Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவது யார்?

முத்துக்குமார்

ஜனவரி மாதம் அடுத்தடுத்து தமிழ் அரசியல் சூழலில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமெரிக்க பிரதிநிதிகளின் வடபகுதி விஜயம், அனந்திக்கு புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என அரசதரப்பு தெரிவித்தமை, முஸ்லிம் மக்கள் குழு சர்வதேச சமூகத்திடம் தமது பிரச்சனைகளைக் கூற தீர்மானித்தமை, மேல்மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியானமை, ஜனாதிபதி பங்குபற்றிய அரசவிழாவில் விக்னேஸ்வரனும் வடமாகாண சபை உறுப்பினர்களும் பங்குபற்றியமை போன்றவை முக்கியமான நிகழ்வுகளாகும்.

அமெரிக்க பிரதிநிதி ராப்பின் யாழ் விஜயம் ஜனவரி மாத ஆரம்பத்தில் இடம்பெற்றது. 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்பார்கள். அரசாங்கத்திற்கு தை பிறந்தால் தலையிடி தொடங்கும் என்பதாகிவிட்டது. ஒரு வருட காலமாக தங்களுடைய அழுத்தங்கள் பெரியளவு வெற்றியளிக்காததினால் இந்தத் தடவை சற்று அதிக அழுத்தத்திற்கான தோற்றத்தினை அமெரிக்கா கொடுக்கப் பார்க்கிறது.

பிரித்தானிய பிரதமர் டேவிற் கமரூன் ஏற்கனவே பொதுநலவாய மாநாட்டினை பயன்படுத்தி இதனை தொடங்கி வைத்தார். அந்த அஞ்சலோட்டத்தின் தடி தற்போது அமெரிக்காவிடம் கொடுத்தாயிற்று. மார்ச் மாதம் ஜெனிவா நிகழ்வு முடியும் வரை அமெரிக்கா இதனை கொண்டோடும். நண்பன் நிலாந்தன் கூறியது போல இந்த சக்திகள் சிறிலங்கா அரசின் கழுத்தை முறிக்குமா, காதைத் திருகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். போகிற போக்கினை பார்த்தால் இந்தத் தடவையும் காது திருகை மட்டும் தான் நடைபெறும் போல தெரிகின்றது. காது திருகலோடு மட்டும் விவகாரத்தை முடித்துவிடுவதற்கு இந்தியா இப்போதே செயற்படத் தொடங்கிவிட்டது.

சர்வதேச அழுத்தங்கள் எல்லாம் இந்தியாவை தாண்டி வரும்போது வீரியம் குறைகின்றது என்பது வழக்கமானதே. தமிழ்நாடு சற்று விழிப்பாக இருப்பதனால் இந்தியாவிற்கு பல சங்கடங்கள் ஏற்படலாம். இதற்குக்கூட இந்தியாவிற்கு கைகொடுப்பதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், குறிப்பாக விக்னேஸ்வரன் எப்போதும் தயாராக இருக்கின்றார்.

தமிழர் விவகாரத்தை தமிழர்கள் சம்பந்தம் இல்லாமல் சர்வதேச சக்திகளும் பிராந்திய சக்தியும் தங்கள் நலன்களுக்காக பயன்படுத்துகின்றனர். தமிழர்களுக்கு இந்த சக்திகளின் வாயைப் பார்த்துக்கொண்டு மட்டும் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். அவை மெல்லுகின்ற தீனியில் சிறிதாவது வழிந்து விழும் என்ற நப்பாசை தான் தமிழர்களுக்கு.

இந்தியாவின் அனுசரணையில் ஜெனிவாவில் அரசு கால அவகாசம் கேட்கப் போவதாக முன்மொழிந்திருக்கின்றார். ஆட்சி மாற்றம் கிட்டிய தூரத்தில் இல்லை என்பதால் சீன அகற்றுகையை நோக்கித்தான் சர்வதேச சக்திகளும் பிராந்திய சக்தியும் அதிகம் செயற்படக் கூடிய வாய்ப்பு உண்டு. காது திருகுதல் நிகழ்வு பொருளாதார தடை மட்டத்திற்காவது உயருமா என்பது சந்தேகமே.

