Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் பார்வையில் நெருப்பு

Featured Replies

வணக்கம் கள உறவுகளே நேற்று எங்கள் தொடர் மாடிக்குடிடியிருப்பில் நடைபெற்ற ஒரு பாரிய தீவிபத்தையும், அதில் இருந்து நான் கற்றுக்கொண்ட அனுபவங்களையும், ஒரு தீவிபத்து நடைபெற்றால் நாங்கள் என்னென்ன நடவடிக்களை மேற்கொள்ளவேண்டும் என்ற எனக்குத் தெரிந்த விடையங்களையும்  உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன். இந்தப் பதிவானது எல்லோர் மனதிலும் தீ பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது ஆவல்.

 

 

trans21_4_202_44_13640_1_1.jpg

நாங்கள் இருக்கும் நகரம் பாரிஸின் மையப்பகுதியில் இருந்து எறத்தாழ 28 கி மீற்றர் தொலைவிலும், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 3 கி மீற்றர் தொலைவிலும்
அமைந்துள்ளது.  நாங்கள் குடியிருக்கும் தொடர்மாடிக்குடியிருப்பு 3 கோபுரங்களை (tower)  கொண்ட  , 16 மாடிகளை உள்ளடக்கிய தொடர்மாடிக்குடியிருப்பாகும். ஒவ்வொரு கோபுரத்திலும் ஏறத்தாழ 80 குடும்பங்கள் வசிக்கின்றன. எங்களது வீடு 5 ஆவது மாடியில் அமைந்துள்ளது . தீவிபத்து நடைபெற்றது எமது வீட்டுக்கு நேர் மேலாக 8 ஆவது மாடியிலாகும் . நேற்று மாலை 18 h 45 மணியளவில் அந்த வீடு தீப்பிடித்தது. ஏழு மணிக்குள் ஏறத்தாழ 180 தீயணைப்பு படைவீரர்கள் எமது தொடர் மாடியில் புகுந்து விட்டார்கள் . 6 , 7 , 9 ஆவது மாடியில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார்கள் . எங்களை வெளியேற வேண்டாம் என்றும் எமது பல்கணியில் போய் நிற்குமாறு கூறிவிட்டர்கள் . நாங்கள் பல்கணியில் நிற்கும்பொழுது தீயணைப்பு படையில் ஒரு பகுதி வீட்டில் எழுந்த தீயை கட்டுப்படுத்த போராட , ஒருபகுதி வீட்டில் காயப்பட்டவர்களை காப்பற்றப் போராடியது . இரண்டும் ஒரேநேரத்தில் நடைபெற்பொழுது அந்த இடம் முழுவதும் ஒரே புகையும் அமளிதுமளியாவும் இருந்தது . தீவிபத்து நடைபெற்ற நேரம் அந்த வீட்டில் பெற்றோர்கள் இருந்திருக்கவில்லை. 6 பிள்ளைகள் மட்டுமே இருந்தார்கள் . 3 பெண் பிள்ளைகளையும் 3 ஆண்பிள்ளைகளையும் உள்ளடக்கிய அந்தக் குடும்பத்தில் 3 பிள்ளைகளை மட்டுமே தீயணைப்பு படைவீரர்களால் காப்பாற்ற முடிந்தது. 18 வயது உடைய ஒரு பெண்பிள்ளை உட்பட மிகுதி 2 பெண்பிள்ளைகளும் இறந்து விட்டார்கள் . இன்னுமொரு பகுதி படையணி காயப்பட்டவர்களை எதிர் பக்கமுள்ள கோபுரத்தில் தற்காலிக முதல் உதவி கூடத்தை ஆரம்பித்து முதல் உதவி செய்து கொண்டிருந்தார்கள் . தீயணைப்பு படைவீரர்களில் 5 பேருக்கு மூச்சு திணறல் காயம் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம் . காயப்பட்ட குழந்தைகளை மாடிப்படியால் இறக்கி தோள் மேல் போட்டுகொண்டு எதிர்ப்புறமுள்ள கோபுரத்துக்கு முதல் உதவி அளிக்க ஓடினார்கள் . குழந்தைகளது தோல்கள் எரிகாயத்தால் நிறம் மாறி யிருந்தன . இவைகளைப் பார்த்த மைத்திரேயி பயப்படத் தொடங்கிவிட்டார்  . தீயணைப்பு படைவீரர்கள் பயன்படுத்திய காபனீர் ஒக்சைட் ( co 2 ) எமது வீட்டு வென்டிலேட்டர் ஊடாக சிறிது ரொக்சிக் வாயு கசிந்ததால்   அவருக்கு சிறிது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படத்தொடங்கியது . நான் விரைவாக அவருக்கு குளிருக்கு ஜாக்கட்டை போட்டு தொடர்ந்து அவரை பல்கணியிலேயே வைத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவர் சாதாரண நிலைமைக்கு வந்து விட்டார் .சிறிது நேரத்தில் பாரிய வெண்டிலேட்டர்களை பொருத்தி கட்டிடத் தொகுதியில் இருந்த அசுத்தக்காற்ரை  வெளியே இழுத்துக்கொண்டிருந்தார்கள் .அப்பொழுதான் நான் திண்ணையில் எழுதத் தொடங்கினேன் .முதலில் சுவியண்ணை போன் பண்ணினார் . பின்னர்  விசுகர் பல முறை போன் பாண்ணினார். பின்பு சாத்திரி ,கொழுவன், சுபேஸ் ,சுமே என்று மாறி மாறி நிலைமைகளை விசாரித்தார்கள். வீட்டில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்று யாருக்குமே தெரியாது . காயப்பட்ட குழந்தைகள் கண் முழித்தாலே உண்மை நிலபரம் தெரிய வரும் . அத்துடன் தீயணைப்பு படை வீரர்களின் கருத்துப்படி கட்டிடத்தில் பாரிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக தெரியவருகின்றது. அதாவது மாடிப்படிகளில் இருக்கும் "கொலோன் சேஷ்" ( colonne seche ) என்று அழைக்கபடும் பொது தண்ணீர் வழங்கும் குழாயில் தண்ணீர் இருந்திருக்கவில்லை .

