Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவ மரக்கறி விற்பனைக்கு விரைவில் நல்லதொரு தீர்வு; விவசாயிகளிடம் கூறினார் யாழ்.தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிப்படைவது தொடர்பில், விரைவில் நல்லதொரு தீர்வை வழங்குவதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட விவசாய சம்மேளனங்களின் தலைவர்களை நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்.இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, பலாலி கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். 
 
இதன்போது விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெரிவித்தனர். 
இராணுவத்தினர் தமது விவசாய உற்பத்திப் பொருள்களைச் சந்தைகளில் கொண்டு வந்து விற்பனை செய்வதால், தமக்குப் பெரும் நட்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தளபதியிடம் சுட்டிக்காட்டினர்.
 
இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, இராணுவத்துக்குத் தேவையான மரக்கறிகளில் 20 சதவீதமானவற்றையே நாம் உற்பத்தி செய்கின்றோம். எஞ்சிய 80 சதவீதமான மரக்கறிகளைக் கொள்வனவு செய்தே வருகின்றோம். 
 
இந்தப் பாதிப்பு தொடர்பில் மிக விரைவில் உங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்குவேன் என்று கூறியுள்ளார்.
 
மேலும் இராணுவத்தினருக்கு நாளாந்தம் 300 லீற்றர் பால் வரை தேவையாக இருப்பதாகவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியதுடன் அவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
இராணுவத்தினர் மக்கள் குடியிருப்புக்களிலிருந்து வெளியேறுவார்கள் எனவும், விரைவில் மக்களின் வீடுகள் அவர்களிடமே கையளிக்கப்படும் எனவும் தளபதி அங்கு தெரிவித்துள்ளார்.
 
இதன்போது சந்திப்பில் கலந்து கொண்ட விவசாயிகள் சிலர், இராணுவத்தினர் முகாம்களை மூடி வெளியேறுவதால் களவு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர். 
 
இராணுவத்தினரின் இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் தேவை எனில், அந்தப் பகுதி மக்கள் கையெழுத்திட்டுக் கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று தளபதி குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=546312612431684286#sthash.CbmlC3zY.dpuf

"இதன்போது சந்திப்பில் கலந்து கொண்ட விவசாயிகள் சிலர், இராணுவத்தினர் முகாம்களை மூடி வெளியேறுவதால் களவு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்."

என்ன கொடுமை சாமி.

பாலை கண்டியில் இருந்து கொண்டுவரட்டும். யாழ்ப்பாணத்து சிறார்களுக்கு அவர்களின் பண்ணைகளின் பால் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்தமண்ணில் இருக்கும் விவசாயிகள் பெரும் அவலத்திற்க்குள்ளாகின்றார்கள். அண்மையில் நான் அறிந்ததின் படி தாங்கள் பயிரிட்ட மரக்கறிகளை ஆடுமாடுகளுக்கே போடுவதாக கூறினர். அவ்வளவிற்கு ராணுவத்தினரின் மரக்கறி தானியங்கள் குப்பைமலிவில் விற்கப்படுகின்றனவாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாக தான் யாழ்ப்பாணத்தில் தேனும் பாலும் ஓடுகிறது. மக்களை விவசாயம் செய்ய விடாமல் தங்களையே நம்பி இருக்க செய்யும் அரசின் குள்ளத்தனமான நடவடிக்கை தான் இது.இராணுவ அதிகாரியின் வாக்குறுதி வெறும் பம்மாத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமண்ணில் இருக்கும் விவசாயிகள் பெரும் அவலத்திற்க்குள்ளாகின்றார்கள். அண்மையில் நான் அறிந்ததின் படி தாங்கள் பயிரிட்ட மரக்கறிகளை ஆடுமாடுகளுக்கே போடுவதாக கூறினர். அவ்வளவிற்கு ராணுவத்தினரின் மரக்கறி தானியங்கள் குப்பைமலிவில் விற்கப்படுகின்றனவாம்.

