Jump to content

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது கேள்வி !
 
நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் .......... அவளுக்காக அவள் மனது சந்தோசப்பட எதையும் செய்ய நினைப்பேன். 
 
அவள் நான் தேவாலயத்திலேயே வளர்ந்துவிட்டேன் எனது திருமணமும் அங்கேயே நடந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். துரதிஸ்டவசமாக இருவரும் வேறு வேறு மதம் ஆகிவிட்டோம்........
 
இப்படி அவள் பேசினால் ...........
அவள் எமது காதலை பற்றி பேசுகிறாள். அவள் விருப்பின்படி தேவாலயத்தில் சென்று திருமணம் செய்வதில் (தனிபட்ட முறையில்) எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
 
நான் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவள் ....
வேறு மதங்களுக்கு மாற  முடியாது. நீ வந்து தேவாலயத்தில் ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினால்.........
என்னுடைய பதில்.
இவளுவு நாளும் உன்னை கொஞ்சியதட்கும் தொட்டதற்கும் என்ன விலை கொடுக்க வேண்டும்?? 
காதலை சாகடித்து மதம் முன்னிறுத்த பட்டபின்பு ....
அவளுடன் வாழ்வதற்கு என்ன இருக்க போகிறது?? 
 
ஆயாரின் மகளாக இருந்தால் ............. ஜேசுவின் அன்பு பற்றிய தத்துவம் பற்றி அவள் நிறையவே அறிந்திருப்பாள். ஆகவே எனக்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. 

 எனது பிரச்சினையும் இதுதான். காதலிக்கும்போது மட்டும் பேசாமல் இருந்துவிட்டு கல்யாணம் என்று வரும்போதுமட்டும் அவனை மதம் மாறு என்பது சுத்த அடாவடித்தனம்,. இதனால் எனது நண்பன் மேல் நானும் கோபப்ப்ட்டிருக்கிறேன். இப்போது அவன் சைவனுமில்லாமல் - கிறீஸ்த்தவனுமில்லாமல், எந்தச் சாமியத் தொழுவதென்று தெரியாமல் வாழ்ந்துகொன்டிருப்பானென்று நினைக்கிறேன். அவள் சரியாக இருந்திருந்தால் நீ உனது மதத்தில் இரு, நான் எனது மதத்தில் இரு என்று சொல்லியிருக்க வேண்டும், ஆனல் அப்படி நடக்கவில்லை என்பதுதான் கவலை.

  • Replies 254
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ்சூரியன்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

சண்டமாருதன்

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

சண்டமாருதன்

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

Posted

தமிழை வளர்த்ததில் சமண பௌத்த மதங்களின் பங்கை விலத்திப் பாரக்க முடியாது. திருவள்ளுவரையும் இளங்கோ அடிகளினதும் முக்கியத்தவம் வெளிப்படையானது. சம்மந்தமே இல்லாமல் உளறுவது மட்டுமில்லாமல் சம்மந்தன் என்ற கிரிமினல் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமணர்களை கழுவேற்றியதில் என்ன தவறு என்று கேட்கும் உங்களுடன் என்ன கருத்தாடலை செய்ய முடியும்? கழுவேற்றப்பட்ட அனைத்து மக்களும் தமிழ்மொழியை பேசிய தமிழர்களே ! அன்றைக்கு சமணர் பௌத்தர் என்று கழுவேற்றியதும் தமிழர்களே அதன்பிறகு சேரன் சோழன் பாண்டியன் என்று மாறிமாறிக்கொன்று குவித்ததும் தமிழர்களே கடந்த காலத்தில் ஈழத்தில் தோன்றிய 32 இயக்கமும் கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்ட மாறி மாறி போட்டுத்தள்ளியதும் தமிழர்களையே.. இனி இஸ்லாம் கிருத்தவம் இந்து என்று போட்டுத் தள்ள முனைவதும் தமிழர்களுக்குள்ளாகவே ! உலகம் முழுக்க உருண்டு பிரண்டாலும் இந்தக் காட்டுமிராண்டிக்கூட்டம் திருந்தவே திருந்தாது.. எந்த ஒரு இனத்திடம் இருந்தும் எந்த நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளாது.. எந்த ஒரு அழிவிலிருந்தும் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளாது.. சைக்கோ கூட்டம்.

140000 தமிழரை கொலை செய்த பௌத்தர்களை சம்பந்தர் களுவேற்றியத்தில் என்ன தவறு?  ஈராக்கும் ஈரானும் துருக்கியும் எகிப்தும், லிபியாவும் சியாயாவும் வலு ஒற்றுமையாக இருப்பத்தாக நடிக்கும் உங்களுடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? எகிலபொலவும், பிலாமதளவும் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள். பொன்சேக்காவும் அரசர் கூட்டமும் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள். மகாநாம சம்பந்தர் காலத்தில் கேட்ட மனிதப்பலியை எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார்டிந்த கூட்டம் சம்பந்தரை மண்வறையில் வைத்து கொழுத்தியதை அறியாதா? மிருகங்க்கள் எப்போதாவது திருந்தியதுண்டா 

Posted

33 கோடி தேவர்கள் இருப்பதாக கூறப்படும் இந்து-சைவ மதத்திலிருந்து பிரிந்து சென்று இன்னொரு கடவுளை வழிபட ஆன்மீக தேவை எழுவதற்கிடமில்லை. இது 33 கோடி + 1 ஒன்றாக் அமைந்தாலும், சனாதன மதமான இந்து மதத்தில் அந்த தத்துவமும் உள்ளடங்கியிருக்கு. சகல மத தத்துவங்களை மட்டும் அல்ல மதமில்லா தத்துவங்களையும் நாஸ்திகஸ்தையும் உள்ளடக்கியது இந்துமதம். நம்பிக்கைதான் மதம் என்பதால் கடவுள் இல்லை என்று நம்புவானின் நமபிக்கையையும் ஏற்று அவனையும் இந்துவாக வைத்துக் கணித்துக்கொள்வது இந்துமதம் மட்டுமே. மற்ற எந்த மதத்திலும் நாஸ்திகன் ஒரு பாகமாக இருக்க முடியது. 

இளங்கோ, வள்ளுவன், திருநாவுக்கரசர், ஜே.கிருஸ்ணமூர்த்தி, தமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவ்லர், விபுலானந்தர் போன்று இளமையில் மதம் மாற்றப்பட்டு பின்னர் திரும்பி வந்தோர் மற்றையைய மதங்களை தெரிந்துதான் திரும்பி வந்தனர். இவர்களின் அகன்ற கண்களில் கண்டது, எல்லோருக்கும் அவர் அவர் மதங்களை பின்பற்ற அரசியல் உரிமை இருக்க வேண்டும் என்ற வறட்டு சட்டவிவாதம் மட்டும் அல்ல, எந்த மதத்தில் இருப்பவனுக்கும் எல்லா மதத்தையும் பின் பற்றவும் உரிமை வேண்டும் என்ற தனி மதம்னித உரிமையையை போதிக்கும் சனாதனதர்ம மான இந்து மதமே.

பரம் கம்சர் சில் காலங்களில் பெண்களை போல உடுத்துவார். அன்னை சாராதவை மத்தியில் நிறுத்தி பூசை செய்வார். பாதிரிகள் போல நடந்து கொள்வார். குல்லா கூட போடுவார். தான் முகமதியத்தை,கிறிஸ்தவத்தை பின்பற்றி அந்த அந்த கடவுள்களை கண்டத்தாக சீஸ்சர்களுக்கு கூறின்னர். (இன்று ஆராச்சிகளால் கூறப்படும், வெள்ளையான, மூக்கு நீண்ட, நேர்த்தலைமயிர் உருவம் யேசுபிரானது அல்ல என்றதை பரம கம்சர் தான் கண்ட ஜேசு, சுருள்தலையரும், சப்பை மூக்கும் உள்ளவர் என்று-சரியான ஜேசு காலத்து மத்திய கிழக்காரின் உருவம்-சொன்னத்தை மகாநாத குப்த்தா 100 வருடங்களுக்கு முன்னர் தனது வரலாற்றில் காட்டியுள்ளார்).எந்த கடவுளையும் இந்து மதத்திலிருந்தே இராமகிருஸ்னர் தேடிக்காண்பித்திருக்க மதம் மாறிக் கடவுளை தேடுவதென்பது இராமகிருஸ்னரை விட ஆன்மிகதேவை உள்ளவராக தன்னைத்தான் காட்டும் முயற்சி.