இரண்டாவது, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி எழிலனுக்கு புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிங்கள தினசரியான மௌபிமாவில் தலைப்புச் செய்தி வெளிவந்தமையாகும். அரசாங்கத்திற்கு மட்டுமல்ல தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இந்தியா, சர்வதேசம் என்பவற்றிற்கும் அனந்தியின் செயற்பாடுகள் ஒரு தலையிடிதான். காணாமல் போனவர்களின் விவகாரத்தை நேரடிசாட்சியாக சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்வதோடு சுயநிர்ணய உரிமைக்காக உறுதியாக குரல் கொடுப்பதுதான் இந்த சக்திகளுக்கு பிரச்சனை.

தமிழ்த் தேசிய ஆதரவு வாக்குகளை கவரவேண்டும் என்பதற்காகத்தான், அனந்தி மாகாண சபை தேர்தலில் களம் இறக்கப்பட்டார். அவருக்கு இவ்வளவு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கும் என்று சம்பந்தன் தலைமையோ, இந்தியாவோ, சர்வதேச சக்திகளோ, சிறிலங்கா அரசாங்கமோ எதிர்பார்க்கவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க அதிக வாக்குகளுக்கான சாத்தியம் இருந்ததினால் அச்சுறுத்தல்கள் போலி பிரச்சாரங்கள் எல்லாம் இடம்பெற்றன. ஒரு கட்டத்தில் விக்னேஸ்வரனை விட அதிக வாக்குகள் எடுக்கக் கூடும் என்ற அச்சமும் கூட்டமைப்பு உட்பட இந்தியாவிற்கும் ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லுகள் இடம்பெற்றன என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் வெளிவந்தன.

தேர்தல் முடிந்த பின்னர், அனந்தி புத்திசாலித்தனமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று செயற்படாமல் தனக்கென சொந்த நிகழ்ச்சி நிரலை உருவாக்கிக் கொண்டார். காணாமல் போனோர் பற்றிய விவகாரமே அவரின் நிகழ்ச்சி நிரலின் மையமாக இருந்தது. கணவனைப் பறிகொடுத்தவர் என்ற வகையில் அவரது செயற்பாட்டிற்கு ஒரு சர்வதேச அங்கிகாரமே உருவானது.

அரசியல் விவகாரத்தைப் பொறுத்தவரை தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை கோட்பாடுகளில் அனந்தி மிக உறுதியாக இருந்தார். சர்வதேச சந்திப்புக்களில் இவற்றை தெரிவிப்பதில் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் தனது கணவர் எழிலனின் பெயர் தன்னால் மாசுபடக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.

அனந்தியின் இந்த தனித்த நிகழ்ச்சி நிரல் தான் சம்பந்தன் தலைமை உட்பட அனைவருக்கும் தலையிடியாக இருந்தது. இதன் முதல் வெளிப்பாடு டேவிற் கமரூனின் யாழ் வருகையின் போது தெரிந்தது. கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு சவாலாக காணாமல் போனோருக்கான போராட்டத்தை ஒழுங்கு செய்தார். வெறும் 300 பேருடன் நடாத்தப்பட்ட போராட்டம், 1000 இற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டு நடாத்தப்பட்ட மாவிட்டபுர போராட்டத்தைவிட சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியது. சம்பந்தன் தலைமையின் பொய்த்தோற்றத்தையும் தோலுரித்துக் காட்டியது. தொடர்ந்து சர்வதேச சந்திப்புக்கள், சர்வதேச தீர்ப்பாயம் வரை அவரது செயற்பாடுகள் வளர்ந்தன.