கொஞ்ச நாளைக்கு பொறுங்கோ .............
இரணைமடுவில் இருந்து தண்ணி வருதாம். வந்த வுடன் தோட்டத்தை கொஞ்சம் பெருபித்து விட்டு 
வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்வோம். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாளைக்கு பொறுங்கோ .............
இரணைமடுவில் இருந்து தண்ணி வருதாம். வந்த வுடன் தோட்டத்தை கொஞ்சம் பெருபித்து விட்டு 
வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்வோம். 

ஏதோ இரணைமடு தண்ணியிலைதான் யாழ்ப்பாணத்து தோட்டக்காரன் சீவிச்ச மாதிரியேல்லே உங்கடை கதை போகுது.... :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான  சூழலில் தான் நாம் என்னவகையான மாற்றீடுகளை செய்யலாம் என யோசிப்பது அவசியம். நாங்கள் இன்னமும் மரக்கறிகளை சந்தைக்கு கொண்டு சென்று வித்துதான் காசாக்க வேண்டும் என்பதை விட என்ன மாதிரியான செயற்பாடுகள் மூலம் மரக்கறிகளின் ஆயுளை அதிகரித்து அதன் பெறுமதியை அதிகரிக்கலாம் என செயற்படுவது நீண்டகால நன்மையைத் தரும்.

உதாரணமாக மரக்கறிகளை சட்டினி, வற்றலாக மாற்றி வித்தியாசமான பொதியிடல் முறைகள் மூலம் முற்றிலும் புதிய சந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். உதாரணமாக வாழைக் காயை காயாக விற்க முடியாதவர்கள் அதனை சிப்சாக மாற்றி விற்கலாம். நல்ல தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தரமாக உற்பத்தி செய்தால் ஐரோப்பா அமெரிக்காவில் இருக்கும் எம்மவர்களை இலக்கு வைக்கலாம்.

இப்போது கூட வட பகுதியில் பிடிக்கப்படும் நண்டு, சிங்கறால், கடலட்டை பல ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிளிநொச்சியில் நெஸ்லே நிறுவனம் விவசாயிகளிடம் பாலைக் கொள்வனவு செய்து, அங்கிருக்கும் அவர்களது குளிரூட்டும் நிலையத்தில் பதப்படுத்தி தெற்கிற்கு அனுப்புகிறார்கள். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் நவீனமுறையில் விவசாயப் பண்ணை அமைத்திருக்கிறார்கள். சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி வெற்றிபெறுவது அவர்களின் கையிலேயே இருக்கிறது. 

அருமையான யோசனை, தும்பு!

வெளிநாட்டில் யாழ்ப்பாண மரக்கறிகளுக்கும். பழவகைகளுக்கும், குறிப்பாக முருங்கை காய்க்கும், புதிதாகச் சந்தை தேடவேண்டியதில்லை! எம்மவரே காணும்!

பி.கு: நானும் வீட்டை வந்த அவுஸி ஒண்டுக்கு, முருங்கைக் காய்க் குழம்பைச் சாப்பிடக் குடுத்து, (றால் போட்டுக் காய்ச்சினது) , இப்ப அது காணிற இடமெல்லாம் என்னிட்ட ரெஸிப்பி கேட்டுக்கொண்டு திரியுது! :o  ஒழிச்சுத் திரிய வேண்டிகிடக்கு! :D