இந்து மதத்திற்குள் சாதியை திணித்தவர்கள் ஆரிய மேற்கத்தியர் பின்பற்றும் மதங்களும், ஆரியருமே. அது அவவாறு இருக்க இந்து மதத்திலிருந்து மதம் மாறி ஆன்மிகத்தை காண்போம் என்று கூறுவோரின் கதை குடிசை வீட்டில் ரோச்சை தொலைத்த கிழவியின் கதை போன்றது. வீட்டுக்காறி இரவில் குழந்தைகளின் தேவைக்காக ரோச்சை எப்போதும் ஒரே இடத்தில் வைப்பாள். கிழவிக்கு பகலிலும் சரியாக கண் தெரியாது. இரவு எங்கோவோ ரோச்சை எடுத்து சென்ற கிழவி தடுமாற்றத்தால் ரோச்சை விட்டு விட்டு வந்து விட்டது. மறுநாள் பகல் ரோச்சை வைத்த இடத்தில் இடத்தில் காணாததால் வீட்டுக்காறி கிழவி மீது பாய்ந்தாள். கிழவி "இப்போது வெளிச்சமாக இருக்கிறது, எனக்கு கண் தெரியாது, இரவு வந்தால் நான் அந்த இடத்துக்கு நேராக போய் எடுத்து வந்துவிடுவேன் என்றதாம். ஆனால் தான் ஏன் ரோச்சை எடுத்து சென்றது என்ற சின்ன விளக்கம் கிழவிக்கு இல்லை. அதாவது இந்து மத்த்தில் இருந்த போதே குருடர்களாக வாழ்ந்து இந்து மதத்தை தெரிந்து கொள்ளாத முட்டாள்கள் மற்றைய மதத்தையும் அறிந்து ஒப்புவமைகண்டு விட்டதாக துள்ளிக்குதிப்பது கோணங்கித்தனம். இருட்டின் போது வெளிசசத்திற்காக ரோச்சை எடுத்து சென்று தொலைத்த தடுமாற்றம் பிடித்த கிழவி இருட்டுவந்தால் ரோச்சை கண்டு பிடித்துவிடலாம் என்று போதிப்பது நகைச்சுவை. , 

இந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது தமது சட்டப்படியான உரிமை என்றதை நிர்ணயம் செய்துகொள்ள மாறுகிறார்களாயின் அது வேறு. சாதிப் பாகுபாடு இருப்பதால் இந்து மதத்தில் கடவுள் இல்லை என்று விதண்டவாதம் வைக்க முயல்வது வேறு. அதிலும் சாதிப்பகுபாட்டு ஏற்பட காரணமாக் இருந்த மதத்தினர் அதை வைப்பது துரோகம். முகமதிய, கிறிஸ்துவ, யூத மதங்களை பின்பற்றும் ஆரியரால் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்குள் திணிக்கப்பட்டது தான் சாதியம். அதை அறியாதவர்கள் போல அந்த இருட்டுக்குள் திரும்ப சென்றால் தொலைத்த ரோச்சை கண்டுவிடுவோம் என்று தடுமாற்றக்கார கிழவி மாதிரி பேசுவது ஏமாற்றுத்தந்திரம்.

அமெரிக்காவில் படித்தவர்கள் மதம் சாரா அரசியல் அமைப்பை உலகத்திற்கு ஆக்கி காட்டி சாதனை ஏற்படுத்தியது, அவர்கள் கிறிஸ்த்தவ மதம் ஆட்சி பீடம் ஏறாமல் இருக்க செய்த மாபெரும் சாதனையே அது.   அமெரிக்க கிறிஸ்தவத்தில் கறுப்பர்கள், செவ்விந்தியர்கள் அடிமைகளாக காணபட்டமையாலேயே அவர்கள் அதை செய்தார்கள். இந்தியாவில் மட்டு மல்ல முகமதியர் ஆண்ட இடமெங்கும் இஸ்லாமியர் வரி கொடுக்காதிருக்கும் போது ஆளப்படும் மதங்கள் மட்டும் வரி கொடுக்க வேண்டும் என்று தண்டம் இறுத்தமைதான் இஸ்லாமியரின் சரித்திரம். மதத்தை திருத்த முடியாவிட்டாலும்  மேற்கு நாட்டு கிறிஸ்த்தவர்கள் ஜனநாயக முறைகளை ஆட்சி முறையில் ஏற்றுக்கொண்டுவிட்டதால் பணம், இருப்பிடம், வேலை கொடுத்து மதம் மாற்றுவதுதான் அவர்களின் நடத்தை. ஆனால் மத்திய கிழக்கில் இந்து பெண் மொட்டாக்கு போடாமல் பொட்டு வைத்து செல்ல முடியாது. அந்த மத்தை பின்பற்றுவோர் இந்து மத்தை பற்றி பேசும் பேசுவது தடுமாற்ற கிழவின் பேச்சை விட நகைப்பானது. 

சுத்த மத வெறியர்கள் சனாதன மத்தினரான இந்துக்களின் அடிப்படை சைவ சித்தாங்கள் என்ன மாதிரியான மதமொன்றை பற்றி சொல்கின்றான என்ற எள்ளவும் தெரியாத தங்களை அறிவை காட்டுவதுதான் இந்துக்களில் ஏர்ஹு ஒருவைகை இனம் காணமுடியாத ஒரு வெறி இருப்பதாக காட்ட முயலும் குதர்க்க கதை. அப்படி இனம் காண முடியாத உண்மை வெறி இங்கே என்ன என்றால் மதம் மாறாவிட்டால் பெண் கொடுக்க மறுக்கும் மதம் மீது குற்றம் காண முடியாமல் பொய் சொல்லி தன் மதத்தை இழிவு படுத்துவோரை ஏற்கமறுப்போறை வெறியகளாக காட்ட முயலும், தனினத்தை தூற்றும் ஒரு துரோகத்தன வெறிதான் அவர்களால் தங்களுக்குள் இனம் காண முடியாமல் இருக்கிறது.   

இறையே மல்லையின் அறிவை எனக்குத் தா!

Posted

//140000 தமிழரை கொலை செய்த பௌத்தர்களை சம்பந்தர் களுவேற்றியத்தில் என்ன தவறு? //

140000 தமிழரை எங்கே பௌத்தர்கள் கொலை செய்தார்கள்? அவர்கள் என்ன சிங்கள மொழியை பேசிய பௌத்தர்களா?

Posted

தமிழை வளர்த்ததில் சமண பௌத்த மதங்களின் பங்கை விலத்திப் பாரக்க முடியாது. திருவள்ளுவரையும் இளங்கோ அடிகளினதும் முக்கியத்தவம் வெளிப்படையானது. சம்மந்தமே இல்லாமல் உளறுவது மட்டுமில்லாமல் சம்மந்தன் என்ற கிரிமினல் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமணர்களை கழுவேற்றியதில் என்ன தவறு என்று கேட்கும் உங்களுடன் என்ன கருத்தாடலை செய்ய முடியும்? கழுவேற்றப்பட்ட அனைத்து மக்களும் தமிழ்மொழியை பேசிய தமிழர்களே ! அன்றைக்கு சமணர் பௌத்தர் என்று கழுவேற்றியதும் தமிழர்களே அதன்பிறகு சேரன் சோழன் பாண்டியன் என்று மாறிமாறிக்கொன்று குவித்ததும் தமிழர்களே கடந்த காலத்தில் ஈழத்தில் தோன்றிய 32 இயக்கமும் கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்ட மாறி மாறி போட்டுத்தள்ளியதும் தமிழர்களையே.. இனி இஸ்லாம் கிருத்தவம் இந்து என்று போட்டுத் தள்ள முனைவதும் தமிழர்களுக்குள்ளாகவே ! உலகம் முழுக்க உருண்டு பிரண்டாலும் இந்தக் காட்டுமிராண்டிக்கூட்டம் திருந்தவே திருந்தாது.. எந்த ஒரு இனத்திடம் இருந்தும் எந்த நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளாது.. எந்த ஒரு அழிவிலிருந்தும் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளாது.. சைக்கோ கூட்டம்.

சைவம், சிவம், இந்து மதம் இதுகளின் உங்கள் புரிதலிலும் உங்கள் கருத்துக்களினாலும் நான் உங்களுடன் உடன் படுகிறேன்.

திருவள்ளுவர் போன்ற சான்றோர்கள் முயன்றும் முடியாமல் போனதை இங்கு இவர்களுக்கு விளங்கப்படுத்தத முடியாது. அன்று அரசர்களை இலக்கு வைத்து இந்து மதத்தையும் வேதத்தையும் விதைத்து இன்றுவரைக்கும் உய்யமுடியாமல் திணறும் ஒரு இனமா இருக்கிறோம்.

எங்களால் அவ்வளவேளிதில் ஒன்றுபடமுடியாது.

துயவன் சொன்ன கருத்தை ஆமோதிக்கிறேன், காரணம் இழப்புக்களுக்கு மத்தியில் வலுவுழந்து போன பாலகர்களை சந்தர்ப்பம் பார்த்து மதம் மாற்றுவது எரிகின்ற வீட்டில் இருப்பதை புடுங்குவதை போன்றது.

அனாலும் அத்தனை இரவல் மதங்களையும் அளித்து தமிழன் தமது சுயமான மதத்தை பின்பற்றவேண்டும் என்பதே என் அவா.

 எனது பிரச்சினையும் இதுதான். காதலிக்கும்போது மட்டும் பேசாமல் இருந்துவிட்டு கல்யாணம் என்று வரும்போதுமட்டும் அவனை மதம் மாறு என்பது சுத்த அடாவடித்தனம்,. இதனால் எனது நண்பன் மேல் நானும் கோபப்ப்ட்டிருக்கிறேன். இப்போது அவன் சைவனுமில்லாமல் - கிறீஸ்த்தவனுமில்லாமல், எந்தச் சாமியத் தொழுவதென்று தெரியாமல் வாழ்ந்துகொன்டிருப்பானென்று நினைக்கிறேன். அவள் சரியாக இருந்திருந்தால் நீ உனது மதத்தில் இரு, நான் எனது மதத்தில் இரு என்று சொல்லியிருக்க வேண்டும், ஆனல் அப்படி நடக்கவில்லை என்பதுதான் கவலை.

ரகுநாதன்,

இறைவன்  ஒரின்ரி ஈரில்லை, இது பண்டைய தமிழன் உணர்ந்தான் இன்றைய தமிழன் எல்லாத்தையும் இழந்தான்.

