Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தலைமைச் செயலகம்’ உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் இருந்தார் – மற்றுமொரு மர்ம முடிச்சு அவிழ்ந்தது!

Featured Replies

தயா நீங்கள் எங்கே இருந்து இந்த தகவல்களை எடுத்தீர்கல்லலல் தெரியாது;

நான் ஒரு பிலிபீன் காரார் உடன் 2 வருடம் வேலை செய்தேன்..அவர் சொல்லவில்லை தங்கள் போராட்டம், அமெரிக்காவின் பின்னணியில் நடந்ததாக...அவர் எனக்கு சொன்னது தங்களுக்கு அது வெற்றி தந்தாகவும், எங்களுக்கும் அது பொருத்தும் என்றுதான் சொன்னார்

எங்களால் முடியாவிடால் அதை குறை சொல்லுவதை விட, அதில் ஏதாவது இருந்தால் அதை நாங்கள் பாவிப்பதில் என்ன தவறு...

முதலிலை பிலிப்பீனில் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது எண்றா சொல்ல வருகிறீர்கள்....??

மார்க்கோசின் எதிர்கட்சி தலைவர் அகிநோவ் கொல்லப்பட அவரின் மனைவி தேர்தலில் தோற்கிறார்... எதிர்கட்சியினரும் அதிர்ப்தி மக்களும் சேர்ந்து செய்த போராட்டத்துக்கு பலனாக அகிநோவின் மனைவி பதவி ஏற்கிறார்..

பதவி ஏற்ற அகிநோவின் மனைவி 1989 ல் அமெரிக்க படைத்தளங்களை பிலிப்பீனில் அமைக்க ஒப்புதல் அளிக்கிறார்... 1975 ல் வியட்நாமில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் தென் சீனக்கடலில் ஆதிக்கத்தை மீள் கொண்டு வரும் நோக்கில் பிலிப்பீனில் அமெரிக்க தளங்கள் அமைக்கப்பட்டது...

இதை தான் நீங்களும் செய்து பார்க்க போறீர்களா...??

இலங்கையில் தமிழர்கள் சாத்திவீக போராட்டம் என்று நடத்தியது எதுவும் இல்லை...56 இல் காலிமுத்திடலில் அடித்தவர்கள், 10 வது தமிழ் ஆராச்சி மகாநாட்டை குழப்பியவர்கள் ...அதைவிட ஒரு உருப்படியான போராட்டம் நடந்திருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்...200,000 மேற்பட்டவர்கள் செத்தும், பல்லாயிரம் கோடி சொத்துக்கள் இழந்ததும் தவிர , இதுவைர அடைந்தது என்ன என்பதை உங்கள் மனம் தொட்டு சொல்ளுங்கள்

வட்டுக்கோட்டை தீர்மானமும் கூட ஒரு சாத்வீக போராட்டமே , 90 களின் இறுதியில் மட்டக்களப்பிலும் யாழிலும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் நடந்த பொங்கு தமிழும் கூட சாத்வீக போராட்டமே...

யாழ் கோட்டை பலாலி , முகாம்களில் இருந்து இந்திய இராணுவம் வெளியே வராமல் மறித்து மக்கள் செய்த போராட்டமும் கூட சாத்வீக போராட்டமே.. திலீபன் அண்ணை உண்ணா விரதம் இருந்ததும் கூட சாத்வீக போராட்டமே... கைது செய்ய பட்ட போது நஞ்சு குடிச்சு சாவடைந்த 17 போராளீகளில் 12 வர் செய்தது கூட சாத்வீக போராட்டமே...

2009 ம் ஆண்டு உலகளவில் எமது மக்களை காப்பாத்துங்கள் எண்று வீதியில் இறங்கி 44 நாட்கள் இடைவிடாமல் போராடியதும் கூட சாத்வீகமே...

இதை எல்லாம் புலிகள் தலைமையில் நடந்தது என்பதினால் உங்களால் போராட்டமாக ஏற்றுக்கொள்ள கூட முடியவில்லை இல்லை... ???

உங்களை பற்றி இப்போ நண்றாக அறிய முடிகிறது..!!

சண்டையில் இருந்து தப்பி ஓடி doctor ஆக வந்தவர், நாடு பிடிச்சு தருவார் என்று கனவு காண வேண்டாம்...இவர்கள் இப்படி பெரிய பட்டங்கள் எடுப்பதற்கு முன்பே சார் பட்டம் எடுத்த தமிழர்கள் பலர் இருந்தார்கள், அவர்கள்எங்களுக்கு எதுவும் செய்யாத்தால்தான் நாங்கள், வழி தெரியாது எடுப்பார் கைப்பிள்ளையாக ஆயுதம் தூக்கி அதனாலேயே அழிந்தோம் ...அதற்குள் சின்ன சின்ன சந்தோசம் ..telo 86/புளொட் 86/EPRLF 89, 89 LTTE 2009.......எல்லோரும் அழிவும் போது தமிழராய்தான் அழிந்தோம் ...அது உறுத்தினால், மீண்டும் தமிழராய் எழுவோம், எம்மிடம் இருக்கும் ஆயுதத்தை நம்பி ...எதிரி எந்த ஆயுதத்தை எடுத்தாலும், எம்மிடம் உள்ளதையே , பலமாக உள்ளதையே பாவிப்போம்...

