Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16(254).jpg

யாழ்., தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. படங்கள்: சுமித்தி தங்கராசா, ரொமேஷ் மதுசங்க 

01(944).jpg

02(758).jpg

03(559).jpg

04(391).jpg

05(286).jpg

10(1477).jpg

11(930).jpg

13(452).jpg

14(362).jpg

12(675).jpg

15(338).jpg

18(136).jpg

19(117).jpg

21(42).jpg

22(53).jpg

 

எமது பணத்தை திருடி, எமது அடிப்படை உரிமைகளை திருடி, குறைந்தது  மக்களால் தெரிவு செய்யபட்ட மாகாணசபைக்கான குறைந்த அதிகாரங்களை கூட வழங்காமல், மாகாண சபையை முடக்கிவைத்துக் கொண்டு திருடிய பணத்தில் வைத்தியசாலை கட்டியதை பாராட்டும் நம்மவர்களும்  இருக்கிறார்கள்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி VS மகிந்த - தெல்ல்லிப்பளையில் ஒரே மேடையில் மோதிக்கொண்டனர்

 

வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையே இன்று பகிரங்கமாக  இடம்பெற்ற கருத்து மோதல்' அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தெல்லிப்பளையில் நடைபெற்ற புற்றுநோய்சிகிச்சை வைத்தியசாலை திறப்பு விழாவில் இருவரும் ஒரே மேடையில் பரஸ்பரம் கருத்து மேதலில் ஈடுபட்டுக்கொண்டனர்.

முதலமைச்சர் தனது உரையில் வடக்கில் தொடரும் இராணுவப்பிரசசனம் உள்ளிட்ட விடயங்களை விலாவாரியாக  முன்வைத்திருந்தார். இராணுவப் பிரசன்னத்தால் வடக்கில் மக்களின் வாழ்வு சவாலாகியிருப்பதாகவும் சிவில் நiடைமுறைக்கு வடக்கை கொண்டுவர வேண்டும் எனக் கோரியிருந்தார்.



அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வடக்கு முதலமைச்சருக்கு தெரிந்திருக்குமோ தெரியவில்லை. கடந்தகாலத்தில் மிக குறுகிய தூர இடைவெளியில் பல படைமுகாம்கள் காணப்பட்டன. அப்போது 75ஆயிரம் படை யினர் வடமாகாணத்தில் இருந்தார்கள். இன்று அந்த முகாம்கள் மிக குறைக்கப்பட்டுள்ளது. படையினரின் எண்ணிக் கயும் 12ஆயிரமாக குறைக்கப் பட்டுள்ளது. படையினர் முழு நாட்டிலும் இருக்கவேண்டுமென உறுதியாகத் தெரிவித்தார்.

'படையினர் பிரசன்னத்தினால் அதிக அநீதிகள் நடப்பதாக ஊடகங்களும் கூறிக்கொண்டிருக்கின்றன. எந்த இனத்திற்கும் மற்றய இனத்தை அடக்கி ஒடுக்கும் உரித்து கிடையாது. அவ்வாறான ஒரு நிலைக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதுமில்லை. நாம் எல்லோரும் மனிதர்களாக சகல மனிதர்களுக்கும் உள்ள அம்சங்களுடன் பிறந்தோம்' எனவும் மஹிந்த தனதுரையில் தெரிவித்தார்.



அத்துடன் 'நீதியரசராக சீ.வி.விக்னேஷ்வரன் எங்கள் கௌரவத்தை பெற்றிருந்தவர். அவர் தற்போது அரசியல்வாதியாக எல்லா மேடைகளையும் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை பார்த்து நான் சந்தோஷப்படுவதா? கவலைப்படுவதா? என்பது எனக்கு தெரியாது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். முதலமைச்சர் கூறிய கருத்துக்கு நீண்ட கருத்துக் கூற நான் விரும்பவில்லை' எனவும் அவர் தெரிவித்தார்.