இதைத்தான் வரலாறாக விடப்போகிரோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தர் பற்றிய இங்கு பதியப்பட்ட கருத்துக்கு என் பதில் சொல்ல வேண்டும். சம்பந்தர் மங்கயற்கரசின் வேண்டு கோளுக்கு அமைய மதுரை வருகின்றார். அங்கே அவர் தங்கியிருந்த மடத்துக்கு சமணர்கள் நெருப்பு வைக்கின்றனர்.அதில் இருந்து சம்பந்தர் தப்புகின்றார். ஆனால் அது கூன் பாண்டியனுக்கு வெப்புநோய்( பெரும்பாலும் நெருப்புக்காய்ச்சல்) ஆக மாறி பாதிகப்படுகின்றார் பிற்பாடு அனல், புனல் வாதம் நடந்து அதில் சம்பந்தர் வெற்றி பெறுகின்றார். ஆனால் அதில் தோற்றுப் போன சமணர்களைக் கழுமரம் ஏற்றுவித்தார் என்பது பெரியபுராணத்தில் சொல்லப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது எவ்வளவு துாரம் சரி என்பதற்கு அப்பால், அப்படி ஒரு சம்பவம் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறிய கூன் பாண்டியனே செய்வித்தான் என்கின்றது. ஒரு அரசனுக்குத் தான் அந்த சக்தி இருந்திருக்க முடியும். தவிர இச் சந்தர்ப்பத்தில் சம்பந்தர் தோற்று இருப்பினும் அவரும் கழுமரத்தில் ஏற்றப்பட்டிருப்பார். சமணர்கள் மயில்பீலியால் தடவி நடந்தாலும், அவர்கள் இரக்கமானவர்களாக அன்று இருக்கவில்லை போலுள்ளது. இன்று சிங்களவர்கள் பசுவதை எதிர்த்தபடி மனிதவதையை ஆதரிப்பது போல.

ஏன் என்றால் இறுதியாகச் சம்பந்தர் திருமணம் முடிகின்றார் அங்கே தீ வளர்ந்து அந்த ஜோதியில் வந்தவர்களோடு ஐக்கியமாகின்றார் என்கின்றது. சம்பந்தர் வரலாறு. ஆனால் ஒரு திருமணத்தை முடித்து ஏன் அந்தச் சோதியில் சம்பந்த் ஐக்கியமாக வேண்டும். அப்படி ஒரு தேவையே இல்லையே. அத்தோடு அவர் தனிய என்றில்லாமல், திருமணத்துக்கு வந்த அனைவரும் அச் சோதியில் ஐக்கியமாவார்களாம். அவருக்கு அப்படிச் செய்ய என்ன மண்டைப் பிழையா? உண்மையில் சமணர்கள் மீண்டும் வழமை போல அவர் மண்டபத்தினைத் தீ மூட்டி அதில் அனைவரையும் கொன்றுவிட்டிருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். திருமண நேரத்தில் சம்பந்தர் அது பற்றிய அஜாக்கிருதையாக இருந்திருக்க கூடும். அப்படி ஒரு மரியாதைக்கு உரியவர் கொல்லப்பட்டார் என்பது சரியாக இருக்காது என்பதால் அவரை ஜோதியில் கலந்தார் என்று முடித்து விட்டிருக்க கூடும். அக்காலத்தில் தலைமறைவு, தப்பித்துப் போதல், மீண்டும் வருவார் என்ற இந்தக் கால கதைகள் தெரியாமல் இருந்திருக்கலாம்.

சம்பந்தரை பிடிக்கும் ஏனெனில், அவர் ஒரு வடமொழி எதிர்ப்பளராகவே இருந்திருப்பார் என நம்புகின்றேன். தமிழால் இத்தனை சாதிக்க முடியும் என்பதைக் காட்டியவர்களில் அவரின் பங்கும் முக்கியமானது.

Posted

கிறிஸ்தவம் தமிழில் வழிபாடு செய்கின்றார்கள் எனச் சிலர் சொல்கின்றார்கள். இந்துக்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் அவா. ஆனால் உண்மையில் கிறிஸ்தவம் அப்படி இனம் மொழியில் வழிபாடு செய்ய ஒரு காரணம். மதத்துக்கு ஆள் பிடிக்க வேண்டிய தேவை. அதை விட முக்கியமானது, இயேசுநாதர் ஒரு இஸ்ரேல்காரர். ஒரு யூதர். அவரின் தாய்மொழியான ஹப்றுவை இஸ்ரேல் மீள உருவாக்கப்பட்ட பின்னர் தான் மீளப்பெற்றார்கள். அது அழிந்து போனமொழியாக இருந்தது. இப்போதும் முதியவயதுள்ள யூதர்கள் ஹப்று தெரியாதவர்களாகவும், இளைய தலைமுறையே இனவுணர்வோடு அதைக் கற்கின்றவர்களாகவும் உள்ளனர்

அத்தோடு யூதர்கள் கிறிஸ்தவத்தை ஏற்கவில்லை. அது வத்திகானுக்கு நகர்ந்தது. அங்கே எல்லாமே மாற்றமடைந்தது. பிற்பாடு பிரித்தானியா தன் சாம்ராச்சியத்தில் என்னுமொரு பிரிவை உருவாக்கியது. இப்படி அலைந்து திரிந்தால் அது ஹப்றுவைத் தொலைத்து எல்லா மொழிகளுக்கும் பரவவித்திட்டது எனலாம். மற்றும்படி இஸ்லாமியர் அரபிலும், பௌத்தர்கள் பாளியிலும் சமணர்கள் பிரகித மொழியிலும் தான் இன்றுவரை வழிபடுகின்றனர்.

சமஸ்கிருதம் எப்படி எமக்குள் புகுந்தது என்றால் என்னுடைய ஊகம் ஆதிசங்கரர்(கேரளா) அனைத்து மதங்களையும் ஒன்றாக்கியதன் விளைவாகவே இருக்கும் என நினைக்கின்றேன். இன்று ஆங்கிலம் போல ஒரு பொதுமொழியாக அது எமக்குள் ஊடுருவியது. யாருடைய தாய்மொழியாகவும் இருக்கதால் அதுவே பொதுமொழி என அன்று எண்ணியிருக்கலாம். அதனால் சமஸ்கிருதம் தெரிந்தவர்ககளுக்கு கோவில்கள் தாரை வார்க்கப்பட்டார்கள். அதுவும் தமிழும் சேர்ந்து தமிழில் இருந்து பலமொழிகள் உருவாகிச் சிதைய நாங்களே காரணம் ஆனோம். அத்தோடு பல அழிவுகள். எம்மால் தமிழை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாத பெரும் அழிவுகள். மற்றும்படி கடவுள் கொடுத்த மொழி சமஸ்கிருதம் என்பதெல்லாம் நல்ல பூச்சுத்தல்கள். ஆனால் அன்று எப்படி நாங்கள் சமஸ்கிருதத்தை உள்ளே வாங்கி எவ்வாறு தமிழைச் சிதைவடைய வைத்தோமோ அதே தப்பினை இன்று ஆங்கிலத்தை உள்வாங்கிச் செய்கின்றோம். சமஸ்கிருதம் ஆவது பரவாயில்லை. ஒரு சில கோவில் பூசாரிகளே மட்டும் கற்றும் மொழியாக இருந்தது. அப்படி இருந்தும் இத்தனை அpவு எமக்கு... ஆனால் இன்று ஆங்கிலம் கொடுக்கப் போகும் அழிவு அப்படியானது அல்ல... அது மிகப்பெரிய அழிவைத் தரப் போகின்றது. என்னமும் 2,3 தலைமுறைகளில் நாம் திரும்பிப் பார்க்கின்றபோது கோடியில் இருந்து வெறும் லட்சக்கணக்கானவர்களே தமிழைப் பேசுகின்ற மொழியாக அது மாறிவிடும்.

இங்கே எழுதப்பட்டவை சில என் எண்ணதின்பால் வெளிப்பட்டவை. வரலாற்று ஆதாரம் கொண்டிருக்கவில்லை.

எழுந்தமானத்துக்கு கருத்துக்களை வைக்காமல் வரலாற்று ஆதாரங்களை தேடிப்பாருங்கள். உங்கள் ஆதங்கம் 500 வருசம் பழமையானது. விசர்க்கதை என நிருபிக்கக்பட்டுள்ளது.

Posted

துயவன் சொன்ன கருத்தை ஆமோதிக்கிறேன், காரணம் இழப்புக்களுக்கு மத்தியில் வலுவுழந்து போன பாலகர்களை சந்தர்ப்பம் பார்த்து மதம் மாற்றுவது எரிகின்ற வீட்டில் இருப்பதை புடுங்குவதை போன்றது.

உவமானம் பிழை. எரியிற கொள்ளி நூத்து, அதில் இருந்து துளிர் எடுக்கப்பாக்கிரார்கள். மற்றும் 16 வயதுக்கு குறைந்தவர்கள் மதம் மாறமுடியாது. ஆனால் கிறித்தவ பழக்கவழக்கங்கலுக்கமைய வழர்வதை தவிர்க்க முடியாது.

கிறிஸ்தவ சேர்ச்சுகள் தமிழுக்கு/தமிழர்களுக்கு ஆற்றும் தொண்டில் கோடியில் ஒரு பகுதி கூட இந்து கோவில்கள் செய்வதில்லை.

மற்றும் துயவன் கருத்தில் உண்மையிருப்பதாக நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்து சமயம் (சைவம்) மிகவும் சுயாதீனமான போக்குடைய ஒரு மார்க்கம். எவரையும் அது கட்டாயப்படுத்துவதும் இல்லை மற்றைய மதங்களை அது அவமதிப்பதும்  இல்லை. அதேபோல் மத மற்றவர்களுக்கும் கடவுள் இல்லை என்பவர்களுக்கும் கூட.. அது ஆன்மீக வழிகாட்டுகிறது.

இந்து மதத்தில் தான் சாதி.. என்று சொல்கிறவர்கள் இருக்கலாம். அவர்கள் கண்மூடிக் குருடர்கள். சாதிய அமைப்பு முறை தொழில்சார் நிலபிரபுத்துவம் சார் எழுந்து நிற்கிறதே அன்றி மதத்தால் என்பது சில மதவிரோத சிந்தனை உள்ளோரின் எண்ணப்பாடு.

