Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்துக்கல்லூரி& லியோனி

Featured Replies

   இலண்டன் யாழ் இந்துக்கல்லூரியின்  விழாவுக்கு  லியோனி தன் பரிவாரங்களுடன் வரவிருப்பதாக  அவரது சிறப்பு படத்தையே போட்டு பெரிதாக விளமபரப்படுத்துகிறார்கள்

அங்க இப்ப தேர்தலுக்கு கருநாநிதிக்காக  ஜெயலலிதாவை போட்டு மேடைகளில்  தாக்கி தள்ளுகிறார்.

இங்கையும் வந்து ஈழத்தமிழருக்கு  கருநாநிதி செய்தது சரி என்று சொல்லப்போறாரோ?

  • Replies 74
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக் கல்லூரி சார்ந்த சிலர் சமீப காலமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் கிரிக்கெட் துறையை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது போல தோன்றுகிறது.

எமது இன விடுதலையின் பால் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் செய்த தியாகங்கள் மறக்கடிக்கப்பட்டு.. இன்று பழைய மாணவர் சங்கங்கள்.. இந்துவின் தனிப் பண்பிழந்து.. குடியும்.. கூத்தும்.. சினிமாவும் என்று அலையும் நிலை தோன்றி இருப்பது வருந்தத் தக்க ஒன்றாக உள்ளது.

இதனை யாழ் இந்துவின் பழைய மாணவர்கள் எல்லோரும் ஆதரிக்கிறார்கள் என்றில்லை. இதனாலேயே பலர் கல்லூரி சார்ந்த பல விடயங்களில் பங்குபற்ற மனமின்றி ஒதுங்கிப் போயிருக்கிறார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நடைபெறும் நிகழ்வுகளால் நானும் இந்துவின் ஒரு பழைய மாணவன் என்பதனை வெறுக்கின்றேன். பலர் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள் அல்லது இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை :( 

பல விரும்பத்தகாத காரணங்களால் யாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற நிலையில் இருந்து விடைபெறவேண்டியிருக்கின்றது.

நன்றி வணக்கம் யாழ் இந்து!

1901465_10202484903636243_1640639550_n.j

இது நாங்கள் தான் நடாத்துகின்றோம் .டின்னர் நானும் ரவியும் தான் பொறுப்பு எடுத்தோம் .(எனது பெயர் நோட்டீசில் இல்லை . :icon_mrgreen: )

லியோனி அரசியலுக்கு அப்பால் பட்டி தொட்டி எல்லாம் கொடி கட்டிப்பறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் .அரசியல் பின்புலம் பார்த்தால் உலகில் எவனும் யோக்கியன் இல்லை .

பழைய மாணவர் சங்கம் என்பது முழுக்க முழுக்க ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அமைப்பு .புலம் பெயர் நாடுகளில் தனிய கல்லூரிக்கு என்று பணம் கேட்டால் எத்தனை பெயர் பணம் தொடர்ந்து தருவார்கள் . பழையமாணவர் ஒன்று சேரவும் பாடசாலைக்கு உதவிசெய்யவும் தான் இந்த அமைப்பு .லண்டனோ கனடாவோ இதுவரை என்ன செய்தார்கள் என்றால் அது மிக பெரிய பட்டியல் .

முடிந்தவரை அரசியல் கலக்காமல் நல்லதை மட்டும் செய்துவருகின்றோம் .அப்படி இருந்தும் இரு வருடங்கள் கலையரசியிலும் டின்னரிலும் புலிக்கொடி ஏற்றினார்கள் .(என்னிடம் செம்மையாக வாங்கிகட்டியும் கொண்டார்கள் ).

இப்போ பழையபடி அந்தமாதிரி கனடாவில் இயங்குகின்றோம். எல்லாமே வெகு திட்டமிடப்பட்டு தொழில்நுட்ப வசதிகளை வைத்து இலகுவாக்கி "யாழ் இந்துவிற்கு இருக்கும் சிறப்புடன் "இயங்குகின்றோம் .