 

முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனின் முழுமையான உரை இணைப்பு :-



என் மனைவியாரையும் என் சகோதரியாரையும் புற்றுநோய்க்கு நான் பலிகொடுத்தவன் என்ற முறையில் எமது தமிழ் மண்ணில் புற்றுநோய்க்கான மருத்துவ மனையொன்றினை நவீன காலத்திற்கு ஏற்ற முறையில் அவர்கள் சேர்ந்து அமைத்துத் தந்திருப்பதை ஒரு பெரும் பேறாகவே கணிக்கின்றேன். மகரகமை சென்று வரவேண்டிய நிர்ப்பந்தத்தைத் தவிர்த்து வடமாகாணத்தின் உள்ளேயே புற்று நோயினால் பாதிக்கப்படும் நோயாளர்களைச் சிகிச்சைக்காகக் கொண்டு வந்து உரிய சிகிச்சை பெற வழி அமைத்துள்ளார்கள் 'துணிச்சலின் நிறங்கள் நம்பிக்கைப் பொறுப்பு' நிறுவனத்தினர். நோயாளர்களின் உற்றார் உறவினர்கள் மகரகமை சென்று பரிதவிக்கும் நிலையையும் நீக்கியுள்ளார்கள்.

'வாழ்க்கைக்காக - வாழ்வோரின் பயணம்' என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்தப் பாதை நிறுவனம் இரு இளைஞர்களின் கனவின் பூர்த்தி என்றால் அது மிகையாகாது. நாதனும் சரிந்தவும் தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரைக்கும் கால்நடையாய்ப் பயணம் செய்து, மக்களின் உதவிபெற்று சேர்த்த பணத்திலேயே இந்த மருத்துவமனையை அமைத்துள்ளார்கள். அப்பணத்திற்கு மேலதிகமாக நானூற்றி ஐம்பது இலட்சம் பணத்தை என் கல்லூரி நண்பர் இரட்ணா சீவரத்தினம் அவர்களின் மகனான அவுஸ்திரேலியாவில் தற்பொழுது வசிக்கும் வைத்திய கலாநிதி தினேஷ் சீவரத்தினம் கொடுத்துதவியுள்ளார் என்பது என் மனதைக் குளிர வைக்கின்றது.

 


இலங்கையின் வடக்கிற்குந் தெற்கிற்கும் இடையில் இதுவரை இருந்துவந்த மிகப்பரிதாபகரமான ஆத்திரமும் ஆக்ரோஷமும் அண்மைக் காலங்களில் ஒரு சிறிதளவாவது தணிந்து வருவதை நான் காண்கின்றேன். அந்தப் பரிதாபகரமான நிலை அரசியல் காரணங்களினால் ஏற்பட்டதென்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சுயநல அரசியல் எம்மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டிருக்கின்றது. ஆனால் அரசியலுக்கு அப்பால் சென்று அந்தரிப்பவர்களை ஆதரிக்குமுகமாக, துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக, நாட்டின் மனித ஒருமைத்துவத்தின் பிரதிபலிப்பாக, நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களின் சின்னமாக, இந்த முயற்சி கைகூடப்பட்டுள்ளது. 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்ற தமிழ் அன்னையின் வார்த்தைக்கு இலக்கணமாக நாதனும் சரிந்தவும் நடந்துள்ளார்கள். அவர்களின் முயற்சி எமக்கும் எமது சிந்தனைகளுக்கும் வலுவூட்டுகின்றன. புதிதாக மக்கள் ஆதரவைப் பெற்று வந்துள்ள எமது வடமாகாணசபை அங்கத்தவர்கள் முயன்று முன்னேற அவர்களின் முயற்சி முன்மாதிரியாக அமைந்துள்ளது.