அண்ணோய் சார் பட்டம் ஏன் குடுக்கிறது எண்ட அடிப்படையே தெரியாமல் உளறாதீர்கள்... !! கல்வியில் சிறந்தவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்களகம் ஏதும் குடுக்கும் பட்டம் எண்டா நினைத்தீர்கள்... ???

பிரித்தானிய அரசுக்கு விசுவாசமாக செயற்பட்டு அவர்களின் வளர்சிக்கு துணை நிண்டமைக்காக பிரித்தானிய சக்கரவர்த்திகளால் குடுக்கப்படும் பட்டம் அண்ணை... அப்படிப்பட்ட அடிமை தமிழ் மக்களுக்காக சேவை செய்யுறதா...??

  • Replies 93
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா;
இது சொல்லி விளங்குமோ தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நீங்கள் உண்மைகளை விளங்கவிரும்பவில்லை என்று.
மக்கள் போராட்டம் என்றால் வட்டுக்கோட்டை தீர்மானம் என்று சொன்னால், சிறையில் தற்கொலை செய்தது எல்லாம்வரும் என்றால், இதில் கருத்து எழுவதில் பலன்இல்லை.
தீலிபன் விரும்பியது மக்கள் போராட்டம், அதை தொடரவில்லையே...30/40 வருட பிரச்சனைகளுக்கு ஒருவர் உண்ணாவிருப்பதன் மூலம் தீர்வு வரும் என்று நினைத்தால், அதுதான் எங்களின் மக்கள் போராட்ட பலம் என்று சொன்னால், அதையும் திரும்ப செய்வதில் பலன் ஏதும் இல்லை.

 

பிலிபென்ஸில் நடந்தததை சொல்லுவதன் காரணம், எத்தனை பேர் வீதிக்கு வந்தார்கள், எத்தனை நாள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள் என்று சொல்லவே.

இப்போது உள்ள உலக ஒழுங்கு முறையில், சரியான போராட்ட வழியை தெரிந்து எடுப்பது இலகுவானது அல்ல. எல்லா ஆளும் வர்க்கங்களும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கும் போது, சிறியவர், அதிகாரமற்றவர்  செய்யும் எந்த ஒரு செயலும் இலகுவாக, பயங்கரவாதம் என்கிற போர்வைக்குள் போய்விடும். தனி மனிதன் தனது வியாதியால் தனது உயிரை அழித்த்து கொள்ள அனுமதிக்காத நாடுகள், அவரது வைத்திய சிகிச்சியை முறையின் போது சாகலாம் என்று, கையொப்பம் இட்டே சிக்கலான சிகிச்சைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது.
அதிகாரமற்ற நோயாளிக்கு தன், உயிரை எடுக்க/கொடுக்க அனுமதி இல்லை, ஆனால் ஒரு வைத்தியர் சொன்னால், அவரும் சேர்ந்து, அவரது உயிரை எடுக்கலாம். இதுதான் உலகம்.

 

நாங்கள் தனித்து இயங்க முடியாது.

மற்றது சரியான, மீடியாவை தெரிவு செய்தல். தனியே உதயனிலும், மற்றைய தமிழ் பேப்பரிலும் வருவதால் அங்கு நடக்கிற நிலை யாருக்கும் தெரிய போவதில்லை.
ஒரு இலட்சத்திற்க்கு மேற்பட்டவர்களை கொல்லும் போது வராத கவனம், 4-5 பஸ்லில் லோட்கில் நின்ற தமிழர்களை கொழும்பில் இருந்து வவுனியாவிற்க்கு அனுப்பிய போது வந்தது ...அதைத்தான் சொல்லுகிறேன் , கொழும்பில் ஒரு மக்கள் பேரணி நடந்தால் , யாழ்ப்பாணத்தில் நடந்தால் அதன் வலிமை வேறுபட்டது

 

பொங்கு தமிழை பற்றி எழுதியிருந்தீர்கள் ..நான் அந்த நேரத்தில் இருந்தேன் ...அப்படி நடக்க என்ன பிரச்சனை வந்தது? ஏன் அதுபோல தொடர்ந்து செய்யமுடியாமல் போனது, அது ஏன் தனியே பல்கலை மாணவர்களுடன் நின்று போனது? ..., அதை தொடர்ந்து நடத்துவதில் யாருக்கு என்ன தடை? ...அதையேன் இலங்கை முழுக்க ஒரு ஒத்துழையாமை இயக்கம் ஆக மற்ற முடியாது?

