Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறக்கப் போவதை... வெளிப்படுத்தும், அறிகுறிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21-1395396827-6.jpg

சிவபுராணத்தின் படி, ஒருவன் இறக்கப் போகிறான்... என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவனிடம் ஒருவன் இறக்க போகிறான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார். அப்போது சிவன் ஒருசிலவற்றை கூறி, அத்தகைய அறிகுறிகள் இருந்தால், அவன் சீக்கிரம் இறக்க போகிறான் என்று சொன்னார்.

இங்கு சிவபெருமான் கூறிய அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படித்து பாருங்கள்.

அறிகுறி 1

எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2

எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3

எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4

ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6

நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7

எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8

ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9

சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10

ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

மேலே கூறப்பட்டுள்ள 10 அறிகுறிகளும், இப்போதைக்குப் போதும் என்று நினைக்கின்றேன்.

மேலும் அறிகுறிகளைக் கூறி... உங்களை பயப்படுத்த விரும்பவில்லை. :rolleyes: 

சிவபுராணத்தில் எங்கேயும் இப்படிச் சொல்லப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளிவாய்ப் பேய்களும்,

குறளைப் பேய்களும்....

பெண்களைப் பிடிக்கும்,

பிரம்ம ராட்சகரும்....

அடியேனைக் கண்டால்,

அலறிக் கலங்கிட.....!

சூ.....மந்திரக் காளி ...! :o

ts1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருபுறம் இருக்கட்டும்.. மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் சிலரின் உறவினர்கள்மூலம் அறிந்துகொண்ட தகவல் இது. உயிர் பிரியும் தருணத்தில் கண்கள் இரண்டும் திறந்து விழிகள் நிலை குத்தியதாகவும், வாய்வழியாக திரவம் பெருக்கெடுத்ததாகவும் சொன்னார்கள்.. திரவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விழிகள் நிலை குத்த காரணம் என்ன? :o

அறிகுறி 5
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தமிழ் சிறியர் இது உண்மையானால் எல்லா ஆண்களும் பதின்ம வயதை அடைந்ததும் இறந்து விடுவார்கள் அல்லவா?  :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அது சிவலோகப் பதவியை குறிப்பது சீமான்.. :D

இந்த  திரிக்குள்  வந்து பயந்து போய்

எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் நடுங்கியபடி இருந்த என்னை

எழும்பி :icon_mrgreen:

வீரநடையோடு வெளியேற  வழி  காட்டிய  தம்பி  சீமானுக்கு நன்றிகள்.... :lol:  :D  :D

இசையருக்கு நரம்பியல் படிப்பிப்போம்!:

கண்ணினதும் கண்மணியினதும் அசைவுகளை ஐந்து மண்டையோட்டு நரம்புகள் கட்டுப் படுத்துகின்றன (Optic n, oculomotor n, trigeminal n, facial n, abducent n) (பாலூட்டிகளில் மொத்தமாகப் பன்னிரண்டு சோடி மண்டையோட்டு நரம்புகள் இருக்கின்றன). மரணம் நிகழும் போது இரத்த ஓட்டம் நிற்பதால் முதலில் பாதிக்கப் படும் உறுப்பு (4 அல்லது 5 நிமிடங்களில்) மூளை. கடைசிக் கணங்களில் நியூரோன்கள் தாறு மாறாக செயற்படும் போது கண்மடல்கள், கண் கோளம், கண்மணி இவையெல்லாம் செயற்பட ஆரம்பிப்பது சாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்று.