கீழைத்தேய நாடுகளில்.. கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தொழில்சார்.. நில பிரபுத்துவ சாதி அமைப்புக்கள் இருந்தன. இப்பவும் அவற்றின் எச்சங்கள் உள்ளன. அது இஸ்லாத்திலும் உள்ளது. வகுப்புவாதம்.. எல்லா மதங்களை பின்பற்றுவோர் மத்தியிலும் மதம் அற்றோர் என்போர் மத்தியிலும் கூட உள்ளது. உயர் வகுப்பு.. மத்திம வகுப்பு.. கீழ் வகுப்பு என்று.. பொருண்மிய மனித இயற்றுகை வசதி அடிப்படையிலான பாகுபாடுகளும் உள.

பாலியல் என்று நோக்கினால்.. எந்த மதமும் மனித இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வழிகாட்டுவதாக இல்லை. எல்லா மதமும் மனித இருப்பை இப்பூமிப்பந்தில் சாத்தியப்படுத்தி.. அதன் சமூக வாழ்வை.. சீராக்குவது பற்றியே சொல்கின்றன. அந்த வகையில்.. பாலியல் என்பது மதங்களில் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசப்படுகின்றன. அதில் இருந்து இந்து மதமும் விலகி நிற்கவில்லை. அதேவேளை பிரமச்சாரியம் பற்றியும் பேசுகிறது. அது எல்லா மதத்திலும் பேசப்படுகின்ற ஒன்று தான். தனிமனிதர் எந்தப் பாதையை விரும்பினமோ அதில் அவர்கள் பயணிக்க வழிகாட்டுவதே மதங்களின் இருப்பு. மதமற்றவர்கள் என்போர் கூட மதமுள்ளவனின் வழியில் தான் பாதி தூரமோ..முக்கால்வாசி தூரமோ..  வருகின்றனர்.

மேலும்.. இந்து மதம்.. மதமாற்றங்களால் அழிந்து விடும் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கென்று தெரியவில்லை. இந்து மதம் காலணித்துவ ஆட்சியில் சந்தித்த மதமாற்ற தீவிரத்தை இன்று சந்திக்கவில்லை. இன்று எப்படி ஈழ தேசம் சிங்கள பெளத்த பேரினவாத காலணித்துவத்தில் பெளத்த நிலமாக மாற்றி காட்டப்படுகிறதோ இதையே போர்த்துக்கீசர்களும்.. ஒல்லாந்தர்களும்.. ஆங்கிலேயர்களும் மிசனரிகள் மூலம் செய்தனர். ஆக ஆக்கிரமிப்பாளர்கள் எல்லோரும் ஒரே வகையினர் தான்.

ஆனால்.. இன்றைய நவீனத்துவ உலகில்.. மக்கள் சுயாதீனமான.. கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்காத.. மத மார்க்கத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில்.. இந்து மதம்.. பெரும்பான்மை மக்களின் எண்ணத்தைக் கவர்கிறது. இஸ்லாமிய கடும் போக்கு அதன் இருப்பிற்கு ஆதாரமாக உள்ள அதேவேளை அதன் அழிவிற்கும் அதுவே காரணமாக உள்ளது. மக்கள் வெறுப்பிற்கும் அதுவே காரணம். கிறிஸ்தவம்.. இன்று மோசடிகள் நிறைந்த ஒன்றாக.. மாறி அதன் சமூகத் தேவை என்ன என்பதை இழந்து வருகிறது. இன்று பல முன்னைய கிறிஸ்தவ நாடுகள்.. கிறிஸ்தவதத்தில் இருந்து விலகிக் கொண்டு வருகின்றன. பிரிட்டனை எடுத்துக் கொண்டால்.. கடைசிக் கணக்கெடுப்பில்.. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியும் மதமற்றவர்களின் எண்ணிக்கையில்.. பல மடங்கு உயர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பெளத்தம் அதன் வெறி காரணமாக செல்வாக்கிழந்து வருகிறது. சீனாவில் பெளத்தத்தை தழுவுவோரின் எண்ணிக்கை குறிப்பாக இளைய சமூகத்தில் பலமான வீழ்ச்சியை சந்தித்துள்ளதோடு.. அங்கும் மதமற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது..!

இன்றை மனித சமூகம்.. கூடிய அளவு கட்டுப்பாடற்ற.. சுயாதீன சிந்தனைக்கும் செயற்பாட்டுக்கும் இடம் தேடும் நிலையில்.. இறுக்கமான மதங்களை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில்... இந்து மதத்திலும் சில மார்க்கங்களில் இருந்த இறுக்கங்கள் தளர்ந்துள்ளன... அல்லது தளர்த்தப்பட்டு வருகின்றன. ஒப்பீட்டளவில் இந்து மதம் கூடிய அளவு சுயாதீனமானது என்ற வகையில்.. நவ கால மக்களின் கூடிய தெரிவாக இந்து மதம் மாறும் நிலையே உள்ளது.

சாதியம்.. வகுப்புவாதம்.. மையவாதம்..பொருண்மிய வாதம்.. ஆட்சியவாதம் என்பவை.. ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்து கட்டி எழுப்பட்டுதல் உண்மையில்.. இவ்வாறான வாதங்களை முன்வைப்போருக்கு.. மக்களை குழப்பி விட ஒரு வழியாக உள்ளதே அன்றி.. இவற்றின் பின்னால் உள்ள யதார்த்தச் சூழல் என்பது வேறெங்கோ முளைவிட்டு.. விருட்சமாகி உள்ளதை சரியான ஆழமான பார்வையால் மிக எளிதாகக் கண்டுவிடலாம். :icon_idea::)

இதற்கு மேல்.. இத்தலைப்பில் சொல்ல எதுவுமில்லை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
சுகன்,இந்தத் திரி பலவந்த மத மாற்றத்தை தடுக்க வேண்டும் என்ட நோக்கில் வெளி வந்த நோட்டீஸ் பற்றியது.இந்த நோட்டீஸ் யாரால் வெளியிடப்பட்டு இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட விடயம் உண்மை தானே!
 
இந்துத்துவ அமைப்புக்களோ அல்லது வத்திக்கானோ எமக்கு நாடு பெற்றுத் தர மாட்டார்கள் என்று தெரியும்.நாமும் அவர்கள் எமக்காக குரல் கொடுப்பார்கள் என்றோ அல்லது நாடு பெற்று தருவார்கள் என்றோ எதிர்பார்க்கவில்லை.
 
நாங்கள் சைவர்கள்.எங்கட மதத்தவர்களை பணம்,பதவி,திருமணம் போன்ற காரணங்களுக்காக மதம் விட்டு மதம் மாற்றுவதைத் தான் தவறு என்று கூறுகிறோம்.எங்கட மதத்தில் உள்ள குறைகளைக் கண்டு,மனம் வெறுக்கும் உங்கள மாதிரி ஆட்கள் நாத்தீகராக தான் இருப்பார்கள்.அவர்கள் இன்னொரு மதத்திற்கு மாற மாட்டார்கள்.சைவ சமயம் பிடிக்கவில்லை அதனால் மதம் மாறுகிறோம் என்று மாறினோர் எத்தனை பேர்  :unsure:
 
எங்கட கோயிலில் நடக்கும் வழிபாட்டுக்கும்,கிறிஸ்தவர்களது வழிபாட்டுக்கும் வித்தியாசம் உள்ளது.மந்திரம் விளங்கவில்லை,கோயிலுக்கு போகவில்லை,தமிழில் வழிபாடு இல்லை என்பது எல்லாம் என்னைப் பொறுத்த வரை சுத்த முட்டாள்த்தனமான கருத்து.நாங்கள் மந்திரம் கேட்கவா கோயிலுக்குப் போறோம்?...ஜயர் எந்த மொழியில் பூசை செய்தாலும்,நாங்கள் எங்கள் மனதில் உள்ள வேண்டுதல்களை,குறைகளை தமிழில் தானே கேட்கிறோம்.இங்கு லண்டனில் சில கோயில்களில் பூசை நடக்கும் போது தமிழில் தான் தேவாரம் பாடப்படுகிறது.ஜயர்மார் காசு அடிக்கினம் என்பது இன்னொரு குற்ற்ச்சாட்டு.தெரியாமல் தான் கேட்கிறேன் 1)இந்தக் காலத்தில் யார் தான் காசு அடிக்கவில்லை?  2) ஆட்கள் குடுப்பதால் தானே அவர்களும் அடிக்கிறார்கள் :lol:
 
சம்மந்தன் கொலைகாரன் என்று எப்பவோ நடந்ததை எழுதுகிறீர்கள்....அதன் உண்மை/பொய் பற்றி நான் எழுத வரவில்லை.ஏன் என்டால் எனக்கு அது பற்றிய ஆழமான அறிவு இல்லை :) ஆனால் தெரியாமல் தான் கேட்கிறேன் அமெரிக்காரன் செய்யாத கொலையா? முஸ்லீம்கள் செய்யாத கொலையா? ஏன் சிங்களவன் செய்யாத கொலையா? நாளைக்கே அவன் நாட்டைப் பிரித்து தந்தால் கொலைகாரன் நாடு வேண்டாம் என்டா சொல்லப் போறீர்கள்?
 
எதற்கெடுத்தாலும்,எல்லாத்திற்கும் விட்டு கொடுத்து,கொடுத்து தான் எதுவுமே அற்று நாதியற்று இருக்கிறோம்.ஒரு மனிதனுக்கு மொழி,இனம்,மதம்,கலாச்சாராம் முக்கியம்.சிங்களவர்கள் தமிழர் என்ட இனத்தையே அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.உங்கள மாதிரி ஆட்கள் உங்களுக்கே தெரியாமல் எங்கட மதத்தை,கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறீர்கள்....எங்களுக்குகொரு நாடில்லாமல்,தமிழ் மொழி பேசாமல்,எங்கட மதத்தை,கலாச்சாராத்தை கடைப்பிடிக்காமல் காப்பிலிகள் போல் திரிய வேண்டியது தான்.அது தான் உங்கட விருப்பமா?
 
