Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வர்னாச்சிரம கலாச்சாரத்தை தேனில் கலந்து தமிழனுக்கு ஊட்டப்பட்ட போதே அவன் ஒற்றுமை குலைய ஆரம்பித்தது. கூட்டுக்குடும்ப வாழ்வு உடைந்தபோது ஒற்றுமையும் உடைந்து சிதறிப்போனது. தமிழினியின் மனம்போல் மாறாதிருக்க முயன்ற சிலர்தான், புலிகளாக ஒற்றுமைப்பட்டனர். அனைத்துத் தமிழரின் ஒற்றுமையும் உடையாது இருந்திருக்குமே ஆனால், நாங்கள் அனைவரும் இன்று தமிழ் ஈழத்தில் வாழ்ந்திருப்போம். :rolleyes:

உண்மைதான் தமிழினி. எனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டுமே இருப்பதால் இதில் அதிகம் எழுதுவது சரியாகாது. ஆனால் என் அனுபவத்தில் சகோதரம் என்பது அருமையான ஒரு உறவு. தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது உண்மை, இன்று வரைக்கும் என் சகோதரி ஒரு நல்ல தோழியாகவே எனக்கு இருக்கின்றார்.

 

பல வீடுகளில் கணவன் தன் சகோதரத்துக்கு உதவுவதை மனைவி எதிர்ப்பதற்கு காரணம் மனைவியிடம் அது பற்றி கதைத்து தெளிவுபடுத்தாமல் விடுவதே. பல அண்ணிமார்களுக்கு  சகோதரங்களுக்கு காசு அல்லது உதவி செய்வதை அண்ணன்மார்கள் முற்றாக மறைக்க முயல்வதுதான் பிரச்சனையின் மூல காரணமாக இருப்பதைக் கண்டுள்ளேன். அத்துடன் மனைவியின் அப்பா அம்மாக்களும் தேவையில்லாமல் இந்த விடயங்களில் வேலை வெட்டி இல்லாத தம் மூக்குகளை நுழைப்பதும் காரணம்.

 

எனக்கு ஒரு டவுட் இருக்கு, இந்த தமிழகத்து தொடர் நாடகங்களால் (ரீ வி சீரியல்கள்) எம் மக்கள் அதிகம் பாதிப்புறுகின்றனரோ என்று. 90 வீதமான தொடர் நாடகங்களில் சகோதரங்களை வில்லன்கள் மாதிரிக் காட்டுவதும், சகோதரிகளே சகோதரிகளை வெறுப்பதாகக் காட்டுவதும் வழமை என்று நினைக்கின்றேன்.

 

 

கருத்துக்கு நன்றி நிழலி அண்ணா.  என்னை பொறுத்தவரையில் நான் என் சகோதரங்களோடு எப்படி ஒற்றுமையாக இருக்கின்றேனோ அதே ஒற்றுமை என் கணவர் குடும்பத்திலும் அவர்கள் சகோதரர்களுக்கு இடையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துகொள்வேன்.

சிறு வயதில் இருந்தே என் அப்பாவும் அம்மாவும் ஒற்றுமையையும் அன்பையும் ஊட்டி வளர்த்ததால் நாம் அப்படி இருக்கலாம். இன்று அப்பாவும் அம்மாவும் எம்முடன் இல்லாவிட்டாலும் நாம் எமது அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறுவதில் குறை வைப்பதில்லை. அண்ணிமாரையும் அத்தார்மாரையும் எம் குடும்பத்தில் ஒருவராக நினைத்துவிட்டால் அவர்கள் குறைகள் எமக்கு பெரிதாக தெரியாது. மற்றவர்களது  நிறைகளை மட்டுமே நினைவில் நிறுத்தி குறைகளை மறந்து அவர்கள் விடும் சிறு பிழைகளை பெரிது படுத்தாவிட்டாலே போதும் குடும்பத்தில் அன்பு நிலைகொள்ளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல வீடுகளில் எமக்கு முதல் எதிரியே சகோதரங்களாகத்தான் இருப்பார்கள்.  எனக்கு உள்ள எதிரிகள் சகோதரங்கள் மட்டுமே.    சொன்னால் நம்ப மாட்டீர்கள், கடந்த இருபது வருடங்களில் எனது சகோதரர்கள் எனக்குச் செலவழித்தது ஆயிரம் டொலர்கள் கூடத் தாண்டாது.   இந்த ஆயிரம் டொலர்களுக்குள் அவர்கள் தந்திருக்கவேண்டிய பிறந்தநாள் பரிசுகள், உடுப்புகளும் அடங்கும்.  நான் வைத்திருக்கும் அனைத்துப் பொருட்களும் நான் எனது சம்பாத்தியத்தில் வாங்கியவையும் நண்பர்கள் அன்பளிப்பு செய்தவை மட்டுமே.  ஆனால், ஊருக்கு மட்டும் பாசப்பறவைகளாக நடிப்பார்கள்.  இத்தனைக்கும் நான் கடைக்குட்டி.  எனது 20களில் பிற்பகுதியில்கூட நான் அதிகம் செலவழிப்பதாக எனது அக்கா ஒருவர் எனது அனைத்து சகோதரங்களிடமும் அண்டியதோடு வெளியாட்களிடமும் எனக்கு உதவி செய்ய வேண்டாமென அவர்கள் அனைவரும் சேர்ந்து சொன்னார்கள்.  ஆனால், இப்போது அதே அக்காவின் மகள் அரசாங்கப்பணத்தில் வாழ்ந்து கொண்டு தனது பதின்ம வயதிலேயே கெஸ் கைப்போயோடு திரிகிறா.  ஆனால், இப்போதும் அண்டுவதை விடவில்லை.   இவரால் நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  அவற்றை இங்கு நான் எழுத முடியாது.  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு துளி விசம் போதும்.  அதுபோல, ஒரு குடும்பத்தில் இப்படிப்பட்ட ஒருவர் இருந்தாலே போதும்.  முழுக் குடும்பத்தையும் சீரழித்து விடும்.

 

இன்றைய காலகட்டத்தில் அன்பும் பாசமும் இரத்தத்தில் தங்கியில்லை.  எம்மோடு பழகுபவர்களின் குணங்களோடு தங்கியிருக்கின்றன.  எனது சொந்த சகோதரங்களிடம் எனக்குக் கிடைக்காத அன்பும் பாசமும் சில வருடங்கள் மட்டுமே பழகியவர்களிடமிருந்து எனக்கு அதீதமாகக் கிடைத்திருக்கிறது.  அதுவும் சகோதர பாசமாக. 