போற்றுவார் போற்ற தூற்றுவார் தூற்ற யாழ் இந்து என்றும் போல வெற்றி நடை போடும்.போடுகின்றது .

டின்னருக்கு ஆசியாவின் பெரிய வங்கி அதிகாரி ஒருவர்  பிரத விருந்தினராக வருகின்றார் , கலையரசிக்கு அமெரிக்க விஞ்ஞானி பிரதவிருந்தினராக வருகின்றார் .

A plush 400 Seat Auditorium in Memory of Mr.E.Sabalingam, Former Principal     Posted on: 16/03/2014 (Sunday)    

project to build a well-equipped 400 Seat Auditorium in Memory of Mr.E.Sabalingam, former Principal was inaugurated today. The cost of the Sabalingam Auditorium project is estimated to be in the range of 10 million rupees.

Our college will be 125 years old in 2015. To celebrate the 125th Anniversary, Dr.S. Jothilingam, an old boy and one of our former president of Jaffna Hindu College OBA UK, has come forward to build an Auditorium in memory of his late father Mr. E.Sabalingam, a well-respected former principal of our school. The brainchild for this project is Hon Mr.E.Saravanapawan, MP and an Old boy, and the current Principal Mr. Ganesharajah, who has been requesting for an Auditorium for a long time. Our school, which is one of the National schools in Sri Lanka, will be the first school in the Northern Province to have such a facility. This will no doubt boost the education of our younger generation.

  • கருத்துக்கள உறவுகள்

இது நாங்கள் தான் நடாத்துகின்றோம் .டின்னர் நானும் ரவியும் தான் பொறுப்பு எடுத்தோம் .(எனது பெயர் நோட்டீசில் இல்லை . :icon_mrgreen: )

லியோனி அரசியலுக்கு அப்பால் பட்டி தொட்டி எல்லாம் கொடி கட்டிப்பறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் .அரசியல் பின்புலம் பார்த்தால் உலகில் எவனும் யோக்கியன் இல்லை .

பழைய மாணவர் சங்கம் என்பது முழுக்க முழுக்க ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அமைப்பு .புலம் பெயர் நாடுகளில் தனிய கல்லூரிக்கு என்று பணம் கேட்டால் எத்தனை பெயர் பணம் தொடர்ந்து தருவார்கள் . பழையமாணவர் ஒன்று சேரவும் பாடசாலைக்கு உதவிசெய்யவும் தான் இந்த அமைப்பு .லண்டனோ கனடாவோ இதுவரை என்ன செய்தார்கள் என்றால் அது மிக பெரிய பட்டியல் .

முடிந்தவரை அரசியல் கலக்காமல் நல்லதை மட்டும் செய்துவருகின்றோம் .அப்படி இருந்தும் இரு வருடங்கள் கலையரசியிலும் டின்னரிலும் புலிக்கொடி ஏற்றினார்கள் .(என்னிடம் செம்மையாக வாங்கிகட்டியும் கொண்டார்கள் ).

இப்போ பழையபடி அந்தமாதிரி கனடாவில் இயங்குகின்றோம். எல்லாமே வெகு திட்டமிடப்பட்டு தொழில்நுட்ப வசதிகளை வைத்து இலகுவாக்கி "யாழ் இந்துவிற்கு இருக்கும் சிறப்புடன் "இயங்குகின்றோம் .

போற்றுவார் போற்ற தூற்றுவார் தூற்ற யாழ் இந்து என்றும் போல வெற்றி நடை போடும்.போடுகின்றது .

டின்னருக்கு ஆசியாவின் பெரிய வங்கி அதிகாரி ஒருவர்  பிரத விருந்தினராக வருகின்றார் , கலையரசிக்கு அமெரிக்க விஞ்ஞானி பிரதவிருந்தினராக வருகின்றார் .