அனந்தியினால் வருகின்ற இந்தத் தலையிடிகளை நிறுத்தவேண்டுமாயின் அவரின் தனித்த நிகழ்ச்சி நிரலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்கான முயற்சி தான் புனர்வாழ்வுக்கு அனுப்பப் போவதான செய்தி. அரசு மட்டுமல்ல, கூட்டமைப்பு, இந்தியா, சர்வதேசம் ஆகிய சக்திகளும் இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்திருப்பர். ஜெனிவா கூட்டத்தொடர் நடக்க இருப்பதால் மனித உரிமை அமைப்புக்கள் அனைத்தும் விழிப்புடன் இருக்கும். இந்நிலையில் அனந்தியை புனர்வாழ்விற்கு அனுப்புவது நடைமுறையில் இயலாத காரியம் என்பது அரசாங்கத்திற்கு தெரியாததல்ல. இங்கு அரசாங்கத்தின் நோக்கம் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புவது அல்ல,  மாறாக அனந்தியின் நிகழ்ச்சி நிரலை கைவிடச் செய்வதே.

தமிழ்த்தேசிய அரசியலுக்கான நிகழ்ச்சி நிரலை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் முன்னெடுப்பது இன்று பலத்த விவாதப்பொருளாகியுள்ளது. கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து விலகியபோது அவர்மீது பலத்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கஜேந்திரகுமார் முன்னெடுக்க விரும்புகின்ற தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகளை கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு முன்னெடுக்கலாம் என்பது விமர்சனம் வைத்தவர்களின் கருத்தாக இருந்தது. இதற்கு கஜேந்திரகுமாரின் பதில் அது நடைமுறை சாத்தியமற்றது என்பதே.

அனந்தி இந்தப் பரீட்சையில் இறங்கியபோது ஆய்வாளர்கள் இதனை ஒரு பரிசோதனை களமாக கருதினர். அனந்தி இதில் வெற்றி பெற்றிருந்தால் கூட்டமைப்புக்குள் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கலாம் என்பது உண்மையாகியிருக்கும். பேராசிரியர் சிற்றம்பலம் தமிழரசுக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர். கடந்த வடமாகாண சபை தேர்தலில் அனந்திக்காக நேரடியாகவே பிரச்சாரம் செய்திருந்தார். அவரிடம் கட்டுரையாளர், 'அனந்தியை வெற்றியடையச் செய்திருக்கின்றீர்கள், அவரை சுயமாக செயற்பட கூட்டமைப்பின் தலைமை விட்டுவிடுமா' என்று கோட்டார். அதற்கு போராசிரியர் அளித்த பதில் 'அவங்கள் ஒன்றும் செய்யவிடமாட்டாங்கள்' என்பதே.

தற்போதுள்ள கேள்வி, அனந்தி என்ன செய்யப்போகின்றார். தனது நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுக்கப் போகின்றாரா? அல்லது கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் கரைந்துவிடப் போகின்றாரா? காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

மூன்றாவது, தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவினை ஜனாதிபதி திறந்து வைத்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும், வடமாகாண அமைச்சர்களும், சில வடமாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமையாகும். இங்கு கலந்துகொண்ட காலப்பகுதி மிகவும் முக்கியமானது. ஜெனிவாவில் இலங்கை மீது கடுமையான தீர்மானம் கொண்டு வரப்படலாம் எனக் கருதப்படுகின்ற ஒரு காலப்பகுதியிலேயே இக் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. இதன் மூலம் சர்வதேசத்திற்கு வழங்கப்படுகின்ற செய்தி இணக்க அரசியல் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, இதில் நீங்கள் தலையிடவேண்டாம் என்பதே.

விக்னேஸ்வரனின் இந்த நடத்தை தமிழக சக்திகளையும் 'டயஸ்போராவையும்' தான் மிகவும் பாதிக்கபோகின்றது. ஜெனிவா தீர்மானம் தொடர்பாக கடுமையான அழுத்தங்களை கொடுப்பதற்கு தமிழ்நாடும் டயஸ்போராவும் இரவு பகல் பராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உழைப்பில் எல்லாம் விக்னேஸ்வரன் மண்ணள்ளிப் போட்டுள்ளார்.