  • கருத்துக்கள உறவுகள்

பல வீடுகளில் எமக்கு முதல் எதிரியே சகோதரங்களாகத்தான் இருப்பார்கள்.  எனக்கு உள்ள எதிரிகள் சகோதரங்கள் மட்டுமே.    சொன்னால் நம்ப மாட்டீர்கள், கடந்த இருபது வருடங்களில் எனது சகோதரர்கள் எனக்குச் செலவழித்தது ஆயிரம் டொலர்கள் கூடத் தாண்டாது.   இந்த ஆயிரம் டொலர்களுக்குள் அவர்கள் தந்திருக்கவேண்டிய பிறந்தநாள் பரிசுகள், உடுப்புகளும் அடங்கும்.  நான் வைத்திருக்கும் அனைத்துப் பொருட்களும் நான் எனது சம்பாத்தியத்தில் வாங்கியவையும் நண்பர்கள் அன்பளிப்பு செய்தவை மட்டுமே.  ஆனால், ஊருக்கு மட்டும் பாசப்பறவைகளாக நடிப்பார்கள்.  இத்தனைக்கும் நான் கடைக்குட்டி.  எனது 20களில் பிற்பகுதியில்கூட நான் அதிகம் செலவழிப்பதாக எனது அக்கா ஒருவர் எனது அனைத்து சகோதரங்களிடமும் அண்டியதோடு வெளியாட்களிடமும் எனக்கு உதவி செய்ய வேண்டாமென அவர்கள் அனைவரும் சேர்ந்து சொன்னார்கள்.  ஆனால், இப்போது அதே அக்காவின் மகள் அரசாங்கப்பணத்தில் வாழ்ந்து கொண்டு தனது பதின்ம வயதிலேயே கெஸ் கைப்போயோடு திரிகிறா.  ஆனால், இப்போதும் அண்டுவதை விடவில்லை.   இவரால் நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  அவற்றை இங்கு நான் எழுத முடியாது.  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு துளி விசம் போதும்.  அதுபோல, ஒரு குடும்பத்தில் இப்படிப்பட்ட ஒருவர் இருந்தாலே போதும்.  முழுக் குடும்பத்தையும் சீரழித்து விடும்.

 

இன்றைய காலகட்டத்தில் அன்பும் பாசமும் இரத்தத்தில் தங்கியில்லை.  எம்மோடு பழகுபவர்களின் குணங்களோடு தங்கியிருக்கின்றன.  எனது சொந்த சகோதரங்களிடம் எனக்குக் கிடைக்காத அன்பும் பாசமும் சில வருடங்கள் மட்டுமே பழகியவர்களிடமிருந்து எனக்கு அதீதமாகக் கிடைத்திருக்கிறது.  அதுவும் சகோதர பாசமாக. 

 

வணக்கம்  உறவே

உங்களது நிலையைப்படித்தேன்

 

ஆனால் எல்லோரும் மனிதர்களே

தவறு விடாதவர் எவரும்  இருக்கமுடியாது

ஆனால் அதை  திரித்திக்கொள்ளவேண்டும்

திருந்த சந்தர்ப்பம் கொடுக்கப்படவேண்டும்

 

உங்களது இந்த நிலை தொடர்வது நல்லதல்ல

ஒரே ரத்தங்கள் பேசுங்கள்

உங்களது இந்த கோபம்

வருங்கால  சங்கதியை  நடுவீதியில் விட்டுவிடும்....

அதுவும் புலம் பெயர்ந்திருந்தால் 

மிகவும்   ஆபத்தானது.......

 

ஒரு கேள்வி

உங்களுக்கு குழந்தைகள் இருந்தால்

சகோதர  உறவுகள் கூடாது என்று சொல்லித்தான்

 அவர்களை வளர்க்கின்றீர்களா???

அப்படியாயின் அவர்களுக்கிடையிலான உறவு என்பது......??? :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பேரைத் திருத்தவே முடியாது.  நான் மேலே குறிப்பிட்ட நபர்களும் அப்படித்தான்.  ஆகவே, அவர்களின் தொடர்புகளை முறித்து விட்டேன்.  இனி எத்தனை ஜென்மத்திலும் அவ்வாறானவர்களோடு அது தொடராது.  திருந்தியவர்களுடன் தொடர்கிறது. சொந்த சகோதரங்கள் கைவிட்டாலும் வெளியிலிருந்து அந்தப் பாசம் கிடைத்தது என்று கூறியிருந்தேன்.  எனது பெற்றோர் மனிதர்களை அடையாளம் காணச் சொல்லிக் கொடுக்கவில்லை.  மாறாக, எத்தனை கஸ்டம் வந்தாலும் இரத்த சொந்தத்தைக் கைவிடக்கூடாது என்றுதான் வளர்த்தார்கள்.  அப்படி வளர்த்த பெற்றோர், சகோதர பாசத்தை வளர்க்கவில்லை.  மாறாகத் தான்தோன்றித்தனமாக வளர விட்டு விட்டார்கள்.  பல தமிழ்ப் பெற்றேர்கள் அப்படித்தான் பிள்ளைகளை வளர்த்தார்கள்.  சின்ன வயதில் சகோதரர்கள் சண்டை பிடிப்பதை வன்மையாகக் கண்டித்து வளர்த்திருந்தால் எமது சமூகத்தில் இவ்வாறானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.  அவர்கள் விட்ட பிழையை நான் விடமாட்டேன்.