வாசிக்கவே மெய் சிலிர்கிறது .......
அரசியல் கலக்காது ஒரு கல்லூரி இருபது போற்றுதலுக்கு உரியது.
அதை இந்து செய்வது என்பது .... ஓவரு இந்துவிற்கும் கிடைத்த பஞ்சாமிர்தம்.
யாழ் இந்துக்க்கள் அனைவரும் தொட்டு நக்கி நற்சுவை காண ....
அந்த இந்து கடவுலார்கள் அருள் புரிவார்களாக ....
 
சில வருடங்கள் முன்பு புலிக்கொடி ஏற்றிய நவர்கள் நரகம் செல்ல கடவ ....
 
யாழில் பல கிறிஸ்தவ கல்லூரிகள் எழுப்ப பட்டபோது 
பல விலைகளை கொடுத்து இந்து கல்லூரியை 
உருவாக்கிய அரசியல் கொண்ட பேர்களும் நரகத்துக்கே உரியவர்கள்.
 
உங்களது இந்து மது விருந்தில் கலந்துகொள்ள முடியாமை எனபது ......
ஒரு இந்துவாக இருக்கும் ஓவருவராலும் இந்த உலகே நரகம் என்றே கருத படுகிறது.
 
உங்கள் இந்து மது விருந்து சிறப்பு பெற்று ......
யாவரும் சுவர்க்கம் செல்ல சிவனை தொழுகிறோம் .
ஓம் நமச்சி வாய !
  • கருத்துக்கள உறவுகள்

1901465_10202484903636243_1640639550_n.j

இதென்ன பிரமாதம்.. இப்படியே.. ஒரு strip dance யும் யாழ் இந்து அன்னையின் பெயரால் அரங்கேற்றினால்.. வருமானம் அமோகமா இருக்கும். அதில அடுத்த வருசம்.. நாலு  strip dance கூடப் போடலாம்.

இதெல்லாம் ஒரு பிழைப்பு....! :icon_idea::rolleyes::(

  • தொடங்கியவர்

இது நாங்கள் தான் நடாத்துகின்றோம் .டின்னர் நானும் ரவியும் தான் பொறுப்பு எடுத்தோம் .(எனது பெயர் நோட்டீசில் இல்லை . :icon_mrgreen: )

லியோனி அரசியலுக்கு அப்பால் பட்டி தொட்டி எல்லாம் கொடி கட்டிப்பறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் .அரசியல் பின்புலம் பார்த்தால் உலகில் எவனும் யோக்கியன் இல்லை .

பழைய மாணவர் சங்கம் என்பது முழுக்க முழுக்க ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அமைப்பு .புலம் பெயர் நாடுகளில் தனிய கல்லூரிக்கு என்று பணம் கேட்டால் எத்தனை பெயர் பணம் தொடர்ந்து தருவார்கள் . பழையமாணவர் ஒன்று சேரவும் பாடசாலைக்கு உதவிசெய்யவும் தான் இந்த அமைப்பு .லண்டனோ கனடாவோ இதுவரை என்ன செய்தார்கள் என்றால் அது மிக பெரிய பட்டியல் .

முடிந்தவரை அரசியல் கலக்காமல் நல்லதை மட்டும் செய்துவருகின்றோம் .அப்படி இருந்தும் இரு வருடங்கள் கலையரசியிலும் டின்னரிலும் புலிக்கொடி ஏற்றினார்கள் .(என்னிடம் செம்மையாக வாங்கிகட்டியும் கொண்டார்கள் ).

இப்போ பழையபடி அந்தமாதிரி கனடாவில் இயங்குகின்றோம். எல்லாமே வெகு திட்டமிடப்பட்டு தொழில்நுட்ப வசதிகளை வைத்து இலகுவாக்கி "யாழ் இந்துவிற்கு இருக்கும் சிறப்புடன் "இயங்குகின்றோம் .

போற்றுவார் போற்ற தூற்றுவார் தூற்ற யாழ் இந்து என்றும் போல வெற்றி நடை போடும்.போடுகின்றது .

டின்னருக்கு ஆசியாவின் பெரிய வங்கி அதிகாரி ஒருவர்  பிரத விருந்தினராக வருகின்றார் , கலையரசிக்கு அமெரிக்க விஞ்ஞானி பிரதவிருந்தினராக வருகின்றார் .