எனவே, புதிய சந்தைகளுக்கும் சந்தர்ப்பம் இருக்கு ! :D  

Edited by புங்கையூரன்

உண்மைதான் அண்ணா. சொன்னா நம்ப மாட்டார்கள், யாப்பன றா/Jaffna Toddy (யாழ்பாண கள்ளுக்கு) இக்கு கொழும்பிலும் உல்லாசப் பிரயாணிகள் மொய்க்கும் தெற்குப் பகுதிகளிலும் இருக்கும் கிராக்கி யாழ்ப்பாணத்திலே தெரியாது :unsure: . அவர்களுக்கு பனங்கள்ளு விருப்பம் என்றாலும் கிடைப்பது தென்னங் கள்ளும் கித்துள் மரக் கள்ளும் தான் :o . விடியக் காலமை அஞ்சு மணிக்கு இறக்கின உடன் கள்ளை பிரீஸ் பண்ணி மத்தியானம் ஒரு மணிக்கு  கிக்கடுவையில் சன்பாத் எடுக்கும் ஜேர்மனுக்கு குடுத்தால் அவன் பியர் குடிப்பதையே மறந்து விடுவான் :icon_mrgreen: . ஊரில போய் செற்றிலாகும் போது ஒரு canning mechine கொண்டு போய் இறக்கலாம் எண்டு இருக்கிறன் :lol: . Presentation அண்ட் Value adding இல் எம்மவர்கள் இன்னும் முன்னேற வேண்டும் :icon_idea: .

இராணுவம் விற்று மிஞ்சும் காய்கறிகளை வத்தல், சம்பல், ஊறுகாய் செய்து விற்றால் அதன் பின்னர் வத்தலின் பெறுமதியை உயர்த்தா என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2003  இல் ஊர்போயிருந்தபோது

எனது ஊரில் 

தானாக விழுந்து

தேடுவாராற்று

பழுதாகி

மண்ணோடு மண்ணாகிப்போகும்

தென்னை  மற்றும் பனைகளின் ஓலைகளையும் பழங்களையும் எடுத்து சேர்த்து கொண்டு பொய் விற்றாலே 

கோடீசுவரர் ஆகிவிடலாம்

ஆனால் செய்வது யார்.............??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

உழவர் சந்தைகளை உள்ளூரில் திறந்து விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை விற்கலாம். மக்கள் மலிவைப் பாராது உள்ளூர் மக்களுக்கு ஆதரவை வழங்கவேண்டும்.

உண்மைதான் அண்ணா. சொன்னா நம்ப மாட்டார்கள், யாப்பன றா/Jaffna Toddy (யாழ்பாண கள்ளுக்கு) இக்கு கொழும்பிலும் உல்லாசப் பிரயாணிகள் மொய்க்கும் தெற்குப் பகுதிகளிலும் இருக்கும் கிராக்கி யாழ்ப்பாணத்திலே தெரியாது :unsure: . அவர்களுக்கு பனங்கள்ளு விருப்பம் என்றாலும் கிடைப்பது தென்னங் கள்ளும் கித்துள் மரக் கள்ளும் தான் :o . விடியக் காலமை அஞ்சு மணிக்கு இறக்கின உடன் கள்ளை பிரீஸ் பண்ணி மத்தியானம் ஒரு மணிக்கு  கிக்கடுவையில் சன்பாத் எடுக்கும் ஜேர்மனுக்கு குடுத்தால் அவன் பியர் குடிப்பதையே மறந்து விடுவான் :icon_mrgreen: . ஊரில போய் செற்றிலாகும் போது ஒரு canning mechine கொண்டு போய் இறக்கலாம் எண்டு இருக்கிறன் :lol: . Presentation அண்ட் Value adding இல் எம்மவர்கள் இன்னும் முன்னேற வேண்டும் :icon_idea: .

தும்பளையான், நல்ல யோசனைகள். இப்படியான ஆலோசனைகளை, வழிமுறைகளை சரியான விதத்தில் எம்மூர் மக்களுக்கு எடுத்துச் செல்லும் வழிமுறைகள் இருக்கின்றதா? ஒரு சிறு அமைப்பாக அல்லது குழாமாக இவற்றை அவர்களும் அறியும் வண்ணம் ஏற்படுத்துவது சாத்தியமாகுமா?

