Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இந்துக்கல்லூரி& லியோனி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது வந்து உருப்படியாக ஒரு பதில் தந்தால் நன்றாக இருக்கும் .

லியோனியை கலையரசிக்கு கூப்பிட்டது பிழையா?

இந்து கல்லூரி இரவு போசன விருந்தில் குடிவகை பாவிப்பது பிழையா ?

பழைய மாணவர்கள் அமைப்பு என்று ஒன்று இருந்து பாடசாலைக்கு உதவி செய்வது பிழையா 

புலம்பெயர் நாடுகள் அத்தனையிலும் இருக்கும் சங்கங்களின் நடவடிக்கைகளில் தான்  பிழையா ?.

நிச்சயமாக பாடசாலை நிகழ்வுகளில் மதுவகைகளைப் பாவிப்பதை ஒழிக்கவேணும்.அதுவும் குடும்பம் குட்டிகளோடை பலர் கலந்துகொள்ளும் இடத்தில் கூடாது.

தண்ணி அடிக்க விரும்பும் ஆக்கள் பார்வளியை போய் அடியுங்கோவன்

எதுக்குப் பள்ளிக்குடத்தின்றை பேரிலை கைவைக்கிறீங்கள் ^_^

  • Replies 74
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கல்லூரி என்றல்ல.. வேறு கல்லூரிகளின் ஒன்றூகூடல்களிலும் மது, ஆடல், பாடல் இருக்கவே செய்கிறது. நான் தெரியாத்தனமாக இவ்வாறான நிகழ்வு ஒன்றுக்குப் போய் மாட்டிக்கொண்ட அனுபவம் உள்ளது. 

மது அருந்துவது மேலை நாடுகளில் சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் கண் மண் தெரியாமல் குடிப்பதும், போத்தல், கிளாசை உடைப்பதும் தவிர்க்கப்படல் வேண்டும்.

பரியாரி சொன்னதுபோல் பள்ளிக்கூடத்தின்பேரால் நடைபெறும் நிகழ்வுகளில் மது பாவனை இருக்கக்கூடாது என்கிற கருத்தும் வரவேற்கத்தக்கதே.. ஆனாலும் மது இல்லாவிட்டால் ஈயோட்டும் நிலைமையும் ஏற்படலாம்.. :icon_idea:  :o

ஐயா

நாங்களும் வருடத்தில்

பல நிகழ்ச்சிகளை செய்திருக்கின்றோம்

செய்து வருகின்றோம்

தமிழகத்திலிருந்து கூட பெரிய  நடிக  நடிகைகள்

மற்றும் இயக்குநர்களை  அழைத்திருக்கின்றோம்

ஆனால் தண்ணி  கண்ணிலும் காட்டியது கிடையாது

தலைவர்கள் தான் நிகழ்ச்சி  நிரலைத்தயாரிக்கிறார்கள்

தலைவர்கள் எவ்வழியோ

எல்லாமே அவ்வழி  தானே...... :(  :( 

இங்கு சிலர் கேட்டிருந்தார்கள்

இது அர்யூன் அண்ணா  என்றபடியால்  தான் இவ்வாறு கேள்வியா? என்று

அர்யூன் அண்ணா  எந்த விடயத்திலும் 100வீதம் சரியாகச்செய்யணும் என்று சொல்பவர்

எல்லோரையும் மட்டம் தட்டுபவர்

அவருக்கு

இது குளிக்கப்போய்   சேறு பூசிய  மாதிரி  என விளங்கவில்லையே.................???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தப் பிரபல பாடசாலையிலிருந்து  ஒரு வருடத்தில் வகுப்புக்கு 30 எனப் பார்த்தாலும் 4 பிரிவுகளாகப் பார்த்தாலும் 120 மாணவர்கள் படித்திருப்பார்கள்  அதில் 100 பேராவது சிறந்த பெறுபேறுகளோடு வெளியேறியிருப்பார்கள்.    கனடாவின் தமிழ் சனத்தொகை 400,000.  அதில் குறைந்தது ஐயாயிரம் பேராவது இந்த இந்துவோடு சம்பந்தப்பட்டிருப்பார்கள்.  அவர்களிடம் நியாயமான முறையில் இந்துவின் முன்னேற்றத்திற்கெனப் பணம் கேட்டால் கொடுக்காமலா போய்விடுவார்கள்?  இது பிரபல பாடசாலை என்பதால் பலர் வெளிநாடுகளில் நல்ல, உயர்ந்த பதவிகளில் பலர் இருப்பார்கள்.  அவர்கள் எல்லாம் பாடசாலையின் முன்னேற்றத்திற்கௌப் பணம் கொடுக்காமலா இருக்கப் போகிறார்கள்? 

படிப்பறிவில்லாத கிராமங்களிலிருந்து வந்தவர்களே, தொழிற்சாலைகளில் வேலை செய்த பணத்தை, தங்களின் ஊர் நலன்களுக்காக அனுப்புகிறார்கள்.  ஒரு பிரபல பாடசாலையினால் நிதி சேர்க்க முடியாவில்லை என்றால் அதை நடத்துபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  சற்றுச் சிந்தியுற்கள் யாழ. இந்துப் பழைய மாணவர்களே!  உங்கள் பாடசாலையின் பெயரால் நடைபெறும் கூத்துக்களைத் தட்டிக் கேட்க உங்களுக்கும் உரிமை உண்டு.  தவறானவர்களை வழிநடத்த விடாதீர்கள்.  உட்புகுந்து தடுக்கப் பாருங்கள்.  இதற்குக் கல்விமான்களதான் முன்வரவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதைவிடப் பள்ளிக்குடப்  பெயராலை நல்லாத் தண்ணியடிச்சுப்போட்டு வாகனத்தை ஒட்டி எத்தினை விபத்துக்கள் நடக்கும் எண்டதையும் நினைச்சுப்பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த மதுத் தொல்லையால் இப்படியான நிகழ்வுகளுக்குப் போகாதவர்களும் உள்ளார்கள்..! அதையும் மீறிப் போனாலும் அங்கு குடிக்கும்படி வற்புறுத்துவதும், அதை மறுத்தால் இவர் பெரிய இவரு என்பதுபோல் பேசிக்கொள்வதும் நடைமுறையில் உள்ள ஒன்று.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு ஒன்று கூடல் வைத்தால் போயிற்று..குடித்து கும்மாளம் போடும் ஒரு குருப், மற்றது நல்லபிள்ளைகள் குருப்..:

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே சற்றே யதார்த்தமாக பேசுங்கள்.