 

எனது பிள்ளைகளுக்கு, மனிதர்களை அடையாளம் காணக் கற்றுக் கொடுப்பேன்.  இரத்தம் என்பதற்காக அவர்களது வாழ்வை அழிய வைப்பவர்களோடு அவர்களைப் பழக விடமாட்டேன்.  நான் பட்டது போதும்.  எனது பிள்ளைகளும் அவற்றைப் பட வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த முடியாது.. சூழ்நிலைகள் குடும்பத்துக்குக் குடும்பம் வித்தியாசப்படும்.. குடும்பத்தில் மூத்தவர்கள் (தாத்தா, பாட்டிமார், தாய், தந்தையர்) எல்லாப் பிள்ளைகளையும் சமமாக நடத்தும் பட்சத்தில் சகோதரங்களிடையே ஒற்றுமை இருக்கும். எப்போது இது நடைபெறவில்லையோ, அப்போது சில பிள்ளைகள் அதீத கரிசனையுடனும், வேறு சில பிள்ளைகள் சற்று குறைந்த கரிசனையுடனும் வளர்ந்து வருவார்கள். இது பெற்றோர் தங்களை அறியாமல் செய்து விடுவது. மூத்தவர்கள் சரியாக இருந்தால் பிள்ளைகளும் ஒற்றுமையாக வளருவார்கள்.

ஆனால் இத்தகைய பெற்றோரிடம் வாக்குவாதப்பட்டால் ஒருநாளும் பாரபட்சம் காட்டுவதாக ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் அறியாமல் செய்வது. எடுத்துச் சொன்னாலும் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். அல்லது ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களது தன்மானம் தடுத்துவிடும். அல்லது விளங்கிக்கொள்ளமுடியாத தன்மையில் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மூன்று பேரும் ஆண் பிள்ளைகள். அண்ணா எனக்கும் நான் தம்பிக்கும் தம்பி எனக்கும் நான் அண்ணாவுக்கும் உதவி செய்திருக்கிறோம். உதவி செய்தபின் அதைப் பற்றி ஒரு சொல்லுக் கூட சொல்லுவது கிடையாது. குறிப்பாக மூவரும் நண்பர்கள் போல பழகுவதால் (மூவரும் ஒன்றாக தண்ணி அடிப்போம், பெண்கள் பற்றி கதைப்போம்) பிரச்சனைகள் வருவது குறைவு. இவளவுக்கும் அண்ணா சரியான மேற்கத்தயப் பாணி (ஊர் உலகு இலங்கை தமிழர் அரசியல் பற்றி எதுவித அறிவோ அக்கறையோ இல்லாதவன்), தம்பி கிட்டத்தட்ட அண்ணா போல, அரசியல் இலங்கை பற்றி அக்கறை இல்லாதவன். நான் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. ஊரிலும் அப்படித்தான் அண்ணா Readers Digest உடனும் நான் வீரகேசரி, உதயன், Sunday Times உடனும் தம்பி கணணி விளையாட்டுக்களுடனும் TV game உடனும் தான் பொழுதைப் போக்கியது.

அப்பா அம்மாவுக்கு காசு பணம் அனுப்புவதிலும் (உண்மையில் அவர்களுக்கு தேவையில்லை) அண்ணா வந்த 13 வருசங்களில நான் வந்த பின் அரியண்டப்படுத்தினதில ஒரு $300 அனுப்பினான். தம்பி இருந்திட்டு ஏதாவது அனுப்புவான் ஆனால் வாகனம் வாங்குவது, கொழும்பில பிளட் வாங்குவது என்று ஏதாவது மெகா செலவு வந்தால் அது அடியேனின் உபயம். இதனால் இடைக்கிடை என்ட மனிசியும் குத்திக்காட்டும் ஏன் நீ மட்டும் செய்வான் அண்ணாவும் தம்பியும் அதை அனுபவிக்கிறார்கள் தானே (இலங்கை போகும் போது) அவர்கள் ஏன் செய்யக்கூடாது என. நானும் அப்பா, அம்மாவுக்காக செய்கிறேன் என விட்டுவிடுவேன். இந்தமுறை மூவரும் போயிருந்த போதும் வாகனத்துக்கு டீசலில் இருந்து சாப்பாட்டு செலவுகள் மட்டும் நானே செய்தேன். குடுத்தாருக்கு குறைவில்லைத்தானே. அதே போல அவர்களை விட பொருளாதார ரீதியில் நான் நன்றாக இருக்கிறேன்.   

கலியாணத்தின் பின்னர் சில விரிசல்கள் வரப் பார்ப்பது என்பது உண்மைதான். முக்கிய காரணம் சுய நலம். ஆனால் அடிக்கடி சந்திப்பதும் மனம்விட்டுப் பேசுவதும் தான் முக்கிய மருந்து. குறிப்பாக எரிச்சல் பொறாமை என்பன அறவே கூடாது. மனைவி ஒரே பிள்ளை என்பதால் அந்தப் பக்கத்தால சிக்கல்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
இத் திரியில் சகோதர பாசம் பெரிது அது,இது என எழுதுபவர்களில் அநேகர் ஒரு சகோதரத்துடன் பிறந்தவர்கள்.மற்றவர்களில் சிலர் தங்கட குடும்பத்தை விட்டுக் கொடுக்க கூடாது என பொய் சொல்கிறார்கள் :)
 
பெற்றோர் குழந்தைகள் மீது வைக்கும் பாசத்தை விட சகோதரங்களிடையே உள்ள பாசம் தான் அளவிட முடியாதது என்று சொல்வது அந்தக் காலம்.பாசம் என்பது தானாக வர வேண்டும்.அக்கா பாவம்,அண்ணா பாவம்,தம்பி,தங்கச்சி பாவம் என்று பாசம் வரக் கூடாது.இந்தக் காலத்தில் கொடுத்தால் தான் பாசம்.
 
இந்த நேரத்தில் நெடுக்கர் சொல்வது மாதிரி  அண்ணி வந்து குடும்பத்தை பிரிச்சிட்டார் என்று சொல்வதும் ஏற்கக் கூடியது அல்ல....அண்ணனுக்கு ஒழுங்கான பாசம் தம்பி மேல் இருந்தால் எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது.அண்ணனுக்கு காரணம் காட்ட அண்ணி கிடைச்சிருக்கார் அவ்வளவு தான் :lol:
 
இந்தக் காலத்தில் நான் பார்த்த வரைக்கும்,என்னைச் சுத்தி நடக்கிறதை வைத்து சொல்கிறேன் சுயநலமில்லாத சகோதர பாசம் என்பது இல்லவே இல்லை.குடுக்கிறதை வைத்துத் தான் பாசத்தின் அளவு இருக்கும் :icon_mrgreen: இது ஒரு வீதம் அல்லது மற்றவர் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன தாங்கள் தங்கட குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்போம் என்று நினைப்போர் இன்னொரு வீதம்.குறைந்த பட்சம் பெற்றோர் உயிரோடு இருக்கும் சகோதரங்கள் பாசமாக இருப்பதாக காட்டிக் கொள்வார்கள்.பெற்றோரின் இறப்புக்கு பின்னர் அதுவும் சிதறிப் போய் விடும்.
 