Posted

தமிழ்ச்சூரியன்,

நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? உங்களை இந்துத்துவக் கத்தோலிக்கன் என்று நிறுவ முயற்சிக்கிறீர்களா?? அல்லது நான் கத்தோலிக்கன்தான் என்று சொன்னால் யாழ்களத்தில் உங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களா?? உங்களின் அடையாளத்தை எதற்காக இவர்களுக்காக விட்டுக்கொடுத்து சமரசம் செய்ய வேண்டும். சிலர் நீங்கள் மட்டும் நல்லவர், மற்றைய 999 கிறீஸ்த்தவர்களும் கெட்டவர்கள் என்று நற்சான்றுப்பத்திரம் வேறு கொடுக்கிறார். இவர்கள் யார் நமக்குச் சான்றிதழ் கொடுக்க ?? இவர் தமிழர்களென்றால், நாங்கள் யார்?? தமிழரில்லையா?? போர்க்களத்திலும், அரசியலிலும் நாங்கள் போராடியபோது மட்டும் நாங்கள் தமிழர், இப்போது மட்டும் தீண்டத்தகாதவர்கள், வேண்டப்படாதவர்கள் அப்படித்தானே?? 

ஒரு பெண்ணோ அல்லது ஆனோ திருமணத்திற்காக இன்னொரு மதத்தைத் தழுவுகிறார் என்றால் அது அவரது தவறு. நிச்சயம் அவரால் இன்னொரு மத அனுட்டாங்களையோ அல்லது கடவுள்களையோ தனது கடவுளாகவும் மதமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிறப்பிலிருந்து திருமணம் முடிக்கும்வரை ஒரு மதத்தை மட்டுமே வழிபட்டு விட்டு, பெண்ணிற்காகவும், ஆணிற்காகவும் திடீரென்று இன்னொரு மதத்தை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதென்பது சுத்த நாடகமேயன்றி வேறில்லை.  அப்படியொருவர் செய்கிறார் என்றால் அவர் தன்னைத்தானே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம். என்னைப்பொறுத்தவரை ஒருவரை தனது மதத்திற்கு மாறு என்று கேட்பதும் தவறு, அப்படி மாறுவதும் தவறு. 

அவரவர் தனது மத்தத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையைல் அனுசரித்துப் போவதுதான் சரி. 

அண்ணா வணக்கம் .
 
என்னை இந்து கத்தோலிக்கன் என்று எந்த விதத்திலும் காட்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை ........நான்  பிறப்பால் கத்தோலிக்கன்  இருந்தாலும் ஒரு தமிழனாக எனக்கு தரப்பட்ட பொறுப்பை சரிவர செய்து கொண்டிருக்கிறேன் ............அத்தோடு மதம் மாறுவது, திருமணம் செய்வது பற்றி கேள்வி கேட்ட உறவுகளுக்கு யதார்த்தமான ,உண்மையை ,கூறினேன் .ஆனால் அவர்கள் அதை  நம்பவும் இல் :D லை ,...........கேட்கவும் இல்லை :D ........தங்கள் பாட்டிற்கு எதோ எதோ எல்லாம் எழுதி தள்ளினார்கள் .இன்னும் இங்கே இந்த திரியில் இருந்து விலகி போவதே புத்தி என்று நினைத்து சென்றுவிட்டேன் .அவ்வளவுதான் .............  :)
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உவமானம் பிழை. எரியிற கொள்ளி நூத்து, அதில் இருந்து துளிர் எடுக்கப்பாக்கிரார்கள். மற்றும் 16 வயதுக்கு குறைந்தவர்கள் மதம் மாறமுடியாது. ஆனால் கிறித்தவ பழக்கவழக்கங்கலுக்கமைய வழர்வதை தவிர்க்க முடியாது.

கிறிஸ்தவ சேர்ச்சுகள் தமிழுக்கு/தமிழர்களுக்கு ஆற்றும் தொண்டில் கோடியில் ஒரு பகுதி கூட இந்து கோவில்கள் செய்வதில்லை.

மற்றும் துயவன் கருத்தில் உண்மையிருப்பதாக நம்பவில்லை.

ஓ மதமாற்றம் செய்ய வேண்டும் என்டால் உதவி செய்யத் தானே வேண்டும்.மதம் மாத்தினால் தானே அவர்களுக்கும்[பாதிரிமாருக்கு] காசு :icon_mrgreen:
Posted

ஏன் எல்லோரும் எங்களை 'இந்து' என்று குறிப்பிடுகிறார்களோ தெரியவில்லை! நாங்கள் 'இந்துக்கள்' இல்லை!

இதை நான் சொல்லவில்லை! காலஞ்சென்ற இந்தியப்பிரதமர் 'ராஜீவ்' காந்தியே சொல்லியிருக்கின்றார்!

இந்திய இராணுவம் வந்த காலத்தில், இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியினர், தாங்கள் 'சக' இந்துக்களைக் கொலை செய்ய வேண்டியுள்ளதே என்று ஆதங்கப்பட்டார்களாம்!

அப்போது அவர், உண்மையான இந்துக்கள் 'வைரவ சூலத்தை' வணங்குவதில்லை!

எனவே நாங்கள் 'இந்துக்கள்' அல்ல! அவரது கருத்துப்படி 'அசுரர்கள்" ! அழிக்கப்படவேண்டியவர்கள்! :wub:

இதுவே இன்று வரை, இந்திய ஆழும் வர்க்கத்தின் பார்வை!

மற்றும்படிக்குச் சண்டமாருதனதும், யாழ் வாலியினதும் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன்!  

ராஜீவ் காந்தி ஒரு இந்து அல்ல. இந்துக்களை ஏமாற்ற இந்துவாக நடித்த ஒரு வேடதாரி. 
 
காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி வரை உள்ள எந்த ஒரு இந்துக் குழந்தையும் சூலம் இந்து அடையாளம் என்று சொல்லும். அது சிவனின் ஆயுதம். காளியின் ஆயுதமும் கூட‌. 
 
இந்திய இராணுவம் அன்று வந்திருக்காவிட்டால் யாழ்ப்பாணம் சுடுகாடாகி, ஈழப்போராட்டம் 86ம் ஆண்டு முற்றுப்பெற்றிருக்கும். பல் ஆயிரம் யாழ்ப்பாணத்து இளைஞ்ஞ‌ர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். இன்னும் பல்லாயிரம் பூசாவில் இன்றும் அடைபட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
 
86ம் ஆண்டு கிழக்கு மாகாணம் பலத்த இனப்படுகொலைக்கு ஆளாகி அங்கு போராட்டம் ஒரு முடிவிற்கு வந்திருந்தது. மக்கள் அனுபவித்த இன்னல்களுக்கு அங்கு ஒரு எல்லையோ அல்லது ஒரு அடிப்படை மனித கௌரவமோ அங்கு இருக்கவில்லை.
 
அத்துலத் முதலி அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இதைச் செய்தான். இதன் பின் வவுனியாவில் இருந்து இன அழிப்பை தொடங்கி ஆனையிறவை அடைந்தான்.    
 
முல்லைத்தீவையும் மன்னாரையும் "துப்பரவு" செய்து அந்த இரண்டு மாகாணங்களிலும் விமான இறங்கு பாதைகளை போடும் முயற்சியிலும் இறங்கினான்.
 
அந்த சமயத்தில் ஈழப்போராட்டம் பளைக்கும் மூளாய்க்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்தது.  சிங்களப்படை உச்ச பலத்தில். 
 
குறுகிய ஒரு காலத்தில் வடமராட்சி வீழ்ந்தது. நாலா பக்கத்தில் இருந்தும் முன்னேறும் சிங்களப்படை யாழ்நகரை நோக்கி முன்னேறி யாழ்நகரை, அண்மைய முள்ளிவாய்க்கால் நிலைக்கு கொண்டுவருவதே அத்துலத் முதலியின் திட்டம்.
 
யாழ்ப்பாண நகரம் முள்ளிவாய்க்கால் ஆகியிருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும் ?
 
சிங்களப்படையை நிறுத்தக் கூடிய சக்தி புலிகள் அமைப்பிடம் இருக்கவேயில்லை.
 
இந்திய இராணுவம் வந்ததால் யாழ்மக்கள் தப்பினார்கள். போராட்டமும் தப்பியது.
 
அப்போது பிரபாகரனுக்கு 32 வயது. 32 வயதில் பூகோள அரசியல் தெளிவு இருந்திருக்க வாய்ப்பில்லை.
 
அப்படியானால் பிரபாகரனுக்கு இந்தியாவிற்கு எதிராக யுத்தமொன்றைத் தொடங்க ஆலோசனை யார் கூறியது ? பிராந்திய வல்லரசு ஒன்றிற்கு எதிராக யுத்தமொன்றைத்தொடங்கி வெல்லலாம் என்று அரசியல் ஆலோசனை யார் கூறியது ?
 
சிங்களப்படையிடமே பெருத்த இன அழிப்பை சந்தித்து அழிய இருந்த போராட்டத்தை பிராந்திய வல்லரசை எதிர்த்து நிற்க ஆலோசனை யார் கூறியது ?
 
எம்மக்களையும் இந்தியாவையும் பிரிக்க யார் ஆலோசனை கூறியது ?
 