எங்களின் இரத்தத்தில் ஊறின பிரச்சனை; வன்னியில அடிப்பட்தாலும் , நாங்கள் யாழ்ப்பாணத்தில் பிக் மட்ச் வைப்பம் , நல்லூர் கொடி ஏத்த்துவம் , இங்கே சூப்பர் சிங்கரை கூப்பிடு பாட்டு கச்சேரி வைப்பம் , கம்பன் விழா எடுப்பம்; அது மாறாத வைக்கும் இப்படி- இனப்பிரச்சனை, பிச்சைகாரன் புண் மாதிரி நாறிக்கொண்டே இருக்கும் . இறுதியில், யாழ்ப்பாணத்த்திலும், சிங்கக்களாவனுக்கு கூழை கும்பிடு போட்டு MP ஆக இருப்பம்

ஒருபோதும் 100 வீதமும் எந்த போராடத்திலும் ஈடுபடாது, ஆனால் எங்களை மாதிரி ஒரு நாலுபேர் போராட 4000 ஒழின்சிருக்கிற நிலையில் இருந்தால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

மக்கள் போராட்டம்  தோற்க்கும் என்றால் யாருக்கு போராட்டம்?

 

விகினேஸ்வரன் சொன்னதை ஒருக்கா கேட்டு அல்லது படித்து பாருங்கள் , வெள்ளையனே வெளியேறு என்றது போல, படையே வெளியேறு என்று ஒலிக்கும் காலம் வரலாம் ...அது மக்கள் போராட்டம் , அதை செய்வதுதான் இப்ப எங்களால முடியும் ...அதை அவர்கள் செய்தால் அதுக்கு பின்பலமாக நாங்கள் இருக்க  வேண்டும்

நாளைக்கு அதைப்பார்த்து விட்டு டாக்கிளஸ் வந்தாலும் சேர்த்து போகவேண்டும் , முஸ்லீம் வந்தாலும் கூட்டிக்கொண்டு போகவேண்டும் ...அதைவிட்டு நீ கருணா , நான் பிள்ளையான் என்று கோஷ்டி பிரிந்து கொண்டு இருந்தால் எல்லோருக்கும் ஒரே முடிவுதான் ....
இனப்பிரச்சனை, பிரபாகரன் காலத்தில் ஒருமாதிரி இருந்தது, இப்பவும் இருக்கிறது, நடேசன் சொல்லியது போல புலிகளுக்கு பிறகு என்று ஒரு காலம் இல்லை என்று இல்லை. இப்பவும் தமிழர்கள் இருக்கிறார்கள் , படிக்கிறார்கள் பட்டம் பெறுகிறார்கள் , சட்டம் இயற்றுகிறார்கள், எனவே புலிகள் உடன் கதை முடியவில்லை , அவர்களில் அத்தியாயங்கள் மூடப்பட்டு இருக்கலாம், புதிய அத்தியாயங்கள் இயற்கை விதிப்படி , பழையன கழித்தாலும் புதியன புகுதலுமாக வந்திருக்கிறது. புலியால் முடியாதை எலிகள் செய்யமுடிதுமா என்பது ஒரு இயல்பான கேள்விதான் ...என்ன செய்ய அதுதான் என முடிவான பிறகு எலிகளை நொந்து என்ன பலன்?

வல்கைனோ... 

 

தாங்கள் பிலிப்பீனிய பிரச்சினையை  எந்த நாட்டு பின்னணியும்  இல்லாமல் வெறும் மக்கள் போராட்டத்தால் தான்  பிரச்சினை எல்லாம் தீர்ந்து  செழுமையாக வாழுகிறார்கள் எண்று நம்புபவராக இருக்கலாம்...  

 

ஏதாவது ஒரு உலக நாட்டின் அங்கீகாரம் இல்லாமல் மக்கள் போராட்டங்கள் ஆட்சியை அமைத்தது கிடையாது...  அப்படி அமைந்து இருந்தால்  காட்டவும்...  !! 

 

இண்டைக்கும்  தாய்வான் எனும் நாடு  ஐநாவின் அங்கீகாரம் இல்லாமல் வெறும் அமெரிக்க அங்கீகாரத்தை கொண்டு  சீனாவை பகைத்து  தனி அரசாக இருக்கிறது...    அதே போல துரிக்கியின் அங்கீகாரத்தில் சைபிரஸ் எனும் நாடும்  இருக்கிறது...  இந்த இரண்டு நாடுகளும்  தங்களது நலன்களை அமெரிககவுக்காகவும் , துருக்கிக்காகவும் விட்டு கொடுத்து விட்டு  சேவகம் செய்யும் நாடுகளாக மட்டுமே இருக்க முடியும்... 

 

இங்கை தனித்து நிக்க  பலமான ஒருவரின்  துணை எல்லாருக்கும் தேவைப்படும்..   ஆனால்  எங்களுக்கு அப்படி ஒண்டு இல்லை எனும் போது நாங்கள் பலமானவர்களாக இருக்க வேண்டும்...  அதுக்கு ஆயுதம் தேவை... 

