Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா " மேதின உரையின் பின் விக்கினேஸ்வரன் பொலிசாரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண முதலமைச்சர்  சி.வி.விக்கினேஸ்வரனை  கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார்.

சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவசர அவசரமாக காரில் ஏற்றி அவரை வெளியேற்றினர்.

இதனிடையே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உரை அங்கு பிரச்சன்னமாகியிருந்த பலரிடமும்  சர்ச்சையை  ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக சாவகச்சேரியில் மேதின ஏற்பாட்டை செய்திருந்த மாகாணசபை உறுப்பினர் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்களை சுற்றிவளைத்து பலரும் கேள்விகளை எழுப்பியதுடன் விமர்சனங்களையும் முன்வைத்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106342/language/ta-IN/article.aspx

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலா?

அதுவும் யாழிலா??

சீ  இருக்காது

அங்கு மக்கள் எல்லோரும் பிரபாகரனை  மட்டுமல்ல தமிழரின் தாகத்தையே  மறந்து கனகாலமாச்சு......... :(  :(

தமிழர்களிடத்தில் ஒற்றுமையில்லை – சி.வி

 

தமிழர்களாகிய எங்களிடம் ஒற்றுமையில்லை. அதேபோல் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பல வித நாடகங்கள் நடந்தேறுகின்றன. அவற்றின் பின்னணியில் சுயநலமே பொதிந்து இருப்பதை நாம் அவதானிக்கலாம். சுயநலத்திற்காக வெவ்வேறு கட்சிகள் கூட ஒன்றிணைந்து செயற்படவும் முன்வருகின்றன. அதாவது எமது கட்சியினர் எம்மவரை வெளியேற்றப் பிற கட்சியினரை நாடுகின்றனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சாவகச்சேரியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மே முதலாந்திகதி உலகெங்கும் சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தொழிலாளரின் ஐக்கியத்தையும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும், வெற்றியையும் எடுத்துக் காட்டும் நாளிது.

1886ம் ஆண்டு மே மாதம் 1ந் திகதியன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பணிசெய்த தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்தார்கள். அதற்கு முன் அவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் இறங்கியதில்லை. அவர்களின் முக்கிய கோரிக்கை எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட வேலை நாள் நாடெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதே.

தொடர்ந்து வேலைப் பகிஷ்கரிப்பு நடந்து வந்ததால் பதவியில் உள்ளவர்கள், முதலாளிமார்கள் ஆகியோர் சிந்திக்கத் தொடங்கினார்கள். மனமாற்றம் ஏற்பட்டது. அரசாங்கம் எட்டு மணித்தியால வேலை நாட்களைப் பிரகடனப்படுத்தியது. இதனை மற்ற நாடுகள் கூட ஏற்று நடக்கத் தலைப்பட்டன. அதுமட்டுமல்ல. அமெரிக்கா போன்று பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகள் கூட மேதினத்தை தேசிய ரீதியில் தொழிலாளர் விடுதலை தினம் ஆகப் பிரகடனப் படுத்தினர்.

வழக்கமாக தொழிலாளர் வர்க்கம் தமது குறைகளை நாடறிய ஊரறிய உரத்துக் கூறும் நாளாகவே மேதினங்களைப் பாவிக்கின்றனர். இன்று பல நாடுகள் மேதினத்தை விழாவாகக் கொண்டாடுகின்றன. அதை ஒரு முற்றிலுஞ் சமூக விழாவாகக் கொண்டாடும் நாடுகளும் உள.

தொழிலாளர் தினம் பிறந்த நாளானது அதாவது மே தினமானது எங்களுக்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் வெற்றி பெறச் சகலரின் ஒத்துழைப்பும் தேவை என்ற உண்மையை எடுத்தியம்புவதாகவும் அமைந்துள்ளது.

உங்களுக்கு இந்த மே தினக் கூட்டத்தில் நான் எடுத்தியம்ப விரும்பும் முதலாவது கருத்து மேதின வெற்றியை ஊர்ஜிதப்படுத்திய அந்த 1886ம் ஆண்டைய தொழிலாளப் பெருமக்களின் வாழ்கையில் இருந்து, அவர்களின் அன்றைய நடத்தையில் இருந்து, ஒற்றுமையையும், ஐக்கியத்தையும், ஒத்துழைப்பையும் இலங்கையின் வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களாகிய நாங்கள் இன்று மனதிற்கெடுத்துக் கொள்வோம் என்பதே.

தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டோமானால் எமக்குள் ஒற்றுமையின்மையே எமது தோல்விக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமை வேண்டும் என்று தான் கூறுகிறோம். ஆனால் எம்மால் ஒன்றுபட முடியாது இருக்கின்றது. இது ஏன் என்று பார்த்தோமானால் ஒவ்வொருவரும் மற்றவர்கள் தன்னுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். அதாவது நான் கூறுவது தான் சரி, நான் எண்ணுவதுதான் சரி, நான் செய்வதுதான் சரி ஆகவே மற்றவர்கள் என்னுடன் இணைந்து நடக்க வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். மற்றவர்கள் என்னுடன் இணைவதே ஒற்றுமை என்று எண்ணி விடுகின்றார்கள். மற்றவர்கள் கூறுவதிலும் உண்மைகள் இருக்கலாம் என்று எண்ணுவதற்கு இடமளிக்காது அவர்களின் அகந்தை. இதனால் அன்று தொடக்கம் இன்று வரை நம் கட்சி – மறு கட்சி என்றே சிந்தித்து வருகின்றோம். 

மேலும் நம் தலைவர் எதிர்த்தலைவர்கள் என்று தலைவர்களை அடையாளம் காட்டி 'நான் ,ன்னாரை ஆதரிக்கின்றேன் 
நீ மற்றவரை ஆதரிக்கின்றாய். ஆகவே நீ என் எதிரி' என்ற போக்கில்த்தான் நாம் செல்கின்றோம். நாங்கள் உன்னித்துக் கவனித்தோமானால் ஒவ்வொரு தலைவர் கூறுவதிலும் ஏதோ ஒரு உண்மை பொதிந்து தான் கிடக்கின்றது. ஆனால் அவை எந்த அளவு சுயநல சிந்தையுடன் கூறப்படுகின்றது, எந்தளவு பொதுமக்கள் நலனை முன் வைத்துக் கூறப்படுகின்றது என்பதில்த்தான் உண்மையான வேற்றுமை இருக்கின்றது.

நான் கல்லூரியில் படிக்குங் காலத்தில் இரண்டு சகோதரர்களின் பிள்ளைகள் கல்லூரிக்கு வருவார்கள். அவர்களின் தந்தைமார்களில் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பார். மற்றவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பார். அரசியல் மேடைகளில் அவர்கள் எதிரும் புதிரும். ஆனால் வீட்டிலோ இரு குடும்பத்தாரும் மிகவும் அன்னியோன்னியம். ஒரு நாள் அந்த இரு சகோதரரின் மகன்மாரிடையேயும் வினவினேன் 'எவ்வாறு உங்களால் இவ்வளவு ஒற்றுமையாக இருக்க முடிகின்றது' என்று. 

எங்கள் தந்தைமார் எமக்குக் கூறியிருக்கின்றார்கள் தாங்கள் இருவரும் ஒரு தாய் மக்கள் என்றும் ஆகவே எந்தத் தருணத்திலும் எங்களுக்குள் பிரச்சினைகள், பிரிவினைகள் ஏற்;படக்கூடாது என்று. நாங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்றும்; கூறியுள்ளார்கள். அரசியல் கட்சிகளில் இன்று ஒன்று பதவியில் இருக்கும். நாளை மற்றையது. எது வந்தாலும் எமது ஒரு சகோதரர் ஆளுங் கட்சியுடன் இணைந்திருப்பார். ஆட்சியுடன் இணங்கி இருப்பவர் மற்றைய சகோதரரின் வியாபாரப் பிரச்சினைகள், தொழிற் பிரச்சினைகள் சகலதைப் பற்றியும் ஆராய்ந்து அவருக்கு உதவுவார்' என்று.

எப்படி ,ருக்கின்றது அவர்களின் உறவு என்று பாருங்கள். யூதர்களிடமும் ,ந்தக்குணம் ,ருந்து வருகின்றது. எங்கிருந்தாலும் ஒரு யூதன் ,ன்னொரு யூதனுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டே ,ருப்பான்.

எமது தமிழர்கள் மட்டும் ஒற்றுமைக்கு விதிவிலக்காக வாழ்கின்றார்கள்.

ஒரு கதையுண்டு. 2ம் யுத்த காலத்தில் கைதிகளைப் பாரிய கிடங்குகளைக் கிண்டி அதனுள் நிற்க வைத்துக் காவல் காத்து வந்தார்களாம். ஒரு கிடங்கைச் சுற்றி மட்டும் காவலர்கள் எவரையும் நிறுத்தவில்லை. மக்கள் கூட்டம் மட்டும் கிடங்கினுள் இருந்தது. இது ஏன் என்று கேட்ட போது 'அவர்கள் தமிழர்கள். அவர்களுக்குக் காவல் தேவையில்லை. ஒருவன் மேலே எழ எத்தனித்தால் அவனை மற்றவர்கள் தாங்களே கால்களைப் பிடித்துக் கீழே இழுத்து விடுவார்கள். ஆகவே காவல் தேவையில்லை' என்றார்களாம்.

இன்றைய நிலையும் அதேவாறு தான். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பல வித நாடகங்கள் நடந்தேறுகின்றன. அவற்றின் பின்னணியில் சுயநலமே பொதிந்து இருப்பதை நாம் அவதானிக்கலாம். சுயநலத்திற்காக வௌ;வேறு கட்சிகள் கூட ஒன்றிணைந்து செயற்படவும் முன்வருகின்றன. அதாவது எமது கட்சியினர் எம்மவரை வெளியேற்றப் பிற கட்சியினரை நாடுகின்றனர்.

