Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின் மேற் கொள்ளப்படும் அபிவிருத்திகளை அமிர்தலிங்கம் பகீரதன் பாராட்டினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது:

Bahi_CI.jpg

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனான அமிர்தலிங்கம் பகீதரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று (19.02.14) சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொடூரமான பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை பாராட்டிய பகீர்தரன்   இனம், மதம் மற்றும் மாகாண பேதமின்றி நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுப்பதனையிட்டு ஜனாதிபதிக்கு அவர் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103264/language/ta-IN/article.aspx
  
இது போட்டோ செய்தி போட நடை பெற்ற சந்திப்பு போல் தெரிகிறது.

இவர் நுனி கதிரையில் பதட்டத்துடன் ஒப்பிக்கிறார் ஆனால் தலைவர் முகமோ எப்ப இவர் வாயை மூடுவார் என்று அங்கலாய்ப்பது போல் தெரிகிறது.

அரசரை புகழ மேர்வின் டி சில்வா ஒருவர் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் எல்லாருக்கும் நல்லா வயசு போயிற்றுது.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய காட்சி, புது பாத்திரம்.பழைய கதை. இவர் எங்கிருந்து வந்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துரோகம் என்பது இதுகளின் பரம்பரை நோய் போலும். :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பர் தானைத்தளபதி, அம்மா மாதரணி தலைவி. உவர் tena இன் (தமிழீழ தேசிய ராணுவம்) தலைவர். உவரின் இயக்கம் செய்த ஒரே ஒரு செயல், வவுனியா கே.ரி.புலேந்திரனை, கூட்டனியின் தேவைக்காக போட்டது மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துரோகம் என்பது இதுகளின் பரம்பரை நோய் போலும். :icon_idea::rolleyes:

காலம் அறிந்து

பூதம் வெளியில் வருகிறது

அதிலிருந்தே தெரியணும்

குள்ள  நரியின் தந்திரம் என்னவென்று.........

பாவம் எல்லாருக்கும் நல்லா வயசு போயிற்றுது.

தள்ளாத வயசு

ஆனால் தளராத குறி.... :(  :(  :(

(கர்ணனிடம் இருக்கும் தர்மங்களையெல்லாம் கண்ணன்  நயவஞ்சகமாகக்கேட்கும்போது

அதை அறிந்து 

கர்ணன் சொல்லும் வரிகள் இவை)

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துரோகம் என்பது இதுகளின் பரம்பரை நோய் போலும். :icon_idea::rolleyes:

காலம் அறிந்து

பூதம் வெளியில் வருகிறது

அதிலிருந்தே தெரியணும்

குள்ள  நரியின் தந்திரம் என்னவென்று.........

அமிர்தலிங்கத்துக்கு இருந்த, கொஞ்ச மரியாதையையும்.... இதுகள், கெடுத்து குட்டிச் சுவராக்கிடுங்கள் போலை இருக்கு.

உங்கட அரசியல் அறியாமையால் அவர் அப்பனை போடுவீங்கள் அதையும் அவர் சரி என்று தலையாட்டவேண்டும் .

அமிர் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் ,அது கூட தெரியாமல் தான் பல சனம் இருக்கு போல . :icon_mrgreen:

சரியான விவாதம் செய்ய  விரும்பினால்

இறுதியாக

அமிர்தலிங்கம் தமிழ் மக்களிடம் எடுத்த  வாக்கு வீதம்  எத்தனை...........???

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட அரசியல் அறியாமையால் அவர் அப்பனை போடுவீங்கள் அதையும் அவர் சரி என்று தலையாட்டவேண்டும் .

அமிர் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் ,அது கூட தெரியாமல் தான் பல சனம் இருக்கு போல . :icon_mrgreen:

தந்தை செல்வநாயகம், இறக்கு மட்டும்... தமிழர்களின் தலைவராக இருந்தார்.

அமிரையும் அதே போல் நான் நினைத்து, தமிழர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனால்... அமிரால், தாக்குப் பிடிக்க முடியாமல்... மண்டையை போட வேண்டி வந்தது, அவரின் குற்றம். :lol:

இது அடுத்த தலைவர் என்பவருக்கும்  பொருந்தும் தானே ,உதைத்தானே அமீரின் மகன் சொல்லுகின்றார்  .