 


போரானது தமிழ்க் குடும்பங்களில் மட்டுமன்றி சிங்களக் குடும்பங்கள் பலவற்றிலும் ஆற்றொணாத் துயரத்தையும் துன்பத்தையும் கொண்டுவந்திருந்தது என்பதைக் கண்கூடாகக் கண்டவன் நான். கொழும்பில் மேல்நீதிமன்றில் எம்முடன் வேலை செய்த ஒரு சிங்களப் பெண்மணி வேறு சில அலுவலர்களுடன் வந்து எம்முடன் மனநிறைவுடன் பேசிவிட்டு வெளிச்சென்றதும் அவருக்கு ஒரு இழவுச் செய்தி காத்திருந்தது. இராணுவத்தைச் சேர்ந்த அவரின் கணவர் மன்னாரில் போரில் மாண்டுவிட்டார் என்பதே அந்தச் செய்தி. உடலைக் கொழும்புக்குக் கொண்டுவரமுடியாத நிலை. நாங்கள் யாவரும் முயன்று அதனைக் கொண்டு வர உதவினோம். அன்று சிரித்துப் பேசிய அந்தப் பெண்மணி தமது குழந்தைகளுடன் சேர்ந்து அழுது கதறிய நிலை இன்னமும் என் கண்முன் நிற்கின்றது. அதுமட்டுமல்ல தமிழ்ப் பேசும் விதவைகள் பலரின் அழுகையையும் கவலையையும் கம்பலையும் மனம் விறைக்கக் கேட்டவன் நான். போர் அவலங்கள் மக்களுக்கு அப்பால், இனத்திற்கு அப்பால், அடையாளங்களுக்கு அப்பால் ஏற்பட்ட கொடூரமான பாதிப்புக்கள். புற்றுநோயும் அப்படித்தான்! எவரையும் எந்நேரத்திலும் தாக்கக் கூடிய கொடிய நோய் அது. பாகுபாடின்றிப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.


இன்றைய தினம் இந்தப் புற்று நோய் மருத்துவனையைத் திறந்து வைக்க மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை அழைத்திருப்பது சாலப் பொருத்தமே. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று முக்கிய அடிப்படைகளை முன்வைத்துத்தான் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்திருந்தது. அவையாவன-

 


1.   வன்முறையை விலக்கி முன்னேறல்


2.   நாட்டைப் பிரிக்காது முன்னேறல்


3.   சமஷ்டி முறைமையை அனுசரித்து முன்னேறல்
என்பனவே அவை.


எமது தேர்தல் கொள்கைகளைப் பெருவாரியான வடமாகாண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதில் இருந்து அவர்களின் மனோநிலையை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் புரிந்து கொண்டிருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. ஆகவே வன்முறையைக் களைந்து, நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்தாது, அதிகாரங்களைப் பகிர்ந்து கூட்டாக ஒரே நாட்டினுள் வாழ்க்கை நடத்த முன்வந்துள்ள எங்கள் மக்களின் மனோநிலைக்கு இங்கு வருகை தந்திருக்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நாங்கள் நம்பலாம். எமது தேவைகளைப் புரிந்து இனக் கூட்டுறவுக்கு வித்திடுவார் என்று நம்பலாம். புதியதொரு வாழ்க்கை முறைக்கு வழி கோலுவார் என்று எதிர்பார்க்கலாம். எம்மத்திக்கு அவரைக் கொண்டுவந்த ஏற்பாட்டாளர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.