எமது வாழ்க்கை வளம் பெற வேண்டுமென்றால் வருங்காலம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்றால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நலன் கருதியே நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். எமது கடமைகள், கடப்பாடுகள், நடவடிக்கைகள் யாவும் அவர்களின் நலன் கருதியே ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் பதவிக்கு வந்தால்த்தான் மக்களுக்கு நாங்கள் சேவை செய்யலாம் என்று எண்ணுவது மடமை. நீங்கள் எங்கே இருந்தாலும் கட்சிக்கும், மக்களுக்கும் நன்மைகள் செய்யலாம், சேவைகள் புரியலாம், பணிகளில் ஈடுபடலாம். எனவே ஐக்கியம், ஒற்றுமை ஆகியனவற்றை மே தினம் குறிக்கின்றது என்று கூறித் தமிழ் மக்கள் அந்த முக்கியமான ஒரு கருத்தை ஆழ் மனதுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.

அடுத்து ஒற்றுமை இருந்தால்க்கூட ஒருமித்துச் செயற்படுவதற்குப் போதிய திறன்கள், புரிந்துணர்வுகள் எமக்கிருக்க வேண்டும். முதன்முதலாகத் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றில் இறங்கிய போது அந்தத் தொழிலாளப் பெருமக்களின் மனதில் எத்துணை சந்தேகங்களும், பீதிகளும், பயமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் மனதிற்கெடுக்க வேண்டும். நாளை எம்மெல்லோரையும் வேலையில் இருந்து நீக்கி விட்டால் எமது குடும்பத்திற்கு என்னவாகும்? பொலிஸைக் கொண்டு எங்களைத் தாக்கினால் எமக்கு என்னவாகும்? தொடர்ந்து வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அன்றாடச் சோற்றுக்கு யார் பொறுப்பு? இப்படிப் பல எண்ணங்கள் அவர்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டே இருந்திருக்கும். அப்படியிருந்தும் அந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களை வழி நடத்தியவர்கள் திடமான நோக்கங்களையும், அவற்றின் பால் ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளையும் உள்வாங்கியிருந்தார்கள் என்று அர்த்தம்.

இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எம்மால்த் தமக்கு நட்டம் ஏற்படும் என்று முதலாளிமார்கள், பதவியில் உள்ளவர்கள் நினைத்தால்த்தான் எமது நடவடிக்கைகள் வெற்றி பெறுவன. உதாரணத்திற்கு எமது அரசியல் சார்பான சத்தியாக்கிரகங்களை எடுத்துப் பார்த்தீர்களானால் அவை பதவியில், அதிகாரத்தில் அன்று இருந்தவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. 

அதனால் அவை தோல்வியுற்றன. அதற்கு மாறாக சௌம்மியமூர்த்தி தொண்டைமான் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கிய உடனேயே அரசாங்கம் திடுக்குற்றது. ஒரு நாளைக்குத் தமக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று கணக்கெடுக்கத் தொடங்கியது. எனவே ஐக்கியமும், ஒத்துழைப்பும் எம்மிடையே மலர்ந்தால்க்கூட அவற்றை வைத்து வெற்றியை அடைய நாம் வேறு பல தகைமைகளையும் பெற்றிருக்க வேண்டும். எமது தொழிற்சங்க அல்லது அரசியல் நடவடிக்கைகள் எமது முதலாளிமார்களை அல்லது அரசாங்கத்தைத் தமது மூக்கின் மேல் கை வைப்பதாக அமைய வேண்டும்.

ஆகவே எந்தவொரு தொழிற்சங்க அல்லது அரசியல் நடவடிக்கையில் இறங்குவதென்றாலும் அதற்குரிய காலம் கனிந்து வரும் வரையில் காத்திருக்க வேண்டும். என் நண்பர் சௌம்மியமூர்த்தி தொண்டைமான் அவர்கள் தோசையைப் பிரட்டுவது பற்றி அடிக்கடி கூறுவார். எங்கள் அம்மாமார்களுக்குத் தெரியும் வெந்து கொண்டிருக்கும் தோசையை எப்போது மறுபக்கம் திருப்ப வேண்டும் என்று. 

அதே போல் நாங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை எப்போது எடுக்க வேண்டும் என்று கூறுவார். அது ஒரு கலை என்பார் சௌம்மியமூர்த்தி.  

இன்று எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கக் காலம் கனிந்து வந்து கொண்டிருக்கின்றது. ஜெனிவாத் தீர்மானமானது சகல உலகத்தையும் ஒரு சில காலத்திற்கு எம் மீது கரிசனை கொள்ள வைக்கும். அதற்கிடையில் இங்கு நடப்பவற்றை எல்லாம் நாங்கள் பட்டியலிட்டு வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டியிருக்கின்றது.