(இடி விழுவார், விடிய வெள்ளனயே சாவைப் பற்றி எழுத வைக்கிறாங்கள்! :D )

  • கருத்துக்கள உறவுகள்

(இடி விழுவார், விடிய வெள்ளனயே சாவைப் பற்றி எழுத வைக்கிறாங்கள்! :D )

:D  :D  :D

அது சிவலோகப் பதவியை குறிப்பது சீமான்.. :D

அப்படியானால் தாங்கள் தற்போது சிவலோகத்திலா இருக்கிறீர்கள் இசைகலைஞரே? கனடாவில் என்றல்லவா நினைத்தேன்.  :D  :D  :D 

இந்த  திரிக்குள்  வந்து பயந்து போய்

எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் நடுங்கியபடி இருந்த என்னை

எழும்பி :icon_mrgreen:

வீரநடையோடு வெளியேற  வழி  காட்டிய  தம்பி  சீமானுக்கு நன்றிகள்.... :lol:  :D  :D

தமிழ் சிறியர் சொல்லுறபடி பார்த்தால் எழும்பி வீர நடை போடுவதெல்லாம் ஆபத்தானது விசுகண்ணா.  :D  :D  :D 

இது ஒருபுறம் இருக்கட்டும்.. மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் சிலரின் உறவினர்கள்மூலம் அறிந்துகொண்ட தகவல் இது. உயிர் பிரியும் தருணத்தில் கண்கள் இரண்டும் திறந்து விழிகள் நிலை குத்தியதாகவும், வாய்வழியாக திரவம் பெருக்கெடுத்ததாகவும் சொன்னார்கள்.. திரவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விழிகள் நிலை குத்த காரணம் என்ன? :o

அதற்கான காரணத்தை தமிழ் சிறி அண்ணாவிற்காகவும், உங்களுக்காகவும் எனது கடைசி கருத்தில் எழுதியிருக்கிறேன். அடுத்த வார முடிவிற்குள் பதிகிறேன். :)

அதற்கான காரணத்தை தமிழ் சிறி அண்ணாவிற்காகவும், உங்களுக்காகவும் எனது கடைசி கருத்தில் எழுதியிருக்கிறேன். அடுத்த வார முடிவிற்குள் பதிகிறேன். :)

நீங்கள் இன்னமும் பல்லாண்டுகள் இங்கு கருத்து எழுத வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் மரணத்தைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. ஐந்திலும் சாவு ஐம்பதிலும் சாவு.
இன்றிருப்பார் நாளையில்லை........
தகவலுக்கு நன்றி சிறித்தம்பி. :D
  • கருத்துக்கள உறவுகள்

நான் மரணத்தைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. ஐந்திலும் சாவு ஐம்பதிலும் சாவு.
இன்றிருப்பார் நாளையில்லை........
தகவலுக்கு நன்றி சிறித்தம்பி. :D

அண்ணே, அப்ப ஐம்பது தாண்டின ஆக்கள், ஓகேயா?  :icon_idea:

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு...... ! எண்ட மாதிரிப் போடுங்க...!

சிறித்தம்பி அதோட 'கப் சிப்' ! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே, அப்ப ஐம்பது தாண்டின ஆக்கள், ஓகேயா?  :icon_idea:

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு...... ! எண்ட மாதிரிப் போடுங்க...!

சிறித்தம்பி அதோட 'கப் சிப்' ! :D

நான் படிச்ச அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலை உப்பிடித்தான் சொல்லித்தந்தவையள்.......fuma.gif

நீங்கள் இன்னமும் பல்லாண்டுகள் இங்கு கருத்து எழுத வேண்டும்.

நன்றி. ஆனால் மார்கழி மாதம் இங்கு பதியப்பட்ட பதிவு ஒன்று என்னை மிகவும் பாதித்துவிட்டது.

இங்கு இறப்பை பற்றி தமிழ் சிறி அண்ணாவும், இசை ஞானி அண்ணாவும் பதிந்து கருத்தாடுவதை 2008 தொடக்கம் படித்து வந்தேன். நான் கருத்திட மன வலிமை இல்லாமல் இருந்தேன்.

நான் கருத்திடாத ஆனால் முக்கியமான தலைப்பு இறப்பு.

ஆதலால் எனது கடைசி கருத்தை யாழ் கள உறவுகளுக்காக எழுதி வருகிறேன்.

சிறி அண்ணாவிற்கு எங்கு அவரின் தந்தையார் இரண்டு நாள் கண்ணை மூடி சென்றார் என்று கூற கடமைபட்டுள்ளேன்.

