Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தியின் சுயரூபம் தெரியுமா?; கிழக்கில் துண்டுபிரசுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு பத்து வருசம் விட்டாலும் அர்ச்சுணும் சிலதுகளும் இதே அரைச்ச மாவை அரைச்சு கொண்டே இருப்பினம்....   போர் முடிந்து ஐஞ்சு வருசமாச்சு...  என்னத்தை கிளிச்சார்கள் எண்டு கேட்டு பாருங்கோ...  புலிகளை திட்டினம் எண்டதுக்கு மேலை ஒண்டுமே இருக்காது...   

விமர்ச்சனம் மட்டும் செய்கிறவர்களுக்கு பெயர் மாற்றுக்கர்த்தாளர்களா......??    

செயலாற்றியவர்களாக இருந்தாலும் இண்டு செயலாற்றுபவர்களாக இருந்தாலும் எல்லாம் புலிகளின் பின்னாலை நிண்டவர்களாலை மட்டும் தான் முடியுமாக்கும் ...  மற்றவை அவர்கள் பிழை விட்டார்கள் எண்டு  மறைஞ்சு நிண்டு  ஓலமிடுவினம்... 

ஒருவேளை தடை பட்டியலிலை தங்கட பெயரும் வந்திடும் எண்டு பயப்பிடுகினமோ...?? 

சிந்திக்க வேண்டிய, அருமையான.... கருத்து தயா. :)

சிந்திக்க வேண்டிய, அருமையான.... கருத்து தயா. :)

அதில் பெரிதாக சிந்திப்பதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை...அவர் ஒன்றே சொல்லுகிறார்..புலிகளை "எல்லாரும்" கும்பிடுங்கள் என்று...

Lyca காரர் எது செய்தாலும் பிழை..அர்ஜூன் தனது பள்ளிக்கூடத்திற்கு காசு சேர்த்து அனுப்பினால் அதிலும் பிழை...

இங்கு புலிகளின் வழியை தவிர யார் எது செய்தாலும் பிழை என்ற கண்ணோட்டத்தோடு தான் "சிலர்" உள்ளார்கள்...

புலிக்கு வெளியேயும் தமிழர்கள் உள்ளார்கள்...அது சிலருக்கு விளங்கவில்லை...

அர்ஜூனின் கருத்துப்படி புலிகளால் தான் பேரழிவு வந்தது....அவர் பிழை என்று சொல்ல ஏதாவது இருக்கிறதா...

ஜெனிவாவில் வென்ற களிப்பு ஆறுமுன் இன்னும் இறுகிய இராணுவ நடவடிக்கை  தமிழர் பகுதியில் :) :)

மூன்று பேரை சுட்டுகொன்றும்..... இலங்கை தோற்கிறதா.....இன்னும் 25வருடத்தில் எங்களுக்கு வெற்றியா?

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

.

ஜெனிவாவில் வென்ற களிப்பு ஆறுமுன் இன்னும் இறுகிய இராணுவ நடவடிக்கை தமிழர் பகுதியில் :) :)

மூன்று பேரை சுட்டுகொன்றும்..... இலங்கை தோற்கிறதா.....இன்னும் 25வருடத்தில் எங்களுக்கு வெற்றியா?

தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். சிங்களவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்கள் தளங்களில் நோட்டமிட்டேன். 'சோழர்கள் காலத்திலிருந்து சமாளிக்கிறோம். ஜெனிவாவையும் சமாளிப்போம்', 'இன்றைய கடினமான நாட்களில் இருந்து லங்கா அம்மா மீண்டு வரவேண்டும்', 'மகிந்த குடும்பம் நாட்டை சீரழித்து விட்டது', நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டது' என்றுதான் எழுதுகிறார்கள். புலி என்கிற சொல்லே அரிதாகத்தான் காணப்படுகிறது. மாறாக சிறுநீர் ஈழவாதிகள் (peelamists) என்றுதான் தமிழர்களை விளிக்கிறார்கள். :wub:

ஆக, புலிப்புராணம் கேட்க வேணும் என்றால், தமிழ் ஊடகங்களுக்குத்தான் வரவேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் செய்த கொலைகள் இன்று கேள்வியில்லாமல் போவதற்கு ஒரே காரணம் அதற்கு இணையாக புலிகள் செய்த கொலைகள் தான் .