நீங்கள் வாழும் நாடுகளில் எப்படியோ நான் அறியேன், இங்கு கனடாவில் பெரும்பாலான கொண்டாட்டங்கள் ஆடல், பாடல், மது போன்ற விடயங்களுடன் தான் நடக்கின்றன. நான் அறிந்த வரையில் இப்படியான நிகழ்வுகளுக்கு வருபவர்கள் யாரும் நிறை போதையில் குடித்து விட்டு தள்ளாடுவதையோ, சண்டை பிடிப்பதையோ நான் காணவில்லை.

விழா நடத்துபவர்களும், விழாவில் பங்கு எடுப்பவர்களும் (பெரும்பாலும்) பொறுப்போடு தான் நடக்கின்றார்கள்.

சரி அதை விடுவோம் இப்படி போய் விழாக்களில் குடிப்பது, குடிக்க தருவது தவறா?

இது போன்ற விடயங்கள் ஒன்றும் புதிதாகவோ அல்லது தீண்ட தகாத ஒன்றாகவோ என்னால் பார்க்க முடியவில்லை. ஊரிலும் நாங்கள் ஏற்கனவே இதை ஏதோ ஒரு இடத்தில் செய்தவர்களே. நான் கொழும்பில் வேலை செய்யும் போது (Lanka Medicals, Sri Lankan Airlines) கூட வருட இறுதி பண்டிகை வைப்பார்கள் குடி, கூத்து, கும்மாளம் அளவோடு நடக்கும்.

நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விடயங்களையும் (போராட்டம், உயிர் தியாகம், இயக்கம் போன்ற புனித விடயங்களோடு சேர்த்து ஒப்பீடு செய்து குழப்பிக் கொள்ளாதீர்கள்).

தொழில், தொழில், தொழில் என்றும் குழந்தைகளின் படிப்பு வகுப்பு என்றும் அன்றாடம் அலைந்து திரியும், ஏகப்பட்ட சோகங்களை மனத்தில் சுமந்து திரியும் சாதாரண மனிதன் தன் நண்பர் வட்டாரங்களுடன், குடும்பத்தாருடன் சற்றே மனம் திறந்து, தளர்ந்து உரையாடி மகிழ ஒரு நிகழ்வு, அதிலே அரு சுவை உணவு, தொட்டுக்கொள்ள ஊர்காய் போல சிறிதே மது. இதை எப்படி தவறு என்று கூறுவது?

லியோனியை கூப்பிடலாமா இல்லையா என்ற தீர்மானம் அலசி ஆராய்ந்து பின்னர் எடுக்கப்பட்டு இருந்தால் அது குறித்து இப்போது கேள்வி வருவதற்கு சாத்தியம் இல்லை.

ஆனாலும் தனிப்பட்ட என்னுடைய கருத்தானது… லியோனியை அழைப்பதை விட வேறு ஒரு கலைஞரை , படைப்பாளியை, பேச்சாளரை, சமூக ஆர்வளரை, வரவழைப்பது உசிதமானது.

ஒரு சம்பவம் உங்களுக்கு சொல்லுகின்றேன்.

போன கிழமை இங்கு ஒரு (முதலாவது) பிறந்தநாள் விழாவுக்கு போய் இருந்தேன், மிகவும் கோலாகலமா கொண்டாடினார்கள் ... ஷ்காபூரோ கான்வெங்ஷோன் மண்டபத்தில். சீனர்களின் டிராகன் நடனம், மாஜிக் ஶோ, ஹவாய் பெண்களின் நடனம், நெருப்பு நடனம் இப்படி பல நிகழ்ச்கள். இதிலே ஹவையீ பெண்களின் நடனம் (மார்புக் கவசமாக சிரட்டைகள், மற்றும் குட்டை பாவாடை) அதுவே அவர்களின் கலாசாரம். அவர்கள் அரங்கத்தில் நுழைந்த போது ஒருவரும் கூட கைகளை தட்டி ஆரவாரம் செய்ய வில்லை, அவர்கள் அடிக்கடி கெஞ்சி கை தட்டும் படி கேட்க வேண்டி இருந்தது. எப்படியோ நான் கையை தட்ட ஒரு எங்கள் மேசை அருகே இருந்த ஒரு பெண்மணி என்னை மிகவும் அசிங்கமாக ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து முகத்தை திருப்பினார் பாருங்கள்... என்ன கொடுமை ஸார் இது.

When in Rome, Do as the Romans do:rolleyes: 

நன்றி sasi உங்கள் கருத்துக்கு, புலம் பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் இப்படியான பழைய மாணவர்களின் ஒன்று கூடல்களில் மது, ஆடல்,பாடல் கொண்டாட்டம் என்று தான் நடைபெறுகிறது.

யாழ் இந்து மாத்திரம் இதை செய்யவில்லை. அதைவிட ஒரு பிள்ளையின் பிறந்த நாளையே எவ்வளவு ஆடம்பரமாக எம்மவர்கள் கொண்டாடுகிறார்கள் புலத்தில் என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கும் இதே மது, ஆடல்,பாடல் கொண்டாட்டம் தான்.

இங்கு லியோனி வருவது பற்றி கவலைப்படுபவர்களுக்கு ஒரு செய்தி, அண்மையில் நடந்த இந்துக்களின் போர் கிரிக்கெட் போட்டிக்கு வடமாகாண ஆளுநர் அழைக்கப்பட்டு இருந்தார். அதையும் அவர்கள் கவனத்தில் எடுப்பது நல்லது.

ஏன் வேறு யாரும் கிடைக்கவில்லையா? ஆளுநனரை அழைப்பதை தவிர்த்து, வடமாகாண முதல்வரையோ அல்லது ஒரு பழைய மாணவரை அழைத்து இருக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

Edited by நவீனன்

நண்பர்களே சற்றே யதார்த்தமாக பேசுங்கள்.

நீங்கள் வாழும் நாடுகளில் எப்படியோ நான் அறியேன், இங்கு கனடாவில் பெரும்பாலான கொண்டாட்டங்கள் ஆடல், பாடல், மது போன்ற விடயங்களுடன் தான் நடக்கின்றன. நான் அறிந்த வரையில் இப்படியான நிகழ்வுகளுக்கு வருபவர்கள் யாரும் நிறை போதையில் குடித்து விட்டு தள்ளாடுவதையோ, சண்டை பிடிப்பதையோ நான் காணவில்லை.

விழா நடத்துபவர்களும், விழாவில் பங்கு எடுப்பவர்களும் (பெரும்பாலும்) பொறுப்போடு தான் நடக்கின்றார்கள்.

சரி அதை விடுவோம் இப்படி போய் விழாக்களில் குடிப்பது, குடிக்க தருவது தவறா?