இந்திய தேர்தலும் நெருங்கி வருவதால் காங்கிரஸ் தலைமைக்கு இலங்கை தமிழர் விவகாரத்திலிருந்து தமிழ்நாட்டை தள்ளி வைக்கின்ற தேவை இருக்கின்றது. விக்னேஸ்வரன் இதற்கு நன்றாகவே உதவி செய்திருக்கின்றார். ஏற்கனவே விக்னேஸ்வரனின், கணவன் - மனைவி உறவுக்குள் தமிழ்நாடு தலையிடத் தேவையில்லை என்ற அறிக்கை தமிழக சக்திகளை நன்றாகவே பாதிக்கச் செய்துவிட்டது. இந்த அறிக்கை தங்களது நெஞ்சில் ஊசியால் குத்தியது போன்றிருந்தது என தமிழ்நாடு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து பொதுநலவாய மாநாட்டிற்கு இந்திய பிரதமர் வரவேண்டும் என விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தமையும் தமிழக சக்திகளை உலுக்கிவிட்டது.

2009 மே 17இற்கு பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் மிகவும் மகத்தானது. இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக பொதுகருத்து அங்கு எழுச்சியடைந்திருக்கின்றது. இப் பொதுக்கருத்தினை ஏற்க வேண்டிய நிலைக்கு சகல அரசியற் கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன. இது வழக்கத்திற்கு மாறாக பொதுமக்களிற்கு பின்னால் இழுபட்டுச் செல்லவேண்டிய நிலையை அரசியற் கட்சிகளுக்கு தோற்றுவித்துள்ளது.

அதேவேளை தமிழ்நாட்டு படித்த மத்தியதர வர்க்க இளைஞர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பான கவனத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளனர். அணி அணியாக போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். இது தாயகத்தில் எண்பதுகளின் நிலையைபோன்றது. இக்காலத்தில் தான் திரள் திரளாக விடுதலை இயக்கங்களில் மத்தியதர வர்க்க இளைஞர்கள் சேர்ந்தனர்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்த புதிய பரிணாமம் இந்திய மத்திய அரசாங்கம் முற்றிலும் எதிர்பார்க்காதது. கடந்த மாணவர் போராட்டத்தில் இந்த போக்கு வெளிப்படும்போது இந்திய மத்திய அரசாங்கம் மட்டுமல்ல, அமெரிக்கா கூட அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதன் பின்னர் தான் தேசிய இனப்பிரச்சினையின் கனதியை அனுபவரீதியாக அவை புரிந்துகொண்டது. போரை முன்நின்று நடாத்திய காங்கிரஸ் கட்சி இன்று தமிழ்நாட்டில் முழுமையாக தனிமைப்பட்டுவிட்டது. அதனுடன் கூட்டணி சேர்வதற்கு சிறிய கட்சிகள் கூட இன்று தயாராக இல்லை.

ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக சக்திகள் சில வெற்றிகளையும் அடைந்துள்ளன. இந்தியா, அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக ஜெனிவாவில் வாக்களித்தமையும், மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டிற்கு வராமையும் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளே. அவர்கள் இப்போது கூறுவதெல்லாம் தமிழ்த் தேசிய தணலை அணையவிடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள், இந்திய மத்திய அரசினை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்பதே.

டயஸ்போராவும் தமிழ்நாடு போன்று தான் கடுமையாக உழைக்கின்றது. அவர்களுக்கிடையே சில பிரிவுகள் காணப்பட்டாலும் ஜெனிவா விவகாரம் தொடர்பாக அனைவரும் ஒரே இலக்கில் செயற்படுகின்றனர். தமிழ்நாட்டை போலவே அவர்களும் பல வெற்றிகளை கண்டுள்ளனர்.அதில் பிரமிக்கத்தக்க வெற்றிதான் சர்வதேச தீர்ப்பாயம் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என் தீர்ப்பளித்தமையாகும்.

தமிழ்நாடும் டயஸ்போராவும் மேற்கொள்ளும் இந்த அரிய முயற்சிகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கவிழ்த்துக்கொட்டிவிடுகின்றது என்பது தான் தற்போது தமிழ்த்தேசிய சக்திகளுக்குள்ள மிகபெரும் கவலை.