புற்று நோய் என்பது பலதரப்பட்டது. எனினும் அந்த நோய்க்கு உட்பட்டவர்களில் பெரும்பான்மையோர் உதவியற்ற ஒரு பரிதாபகரமான நிலையை அடைகின்றார்கள். தம்மைத்தாமே, பார்த்துக்கொள்ள பராமரித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையை அவர்கள் அடைகின்றார்கள். இதனால் அவர்களின் மதிப்பும் சுய கௌரவமும் பாதிப்பு அடைகின்றன. மனிதர் என்ற முறையில் எமக்கான மதிப்பும் மனித கௌரவமும் எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டால் 'நாம் மனிதர்கள்' என்ற எமது அந்த அந்தஸ்து பலவீனம் அடைகின்றது. மனிதத்தின் அஸ்திவாரமே ஆட்டங்காணத் தொடங்குகின்றது. எனவேதான் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதே நேரத்தில் அந்த நோயாளர்களின் சுற்றாடல் அவர்களுக்கு மனவேதனையைக் குறைக்கும் வண்ணமாக அமைய வேண்டிய ஒரு அவசியம் அங்கு ஏற்படுகிறது. இரக்கமும் அன்பும் அங்கு நிலவுவது அவசியம். புற்று நோய்க்கான உக்கிரத்தைத் தணித்து சமனப்படுத்த அந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம், வாழ்க்கைச் சௌகரியங்கள் மேம்படுத்தப் படவேண்டும். அப்பேர்ப்பட்ட தரமாற்றத்தை ஏற்படுத்த அஸ்திவாரமாக அமைவது புத்தபெருமானால் போதிக்கப்பட்ட மெத்தாவும் கருணாவும் என்றால் அதையாரும் மறுக்க முடியாது. இரக்கமும் அன்பும் அத்துணை அவசியமாகின்றன இந்த நோயாளர்களின் வாழ்க்கையில். அவர்களின் மனித கௌரவத்தை நிலைநாட்ட அவை தேவைப்படுகின்றன.

 


இந்த நோய்க்கு எவ்வாறு இரக்கமும் அன்பும் தேவைப்படுகின்றனவோ அதே போலத்தான் மனித வாழ்க்கையிலும் அவை அத்தியாவசியமாகின்றன. மனித சுய கௌரவம் பற்றி நாம் பேசும் போது சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் காணும் வாசகங்கள் நினைவிற்கு வருகின்றன. அதாவது உலகத்தில் சுதந்திரத்தையும், நீதியையும், சமாதானத்தையும் நிலை நாட்ட வேண்டுமென்றால் மனித குடும்பத்தின் அங்கத்தவர்கள் யாவருக்கும் அடிப்படையான மனித சுய கௌரவத்தையும் பிரித்தெடுக்கப்பட முடியாத சம உரிமைகளையும் வழங்குவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

 


அதை மனதில் கொண்டே, நீங்கள் இங்கு வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே! உங்களுக்கொன்றைக் கூற விரும்புகின்றேன். வடமாகாண மக்களின் சுய கௌரவம் சம்பந்தப் பட்ட விடயம் அது. அவர்கள் குறையை உங்களால் தீர்த்து வைக்க முடியும் என்ற எண்ணத்தில் நாட்டின் முக்கிய ஆணைபிறப்பிக்குஞ் சேனைத்தலைவர் ஆகிய உங்களுக்கு அதைக் கூறி வைக்கின்றேன். அதாவது எமது வடமாகாண மக்களின் உள்ளார்ந்த சுய கௌரவத்தைப் பாதிப்பதாகவே இங்கு காணப்படும் பெருவாரியான இராணுவப் பிரசன்னம் நோக்கப்படுகின்றது. எமது பொருளாதார விருத்;திக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பதையும் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் விட இந்த உள்ளார்ந்த சுய கௌரவப் பாதிப்பு மிகவும் முக்கியமானதென்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஏன் என்றால் இங்கு குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரில் அதிகப் பட்சமான பெரும்பான்மையினர் உள்ள10ர் வாசிகளின்; மொழியைப் பேசுவதில்லை, மதங்களைத் தழுவியவர்கள் அல்ல, அவர்களின் கலாசாரத்தில் ஊறியவர்கள் அல்ல, அவர்களின் ஊர்களைச் சேர்ந்தவர்களும் அல்ல. இங்கிருக்கும் இராணுவத்தினர் தொகைக்கு ஈடான தொகையினரான எமது தமிழ்ப்பேசும் மக்கள் அவர்கள் சார்பில் என்னைப் பேசுமாறு கட்டளையிட்டே என்னை என் பதவியை வகிக்க அனுப்பியுள்ளார்கள். அவர்களின் கட்டளையைச் சிரமேல் கொண்டே இதனை மேன்மை தங்கிய உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன்.