இது போன்ற விடயங்கள் ஒன்றும் புதிதாகவோ அல்லது தீண்ட தகாத ஒன்றாகவோ என்னால் பார்க்க முடியவில்லை. ஊரிலும் நாங்கள் ஏற்கனவே இதை ஏதோ ஒரு இடத்தில் செய்தவர்களே. நான் கொழும்பில் வேலை செய்யும் போது (Lanka Medicals, Sri Lankan Airlines) கூட வருட இறுதி பண்டிகை வைப்பார்கள் குடி, கூத்து, கும்மாளம் அளவோடு நடக்கும்.

நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விடயங்களையும் (போராட்டம், உயிர் தியாகம், இயக்கம் போன்ற புனித விடயங்களோடு சேர்த்து ஒப்பீடு செய்து குழப்பிக் கொள்ளாதீர்கள்).

தொழில், தொழில், தொழில் என்றும் குழந்தைகளின் படிப்பு வகுப்பு என்றும் அன்றாடம் அலைந்து திரியும், ஏகப்பட்ட சோகங்களை மனத்தில் சுமந்து திரியும் சாதாரண மனிதன் தன் நண்பர் வட்டாரங்களுடன், குடும்பத்தாருடன் சற்றே மனம் திறந்து, தளர்ந்து உரையாடி மகிழ ஒரு நிகழ்வு, அதிலே அரு சுவை உணவு, தொட்டுக்கொள்ள ஊர்காய் போல சிறிதே மது. இதை எப்படி தவறு என்று கூறுவது?

லியோனியை கூப்பிடலாமா இல்லையா என்ற தீர்மானம் அலசி ஆராய்ந்து பின்னர் எடுக்கப்பட்டு இருந்தால் அது குறித்து இப்போது கேள்வி வருவதற்கு சாத்தியம் இல்லை.

ஆனாலும் தனிப்பட்ட என்னுடைய கருத்தானது… லியோனியை அழைப்பதை விட வேறு ஒரு கலைஞரை , படைப்பாளியை, பேச்சாளரை, சமூக ஆர்வளரை, வரவழைப்பது உசிதமானது.

ஒரு சம்பவம் உங்களுக்கு சொல்லுகின்றேன்.

போன கிழமை இங்கு ஒரு (முதலாவது) பிறந்தநாள் விழாவுக்கு போய் இருந்தேன், மிகவும் கோலாகலமா கொண்டாடினார்கள் ... ஷ்காபூரோ கான்வெங்ஷோன் மண்டபத்தில். சீனர்களின் டிராகன் நடனம், மாஜிக் ஶோ, ஹவாய் பெண்களின் நடனம், நெருப்பு நடனம் இப்படி பல நிகழ்ச்கள். இதிலே ஹவையீ பெண்களின் நடனம் (மார்புக் கவசமாக சிரட்டைகள், மற்றும் குட்டை பாவாடை) அதுவே அவர்களின் கலாசாரம். அவர்கள் அரங்கத்தில் நுழைந்த போது ஒருவரும் கூட கைகளை தட்டி ஆரவாரம் செய்ய வில்லை, அவர்கள் அடிக்கடி கெஞ்சி கை தட்டும் படி கேட்க வேண்டி இருந்தது. எப்படியோ நான் கையை தட்ட ஒரு எங்கள் மேசை அருகே இருந்த ஒரு பெண்மணி என்னை மிகவும் அசிங்கமாக ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து முகத்தை திருப்பினார் பாருங்கள்... என்ன கொடுமை ஸார் இது.

When in Rome, Do as the Romans do:rolleyes: 

யாழில், கனடாவிலிருந்து நிறையப் பேர் இருக்கிறார்கள்.  ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு கம்பனி செய்வது வேறு.  பாடசாலையின் பெயரில் செய்வது வேறு.  ரோமில் ரோமனாக இருப்பதில் தவறில்லை.  ஆனால், ரோமில் நீங்கள் சைனீசாக இருக்கிறீர்கள், ஹவாயனாக இருக்கிறீர்கள், இன்னும் வேறு வேறு நாட்டவர்களாக இருக்கிறீர்கள்.  மற்றக் கலாச்சாரங்களிலிருந்து நல்லவற்றை எடுக்க வேண்டுமே தவிர, தீயவற்றை அல்ல.  இங்கு பின்பற்றப்படுவது தீய பழக்கங்களையே.  தனிப்பட்ட முறையில்  கொக்ரெயில் பார்ட்டி வைப்பது அவரவர் விருப்பம்.  ஆனால், இது பல கல்விமான்களை உருவாக்கிய பாடசாலை பற்றியது.  சிந்தித்துத்தான் செயற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விழாக்களும் முடிந்தபின் தெரியும்தானே எவ்வளவு ஆதரவு  இதற்கு யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்களால் வழங்கப்பட்டது என்று.

அதை யாரும் பதிவு செய்வீர்களா?

பலரின் பின்னோட்டங்களை பார்க்கும் போது எமது விடுதலை போராட்டம் தான் நினைவிற்கு வந்தது .

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து அது சரி இது பிழை என்று பின்னர் விமர்சனம் வைத்தவர்கள் தான் அதிகம் பேர் .

கனடாவில் பல  பாடசாலைகள் டின்னருக்கு சென்றிருக்கின்றேன் (மத்திய கல்லூரி,வேம்படி ,கொக்குவில் இந்து ,கொழும்பு இந்து ) அனைத்திலும் மதுவுடன் தான் டின்னர் . இவர்கள் எல்லாம் யாழ் இந்து உட்பட குடித்து கும்மாளம் இடுவது என்ற நிலை தாண்டி பல வருடங்கள் .  இந்த ஒரு நிகழ்வு தான் சந்தோஷ ஒன்றுகூடல் .டின்னர் என்றால் மதுவும் டான்சும் அளவுடன் இருக்கும் .(இங்கு பலர் இது வெறும் சில்லறை பாட்டி போல கதைக்கின்றார்கள் ) 

யாழ் இந்து அடுத்த கட்டத்திற்கு போய் பல வருடங்கள் விளிம்பில் நிற்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனைதான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பொருத்தவரையில், இப்படியான நிகழ்வுகளில் மது ஒரு தவிர்க்க வேண்டிய விடயம் அல்ல. ஆனால் தனிபட்ட ரீதியில் எனக்கு விருப்பம் இல்லை அதை பின் சொல்லுகிறேன்-

ஒரு பாடசாலையின் பழையமாணவர்கள் என்போர்; பாடசாலை மாணவர் அல்லர். அவர்கள் பாடசாலையில் கற்று , தமது வாழ்வின் வெவ்வேறு படிகளில் உள்ளவர்கள். அவர்கள் இடையே உள்ள வெளிகள் அதிகம். ஒன்றாக படித்தவர்கள் , நோயாளியாகவும்-வைத்தியாராகவும் , வங்கி முகாமையாளர் ஆகவும் கடன் வாங்குபவராகவும் , பொறியியல்ஆளர் ஆகவும் கொத்தனார் ஆகவும் இருக்க பல சந்தர்பங்கள் உண்டு.