நிழழியின் சகோதரியோ அல்லது இசையின் சகோதரியோ எங்கேயோ அவர்களிடம் இருந்து தள்ளி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.எப்பவாவது தொலைபேசி எடுத்து எப்படியடா இருக்கிறீங்கள் என்று கேட்பார்கள்.அந்த சகோதரிகளுக்கு எதாவது பிரச்சனை வந்தால் தான் இந்தச் சகோதரர்களின் உண்மையான பாசத்தை தெரிந்து கொள்ளலாம் :rolleyes:
 
சகோதரங்களிடையே பாசம்,விட்டுக் கொடுப்பு,புரிந்துணர்வு இருக்க வேண்டும்.ஆனால் அது எல்லோருக்கும்[ஒரு குடும்பத்தில் பிறந்த] இருக்க வேண்டும்.தனியே ஒருத்தருக்கு மட்டும் இருந்து பிரயோசனமில்லை என்பது என் கருத்து.
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் நெடுக்கர் சொல்வது மாதிரி  அண்ணி வந்து குடும்பத்தை பிரிச்சிட்டார் என்று சொல்வதும் ஏற்கக் கூடியது அல்ல....அண்ணனுக்கு ஒழுங்கான பாசம் தம்பி மேல் இருந்தால் எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது.அண்ணனுக்கு காரணம் காட்ட அண்ணி கிடைச்சிருக்கார் அவ்வளவு தான் :lol:

 

சுத்தம். எத்தினையோ அண்ணாமார்.. தங்க வீட்டுக்குக் கூட மனிசிமாருக்குத் தெரியாமல் உதவி செய்வதையே வாடிக்கையாக்கி வைச்சிருக்கினம். கடவுள் வரம் கொடுத்தும் பூசாரி கொடுத்தா நிலை தான்.. பல அண்ணன்களின்.. தம்பிகளின் நிலை. :):icon_idea:

 

 

இத் திரியில் சகோதர பாசம் பெரிது அது,இது என எழுதுபவர்களில் அநேகர் ஒரு சகோதரத்துடன் பிறந்தவர்கள்.மற்றவர்களில் சிலர் தங்கட குடும்பத்தை விட்டுக் கொடுக்க கூடாது என பொய் சொல்கிறார்கள் :)
 
பெற்றோர் குழந்தைகள் மீது வைக்கும் பாசத்தை விட சகோதரங்களிடையே உள்ள பாசம் தான் அளவிட முடியாதது என்று சொல்வது அந்தக் காலம்.பாசம் என்பது தானாக வர வேண்டும்.அக்கா பாவம்,அண்ணா பாவம்,தம்பி,தங்கச்சி பாவம் என்று பாசம் வரக் கூடாது.இந்தக் காலத்தில் கொடுத்தால் தான் பாசம்.
 
இந்த நேரத்தில் நெடுக்கர் சொல்வது மாதிரி  அண்ணி வந்து குடும்பத்தை பிரிச்சிட்டார் என்று சொல்வதும் ஏற்கக் கூடியது அல்ல....அண்ணனுக்கு ஒழுங்கான பாசம் தம்பி மேல் இருந்தால் எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது.அண்ணனுக்கு காரணம் காட்ட அண்ணி கிடைச்சிருக்கார் அவ்வளவு தான் :lol:
 
இந்தக் காலத்தில் நான் பார்த்த வரைக்கும்,என்னைச் சுத்தி நடக்கிறதை வைத்து சொல்கிறேன் சுயநலமில்லாத சகோதர பாசம் என்பது இல்லவே இல்லை.குடுக்கிறதை வைத்துத் தான் பாசத்தின் அளவு இருக்கும் :icon_mrgreen: இது ஒரு வீதம் அல்லது மற்றவர் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன தாங்கள் தங்கட குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்போம் என்று நினைப்போர் இன்னொரு வீதம்.குறைந்த பட்சம் பெற்றோர் உயிரோடு இருக்கும் சகோதரங்கள் பாசமாக இருப்பதாக காட்டிக் கொள்வார்கள்.பெற்றோரின் இறப்புக்கு பின்னர் அதுவும் சிதறிப் போய் விடும்.
 
நிழழியின் சகோதரியோ அல்லது இசையின் சகோதரியோ எங்கேயோ அவர்களிடம் இருந்து தள்ளி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.எப்பவாவது தொலைபேசி எடுத்து எப்படியடா இருக்கிறீங்கள் என்று கேட்பார்கள்.அந்த சகோதரிகளுக்கு எதாவது பிரச்சனை வந்தால் தான் இந்தச் சகோதரர்களின் உண்மையான பாசத்தை தெரிந்து கொள்ளலாம் :rolleyes:
 
சகோதரங்களிடையே பாசம்,விட்டுக் கொடுப்பு,புரிந்துணர்வு இருக்க வேண்டும்.ஆனால் அது எல்லோருக்கும்[ஒரு குடும்பத்தில் பிறந்த] இருக்க வேண்டும்.தனியே ஒருத்தருக்கு மட்டும் இருந்து பிரயோசனமில்லை என்பது என் கருத்து.

 

 

ரதி, உங்கள் கருத்துடன் என்னால் உடன் பட முடியவில்லை.  எனக்கு நிறைய சகோதரர்கள் இருக்கின்றார்கள் நாங்கள் இன்றும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். சும்மா எமது குடும்பம் ஒற்றுமையாக இருக்குது என்று யாழில் எழுதி எனக்கு என்ன வரப்போகின்றது? நான் எழுதுவதற்கு காரணமே மற்றவர்களும் முயற்ச்சி செய்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற எண்ணோட்டத்தில் தான்.  

