம் கூடவென்றாலும் நமக்கு கஸ்டமாதாக இருப்பது. ஒட்டும் போது மரத்தாள் பேப்பர் இளகாமல் ஒட்டுவது கடினம். எனவே நாங்கள் கட்டுவதுதான் வழமை. ஆனால் கச்சேரியை இடையில் நிறுத்தி அடிக்கடி பேப்பரை இழுத்துக்கட்ட வேண்டிவரும்). அடுப்பில் நெடுப்பை மூட்டி பானை வாயில் இருக்கும் மரத்தாளை சாடையாக சூடாக்கி கொள்வோம். இது மத்தளம் ஆகும். பின்னர் சினிமாப்பாட்டுக் கச்சேரிதான். "காளை வயசு"தான் ஊத இலகுவாக இருக்கும் பாட்டு. ஆனால் அப்போது பாட்டின் கவிந்யத்தை மட்டும் உணர்ந்திருக்கவில்லை.  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் சொல்லாதது,  பூவரசம் பழுத்தலில் ஆச்சி சுறுட்டை வாகாகச் சுற்றி  மினக்கட்டு பெரும் முயற்சியுடன் பத்த வைத்து  பொச்சு,பொச்சு என்று புகை விட  அந்தப் புகை மார்கழிப் பனியை மென்மையாய் ஊடறுத்து  செல்லும்..! :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ஐயா  பதிவுக்கு...

ஒரு கணம் கண் பனித்தது

மண்ணையும் அந்த மகரந்தத்தையும் மனம் தேடியது...

இதுவும் சொல்லாதது,  பூவரசம் பழுத்தலில் ஆச்சி சுறுட்டை வாகாகச் சுற்றி  மினக்கட்டு பெரும் முயற்சியுடன் பத்த வைத்து  பொச்சு,பொச்சு என்று புகை விட  அந்தப் புகை மார்கழிப் பனியை மென்மையாய் ஊடறுத்து  செல்லும்..! :rolleyes::D

குரும்ப்பட்டியில் செய்யும் தையல் மெசினுக்கும் நாங்கள் பூவரசம் இலைதான் போட்டு தைப்போம். மற்றைய இலைகளைப் போடும் போது தையல் மெசின் சத்தம் வருவதில்லை. 

தைத்து முடிய இலையில் விழுந்த்திருக்கும் துளைகள் தையல் மெசினது துணிமீதான துளைகள் போலவே இருக்கும்.

Edited by மல்லையூரான்

பூவரசின் வைரம் தண்ணீர் உறிஞ்சு உப்பிக்கும் தன்மை இல்லாதது. இதனால் தச்சுத்தொழிலாளிகள் காய்ந்த பூவரம் வைரத்தில் செய்யும் இடியப்ப உரலின் குழலும் உலக்கையும் வீட்டுபெண்கள் மணித்தியாலகணக்காக வைத்து நனைந்த மாவில் இடியப்பம் பிழியும் போது உப்பி இரண்டும் ஒன்றுடன் ஒன்று இறுக்காது. இலுப்பையும் தண்ணிர் தாங்கும் என்பார்கள். ஆனால் பூவரசம் வைரம் கருங்காலி மாதிரியே செதுக்கலுக்கும் உகந்த மரம். (ஆனல் அதிக அளவில் சிற்ப வேலைப்படுகளுக்கு பாவிக்கபடுவதில்லை). இதனால் உரலும், உலக்கையும் நவீன கால "பிஸ்டன், போர்" மாதிரி நுணுக்கமாக பொருந்தவும், இலகுவாக வழுக்கி செல்ல செம்மையாக அரம் போடவும் இடம் கொடுக்கும். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகளை மீட்கும் பகிர்வுகளுக்கு நன்றி :D

 

 
1528620_10151920979618002_1428696802_n.j
பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு.

6.அஞ்சாம்மனை கோயில்ல புக்கை வாங்க அவசரமா உதவும் பாத்திரம் இதுதான்.

கன இலைகளை ஈக்கிலால ஒண்டா வட்டமா கோப்பை போல குத்தி அதில கோயில்ல தரும் புக்கையோ இல்லை அன்னதான சோறோ வாங்கி திண்டால் அதில வாற ருசி சொல்லி வேலையில்லை.

-தமிழ்ப்பொடியன்-

poovarasu9.JPG

 

பூவரசு பற்றி பல சுவாரசியமான தகவல்களை வழங்கி இருக்கின்றீர்கள் அதில் சிறு திருத்தம் அஞ்சாம்மனை அல்ல ஐந்தான்பனை என்பதுதான் சரியானது. இது ஒரு காரனப்பெயராம் அவ்விடத்தில் ஐந்து ஆண் பனைகள் உள்ளனவாம் அதனால்தான் ஐந்தான்பனை என அந்த இடத்திற்கு பெயர் வந்ததாம்.
 
எனக்கு தெரிந்த ஊர் என்பதனால் இங்கு இதனை எழுதினேன் தயவு செய்து தப்பாக நினைக்காதீர்கள் தமிழ்ப்பொடியன். :)     
  • தொடங்கியவர்

நன்றி அலையரசி

:-)

நான் எழுதியது சாதாரண பேச்சு வழக்குத்தமிழ்.

எங்கட ஊரில் நாங்கள் " அஞ்சாம்மனை பிள்ளையார்" கோவில் எண்டுதான் சொல்லுவம்.

ஆனால் நீங்கள் கூறிய விளக்கம் முற்றிலும் உண்மை.

நான் நினைக்கிறன் உங்கட அப்பாட்ட கேளுங்கோ .... அவருக்கு தெரியும் :-)

நான் மண் திண்டு வளர்ந்த ஊர் அது!!!

Edited by தமிழ்ப்பொடியன்

  • தொடங்கியவர்

Edited by தமிழ்ப்பொடியன்

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வோடு பின்னிப் பிணைந்த மரம், பூவரசு!

 

நானும் கனகாலத்துக்குப் பிறகு, ஊருக்குப் போறபோது முதல்ல செய்யிற வேலை, பூவரசம்  இலையில ' பீப்பீ' செய்து, ஒரு சினிமாப்பாட்டு வாசிக்கிறது தான்!

 

அந்தக் காலம் முதல் ஒரே ஒரு பாட்டுத்தான் பாட வரும்!  

 

' அடி என்னடி ராக்கம்மா.....' அந்த மாதிரி இருக்கும்!

 

பூவரசம் பூவின், இதழின் ஒரு பகுதியையும், நாக்கில் வைத்து, ஒரு விதமான இசை எழுப்பலாம்!

 

அனுபவமுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

நினைவு மீட்டலுக்கு நன்றிகள்,

 

அந்தப் பாட்டு மட்டும்தான் எல்லாருக்கும் வரும் :D

  • தொடங்கியவர்

Edited by தமிழ்ப்பொடியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.