 

colonne-seche-528x415.jpg

 

பின்பு கீழே தரையில் இருக்கும்" கொலோன் இமிட்" என்று அழைக்கபடும் பொது தண்ணீர் வழங்கும் குழாயினாலேயே தண்ணீர் மேலே எடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது . பொது தண்ணீர் வழங்கும் குழாயில் தண்ணீர் இல்லாதது  பாரதூரமான விடையமாகும் . இதனால் இந்த கட்டிடத்தை நிர்வகிக்கும் சிண்டிகேட் பாரிய சட்டச் சிக்கல்களையும் பெருமளவிலான தண்டப்பணத்தையும் அரசுக்கு செலுத்த வேண்டி வரும்.

சரி இனி இந்த தீ எப்படி ஏற்படுகின்றது என்று பார்ப்போம் . தீ பொதுவாக மூன்று படி நிலைகளில் தனது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

 

triangle_de_feu1.jpg

 

01 எரிபற்று நிலையில் உள்ள பொருட்கள் ( combustible ) பெட்ரோலியப் பொருட்கள் மரம் துணிகள் பிளாஸ்ரிக் பொருட்கள் எண்ணை வகைப்பொருட்க்கள் )
02 ஒக்சிஜன்    comburant , combustion
03 தீயினால் ஏற்படும் எதிர்விளைவு ( அதிக அளவு வெப்பம் )

வீட்டிலே சிறிய அளவில் ஏற்படும் தீவிபத்துக்களை தடுக்க தீயணைப்புக் கருவிகள் உள்ளன இவை எக்ஸ்ரங்க்ரர் என்று அழைக்கப்படும் இவை 3 பகுதிகளாகத் தரம் பிரிக்கப்படும் அவையாவன,

 

57625-panneau-extincteur-classe-de-feu-e

 

01 A

 

02 AB

 

03 ABC

 

சிறிய அளவில் ஏற்படும் தீயை கட்டுபடுதுவதற்கு இலகுவான விளக்கம் என்னவென்றால், இந்த தீயணைப்பு கருவிகளில் காபனீர் ஒக்சைட் (co2 )அதிஉயர் உறை நிலையில் சேமிக்கப்ட்டிருக்கும் . நீங்கள் தீயை  காணுமிடத்து இதன் முனையில் உள்ள பாதுகாப்பு கிளிப்பை உடைத்து விட்டு மேலே இருக்கின்ற பொத்தானை அழுத்தும் பொழுது காபனீர் ஒக்சைட் நுரையாக வெளிவரும். இது அந்த தீ விபத்து நடந்த இடத்தில் உள்ள ஒக்சிஜனை இல்லாமல் செய்யும் . அப்பொழுது  பொழுது தீ தானாக அணைந்து விடும்.