இந்த இடத்தில் மது ஒரு சமூக/வாழ்கை கட்டங்களை மறைக்க உதவும் ..To remove the social inhibition -  ஆனால் எப்பவும் போல அளவிற்க்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே..

நான் சில காலத்திற்கு முன்பு ஒரு கனேடிய தமிழ் காலியான வீட்டுக்கு போனேனேன் – மண்டபத்திற்கு.  500 pm  தொடங்குவது என்று போட்டு 730 க்கும் பிறகுதான் கோலை திறந்தார்கள் ...பிறகு இழுத்து இழுத்து 900 பார் ஓபன் பன்னினார்கள் ...அதற்க்கு முன்பே ஒரு அரை மனித்தியாலதிட்க்கு மேல் , அரைவாசி சனம் பார்ஐ சுத்தி மொச்சு கொண்டு இருந்தார்கள் ...900 மணியில் இருந்து 10:30 மட்டும் சாப்பாடு ..பிறகு பட்டும் ஆட்டமும் ,...மாப்பிளை பொம்பிளை தொடக்கி வைத்தார்கள் ...காது வெடிக்கிற அளவில் சத்தத்தை கூட்டிப்போட்டு,  ஆடத் தொடங்கினால் 2.00- 300 மணி மட்டும் ஆட்டம்

?15-20-22 வயது ஆன் பெண், எல்லோரும் தண்ணியில் மிதந்தார்கள் ...என்னால் நம்ப முடியவில்லை ...(அதிக நட்டகளுக்கு பிறகு போன கலியாணம் ..., ஒவ்வொரு வருடமும் சனம் முன்னேறுகிறது போல ..)

நான் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போன படியால் வெளியில் உள்ள போல் ரூமில் தான் அதிக நேரம் நின்றேன் ...

அதில் ஒரு 1200-1.00 பிறகு எங்கள் ஊர் குடிமக்கள் எல்லாரும் சுழண்டு போய்விட்டார்கள் , பிறகு எல்லாம் கனடியன் குடிமக்களே ...

அவர்களின் படிப்பை கேட்டால் தலை சுத்தும்-அது வேற விடயம்  ...

அப்படியாக உள்ள போது , இப்படி ஒரு நிகழ்வில் குடிவகை பாவிப்பதை பிழை சொல்ல மாட்டேன் ...யாரும் இந்த நிகழ்வுகுளுக்கு குடிக்கத்தான் வருகிறார்கள் என்று கருத தேவையில்லை ...இந்த நாடுகளில் குடி வகைகளின் விலையோடு ஒப்பிடும் செலவளிக்கும் நேரம் பெறுமதி கூடியது

ஆனால் எனக்கு தனிபட்ட ரீதியில் பிடிக்காது;

ஆட்டத்திற்க்காக சத்தத்தை கூட்டினால் , பிள்ளைகளை கொண்டு போவபர்களுக்கு மிக இடைஞ்சல் , - எனக்கும் 18 வயதில் பிள்ளைகள் இருந்தால் நானும் 2-3 பெக் இழுத்து போட்டு ஆட சொல்லும் , ஆனால் இப்ப எனக்கு , பிள்ளையை இன்னுமொரு இடத்தில் விட்டு போட்டு -அதற்க்கும்  காசு கொடுத்து , இந்தமாதிரி பார்ட்டிகளுக்கு போக ஒரு வில்லண்கமும் இல்லை ...

100 பேர் ஒழுங்காக இருந்தாலும் 2 பேர் குழப்பினால், அன்றைய நிகழ்வே பாழாக போகும் ..யாழ்பாணத்து பிக் மட்ச்க்கு நடந்த மாதிரி ...

அதே போல இன்னுமொரு மிக முக்கிய பிரச்சனை ;

இந்துக் கல்லூரி செய்கிறது என்று , வடமராச்சி கிழக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையும் நாளைக்கு 10-20 பழைய மாணவர்களை கொண்டு இதேமாதிரி கோல் எடுத்து , இந்தியாவில் இருந்து நட்சத்திர பட்டாளத்தை கூட்டி கொண்டு வந்து தானும் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கதிற்க்கு நிகராக கனடாவில் "இயங்குகிறோம் " என்று பந்தா காட்ட ஒரு தூண்டுகோலாக இருப்பதால் இதை விரும்ப வில்லை...இந்து கல்லூரி பழைய மாணவரிடம் அதிக பணம் இருந்தால் இந்தமாதிரி சின்ன சின்ன பள்ளிகூடங்களுக்கும் உதவலாம் ...

இந்த இடத்தில் மது  பழைய சந்தோசங்களை நினைவுபடுத்த, ஒரு சமூக/வாழ்கை கட்டங்களை மறைக்க உதவும் ..To remove the social inhibition -  ஆனால் எப்பவும் போல அளவிற்க்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே..

நான் சில காலத்திற்கு முன்பு ஒரு கனேடிய தமிழ் காலியான வீட்டுக்கு போனேனேன் – மண்டபத்திற்கு.  500 pm  தொடங்குவது என்று போட்டு 730 க்கும் பிறகுதான் கோலை திறந்தார்கள் ...பிறகு இழுத்து இழுத்து 900 பார் ஓபன் பன்னினார்கள் ...அதற்க்கு முன்பே ஒரு அரை மனித்தியாலதிட்க்கு மேல் , அரைவாசி சனம் பார்ஐ சுத்தி மொச்சு கொண்டு இருந்தார்கள் ...900 மணியில் இருந்து 10:30 மட்டும் சாப்பாடு ..பிறகு பட்டும் ஆட்டமும் ,...மாப்பிளை பொம்பிளை தொடக்கி வைத்தார்கள் ...காது வெடிக்கிற அளவில் சத்தத்தை கூட்டிப்போட்டு,  ஆடத் தொடங்கினால் 2.00- 300 மணி மட்டும் ஆட்டம்

?15-20-22 வயது ஆண், பெண், எல்லோரும் தண்ணியில் மிதந்தார்கள் ...என்னால் நம்ப முடியவில்லை ...(அதிக நாட்களுக்கு பிறகு போன கலியாணம் ..., ஒவ்வொரு வருடமும் சனம் முன்னேறுகிறது போல ..)

நான் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போனபடியால் வெளியில் உள்ள போல் ரூமில்தான் அதிக நேரம் நின்றேன் ...

அதில் ஒரு 1200-1.00 பிறகு எங்கள் ஊர் குடிமக்கள் எல்லாரும் சுழண்டு போய்விட்டார்கள் , பிறகு எல்லாம் கனடியன் குடிமக்களே ...