பி.கு: நானும் வீட்டை வந்த அவுஸி ஒண்டுக்கு, முருங்கைக் காய்க் குழம்பைச் சாப்பிடக் குடுத்து, (றால் போட்டுக் காய்ச்சினது) , இப்ப அது காணிற இடமெல்லாம் என்னிட்ட ரெஸிப்பி கேட்டுக்கொண்டு திரியுது! :o  ஒழிச்சுத் திரிய வேண்டிகிடக்கு! :D

அந்த ரெசிப்பியை எங்களுக்கும் பகிர்ந்தால் குறைஞ்சா போயிடுவீக எசமான்? :)

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் விற்று மிஞ்சும் காய்கறிகளை வத்தல், சம்பல், ஊறுகாய் செய்து விற்றால் அதன் பின்னர் வத்தலின் பெறுமதியை உயர்த்தா என்ன செய்யலாம்?

1622627_716783315012702_1238597466_n.jpg

:D

தும்பளையான், நல்ல யோசனைகள். இப்படியான ஆலோசனைகளை, வழிமுறைகளை சரியான விதத்தில் எம்மூர் மக்களுக்கு எடுத்துச் செல்லும் வழிமுறைகள் இருக்கின்றதா? ஒரு சிறு அமைப்பாக அல்லது குழாமாக இவற்றை அவர்களும் அறியும் வண்ணம் ஏற்படுத்துவது சாத்தியமாகுமா?

சிலருடன் ஒரு திட்டம் பற்றிக் கதைத்தேன். தொடங்கி வாய் மூட முதலேயே தம்பி இது சரிவராது என்று விட்டு அதுக்கு ஆயிரம் காரணங்கள், நொண்டிச் சாட்டுக்கள். வாழைப்பழத்தை உரிச்சு, வாயிலே வச்சு தள்ளி விட்டாலும் விழுங்குவதற்கு கஷ்டப்படுகிறார்கள். இன்னுமொருவனும் ஊருக்குப் போய்வந்து எழுதிய "ஞாபக வீதியிலே...." என்ற திரியில் இதே போல தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றிக் கூறியிருந்தார். ஒவ்வொரு மாதமும் $500 அனுப்புகிறேன் என்று சொன்னால் உடனேயே அதை எப்படி அனுப்பலாம் என்று சொல்லுவார்கள், ஒவ்வொருமாதமும் 100,000/- உழைக்க வழி சொல்லுகிறேன் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள். எதையாவது ஆரம்பித்து நன்கு தொழிட்பட வைத்து  கொடுத்தால் மட்டுமே கொஞ்சம் சாத்தியம். நான் அப்படி செய்வதற்கு போய் குறைந்தது ஆறு மாதமாவது ஊரிலே நிற்கவேணும். ஊரை/யாழ் குடாநாட்டை பொன் விளையும் பூமியாகவே நான் பார்க்கிறேன். இவற்றைப் பாவித்து, தொழில் நுட்பம் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.

லங்கா கேனரீஸ் (MD) நிறுவனம் பழங்கள், மரக்கறிகளில் இருந்து பலவகையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். அமேரிக்கா, ஐரோப்பா, அவுஸ் உட்பட ஏற்றுமதியும் செய்கிறார்கள். நான் இந்த முறை போயிருந்த போது எனது சிங்கள நண்பன் ஒருவன் மூலம் MD யில் நல்ல பதவியில் இருக்கும் ஒருவரை ஒரு விருந்திலே சந்திக்கக் கிடைத்தது. பனம்பழத்தில் இருந்து பனங்களியை எடுத்து அதனைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம் பற்றி கூறினார். அதைவிட பழரசம் கருப்பணி என உற்பத்தி செய்யவும் யோசித்திருக்கிறார்கள். வெள்ளைக்காரனுக்கு புழுக்கொடியல் விற்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? சுவிங்கம் சப்பும் வாய் பனாட்டைச் சப்புமா? அந்தக் கோணத்திலே அவர்கள் யோசிக்கிறார்கள். நிறுவனம் சம்பந்தமான விடயங்களை, குறிப்பாக புதிதாக முயற்சிக்கும் உற்பத்திகளை பொது வெளியிலே பதிவது கடினம்.