 

pompiers.jpg

 

பெரிய தீ விபத்து ஏற்படுத்தும் பொழுது அருகில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்பொழுது உங்கள் விலாசத்தை விபரமாகத் தெரியப்படுத்த வேண்டும் .உங்கள் பெயர் வீட்டு இலக்கம் ,வீதியின் பெயர் ,எத்தனையாவது மாடி ,கதவு இலக்கம் , நுழை வாயிலில் பாதுகாப்பு இலக்கம் இருந்தால் அதன் விபரம் , போஸ்டல் கோட் , போன்றவற்றை தெளிவாகத் தெரியப்படுத்தவேண்டும் . நீங்கள் அறிவித்து 5 நிமிடத்தில் அவர்கள் இடத்திற்கு வந்துவிடுவார்கள் . அத்துடன் அவசர வைத்திய சிகிச்சை பிரிவுக்கும் அறிவிக்க வேண்டும்.

சரி அவர்கள் வர முன்பு நீங்கள் எந்தக்காரணத்தைக் கொண்டும் பதட்டப்படாதீர்கள் . ஏனெனில் உங்கள் பதட்டம் மற்றவர்களுக்கும் தொற்றிவிடும். முதலில் நீங்கள் செய்யவேண்டியது எல்லோரையும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற வேண்டும். காயப்பட்டவர்களைக் கண்டால் அவர்களுக்கு முதல் உதவி அளிக்க தயங்காதீர்கள் . ஒருவருக்கு மூச்சுத் திணறல் அல்லது இதயம் தனது செயற்பாட்டை நிறுத்தியிருந்தால் உடனடியாக செயற்கை சுவாசமும் செயல் இழந்த இதயத்தை மீண்டும் செயல் படுத்த கார்டியாக் மசாஜ் கொடுக்கவேண்டும். அப்பொழுது பாதிக்கப் பட்டவர் உயிர் பிழைக்க வாய்ப்புகள் உண்டு . கார்டியாக் மசாஜ் செய்யும் பொழுது பாதிக்கப்பட்டவரின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு கைகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக்கொண்டு , 30 தடவைகள் விரைவாக நெஞ்சை அமத்த வேண்டும். அதன் பின்பு பாதிக்கப்பட்டவரின் வாயில் உங்கள் வாயை வைத்து பலமாக ஊதவேண்டும் . அப்பொழுது செயல் இழந்த இதயம் செயற்பட ஆரம்பிக்கும் . இவைகள் யாவும் இலகுவான முதல் உதவி முறைகளும் நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்கவேண்டியவையுமாகும்

 

Formation-SST-2.jpg

எங்களுக்கு நேரடியாக தொலைபேசியில் கதைத்து ஆறுதல் படுத்திய விசுகண்ணை , சுவியண்ணை சாத்திரி , கொழுவன், சுபேஸ் , மற்றும் சுமேரியர் திண்ணையில் உரையாடிய அனைத்து கள உறவுகளுக்கும் நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் .
 

இன்று தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தி

 

http://www.francetvinfo.fr/replay-jt/france-3/12-13/jt-12-13-samedi-15-fevrier-2014_525091.html

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி கோ...நீங்களும்,மைத்திரேயியும் தைரியமாய் இருப்பீர்கள்/இருக்க வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், கோ!

 

இதனால் ஏற்பட்ட மன உழைச்சலிலிருந்து நீங்களும், மைத்திரேயியும் விரைவில் விடுபட வேண்டும்!

 

எமது மக்களின் 'பார்வை' மாற வேண்டும்!

 

இங்கும் முருகன் கோவிலில், 'எள்ளெண்ணை' எரித்த ஒருவர், தனது பாவங்களைக் கழுவிய திருப்தியுடன், எண்ணைச் சட்டியை அப்படியே கோவில் சந்நிதானத்தில் நிலத்தில் வைத்துவிட்டு வீட்டுக்குப் போய் விட்டார்! 