அவர்களின் படிப்பை கேட்டால் தலை சுத்தும்-அது வேற விடயம்  ...

அப்படியாக உள்ள போது , இப்படி ஒரு நிகழ்வில் குடிவகை பாவிப்பதை பிழை சொல்ல மாட்டேன் ...யாரும் இந்த நிகழ்வுகுளுக்கு குடிக்கத்தான் வருகிறார்கள் என்று கருததேவையில்லை ...இந்த நாடுகளில் குடி வகைகளின் விலையோடு ஒப்பிடும் செலவளிக்கும் நேரம் பெறுமதி கூடியது

ஆனால் எனக்கு தனிபட்ட ரீதியில் பிடிக்காது;

ஆட்டத்திற்க்காக சத்தத்தை கூட்டினால் , பிள்ளைகளை கொண்டு போவபர்களுக்கு மிக இடைஞ்சல் , - எனக்கும் 18 வயதில் பிள்ளைகள் இருந்தால் நானும் 2-3 பெக் இழுத்து போட்டு ஆட சொல்லும் , ஆனால் இப்ப எனக்கு , பிள்ளையை இன்னுமொரு இடத்தில் விட்டு போட்டு -அதற்க்கும்  காசு கொடுத்து , இந்தமாதிரி பார்ட்டிகளுக்கு போக ஒரு வில்லண்கமும் இல்லை ...

100 பேர் ஒழுங்காக இருந்தாலும் 2 பேர் குழப்பினால், அன்றைய நிகழ்வே பாழாக போகும் ..யாழ்பாணத்து பிக் மட்ச்க்கு நடந்த மாதிரி ...

அதே போல இன்னுமொரு மிக முக்கிய பிரச்சனை ;

இந்துக் கல்லூரி செய்கிறது என்று , வடமராச்சி கிழக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையும் நாளைக்கு 10-20 பழைய மாணவர்களை கொண்டு இதேமாதிரி கோல் எடுத்து , இந்தியாவில் இருந்து நட்சத்திர பட்டாளத்தை கூட்டி கொண்டு வந்து தானும் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கதிற்க்கு நிகராக கனடாவில் "இயங்குகிறோம் " என்று பந்தா காட்ட ஒரு தூண்டுகோலாக இருப்பதால் இதை விரும்பவில்லை...இந்து கல்லூரி பழைய மாணவரிடம் அதிக பணம் இருந்தால் இந்தமாதிரி சின்ன சின்ன பள்ளிகூடங்களுக்கும் உதவலாம் ...

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி மண்டபத்துக்கு வெளியே வாகனங்களில் சரக்கை கொண்டு வந்து பின் சீட்டில் குந்தி இருந்து குடித்து விட்டு கமுக்காமாய் உள்ளே போய் இருப்பது சரியா?

இந்த செயலால் யாழ் இந்து கல்லூரியின் பெயர் பாழாய் போவதாய் கூறுபவர்கள் , புனித பத்திரீசியார் (St.Patricks), Saint Johns Collage, யாழ்பாணக் கல்லூரி, இன்னும் பல கல்லூரிகளின் இம்மாதிரியான செயல்களின் போது ஒழுக்க நடவடிக்கை குறித்து கவலை கொண்டது உண்டா?

எனக்கு ஏதோ இதை அர்ஜூன்  ஒரு முக்கிய செயல் பாட்டாளர் என்ற வகையில் செய்வதால் மட்டுமே அவர் மேல் கோவம் கொண்டு...( I don't know)

மற்றும் படி இந்த நிகழ்வு ஒன்றும் எமது தேசிய சிந்தனைக்கோ, தேசிய நலனுக்கோ விடுக்கப்படும் சவால் அல்ல. நாம என்ன அவ்ளோ வீக்கா !!! :blink:  

இங்கு உங்கள் பதின்ம வயது பிள்ளைகளின் (high school graduation party) தினத்தின் போது அவர்களுக்கு பிடித்த date உடன் limo வண்டியில் போய் ஏதோ ஒரு விடுதியில் சந்தோஷமாக ஆடி, பாடி திளைத்து வருவதை எப்படி எதிர் கொள்வீர்கள்?

எது எப்படியோ ரசாமாரே ...நம்மளால 3 (stella) பீருக்கு மேல போக முடியாது !!!

அப்படியே போனாலும் இளயராஜா எஸ் பீ பாலு அண்ணா                                            

இவுங்க பாட்டுக்கள் மட்டுமே என்னில் மிஞ்சும்...விஞ்சும்...

  • கருத்துக்கள உறவுகள்

குடித்துக் கும்மாளம் அடிக்கனுன்னா... கிளப்பிங்.. பப்பிங் என்று போங்கோ.

கவர்ச்சி நடனமும்.. குடியும்.. கும்மாளமும் என்றால்.. ஸ்ரிப் கிளப் போங்கோ.. யார் வேணான்னு தடுக்கினம்.

பொதுவாக.. பல்கலைக்கழகங்கள்.. பாடசாலைகள் பெயரால் நடத்தப்படும் நிகழ்வுகளில் வெள்ளைகள் கூட.. அதற்குரிய மதிப்போடுதான் நடந்து கொள்வார்கள். குறை அற்ககோல் உள்ள வைன் மட்டும் கெளரவமாக மேசையில் இருக்கும். நிறைய uni alumini நிகழ்வுகளில் பங்குபற்றிய அனுபவம் உண்டு. அங்கெல்லாம்.. வெளியாரை கூட்டி வந்து டான்ஸ் போடுவது கிடையாது. பழைய மாணவர்கள் தான் எல்லாத்தையும் வழங்குவார்கள். கூடுதலாக எதுவும் முன்னர் ரிகேசல் பார்க்கப்பட்ட நிகழ்வுகளாகக் கூட இருப்பதில்லை. அந்த இடத்தில் தீர்மானிப்பது. அந்தந்த கல்விக்கூடத்துக்குரிய பாரம்பரியம் அங்கு மிளிர்வதைக் காணலாம்.