நாம் ஒரு குடும்பமாக (சகோதரர்கள் அவர்கள் குடும்பங்கள்) என 30 பேர் வருவோம். இன்று வரை எமக்குள் பிரச்சனை வருவதில்லை இனியும் வராது காரணம் ஒருவர் ஒருவர் மேல் கொண்டுள்ள உண்மையான அன்பும் அக்கறையும் தான். நாம் ஒவ்வொரு மாதமும் சந்தித்து கொள்ளுவோம் வருடத்திற்கு ஒரு முறை ஒன்றாக கொட்டேஜ் போய் ஒரு வாரம் ஒன்றாக கழிப்போம். (அப்படி செய்வதால் சிறுவர்களுக்கும் ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்க முடிகின்றது)

பெற்றோர் போனபின்பும் எம்மால் ஒற்றுமையாக இருக்க முடிகின்றது என்றால் அது அவர்கள் எமக்கு விட்டு சென்ற வரம் தான். உண்மையான பாசமும், நேசமும், விட்டுகொடுப்பும், நான் நீ என்ற போட்டியும் இல்லாவிட்டால் போதும் ஒற்றுமையும் அன்பும் தானா எம்மை நோக்கி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரங்களிடையே உள்ள பாசம் பற்றிய தோற்றங்கள் யாழ்களத்தினூடாக சற்றுக் காட்டமாகவே வெளிவந்துள்ளது. அதனால் இதனை வெளியிட்டவர்கள் சகோதர பாசமே அற்றவர்கள். அதனைக் கொச்சைப் படுத்துபவர்கள். என எடுத்துக்கொள்வது தவறானது. இந்தப் பாச உறவு கண்ணுக்கும் கைவிரலுக்கும் உள்ள உறவுபோன்றது. கைவிரல் கண்ணைக் குத்தாது என வாதிடுவதும். குத்தினாலும் எனக்கு வலிக்கவே இல்லை என மறைக்க முயல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. <_<

பாசம் நேசம் ஒற்றுமை எதை வைத்து அழவிடுவது என தெரியவில்லை .நாங்கள் எட்டு பேர்கள் .ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் பெரிதாக தலையிடுவதே இல்லை .அடிக்கடி ஒன்று சேர்ந்து அரசியல், இலக்கியம், சினிமா, பிள்ளைகளின் படிப்பு பற்றிதான் கதைப்போம் .சில குடும்பங்களில் இருக்கும் வானத்தைப்போல சினிமா போல் சகோதர நெருக்கம் இல்லை எல்லாரும் அவரவர் பாடு .

 

தும்சின் பதிவை வாசிக்க எனக்கு வியப்பாக இருந்தது .எனது குடும்பத்திலும் மூன்று ஆண்கள் ,ஐந்து பெண்கள் .

அண்ணர் இலங்கையிலேயே வெள்ளைக்கார வாழ்வுதான் வாழ்ந்தார் .JIM REEVES,BEATLES கேட்டுக்கொண்டு கையில் TIMES,NEWSWEEK உடன் மயிரையும் மிக நீளமாக வளர்த்தபடி திரிவார் ,அவரது மிக நெருங்கிய நண்பர்கள் எங்களை போல் அல்ல மிக பணக்காரர்கள் (தம்பாபிள்ளை மகேஸ்வரன் ,சுபாஸ் மனோகரன் ).வெளிநாடு வந்தும் அதே வாழ்க்கை தான் தொடர்கின்றார்.நடிகர் விஜேஜ்  வீட்டிற்கு  சாப்பாட்டிற்கு நண்பருடன் போன போது விஜஜ் தனது படத்தில் பிடித்த படம் எது என்று கேட்ட போது இவர் தான் எதுவும் பார்த்ததில்லை என்று இருக்கின்றார் ,நானென்றால் முழு படமும் பட்டியல் இட்டு இருப்பேன் .

 நான் லண்டனில் இருந்து கொலன்ட் போகும் போது தம்பி குடுமியும் தோடும் ஆக ஏதும் பத்துகின்றனியோ என்று போக்கேட்டுக்குள் கை விட்டார் .சிகரெட் இல்லை மற்றது :icon_mrgreen: .நான் இயக்கத்திற்கு போக போகின்றேன் என்று சொல்ல விழுந்து விழுந்து சிரித்தான் .உனக்கென்ன பைத்தியமோ என்று .இப்பவும் அதை சொல்லி சிரிப்பான் உனக்கு அப்பவே சொன்னான் தானே எங்கட ஆட்களை பற்றி என்று .நான் அசல் தமிழ் டைப் .வாசிப்பு ,இசை ,உடுப்பு ,வாழ்வு அனைத்தும் . அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றும் நான் தான் வீட்டிற்கு கடிதம் போடுவது . மூன்று பேருமாகத்தான் உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க போனோம் .நண்பர்கள் மாதிரிதான் பழகுவோம்.ஒன்றாக தண்ணியும் அடிப்போம் .

பெண்கள் இரண்டு குரூப்.  

ஒன்று இலக்கிய குருப் (2 பேர்  ) .அனேகம் எல்லா இடமும் ஒன்றாகத்தான் திரிவார்கள் .

மற்றது வேம்படி குரூப் (3பேர் ). அண்மையில் இலங்கை இந்தியா என்று நண்பிகளுடன் ஒன்றாக போய்வந்தார்கள் .இந்த இரண்டு குரூப்பும் தங்களுக்குள் ஒற்றுமை மற்ற குரூப்புடன் ஆகாது .. :icon_mrgreen: 

நாங்கள் எல்லாருடனும் OK. இலக்கியத்திற்கும் போவோம் வேம்படிக்கும் போவோம் . :icon_idea:

அண்ணன் தம்பி சண்டை அடி தடியோடு முடிந்துவிடும். அக்கா தங்கை சண்டை அத்திவாரத்தையே தகர்த்துவிடும். இது நானாக எழுதவில்லை. நகமும் சதையுமாக வாழ்ந்த சகோதரிகளின் சண்டை தந்த அனுபவம் சொல்ல எழுதுவது. :o

 

என் மனைவிக்கு மூன்று சகோதரிகள். அதில் ஒருவர் இங்கு இருக்கின்றார்.  மனைவியின் அக்கா அவர். அவரது கணவரும் நானும் நல்ல நண்பர்கள். ஒன்றாகத் தண்ணி அடிப்பதில் இருந்து ஊரூராக அலைந்து ஆடு பிடிச்சு பங்கு போடுவது வரைக்கும் செய்வம்.

