Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயின் சங்கிலியை அடைவு வைத்து நண்பர்களுக்கு மது விருந்து அளித்த யாழ்ப்பாண மாணவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனது தாயின் சங்கிலியை அடைவு வைத்து தனது நண்பர்களுக்கு பிரபல விடுதியில் மது விருந்து கொடுத்துள்ளான் யாழ் நகர்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன்.

2016ல் க.பொ.த. உயர்தரப்பரீட்சை  எடுக்கும் 17 வயது மாணவனே நேற்று இந்தத் திருவிளையாடல் புரிந்துள்ளார்.

தனது அயல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி ஒருவரை இவர் காதலிப்பதாகவும் இவரது காதலை மாணவி ஏற்றுக் கொண்டதையடுத்தே நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார் மேற்படி மாணவர்.

இம் மாணவனின் தந்தை ஒரு கிராம சேவகராகவும் தாயும் அரச அலுவலராகவும்  இருப்பதாகத் தெரியவருகின்றது.

நேற்று இரவு  8 மணியளவில் கொக்குவில் பகுதியில் உள்ள இம் மாணவனது வீட்டுக்கு ஆட்டோ ஒன்றில் நிறை வெறியில் வந்து இறங்கிய இம் மாணவனின் நண்பர்கள் ஆட்டோவினுள்  மது போதையில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை கீழே இறக்க முற்பட்ட போது மாணவனின் தாயார் வெளியே வந்து மாணவனின் நிலையைப் பார்த்து அலறியதாகத் தெரியவருகின்றது.

அயலவர்களும் அங்கு கூடவே மாணவனின் நிலையை அறிந்த பெற்றோர் மாணவனை உள்ளே கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் இரவிரவாக நடந்த விசாரனையிலேயே மாணவன் தனது சங்கிலியை அடைவு வைத்துப் பணம் பெற்று விருந்து அளித்த விடயம் வெளியே வந்துள்ளது

http://yarlosai.com/

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் :wub:

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் :wub:

நன்கு திட்டமிட்டு தமிழரை நோக்கிய உளவியல் போரின் ஒரு அங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனை

மட்டை எனக்கண்ட தாய்.. :D

குடி, போதை பொருள் அடிமைகளை விடுவிக்க ஒரு இயற்கை அருமருந்து இருக்கிறது.

மூன்று மணி துளிகளில் கோப்பி அருந்த கூட தயங்குவார்கள்.

புதிய போதை அடிமை மீட்பு மருத்துவ துறை இதை விரும்புவதில்லை. குறைந்த விலையில் மீண்டும் அடிமைக்கு போதை பொருள் கொடுப்பது தான் அவர்கள் தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன மருந்து விக்? வேப்பம்பட்டை கசாயமா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்கு திட்டமிட்டு தமிழரை நோக்கிய உளவியல் போரின் ஒரு அங்கம்.

ஒருவன் பம்மலுக்கு குடித்துவிட்டு வந்து வீழ்ந்து கிடக்கிறான், இதுவும் தமிழர்களுக்கு எதிரான உளவியல் போரா?

அதென்ன மருந்து விக்? வேப்பம்பட்டை கசாயமா? :D

இல்லையண்ணா. இதன் தமிழ் ஆக்கம் ஆத்மகொடி.

இதை பற்றி 6 மாதமா எழுதிவிட்டு பதிய தயங்கி கொண்டிருக்கிறேன். :(

வேறு பல வருத்தங்களுக்கும் அருமருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையண்ணா. இதன் தமிழ் ஆக்கம் ஆத்மகொடி.

இதை பற்றி 6 மாதமா எழுதிவிட்டு பதிய தயங்கி கொண்டிருக்கிறேன். :(

வேறு பல வருத்தங்களுக்கும் அருமருந்து.

பதிவதற்கு என்ன தயக்கம் விக்? எல்லோருக்கும் நன்மைதானே?