நேற்றுத்தான் இவை பற்றியெல்லாம் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க எமது கட்சியினால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எம்மிடையே நடந்துள்ளதையும், நடப்பவற்றையும் இவ்வாறு அடையாளப்படுத்தியுள்ளோம்.

2009ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற அனர்த்தங்கள். இவை பற்றி ஐக்கியநாடுகள் நிறுவனம் ஆராயவுள்ளது. ஆனால் அவர்கள் நடத்தும் விசாரணைகளுக்கு நாங்கள் எம்மாலான விபரங்களையும், தரவுகளையும், விளக்கங்களையும் கொடுக்க வேண்டும். அதைக் கொடுக்க அரசாங்கம் சகல விதங்களிலும் முட்டுக்கட்டையாக இருக்கும். அதையும் மீறி உரிய சத்தியப் பத்திரங்கள், ஆவணங்கள், சாட்சியம் ஆகியன அளிக்கப்பட வேண்டியது எமது முதலாவது கடப்பாடு.

தற்போது எம்மிடையே நிலைபெற்றிருக்கும் ஆயுதப்படையினர் எந்த அளவுக்கு எம் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றார்கள்; எவ்வாறு எமது வாழ்வாதாரங்களை முடக்கி வைத்துள்ளார்கள்; காணி, கடல் போன்றவற்றில் எவ்வாறு அவர்களின் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது; அவர்கள் கையேற்றிருக்கும் ஏக்கர் காணி எவ்வளவு; அவற்றில் எத்தனை ஏக்கர் காணிகளை அவர்கள் தம் கைவசப்படுத்தி உரிமைப் பத்திரங்களைக் கோருகின்றார்கள்; எதற்காக அவர்கள் தொடர்ந்து ,ங்கிருந்து வருகின்றார்கள் போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டு கணணியில் பதிவு செய்ய வேண்டும்.

வடமாகாணசபையை அரசாங்கம் எவ்வாறு முடக்கி வருகின்றது என்பது.

அரசியல்த் தீர்வொன்றை ஏற்படுத்த ஏன் அரசாங்கம் தயங்குகின்றது? அவர்களின் தூர நோக்கு என்ன, இது திடமானதாக இன அழிப்பை நோக்கியே செல்கின்றதா அப்படியானால் சர்வதேச உலகம் இதனைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றித் திடமான தரவுகளுடன் உறுதியான ஆவணங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

போதுமான விபரங்கள், தரவுகள் அடங்கியவாறான ஆவணங்கள் அடுத்த சில மாதங்களினுள் சர்வதேச உலகின் கவனத்திற்குக் கொண்டு வரப்;பட்டால், விசாரணைக்கான விபரங்கள் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களிடம் விரைவில் பாரப்படுத்தப்பட்டால் எமது உள்ளூர் நடவடிக்கைகளில் நாம் உடனே இறங்கலாம்.

இராணுவத்தை ஒரு போதும் வடமாகாணத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறுமாப்பாகக் கூறியதாகப் பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.

முதலாவது எமது ஜனாதிபதியின் இன்றையதான ஜனாதிபதி வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒரு கேள்விக்குறி. இரண்டாவது அவரின் எண்ணங்களைக் கொண்டவாறே இனி வரும் அரசாங்கத்தினர் தொடர்ந்தும் பதவியில் இருப்பர் என்பது என்ன நிச்சயம்? ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் இருந்தார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்படிப்பட்ட சவாலான கருத்துக்களை ஏன் அவர் முன் மொழிகின்றார் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன்.

இந்திய அமைதிப்படை இங்கு வந்த போது ஒரு இந்தியப் படையதிகாரி என் நண்பரிடம் பின்வருமாறு கூறினாராம். 'நாங்கள் இன்னும் ஒரு நூறு வருடங்களுக்கேனும் இங்கிருந்து வெளியேறமாட்டோம்' என்று சொன்னாராம். ஆனால் அடுத்த வருடமே இங்கிருந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் முகங் கொடுக்க வேண்டி வந்தது. வி.பீ.சிங் அவர்கள் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றதும் 100 வருடம் இங்கு வாழவிருந்த இந்தியச் சிப்பாய்கள் கப்பல் ஏற வேண்டி வந்தது.

ஆகவே எமது ஜனாதிபதியோ, இராணுவமோ தாம் நினைத்தவாறு எமது மண்ணில் நிரந்தரமாக அவர்கள் இருந்துவிட முடியாது. அதற்கு இயற்கை இடமளிக்காது. இறைத்தன்மை இடமளிக்காது. ஏன் இந்தியப் பாதுகாப்புக் கரிசனைகள் கூட இடமளிக்கா. எமக்கு வேண்டாத ,ராணுவம் விரைவில் எம் மண்ணை விட்டு வெளியேற வேண்டும். சர்வதேச விதிகளுக்கு அமைய ஆங்காங்கே மத்திய அரசாங்கம் சார்பான அமைதிப்படைகளை நிலை நிறுத்த நாங்கள் இடமளிக்கலாம். ஆனால் தம் எண்ணத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புப் படையாக எமது நாட்டுப் படையினர் இங்கு இருக்கப் போவதை நாம் இடமளிக்கப் போவதில்லை. அன்று 'வெள்ளையனே! வெளியேறு' என்று உரக்கக் கூறிய எம் மக்கள் குரல் இனி இராணுவத்தினரும், அரசாங்கத்தினரும் கேட்கும் படியாக 'படையினரே வெளியேறுங்கள்' என்று ஒலிக்கப் போகின்றது.