  • கருத்துக்கள உறவுகள்

இது அடுத்த தலைவர் என்பவருக்கும்  பொருந்தும் தானே ,உதைத்தானே அமீரின் மகன் சொல்லுகின்றார்  .

அடுத்த தலைவர் என்று, நீங்கள் குறிப்பிடுபவர்....

தான்... தமிழீழம் கிடைத்த பின்... தனது வேலை முடிந்தது. அதன் பின் எம்மைப் போல்... வேட்டி சட்டையுடன், சாதாரண தமிழனாய் வாழ விரும்புவதாக... ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

காட்டிக் கொடுக்கும்... மாற்று இயக்கங்களால், அந்த ஆசை நிறைவேறாமல் போனதை மறைத்து... நியாயம் கற்பிக்க முயலாதீர்கள்.

இது அடுத்த தலைவர் என்பவருக்கும்  பொருந்தும் தானே ,உதைத்தானே அமீரின் மகன் சொல்லுகின்றார்  .

காட்டி கொடுப்பவர்களையும் ,தன் இனத்தை  சொந்த நலனுக்காக விற்பவனையும்  ஒப்பிடமுடியாது.

டில்லியில் இருந்த போது ஒரு கை ராஜிவ் ஓடு குலுக்கி இருந்தால் இன்று அவர்  தான் ராஜா..

இனம் வித்து வாழும் பிழைப்பு  எல்லாருக்கும் வராது

செய்தியை கவனமாக பாருங்கள். அவர் பயங்கரவாதத்தை ஒழித்ததை பாராட்டவில்லை. அபிவிருத்தியை மட்டும் தான் பாராட்டினார். தமிழர் அழிப்பு  பற்றி அவருக்கு அக்கறை இல்லை. அந்த அக்கறை தந்தை பதவியில் இருந்தால் மட்டுமே வரும்.

அவரை பொறுத்தவரை தனது தந்தையை கொலை செய்தவர்கள் புலிகள். புலிகள் இன்று இல்லாமல் விட்டாலும் அவருக்கு கவலை இல்லை. தந்தை இன்று இருந்திருந்தால் தமிழன விடுதலைக்காக அழகு தமிழில் இவரும் வீரவசனம் பேசியிருப்பார்.  எனது தந்தையே இல்லையாம் தமிழர் என்ன ஒரு கேடா?

Edited by tulpen

உலகில் மிக வீரமான தன்மானமுள்ள இனமும் தமிழினம். அதே நேரம் மிகமோசமான தன் இனத்தை காட்டிக்கொடுத்து பழிவாங்கி வயிறு வளர்க்கும் வெட்கம்கெட்ட இனமும் அதே இனம் தான்.. எமது எதிரியே இரக்கப்பட்டு திருந்தலாம், ஆனால் பழிவாங்கும் பாம்புகள் போன்று திரியும் தானும் தமிழன் தான் என சொல்லி திரியும் ஒரு புது இனம் எப்போதுதான் திருந்த போகுதுகளோ...?

  • கருத்துக்கள உறவுகள்

எண்பத்துமூன்று கலவரத்துக்குப் பின்பு அமிர்தலிங்கம் வகையறாக்கள் சென்னையில் எம் எல் ஏ காஸ்டலில் அவ்வேளைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் இடம் ஒதுக்கிக் கொடுக்கபட்டு வாழ்ந்தநேரம், இந்திய இனவழிப்பு இராணுவம் தமிழர் தேசத்தில் கால்பதித்து அட்டூழியம் செய்ய எத்தனிக்கும் வேளையில் திலீபன் அவர்கள் வீரச்சாவடைகிறார், அந்தச்செய்தியை இயக்கப்போராளி ஒருவர் எம் எல் ஏ காஸ்டலில் தங்கியிருந்த அமிர்தலிங்கம் வகையறாக்களுக்குச் சொல்ல விரைகிறார், அப்போது மாலை நேரம், தானைத்தலைவர் காரம் போட் விளையாடிக்கொண்டிருக்கிறார் அத்துடன் யோகீஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரும் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள், திலீபனது சாவுபற்ரி அவ்வேளையில் சொல்லப்படுகிறது, அப்போது தானைத்தலைவர் கூறிய பதில் "அப்படியா" என்பது மட்டுமே குயினுக்குப் பின்பு வெள்ளைக்கட்டையை போடுவதற்கு ஆயத்தமாகிறார்.