பதிவதற்கு என்ன தயக்கம் விக்? எல்லோருக்கும் நன்மைதானே?

உண்மை. பலருக்கு உதவும். முக்கியமாக தமிழருக்கு உதவும்.

முயற்சிக்கிறேன்.

என்னுடைய ஊரவர் ஒருவர்.. பல வருடங்களுக்கு முதல் மாணவப் பருவத்தில் தாயின் தாலிக்கொடியை களவெடுத்து விற்று, நண்பர்களுடன் மது அது இது என்று செலவழித்துத் திரிந்தார். 83இற்குப் பின்னர் அவருடன் தொடர்புகள் இல்லை.

பல வருடங்களின் பின்னர் எதிர்பாராதவிதமாக ஓரிரு வருடங்களின் முன் ஸ்கண்டினேவியன் நாடொன்றில், அந்நாட்டின் புலனாய்வு பிரிவின் அலுவலகராக கண்டேன். அவருக்கான வேலைத்தல அறைக்குள்ளேயே சென்று ஓரிரு மணித்துளிகளை கழிக்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. அத்துடன் அவரது மூத்த மகனும் மிக இளம்வயதிலேயே டொக்டர் என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது.

சில கணீப்பீடுகள் எதிர்பாராதவிதத்தில் சிதறும் என்பதை அந்தச் சந்தர்ப்பம் எனக்குணர்த்தியது.  :o  :D

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்
அங்கே இப்போ குண்டு சத்தம் இல்லை ............
மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்!

ஒருவன் பம்மலுக்கு குடித்துவிட்டு வந்து வீழ்ந்து கிடக்கிறான், இதுவும் தமிழர்களுக்கு எதிரான உளவியல் போரா?

நீங்கள் வாழும் நாட்டில் ........... ஒரு 17 வயது இளைஞன் பாரில் சென்று குடிக்க முடியுமா?
ஒருவன் இல்லை ஒரு கும்பலே சென்று குடித்திருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாழும் நாட்டில் ........... ஒரு 17 வயது இளைஞன் பாரில் சென்று குடிக்க முடியுமா?
ஒருவன் இல்லை ஒரு கும்பலே சென்று குடித்திருக்கிறது.

ஓம்.நான் இருப்பது சுவிசில்.பியர் குடிக்கலாம்.விஸக்கி இல்லை.

என்னுடைய ஊரவர் ஒருவர்.. பல வருடங்களுக்கு முதல் மாணவப் பருவத்தில் தாயின் தாலிக்கொடியை களவெடுத்து விற்று, நண்பர்களுடன் மது அது இது என்று செலவழித்துத் திரிந்தார். 83இற்குப் பின்னர் அவருடன் தொடர்புகள் இல்லை.

பல வருடங்களின் பின்னர் எதிர்பாராதவிதமாக ஓரிரு வருடங்களின் முன் ஸ்கண்டினேவியன் நாடொன்றில், அந்நாட்டின் புலனாய்வு பிரிவின் அலுவலகராக கண்டேன். அவருக்கான வேலைத்தல அறைக்குள்ளேயே சென்று ஓரிரு மணித்துளிகளை கழிக்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. அத்துடன் அவரது மூத்த மகனும் மிக இளம்வயதிலேயே டொக்டர் என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது.

சில கணீப்பீடுகள் எதிர்பாராதவிதத்தில் சிதறும் என்பதை அந்தச் சந்தர்ப்பம் எனக்குணர்த்தியது.  :o  :D

என்னுடன் பரியோவான் கல்லூரியில் 10 ஆம் வகுப்பில் படித்த ஒருவர்  வகுப்பு நேரத்தில் தண்ணி அடித்து மாட்டுப்பட்டவர். குழப்படி என்றால் அப்படி ஒரு குழப்படி. இன்று அமெரிக்காவில் இரட்டை Phd எடுத்து வளமாக வாழ்கின்றார். இது நடந்த வருடம் 1989.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பதியப்பட்ட இரண்டு கருத்துக்கள்.. வியப்பில் ஆழ்த்துகின்றன.