இங்க என்ன நடக்குது..???! ஒரு புகழ்பூத்த கல்லூரியின் ஒன்றுகூடலில்.. 3ம் தர பட்டிமன்றம். ஏன் யாழ் இந்து வளர்த்துவிட்ட எத்தனையோ கல்விமான்கள் உள்ளனர் அவர்களில் சிலரைக் கூப்பிட்டு பேச வைச்சு..அந்த அனுபவப் பகிர்வுகளை ஒலி ஒளியாக பதிவு செய்து மாணவர்களுக்கும் சமர்ப்பிக்கலாம். யாழ் இந்துக் கலைஞர்களே ஏராளமாக உள்ளனர். அவர்களைக் கொண்டு நிகழ்வுகளை நடத்தலாம். ஆடல் பாடல் தேவை என்றால்.. இறுதி நிகழ்ச்சியாக.. கல்லூரிப் பாடல்கள்.. தாயகப் பாடல்கள்.. தமிழ் மொழிப் பாடல்கள்.. பிறமொழிப் பாடல்கள்.. சினிமா என்று போகலாம். யாழ் இந்து பழைய மாணவர்கள் சிலர் நல்ல பாடகர்களாக உள்ளனர். பரத நாட்டியம்.. மேற்கத்தையே நாட்டியங்கள் கூட ஆடுவார்கள். யாழ் இந்து நாடகக் குழு மாகாண மட்டத்திலும்.. தேசிய மட்டத்திலும் விருதுகளைப் பெற்றதுண்டு. அவை எல்லாம் எங்கே..??! கல்லூரிக் காலத்தின் பின் அவை ஏன் வளர்க்கப்படவில்லை...????!! யார் தவறு அவர்கள் தம் திறமைகளை  தொடர்ந்து வளர்க்காமைக்கு..???! அதனை இங்கு இப்படியான நிகழ்வுகளூடு சரிக்கட்டலாம் தானே. எமது கல்லூரி நாடகக் குழுவை வளர்த்து.. கல்லூரி தனக்கென குறும்படங்களை தயாரித்து வெளியிடலாம். அதனை காட்சிப்படுத்தலாம். இவை தான் கல்லூரியின் பெருமையை சொல்ல செய்யுற.. வளர்க்கிற விடயங்கள். அதன் மூலம் பெறப்படுற பணத்தை கல்லூரிக்கு கொடுப்பது தான் நியாயம்.

அதைவிடுத்து.. மதுவும்... ஆட்டமும்.. கவர்ச்சியும் காட்டி.. ஒரு கல்லூரி நிகழ்வை நடத்தி.. அதில் வரும் அசிங்கக் காசில் (விபச்சாரியும் இப்படித்தான் காசு சம்பாதிக்கிறாள்).. யாழ் இந்துக் கல்லூரி வாழனுன்னு ஒரு தலைவிதி இல்லை.

இங்கு யாருமே ஆடல் பாடல் தேவை இல்லை என்று சொல்லவில்லை. அது இங்கு மட்டுமல்ல.. எங்கும் இருக்கிறது. தாயகத்திலும்.. பல்கலைக்கழக நிகழ்வுகளில்.. இறுதியில் சொந்த இசைக்குழுக்களின் இசையில்.. ஆடல் பாடல் நிகழ்வதுண்டு. அதிக போதை தராத வைன் வகைகள் சிறிய அளவில் நாகரிகமாக பரிமாறப்படுவதுண்டு. அவை தவறும் அல்ல. ஆனால்.. ஒரு பாடசாலை நிகழ்வை.. ஆரம்பம் முதல் இறுதி வரை.. போதையில்.. ஆட்டத்தில்.. கூத்தில் நடத்துவது என்பது அறிவிலித்தனமானது. நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளின் செயலாகவே பார்க்கப்படும். அதுதான் பிற்போக்கானது. லியோனி.. என்ன.. பட்டிமன்றம் செய்யப் போறார்.. யாழ் இந்து 21ம் நூற்றாண்டில்.. சமூகக் கலைக்கூடமாக இருக்குமா.. அறிவியல் கலைக்கூடமாக இருக்குமா என்றா..??! அந்தளவுக்கு விவாதிக்கக் கூடிய அறிவு... லியோனியிடம் கிடையாது. அவர் இந்திய சினிமா சார்ந்த ஒரு பட்டிமன்றப் பேச்சாளரே தவிர யாழ் இந்து பற்றி அவருக்கு ஒரு மண்ணும் தெரியாது. இதனை ஒழுங்கமைப்பவர்களுக்கும் யாழ் இந்துவின் இன்றைய தேவை என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம்.. கல்லூரியின் பெயரால்.. ரிலாக்ஸ் எடுக்க நிற்கிறார்களே தவிர.. கல்லூரியின் பெருமையையும் சிறப்பையும் எதிர்காலத்தையும் இதன் மூலம் வளர்க்க நினைப்பதாகத் தெரியவில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக்கல்லூரி, இலங்கைத்தீவில் இருக்கின்ற பாடசாலைகளிலேயே முதன்மையானது அதிக வசதிகளையுமுடைய சிறீலங்காவினது விசேட கவனிப்புகளுக்குள் அடங்கும் பாடசாலைகளது பட்டியலில் முதன்மையானதுமாகும். இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் இருக்கின்ற ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிட்டால் மைலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் இக்கல்லூரிகளுக்கு இடையில் இருக்கும்.

ஒரு சில வருடங்கள் நானும் அப்பாடசாலையில் படித்துள்ளேன், அதுவேறுவிடையம்.

இருந்தாலும் இப்பாடசாலையில் படிக்கின்ற அனேகமான மாணவர்கள் ஒன்றும் படிக்க வசதியில்லாதவர்களோ அன்றேல் பிந்தங்கிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்களோ இல்லை. ஒன்றில் யாழ்ப்பாண மேல்நடுத்தர வர்க்க அன்றேல் செல்வந்தக் குடும்பங்களிலிருந்து வந்த புலமைப்பரிசில் திட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ருக்கொள்ளுமளவுக்கு அப்பரீட்சைக்கான தயாரிப்பு வேலைகளில் பணத்தை வாரியிறைத்து பிள்ளைகளிப் புலமைப்பரிசில் திட்டத்திற்கு ஆயத்தப்படுத்தக்கூடிய குடும்பங்களிலிருந்த வந்த மாணவர்களே அங்கு கற்கக்கூடியவர்களில் அனேகர்.

தவிர, இது ஒரு அரசாங்க பாடசாலை, இருந்தும் மாணவர்களது சேர்க்கைக்காக பெரும்தொகைபணத்தை அறவிட்டுக்கொள்ளும் பாடசாலையாகும்.

வடக்கில் காணப்படுகின்ற அதிசிறந்த மாணவர்களை வடிகட்டி எடுத்து பாடசாலை வாங்கில்களை நிரப்பி கற்பிப்பதால் மட்டும் அம்மாணவர்கள் முதன்மை மாணவர்களாக வந்துவிடுவதில்லை. அம்மாணவர்கள் குடாநாட்டில் காணப்படும் அதிசிறந்த மாலைநேர, வாரவிடுமுறைகால டுயூட்டரி வாங்கில்களை உட்கார்ந்து கூர்தீட்டபட்டெ அவர்கள் கபொத தேர்வுகளுக்குத் தயாராகின்றனர், ஆக யாழ் இந்துக்கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் மினிமம் கரண்டி அடிப்படையில் அக்கல்லூரி நிர்வாகத்தால் தேர்வுசெய்யப்பட்டவர்கள்.