எனவே இந்த மே தின விழாவானது எமது அடிப்படை உரிமைகளைத் தட்டிக் கேட்க வழி சமைப்பதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன். இராணுவத்தினர் எமது சகோதரர்கள். சிங்களச் சகோதரர்கள். ஆனால் அவர்களுக்கென்று வாழ இடமுண்டு. பயிர் செய்ய நிலமுண்டு. மீன் பிடிக்கக் கடல் உண்டு. காத்து நிற்கப் பெண்கள் உண்டு. இங்கிருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கும் இல்லை. அவர்களை எம் தோள் மேல் தூக்கிச் செல்ல எமக்குக் கடப்பாடு எதுவும் இல்லை. இதைப் புரிந்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/108868-2014-05-01-14-00-46.html

Edited by Athavan CH

இணைப்புக்கு நன்றி ஆதவன்.

 

விக்கினேஸ்வரன் சரியாகத்தா உரையாற்றியிருக்கின்றார். பல விடயங்களில் தெளிவாக இருக்கின்றார். தமிழ் மக்கள் பற்றி, ஒற்றுமை பற்றி நன்கு புரிந்து கொண்டு பேசியிருக்கின்றார். கால மாற்றத்தினூடாக அரசியல் காய் நகர்த்தல்களை பொறுமையாகச் செய்தால் பல விடயங்களை நிழத்தலாம் என்று நம்புகின்றார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்க்கை வளம் பெற வேண்டுமென்றால் வருங்காலம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்றால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நலன் கருதியே நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். எமது கடமைகள், கடப்பாடுகள், நடவடிக்கைகள் யாவும் அவர்களின் நலன் கருதியே ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் பதவிக்கு வந்தால்த்தான் மக்களுக்கு நாங்கள் சேவை செய்யலாம் என்று எண்ணுவது மடமை. நீங்கள் எங்கே இருந்தாலும் கட்சிக்கும், மக்களுக்கும் நன்மைகள் செய்யலாம், சேவைகள் புரியலாம், பணிகளில் ஈடுபடலாம். எனவே ஐக்கியம், ஒற்றுமை ஆகியனவற்றை மே தினம் குறிக்கின்றது என்று கூறித் தமிழ் மக்கள் அந்த முக்கியமான ஒரு கருத்தை ஆழ் மனதுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.



 

 

 

இவர் அரசியலுக்கு வரமுதல் தமிழர்களுக்குச் செய்த சேவைகளை
யாராவது சொல்லுங்கள்

எமது வாழ்க்கை வளம் பெற வேண்டுமென்றால் வருங்காலம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்றால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நலன் கருதியே நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். எமது கடமைகள், கடப்பாடுகள், நடவடிக்கைகள் யாவும் அவர்களின் நலன் கருதியே ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் பதவிக்கு வந்தால்த்தான் மக்களுக்கு நாங்கள் சேவை செய்யலாம் என்று எண்ணுவது மடமை. நீங்கள் எங்கே இருந்தாலும் கட்சிக்கும், மக்களுக்கும் நன்மைகள் செய்யலாம், சேவைகள் புரியலாம், பணிகளில் ஈடுபடலாம். எனவே ஐக்கியம், ஒற்றுமை ஆகியனவற்றை மே தினம் குறிக்கின்றது என்று கூறித் தமிழ் மக்கள் அந்த முக்கியமான ஒரு கருத்தை ஆழ் மனதுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.

இவர் அரசியலுக்கு வரமுதல் தமிழர்களுக்குச் செய்த சேவைகளை

யாராவது சொல்லுங்கள்

சிங்.......சக்

நீதிபதியாக இருந்தார்..அதுவே மகத்தான சேவை...

யாருக்கும் மரண தண்டனை கொடுத்தாரா தெரியாது... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பேச்சை முழுமையாக கேட்பவர்களுக்கு அவர் என்ன சொல்லவருகிறார் என்பது புரியும். பிரபாகரனை பற்றி ஒரு இடத்தில்தான் சொல்லிகிறார், யார் சொல்லையையும் கேட்காமல் அழிந்து போனார், அதே போல மகிந்தவும் அழிவார் என்று சொல்லுகிறார். அதை தவிர வேறு எந்த இடத்திலும் எதுவும் சொல்லவில்லை.