எந்த கோர்ட்டிற்கு சென்றாலும் நீங்கள் திறமோ என்று கேட்கின்றான் . 

பொத்திக்கொண்டு வரவேண்டிக்கிடக்கு .

? நீங்கள் எங்கு சென்று படுகொலைப் பற்றிக் கதைத்துப் பொத்திக் கொண்டு வந்தீர்கள். இதை நாங்கள் நம்ப வேண்டும்.... சரி. புலிகள் படுகொலைகள் செய்தவர்கள் என்பதாக இருக்கும். உலகம் அவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டுள்ளது! ஆனால் அதை விட அதிகமாச் செய்த ஏன் சிங்கள அரசினை ஏன் பயங்கரவாத அரசாக முத்திரை இடவில்லை. அதில் நியாயம் வேண்டமா? புலிகளோடு தங்களை ஒப்பீடு செய்தால் இவற்றுக்கும் சிங்கள அரசோடு ஒப்பீடு செய்ய வேண்டும்.

Edited by தூயவன்

மூன்று சிறி லங்கன் லவுட் ஸ்பீக்கர் அலறுதென்றால் இந்த பதிவால் ஆதாயம் இருக்கிறது.

ஒரே அவியலை திருப்பி அவிப்பார்கள். ஒருத்தரும் சிறி லங்கா எதிர்ப்பு பதிவுகள் பக்கம் வரமாட்டார்கள். முக்கியமாக ஒரு ஆங்கில செய்தியை தொட மாட்டார்கள் மெத்த சுருட்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதில் பெரிதாக சிந்திப்பதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை...அவர் ஒன்றே சொல்லுகிறார்..புலிகளை "எல்லாரும்" கும்பிடுங்கள் என்று...

Lyca காரர் எது செய்தாலும் பிழை..அர்ஜூன் தனது பள்ளிக்கூடத்திற்கு காசு சேர்த்து அனுப்பினால் அதிலும் பிழை...

இங்கு புலிகளின் வழியை தவிர யார் எது செய்தாலும் பிழை என்ற கண்ணோட்டத்தோடு தான் "சிலர்" உள்ளார்கள்...

புலிக்கு வெளியேயும் தமிழர்கள் உள்ளார்கள்...அது சிலருக்கு விளங்கவில்லை...

அர்ஜூனின் கருத்துப்படி புலிகளால் தான் பேரழிவு வந்தது....அவர் பிழை என்று சொல்ல ஏதாவது இருக்கிறதா...

ஜெனிவாவில் வென்ற களிப்பு ஆறுமுன் இன்னும் இறுகிய இராணுவ நடவடிக்கை  தமிழர் பகுதியில் :) :)

மூன்று பேரை சுட்டுகொன்றும்..... இலங்கை தோற்கிறதா.....இன்னும் 25வருடத்தில் எங்களுக்கு வெற்றியா?

புலிகளூக்கு முன்னும் தமிழர்கள் அழிந்தார்கள். அதன் பின்விளைவே புலிகளின் தோற்றம்.புலிகளினால் தமிழர்கள் அழிந்தார்கள் என நீங்களும்  அர்ஜுன் போன்றவர்களும் புதிய சம்ன்பாட்டை நிறுவ முயன்று தோற்றுக்கொண்டே இருக்கிறீர்கள்.
 
1983 க்கு முன் ஏன் ஒரு தீர்மானம் அமெரிக்காவால் கொண்டு வரமுடியவில்லை? அப்போ புலிக்ளை விட கெட்டிக்கார தமிழர்கள் எல்லாம் வாழ்ந்தார்கள். 1983க்கு முன்பும் அமெரிக்கா சுப்பர் பவராக தான் இருந்தது.  மாற்று கருத்தாளர்கள் சரி. ஆனால் மாற்றி மாற்றி லொஜிக் ஆக யோசிக்கவும் வேண்டும்.

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும் .

விட்டால் இலங்கை சுதந்திரம் அடைய முதலே அமேரிக்கா ஏன் பிரேரணை கொண்டுவரவில்லை என்று கேட்பீர்கள் போலிருக்கு ?