 

அது முருகனைக் கும்பிட்ட ஒரு வயோதிப மூதாட்டியின் சேலையில் பற்றிப் பின்னர் அவரது உடல் முழுவதையும் எரித்து விட்டது! :o

 

அங்கு நின்ற பக்தர்கள் ( ஒரு மருத்துவர் உட்பட) கூறியது இது தான்!

 

நல்ல சாவு, இப்படிப் போவதற்கு மனுசி கொடுத்து வைச்சிருக்க வேண்டும்! :wub:

  • தொடங்கியவர்

அனுபவ பகிர்வுக்கு நன்றி கோ...நீங்களும்,மைத்திரேயியும் தைரியமாய் இருப்பீர்கள்/இருக்க வேண்டுகிறேன்

 

வருகைக்கும் உங்கள் ஆறுதலுக்கும் மிக்க நன்றி ரதி அக்கை .

 

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றிகள், கோ!

 

இதனால் ஏற்பட்ட மன உழைச்சலிலிருந்து நீங்களும், மைத்திரேயியும் விரைவில் விடுபட வேண்டும்!

 

எமது மக்களின் 'பார்வை' மாற வேண்டும்!

 

இங்கும் முருகன் கோவிலில், 'எள்ளெண்ணை' எரித்த ஒருவர், தனது பாவங்களைக் கழுவிய திருப்தியுடன், எண்ணைச் சட்டியை அப்படியே கோவில் சந்நிதானத்தில் நிலத்தில் வைத்துவிட்டு வீட்டுக்குப் போய் விட்டார்! 

 

அது முருகனைக் கும்பிட்ட ஒரு வயோதிப மூதாட்டியின் சேலையில் பற்றிப் பின்னர் அவரது உடல் முழுவதையும் எரித்து விட்டது! :o

 

அங்கு நின்ற பக்தர்கள் ( ஒரு மருத்துவர் உட்பட) கூறியது இது தான்!

 

நல்ல சாவு, இப்படிப் போவதற்கு மனுசி கொடுத்து வைச்சிருக்க வேண்டும்! :wub:

 

வருகைக்கும் ஆறுதலுக்கும் மிக்க நன்றி புங்கை .ஆனால் ஒரு சில நாட்களாக நித்திரை போய்விட்டது என்னவோ உண்மைதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் கவனித்தேன்.. கோமகன் குடும்பத்தினர் பாதிப்பின்றி மீண்டது ஆறுதல் தருகிறது. நெருப்பு எரிய ஆரம்பித்தவுடன் எச்சரிக்கை ஒலி வரவில்லையா??

அனுபவப் பகிர்வு தெளிவாகவும் தகவல்களுடனும் இருக்கு. ஒரு பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படாதது ஆறுதலாக இருக்கு. பாவம் இறந்த அந்த 3 பெண் பிள்ளைகளும். பிள்ளைகளை தனிய விட்டுவிட்டு வெளியில் கனநேரம் போவது மிகவும் ஆபத்தானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்சூரன்ஸ் செய்திருந்தால் ஒரு பிரச்சனையுமில்லை....கதையள் இப்ப அப்பிடித்தான் போகுது.....பிள்ளையள் செத்தாலும் 2லச்சம் 3லச்சம் வருமாம்.......

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோம்ஸ் அண்ணா. உங்களுக்கோ, அக்காவுக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாதது மகிழ்ச்சியான விடயம்.

கோமகன் பாதிப்பு இன்றி தப்பியது மகிழ்ச்சி... உங்கள் தீயணைப்பு பற்றிய விளக்கங்கள் எல்லோருக்கும் மிக உதவியான அறிவை ஏற்படுத்தும், நன்றி. அத்துடன் ஒவ்வொரு வீட்டிலும் கடைசி இரண்டு புகை அபாய அறிவிப்பு கருவியுடன் ஒரு காபனீர் ஒச்சைட் வாயு உணர்திறன் அபாய அறிவிப்பு கருவியும் அத்தியா அவசியமாக பொருத்தி இருக்க வேண்டும். குறிப்பாக சமையல் அறையின் அருகே பொருத்த வேண்டும்..விலை அதிகமில்லை.. இந்த அறிவு இல்லாதவர்கள் தீ அணைப்பு நிலையங்களுடன் தொடர்பு கொண்டு இலவசமாக அவர்கள் மூலம் பொருத்தலாம். 1. smoke alarm 2. carbon mono oxide alarm (co gas)