தற்போதைய காலம் என்பது தமிழ் மக்களுக்கான காலம். வரலாறு இக் காலத்தை எப்போதும் தரப்போவதில்லை. அந்த காலத்தை ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒரு போதும் தமிழ் மக்களை மன்னிக்காது.

தந்தை செல்வா தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று கூறிப்பிட்டார். இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவது யார்? என்பது தான் மிகப்பெரிய கேள்வி.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=f7dd43bd-3bd2-4d70-9926-2138710e2f27

__________________

விக்கி ஐயாவும் சம்பந்தனும் தலைவரின் பாதையில் சரியாக தான் பயணிக்கிறார்கள். அனந்தியின் அணுகு முறையும் விக்கி ஐயாவின் அணுகுமுரையும் ஒரே இலட்சியட்தை அடையும் வேறு வேறு அணுகுமுறைகள். ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த விக்கி ஐயா தமிழ் தேசிய்ம் தமிழீழம் விடுதலை புலிகள்  என்றெல்லாம் எடுத்தமா கவிழ்த்தமா என்று எல்லாம் கதைக்க முடியாது. விக்கி ஐயாவின் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக அவரின் ஆளுமை கல்வி புலமை ஆங்கில தொடர்பாடல் ஆளுமை மேட்டுகுடி மக்களுடன் பழகிய அனுபவம் எல்லாமே அவர் மேலை நாடுகளின் உயர் அதிகாரிகளுட்ன் பேசும் போது மிக இலகுவாக அவர்களுக்கு பல விடயங்களை அவரால் புரியவைக்க முடியும். அவரது முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் என்பது அவர்களிடம் மிகவும் மதிப்பை தோற்றுவிக்கும். ____________ இதை தான் சிங்களவன் முன்பு கதிர்காமரை வைத்து சிறப்பாக செய்து புலிகளை உலகமெல்லாம் தடை செய்தவன். பாலா அண்ணை எவ்வளவௌ முயற்சித்தும் அதனை முறியடிக்க முடியவில்லை. இன்று எமக்கு அதே சந்தர்ப்பம் வந்திருக்கிறது விக்கி ஐயாவின் வடிவில். அதனை நாம் மிகவும் சிறப்பாக சாதுரியமாக பயன்படுத்தி எமது இறுதி இலக்கு நோக்கி பயணிக்க வேண்டும். _________
 

 

நியானி: பண்பற்ற சொல்லாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஜயாவுக்கு அந்த ஆளுமை,தகுதி எல்லாம் இருக்குது.அதை எமது மக்களுக்காக பயன்படுத்துவாரா என்பது தான் கேள்வி

விக்கி ஜயாவுக்கு அந்த ஆளுமை,தகுதி எல்லாம் இருக்குது.அதை எமது மக்களுக்காக பயன்படுத்துவாரா என்பது தான் கேள்வி

 

நிச்சயமாக பயன்படுத்துவார் ரதி அக்கா. அடியேனுக்கு தேசிய தலைவரில் இருந்த அதே நம்பிக்கை சற்றும் குறையாமல் விக்கி ஐயாவின் மேல் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கி ஐயா வல்லவா்தான். ஆனால் அவரையும் சம்பந்தரையும் ஆட்டுவிக்கும் சகுனியா் சுமத்திரனின் இந்திய விசுவாசம் விடுமா என்ன?

சிலர் வாயில் வருவதை எல்லாம் எழுதுகிறார்கள். சுமந்திரனோடு தனிய மட்டும் இந்தியா எப்போதாவது பேச்சுவார்த்தைகள் வைத்ததா? எப்போ? எங்கே?

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளை சர்வதேசம் பேச்சுவார்த்தைக்கு அழைக்க விரும்பினால் யாரை அழைக்க வேண்டும்? :rolleyes:

6ம் திருத்தம் அமூலில் இருக்கும் வரைக்கும் புலம் பெயர் தமிழர்களை மட்டும். அதன் பின்னர் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, புலம் பெயர் அமைப்புக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

6ம் திருத்தம் அமூலில் இருக்கும் வரைக்கும் புலம் பெயர் தமிழர்களை மட்டும். அதன் பின்னர் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, புலம் பெயர் அமைப்புக்கள்.