நாட்டின் பாதுகாப்பு பேணப்பட வேண்டும் என்பதில் எமக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் வடக்கு வாழ் மக்களின் நல உரித்துக்கள், அவர்களின் பாதுகாப்பு, அவர்களின் சுயகௌரவம் ஆகியவையுங் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். எங்கள் இந்த எதிர்பார்ப்புக்களுக்கு முரண்பட்டதாகத் தேசியப் பாதுகாப்பு அமைய வேண்டுமென்பதல்ல. இரண்டுமே பேணப்படலாம் என்பதே எமது கருத்து. ஆகவே எமது மக்கள் சார்பாக உங்களிடம் நான் கூறிவைப்பது யாதெனில் போர் வீரர்கள் தொகையில் குறைப்பு ஏற்படுத்தலிலும் எம் மக்கள் வாழ்க்கையில் இராணுவ உள்ளீட்டைக் குறைப்பதிலுங் கரிசனை காட்டி இராணுவக் குறைப்புக்கான ஒரு கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதனைத் தடங்களின்றி நடைமுறைப்படுத்தவும் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அரசியலுக்கு அப்பாற் சென்று மனிதாபிமான முறையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

 


போரினால் பாதிக்கப்பட்ட ஒரு விதவை தனது காணியை இராணுவம் கையகப் படுத்தி வைத்திருப்பதைக் காண்கின்றார். அதே காணியைப் போர்வீரர்களோ அவர்களின் குடும்பத்தவரோ அல்லது அவர்களின் உற்றார் உறவினர்களோ வந்திருந்து பதப்படுத்தி அதில் வேளாண்மை செய்வதைப் பார்க்கின்றார். அதில் வரும் வருமானங்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று இராணுவத்தினர் சந்தைப் படுத்துவதைக் காண்கின்றார். அதே நேரந் தனக்கு இருக்க இடமில்லை, செய்தொழில் இல்லை, பாதுகாப்பு இல்லை என்பதை அவதானிக்கின்றார். அவரின் சுயகௌரவத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள். 'ஏன் பிறந்தேன் நான்?' என்று அவர் அங்கலாய்ப்பது ஏன் எமக்கு புரியவில்லை? அவரின் சுயகௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் ஏன் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றோம்? போர் எமது மக்களைக் களைப்படையச் செய்துள்ளது. பாதிப்புக்களுக்கு உள்ளடக்கியுள்ளது. போர் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னரும் இந்த நிலை தொடரவேண்டுமா? எமது உடல்களைப் போன்றதே எமது நாடும். உடலின் ஒரு பகுதி உக்கிரமாகப் பாதிப்படைந்தால் உடலும் அதேவாறு பாதிப்படைகின்றது. வலிநிவாரணிகள் போன்றவை ஒரு சில காலத்திற்குப் பாதிப்பின் உக்கிரத்தைக் குறைத்து வைத்திருக்கக் கூடும். ஆனால் காலாகாலத்தில் முழு உடலும் பாதிப்பின் உக்கிரத்தை அனுபவிக்க நேரிடும்.


எமது மக்கள் உறுதியான மனமுடையவர்கள். அதே நேரத்தில் ஊக்கமுடன் வேலைசெய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்கள் முன்னேற வழிவகுப்பது எம் எல்லோரதுங் கடமையாகும். அவர்களின் சுய கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல், அவர்களின் சுற்றாடலைத் தூய்மைப்படுத்தி, அவர்கள் சுதந்திர மக்களாக, இந்த நாட்டின் குடிமக்களாக முன்னேற்றப் பாதையில்ப் பயணிக்க நாங்கள் யாவரும் ஒன்றுபடுவோமாக! அவர்கள் சுபிட்சப் பாதையில் செல்வது எமது நாடு முழுவதற்கும் நன்மை பயக்கும்  என்பதை நாம் மனதில் வைத்து, அவர்களின் இடர்கள் களைய மேன்மைதகு கௌரவ ஜனாதிபதி அவர்கள் ஆவன செய்ய முன்வர வேண்டும் என்று வினயமாகக் கேட்டு என்னைப் பேச அழைத்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