பிரபாகரன் செய்தது எல்லாம் சரி அவர் விமர்சனதிற்கு அப்பற்பட்டவர் என்பவர்களுக்கு அது சரியா இருக்காதுதான், அதையும் தாண்டி உலகம் உருள வேண்டி உள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்

Hmmmm யாழ் களத்தில் அடுத்த மாற்றுக்கருத்து மாணிக்கம் உருவாக்கிட்டார் அண்ணன் எரிமலை :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர்.
உப்படித்தான் அந்த காலத்தில நானும் எனது நண்பர்களும் இளைஞனாக இருக்கும் பொழுது.....ஒரு கூட்டத்தில் அமிர்தலிங்கம் மாவட்டசபைக்கு அதிகாரம் அதிகம் தேவை என்று சொல்ல உடேனே நாங்கள் ஆத்திரமடைந்து நாங்கள் தமிழீழம் வேண்டுமென்றுதான் வாக்கு போட்டனாங்கள் நீங்கள் மாவட்டசபைக்கு அதிகாராம் கேட்கிறீயள் என சுற்றிவளைச்சனாங்கள்....பிறகு எனக்கு அவுஸ்ரேலியாவும்,நண்பர்களுக்கு அமெரிக்கா,கனடா ,பிராண்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் கிடைக்க அமிருக்கு மேலோகம் கிடைச்சுது
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ  எதுக்கு பிரபாகரன்???

ஒரு மேதினக்கூட்டத்தைக்கூட பிரபாகரன் பெயரைப்பாவிக்காமல் செய்யமுடியவில்லை  இவர்களால்...

 

மக்கள் இவர்களைத்தேர்தெடுத்தது

எவரையாவது தூண்டிவிடுவோ

சீற்றம் ஏற்படுத்தவோ

பகைக்கவோ  அல்ல........

மாறாக

சமோசிதமாக

அறிவைப்பாவித்து

தமிழர்களை இன்றையநிலையிலிருந்து விடுவிக்க மட்டுமே.

அதற்கு எதிரான  அத்தனையையும் செய்கிறார்கள்

எப்போ

வாக்களித்த மக்களை புரிந்து கொள்ளப்போகின்றார்கள்??

இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவசர அவசரமாக காரில் ஏற்றி அவரை வெளியேற்றினர்.

தம்மைத் தாமே ஏகபிரதிநிதிகள் என்று புலிகள் அறிவித்த நிலையில் புலிகளுக்குப் பின்னான காலம் என்று ஒன்றில்லை என்று நம்பி வந்தனர் புலி ஆதரவாளர்கள்.

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக் கணக்கான எமது மக்களின் அழிவுடன் புலிகளின் தலைமையும் அழிக்கப் பட்ட போது இனவாத அரசின் மீது வந்திருக்க வேண்டிய கோபம் கால தாமதமாக உண்மையைச் சொன்ன விக்னேஸ்வரன் மீது வருகிறது சிலருக்கு. தாயகத்தின் இன்றைய உண்மை நிலையை விளங்கிக் கொண்டவர்கள் அவர் சொல்லும் விடயங்களின் முக்கியத்துவத்தை உணர்வார்கள்.

இப்போ  எதுக்கு பிரபாகரன்???

ஒரு மேதினக்கூட்டத்தைக்கூட பிரபாகரன் பெயரைப்பாவிக்காமல் செய்யமுடியவில்லை  இவர்களால்...

 

மக்கள் இவர்களைத்தேர்தெடுத்தது

எவரையாவது தூண்டிவிடுவோ

சீற்றம் ஏற்படுத்தவோ

பகைக்கவோ  அல்ல........

மாறாக

சமோசிதமாக

அறிவைப்பாவித்து

தமிழர்களை இன்றையநிலையிலிருந்து விடுவிக்க மட்டுமே.

அதற்கு எதிரான  அத்தனையையும் செய்கிறார்கள்

எப்போ

வாக்களித்த மக்களை புரிந்து கொள்ளப்போகின்றார்கள்??

 

உரையை முழுமையாக வாசித்தீர்களா?

Hmmmm யாழ் களத்தில் அடுத்த மாற்றுக்கருத்து மாணிக்கம் உருவாக்கிட்டார் அண்ணன் எரிமலை :D

 

 

அண்ணன் எரிமலைக்கு எனர்ஜியும் உற்சாகமும் கொடுக்கும் நல்லெண்ணத்தோடு.......  :D  :D

 

 

http://www.youtube.com/watch?v=0lhd4OAXGzk

உப்படித்தான் அந்த காலத்தில நானும் எனது நண்பர்களும் இளைஞனாக இருக்கும் பொழுது.....ஒரு கூட்டத்தில் அமிர்தலிங்கம் மாவட்டசபைக்கு அதிகாரம் அதிகம் தேவை என்று சொல்ல உடேனே நாங்கள் ஆத்திரமடைந்து நாங்கள் தமிழீழம் வேண்டுமென்றுதான் வாக்கு போட்டனாங்கள் நீங்கள் மாவட்டசபைக்கு அதிகாராம் கேட்கிறீயள் என சுற்றிவளைச்சனாங்கள்....பிறகு எனக்கு அவுஸ்ரேலியாவும்,நண்பர்களுக்கு அமெரிக்கா,கனடா ,பிராண்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் கிடைக்க அமிருக்கு மேலோகம் கிடைச்சுது