 

நாங்கள் பலமாக இருந்த போது மட்டும் தான் உலகம் நாங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டது...   இல்லை எண்டு மறுக்க போகிறீர்களா...??  அதை   பயன் படுத்தி கொள்ள தெரியாமல்  காட்டி கொடுத்து அழித்து விட்டு இனிதான் புதுசாக ஒண்டை உருவாக  போறம் எண்டது எல்லாம் வெறு வாய்ச்சவடால் மட்டும் தான்... 

 

(மக்கள் போராட்டம் என்பது எல்லாம் உங்களின் ஒற்றுமை சம்பந்தப்பட்ட விடயம்...   ஒரு கோயில் திருவிளாவை கூட போட்டி பொறாமை சண்டை இல்லாமல் உங்களால் நடத்த முடியாது இது தான் உண்மை நிலை.... )

 

இராணுவத்தையும் சரி போராளிகளையும் சரி  பாதுகாப்பு படையினர் எண்று அழைப்பது வளக்கம்....  காரணம் அவர்கள் செய்யும் போர் தனது தேசத்தை காப்பதுக்காக எண்று தான் அழைக்கப்படும்...   இதில் புலிகள் மட்டும் விதி விலக்கு இல்லை...   புலிகளும் காப்பு போர் மட்டுமே செய்தார்கள்...  இந்த தற்காப்பு போர் எதிரியை பலவீனப்படுத்த முடியும் எண்று புலிகள் நம்பும் வரை போர் புரிந்தார்கள்... 

 

இதிலை விடுதலை எண்டு எங்கை வருகிறது எண்று நீங்கள் கேக்கலாம்...    புலிகளால் உங்களுக்கு விடுதலை வாங்கி தர முடியாது... அதை யாராலும் உங்களுக்கு வாங்கி தரவும் முடியாது...   உங்களுக்கான விடுதலையை  நீங்கள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்...   நானோ புலிகளோ பெற்றுத்தருபவராக இருந்தால்  நீங்கள்  எனக்கோ புலிகளுக்கோ அடிமையாக மாறுகிறீர்கள்...   

 

இதிலை அமெரிக்கா , இந்தியா , கூட்டமைப்பு , எண்டு யாரை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்...   உங்களுக்கு ஆதரவாக  உங்களுக்கு  விடுதலை வாங்கி தருபவர்களுக்கு நீங்கள் உங்களை அடிமை ஆக்கி கொள்கிறீர்கள் என்பது மட்டுமே உண்மை...  

 

இப்படி வேறை யாருக்கும் அடிமையாக போறதுக்கு நீங்கள்  சிங்களவனுக்கே அடிமையாக இருந்துவிட்டு போகலாம்...  பிழை இல்லை... 

 

இண்டைக்கு இவ்வளவு வியாக்கியானம் செய்யும் நீங்கள் அண்டைக்கு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் எண்டு உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்...   உங்களை பற்றிய விமர்சனம் செய்ய உங்களை விட வேறை யாரும் சிறந்தவராக இருக்க மாட்டார்கள்... 

 

ஒட்டு மொத்த தமிழினத்தை புலிகளால் மட்டும் தான் ஒரு நோக்கில் கொண்டு வரமுடிந்தது...   அதை சாதிக்கும் திறணிலும் அர்ப்பணிப்போடும் தலைமை பண்போடும்  இன்னும் பலவருடங்களுக்கு உங்களால் ஒரு அமைப்பை உருவாக்க  முடியாது...  

 

இதிலை தலைமை பண்பு என்பது ஈழத்தமிழனுக்கு அறவே கிடையாது ... !!  இருக்கிறதையும் இருந்ததிலையும் நொட்டை பிடிக்க மட்டுமே முடியும்... 

 

 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சடையாதீர்... !!

கள விதிகள் ஒருமையில் எழுதுவதை தடை செய்திருந்தும் பண்பற்ற நீங்கள் அவ்வாறு எழுதியிருக்கிறீர்கள்.

பொய், புரட்டு எழுதும் ஒருவரிடம் பண்பையோ விதிகளை பின்பற்றும் ஒழுக்கத்தையோ நான் எதிர்பார்க்கவில்லை.

மற்ற கள உறுப்பினர்கள் இவற்றை அறிய வேண்டும் என்பதற்காக இதை இங்கு காட்டி இருக்கிறேன்.

 

 

மார்க்கோசை பதவியில் இருந்து  அகற்றி அந்த பதவிக்கு வந்தவர் அகிநோ கிடையாது... !!   அகிவோவ்வின் மனைவி   "கொறசோன்" ...    அகினோவ்   1983 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்... 

அகினோவின் மனைவியை திருமதி அகினோ என்றும் அழைப்பர். ஆகவே நான் அவ்வாறே எழுதியிருந்தேன். நான் திரு. அகினோ பதவிக்கு வந்ததாக தவறாக எழுதியதாக நீங்கள் காட்டி இருப்பது புரட்டு. நான் எழுதியது இதோ கீழே:

 

1983 இல் ஆரம்பித்து 1986 இல் முடிவுக்கு வந்த பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களின் இரத்தம் சிந்தாத புரட்சி அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி செய்த சர்வாதிகாரி மார்க்கொசை பதவியில் இருந்து அகற்றி அமரிக்காவில் புகலிடம் கோர வைத்தது. இந்த புரட்சியை அடுத்து திருமதி அகினோ நாட்டின் அதிபரானார்.