அதேவேளையில் அவர் எம் எல் ஏ காஸ்டலுக்கு அருகில் இருந்த சென்னை வாணொலி நிலையத்தில் அன்பு வழி நிகழ்ச்சியில் இந்திய இராணுவத்துடன் துதிபாடி கூறப்பட்ட கருத்துக்கள் திலீபன் சாவைச் சொன்னவரது செவிவழி கேட்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட அரசியல் அறியாமையால் அவர் அப்பனை போடுவீங்கள் அதையும் அவர் சரி என்று தலையாட்டவேண்டும் .

அமிர் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் ,அது கூட தெரியாமல் தான் பல சனம் இருக்கு போல . :icon_mrgreen:

மக்களால் தெரிவு செயப்பட்டவர்கள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்தவர்கள் ஆகி விட முடியுமா? ரொப் வோட்டும்(Rob Ford) மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் தானே?  :)

காலம் அறிந்து

பூதம் வெளியில் வருகிறது

அதிலிருந்தே தெரியணும்

குள்ள  நரியின் தந்திரம் என்னவென்று.........

தள்ளாத வயசு

ஆனால் தளராத குறி.... :(  :(  :(

(கர்ணனிடம் இருக்கும் தர்மங்களையெல்லாம் கண்ணன்  நயவஞ்சகமாகக்கேட்கும்போது

அதை அறிந்து 

கர்ணன் சொல்லும் வரிகள் இவை)

அவர் ஏன் இப்போது மகிந்தவை சந்திக்கவேண்டும். அதன் மூலம் இவர் தமிழ் மக்களுக்கு சொல்லும் செய்தி

என் அப்பன் இருந்திருந்தால் நான்  மட்டுல்ல என் குடும்பமாக மேடை மேடையாக தமிழிழுக்காக உயிர் விடும்படி முழங்கியிருப்போம். அதை கேட்டு உணர்ச்சி கொந்தளிப்பில் எமக்கு வாக்குகளை அள்ளி தந்திருப்பீர்கள். எமக்கு வாக்களிக்க வேண்டிய நீங்கள் தமிழுக்காக உயிரை விட்டுவிட்டபிறகு என் அப்பனும் இல்லாத நிலையில் உங்களை குடும்பம் குடும்பமாக போட்டு தள்ளிய மகிந்தவை அனைத்துலக விசாரணையில் இருந்த காப்பாற்ற என்னால் ஆனதை செய்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. என்னை பொறுத்தவரை எனது அப்பன் தான் முக்கியம்.எனது அப்பன் என்னை அப்படித் தான் வளர்த்தார். தமிழ் மக்க்களே நீங்கள் பிரபாகரனுக்கு பிறகும் விடுதலை என்று போராடுகின்றீர்கள். அது முட்டாள்தனம்.  என் அப்பனே இல்லாத நிலையில் விடுதலை ஒரு கேடா. என்னை போல் புத்திசாலியாக நடக்க கற்றுக்கொள்ளுங்கள். எனது குடும்பம் எப்படி அப்பன் இல்லை என்றவுடன் விடுதலை, சுதந்திரம் என்ற வாரத்தைகளை மறந்தோமோ அதை போல் உங்கள்  தந்தையை, மகனை, குடும்பங்களை போட்டு தள்ளிய மகிந்தவுடன் சேர்ந்து இவ்வாரத்தைகளை  மறப்பதே புத்திசாலித்தனம். நான் லண்டனில் படித்தவன் கூறுகிறேன் கேளுங்கள். எனது பிள்ளைகளும் லண்டனில்தான் படித்தார்கள்.  அதனால் எமது குடும்பமாக இனி மேல் அழகு  தமிழில் மேடைகளில்  உயிர் தமிழிற்கு உடல் மண்ணிற்கு என்று  முழங்க முடியாத நிலையில் உங்களுக்கு விடுதலை ஒரு கேடா?