அப்ப நீஙகள் இப்ப என்ன சிங்க கொடியோ ஏத்திறியள்

  • தொடங்கியவர்

JHC%202014.jpg

அப்ப நீஙகள் இப்ப என்ன சிங்க கொடியோ ஏத்திறியள்

யாழ் இந்துக்கு கொடி இருக்கு தம்பி ? ஏன் ஏதாவது கொடி கட்டயாம் ஏத்தவேண்டுமோ? 

பள்ளிகூடபக்கம் போகேலை போல . :icon_mrgreen: அல்லது எல்லா இடமும் கொடியோட போன அனுபவமோ . :D

  • கருத்துக்கள உறவுகள்

JHC%202014.jpg

உவரையும் விட நல்லாவே பட்டிமன்றம் செய்யக் கூடிய யாழ் இந்து பழைய மாணவர்கள் பலர் உள்ளனர். தாயகத்திலும்.. புலம்பெயர்ந்தும். அவர்கள் ஒருவரும்.. கலையரசின் கண்ணுக்குத் தெரியவில்லைப் போலும். எங்கையோ கிடக்கிற... யாழ் இந்து.. அன்னையின்.. கலையரசிக்கு சம்பந்தப்படாத விடயங்களை பழைய மாணவர்கள் என்ற போர்வையில்.. தங்களின் சுய விரததாபத்தை தீர்க்கப் பயன்படுத்துவது உண்மையில் கண்டிக்கத்தக்கது.

இந்துவின் கலைஞர்களை அதுவும் எமது கல்லூரிக் கலைஞர்களையே இவர்கள் புறக்கணிக்கின்ற போது தாயகத்தை எந்தளவுக்கு புறக்கணிப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை.

ஒரு காலத்தில் தாயகத்தில்.. யாழ் இந்து கலைஞர்களே.. சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்களாகவும் மேடைப் பேச்சாளர்களாகவும் விளங்கினர். அதுவும் இளையோர். இன்று.. அவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். ஹிந்திய நடனமும்.. மகிந்தவிற்கு மகிடம் சூடிய.. லியோனி போன்ற பணம் விரும்பிகளும்..புகழ் விரும்பிகளும்.. யாழ் இந்துவின் புகழ் பேசப் போகினமாம்..???! நகைச்சுவையாக இல்லை.

இதுங்க யாழ் இந்துவில் படிச்சிருக்காதுகள்.. வெட்டி பந்தா காட்டா.. அங்கினை.. பின்காதவால வந்து மதில் பாய்ஞ்ச கூட்டமாகவே இருக்க முடியும். :lol::icon_idea: :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுய கலை கழி கழகமும் இதுவே ...தமிழர் தலைகுனி கழகமும் இதுவே...!!! என்று தான் பாட வேண்டிக் கிடக்கது. :(:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக்கு கொடி இருக்கு தம்பி ? ஏன் ஏதாவது கொடி கட்டயாம் ஏத்தவேண்டுமோ? 

பள்ளிகூடபக்கம் போகேலை போல . :icon_mrgreen: அல்லது எல்லா இடமும் கொடியோட போன அனுபவமோ . :D

இவங்கள் எதோ கொடியோடு பிறந்த மாதிரி............. நீங்கள் இதை கண்டுன்காதீங்க அண்ணா.
 
கல்லூரிக்கு கொடியா முக்கியம்?
அண்ணே ! 5:30க்கு தொடக்கி வைக்கப்படும் குடி முடியும்வரை தொடருமா ?? 
எப்பிடி இருக்கும் என்று சொன்னீர்கள் என்றால்.
இந்துவுக்கு படிக்க போக முடியவில்லை .....
குடிக்கவாது போனமே என்று ஒரு திருப்தி இருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத் தண்ணியடிக்கலாமெண்டால் நானும் வாறன். காக்ரைல் ஆரம்பம் ஐந்தரைக்கு எண்டும் கதவுதிறப்பது ஆறரைக்கு எண்டும் போட்டிருக்கு அப்போ வெளியாலை வைச்சும் விப்பியளோ அல்லது பின்கதவாலை போய் வாங்கலாமோ அதுகுமில்லாமல் பொட்டுக்குள்ளாலை வாங்குறதோ.