வடக்கில் 12000 துருப்பினரே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் – ஜனாதிபதி


வடக்கில் 12000 துருப்பினரே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


யுத்தத்தின் பின்னர் வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை 12000 மாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


யுத்தம் இடம்பெற்ற காலத்தில் 60000 – 75000 துருப்பினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர் எனவும், தற்பேர்து அந்த எண்ணிக்கை 12000மாக குறைவடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


எந்தவொரு இனமும் மற்றுமொரு இனத்தை அடக்குமுறைக்கு உட்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து மக்களினதும் குருதி ஒரே நிறமே எனவும், மஞ்சள், பச்சைம மற்றும் கறுப்பு நிறத்தில் குருதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


யுத்தத்தின் நிறைவின் பின்னரான குறுகிய காலத்தில் அரசாங்கம் பாரியளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


குறுகிய காலப்பகுதியில் யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டதுடன், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை நடாத்துவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலையின் மூலம் மக்கள் நன்மை அடைவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களன ருவான் விஜேவர்தன, எரான் விக்ரமரட்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பலரது பங்களிப்பில் உருவாக்கப்பட்டது தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை:-


தெல்லிப்பழையில் 'கலர்ஸ் ஒவ் கரேஜ்' அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகைதந்த ஜனாதிபதி அவர்கள், மேற்படி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இப்புற்றுநோய் வைத்தியசாலையை புதிதாக நிர்மாணிக்கும் பொருட்டு டிரைல் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் 'மாஸ் இன்டிமேட்' நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாதன் சிவகணநாதன் மற்றும் அவரது நண்பர் சரித்த உனப்புவ ஆகியோர் தலைமையில் தெற்கே தெய்வேந்திரமுறை முதல் வடக்கே பருத்தித்துறை வரையில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டதன் பயனாக 300 மில்லியன் ரூபா நிதியினை சேகரித்திருந்தனர். 2011 ம் ஆண்டு தொடங்கப்பட்ட 670 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்தப் பாதயாத்திரையின் போது 35,000 பேர் கலந்து கொண்ட அதேவேளை 12 பேர் மட்டுமே முழுமையாக பங்கெடுத்திருந்தனர்.

2,50,000 பேர் வழி நெடுகிலும் இனமத பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து உதவிகளைப் புரிந்துள்ள நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களும், புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இவ்வைத்தியசாலை அமையப் பெற்றுள்ள காணியினை பிரபல தொழில் அதிபர் ஈ.எஸ்.பி நாகரட்ணம், உடுவிலைச் சேர்ந்த மாணிக்க சோதி அபிமன்னசிங்கம் ஆகியோர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டமையப் பெற்றுள்ள இவ் வைத்தியசாலையில் பிரத்தியேகமான பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு, சிறுவர் விடுதி, சிறுவர் பூங்கா என்பன அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 120 கட்டில்களும் போடப்பட்டுள்ளன.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலையின் மூலமாக யாழ்.மாவட்டம் மட்டுமல்லாது வடக்குமாகாண மக்களும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையினை ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன் நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் வைத்தியசாலையின் ஏனைய தொகுதிகளையும் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இதனிடையே அதியுயர் கதிர்வீச்சு பிரிவு அமையப் பெறவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டி வைத்தார்.

முன்பதாக பிரதான வாயிலிலிருந்து மங்கள வாத்தியம் சகிதம் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அவர்கள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க சகிதம் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்;டார்.