எனது அம்மாவை பாருங்கள் அழகு தமிழில் எத்தனை உணர்ச்சிகரமாய் முழங்கியவர். இப்போது தள்ளாத வயதில் அவரால் இப்படி முழங்க முடியுமா யோசித்து பாருங்கள். அவரால் தமிழில் உணர்வாய் முழங்க முடியாத நிலையில் உங்களுக்கு விடுதலை தேவையா? நான் சொல்வதை சிந்தித்துப்பாருங்கள். மீண்டும் கூறுகிறேன் நான் லண்டனில் படித்தவன். முட்டாள் பிரபாகரன் தன் பிள்ளையை ஆபத்தின் மத்தியில் வைத்திருந்தது  போல் என் அப்பா என்னை போர்க்களத்தில் ஆபத்தின் மத்தியில் வைத்திருக்கவில்லை. ஆபத்து வர தொடங்கியவுடனேயே லண்டனுக்கு அனுப்பிவிட்டார். ஏனேனில் அவரும் ஒரு தமிழ் புத்திஜீவி.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஏன் இப்போது மகிந்தவை சந்திக்கவேண்டும். அதன் மூலம் இவர் தமிழ் மக்களுக்கு சொல்லும் செய்தி

என் அப்பன் இருந்திருந்தால் நான்  மட்டுல்ல என் குடும்பமாக மேடை மேடையாக தமிழிழுக்காக உயிர் விடும்படி முழங்கியிருப்போம். அதை கேட்டு உணர்ச்சி கொந்தளிப்பில் எமக்கு வாக்குகளை அள்ளி தந்திருப்பீர்கள். எமக்கு வாக்களிக்க வேண்டிய நீங்கள் தமிழுக்காக உயிரை விட்டுவிட்டபிறகு என் அப்பனும் இல்லாத நிலையில் உங்களை குடும்பம் குடும்பமாக போட்டு தள்ளிய மகிந்தவை அனைத்துலக விசாரணையில் இருந்த காப்பாற்ற என்னால் ஆனதை செய்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. என்னை பொறுத்தவரை எனது அப்பன் தான் முக்கியம்.எனது அப்பன் என்னை அப்படித் தான் வளர்த்தார். தமிழ் மக்க்களே நீங்கள் பிரபாகரனுக்கு பிறகும் விடுதலை என்று போராடுகின்றீர்கள். அது முட்டாள்தனம்.  என் அப்பனே இல்லாத நிலையில் விடுதலை ஒரு கேடா. என்னை போல் புத்திசாலியாக நடக்க கற்றுக்கொள்ளுங்கள். எனது குடும்பம் எப்படி அப்பன் இல்லை என்றவுடன் விடுதலை, சுதந்திரம் என்ற வாரத்தைகளை மறந்தோமோ அதை போல் உங்கள்  தந்தையை, மகனை, குடும்பங்களை போட்டு தள்ளிய மகிந்தவுடன் சேர்ந்து இவ்வாரத்தைகளை  மறப்பதே புத்திசாலித்தனம். நான் லண்டனில் படித்தவன் கூறுகிறேன் கேளுங்கள். எனது பிள்ளைகளும் லண்டனில்தான் படித்தார்கள்.  அதனால் எமது குடும்பமாக இனி மேல் அழகு  தமிழில் மேடைகளில்  உயிர் தமிழிற்கு உடல் மண்ணிற்கு என்று  முழங்க முடியாத நிலையில் உங்களுக்கு விடுதலை ஒரு கேடா?

எனது அம்மாவை பாருங்கள் அழகு தமிழில் எத்தனை உணர்ச்சிகரமாய் முழங்கியவர். இப்போது தள்ளாத வயதில் அவரால் இப்படி முழங்க முடியுமா யோசித்து பாருங்கள். அவரால் தமிழில் உணர்வாய் முழங்க முடியாத நிலையில் உங்களுக்கு விடுதலை தேவையா? நான் சொல்வதை சிந்தித்துப்பாருங்கள். மீண்டும் கூறுகிறேன் நான் லண்டனில் படித்தவன். முட்டாள் பிரபாகரனை போல் என் அப்பா என்னை போர்க்களத்தில் ஆபத்தின் மத்தியில் வைத்திருக்கவில்லை. ஏனேனில் அவரும் ஒரு தமிழ் புத்திஜீவி.

அப்பன்  என்பதற்கு பதிலாக

PLOT  என்று போட்டு வாசித்தேன்

அப்படியே  பொருந்துகிறது

அவர்கள் எல்லோரும்

ஒருவருக்கொருவர் பொருந்தக்கூடியவர்கள் என்பது தெரிகிறது :(  :(  :(

Edited by விசுகு

புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாட்டில் பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தமது குடும்பத்தை ஒரு நிலைக்கு கொண்டுவந்தபின் பின்தான் தேசியம் கொட்ட தொடங்கியவர்கள் .