 

 

நான் எழுதாததை எழுதியதாக நீங்கள் முதலில் எழுதிய புரட்டை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்த இதோ அதுவும் கீழே:

 

அமெரிக்க ஆதரவோடை  பிலிப்பீன்சை மக்கள் ஸ்பானில காலணித்துவ ஆதரவு கொண்ட  மாக்கோசை வெளியேற்றினார்கள் எனும் மேற்கத்திய திரைக்கதையை மட்டும் சொல்கிறீர்கள்...

Edited by Jude

"ஒட்டு மொத்த தமிழினத்தை புலிகளால் மட்டும் தான் ஒரு நோக்கில் கொண்டு வரமுடிந்தது...   அதை சாதிக்கும் திறணிலும் அர்ப்பணிப்போடும் தலைமை பண்போடும்  இன்னும் பலவருடங்களுக்கு உங்களால் ஒரு அமைப்பை உருவாக்க  முடியாது..."

 

ஒரு சர்வாதிகார அமைப்பால் அராஜகத்தால் தான் அதை கொண்டுவரவேண்டுமென்றால் அந்த அமைப்பே எமக்கு வேண்டாம்.

இதைதான் திரும்ப திரும்ப நாங்கள் சொல்லுகின்றோம் நீங்கள் அதை நினைத்துபெருமை படுகின்றீர்கள் .

முக்கால்வாசி தமிழன் புலம்பெயர்ந்தது அரசு ,புலிகளுக்கு பயந்துதான் .(பலர் வெளிநாடு வந்து படம் போட்டது வேறுகதை ) .புலிகளின் நிலைபாட்டில் நம்பிக்கை இருந்து இருந்தால் இவ்வளவு சனமும் விட்டு ஓடியிராது.

சிங்கள அரசுகளை விட வட கிழக்கில் மக்கள் புலிகளுக்கு பயந்திருந்தது உலகறிந்த உண்மை .

பேயை விரட்ட பிசாசை உருவாகியதுததான் நடந்தது .

புலிகள் ஓரளவு என்றாலும் ஜனநாயக அமைப்பாக இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ பேர்கள் அதில் இணைந்திருப்பார்கள்.சர்வதேசம் பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்காது ,அழிந்திருக்கவும் மாட்டார்கள் .

சதாமின் ஈராக்கிற்கும் கடாபியின் லிபியாவும்  ஒட்டு மொத்தமொத்தமக்களும் ஒரு அணியில் தான் நின்றார்கள் அது வெறும் பயத்தில் என்பது வரலாறு கண் முன்னே சொல்லி சென்றிருக்கு .அதையே தான் புலிகளுக்கும் நடந்தது .

எங்களுக்கு தேவை ஒரு மண்டேலா ஒரு சேகுவேரா ஒரு காந்தி ஒரு லெனின் சதாமும் கடாபியும் பொல்பொட்டும் அல்ல . 

 

  • கருத்துக்கள உறவுகள்
எங்களுக்கு தேவை ஒரு மண்டேலா ஒரு சேகுவேரா ஒரு காந்தி ஒரு லெனின் சதாமும் கடாபியும் பொல்பொட்டும் அல்ல .

 

 

ஒன்றுமே தமிழ் மக்களுக்கு செய்யாத  சுயநல  *******************  உமாவை விட தனது மக்களுடன்  தனது மன்ணில் தனது மண்ணுக்காக போரிட்ட பிரபாகரன் பில்லியன் மடங்கு மேலானவர். பிரபாகரன் போன்ற ஒரு தலைவனை  1000 வருடங்களுக்கு காணவே முடியாது. புலிகள் அழிந்த பின்னர் கொஞ்சப்பேரின் அறிக்கையை தான் பார்க்கிறோமே தினமும். இந்த பம்மாத்து 77 ல் நடை பெற்றதன் காபன் பிரதி தான் இப்போ நடக்கும் கூத்து. 
 
அத்தோடு ஒரு கேள்வி. புலிகளை பயங்கரவாதி பட்டியலில் போட்டவர்கள் ஆப்கான் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. ஆகவே அம்மக்களை தலபானிடம் இருந்து விடுவிக்க படை நடவடிக்கை எடுத்ததாக கூறுபவர்கள் சவூதியில் உள்ள பெண்களுக்கும் கிட்டத்தட்ட ஆப்கான் பெண்களுக்கு உள்ள சுதந்திரம் தான் உண்டு.அத்தோடு 9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  சவூதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர். ஆகவே படை எடுக்கப்பட வேண்டியது சவூதியே தவிர ஆப்கானிஸ்தான் அல்ல.இப்படியான  ஹிப்போகிரசிகள் புலிகளை பயங்கரவாதிகளாக்க யார்??