 

இதுவே  சரியான

நீதியான

எந்தவித இடைஞ்சலுமற்ற

தமிழருக்கு பாதுகாப்பான  பேச்சுவார்த்தையாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

விக்கு வினாயகத்தை அனியாயத்துக்கும் எதிர்பார்க்காதீர்கள்.

 

நாம் வட மாகாணசபை ஆட்சியைக் கைப்பற்றியது இராணுவத்தை தமிழர் நிலங்களிலிருந்து இல்லாதொழிக்கச் செய்வதே முதல்வேலை எனப்புழுகியவர் விக்கு வினாயகம் (ஐயா!) இப்போ மேட்டுக்குடிமக்களது அரசியல் என அவரது அடிப்பொடிகள் பிதற்றுகிறார்கள்.

 

தமிழர் நிலம்போல தமிழர் மனங்களும் மாசுபட்டுக்கிடக்கின்றது அதைத் திருத்துவதற்கு எந்தவித நடவடிக்கைகளோ இன்றேல் வேலைத்திட்டங்களோ இதுவரை ஆரம்பிக்கவில்லை. கூட்டமைப்பை ஒரு முழு நிர்வாக அதிகாரமுள்ள இயக்கமாக மாற்றுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கூட்டமைப்பு பெரும்பான்மையாக இருக்கும் உள்ளூராட்சி சபைகளது வரவுசெலவுத்திட்டத்தை சபையில் எதிர்ப்பவர்களே கூட்டமைப்பினர்தான், இதற்கு மகிந்த கட்சியின் ஆதரவைக் கேட்டுப் பெற அன்றேல் கையேந்தி நிற்க வேண்டியுள்ளது.

 

விக்கு வினாயகம் அவர்கள் தனது சம்பந்தியான வாசுதேவ நாணயமில்லாத காராவுக்கெ தமிழர்களது தேவை என்ன என புரிதல் ஏற்படுத்த முடியாதவராக இருக்கிறார் அன்றேல் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப காய்களை நகர்த்தும் கோடரிக்காம்பாக இருக்கிறார். 

 

இந்த விண்ணாணத்தில சம்பந்தர் சுமந்திரன் விக்கு வினாயகம் போன்றோர் எமக்கான விடுதலைப்பாதையை சரியான வடிவில் ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என்பது கிழவி சாமத்தியப்படும் என எதிர்பார்ப்பதுபோலாகும்.

விக்கு வினாயகத்தை அனியாயத்துக்கும் எதிர்பார்க்காதீர்கள்.

 

நாம் வட மாகாணசபை ஆட்சியைக் கைப்பற்றியது இராணுவத்தை தமிழர் நிலங்களிலிருந்து இல்லாதொழிக்கச் செய்வதே முதல்வேலை எனப்புழுகியவர் விக்கு வினாயகம் (ஐயா!) இப்போ மேட்டுக்குடிமக்களது அரசியல் என அவரது அடிப்பொடிகள் பிதற்றுகிறார்கள்.

 

தமிழர் நிலம்போல தமிழர் மனங்களும் மாசுபட்டுக்கிடக்கின்றது அதைத் திருத்துவதற்கு எந்தவித நடவடிக்கைகளோ இன்றேல் வேலைத்திட்டங்களோ இதுவரை ஆரம்பிக்கவில்லை. கூட்டமைப்பை ஒரு முழு நிர்வாக அதிகாரமுள்ள இயக்கமாக மாற்றுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கூட்டமைப்பு பெரும்பான்மையாக இருக்கும் உள்ளூராட்சி சபைகளது வரவுசெலவுத்திட்டத்தை சபையில் எதிர்ப்பவர்களே கூட்டமைப்பினர்தான், இதற்கு மகிந்த கட்சியின் ஆதரவைக் கேட்டுப் பெற அன்றேல் கையேந்தி நிற்க வேண்டியுள்ளது.