யாழ் மாவட்டத்திலெ பனை அபிவிருத்திச் சபை "கற்பகச் சோலை" என்ற பெயரிலே பல பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். நாடு முழுவதும் பல கிளைகளும் இருக்கு ஆனால் இப்போதும் பழைய முறைகளிலேயே பொதியிடுவதால் தெற்குப் பகுதிக்கு ஏற்றுமதி செய்யவோ பெரிய சந்தை வாய்ப்புக்களைப் பெறவோ கஷ்டப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்தில், கண்டி வீதியில் இருக்கும் அவர்களைப் போய்ப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டிருந்தேன் ஆனால் நேரம் காணாமல் போய்விட்டது. அங்கு போய் சில படங்களை எடுக்காமல் விட்டது பெரிய மனக்குறை.

கற்பக தருவை நாங்கள் இன்னமும் வடிவாகப் பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Fruit_based_Products.jpg

Sap_based_Products.gif

இதுதான் அவர்களின் இணையத்தளம்.

http://www.katpahachcholai.com/strategies.html

யாழ் மாவட்டத்திலே அதிகரித்திருக்கும் கழிவுப் பிரச்சனை பற்றி பலரும் குறைப்படுகிறார்கள். யாழ் மாவட்டத்திலே இந்தக் குப்பைகளை மீள் சுழற்சி (Recycle) செய்ய யாருமே இல்லை. நகரசபைகள் குப்பைகளைக் கொண்டு போய் ஊருக்கு ஒதுக்குப்ப் புறமான வெளிகளில் கொட்டுகிறார்கள் கண்ணாடி, கடதாசி, உலோகம் என மீள சுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களை தரம் பிரித்தால் அது மிகவும் பெறுமதியான வளங்கள் மண்ணினுள் புதைந்து சூழலை மாசுபடுத்துவதைக் குறைப்பதோடு மிகவும் இலாபம் தரக் கூடிய தொழிலாகும். தெற்குப் பகுதியிலே பல நிறுவனங்கள் இவ்வாறான வேலை செய்கிறார்கள். குறிப்பாக உலோகம், கண்ணாடி, கடதாசி மட்டை மீள சுழற்சி செய்கிறார்கள். யாழிலே சில முஸ்லீம்கள் பழைய இரும்புகளை/உலோகங்களை வாங்கி சிறிதாக வெட்டி தெற்குப் பகுதிக்கு அனுப்புகிறார்கள். அத்துடன் சிலர் E Waste - பழைய தொலைக்காட்சி, கணணி, கணனித் திரை போன்ற இலத்திரனியல் உபகரணங்களில் இருக்கும் பெறுமதியான உலோகங்களைப் பிரித்து எடுக்கிறார்கள். உரிய முறையிலே ஒரு குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரம் இருந்தாலே, தரம் பிரித்து மீள் சுழற்சி செய்பவர்களுக்கு வித்து நன்கு உழைக்கலாம். ABANS கொழும்பிலே இப்படியான ஒரு முயற்சி செய்கிறார்கள்.

இப்படிப் பல திட்டங்கள் இருக்கு அண்ணா ஆனால் யாருக்குமே செய்ய விருப்பம் இல்லை. தெற்கில் இருந்து யாராவது போய் செய்தாலும் வளங்களை சுரண்ட வாறாங்கள் என்பார்கள் ஆனால் இறுதியில் தெற்கு நிறுவனங்கள் தான் வந்து கடை திறக்கும்.

அதை நாநும் சொன்னான். ஆமி தெற்கிலை இருந்து வந்து தோட்டம் செய்ய முதல் நீங்களும் தோட்டம் செய்யலாமே என்று சொன்னன். அவர்கள் ஆமி தேற்கிலை தோட்டம் செய்யலாம்தேனே சிங்கள விவசாயினரை காணிகளில் என்கிறார்கள். 