ஒன்றுமே தமிழ் மக்களுக்கு செய்யாத  சுயநல  *******************  உமாவை விட தனது மக்களுடன்  தனது மன்ணில் தனது மண்ணுக்காக போரிட்ட பிரபாகரன் பில்லியன் மடங்கு மேலானவர். பிரபாகரன் போன்ற ஒரு தலைவனை  1000 வருடங்களுக்கு காணவே முடியாது. புலிகள் அழிந்த பின்னர் கொஞ்சப்பேரின் அறிக்கையை தான் பார்க்கிறோமே தினமும். இந்த பம்மாத்து 77 ல் நடை பெற்றதன் காபன் பிரதி தான் இப்போ நடக்கும் கூத்து. 
 
அத்தோடு ஒரு கேள்வி. புலிகளை பயங்கரவாதி பட்டியலில் போட்டவர்கள் ஆப்கான் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. ஆகவே அம்மக்களை தலபானிடம் இருந்து விடுவிக்க படை நடவடிக்கை எடுத்ததாக கூறுபவர்கள் சவூதியில் உள்ள பெண்களுக்கும் கிட்டத்தட்ட ஆப்கான் பெண்களுக்கு உள்ள சுதந்திரம் தான் உண்டு.அத்தோடு 9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  சவூதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர். ஆகவே படை எடுக்கப்பட வேண்டியது சவூதியே தவிர ஆப்கானிஸ்தான் அல்ல.இப்படியான  ஹிப்போகிரசிகள் புலிகளை பயங்கரவாதிகளாக்க யார்??

 

புலிகள் அழிக்கப்பட்டது அவர்கள் பயங்கரவாதிகள் என்றபடியால் தான் என்று நினைத்தால் அது சிறுபிள்ளைத்தனம், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் அழிவு குறிப்பிட்ட சிலருக்கு தேவைப்பட்டது அதனால் தான் புலிகளை அழிக்கும் போர்வையில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது, எனவே எமது போராட்டம் ஏன் அழிக்கப்பட்டது, யாரால் அழிக்கப்பட்டது, அதன் அழிவால் யாருக்கு என்ன லாபம்? என்பதை அறியும் வரை எமக்கு வெற்றி கிடைக்கப் போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
எங்களுக்கு தேவை ஒரு மண்டேலா ஒரு சேகுவேரா ஒரு காந்தி ஒரு லெனின் சதாமும் கடாபியும் பொல்பொட்டும் அல்ல .
மண்டேலா,காந்தி போன்று மேற்குலக செல்லபிள்ளைகள் வேண்டும் :D .....செகுவாரா,லெனின் போன்றோரை மேற்குலகு வரவேற்கவில்லை.....செகுவாராவை கொலை செய்வதில் கொலம்பியா இராணுவத்துடன் முக்கிய பங்கு வகித்த அமேரிக்கா மண்டெலாவையும்,காந்தியையும் தூக்கி பிடித்தமைக்கு முக்கியகாரணம்?
  • கருத்துக்கள உறவுகள்

 

எங்களுக்கு தேவை ஒரு மண்டேலா ஒரு சேகுவேரா ஒரு காந்தி

 

ஒரு அளவுக்காவது அரசியல் அறிவுள்ளவர் என்று இதுவரை  நினைத்திருந்தேன்

இந்தியாவுக்கு காந்தியால் மட்டும் விடுதலை  வந்தது என்றும்

காந்தியால் சிங்களவனிடமிருந்து தமிழருக்கு விடுதலை பெறமுடியும் என  நம்பும் தங்கள் அறிவு..........

சுத்தம்................ :(

 

மற்றது சேகுவேரா

புலிகள் பற்றி  நீங்கள் சொல்லும் அத்தனை  குற்றச்சாட்டுகளும் இவர்  மீதும் உண்டு :(

 

அதுசரி

மாலைதீவைப்பிடித்தால்

ஈழம் கிடைக்கும் இல்லையா??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலக்ப்போரில் ஜேர்மனிக்கு எதிராக களம் இறங்காமல் இருந்த அமெரிக்காவின் ரொசவெல்ட்டை வழிக்கு கொண்டுவர முயன்றார் பிரித்தானியாவின் சேர்ச்சில்.. ஆனால் வேண்டுமென்றே ரொசவெல்ட் முரண்டுபிடித்தார். இறுதியில் சில நிபந்தனைகளை விதித்தார். அவற்றுள் ஒன்று, "பிரித்தானியா உலகின் காலனித்துவத்தில் கொண்டுள்ள ஆதிக்கத்தை கைவிட வேண்டும்."

வேறு தெரிவுகள் இல்லாத சேர்ச்சிலும் ஒப்புக்கொண்டார்.

உலகப்போர் முடிந்த கையோடு பிரித்தானிய ஆளுமையில் இருந்த பல நாடுகள் விடுதலை பெற்றன. ஆனால் அமெரிக்கா உலகின் பெரியண்ணர் பதவிக்கு வந்தது. இன்றுவரை ரொசவெல்ட் அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாகக் கொண்டாடப்படுகிறார். அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதிக்கு இரண்டு தவணைகள்தான் என்கிற அரசியல் அமைப்புத் திரு‌த்தம் வந்ததுக்கும் ரொசவெல்ட்டின் அதீத செல்வாக்குதான் காரணம். ஏனென்றால் அவரது வாழ்நாளில் அவரை தோற்கடிக்க முடியவில்லை.