அரங்க நிகழ்வில் புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிர்மாணப் பணிக்கான நடைபயணம் தொடர்பில் டிரைல் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும், மாஸ் இன்டிமேட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாதன் சிவகணநாதன் மற்றும் சரித்த உணப்புவ ஆகியோர் விளக்கமளித்தனர்.

அத்துடன், நடைபயணத்தை தொடங்கி இறுதிவரை நிறைவு செய்த 12 பேருக்கு ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ கவர்ஸ் ஒப் கரேஜ் விருது வழங்கி கௌரவித்தார்.


இதன்போது வடக்கின் முதலமைச்ச, மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர் சிரான் விக்கிரமரட்ன, ஹர்ஸ டி சில்வா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101919/language/ta-IN/article.aspx

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம்

அரசியல் இருந்தாலும்

தாயக மக்களுக்கு அவசியம் தேவையான ஒன்று

இந்த கட்டிடத்திற்கு போட்டிருப்பது அஸ்பெஸ்டஸ் கூரையா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேர்தல் முடியமட்டும் கர்ஜிப்புகளுக்கும்,கனைப்புகளுக்கும்,உறுமல்களும் தமிழனுக்கு சார்பாக அதிகமாய் கேட்க்கும் இரண்டு நாட்டிலும்.

22(53).jpg

 

100% சிங்களக் கொண்டாட்மாக இருக்கிறது. தமிழ் எழுத்திலும் இல்லை. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றப்பக்கம் தமிழில் எழுதி இருக்கு

இது எமக்கு என்ன எண்டு இடுக்காமல் ஒரு தமிழ் இளைஞனும் ஒரு சிங்கள இளைஞனும் மேற்கொண்ட முயற்சியால் கட்டப்பட்டது இலங்கையின் பல பாககங்களில் இருந்தும் மக்களிடம் நிதி சேகரித்து கட்டப்பட்டது......

உயிர்காக்கும் உன்னத சேவையில் ஈடுபட இருக்கும் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் அந்த இளைஞர்கள் என்று எல்லோருக்கும் வாழ்த்துக்கள் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய தேவை இனி குறையலாம்

ஈழத்தமிழரும் இந்திய சீக்கியர் மாதிரி (எப்படி அவர்கள் இந்தியாவை பிடிக்காவிட்டாலும் இப்போது சேர்ந்து இருப்பது போல்) வாழப்போகிறார்கள் என்று நினைக்கின்றேன்... :unsure:

 

சுண்டல் வர வர நீரும் ஒரு ஒட்டுகுழுவாக மாறிவிட்டீர் :lol::rolleyes:

Edited by naanthaan

 

14(362).jpg

 

 

கண்கொள்ளா காட்சி.....இந்த தொப்பிபோட்டவர்  இலங்கை சாமியாரா? இந்தியாவா?

 

கண்கொள்ளா காட்சி.....இந்த தொப்பிபோட்டவர் இலங்கை சாமியாரா? இந்தியாவா?

நல்லூர் ஆதீனம்(?!) என்று நினைக்கிறேன்.

மற்றப்பக்கம் தமிழில் எழுதி இருக்கு

இது எமக்கு என்ன எண்டு இடுக்காமல் ஒரு தமிழ் இளைஞனும் ஒரு சிங்கள இளைஞனும் மேற்கொண்ட முயற்சியால் கட்டப்பட்டது இலங்கையின் பல பாககங்களில் இருந்தும் மக்களிடம் நிதி சேகரித்து கட்டப்பட்டது......

உயிர்காக்கும் உன்னத சேவையில் ஈடுபட இருக்கும் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் அந்த இளைஞர்கள் என்று எல்லோருக்கும் வாழ்த்துக்கள் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய தேவை இனி குறையலாம்

இந்த கட்டிடத்திற்கு போட்டிருப்பது அஸ்பெஸ்டஸ் கூரையா?

அப்படி அஸ்பெஸ்டோஸ் கூரை என்றால் ஒரு பிரயோசனமும் இல்லை. இப்படியான கூரைகள் கான்சரை உருவாக்கும் என்று மேற்கு நாடுகளில் தடை.