எம்மக்களின் அழிவைக் கூடப் பொருட்படுத்தாமல், வெல்வதற்கான சாத்தியக் கூறுக‌ள் அறவே இல்லாத ஒரு சூழ்நிலையில் 12 லட்சம் இராணுவத்திற்கு எதிராக எம்மக்களை நிற்கவைக்க பிரபாகரனுக்கு யார் ஆலோசனை கூறியது ?
 
இந்த ஆலோசனையின் அடிப்படை நோக்கம் ஈழமா இல்லை இந்திய எதிர்ப்பு வாதமா ?
 
இந்தியாவை பலவீனப் படுத்துவதே அப்போதைய அமெரிக்காவின் திட்டம்.
 
அப்படியானால் இந்தியவிற்கு எதிரான போர் அமெரிக்கத் திட்டத்தின் ஓர் அங்கமா ?
 
அப்படியானால் அதுவரை இன அழிப்பில் அழிந்துபோன  எம்மக்கள்.. ??? இந்தியவிற்கு எதிரான யுத்தத்தில் அழிய இருக்கும் எம்மக்கள்.. ??
 
இந்த இந்திய எதிர்ப்பு யுத்த ஆலோசனை வளங்கிய ஆலோசகர் பிரபாகரனின் ஈழலட்சியத்தை "பாவித்து", எம்மக்களை பலிகடாக்களாக்கி, அமெரிக்காவின் இந்திய எதிர் திட்டத்தை நுணுக்கமாக கொண்டு போயுள்ளார்.
 
அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ??
 
(தொடரும்)  
 
.
Posted

அண்ணா வணக்கம் .
 
என்னை இந்து கத்தோலிக்கன் என்று எந்த விதத்திலும் காட்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை ........நான்  பிறப்பால் கத்தோலிக்கன்  இருந்தாலும் ஒரு தமிழனாக எனக்கு தரப்பட்ட பொறுப்பை சரிவர செய்து கொண்டிருக்கிறேன் ............அத்தோடு மதம் மாறுவது, திருமணம் செய்வது பற்றி கேள்வி கேட்ட உறவுகளுக்கு யதார்த்தமான ,உண்மையை ,கூறினேன் .ஆனால் அவர்கள் அதை  நம்பவும் இல் :D லை ,...........கேட்கவும் இல்லை :D ........தங்கள் பாட்டிற்கு எதோ எதோ எல்லாம் எழுதி தள்ளினார்கள் .இன்னும் இங்கே இந்த திரியில் இருந்து விலகி போவதே புத்தி என்று நினைத்து சென்றுவிட்டேன் .அவ்வளவுதான் .............  :)

உங்கள் மனைவிக்கு சைவ சமயம் தான் பிடிக்கும், தொடர்ந்து கோவிலுக்கு செல்வதையே விரும்புகிறார் எனும் போது அவரை மதம் மாற வேண்டாம் என நீங்கள் கூறியிருந்தால் உங்கள் மேல் எனக்கு அதிகம் மதிப்பிருந்திருக்கும். அவர் தானாக மதம் மாறியது கூட உங்களை திருமணம் செய்வதற்காக தான். ஆக மொத்தத்தில் திருமணம் என்ற ஒன்று தான் அவரை மதம் மாற்றியுள்ளது. :)

அவர் மாறா விட்டாலும் நீங்கள் அவரை திருமணம் செய்வதாக கூறியது பாராட்டத்தக்கது. அதுதான் உங்களை ஆயிரத்தில் ஒருவர் என கூறி விட்டாயிற்றே. நீங்கள் இப்படி என்பதற்காக அனைத்து கத்தோலிக்க மதத்தினரும் இப்படி என கூற முடியாது. மதம் மாறாவிட்டால் திருமணம் செய்ய மாட்டாதவர்கள் தான் அதிகம். :rolleyes:

Posted

ராஜீவ் காந்தி ஒரு இந்து அல்ல. இந்துக்களை ஏமாற்ற இந்துவாக நடித்த ஒரு வேடதாரி. .......................................:.::..........................?

(தொடரும்)

ஈசன் மதங்கள் தொடர்பான நாங்கள் அறியாத பல கருத்துக்களுடன் யாழ் களத்தில் மிகவும் ஆரோக்கியமாக சென்றுகொண்டிருக்கும் இந்த விவாத்த்தை அரசியலுக்குள் இழுத்து சென்று எல்லாவற்றையும் குழப்பிவிடாதீர்கள் பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜீவ் காந்தி ஒரு இந்து அல்ல. இந்துக்களை ஏமாற்ற இந்துவாக நடித்த ஒரு வேடதாரி. 
 
காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி வரை உள்ள எந்த ஒரு இந்துக் குழந்தையும் சூலம் இந்து அடையாளம் என்று சொல்லும். அது சிவனின் ஆயுதம். காளியின் ஆயுதமும் கூட‌. 
 
இந்திய இராணுவம் அன்று வந்திருக்காவிட்டால் யாழ்ப்பாணம் சுடுகாடாகி, ஈழப்போராட்டம் 86ம் ஆண்டு முற்றுப்பெற்றிருக்கும். பல் ஆயிரம் யாழ்ப்பாணத்து இளைஞ்ஞ‌ர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். இன்னும் பல்லாயிரம் பூசாவில் இன்றும் அடைபட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
 
86ம் ஆண்டு கிழக்கு மாகாணம் பலத்த இனப்படுகொலைக்கு ஆளாகி அங்கு போராட்டம் ஒரு முடிவிற்கு வந்திருந்தது. மக்கள் அனுபவித்த இன்னல்களுக்கு அங்கு ஒரு எல்லையோ அல்லது ஒரு அடிப்படை மனித கௌரவமோ அங்கு இருக்கவில்லை.
 
அத்துலத் முதலி அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இதைச் செய்தான். இதன் பின் வவுனியாவில் இருந்து இன அழிப்பை தொடங்கி ஆனையிறவை அடைந்தான்.    
 
முல்லைத்தீவையும் மன்னாரையும் "துப்பரவு" செய்து அந்த இரண்டு மாகாணங்களிலும் விமான இறங்கு பாதைகளை போடும் முயற்சியிலும் இறங்கினான்.
 
அந்த சமயத்தில் ஈழப்போராட்டம் பளைக்கும் மூளாய்க்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்தது.  சிங்களப்படை உச்ச பலத்தில். 
 
குறுகிய ஒரு காலத்தில் வடமராட்சி வீழ்ந்தது. நாலா பக்கத்தில் இருந்தும் முன்னேறும் சிங்களப்படை யாழ்நகரை நோக்கி முன்னேறி யாழ்நகரை, அண்மைய முள்ளிவாய்க்கால் நிலைக்கு கொண்டுவருவதே அத்துலத் முதலியின் திட்டம்.
 
யாழ்ப்பாண நகரம் முள்ளிவாய்க்கால் ஆகியிருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும் ?
 
சிங்களப்படையை நிறுத்தக் கூடிய சக்தி புலிகள் அமைப்பிடம் இருக்கவேயில்லை.
 
இந்திய இராணுவம் வந்ததால் யாழ்மக்கள் தப்பினார்கள். போராட்டமும் தப்பியது.
 
அப்போது பிரபாகரனுக்கு 32 வயது. 32 வயதில் பூகோள அரசியல் தெளிவு இருந்திருக்க வாய்ப்பில்லை.
 
அப்படியானால் பிரபாகரனுக்கு இந்தியாவிற்கு எதிராக யுத்தமொன்றைத் தொடங்க ஆலோசனை யார் கூறியது ? பிராந்திய வல்லரசு ஒன்றிற்கு எதிராக யுத்தமொன்றைத்தொடங்கி வெல்லலாம் என்று அரசியல் ஆலோசனை யார் கூறியது ?
 
சிங்களப்படையிடமே பெருத்த இன அழிப்பை சந்தித்து அழிய இருந்த போராட்டத்தை பிராந்திய வல்லரசை எதிர்த்து நிற்க ஆலோசனை யார் கூறியது ?
 
எம்மக்களையும் இந்தியாவையும் பிரிக்க யார் ஆலோசனை கூறியது ?
 
எம்மக்களின் அழிவைக் கூடப் பொருட்படுத்தாமல், வெல்வதற்கான சாத்தியக் கூறுக‌ள் அறவே இல்லாத ஒரு சூழ்நிலையில் 12 லட்சம் இராணுவத்திற்கு எதிராக எம்மக்களை நிற்கவைக்க பிரபாகரனுக்கு யார் ஆலோசனை கூறியது ?
 
இந்த ஆலோசனையின் அடிப்படை நோக்கம் ஈழமா இல்லை இந்திய எதிர்ப்பு வாதமா ?
 
இந்தியாவை பலவீனப் படுத்துவதே அப்போதைய அமெரிக்காவின் திட்டம்.
 
அப்படியானால் இந்தியவிற்கு எதிரான போர் அமெரிக்கத் திட்டத்தின் ஓர் அங்கமா ?
 
அப்படியானால் அதுவரை இன அழிப்பில் அழிந்துபோன  எம்மக்கள்.. ??? இந்தியவிற்கு எதிரான யுத்தத்தில் அழிய இருக்கும் எம்மக்கள்.. ??
 
இந்த இந்திய எதிர்ப்பு யுத்த ஆலோசனை வளங்கிய ஆலோசகர் பிரபாகரனின் ஈழலட்சியத்தை "பாவித்து", எம்மக்களை பலிகடாக்களாக்கி, அமெரிக்காவின் இந்திய எதிர் திட்டத்தை நுணுக்கமாக கொண்டு போயுள்ளார்.
 
அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ??
 
(தொடரும்)  
 
.

தொடருங்கள், ஈசன்!

உண்மைகள், அவை எவ்வளவு கசப்பானதாயினும் வெளியே வரவேண்டும்!