தமிழ் ஈழம் வேண்டும் என்று வாக்கு போடும் வயது எனக்கு அப்போ இருக்கவில்லை புத்தனுக்கு அது அப்போ இருந்தது என்பது புத்தன் எனக்கு அண்ணரா . :icon_mrgreen:

மாவட்டசபை பற்றிய கூட்டங்களுக்கு நானும் சென்றேன் .அதில் கூட்டணி என்ன சொன்னார்கள் என்று புத்தனுக்கு நினைவு இருக்கோ தெரியாது .அதிலும் காசியர் பேசியது இன்னமும் எனக்கு நினைவு இருக்கு .சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் .மாவட்ட சபை அதிகாரம் என்பது தமிழ் ஈழத்தை நோக்கி போகும் பயணத்திற்கு ஒரு தங்குமிடம் தான் .

பள்ளிகூடம் போகாத விளங்காபயல்கள்  இதை விளங்காமல் தமிழ் ஈழத்தை அமிர் விற்று விட்டார் என்று கூட்டங்களையே குழப்பினார்கள் .அதில் முக்கியமானவர்கள் தமிழ் இளைஞர் பேரவை( குறிப்பாக உமாவும் மாணிக்கமும் ).

------------------------------------------------

Edited by நிழலி
திரிக்கு முரணான வரி நீக்கப்பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய மே தின உரை; சி.வி விளக்கம் 

 

சாவகச்சேரியில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.

மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், 'எமது ஜனாதிபதியின் ஜனாதிபதி வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒரு கேள்விக்குறி. இரண்டாவது அவரின் எண்ணங்களைக் கொண்டவர்களே இனிவரும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் பதவியில் இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்.

ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் இருந்தார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்பேர்ப்பட்ட சவாலான கருத்துக்களை ஏன் அவர் முன் மொழிகின்றார் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன்' என்று கூறியிருந்தார்.

இந்த உரை தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் தனது உரை தொடர்பான விளக்கத்தினை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அலெக்சாண்டர் ஒரு மகாவீரன். அதற்காக அவன் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது. பிரபாகரன் ஒரு மகாவீரன் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூட அண்மையில் கூறியிருந்தார். அதற்காக அவர் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தின் பின் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசமே வைத்திருக்கின்றார். இன்று கேட்பாரின்றி அதிகாரத்தில் இருக்கின்றார். இவை எவ்வளவு காலத்திற்கு என்பதைப் பற்றி ஜனாதிபதி சிந்திக்க வேண்டும் என்றே எனது உரையில் கூறினேன்.

தங்கை அனந்தி சசிதரன் (வடமாகாண சபை உறுப்பினர்), நான் கூறியதன் அர்த்தம் புரியவில்லை என்றும் ஆனால் முதலமைச்சர் காரணமில்லாமல் எதுவும் கூறியிருக்கமாட்டார் என்றும் கூறியதாக அறிந்தேன். அப்படி அவர் கூறியிருந்தால் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் நான் பேச்சு முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியே வந்தபோது எவருமே என்னை அணுகி எதுவும் கேட்கவில்லை, கேட்க எத்தணிக்கவும் இல்லை. எல்லோரும் வழக்கம் போல் கைகூப்பி வணக்கம் தெரிவித்தே என்னை வழியனுப்பினார்கள்' என முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மே தின உரையை முடித்துக்கொண்டு வெளியேறிய முதலமைச்சரிடம்,  'தேர்தலுக்கு முன் மாவீரன், தேர்தலுக்கு பின் சர்வாதிகாரியா?' என பொதுமகன் ஒருவர் முதலமைச்சரினைப் பார்த்து கேள்வி எழுப்பியதாக யாழிலிருந்து வெளியாகின்ற ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/108978-2014-05-02-12-35-56.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்துக்கும், ஆயுதப் போராட்டத்துக்கும் வித்தியாசம் உண்டு என்பதை அறியாதவரா முதல்வர்? தலைவரின் வழிக்கும், மகிந்தவின் செயல்களுக்கும் எந்த ஒப்புமையும் கிடையாது.