தனிமனிதர்களை குற்றவாளியாக்குவதால் ஏனையவர்கள் யோக்கியர்களாகிவிடமுடியாது.

எழிலன் மாவிலாற்றை பூட்டினாலும் சரி புலிக்கு ஆள் பிடித்தாலும் சாரி அவைகள் எல்லாம் அவர்சார்ந்த அமைப்புக்கு உட்பட்டதே. அமைப்பு ஏன் அவ்வாறு கடும்போக்காக நடந்துகொள்கின்றது அல்லது நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகினறது என்ற கேள்விகளுக்கு விடை இச் சமூகத்தின் அசைவியக்கம் குறித்து ஆராய்வதிலேயே கண்டுகொள்ள முடியும்.

நான் சொல்வதே சரி நான் சொல்வதே நியாயம் என்ற கடும்போக்கு மனப்பாங்கு ஒவ்வொருவரிடமும் வியாதியாக இருக்கும்போது அதே மனப்பாங்கு அச் சமூகத்தில் தோன்றும் அமைப்புகளுக்கும் அதன் நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கும். இத்தால் எதுவும் நியாயப்படுத்தும் நோக்கிலானது என்று பொருள் இல்லை ஆனால் ஒருவனை ஒருவன் சுட்டிக்காட்டி தாம் தாம் யோக்கியர் என்பது அர்த்தமற்றது.

அமரிக்காவோ அல்லது ஏனைய நாடுகளோ தமிழ் மீது கரிசனம் கொண்டு எந்த அணுகுமுறைகளையும் மேற்கொள்ளவில்லை. இக் கொடிய யுத்தத்திற்கு சிங்களத்துக்கு பக்கபலமாக பினநின்றவர்களே இவர்கள். இவர்களிடம் நீதியை எதிர்பார்ப்பதும் சிங்களத்திடம் நீதியை எதிர்பார்ப்பதும் ஒன்றுதான். இதற்க்குள் ஏதோ ஒரு அரசியலை செய்யலாம் என்பது வழமைபோல எம்மை நாமே ஏமாற்றும் மரபுசார் பழக்கத்துக்கு உட்பட்டதன்றி வேறெதுவும் இல்லை.

புலிகள் கண்ணுக்கு எப்படி சிங்கள அரசியல் தலைவர்கள் தெரிந்தார்களோ அவர்களை கொல்வதன்மூலம் தமது இலக்கை இலகுவாக அடைந்துவிடமுடியும் என்று கருதினார்களோ அப்படித்தான் இச்சமூகத்திற்கு கோத்தபாயவும் மகிந்தனும் தெரிகின்றார்கள். அவர்கள் மீது ஏதோ ஒரு அழுத்தம் மேற்குலகால் வரும்போது தமது விருப்பு நிறைவேறும் என்ற அறியாமை. சிங்களப் பேரினவாத இயந்திரத்தின் காலத்துக்கேற்ற கருவிகளே மகிந்தனும் கோத்தாவும். அவர்களுக்கு ஏதும் நேரும் போதும் அவ் இயந்தித்தை இயக்க ஆயிரமாயிரம் பேர் உள்ளனர்.

சிங்களத்தின் வெற்றி என்பது அதன் பேரினவாத இயந்திரத்தின் பலத்தில் உள்ளது. தமிரின் வெற்றியென்பது பலமிழந்த ஒரு இயந்திரத்தை உருவாக்கவோ இல்லை திருத்தவோ இல்லை இயக்கவோ ஒருவன் இருந்தால் அவன் சார்ந்து உள்ளது. இரண்டுக்கும் கடலளவு வேறுபாடு.