இதுதான் காந்தி போராடி இந்தியா சுதந்திரம் பெற்ற கதை. :D

இதுக்குள்ள ஜப்பான்காரன் சும்மா இருக்க முடியாமல் பேர்ள் ஹாபர் என்ற பொல்லக்குடுத்து மாங்கு மாங்கு என்று வாங்கி "மவுத்" ஆனது கிளைமக்ஸ்.
 
 
( ஒரு மாதிரி அம்பாறையில இருந்து ஜப்பானை காட்டியாச்சு )    :D

புலிகள் எங்களுக்கு விட்டு போன ஒரே  ஒரு நல்லவிடயம் ,

 

"ஒரு ஆயுத போராட்டம் எப்படி இருக்ககூடாது "என்பதுதான் .

 

நீங்கள் என்ன தான் குற்றம் சொன்னாலும் நித்தியானந்தா எனது குரு என்று ரஞ்சிதா சொல்வது போலிருக்கு பலரின் கருத்து.

 

உங்கட கருத்துக்கள் ஒன்றும் எந்த சபையிலும் ஏறாது யாழில் எழுதிபோட்டு போகவேண்டியதுதான் .தமிழர்களுகாக  இன்று குரல் கொடுக்கும் எந்த சர்வதேச அமைப்புகளிடம் ஆகட்டும் தனி நபர்களிடம் ஆகட்டும் புலிகள் பற்றிய அவர்கள் கருத்து ஒன்றுதான் .

 

கோர்டன் வைஸ் ,பிரங்கஸ் கரிசன் தமது கட்டுரைகளில் மிக கடுமையாக புலிகளை சாடியிருக்கின்றார்கள் அதுவும் தலைவரை மிக மோசமாக விமர்சித்திருக்கின்றார்கள் .இதுதான் சர்வதேச சபைகளில் உள்ள நிலைமை .

 

தனது பிள்ளை என்ன குழப்படி விட்டாலும் அவன் அப்படி செய்திருக்கமாட்டான் என்று சொல்லும் அம்மாக்கள் போல வந்து கருத்து எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை .சுய திருப்திக்கு ஒப்பாரி வைக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
 
அர்ஜுனின் விருப்பத்தில் மண்ணை போட்டு விட்டார்கள். :icon_mrgreen:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139657

 

 
அர்ஜுனின் விருப்பத்தில் மண்ணை போட்டு விட்டார்கள். :icon_mrgreen:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139657

 

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதான் . :icon_mrgreen: .

கிட்டத்தட்ட ஒரு குடுகுடுப்பை காறை நிலை தான் அர்சுணுக்கு உரியது...

 

 தங்களுக்கு எண்டு ஒரு தனித்துவமான  ஒரு நல்ல தலைமையை அமைக்க முடியதவர்கள் , மக்களின் ஆதரவை கூட பெற முடியாமல் தோத்து போனவர்கள்  இவை இரண்டையும்  தந்த புலிகள் பிழை புலிகள் பிழை எண்டு  திரும்ப திரும்ப கூறிவருகிறார்.. 

 

அரசியல் வெற்றியின்  அடிப்படையே தலைமை துவமே  இந்த தலைமை துவத்தில்  அர்சுண் தரப்பு என்ன சாதித்தது...?? நம்பகமான தலைமையை கையை காட்டி இண்டுவரை சொல்ல முடிகிறதா...?? 

 

அடுத்ததாக எந்த தரப்புக்காக போராடுகிறார்களோ அந்த மக்களின் நம்பிக்கையை வெல்லுவது முக்கியம்   அதில் எவ்வளவு சாதித்தார்கள்....?? 

 

இவை இரண்டுக்கும் அர்சுண் ஏற்றுக்கொள்ளக்கூடிய  பதில் தந்தால் நான் புலிகள் ஆதரவு நிலையை மாற்றி அர்சுணுக்கு பின்னால் போய்க்கொள்கிறேன்... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே எந்த வளர்ந்து வரும் அல்லது வளர்ந்த நாடு தன்னும், தனியே பாதுக்காப்பு, பொருளாதாரம், கலை என்பவற்றில் தனித்து நிற்கிறது என்று தெரிந்தவர்கள் சொன்னால் வசதியாக இருக்கும். இங்கே அது அல்ல பிரச்சனை, முதலில் ஒருவர் சொன்னார் இரந்தம் சிந்தாத மக்கள் புட்ச்சி நடந்திருக்க என்று, அதற்க்கு அண்மைய உலகில் நடந்த மிகப்பெரிய மக்கள் புரச்சி சொன்னால், அது அவருடைய ஆதரவில் நடந்தது, நடந்த பிற்பாடும் அந்த நாடு தோல்வியடைந்த நாடு என்றும் , அமெரிக்காவின் கைப்பிள்ளை என்று சொன்னால் அதற்க்கு யார் என்ன செய்ய முடியும்.