இலங்கையில் இடம்பெற்றது தமிழின அழிப்புத்தான் என்பதை நாம்  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என்றும், ஐ.நா ஆணையாளர் அலுவலகத்தினால்  விசாரணை இடம்பெறும் போது இலங்கையில் இடம்பெற்றது என்ன எப்பது வெளிப்படும் அது இன அழிப்பா , போர்க்குற்றமா அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றமா என்பதுபதை அந்த விசாரணைகள் வெளிப்படுத்தும் நாங்கள் தனித்தனியாக கேட்கவேண்டியதில்லை என்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை ஐ.நா தீர்மானத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கத்திற்கு துணைபோவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
 
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட  அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் போது அதனை நாம் கோருவதில் சிக்கல் உள்ளது. ஏன் என்றால் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் மனித உரிமைகள் தொடர்பாகத்தான் விசாரணை நடத்த முடியும். ஆணையாளரின் அலுவலகத்தினால் விசாரணை நடத்தப்படும் போது இங்கு நடந்தது என் என்பது வெளிப்படும்.
 
மனித உரிமைப்பேரவையானது மனித உரிமைகளை மட்டும் தான் விசாரணை செய்ய முடியும்.  அந்தப்பேரவையின் வரைபை வரைந்தவர்கள் அவ்வாறு தான் வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். எனவே ஆணையாளரின் அலுவலகத்தினால்  விசாரணை நடத்தப்படும்  போது அதனை ஒத்த விடயங்கள் பற்றி ஆராயப்படும். இதன்போது இங்கு நடந்த வியடங்கள் வெளிப்படும். தமிழின் அழிக்கப்பட்டதா ? போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமா என்பது தொடர்பாக விசாரணைகள் மூலம் தெரிய வரும்.sumanthiran-1_0.jpg
 
இங்குள்ள ஒரு சில தமிழ்  அரசியல் வாதிகள் கூறுவதைப்போன்று எடுத்த எடுப்பில் தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு நாம் கோர முடியாது. அத்தோடு மனித உரிமைப்பேரவையில் அந்தத்தீர்மானம் கொண்டுவரப்படவும் முடியாது. இதனை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்கின்றனரில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்

உரையை முழுமையாக வாசித்தீர்களா?

நான் இதற்கே  பதில் எழுதியிருந்தேன்.

அவருடைய உரையைக்கேட்கவில்லை

கேட்டுவிட்டு  பின்னர் எழுதுகின்றேன்.

 

 

வடமாகாண முதலமைச்சர்  சி.வி.விக்கினேஸ்வரனை  கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார்.

சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவசர அவசரமாக காரில் ஏற்றி அவரை வெளியேற்றினர்.

இதனிடையே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உரை அங்கு பிரச்சன்னமாகியிருந்த பலரிடமும்  சர்ச்சையை  ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக சாவகச்சேரியில் மேதின ஏற்பாட்டை செய்திருந்த மாகாணசபை உறுப்பினர் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்களை சுற்றிவளைத்து பலரும் கேள்விகளை எழுப்பியதுடன் விமர்சனங்களையும் முன்வைத்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  

 

இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவசர அவசரமாக காரில் ஏற்றி அவரை வெளியேற்றினர்.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106342/language/ta-IN/article.aspx

இந்த செய்தி உண்மையானால் ....இங்கு இவ்வளவு கருத்தும் தேவையில்லை என்பதே என் பணிவான வேண்டுகோள் ..............[ சோத்த தின்னிட்டு பொத்துக்கொண்டு படுப்பதே மேல் :D  ] 
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா விக்கியர் பயந்து போனார்.... தலைவர பற்றி பேசினா சும்மா அதிரும் இல்ல..... எப்பவும் அந்த அந்த பயம் இருக்கட்டும்....

மக்களால் அதி கூடிய வாக்குகள் பெற்று முதலமைச்சர் ஆகியவர் சொல்வதை விட கூட்டத்திற்கு வந்து குழப்பம் விளைவித்த நாலு பேர்கள் செய்ததுதான் முழு மக்களின் பிரதிபலிப்பு என்று இங்கு பலர் நினைக்கின்றார்கள் ,

 

இப்படிதான் முன்பும் ஏகபிரதிநிதிகள் என்று தங்களை தாங்களே சொல்லி பிறகு நடந்தது தெரியும் தானே .


விஜயின் படத்திற்கு பிழையான விமர்சனம் எழுதியதென்று வீதியில் பனருடன் நின்ற நாலுபெர்களை  வைத்து விஜேய் தான் எமது தலிவர் என்ற மாதிரி இருக்குது . :icon_mrgreen:  

மிஸ்டர் அர்ச்சுன் அண்ணா நீங்கள் நினைப்பதுபோல அந்த நாலுபேரும் கூட ஜனநாயக கொள்கையில் மக்களே மனிதர்களே ...............இதைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை நாம் சொல்கிறோம் .இது உங்களுக்கும் ,அரசுக்கும் ,ஒட்டுக்குழுக்களுக்கும் புரியவில்லை என்பதே கவலைக்குரியது ..................... :D

நாலு நாப்பதாயிரத்தை விட பெரிது என்று இன்றுவரை நம்புகின்றீர்கள் பாருங்கள் அங்க தான் இருக்கு அம்முட்டு விசயமும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.