இப்போதைக்கு இல்லாத ஒரு இயந்திரத்துக்கு யார் தலைவர் அல்லதில் யார் அதில் அக்கறை உடையவர் என்ற அடயாளம் தேடும் போட்டியே தமிழர்களிடத்தில் நடக்கின்றது. ஒருவிதத்தில் பாழுதான ஒரு வண்டியின் பாகங்கை கூறுபோடுதல் புடுங்குதல். இதில் வல்லமை உள்ளவர்கள் பங்குபெற ஏனையவர்கள் புலிக்குள் ஒருவன் அப்படிச் செய்தான் இப்படிச் செய்தான் பொண்ணை ஏமாற்றினான் காசுபுடுங்கினான் அவன் ஆமிக்கு ஆழ் சேர்த்துக் கொடுக்கின்றான் இவன் காட்டிக்கொடுக்கின்றான். செம்மணி சுடலையில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிட்டார்கள் கலாச்சாரம் அழிகின்றது என்ற ஒப்பாரிகளில் தம்மை ஈடுபடுத்த வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும் .

விட்டால் இலங்கை சுதந்திரம் அடைய முதலே அமேரிக்கா ஏன் பிரேரணை கொண்டுவரவில்லை என்று கேட்பீர்கள் போலிருக்கு ?

பள்ளிக்கூடத்தில் கேள்விக்கு பதிலளித்து பழக்கம் இருக்கோ?? :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
அமரிக்காவோ அல்லது ஏனைய நாடுகளோ தமிழ் மீது கரிசனம் கொண்டு எந்த அணுகுமுறைகளையும் மேற்கொள்ளவில்லை. இக் கொடிய யுத்தத்திற்கு சிங்களத்துக்கு பக்கபலமாக பினநின்றவர்களே இவர்கள். இவர்களிடம் நீதியை எதிர்பார்ப்பதும் சிங்களத்திடம் நீதியை எதிர்பார்ப்பதும் ஒன்றுதான். இதற்க்குள் ஏதோ ஒரு அரசியலை செய்யலாம் என்பது வழமைபோல எம்மை நாமே ஏமாற்றும் மரபுசார் பழக்கத்துக்கு உட்பட்டதன்றி வேறெதுவும் இல்லை.

புலிகள் மேற்குலகை கேட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் வரை மக்கள் வந்திருக்க தேவை இல்லை என விழுந்த மாட்டுக்கு குறி சுடும் கருத்தாளர்களுக்கு (தாங்கள் அரசியல் விமர்சர்கர்கள் என மார் தட்டுவோர்) இக்களத்தில் உள்ளார்களே!! அவர்களுக்கான பதில் என்ன??

அதில் பெரிதாக சிந்திப்பதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை...அவர் ஒன்றே சொல்லுகிறார்..புலிகளை "எல்லாரும்" கும்பிடுங்கள் என்று...

Lyca காரர் எது செய்தாலும் பிழை..அர்ஜூன் தனது பள்ளிக்கூடத்திற்கு காசு சேர்த்து அனுப்பினால் அதிலும் பிழை...

இங்கு புலிகளின் வழியை தவிர யார் எது செய்தாலும் பிழை என்ற கண்ணோட்டத்தோடு தான் "சிலர்" உள்ளார்கள்...

புலிக்கு வெளியேயும் தமிழர்கள் உள்ளார்கள்...அது சிலருக்கு விளங்கவில்லை...

அர்ஜூனின் கருத்துப்படி புலிகளால் தான் பேரழிவு வந்தது....அவர் பிழை என்று சொல்ல ஏதாவது இருக்கிறதா...

ஜெனிவாவில் வென்ற களிப்பு ஆறுமுன் இன்னும் இறுகிய இராணுவ நடவடிக்கை  தமிழர் பகுதியில் :) :)

மூன்று பேரை சுட்டுகொன்றும்..... இலங்கை தோற்கிறதா.....இன்னும் 25வருடத்தில் எங்களுக்கு வெற்றியா?

எனது பார்வையில் புலிகளை கும்பிடுங்கள் என்று கூறுபவர்களும், எடுத்ததற்கெல்லாம் காழ்புணர்ச்ச்சியுடன்  புலிகளை திட்டுபவர்களும்  போன்றோரும் ஒரே விதமான  அறிவுடையவர்களே. ஏனெனில் விமர்சனம் என்பது நடுநிலையுடன் செய்வது. அறிவு பூர்வமானது. ஆக்கபூர்வமானது.அடுத்த கட்டத்திற்கு எம்மை எடுத்து செல்வது.