 

விக்கு வினாயகம் அவர்கள் தனது சம்பந்தியான வாசுதேவ நாணயமில்லாத காராவுக்கெ தமிழர்களது தேவை என்ன என புரிதல் ஏற்படுத்த முடியாதவராக இருக்கிறார் அன்றேல் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப காய்களை நகர்த்தும் கோடரிக்காம்பாக இருக்கிறார். 

 

இந்த விண்ணாணத்தில சம்பந்தர் சுமந்திரன் விக்கு வினாயகம் போன்றோர் எமக்கான விடுதலைப்பாதையை சரியான வடிவில் ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என்பது கிழவி சாமத்தியப்படும் என எதிர்பார்ப்பதுபோலாகும்.

எழுகஞாயிறு தாங்கள் இதுவரை ஆற்றிய விடுதலை பணியை விட விக்கி ஐயா செய்வது எவ்வளவோ மேலானது.   :D  :D  :D 

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

மேடையில் நாட்டியத் தாரகைகள் ஆடுவார்கள். திரையை இறக்கும் வசதி பெரும்பாலான மேடைகளில் இருக்காது. அப்படியான சந்தர்ப்பங்களில் ஆடல் முடியவும், தாரகைகள் ஆட்டத்துடனேயே ஓடி பின்னால் மறைந்துவிடுவார்கள். :wub:

அதேபோல, இந்தியா தனது தாளத்துக்கு கூட்டமைப்பை ஆட்டிவைத்து பார்த்து இரசித்தது. :huh: கூட்டமைப்பும் தாளத்துக்கு ஆடுவதுபோல் ஆடி இறுதியில் இந்தியாவுக்கு வணக்கம் கூட வைக்காமல் திரைக்குப் பின்னால் ஓடி ஒளிந்துவிட்டது. :D அடுத்த நடனம் மேற்கத்திய நடனம். ஆடுபவர்கள் பிரிட்டனும், அமெரிக்காவும். :o இந்தியா தேமே என்று பார்த்து ரசிக்க‌ வேண்டிய நிலைமை.. :D

புலம்பெயர் மூவாயிரம் அமைப்புகளையும் சந்திக்க  அறுபது வருடங்கள் ஆகிவிடும் . :icon_mrgreen: .

 

  • கருத்துக்கள உறவுகள்
இதென்ன கேள்வி?
 
எங்கட டக்கி அங்கிள் தான்....
 
உசுப்பேத்தி, உசுப்பேத்தியே முள்ளி வாய்க்கால் பார்த்தாச்சுது.
 
இனியும் என்ன உசுப்பேத்தல் வேலை.
 
சரியோ, பிழையோ, அவர்கள் மக்களால் தெரிவு செய்யப் பட்டவர்கள். பிழை விட்டால் அடுத்த தேர்தலில் நிராகரிக்கப் படுவார்கள்.
 
அவ்வளவு தான்....நிதர்சனம்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் மூவாயிரம் அமைப்புகளையும் சந்திக்க  அறுபது வருடங்கள் ஆகிவிடும் . :icon_mrgreen: .

 

காகம் கரிச்சட்டியை பார்த்து நீ கறுப்பு எண்டு நக்கலாய்  சிரிச்சுதாம்..... :)

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை கடிவாளம் இட்ட குதிரையாக விட்டுப்பிடிப்பது தான் நல்லம். மக்களிடம் கடிவாளம் இருக்கனும். அந்த வகையில்.. இதர உள்ளூர் தமிழ் தேசிய அரசியல்சக்திகளையும் பலப்படுத்தனும். புல்மபெயர் மக்களும் ஒற்றுமையாக ஒன்று திரண்ட சக்தியாக நிற்கனும். அப்ப தான் கூட்டமைப்பையும் வழி நடத்தும் தன்மை புலம்பெயர் மக்களிடம் இருக்கும். அதுவே தாயக மக்களை எதிரிக்கு விலை கூறி விற்பதை.. சோரம் போதலை தடுக்கும். :icon_idea:

தமிழரை காப்பாற்றுகிறோம் என்று கொலைவெறியோடு பக்கம் பக்கமா எழுதுவோரிடம் இருந்து எங்களை முதலில் யாராவது காப்பாற்றுங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.