யாழ் இந்துவில் படித்த கனவான்கள் எல்லாம் அமைதியாக இருக்க. அங்கு மழைக்கு ஒதுங்கின  களிசடைகள் எல்லாம் கெட்ட ஆட்டம் போடுதுகள்.

மது உள்ளபோய்விட்டால் மனம் என்ன பாடுபடும் என்பதை நான் அறிவேன். பக்கத்தில கொஞ்சம் பாக்கிறமாதிரி பேயோ பிசாசோ போனாலும் அதனது அனைத்து அங்கங்களையும் கண்கள் மேயும் ஆனால் வாய் மட்டும் சிஸ்ரர் என்றோ அக்கா எண்டோ ஆண்ரி எண்டோ வேண்டாவெறுப்பாக்கூறும் அதுதவிர கெட்ட ஆட்டம் வேற இருக்கு எண்டு போட்டிருக்கெல்லோ அப்ப சொல்லவா வேணும். தவறு செய்தாலும் தண்ணியில நடந்த்திட்டுது எண்டு சொல்லலாம்.

இப்படியெல்லாம் தண்ணி ஊத்திக்கொடுத்து யாழ் இந்துவுக்குக் காசு சேர்ப்பதிலும் சேர்க்காமல் இருக்கலாம். 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ

ஒரு நிகழ்வை  செய்து முடிக்கும் செயலை குற்றம் சொல்ல  முயலவில்லை

ஆனால் தண்ணி  அடிக்கலாம் வாங்க

அல்லது தண்ணிப்பாட்டி  வைத்தால் தான் ஆட்கள் வருவினம் என்பது

எமது இனத்தையே  மலிவு  படுத்துவதாகும்

அதுவும் சான்றோரை உருவாக்கிய

உருவாக்கவேண்டிய  ஒரு பாடசாலையில் பெயரால்............... :( 

  • கருத்துக்கள உறவுகள்

Cocktail என்றால் அதில் என்னவெல்லாம் அடங்கும்? 

தமிழனத்திற்காக குரல் கொடுக்கின்ற எத்தனையோ உணர்வாளர்கள் இருக்கும் போது கருணாநிதியில் பிரச்சார பீரங்கி லியோனியை அழைத்ததன் மர்மம் என்னவோ?  :icon_idea:

எங்களிற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை விட எதிராக குரல் கொடுப்பவர்களை தான் நாமும் தூக்கி கொண்டாடுகின்றோம். வாழ்க வளர்க.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான களியாட்டங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலான விரிசலை இன்னும் அதிகமாக்கும் யாழ் இந்து ஈழத்தில் கல்வியில் மட்டும் இல்லாமல் ஈழத்தமிழர்களின்
விடுதலைப் பாதையில் அளித்த வெகுமதிகள் பல. இன்றைய பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் பலர் தடம்மாற ஆரம்பித்துப் பல காலம் சென்றுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெருமதிப்புக்குரிய அதிபரும், பிற்காலத்தில் ஒரு நண்பரைப் போன்று பழகியவருமான திரு. சபாலிங்கம் அவர்கள், தனது பெயரில் ஒரு மண்டபம், மது விற்று வந்த பணத்தில் கட்டப்படுகின்றது என அறிந்தால், நிச்சயம் அவரது ஆன்மா, அந்தச் செயலை வரவேற்க மாட்டாது என்று நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்!

எத்தனையோ ஆசிரியர்கள், அதிபர்கள், ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய படியினால் தான், நான் யாழ் இந்துவில் படித்தவன் என்று சொல்லிப் பெருமைப்படுகின்றேன்!

வேறு எங்கும், எவராவது குடிப்பதைப் பற்றி எனக்கு என்றுமே 'ஆட்சேபனை' இருந்ததில்லை!