புலிகள் மட்டுமல்ல அனைத்து அரசியல் விடுதலை அமைப்புகளுக்கும் ஏன் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும்  இது பொருந்தும். கும்பிடுங்கள் என்று கூறுபவர்கள் புலிகளின்  தவறுகளுக்கும் வக்காலத்து வாங்குவார்கள். அதே போல் புலிகள் மீது காழ்புணர்வு கொண்டவர்கள் புலிகள்  செய்த எல்லாவற்றையும் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று குற்றம் சொல்லி தங்கள் வக்கிரத்தை தீர்த்து கொள்வார்கள். அனேகமாக இங்கு யாழ்களத்தில் இது தான் நடக்கிறது.

புலிகள் மேற்குலகை கேட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் வரை மக்கள் வந்திருக்க தேவை இல்லை என விழுந்த மாட்டுக்கு குறி சுடும் கருத்தாளர்களுக்கு (தாங்கள் அரசியல் விமர்சர்கர்கள் என மார் தட்டுவோர்) இக்களத்தில் உள்ளார்களே!! அவர்களுக்கான பதில் என்ன??

இந்தியா சுதந்திரம் பெற்றுத்தரும் அல்லது மேற்குலகம் வேறுநாடுகள் பெற்றுத்தரும் அல்லது சிங்களவர்களுடன் பேசி பெற்றுவிடலாம் என்பது எல்லாம் காலாகாலம் வழிகாட்டப்படும் விசயங்கள். இது ஆயதப்போராட்ட காலத்துக்கு முன்பிருந்தும் அதன் பின்பும் தொடரும் எம்மை நாமே ஏமாற்றும் உத்தி. இது ஆழ்பவரை அண்டிப்பிழைக்கும் மரபின் நீட்சி. இவ் மரபில் இருந்து எவரும் விதிவிலக்கல்ல.

எமக்கு சுதந்திரம் கொடுக்கவோ இல்லை பெற்றுத்தரவோ மேற்சொன்ன எவருக்கும் எந்த அவசியமோ தேவையோ இல்லை என்பது எங்கள் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்த வெளிப்படையான விசயம். இருந்தும் அதை மறைத்து எம்மை நாமே ஏமாற்றிவாழ்கின்றோம். அடிமைத்தனத்தை கௌரவமாக ஏற்றுக்கொண்ட சமுதாயங்களுக்கு இவ்வாறு தம்மைத் தாமே ஏமாற்றுதல் இயல்பானது. ஏனெனில் சமுதாயம் சாதீய ரீதியாகவும் வர்க்க பிரதேச ரீதியாகவும் அடிமைத்தனத்தை இயல்பாக தன்னகத்தே வைத்துள்ளது. அதற்கு பாரம்பரியமாகப் பழக்கப்பட்டுள்ளது.

பிற சக்திகளால் அடிமைப்படுத்தப்படும் இனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் அவ் அடிமைத்தனத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும். உள்ளகமாக சமூகரீதியாக தனக்குத் தானே அடிமை விலங்கிட்ட எமது சமுதாயத்திற்கு எக்காலத்திலும் அது சாத்தியப்படாது. இது தன்னைத்தானே ஆழத் தகுதியற்ற இனம் என்பது இவ்வுலகத்திற்கு தெளிவாகத்தெரியும்.

தமிழர்களுக்கும் நன்கு தெரியும் எந்த ஒரு பிறசக்தியும் எமது சுத்திரம் பற்றி அக்கறைப்படப்போவதில்லை என்று. அதே போல் உலகத்திற்கும் தெரியும் தனக்குத் தானே விலங்கிட்ட இந்த மக்கள் கூட்டம் சுதந்திரம் பெற முடியாது என்று. இதை மீறி எடுக்கும் முயற்சிகள் ஒன்றில் பயங்கரவாதமாகும் அல்லது தற்கொலையில் போய் முடியும். இதுவே நடந்து முடிந்தது. புலி கேட்டாலும் எலி கேட்டாலும் இல்லை கேட்காமல் விட்டாலும் மேற்சொன்னவைகளே முடிவு. அடிமைத்தனத்தில் இருந்து தன்னை விடுவிக்க விரும்பாதவனுக்கும் விடுதலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