ஆக புலம்பெயர் நாடுகளில் வாழும் யாழ் இந்துவின் மைந்தர்கள் அக்கல்லூரிக்கு பெரிதாக ஒன்ற்ரும் சிய்யவேண்டிய அவசியம் இல்லை.

தேவை எங்கிருக்கின்றதோ அங்கு நாம் செய்வதே சிறந்தது. காலத்தால் கைவிடப்பட்ட பல கல்லூரிகள் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாது வடக்குக்கிழக்கில் இருக்கின்றன, பாடசாலைக் கட்டணம் கட்ட வழியிலாது சிறுவர்கள் திருட்டில் ஈடுபட்டு சிறுவர் நன்னடத்திமுகாமுக்கு அனுப்பப்பட்ட செய்தி கடந்தவாரம் வந்திருக்கின்றது.

ஆகவே யாழ் இந்துவின் மைந்தர்கள் உங்களால் இயன்ற உதவிகளை இப்படியான பாடசாலைகளைத்தேர்ந்தெடுத்து யாழ் இந்துவின் பெயரில் உதவிசெய்வதே சாலச்சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு.. உங்கள் கருத்து முற்றிலும் சரியானதல்ல.

யாழ் இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலையாக முன்னணிப் பாடசாலையாக இயங்குகின்ற போதிலும்.. அதற்கு சிங்கள அரசு அளிக்கும் வசதிகள் போதாது. பல விடயங்களில் கல்லூரி பழைய மாணவர் சங்கங்களின் பங்களிப்பையே எதிர்பார்த்து நிற்கிறது. சிங்கள அரசை நம்பிக் கொண்டிருந்திருந்தால்.. இன்னும் அந்த சுண்ணாம்புக்கட்டிடத்தில் தான் கல்லூரி இயங்கிக் கொண்டிருக்கும்.

மேலும் கல்லூரிக்கு திறமை அடிப்படையில் தெரிவானவர்களிடம் காசு அறவிடப்பட்டதாகத் தெரியவில்லை. நாங்க எல்லாம் இணையும் போது காசு அறவிடப்படவில்லையே..??! ஒருவேளை பின்கதவால் உள்ள வர காசு அறவிடப்பட்டிருக்கலாம். அப்படி நடந்ததாக நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியான சிலர் இப்போ கல்லூரியோடு இல்லை. இப்போது புதியவர்கள் முளைச்சிருக்கலாம்.

எமது கல்லூரிக்குரிய அடிப்படை வளங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தான் நிதியை மற்றைய கல்லூரிகளுக்கு பங்கீடு செய்யலாம்.  கட்டாய நிதி தேவைப்படும் கல்லூரிகள்.. பாடசாலைகள்.. யாழ் இந்துக் கல்லூரி அதிபரை.. அபிவிருத்தி சங்கத்தை தொடர்பு கொண்டு.. பேசிக் கொள்வதே சிறந்தது.

ஆனால் யாழ் இந்துக்கல்லூரி 100% வளத்திருப்தியோடு செயற்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கல்லூரிக்கு என்று இன்னும் நிறையத் தேவைகள் உள்ளன. அதில் அடிப்படைத் தேவைகளும் அடங்கும். இதனை சிங்கள அரசு பூர்த்தி செய்து கொடுக்கும் என்றில்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இந்துவின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் நிகழ்வில் லியோனியின் பட்டிமன்றம் எந்தவிதமான முறையிலும் பார்வையாளர்களை ஈர்க்கப்போவதில்லை.
யாழ் இந்துவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் எப்படியும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்
லியோனிக்குப் பதிலாக இலங்கைத் தூதுவரை அழைத்தாலும் அக்கறையுள்ளவர்கள் வரத்தான் செய்வார்கள்

இப்ப இங்கை பிரச்சனை என்னவெண்டால் பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்கள்
கொண்டாட்டத்துக்கு ஆள் பிடிப்பதுக்கு தண்ணியை வாரி இறைப்பதுதான்.

பாடசாலை நிகழ்வு என்பது வேறு களியாட்ட நிகழ்வு என்பது வேறு
பாடசாலை நிகழ்வில் பாடசாலை சார்ந்த கலை கலாச்சாரம் பேணப்படுதல் அவசியம்
அப்படிப்பார்த்தால் தமிழர்களின் கலைநிகழ்வுகளும் கலாச்சார நிகழ்வுகளுமே நடத்தப்படவேண்டும்.
புலம்பெயர்ந்த யாழ் இந்துவின் பழைய மாணவர்களின் பிள்ளைகள்
கலை ஆர்வம் இல்லாதவர்களா
அவர்களின் நிகழ்ச்சிகளை என் இந்த விழாவில் அனுமதிக்கக்கூடாது.
அவர்களுக்குப் பட்டிமன்றத்தில் ஆர்வம் இல்லையா?
பாரத நாட்டியம் கற்கவில்லையா?
நாடகங்களில் நடிக்க ஆர்வம் இல்லையா?
இருக்குது ஆனால் பழைய மாணவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை இதுவே உண்மை அவர்களுக்குத் தண்ணி அடிப்பதிலும்
மேற்கத்திய இசைக்குத் தாளம் தெரியாமல் ஆடுவதுக்க்மே அரவம் உள்ளது.
தங்கள் ஆசைகளை மற்றவர்கள் மீது திணிப்பதில் தமிழர்களுக்க்ச் சொல்லியா கொடுக்க வேண்டும்

நாங்கள் 1976 களிலே விடுதியில் தங்கியிருந்த போது  யாழ் இந்துவின்  நவராத்திரி விழாக்களில்
வில்லுப்பாட்டுச செய்த போது அன்றைய விடுதிப் பொறுப்பாளரான ஆசிரியர் எங்களுக்க்த் தந்த ஒத்துழைப்பு மாதிரி புலம்பெயர்ந்த முன்னாள் ஆசிரியர்கள் இப்படியான மதுப்பாட்டிகளுக்கு ஆதரவு அளிக்கின்றார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வருடம் நாலு நிகழ்வு நடத்துக்கின்றோம் .

கலையரசி -கலை நிகழ்ச்சி.

(புலம்பெயர்ந்த யாழ் இந்துவின் பழைய மாணவர்களின் பிள்ளைகள்
கலை ஆர்வம் இல்லாதவர்களா?
அவர்களின் நிகழ்ச்சிகளை என் இந்த விழாவில் அனுமதிக்கக்கூடாது.
அவர்களுக்குப் பட்டிமன்றத்தில் ஆர்வம் இல்லையா?
பாரத நாட்டியம் கற்கவில்லையா?
நாடகங்களில் நடிக்க ஆர்வம் இல்லையா?) 
உங்கள் ஞாயமான கேள்விகளுக்கு இந் நிகழ்வில் மட்டுமே பதில் கிடைக்கும்.