என்னை பெற்றவரும் என் முன்னே தான் கண்ணை விழித்து கொண்டு தன் தலையை சரித்தார் நான் தான் கண்களை பலவந்தமாக மூடிவிட்டேன்.

பெற்றவரின் நடத்தையிலும் கடைசி ஒரு மாதமாக. மாற்றங்கள் இருந்தது.

நான் ஒரு சபிக்கபட்டவன் சாவிற்கு என்னை ஒரு சாட்சியாக பாவிப்பதில் இன்பம்.

எனது கடைசி பதிவில் விபரிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தமிழ் சிறியர் இது உண்மையானால் எல்லா ஆண்களும் பதின்ம வயதை அடைந்ததும் இறந்து விடுவார்கள் அல்லவா?  :D  :D  :D 

கல்போல் என் உறுப்புகள் இறுகிப் பின் உணர்விழந்து நான் இறந்தது உண்மை. ஆனால் இறுக்கம் தளர்ந்ததும் மீண்டும் உயிர்த்ததும் உண்மை. இது எத்தனை தடவைகள் என் வாழ்வில் நடந்தது??? எண்ணிப்பார்க்கிறேன்! எண்ண முடியவில்லை!!. எண்ணிமுடிந்ததும் எழுதுகிறேன். ஆனாலும் நாட்கள் போகப்போக எண்ணிக்கையும் கூடுகிறதே! என்செய்வேன்!!!.   :o  :o

ஐம்பதுக்கும் கூடிய சாவுகளை கணித்த, கணிக்கும் பூனை. முதியவர்கள் பராமரிப்பு இல்லத்தில் சாக போகிறவர்களின் படுக்கையில் ஏறி படுக்கும் இந்த பூனை. பூனை ஏறி படுத்து சில மணிகளில் முதியவர் இறந்துவிடுவார். இப்போது வெள்ளை கோட்டு மருத்துவர்கள் பூனை ஏறி படுத்தால் குடும்பத்தினரை அழைக்கிறார்கள்.

(பூனை கரீபியன் போய் கஸ்டபட்டு படிச்சுதோ?)

HOME»NEWS»NEWS TOPICS»HOW ABOUT THAT?

Cat predicts 50 deaths in RI nursing home

A cat with an uncanny ability to detect when nursing home patients are about to die has proven itself in around 50 cases by curling up with them in their final hours, according to a new book.

http://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/7129952/Cat-predicts-50-deaths-in-RI-nursing-home.html

ஏனுங்க ஏதாவது நல்லதுங்களைக் கதைக்க மாட்டேனெனுறீங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்க ஏதாவது நல்லதுங்களைக் கதைக்க மாட்டேனெனுறீங்க?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137776#entry995568

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96889&page=90#entry995668

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135150&page=30#entry995675

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137756#entry995669

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137835#entry995629

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137529#entry995403

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136877&page=2#entry995309

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136869&page=2#entry995197

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137703#entry995080

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120719&page=201#entry994883

மேலே இணைக்கப்பட்டது சும்மா...சும்மா...... :lol:

யாழ்களத்தின் ஆழத்தை அறிய கீழே தரப்பட்ட திரியில் சென்று நீந்திப்பாருங்கள்.மூர்ச்சையடைத்து விடுவீர்கள். :D

http://www.yarl.com

அண்ணைய

அதிகம் கோபப்படுத்தி  விட்டாவோ....?? :lol:  :D  :D

எனக்கு இப்போதைக்கு இந்தத் திரி தேவைப்படாது.    :lol:  :lol:  :lol:   

  • 3 weeks later...

சிவபுராணத்தில் எத்தனை பொய்கள் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மரணத்தை தடுக்கவியலாது.

  • 1 month later...

சிவபுராணத்தில் எத்தனை பொய்கள் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மரணத்தை தடுக்கவியலாது.

மரணமே ஒரு உணர்ச்சி தான்.

எனது கடைசி கருத்தின் முடிவை எழுத மூன்று மாதமாக திராணி இன்று தவிக்கிறேன்.

சாவின் உணர்ச்சி பற்றி எழுதுவது மிகவும் கடினம்.

நேரம் வந்துவிட்டது, இன்று முடிக்க திட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.