அப்ப தமிழன் விடுதலை பெற என்ன வழி, தனி தமிழ் ஈழம் அமைக்க என்ன வழி என்று நீங்கள் சொன்னால் நாங்கள் அவ்வழிஅயை பின்பற்றலாம்,

இன்னும் ஒரு பத்து வருசம் விட்டாலும் அர்ச்சுணும் சிலதுகளும் இதே அரைச்ச மாவை அரைச்சு கொண்டே இருப்பினம்....   போர் முடிந்து ஐஞ்சு வருசமாச்சு...  என்னத்தை கிளிச்சார்கள் எண்டு கேட்டு பாருங்கோ...  புலிகளை திட்டினம் எண்டதுக்கு மேலை ஒண்டுமே இருக்காது...   

விமர்ச்சனம் மட்டும் செய்கிறவர்களுக்கு பெயர் மாற்றுக்கர்த்தாளர்களா......??    

செயலாற்றியவர்களாக இருந்தாலும் இண்டு செயலாற்றுபவர்களாக இருந்தாலும் எல்லாம் புலிகளின் பின்னாலை நிண்டவர்களாலை மட்டும் தான் முடியுமாக்கும் ...  மற்றவை அவர்கள் பிழை விட்டார்கள் எண்டு  மறைஞ்சு நிண்டு  ஓலமிடுவினம்... 

ஒருவேளை தடை பட்டியலிலை தங்கட பெயரும் வந்திடும் எண்டு பயப்பிடுகினமோ...?? 

என்ன அப்படி சொல்லிப்போட்டியல், அவ்வாறு ஏதாவது கிழிக்க முடியும் எண்டால் 1985இல் கிழித்திருக்காலம் அல்லோ, ஏலாதபடியால் இவ்வளவு புலி வேட்டை நடத்தீனம்,ஆகக் குறைந்தது அதையாவது செய்தோம்மில

அப்ப தமிழன் விடுதலை பெற என்ன வழி, தனி தமிழ் ஈழம் அமைக்க என்ன வழி என்று நீங்கள் சொன்னால் நாங்கள் அவ்வழிஅயை பின்பற்றலாம்,

விடுதலை என்பது எதைக் குறிக்கின்றது? புலம்பெயர்ந்தவன் வெளிநாடு வந்ததையே விடுதலை என்றுகருதுகின்றான் ஆனால் தாயகம் வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். விடுதலை ஆசைக்கு இசைவான பொருள் இலை மாறகா அது தேவை சார்ந்தது.

புலம் பெயர்ந்தவன்போல் பெரும்பாலாக நாட்டில் உள்ளவர்களுக்கும் சுதந்திரமான ஒரு நாடு என்பது முதல் தெரிவல்ல மாறாக எமது வழிகாட்டலின் பெயரில் புலம்பெயர்தலே முதல் தெரிவு.

அதற்கு அடுத்ததாக சிங்களவர்களை அல்லது ஏனைய அதிகாரவர்க்கங்களை அனுசரித்து வாழுதல் என்ற தெரிவில் உள்ளமக்கள்.

இவ்வாறான அம்சங்களால் விடுதலைக்கான தேவை என்பது வலுவிழந்துபோய் உள்ளது.

அடுத்து யாருக்கு விடுதலை? தமிழர்களுக்கா இல்லை தமிழ்பேசும் இஸ்லாமியர்களுக்கா இல்லை இரண்டும் இணைந்த நிலையிலா ? மலயகத் தமிழருக்கா இல்லை தென்னிலங்கையில் வாழும் தமிழர்களையும் உள்ளடக்கிய நிலையிலா பிரதேசவாதத்தை புறந்தள்ளி வடக்கும் கிழக்கும் ஐக்கியப்பட்ட நிலையிலா என சாத்தியப்படுகள் வலுவிழந்து போயுள்ளது.

இவ்வாறு விடுதலைக்கான தேவைகளும் சாத்தியப்படுகளும் கேள்விக்குறிகளால் நிரம்பியுள்ள நிலையில் அதற்கான விடைகளே விடுதலைககான பாதையை சுட்டிக்காட்டும் அதன்பிறகே விடுதலை குறித்து சிந்திக்கவே முடியும்.