சில நேரங்களில் அக்காவுக்கும் தங்கைக்கும் இடையே பிரச்சனைகள் வரும் (அக்காகாரி, தான் என்ன சொன்னாலும் தங்கச்சி கேட்க வேண்டும் என்று நினைப்பவர் - அதில் பல நேரங்களில் அக்கறைதான் அதிகம் இருக்கும் ). அவர்களுக்கிடையில் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் நானும் சகளையும் அதைக் கண்டு கொள்வதே இல்லை. நீங்கள் வேண்டும் என்றால் பிரச்சனைப்படுங்கள்.. நாங்கள் எப்பவும் ப்ரெண்ட்ஸ் தான் என்று கூத்தடிப்போம்... விளைவு: அக்காவும் தங்கச்சியும் ஒன்றாக சேர்ந்து விடுவினம். 

 

என்னைப் பொறுத்தவரைக்கும் பிரச்சனைகளே இல்லாத உறவு என்று உலகில் இல்லை. கூட இருந்து எல்லா சுக துக்கங்களிலும் பங்கு கொள்கின்ற வாழ்க்கைத் துணையுடனேயே கருத்து வேறுபாடுகள், சின்னச் சின்ன சண்டைகள் வரும் போது சகோதரங்களுடன் வராமல் விடுமா? கண்டிப்பாக வரும். ஆனால் அதனை எப்படி எடுத்துக் கொள்கின்றோம் என்பதில் தான் எல்லாம் இருக்கு.

 

சகோதரங்களிற்கிடையிலான முக்கிய பிரச்சனையே  ஒருவருக்கொருவர் அதிகம் எதிர்பார்ப்பதுதான். கலியாணமும் முடிச்சு குடும்பமுமாகப் போய் விட்ட பின் தேவையில்லாமல் இன்னொரு சகோதரத்தின் உதவியை நாட வேண்டி வருவது, சகோதரங்களின் சொந்த வாழ்க்கை விடயங்களில் மூக்கை நுழைப்பது, அவர்களின் பிள்ளைகள் மீதும் அதிக அதிகாரம் செலுத்த முனைவது, சகோதரம் மூன்று அறையுள்ள வீடு வாங்கினால் போட்டிக்கு 5 அறையுள்ள வீட்டை வாங்க முயல்வது போன்ற விடயங்களால் தான் பிரச்சனைகளே வருவது.

 

எல்லாவற்றுக்கும் எல்லை இருப்பது போன்று சகோதரங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை, எங்கள் விடயங்களில் கொடுக்கும் சுதந்திரம் போன்றவற்றுக்கும் எல்லைகள் இருக்கு.  ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளை காப்பாற்றிக் கொண்டு மற்றவரின் எல்லைகளுக்கும் மதிப்பு கொடுத்தால் பிரச்சனைகள் வராது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு  சிலரது கருத்துக்களைப்பார்க்கும்போது

சகோதரம்  என்பதற்குள்ளேயே  எதை  எதையோ எதிர்பார்ப்பதால்வரும்வினை  என்று தெரிகிறது

சகோதரத்துடன் தண்ணி  அடிப்பதை பெருமையாகக்கருதும்நிலை வேறு.....

 

இப்படியென்றால்

குத்துப்பாடாகத்தானிருக்கும்....

 

எதிர்காலம்

வரும்கால  சந்ததி

ஒன்று பட்ட பலம்  பொருந்திய  வாழ்வு....

 

இவற்றுக்கு நாம் விட்டுக்கொடுப்புக்களை  செய்யணும்

முன் உதாரணமாக இருக்கணும்

நடக்கணும்

 

இத்தனை  சந்ததியாக

பரம்பரையாக கடைப்பிடிக்கபப்பட்டு 

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று

இன்று சரி  வராது என்பது

சுயநல  வாழ்க்கை முறைமைக்குள்  நாம் சென்றதையே  காட்டி நிற்கின்றதே தவிர

அந்த வாழ்க்கைமுறை கூடாது என்பதல்ல....

 

என்னால் முடிந்தவரை அடுத்த  தலைமுறைக்கும் அதைக்கொண்டு  போயுள்ளேன்

கொண்டு போகப்படணும்

அவ்வளவு தான்

நன்றி

 

Edited by விசுகு

எனக்கு ஒரு அண்ணனும், தங்கையும் உண்டு. எங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் அப்ப அப்ப வருவதுண்டு. ஆனால் எனக்கு பிரச்சனை என்று வரும்போது அவர்கள்தான் வந்து நிற்பார்கள்.  பெரிதாக சொந்தக் காரர்களை யாரையும் தெரியாது ஆகையால் இன்றும் நான் ஆலோசனை எதுவும் கேட்பது என்றால் என் தங்கையைத்தான் கேட்பேன். நான் அதிகமாக நம்புவதும் தங்கையைத்தான் அது அவளுக்கும் தெரியும். அண்ணனிடம் வயது வித்தியாசம் காரணமாக மனம் விட்டு பேச முடியாது என்பதால் அதிகம் பேச்சு தங்கையிடம்தான். என் மனைவி எதுவும் சொன்னாலும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.  

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வரை (திருமணம் ஆகுமுன்) தங்கைக்கு என்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்வதுண்டு. ஏதும் கேட்டுவிட்டால் அலைந்து திரிந்து தேடிக் கண்டுபிடித்து வாங்கி கொடுத்தவுடன் அவள் முகம் மலர்வதைக் காணும் அந்தக் கணம் இருக்கிறதே..... அந்த மகிழ்ச்சிதான் பாசமோ !!?? திருமணத்திற்கு பின்னால் தங்கை அதிகம் கேட்பதில்லை.... அப்படி கேட்டால் என மனைவியின் கோபத்தை அடக்க இரண்டு மணி நேரம் பேசி சமாதானம் செய்ய வேண்டும்...:) இயல்புதானே ??

சின்ன வயதில் இருந்து எனது அண்ணன் என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். காலையில் மிதிவண்டியில் ஏற்றிக் குளிக்க கண்மாய்க்கு அழைத்துச் சென்று, திரும்ப பள்ளிக்கு அழைத்துச் சென்று, மாலையில் கிரிக்கெட் விளையாட்டில் என்னையும் சேர்த்துக் கொண்டு, வார விடுமுறைகளில் நுங்கு வெட்ட....  இப்படி சகலமும் அவர்தான். என் அண்ணன் மீது ஏதும் கோபம் வந்தால் இந்தச் செயல்கள் தான் கண் முன்னாடி வந்து போகும்... கோபம் காணமல் போகும். இன்றைக்கும் எனக்கு எதாவது ஒன்று என்றால் அவரிடமிருந்துதான் முதலில் போன் வரும்......