அதுவே, எமது வருங்கால எதிரிகளையாவது, அடையாளம் காண எமக்கு உதவும்!

Posted
86ம் ஆண்டு ஈழ லட்சியத்திற்காக‌ இந்திய யுத்ததிற்கு ஆலோசனை வளங்கியவர் ஏன் 2002ம் ஆண்டு ஈழ லட்சியத்திற்கு மூடுவிழா நடத்தும் ஆலோசனை வளங்கினார் ?
 
ஞானம் பிறந்தததா அல்லது "நாங்கள் களத்தில் இறங்கிவிட்டோம், இனி ஈழம் வேண்டம்" என்று சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அவருக்கு "சிக்னல்" கிடைத்ததா ?
 
(தொடரும்)
Posted

இந்து மதத்தில் தான் சாதி.. என்று சொல்கிறவர்கள் இருக்கலாம். அவர்கள் கண்மூடிக் குருடர்கள். சாதிய அமைப்பு முறை தொழில்சார் நிலபிரபுத்துவம் சார் எழுந்து நிற்கிறதே அன்றி மதத்தால் என்பது சில மதவிரோத சிந்தனை உள்ளோரின் எண்ணப்பாடு.

கீழைத்தேய நாடுகளில்.. கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தொழில்சார்.. நில பிரபுத்துவ சாதி அமைப்புக்கள் இருந்தன. இப்பவும் அவற்றின் எச்சங்கள் உள்ளன. அது இஸ்லாத்திலும் உள்ளது. வகுப்புவாதம்.. எல்லா மதங்களை பின்பற்றுவோர் மத்தியிலும் மதம் அற்றோர் என்போர் மத்தியிலும் கூட உள்ளது. உயர் வகுப்பு.. மத்திம வகுப்பு.. கீழ் வகுப்பு என்று.. பொருண்மிய மனித இயற்றுகை வசதி அடிப்படையிலான பாகுபாடுகளும் உள.

-----

----

சாதியம்.. வகுப்புவாதம்.. மையவாதம்..பொருண்மிய வாதம்.. ஆட்சியவாதம் என்பவை.. ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்து கட்டி எழுப்பட்டுதல் உண்மையில்.. இவ்வாறான வாதங்களை முன்வைப்போருக்கு.. மக்களை குழப்பி விட ஒரு வழியாக உள்ளதே அன்றி.. இவற்றின் பின்னால் உள்ள யதார்த்தச் சூழல் என்பது வேறெங்கோ முளைவிட்டு.. விருட்சமாகி உள்ளதை சரியான ஆழமான பார்வையால் மிக எளிதாகக் கண்டுவிடலாம். :icon_idea::)

அருமையான கருத்து.

மதம் மாறுவது, மாற்றுவது பற்றி கதைத்தால் உடனே சாதீயத்தை கொண்டு வந்து புகுத்தி சைவ சமயத்தை கேவலப்படுத்துகிறார்கள். (மற்றைய மதத்தில் சாதீய, வர்க்க முறைகள் இல்லாத மாதிரி..) அதே போல் தமிழீழத்தை விட்டு கிறிஸ்தவர்களை விரட்ட போகிறீர்களா என நாம் நினைக்காத ஒன்றை கொண்டு வந்து புகுத்தி திசை திருப்புகிறார்கள். இது சைவ சமயத்தவர்களை மற்றவர்கள் மதமாற்றுவது தொடர்பான கருத்துக்களை பேச விடாமல் செய்வதற்கும் அரசியல் ரீதியாக மக்களை குழப்பி விடுவதற்கும் பயன்படுத்தும் உத்தி.

சைவ சமயத்தவர் முழுக்க வேறு மதங்களை தழுவிக்கொண்டு சென்றால் காலப்போக்கில் சைவ சமயம் இல்லாமலேயே போய் விடும். அவ்வாறு நடந்தால் அது பற்றி இவர்கள் கவலைப்பட போவதில்லை. மதம் மாற்றுகிறார்கள் என்றால் மதமாற்றாத நிலையை கொண்டு வர நினைப்பதை விடுத்து அது பற்றி யாராவது பேசினால் அவர்களை கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்கள் போல் காட்டுகிறார்கள்.

கடவுள் இருக்கிறார் என நம்புபவன் இந்த சமயத்தில் கடவுள் இல்லை, மற்ற சமயத்தில் தான் கடவுள் இருக்கிறான் என கூற மாட்டான். அவ்வாறு கூறினால் அவன் ஏதோ ஒரு தேவைக்காக அவ்வாறு கூறுகிறான் அல்லது மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளான் என்றே அர்த்தம்.

ஒவ்வொரு மதத்தினரையும் (அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ) அவரவர் மதத்தில் சுயாதீனமாக இருக்க விடுவதே சிறந்தது. வேற்று மதத்தினரை காதலிப்பவரோ அல்லது பேசி திருமணம் செய்ய முயற்சிப்பவரோ தனது காதலன்/காதலியை மதமாற்ற கூடாது. அவ்வாறில்லாமல் மதம் மாற்றியே திருமணம் செய்வேன் என்ற கொள்கை இருந்தால் வேற்று மதத்தவரை காதலிக்கவோ பேசவோ கூடாது. எனது கடவுள் தான் கடவுள் உனது கடவுள் கடவுளில்லை என்று கூறி பணத்துக்காகவும் பதவிக்காகவும் அடுத்தவனை மதம் மாற்றுவதும் தவறு.

இல்லை மதங்களே வேண்டாம் என்றால் மத சார்பற்ற தன்மையை உருவாக்க வேண்டும். மதசார்பற்ற முறையில் திருமணங்களை நடத்த வழிவகுக்க வேண்டும். ஆனால் என்ன ஒன்று, மதசார்பற்ற பிரான்சில் கூட எமது தமிழர்கள் மதம் மாற்றுவித்து திருமணம் செய்விக்கிறார்கள். :huh:

தமிழனுக்கு ஒரு சரியான தலைவன் இருந்தால் தான் அனைத்து வழிகளிலும் மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றுவோருக்கு (சைவ சமயத்தவர்கள் உட்பட) முடிவு வரும். :rolleyes:

எனது கடவுள் உனது கடவுள் என சண்டை பிடிக்கும் யாரும் எமது மக்கள் அழியும் போது எந்த கடவுளும் காப்பாற்ற வரவில்லை என்பதை மறந்து விடாதீர்கள். :) என்னை பொறுத்தவரை கடவுள் என்பதே பொய். ஒவ்வொரு மதத்தவருக்கும் உள்ள புராணக்கதைகள் கட்டுக்கதைகளாக இருக்கும். அல்லது உண்மை சம்பவத்தை திரித்து எழுதிய புனைவு கதைகளாக இருக்கும். :)

ஆனால் கடவுளை நம்புவோர் கடவுள் ஒன்று, அதை வணங்குவோர் முறை வேறு என ஓர் புரிதல் நிலையை உருவாக்கி ஒவ்வொரு மதத்தவரையும் சுயாதீனமாக இயங்க விடுங்கள். :rolleyes:

Posted

140000 தமிழரை எங்கே பௌத்தர்கள் கொலை செய்தார்கள்? அவர்கள் என்ன சிங்கள மொழியை பேசிய பௌத்தர்களா?

1.இலங்கையில் கொலை செய்தார்கள். அதை இன்னும் கேள்விப்படவில்லையா? 

2.மகாநாம பௌத்தர்கள் பேசுவது சிங்களம் மட்டுமே.

பௌத்தர்கள் கொலை வெறியர்கள், பிரபல்ய குற்றவாளிகள் என்பதை நாடு, நாடாக பட்டியல் இட்டு பருத்தித்துறை எம்.பி துரை ரத்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அது மகாநாம பௌத்தர்களுக்கு மட்டும் அல்ல எல்ல பௌதத்ர்களுக்குமே. அறிவில்லாத சிலர் தமிழ் மக்களையும் இந்த பௌத்ததிற்கு மாற்ற வேண்டும் என்று ஈனத்தனமாக யாழில் எழுதினார்கள். ஆனால் படித்த சிங்களவர் இன்று நாட்டை அரச குடும்பம் கைஜாக் பண்ணியமை மகாநாம புத்தத்தை வைத்து என்றதை ஏற்றுக்கொள்வதால் அவர்கள் இலங்கையில் மகாநாம புத்தம் அழிக்க படவேண்டும் என்று கருத்துக்கள் வைக்கிறார்கள். இதையே தான் கட்டுக்கதையான மகாநாம கதையை நமபி தமிழ்ரை ஒடுக்கிய துட்ட கைமுனு என்ற துட்ட அரசனாக மகிந்தா தன்னை நிலை நிறுத்துவதை தடுக்க விக்கினேஸ்வரன் இலங்கை சரித்திரம் அரிஞர்களால் எழுதப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பௌத்தர்கள் அன்று, இன்று நாளையும் கொலைகாறர்களாக, காமுகர்களாக, ஏமாற்றுக்காரர்களாக, நம்பிக்கைத்துரோகம் மிக்கவர்களாக  மட்டும் தான் இருக்கிறார்கள். இது மகாவம்சம் முழுவத்திலும் சொல்லப்படும் கதைடதே நேரம் மனத்தால் பேடிகளான சிங்களவர் சேர ஆண்களை மட்டும்த்தான் போரில் பாவித்தார்கள். அதே நேரம் அமெரிக்கா, இந்தியா வென்ற போரை வெடி கொழுத்தியும் கொண்டாடுவார்கள். அரச குடும்ப்பம் சிங்களவருக்கு தன்னை துட்ட அரசனாக காட்டுவதே சரித்திரம் முழுக்க மகாநாம பௌத்தர்கள் விரும்புவது கொலை, கொள்ளை, களவு, துட்டத்தனம் என்பதாலேயே. இது சரியாக கடத்தப்பட்டோர் ஒன்றியத்தின் மக்களை அரசு அடித்து உதைது தனக்கு சாட்சியாக ஜெனிவா அழைத்து செல்வது போன்றது. 