ஒருவர் குடிகாரன்.. அவரின் பிள்ளை இளவயது டாக்டர்.

இரண்டாமவர் குடிகாரன்.. ஆனால் இரட்டை பி எச் டி..!!

குடிகாரன் இரட்டைப் பி எச் டி எடுக்கிறதுக்கு எந்தத் தடையும் இந்த உலகில் இல்லை.

குடிகாரனின் மகன் அல்லது குடிகாரன் வைத்தியராவதற்கு எந்தத் தடையும் இந்த உலகில் இல்லை.

ஆனால்.. குடி என்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. அதுபோக.. இள வயதில்.. அதிக குடி போதை என்பது கோமா.. மரணம் வரை இட்டுச் செல்லலாம்.

நீண்ட காலக் குடி என்பது.. உடல் நலத்தை வெகுவாகப் பாதிக்கும். அதை பி எச் டி.. டாக்டர் பட்டங்கள் தடுக்க முடியாது.

எம்மவர்கள் இயற்றும் சில சமன்பாடுகளுக்கு.. தொடர்பே இருப்பதில்லை.

அதிலும்.. இரண்டு அனுபவம் மிக்க பதிவர்கள் இதனை எழுதி இருப்பது ஆச்சரியத்துடன் கூட நகைப்பாக உள்ளது..!

குடி.. படிப்போடு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. குடி உடல்நலத்தோடு.. தனிமனித ஒழுக்கம் நடத்தையோடு சம்பந்தப்பட்டது.

குடிபோதையால் இறந்து போன பிரபல்ய மருத்துவர்களும் உள்ளார்கள். ரிபிள் பி எச் டி ஆட்களும் உள்ளார்கள்.

ஆக.. குடி என்பதை இயன்ற வரை சமூகத்தில் தவிர்க்க வேண்டும். அது சமூகத்திற்கு மட்டுமன்றி.. தனிநபரின் ஒழுக்கத்திற்கும்.. உடல்நலத்திற்கும் முக்கியம்.

குடிக்கிறவர் படிக்கிறார்.. பாழாகிறார் என்பதற்காக அல்ல.. குடியை தவிர்க்கச் சொல்வது.

குடி குடியைக் கெடுக்கும் வாய்ப்பை அதிகம் கொண்டிருப்பதால் தான்.. அதற்கு எதிரான விழிப்ப்புணர்வு வலியுறுத்தப்படுகிறது.

சதா குடிக்கிற ஒரு புரபெசரை விட.. சாதாரண புரபெசருக்கு சமூகத்தில் மதிப்பும் அதிகம்.. ஆயுளும் அதிகம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், ஒரு 17 வயது மாணவர் தாயின் நகையை அடகுவைத்துக் குடிக்குமளவிற்கு இன்றைய யாழ்ப்பாணத்துக் கலாச்சாரம் வளர்ந்துவிட்டதென்பதைத்தான். 

இவ்வாறான ஒழுக்கச் சீர்கேடுகள் புலிகள் இருந்த காலத்தில் நாம் அறிந்ததில்லை. ஆனால் இப்போது பரவலாக நடக்கிறது. இதற்குக் காரணம் சிங்கள ஆக்கிரமிப்பும் அதனூடு இணந்த திட்டமிட்ட கலாச்சாரச் சீரழிவும்தான் என்பது எனது நம்பிக்கை.

17 வயது மாணவர் தண்ணியடிப்பதற்கும், திட்டமிட்ட கலாச்சாரச்சீரழிவிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கும் கொழும்புவாசிகளுக்கு இது புரிய நியாயமில்லை.

அது மட்டும் அல்ல ரகு இதற்கு பின்னால் ஆழமான உளவியல் போரும் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசில சில்லறை பிரச்சனைகளை தமிழ்மக்களின் வாழ்வியலோடு சம்பந்தப்படுத்துவது அழகல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.