மூவரும் பொருளாதரத்தில் சுயசார்பாக இருப்பதால் பெரிதாக எதிர்பார்ப்பு ஏதுமில்லை ஆதலால் இதுவரைக்கும் பிரச்சனை ஏதுமில்லை...

 

இத்தனையும் தாண்டி சகோதர அன்பு என்பது நெகிழ்வைத் தரக் கூடியது.. எதாவது பிரச்சனை என்றால் எனக்கு உதவ எனது குடும்பம் இருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுத்து என்னை மகிழ்வுடன் இயங்க வைத்துக் கொண்டிருப்பது.  இன்றும் கூட எனக்கு ஒரு அக்கா இல்லையே என்ற ஏக்கம் உண்டு... !!


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு  சிலரது கருத்துக்களைப்பார்க்கும்போது

சகோதரம்  என்பதற்குள்ளேயே  எதை  எதையோ எதிர்பார்ப்பதால்வரும்வினை  என்று தெரிகிறது

சகோதரத்துடன் தண்ணி  அடிப்பதை பெருமையாகக்கருதும்நிலை வேறு.....

 

இப்படியென்றால்

குத்துப்பாடாகத்தானிருக்கும்....

 

எதிர்காலம்

வரும்கால  சந்ததி

ஒன்று பட்ட பலம்  பொருந்திய  வாழ்வு....

 

இவற்றுக்கு நாம் விட்டுக்கொடுப்புக்களை  செய்யணும்

முன் உதாரணமாக இருக்கணும்

நடக்கணும்

 

இத்தனை  சந்ததியாக

பரம்பரையாக கடைப்பிடிக்கபப்பட்டு 

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று

இன்று சரி  வராது என்பது

சுயநல  வாழ்க்கை முறைமைக்குள்  நாம் சென்றதையே  காட்டி நிற்கின்றதே தவிர

அந்த வாழ்க்கைமுறை கூடாது என்பதல்ல....

 

என்னால் முடிந்தவரை அடுத்த  தலைமுறைக்கும் அதைக்கொண்டு  போயுள்ளேன்

கொண்டு போகப்படணும்

அவ்வளவு தான்

நன்றி

 

நல்ல கருத்திற்கு நன்றி விசுகு.....எனது நோக்கமும் விருப்பமும் இதேதான்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்க

சகோதரங்களுடன் சண்டை  பிடிப்பவர்களைக்காணவில்லை.......... :D

உந்த சகோதர பாசமெனும் நடிப்புக்களால் விவாகரத்து என்ற நிலையில குடும்பங்கள் வந்து நிற்குது. எனக்கு தெரிந்த சகோதரங்கள் தாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று அந்த குடும்பத்துற்குள் வந்தவர்களை நாய்க்கு கொடுக்கும் மரியாதையும் கொடுப்பதில்லை. இதனால் ஒரு குடும்பம் விவாகரத்து, இன்னொறு நாட்டையே விட்டு ஓடிவிட்டது. இன்னோன்று விவாகரத்து பத்திரத்தில கை எழுத்து வைக்காத குறை. என்னென்றாலும் அளவோடு இருந்தால் எல்லோருக்கும் நன்மை..

உந்த சகோதர பாசமெனும் நடிப்புக்களால் விவாகரத்து என்ற நிலையில குடும்பங்கள் வந்து நிற்குது. எனக்கு தெரிந்த சகோதரங்கள் தாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று அந்த குடும்பத்துற்குள் வந்தவர்களை நாய்க்கு கொடுக்கும் மரியாதையும் கொடுப்பதில்லை. இதனால் ஒரு குடும்பம் விவாகரத்து, இன்னொறு நாட்டையே விட்டு ஓடிவிட்டது. இன்னோன்று விவாகரத்து பத்திரத்தில கை எழுத்து வைக்காத குறை. என்னென்றாலும் அளவோடு இருந்தால் எல்லோருக்கும் நன்மை..

 

யாழ்கவி சொன்னதில் உண்மை இருக்கு!

 

சந்தர்ப்பவாதிகளான சகோதரங்கள் தவிர்த்து சகோதரங்களுக்கு இடையேயான அன்பு எப்போதும் மாறுபடாது...! ஆனால் வீட்டுக்கு வரும் மனைவி/கணவன் உறவுகளையும் மதிக்கும் போது இன்னும் பலப்படும்!

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரங்களோடு சண்டை போட வேண்டும் என்று யாரும் செய்வதில்லை விசுகு அண்ணா..

 

வெளிப்படையா எல்லாம் எழுத ஏலாது..அதே நேரம் சகோதரங்கள் என்று இருப்பவர்கள் உதவி செய்யாவிட்டாவிட்டாலும் பறவா இல்லை, உபத்திரபவமாவது செய்யாமல் இருக்க வேண்டும்....அல்லது காணும் பொழுதுகளில் இந்தா வைச்சுக் கொள் என்று ஒரு 50,100 கொடுத்து விட்டு வாழ்க்கை முழுக்க தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என்று எந்த சகோதரமும் எதிர்பார்க்க முடியாதே..இங்கு  பணத்திற்கு தான் முதல் இடம் அதன் பிறகு தான் மற்றவை...

 

எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்,இருக்க முடியாது அதுவும் தெரியும்.தங்கள் சொல்லுக்கு ஒரு தங்கை கட்டுபடுறாள் இல்லை என்பதற்காக தாய்,தந்தையையும் மற்றப் பிள்ளைகள் கை விடனும் அல்லது வந்து பார்க்க கூடாது என்று இருக்கா.....எந்த ஊர் சட்டம்.......??