அதைவிட யாழில் கருத்தெழுதும் பலருக்கு நாட்டில் என்ன நடந்தது ,உலக அரசியல் என்பெதெல்லாம் எதோ தேத்தண்ணி கடையில் இருந்து கதைப்பது போல ,

இதனால் தான் அவர்கள் புலி ஆதரவாளர்களாகவும் இருக்கின்றார்கள் .

காந்தி என்ற பெயரை ஏன் சோனியாவும் பிள்ளைகளும் கொண்டு திரிகின்றார்கள் சிலர் எழுதி எழுதிவருகினார்கள் ,

இன்று துல்பனின் பதிவை வாசிக்கவும் அதே எண்ணம் தான் வந்தது ,நடந்த பல விடயங்களின் அடியும் தெரியாது நுனியும் தெரியாது பந்தி பந்தியாக நீட்டியிருக்கிறார் .

பகீரதன் லண்டனில் படிக்கவில்லை ,காண்டீபன் தான் லண்டனில் படித்தவர் .காண்டீபன் ஆரம்பத்தில் இயக்கங்களுடன் இருந்தவர் ,பகீரதன் ஒரு இயக்கம் தொடங்கி இடையில் மூடியவர்,அவர்களை நியாய படுத்த நான் இங்கு வரவில்லை .

எதுவும் தெரியாமல் சப்பையாக எழுதுவது இப்போ பலரின் தொழில் ,

அதைவிட தலைவரும் குடும்பத்தை வெளிநாடு அனுப்பியவர் தான் ,பின்னர் வன்னி இராச்சியம் இனி எவராலும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கையில் தான் தனது குடும்பத்தை மாத்திரம் அல்ல பெற்றோரையும் கூப்பிட்டார் .அங்கும் அவர் கணக்கு பிழைத்தே போய்விட்டது .

மற்றவருக்கு பதில் எழுதி அவரை நோகடிக்க கூடாது ,அவர் குடும்பத்தில் பலரை போராட்டத்தில் பலி கொடுத்தவர் .அவ்வளவு நாட்டுபற்றாளர் .

மக்களால் தெரிவு செயப்பட்டவர்கள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்தவர்கள் ஆகி விட முடியுமா? ரொப் வோட்டும்(Rob Ford) மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் தானே?  :)

அப்ப ROB FORD ஐ போட்டு தள்ளவேண்டும் என்கின்றீர்களா ?

நீங்கள் எந்த ஜனநாயக நாட்டில் இருந்தாலும் சிந்தனை மட்டும் போட்டு தள்ளும் கலாச்சாரத்தில் தான் .. :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

உங்களுக்கு போட்டு தள்ளுவதை தவிர வேறு சிந்தனையே வாராதா?? 
 
படித்தவர்கள், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என நீங்கள் எழுதும்  கருத்துக்களுக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
 
ரொப் வோட் === மக்களால் தெரிவு செய்யபட்டவர். தனது பதவியை எப்படி துஸ்பிரயோகம் செய்தார் , செய்கிறார் என எழுதியுள்ளேன்.
 
உமாமகேஸ்வரன்: படித்த இயக்க தலைவர் (உங்கள் பார்வையில்).எந்த வகையில் தமிழ் மக்களுக்கு சேவை செய்தார் என சொல்ல முடியுமா?
 
வாழைப்பழத்தை உங்களுக்கு உரித்து தந்தாலும் சாப்பிட தெரியாத விரல் சூப்பியாக உள்ளீர்கள். :huh:  :huh:
  • கருத்துக்கள உறவுகள்

நுணா ,

அமிரை போட்டு தள்ளியது பற்றிதான் விவாதமே .விட்டு விட்டு வாசிப்பீர்களோ :icon_mrgreen:

முதலில் என்ன நடக்குது என்று தெரிந்த பின் பதிலை பதியுங்கள் . :D

தலைப்புக்கு வெளியில் இருந்து உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.அத்தோடு உங்களின் இடைச்செருகல்களுக்கும் விடை அளிக்கப்பட்டுள்ளது. உங்களின் சில வெட்டிய கருத்துக்களுக்கும் மறைமுகமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

நுணா ,

அமிரை போட்டு தள்ளியது பற்றிதான் விவாதமே .விட்டு விட்டு வாசிப்பீர்களோ :icon_mrgreen:

முதலில் என்ன நடக்குது என்று தெரிந்த பின் பதிலை பதியுங்கள் . :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.