'கற்கக் கசடறக் கற்க, கற்பவை கற்றபின்,

நிற்க அதற்குத் தக !

என்பது தான் எமது கல்லூரியினது தாரக மந்திரம்!

அமைப்பாளர்கள் கவனத்தில் எடுப்பார்களா? :rolleyes:

  • தொடங்கியவர்

அவர் அரசியலில்  வலு பலமாக தி.மு.க பக்கம் இயங்குகிறார் என்று தெரிந்தபின்னும்  ஈழத்தமிழரின் பெயர் சொல்லும் ஒரு பாடசாலை அவரை முன்னிலைப்படுத்தி அழைப்பது  தவறு.
 
எங்களுக்காக  நடு நிலை நின்று  குரல் கொடுப்போரை மலினப்படுத்துவதாகவும், கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கும்.

நியானி: ஒருமையில் விளித்து எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

யாராவது வந்து உருப்படியாக ஒரு பதில் தந்தால் நன்றாக இருக்கும் .

லியோனியை கலையரசிக்கு கூப்பிட்டது பிழையா?

இந்து கல்லூரி இரவு போசன விருந்தில் குடிவகை பாவிப்பது பிழையா ?

பழைய மாணவர்கள் அமைப்பு என்று ஒன்று இருந்து பாடசாலைக்கு உதவி செய்வது பிழையா 

புலம்பெயர் நாடுகள் அத்தனையிலும் இருக்கும் சங்கங்களின் நடவடிக்கைகளில் தான்  பிழையா ?.

கனடாவில் வருடம் நாலு நிகழ்வு நடத்துக்கின்றோம் .

கலையரசி -கலை நிகழ்ச்சி.

பிக்னிக் -யாழ் இந்து காட்லி கிரிக்கெட் மட்சும் வெளிகள விளையாட்டும் ,

வாக்கதொன் -கனேடிய வைத்தியசாலைகளுக்கு நிதி உதவி .

டின்னர் -பழைய மாணவர்கள் ஒன்று கூடல் .

இந்த நிகழ்வு மட்டும் தான் சந்தோசமாக மது ஆடல் பாடல் உடன் நடைபெறுகின்றது .

கனடாவில் எந்த ஒரு பாடசாலை பழைய மாணவர் டின்னரும் மதுவும் டான்சும் இன்றி நடைபெறுவதில்லை .

பல டின்னருக்கு நானே போயிருக்கின்றேன்.

வெறுமன என் மீது இருக்கும் காழ்ப்புணர்வில் யாழ் இந்துவிற்கு கல்லை ஏறியவேண்டாம் .

கல்லெறிகள் தாண்டி நாம் நடை போடுவோம் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், உங்கள் ஆதங்கம் புரிகின்றது! 

பழைய மாணவர் சங்கங்கள், கல்லூரிகளின் வளர்ச்சியில் , நிறைய உதவியிருக்கின்றன! இன்றும் உதவி வருகின்றன!

மதுபானம் உபயோகிப்பது, மேற்கத்தைய கலாச்சாரத்தில், ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது உண்மையாயினும், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள், இப்போது இந்த'மதுபானப் பாவனைக்கு' எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன! இப்போதெல்லாம், சனி, ஞாயிறுகளில் கூட, இரவு பன்னிரண்டு மணிக்குப்பிறகு, அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்பட வேண்டும் என்னும் நிலை எடுக்கப்படுகின்றது! ஏனெனில், அளவுக்கதிகமான மதுபாவனையால், ஏற்படும் சண்டைகள், கொலைகள் என்பன இவற்றுக்குக் காரணமாகின்றன!

எதையும் நாங்கள் நியாயப்படுத்திக்கொண்டே போகலாம்! 

நாளைக்குத் திரிஷா வந்து, நல்லூர் மணிமண்டபத்தில் நடனம் ஆடினாலும், அதிலும் தவறில்லை என்று கூறுவதற்கும் ஒரு கூட்டமொன்று இருக்கும் தானே!