இல்லை நேரடியாக குறுக்குவழியில் லொட்டோ மாதிரி விடுதலை என்றால் அதுகுறித்து நக அரசுகள் காங்கிரசுகள் பேரவைகளுக்குத் தான் அவை நன்கு தெரியும். அவர்களிடம் தான் கேட்கவேண்டும்

புலிகளூக்கு முன்னும் தமிழர்கள் அழிந்தார்கள். அதன் பின்விளைவே புலிகளின் தோற்றம்.புலிகளினால் தமிழர்கள் அழிந்தார்கள் என நீங்களும்  அர்ஜுன் போன்றவர்களும் புதிய சம்ன்பாட்டை நிறுவ முயன்று தோற்றுக்கொண்டே இருக்கிறீர்கள்.
 
1983 க்கு முன் ஏன் ஒரு தீர்மானம் அமெரிக்காவால் கொண்டு வரமுடியவில்லை? அப்போ புலிக்ளை விட கெட்டிக்கார தமிழர்கள் எல்லாம் வாழ்ந்தார்கள். 1983க்கு முன்பும் அமெரிக்கா சுப்பர் பவராக தான் இருந்தது.  மாற்று கருத்தாளர்கள் சரி. ஆனால் மாற்றி மாற்றி லொஜிக் ஆக யோசிக்கவும் வேண்டும்.

நுணா நீங்களும் யோசிக்கவேண்டும்.... புலிகளுக்கு முன் சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை சில "நூறுகள்" (இதுவே அதிகம்)....புலிகளின் பின் சிங்களவர்களாலும், புலிகளாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் மட்டும்  1 - 2 லட்சம்... இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் அதனினும் அதிகம்.....

புலிப்பக்தர்களும் )கொஞ்சம் மாற்றி யோசித்தால்... மிஞ்சி இருப்பவர்களோடு சேர்ந்து வேலைசெய்ய வெளிகிட்டால் நல்லது... எல்லாரும் புலிப்பாலை மட்டும் தான் குடிக்கணும் என்றால் எப்படி?...இப்போதைய நிலையில் தேவையில்லை :)

புலிகளுக்கு முன் கெட்டிக்கார தமிழர்கள் இருந்தபடியால் தான் அழிவு குறைவு....இடையில் துவக்கை தூக்கி எல்லாருக்கும் ஒட்டு மொத்தமாக கொள்ளி வைத்தது தான் மிச்சம்.......இப்போது பார்க்கவில்லையா? "பிரச்னை ஆனவர்களுக்கு" மட்டும் தான் "பிரச்சனை"....இன்று எல்லா நாட்டிலுமிருந்து இலங்கைக்கு பெரும்பான்மையான தமிழர்கள் சுற்றுலா போகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..இவ்வளவிற்கும் அவர்களது 80 வயது பாட்டி/தாத்தா கூட புலம் பெயர்ந்த நாட்டில் :)

பி.கு: (தலை இருந்திருந்தால் இன்னுமாடா என்னை நம்புறாங்க...அவ்வவ்... என்று யோசிப்பார் இப்போது)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா நீங்களும் யோசிக்கவேண்டும்.... புலிகளுக்கு முன் சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை சில "நூறுகள்" (இதுவே அதிகம்)....புலிகளின் பின் சிங்களவர்களாலும், புலிகளாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் மட்டும்  1 - 2 லட்சம்... இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் அதனினும் அதிகம்.....

புலிகளின் பக்தர்களும் கொஞ்சம் மாற்றி யோசித்தால்... மிஞ்சி இருப்பவர்களோடு சேர்ந்து வேலைசெய்ய வெளிகிட்டால் நல்லது... எல்லாரும் புலிப்பாலை மட்டும் தான் குடிக்கணும் என்றால் எப்படி?...இப்போதைய நிலையில் தேவையில்லை :)

மிஞ்சி இருந்தவர்களால்த்தான் இவ்வளவு அஸ்தமனங்களும்.... :) 

அதுசரி மிஞ்சியிருக்கிறவையாலை ரோட்டும் கரண்டும்தான் குடுக்கேலும்....மிச்சத்தை சிங்களவன் அந்தமாதிரி  குடுக்கிறானாம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.