இன்றைக்கும் வீட்டு ஒரு சோத்துபார்சல் சில காலங்கள் கேட்டதை கணக்கு வைத்திருபவர்கள் , 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்த பிற்பாடு, கோடிக்கணக்கான சொத்துகள் அழிவிற்கு பிற்பாடு, 30- வருட அபிவிருத்தியை இழந்த பிறகு, கையறு நிலையில் உள்ள மக்களுக்கு , என்ன நடைமுறையில் தீர்வு என்ன என்று கேட்டல், இந்தியாவவோடு சேர்ந்தால் அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும், அமெரிக்காவுடன் சேர்ந்தால் அவருக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்று அவர்களில் கோடிக்கு நின்றுகொண்டு நீ போராட்ட காலத்தில் என்ன செய்தனீர் என்று கேக்க தெரிகிறது-அதே கோடிக்குள் நின்று அது சரி என்று பச்சை குத்தவும் தெரிகிறது .

ஒருவர், இருவர் வரலாறு தெரியாமல் , தனக்கு தெரிந்தபடி அர்தமற்று விவாதித்தால், நாலு எழுத்து படிக்கச் தெரிந்தவர்கள், வரலாறுகளை தெரிந்தவர்கள், அவர்களை திருத்தவேண்டும், அதை விடுத்து, அவர்களை ஊக்குவிப்பவது அழிவடைந்து இருக்குக்கிற எமது சமூகத்திற்கு எந்த வகையிலும் உதவாது.

மற்றது இசை அண்ணா;

ரூஸ்வெல்ட் கதை எல்லாம் பகிர்ந்து இருந்தீர்கள். நன்றி நன்றி ..அப்ப உங்கட பார்வையிலும் காந்தி ஒரு கேனையனாக தெரிந்து இருப்பாரே. ஒரு மனிதன் என்றால், அதென்ன அமெரிக்க அழுத்தத்தால் வந்த இந்திய சுதந்திரத்தை எடுத்து அவர்களுக்கு காலம் முழுக்க அடிமையாக இருக்கவேண்டும் என்று நினைத்து; அவருக்கும் ஒரு பூமாலை அல்லவா அனுப்பி இருக்க வேண்டும். அப்படித்தான் தயா அண்ணா சொல்லுகிறார்...அதுதான் உண்மையான வீரனுக்கு அழகாம்.....

மக்கள் புரட்சி நடக்கவேண்டும் என்று சொன்னால், பிரபாகரனால் முடியாதது என்னவென்று மற்றவர்காலால் முடியும் என்று சொன்னால் யார் அதற்க்கு பதில் சொல்ல முடியும்..அவன் இப்ப கொக்குவிலில் ஆமிக்கு ஆக்கள் சேர்கிறான், நாங்கள் இங்கே நாடு நடந்து இணையத்தில் அடுத்த ஆயுத புரட்சிக்கு, உலக நாடுகள் எலாவற்றையும் பகைத்து திட்டம் தீட்டுகிறோம். வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதான் . :icon_mrgreen: .

 

 

15 தமிழர் இயக்கங்களும் தடை செய்யப்பட்டதில் சந்தோசப்பட்ட முதலாவது ஆள் நீங்கள். இதே களத்தில் எழுதியும் உள்ளீர்காள். எழுதினேன் என சொல்ல துணிவு இல்லையா??

இந்தியாவுக்கு பிரித்தானியா  காந்தியிடம்  சுதந்திரத்தை கொடுத்தது...  ஆனால் சுதந்திரமாக போக விரும்பிய இந்தியாவின் பகுதிகள் பலவும் INA  இராணுவத்தின் மூலம் பலவந்தமாக இணைத்த வரலாற்றை  கனபேர் தெரிந்து இருக்கவில்லை  எண்டது மட்டும் புரிகிறது....   

 

காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி குடுத்த  அரிவரி கதைகள் மட்டும் தான் இங்கை  விளங்கி கொள்ள பட்டு இருக்கிறது...  

 

 

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரப்பா சொன்னது காந்தி இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் குடுத்தது எண்டு?  பிரிட்டிஸ்காரன் தானாக விட்டிட்டுப் போனப்போ காந்தியிட்டக் குடுத்திட்டுப் போனதை வைச்சு அவர் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் குடுத்தவர் எண்டு நம்பிறவையின்ர அரசியலை நினைக்கச் சிரிப்புச் சிரிப்பா வருகுது.  காந்தியாலை பாகிஸ்தானைப் பிரிச்சுக் குடுத்ததைக்கூடத் தடுக்க முடியல்ல.  பிறகு அவர் சுதந்திரம் வாங்கிக் குடுத்தவராம்.  இந்தக் கதை இப்ப இந்தியாவிலையே எடுபடுறதில்ல.  அது விளங்காம சிலபேர் இப்பவும் பழைய காலத்திலேயே இருக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.