இரசாயன உரத்தையும், கிருமினாசினியையும் கொட்டி உணவை உண்டுவிட்டு இப்படியெல்லாம் பாடுபட வேண்டுமா?

சிறி லங்கா, இந்திய அமைச்சர்கள், மேல் தட்டு மக்கள் எல்லாம் ஓர்கானிக் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது பணத்தை திருடி, எமது அடிப்படை உரிமைகளை திருடி, குறைந்தது  மக்களால் தெரிவு செய்யபட்ட மாகாணசபைக்கான குறைந்த அதிகாரங்களை கூட வழங்காமல், மாகாண சபையை முடக்கிவைத்துக் கொண்டு திருடிய பணத்தில் வைத்தியசாலை கட்டியதை பாராட்டும் நம்மவர்களும்  இருக்கிறார்கள்.

 

நீங்களும் அந்த நிலைமையில் இருந்தா அதைத்தான் செய்வீர்கள் துல்பன்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வைச்சியசாலைக்கு செல் அடிச்சு உடைச்சதும் அவங்களே. இப்ப கட்டி.. திறப்பு விழா செய்வதும் அவங்களே. வாழ்க புத்த தர்மம். அதுக்கு விசிறி வீசிற விக்கி மாத்தையா. எதுஎப்படியோ.. உடைச்சதை திருப்பி கட்டிக்கொடுக்கிறான்னு சந்தோசப்பட வேண்டியான். இன்னொரு தடவை உடைக்க சந்தர்ப்பம் அளிக்காத வகைக்கு உவங்க விரட்டிறது தான் நிம்மதிக்கு ஒரே வழி. :icon_idea:

நீங்களும் அந்த நிலைமையில் இருந்தா அதைத்தான் செய்வீர்கள் துல்பன்

நீங்கள். கூறியது சரிதான். நாடும் அந்த இடத்தில் இருந்தால் அதையே செய்து நடிப்பேன். ஆனால் நான் குறிப்பிட்ட விடயம் அதுவல்ல மகிந்தவை உண்மையிலேயே பாராட்டுபவர்களைப் பற்றியது. உண்மையில் இவ்வாறான மருத்துவமனைகளை நிர்மாணப்பது மானில அரசாங்கத்தின் வேலை. நியாயமான அதிகாரங்கள் வழங்கப்பட்டால் கெளரவ முதல்வர் விக்கினேஸ்வரனால் இப்படியான நல்ல காரியங்களை ஆற்றும் திறன்உண்டு. மாகாணசபைக்கு வழங்கவேண்டிய குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட பறித்து கட்டி வைத்துவிட்டு மாகாணசபைக்கு முறைப்படி வரவேண்டிய வரிப் பணத்தையெல்லாம் மத்திய அரசின் திறைசேரியில் சேர்த்து விட்டு தனது பெருந்தன்மையால் தமிழருக்கு தருவதாக காட்டும் மகிந்தவின் தந்திரத்தையே சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

மாகாண அமைச்சர் கெளரவ ஐங்கரநேசன் அவர்கள் மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு பஸ் ரயர் வாங்கும் அதிகாரம் மட்டுமே இருப்பதாக வானொலி ஒன்றிற்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

மற்றப்படி நல்ல செயல்களை எவர்செய்தாலும் அவர்களை பாராட்டுவதில் இன, மத பேதம் பார்க்க கூடாது. இவ வைத்தியசாலையை நிர்மாணிக்க அரசியல் இலாபமின்றி பாடுபட்ட சகோதர சிங்கள இனத்தவர்களும் போற்றுதற்குரியவர்களே என்பது என் கருத்து.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் நாலு பேருக்கு தொழில், சிகிச்சை கிடைக்குமாயின் மனமார்ந்த மகிழ்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் காட்டி கொடுக்குறதும் தொழில் தானே அப்போ அதுவும் ஓகே வா அண்ணே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.