பிக்னிக் -யாழ் இந்து காட்லி கிரிக்கெட் மட்சும் வெளிகள விளையாட்டும் ,

வாக்கதொன் -கனேடிய வைத்தியசாலைகளுக்கு நிதி உதவி .

டின்னர் -பழைய மாணவர்கள் ஒன்று கூடல் .  

இதில் யாருக்கு என்ன பிரச்சினை ... எனக்கு உண்மையில் புரியவில்லை ..இது பழய மாணவர்கள் கூடி சந்தோசப்படும் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி மட்டுமே. இந் நிகழ்வை விபச்சாரத்தோடு ஒப்பிடுவது மிகவும் வருந்ததக்கது.

(ஆனாலும் உங்கள் கருத்துக்களை நான் மதிக்கின்றேன்.)

யாழ் ஒரு பொழுது போக்குத்தளம் .

இதில் கருத்து எழுதுவதும் அதை விவாதிப்பதும் போற்றுவதைம் தூற்றுவதையும் பெரிது படுத்தி ஒருவரோ ஒரு அமைப்போ தனது செயற்பாடுகளை மாற்றபோவதில்லை .

அதை விட பலரின் பின்னூட்டங்கள் இவர்கள் இப்படியான நிகழ்வுகள் எதுவும் நடத்தியவர்களாகவோ அல்லது அதற்கு போனவர்களாகவோ தெரியவில்லை .

என்ன நடக்கின்றதேன்றே தெரியாமல் வழக்கம் போல வெறும் வசவுகளும் சப்பை கட்டுகளும் தான் அதிகம் .

  • தொடங்கியவர்

நாங்கள் கூத்தடிக்கவும்,சந்தோசமாக இருக்கவும் பழைய மாணவர் ஒன்றியங்கள் நிகழ்வுகளை நடாத்துகின்றன. அதில் வருமானம் வரும் அதை அந்த பாடசாலைக்கு அனுப்பி நல்லது செய்கிறோம் என்றதெல்லாம் பொய்.

ஆனால் வேறு வழியில் காசு சேர்த்து  உதவுகிறார்கள் என்பது  வேறு விடயம்.

லியோனி வாறதாலோ, மதுக்கடை திறப்பதாலோ  வருமானம்  வரும் எல்லாரும்  கை கொடுங்கோ என்று சொல்வதெல்லாம ஏற்க முடியாது.

நான் அறிந்த வரையில் இலன்டன் யாழ் இந்து இரு பிரிவாக இயங்குவதாக சொன்னார்கள் உண்மை தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கூத்தடிக்கவும்,சந்தோசமாக இருக்கவும் பழைய மாணவர் ஒன்றியங்கள் நிகழ்வுகளை நடாத்துகின்றன. அதில் வருமானம் வரும் அதை அந்த பாடசாலைக்கு அனுப்பி நல்லது செய்கிறோம் என்றதெல்லாம் பொய்."

தவறு நேசன்...என்னால் ஆதாரத்தோடு கூற முடியும் நிறைய நல்ல காரியங்கள் இவ்வாறான நிகழ்வுகளின் மூலமாகவும் நடந்துள்ளது, நடக்கின்றன.

தவிர இவர்களின் விழா விளம்பரத்தில் எங்கேயும்

லியோனி வாரார், மதுக்கடை திறப்போம் வருமானம்  வரும் எல்லாரும்  கை கொடுங்கோ என்று கேட்பாதாய் எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1901465_10202484903636243_1640639550_n.j

  • கருத்துக்கள உறவுகள்

தவிர இவர்களின் விழா விளம்பரத்தில் எங்கேயும்

லியோனி வாரார், மதுக்கடை திறப்போம் வருமானம்  வரும் எல்லாரும்  கை கொடுங்கோ என்று கேட்பாதாய் எனக்கு தெரியவில்லை.

இதில் COCKTAILS 5.30 க்கு  ஆரம்பிக்கும் என்றிருக்கிறது

இதன் அர்த்தம் என்ன  சசி???

நீங்கள் அர்யூனுக்கு வக்காலத்து வாங்க  வெளிக்கிட்டு

எல்லாவற்றையும் மறைக்கின்றீர்கள் போலுள்ளது...

இப்படியும் பார்க்கலாம்

இது எல்லா இடமும் உண்டு தானே  என்ற  தங்கள் கருத்துப்படி

தற்பொழுது பாடசாலைகள் அனைத்திலும் உண்டு தானே

அவற்றிலும் இவற்றை  அனுமதித்தால் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்துச் சொல்பவர்கள் பலரும் யாழ் இந்துவின் பழைய மாணவர்கள் தான். சிலர் இதனை மட்டமாக தமது வழமையான எதேச்சதிகார போக்கில் எடுத்துக் கொண்டு தாங்கள் நினைத்ததை தங்களுக்கு வேண்டியதை கல்லூரியின் பெயரால் செய்து வருகிறார்கள். செய்ய முற்படுகிறார்கள். இவற்றிற்கு முடிவெழுதும் காலம் வரும். வர வைப்போம்..! இதன் மூலமே கல்லூரியின் எதிர்காலமும் மகத்துவமும் விழுமியங்களும்.. பேணிப் பாதுகாக்கப்பட முடியும். அத்தோடு இன்று ஒதுங்கி நிற்கும் பழைய மாணவர்கள் பலரின் காத்திரமான பங்களிப்புக்களை கல்லூரியின் எதிர்காலம் நோக்கி கொண்டு வர முடியும். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் என்பது.. பப்போ.. கிளப்போ.. ஸ்ரிப் டான்ஸ் போடும்.. விபச்சார மையங்களோ அல்ல. அவை கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டிய இடங்கள் ஆகும். அதனைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள்.. பழைய மாணவர் சங்கங்களை விட்டு வெளியேறிப் போகலாம். போய் பப்களில்.. கிளப்களில் குடிக்கலாம்..டான்ஸ் போடலாம். யாரும் தடுக்கமாட்டார்கள். கேள்வி கேட்கவும் மாட்டார்கள். கல்லூரியின் பெயரால் இவற்றை செய்ய முற்பட்டலால்.. நிச்சயம் காத்திரமான எதிர்வினைகளை சந்தித்துதான் ஆக வேண்டி இருக்கும். ஒரு ஆசிரியர் சரியில்லை என்றாலே தூக்கி வெளில போடத் தயங்காதவர்கள் யாழ் இந்து மாணவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.