 

ஊரில் இருக்கும் சகோதரங்களும் வெளி நாட்டில் இருக்கும் சகோதரங்களும் இன்னும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணங்கள் இருக்கிறது.ஒருவரை ஒருவர் நெடுகலும் பார்ப்பதில்லை.கூடுதலான தேவைகள் வெளி நாட்டில் இருப்பவர்களாலயே தீர்த்து வைக்கப்படுகிறது..இவை இல்லை என்று சொல்ல முடியாத எல்லாருக்கும் தெரிந்த உண்மைகள்.ஆனால் வெளி நாட்டில் வாழும் சகோதரங்கள்,மற்றவர்களில் தங்கித் தான் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை..இங்கு யாரும் எந்த முடிவும் எடுக்கலாம்.....ஆனால் அவர்கள் தான் அறிவு கெட்டதனமாக நடக்கிறார்கள் என்பதற்காக எல்லாரும் அப்படி நடந்து விட முடியாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் பலரது நிலைமையும்.  எமக்கு எத்தனை வயது ஏறினாலும், தாங்கள் மூத்தவர்கள் என்பதால் வாழ்க்கை முழுவதும் அவர்கள் சொல் பேச்சுக் கேட்டுத்தான் நடக்க வேண்டுமென்று நிற்பார்கள்.  நாம் என்னதான் படித்திருந்தாலும் அது அவர்களின் மண்டைக்குள் ஏறுவதே இல்லை.  அப்படி மீறி நடக்கத் தொடங்கினால் அவர்களே எம்மைப் பற்றி, ஊர், உலகத்திற்குக் கதை கட்டி விடுவார்கள்.  எம்மிடமிருந்து எம் பெற்றோரைக் கூடப் பிரித்து வைத்து விடுவார்கள். 

 

ஊசியால் குத்துப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும்.  ஊசி குத்தும் என்று அதிலிருந்து குத்து வாங்காமல் இருப்பவர்களுக்கு அந்த வலி தெரியாது.  வலிக்கும் என்று தெரியும்.  ஆனால், அதன் வலி தெரியாது.  அப்படித்தான் இங்கு ஒரு சிலர் இருக்கிறார்கள்.  அவர்கள் ஊசியால் குத்துப்படாததால் அதன் வலியை உணராமல் இங்கு எழுதுகிறார்கள்.  அப்படி எழுதுபவர்களில் பலர் குடும்பத்தில் மூத்தவர்களாக இருக்க வேண்டும்.  அல்லது சகோதர பாசத்தோடு வளர்க்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  இங்கு பிரச்சனையே அப்படி வளர்க்கப்படாதவர்கள்தான்.  எமது சமூகத்தில், சகோதர பாசத்தோடு வளர்க்கப்படாதவர்கள்தான் அதிகம். 

 

நாம் பாசமாக இருந்தாலும், அவர்கள் அந்தப் பாசத்தைப் புரிந்து கொள்வதில்லை.  அவர்கள் எனக்குச் செய்ததைவிட நான் அவர்களுக்குச் செய்தது அதிகம்.  வாழ்நாள் முழுவதும் அவர்களது அதிகாரத்தின்கீழ் இருக்கவேண்டுமென்றே நினைக்கிறார்கள்.   இங்கு ஒருவர் தாம் பிறந்த வரிசைப்படியே விழாக்களிலும் நிற்பதாகக் கூறினார்.  அப்படியானால், உங்களுக்குப் பிந்திப் பிறந்தவர்கள் யாரும் உங்களை விட்டு முன்னே போகக்கூடாது என்றுதானே அர்த்தம்.  இதுவும் ஒருமுறை அடக்குமுறைதானே?  அவர்கள் எங்கு நிற்கவேண்டுமென்பதை அவர்கள் தீர்மானிக்க முடியாது.  பிறப்பின் வரிசைதான் தீர்மானிக்கிறது.  இது எப்படி ஒற்றுமையாக முடியும்? 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி மற்றும் போக்கிரி  ஆகியோருக்கு விளக்கமாக எழுதணும்

நேரம் தான் கிடைக்குதில்லை

முடிந்தவரை...........

 

இப்போ நாம் எதை வலியுறுத்தி  நிற்கின்றோம்

எது   தேவை  எனச்சொல்கின்றோம்

 

ஒரு நாடு முன்னேறவேண்டுமாயின்  அது வீட்டிலிருந்து தானே ஆரம்பிக்கிறது

நாட்டில் சமுதாய  மற்றும் மக்கள் ஒற்றுமை பற்றி  வாய் கிளிய  பேசும் நாம்

நமது குடும்பத்தைப்பற்றி  சந்தித்தாலென்ன?

அங்கிருந்து ஆரம்பித்தாலென்ன?

அது தானே சரி

அது தானே 

நாம் முன்னுதாரணமாக இருப்பதற்கு சான்று.......

 

அதை எனது வீட்டில் நான் செய்திருக்கின்றேன்

செய்து வருகின்றேன்

செய்வேன்

இது தான் எல்லாவற்றிற்கும் முதல்படி.

அதையே செய்யமுடியாத  நாம்

எதைப்பற்றி  பேசமுடியும்???

செயலில் இல்லாத  எதுவும் செல்லாது............

 

 

 

யூதனை எதற்கும் முன்னுதாரணமாக  எடுக்கின்றோம்

ஒற்றுமை

பலப்படுத்துதல்

அவர்களுக்குள் உதவுதல்

தூக்கிவிடல்

கூட்டுமுயற்சிகள்........ என்று

ஆனால் அதை எமது குடும்பத்துக்குள்ளேயே  கோட்டை விடுகின்றோம் :(

 

நாங்கள்  9 பேர்

எமக்குப்பிறந்தவர்கள்

35 பேர்

அவர்களுக்கு  பிறந்தவர்கள்

இதுவரை 31 பேர்....

எந்த நல்ல

அல்லது துக்க  காரியங்களிலும் அநேகமாக அத்தனைபேரும் நிற்போம்

(படிப்பு அல்லது   விசாவால் ஒருவர் அல்லது இருவர் முடியாது போகலாம்)

 

இதற்கு சாட்சி கேட்டால்

போன யூலையில் எமது அத்தார் இறந்தபோது

அத்தனை  பேரும் அங்கு நின்றோம்

அந்த மரணவீட்டினை YOUTUBE இல் கேட்டிருக்கின்றேன்

முடிந்தால் இங்கு போடுகின்றேன்

எனது அம்மா  இறந்தாலோ

அல்லது நான் இறந்தாலோ

யாழிலிருந்து ஏதாவது ஒரு உறவாவது கலந்து கொள்ளும்

அவர்

இந்த குடும்பத்தின் ஒற்றுமையை  நிச்சயம் எழுதுவார்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாலுமி சரியாக இருந்தால் கப்பல் தானாகப் போகும்.. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.