எதோ விட்டு ஓடி வந்தவை தங்களுக்கு மூளை கூடவாம். 1948 இலிருந்து அவன் தமிழனின் ப்ரொருளாதரத்தை சிதைப்பத்தறக்க ஒருவ்வொரு வழியால் முன்னால் கொண்டு போகீறான். தாங்கள் இடை இடை பயணம் போவருவத்ற்காக ஆமியுடன் பந்தயம் கட்டி போட்டி போடிருக்கலாம் தானே என்கிறார்கள். தோலகட்டி நெல்லி கிற்ஸ் குடிச்சிருந்தால் தெரியும் தமிழரின் தரம் பற்றி.

யூனி லிவேஸ் என்ற வெள்ளைக்காற கம்பனிக்கு எதிராக அகில இலங்கையிலும் சவர்க்காரம் என்ற தொழில் இறங்கி கம்பனி ந்டத்தியது மில்க்வைட் மட்டும். வாளைச் சேனை, கந்தளாய், பரந்தன, காங்கேசந்துறை, ஆனை யிறவு என்று இலங்கையில் சகல உற்பத்தி தொழில் சாலைகளும் தமிழர் இடங்களில் திறக்கபட்டது ஏன் எனில், மூலப்பொருள் அல்ல. மூளைபொருளும் அவர்களிடம் இருந்தத்தால் மட்டுமே. சிறிமாவுக்கு வீட்டு தோட்டம் காட்டிக்கொடுத்த சனத்துக்கு, தாங்கள் இடைக்கிடை போய்வரும் போது பாதுகப்பாக இருக்கட்டும் என்று போதனை வைக்கிறார்கள். 

இதை ஆவா குறூப்புக்கு சொல்லிகொடுத்திருந்தால் களவுக்கு போக மாட்டார்கள். செயலாளர் நாயகம் கேள்விப்பட்டால் மணல் கொள்ளையை கைவிடுவார்!

  • கருத்துக்கள உறவுகள்

தும்ஸ் இப்ப என்ன யோசிக்கிறார்..?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தும்ஸ் இப்ப என்ன யோசிக்கிறார்..?? :unsure:

156374_711651208859246_1640129955_n.jpg

:(   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இரணைமடு தண்ணியிலைதான் யாழ்ப்பாணத்து தோட்டக்காரன் சீவிச்ச மாதிரியேல்லே உங்கடை கதை போகுது.... :D

அப்பிடி என்றுதான் .... இலங்கை அரசும் ஆசிய வங்கியும் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிச்சிருக்கினமாம் ..........
நீங்கள் கேள்வி படவில்லையோ ??

யாழ் மாவட்டத்திலெ பனை அபிவிருத்திச் சபை "கற்பகச் சோலை" என்ற பெயரிலே பல பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். நாடு முழுவதும் பல கிளைகளும் இருக்கு ஆனால் இப்போதும் பழைய முறைகளிலேயே பொதியிடுவதால் தெற்குப் பகுதிக்கு ஏற்றுமதி செய்யவோ பெரிய சந்தை வாய்ப்புக்களைப் பெறவோ கஷ்டப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்தில், கண்டி வீதியில் இருக்கும் அவர்களைப் போய்ப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டிருந்தேன் ஆனால் நேரம் காணாமல் போய்விட்டது. அங்கு போய் சில படங்களை எடுக்காமல் விட்டது பெரிய மனக்குறை. கற்பக தருவை நாங்கள் இன்னமும் வடிவாகப் பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இண்டைக்கெண்டு பார்த்து இந்த செய்தியும் வந்துள்ளது. :rolleyes::D

திக்கம் வடிசாலையினை தாரை வார்க்க முயற்சி!! டக்ளஸிற்கு எதிராக போர்க்கொடி!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135737&st=0&p=982850

  • கருத்துக்கள உறவுகள்

என்கை மல்லைஐ கானோம் :rolleyes: :rolleyes: :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.