ஒரு இந்தியக் குப்பையை மினக்கெட்டுக் கனடாவுக்குக் கொண்டு வருவதை விடவும், யாழ் இந்துவுடன் தொடர்புடைய, கனடாவின் உள்ளிருந்து ஒரு படைப்பு, அல்லது யாழ் இந்துமகளிர் கல்லூரியுடன் தொடர்புடைய சங்கீத, நடன நிகழ்ச்சி எனில் பொருத்தமாக இருந்திருக்கும் என எண்ணுகின்றேன்!  

 எனினும் பணம் தான் முக்கியம் எனும்போது, நான் கூறுகின்ற விதமான நிகழ்ச்சிகளுக்கு 'வரவேற்பு' இருக்காது என்பதும் எனக்குப் புரிகின்றது!

எங்கேயாவது ஒரு 'balance' ஐ எடுத்துச் செல்லவேண்டியது, பழைய மாணவர்களின் கடமை! அவர்கள் பழைய மாணவர்கள் எனினும், அவர்களது கல்லூரியின் ' Image' ஐக் களங்கப்படுத்தாமல் இருப்பதும், அவர்களது கடமையே!

வைத்திய கலாநிதி ஜோதிலிங்கத்தைப் பற்றிக் கதைக்கும் ஒவ்வொரு தடவையும், சபாலிங்கத்தாரின் கண்களில் ஒரு 'ஒளிப் பொறியொன்று' தோன்றி மறையும்!

He was so proud of the achievement of his eldest son, as a father at that time! If I recall correctly, he once mentioned that Dr. Jothilingam was a teetotaler !

That is why I had to bring Mr. Sabalingam' into this thread. 

If it has hurt anyone's feelings, my I humble apologies to everyone !

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்னைப்பொறுத்தவரைக்கும்.......எதற்காக நாம் புலம் பெயர்ந்தோமோ அதை நிறைவேற்றும் வரைக்கும் சுபகாரியங்களை நிறுத்த வேண்டும். அது தனிப்பட்ட அல்லது பொது விடயங்களானாலும் சரி முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
 
கலை நிகழ்ச்சி நடாத்தித்தான் தாய்மண்ணுக்கு உதவ வேண்டுமென்றால் அதைவிட போலித்தனம் வேறொன்றுமில்லை. 
உங்கள்  குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்குமாக மாதாந்தம் 10 நாணயங்களை அவரவர் நாட்டு பெறுமதியில் சிறு  பங்களிப்ப்பை எமது உறவுகளுக்காக செய்யுங்கள். :icon_idea:
 
அண்மைக்காலங்களில் எம்மவரின் திருமண வைபவங்கள் அமெரிக்க சினிமாவின் தரத்திற்கு வந்துவிட்டது. இதுதான் நம்மவரின் முன்னேற்றப்பாதை...... :(
 
எனக்காக நாலுபேர் செத்தாலும் பரவாயில்லை....நான் நல்லாயிருக்கணும். :D 

இராப்போசன விருந்து என்றால் அங்கு ஆடல் பாடல் இயல்பானது. தேவையானதும் கூட.  மகிழ்வூட்டும் ஒரு நிகழ்வை சீரியஸான மனப்பாங்குடன் நடத்த முடியாது என்பது எனது கருத்து. ஆடல் பாடல் கொண்டாட்டம் என்பது தவறான செயல்  என்ற  பிற்போக்குதனமான சிந்தனை எமது தமிழ் சமூகத்திற்குள் வேரூன்றி உள்ளது. மது விருந்து என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். மகிழ்வுடன் நிகழ்வை அனுபவக்கும நோக்குடன் மது பரிமாறுவது தவறல்ல ஆனால் மது பாவிக்காது நிகழ்வில் பங்கேற்க  வந்தவர்களை தொந்தரவு செய்யாமல் public decency ஐ காப்பாற்றி எல்லோரும் இணைந்து மகிழ்வாக இப்படியான விழாக்களை நடத்தும் போது அதில் எந்த தவறும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.