Posted

ஓ மதமாற்றம் செய்ய வேண்டும் என்டால் உதவி செய்யத் தானே வேண்டும்.மதம் மாத்தினால் தானே அவர்களுக்கும்[பாதிரிமாருக்கு] காசு :icon_mrgreen:

ஆம் பாதிரிக்கு காசு. உங்களுக்கு வாழ்வு.

வின், வின், சிச்சுவேஸன்னு.. கிறிஸ்தவர்களாக மாறுங்கள். மனிதர்களாக வாழுங்கள். ஆளை ஆள் காட்டிகொடுத்து வாறவன் போறவனிடம் எல்லாம் தர்மஅடி வாங்கியதை தவிர இந்துவா இருந்து என்னத கிழித்தீர்கள்.

Posted

 அதுதான் உங்களை ஆயிரத்தில் ஒருவர் என கூறி விட்டாயிற்றே.

நன்றி :D  :lol:  1779331_223081984560710_1618605957_n.jpg

Posted

ஆம் பாதிரிக்கு காசு. உங்களுக்கு வாழ்வு.

வின், வின், சிச்சுவேஸன்னு.. கிறிஸ்தவர்களாக மாறுங்கள். மனிதர்களாக வாழுங்கள். ஆளை ஆள் காட்டிகொடுத்து வாறவன் போறவனிடம் எல்லாம் தர்மஅடி வாங்கியதை தவிர இந்துவா இருந்து என்னத கிழித்தீர்கள்.

நாங்கள் காட்டிகொடுத்தது கிடையாது.  நீங்கள் காட்டிகொடுத்திருந்தல் நீங்கள் மாறிடுங்க.

கருணா மாதிரி நல்ல முகமதுவாக மாறினீர்களானால் மிஞ்சி இருந்தாலும் ஒழுங்கான கடைசி இந்துவாக ஒருவன் மிஞ்சியிருப்பான். 

Posted

மதத்திற்கான விவாதங்கள் சுவாரசியமாக இருந்தன.

தனிப்பட்டமுறையில், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ஆனால் எமக்கு மேலான ஒரு சக்தி இருப்பதை நம்புகின்றேன். அதனால் அனுதினமும் காலை எழுந்தவுடன் விபூதி இட்டு குங்குமம் வைத்து கடவுளைத் தொழ மறப்பதில்லை. :D ஒவ்வொருமுறை முகம் கழுவும்போதும் இதே முறைகளைப் பின்பற்றத் தவறுவதில்லை. இதை ஒரு தியானப்பயிற்சிபோல் செய்து வருகிறேன். :huh:

ஆதி தமிழன் இயற்கையை வழிபட்டான் என்று படித்திருக்கிறோம். மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த‌ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், புயல், மழை போன்றவற்றை வணங்கியிருக்கவே சந்தர்ப்பம் உண்டு. ஏனென்றால் அவனால் கட்டுப்படுத்த முடியாதவையாக அவை இருந்தன. அதே சமயம் ஒரு எலியையோ அன்றி பூனையையோ வணங்கியிருக்க மாட்டான். காரணம் இலகுவானதுதான். :D

கல்லில் ஆயுதங்கள் செய்ய மனிதன் கற்றுக்கொண்டது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் நாற்பத்தெட்டாயிரம் ஆண்டுகள் இறைவன் அவனைக் கைவிட்டது எவ்வாறு? கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள்தான் கிறீஸ்தவமும், இஸ்லாமும் தோன்றி இன்று உலகில் பெரிய மதங்களுள் இரண்டாக உருவெடுத்துள்ளன‌.

அடுத்ததாக இந்து மதத்திற்கு வருவோம். இந்துக் கோயில்களின் கோபுர அமைப்பும், எகிப்தின் பிரமிட் அமைப்பும், தென்னமெரிக்காவின் மாயன்களின் பிரமிட் அமைப்புக்களும் ஏறக்குறைய ஒரே வடிவம் கொண்டவை. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இவை ஏன் ஒத்த உருவ அமைப்பைக் கொண்டுள்ளன? இவ்வாறான ஒரு உருவ அமைப்பை மனிதன் உருவாக்குவதற்கான காரணி எது?

அவுஸ்திரேலியாவில் வாழும் புங்கையைக் கேட்டால் எல்லாம் அவன் செயல் என வானத்தைப் பார்த்துக் காட்டுவார். :D அதே சமயத்தில் அதே கேள்வியை கனடாவில் உள்ள வல்வை அக்காவைக் கேட்டால் எல்லாம் மாரியாத்தாவின் செயல் என்று வானத்தைக் காட்டுவார். :lol: இருவருமே கடவுள்களையே குறிப்பிட்டார்கள். ஆனால் இவர்கள் சுட்டிக்காட்டிய திசைகள் முற்றிலும் எதிர்த்திசைகளில் இருக்கும். ஆக கடவுள் இருப்பதாக சொல்லப்படும் மேலுலகம்தான் எங்கே? :unsure:

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், பூவுலகுக்கு வந்த கடவுள்கள் வெளியேறிச் சென்ற ஊர்திகள் ஈர்ப்புவிசையை மீறி வெளியேறிச் சென்றிருப்பார்கள். இது அவுசில் நடந்தாலும், கனடாவில் நடந்தாலும் வானத்தை நோக்கித்தான் மனிதன் கையைக் காட்டியிருப்பான். கோயில்கள், பிரமிட்டுகளின் உருவ அமைப்பும் கடவுளர்கள் வந்து சென்ற ஊர்தியின் அமைப்பிலேயே பின்னாட்களில் கட்டப்பட்டிருக்கும்.

எகிப்தின் ஃபெரோக்கள் மேற்பட்ட ஒரு நிலையை (higher realms) அடைவதற்காக பிரமிட்டுகளைக் கட்டியதாக வரலாறு சொல்கிறது. அதாவது இறந்தபின் பிரமிட்டுக்குள் படுத்துக் கொண்டால் கடவுளர்கள் எவ்வாறு ஊர்தியில் வானம் நோக்கிச் சென்றார்களோ அவ்வாறே தாங்களும் மேலுலகுக்குச் செல்லமுடியும் என நம்பினார்கள். கோயில் கோபுரங்களுக்கும் அதுவே காரணமாக அமைய வாய்ப்பு உண்டு.

ஆதி தமிழனுக்கு இவ்வாறான அனுபவங்கள் ஏற்படவில்லை என நினைக்கிறேன். அதனால்தான் இயற்கை வழிபாட்டுடன் நிறுத்திக்கொண்டான். கோபுரங்கள் அமைக்கப்பட்டமை சமய ஊடுருவல்கள் நிகழ்ந்த பின்னாட்களில்தான் என்பதுவும் உண்மை.

இதற்குள் தமிழன் சமண‌ மதமா, புத்த மதமா என்கிற ஆராய்ச்சி தேவையற்றதுதானே.. :D

பின்குறிப்பு: நான் இங்கே கடவுளர்கள் என்று குறிப்பிட்டதை வேற்றுக்கிரகவாசிகள் என்று மாற்றிப் படிக்கவும். :D

Posted

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், பூவுலகுக்கு வந்த கடவுள்கள் வெளியேறிச் சென்ற ஊர்திகள் ஈர்ப்புவிசையை மீறி வெளியேறிச் சென்றிருப்பார்கள். இது அவுசில் நடந்தாலும், கனடாவில் நடந்தாலும் வானத்தை நோக்கித்தான் மனிதன் கையைக் காட்டியிருப்பான். கோயில்கள், பிரமிட்டுகளின் உருவ அமைப்பும் கடவுளர்கள் வந்து சென்ற ஊர்தியின் அமைப்பிலேயே பின்னாட்களில் கட்டப்பட்டிருக்கும்.

-----

-----

பின்குறிப்பு: நான் இங்கே கடவுளர்கள் என்று குறிப்பிட்டதை வேற்றுக்கிரகவாசிகள் என்று மாற்றிப் படிக்கவும். :D

அண்ணா, நீங்கள் கூறுவது கிட்டத்தட்ட science hall இல் குமரன் சேர் எமக்கு physics படிப்பிக்கும் போது சொன்னது போன்ற ஒரு கருத்து. :D:)

அதாவது பூமியிலுள்ளவர்களுக்கு கிட்டத்தட்ட 70-100 ஆயுட்காலமாக இருப்பது போல் வேற்றுக்கிரகவாசிகளுக்கு (அங்கு யாரும் வசித்தால்) ஆயுட்காலம் அதிகமிருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக. (இதற்கு விளக்கங்கள் கூறினார், மறந்து விட்டேன்.) எனவே அவர்கள் நீண்ட காலம் இளமையாக இருந்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு ஒரு சின்னப்பையன் பூமிக்கு வந்து விட்டு மீள சென்று விட்டு சில காலம் கழித்து திரும்பவும் பூமிக்கு வரும்போது அதே இளமையுடன் இருப்பதை பார்த்து விட்டு அவனை கடவுளென (முருகன் என) எம்மக்கள் நினைத்து வழிபட்டிருப்பார்கள் என ஒரு தடவை பகிடியாக கூறினார். (அல்லது அதை பகிடி என நான் நினைத்திருந்தேன்.)

ஆனால் அவர் பகிடியில்லாமல் உண்மையிலேயே அப்படி நினைத்து கூறிய ஒன்றாக இருக்கலாம் என உங்கள் கருத்தை பார்க்கும் போது தெரிகிறது. :rolleyes::)

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.