  • தொடங்கியவர்

இன்றுதான் கவனித்தேன்.. கோமகன் குடும்பத்தினர் பாதிப்பின்றி மீண்டது ஆறுதல் தருகிறது. நெருப்பு எரிய ஆரம்பித்தவுடன் எச்சரிக்கை ஒலி வரவில்லையா??

 

இல்லை , இதுவரை காலமும் வீடுகளில் அபாய மணி ஓலிப்பு அலாரம் இருக்கவில்லை . இந்த வருடத்தில் இருந்து தான் சகல வீட்டு உரிமையாளர்களும் அன்ரி ஸ்மோக் அலாரம் பூட்டவேண்டும் என்ற சட்டவாக்கம் அமூல்படுத்தப் பட்டுள்ளது . 4 நாட்களுக்கு முதல் தான் இந்த அலாரத்தை அவசர அவசரமாகப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார்கள் . லஞ்சங்களை வாங்கிகொண்டு ஒரு பொது தண்ணீர் வழங்கிக் குழாயில் தண்ணீர் வருவதை வருடாவருடம் பரிசோதனை செய்யாதவர்கள் இதில் கவனமாய் இருப்பார்களா என்ன ?? இவர்களின் ( கொண்டோ சொசாயிற்றியின் )   பொறுப்பற்ற செயலால் 3 உயிர்கள் அநியாயமாகப் போய் விட்டன . வரவுக்கும் ஆறுதலுக்கும் நன்றி இசைக்கலைஞ்ஞன் .

 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை , இதுவரை காலமும் வீடுகளில் அபாய மணி ஓலிப்பு அலாரம் இருக்கவில்லை . இந்த வருடத்தில் இருந்து தான் சகல வீட்டு உரிமையாளர்களும் அன்ரி ஸ்மோக் அலாரம் பூட்டவேண்டும் என்ற சட்டவாக்கம் அமூல்படுத்தப் பட்டுள்ளது . 4 நாட்களுக்கு முதல் தான் இந்த அலாரத்தை அவசர அவசரமாகப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார்கள் . லஞ்சங்களை வாங்கிகொண்டு ஒரு பொது தண்ணீர் வழங்கிக் குழாயில் தண்ணீர் வருவதை வருடாவருடம் பரிசோதனை செய்யாதவர்கள் இதில் கவனமாய் இருப்பார்களா என்ன ?? இவர்களின் ( கொண்டோ சொசாயிற்றியின் )   பொறுப்பற்ற செயலால் 3 உயிர்கள் அநியாயமாகப் போய் விட்டன . வரவுக்கும் ஆறுதலுக்கும் நன்றி இசைக்கலைஞ்ஞன் .

 

இது நீண்ட காலமாக, பாரிஸ் பக்கத்தில் நடக்கிறது போல உள்ளது கோமகன்!

 

எனது உறவினர்களில் திருமனத்திற்காக ஒரு முறை 'பாரிஸ்' பக்கம் வந்திருந்தேன்! திருமண விருந்துக்கான அத்தனை உணவுகளும், நீங்கள் சொல்லுவது போன்ற, அடுக்குமாடி வீடுகளில் தான் சமைத்துப் பரிமாறப்பட்டது. காஸ் சிலிண்டர்கள், உபயோகிக்கக்கூடாது என்று சட்டம் இருந்தது என நினைக்கிறேன்!

 

இதில் உள்ள ஆபத்துக்களை நான் சொல்லிக்காட்டியபோது,  ம்ம்ம்...... அது ஒண்டும் பிரச்சனை வராது என்று பதில் கூறினார்கள்! :o

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் நானும் பார்த்தேன்.....அனுபவ பகிர்வுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், கோ!

பதிவுக்கு நன்றி கோமகன். இப்படியான அனுபவ பகிர்வுகள் வரவேற்கபடவேண்டியவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.