Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணி இடத்தில் - சபல புத்தி உடைய ஆண்களை சமாளிப்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பணி இடத்தில் - சபல புத்தி உடைய ஆண்களை சமாளிப்பது எப்படி? 
[Thursday, 2014-05-22 18:30:36]
 
பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால் கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது. உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் உங்கள் மேலதிகாரியிடம் சொல்லாதீர்கள். நாம் கொஞ்சம் அத்துமீறினாலும் இந்த வேலை இவளுக்கு மிக முக்கியம் என்பதால் ஒத்துப்போகக் கூடும் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் பதியக்கூடும்.
 
சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் நான் இருக்கிறேன் உனக்கு. கவலைப்படாதே என்கிற போர்வையில் மேலதிகாரி எல்லை மீறப்பார்க்கலாம். உடைவிஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும் பொதுவாக ஆடை குறித்த ஆண்களின் எண்ணம் கொஞ்சம் பிற்போக்குத் தனமானதுதான். அதனால் ஆடை விஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல்மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.
 
பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்து விட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க விஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
 
எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேலதிகாரி உங்களுக்குத் தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்துவிடுங்கள். எனக்குப் பிறந்த நாள் என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வாங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேலதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
சக ஆண் ஊழியர்கள் ஏ ஜோக்குகள் அடித்தால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது. இவ்வளவு தாராளமாக இருப்பவள், பிறவறறிலும் தாராளமாக இருப்பாள் என்ற எண்ணம் எழலாம்.
 
சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும். உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள்.
 
உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேலதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ , தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். ஏடாகூடமாக நடந்து கொண்டால், ஒரு மிக நல்ல பெண் ஊழியரை இழந்து விடுவோம் என்ற எண்ணமேகூட சில தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடும்.http://www.seithy.com/breifNews.php?newsID=109828&category=CommonNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

சக ஆண் ஊழியர்கள் ஏ ஜோக்குகள் அடித்தால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவிடுங்கள்.

எங்கள் அலுவலகத்தில் இரு பெண் ஊழியர்கள்தான் அதிக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துபவர்கள். :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அலுவலகத்தில்.... ஒரு பெண்,

டக்கென்று  அந்த ஆணின்... சொண்டை... சத்தம் வரக் கூடியதாக,

இச்..... என்று சூப்பி விடுவார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அலுவலகத்தில்.... ஒரு பெண்,

டக்கென்று  அந்த ஆணின்... சொண்டை... சத்தம் வரக் கூடியதாக,

இச்..... என்று சூப்பி விடுவார். :lol:

அப்படியா?

அப்புறம்..........? :lol:  :D

(கொஞ்சநாளைக்கு கேள்வி  மட்டும் தான் :icon_mrgreen: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோடை 3 பொம்புளையள் வேலை செய்யினம்.....அப்பப்பா அவையின்ரை ஏ ஜோக் சொல்லி வேலையில்லை.....அதிலை ஒராளுக்கு என்னை மடக்கிற பிளான்   fuma.gif

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடை 3 பொம்புளையள் வேலை செய்யினம்.....அப்பப்பா அவையின்ரை ஏ ஜோக் சொல்லி வேலையில்லை.....அதிலை ஒராளுக்கு என்னை மடக்கிற பிளான்   fuma.gif

நீங்கள்  லேசில  மடங்கமாட்டியளே??

அப்புறம்??? :icon_mrgreen:  :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள்  லேசில  மடங்கமாட்டியளே??

அப்புறம்??? :icon_mrgreen:  :lol:  :D

என்னைப்பற்றி தெரிஞ்ச ஒரேயொரு சீவன் நீங்கள்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பற்றி தெரிஞ்ச ஒரேயொரு சீவன் நீங்கள்தான் :D

அண்ணன் தம்பிக்குள் எதற்கு இதெல்லாம்........... :icon_mrgreen:

அப்புறம்.....? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புறம் என்ன அப்புறம்....வேலை முடிய இரண்டு பேரும் ஒரு காரிலைதான் போறனாங்கள்  :D  :lol:  :D

முதலில் ஆண்களை  ஜில்மா மூடில் வேலைக்கு வரும் பெண்களிடம் இருந்து காப்பாற்ற வழி சொல்லுங்கப்பா.

வர வர கற்போட வீட்டுக்கு போக முடியாமல் இருக்கு. ஒரே இரண்டு ஷிப்ட் வேலை செய்ய முடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் என்ன அப்புறம்....வேலை முடிய இரண்டு பேரும் ஒரு காரிலைதான் போறனாங்கள்  :D  :lol:  :D

ஒரே ரத்தம்...

இனி  வேண்டாம்

தம்பியும் அப்படி அண்ணனும் அப்படி என்ற சான்றிதழ் ரெடியாக வைத்திருக்கிறார்கள்.... :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் ஆண்களை  ஜில்மா மூடில் வேலைக்கு வரும் பெண்களிடம் இருந்து காப்பாற்ற வழி சொல்லுங்கப்பா.

வர வர கற்போட வீட்டுக்கு போக முடியாமல் இருக்கு. ஒரே இரண்டு ஷிப்ட் வேலை செய்ய முடியாது...

p428-full.jpg

my family tree எண்டு எழுதிப்போட்டு மேசையிலை வைச்சு விடுங்கோ.... :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடை 3 பொம்புளையள் வேலை செய்யினம்.....அப்பப்பா அவையின்ரை ஏ ஜோக் சொல்லி வேலையில்லை.....அதிலை ஒராளுக்கு என்னை மடக்கிற பிளான்   fuma.gif

ஏ.... எ... எதுக்காம் எண்டு கேட்டியளோ? :icon_mrgreen:

p428-full.jpg

my family tree எண்டு எழுதிப்போட்டு மேசையிலை வைச்சு விடுங்கோ.... :D

சீட்டு காசு வரக் காணம், சரசக்கோய். 
 
அயர்த்துப் போகாமல் பொடியிட்டை கொடுத்தனுப்பி விடுறியலே :lol:  :D
  • கருத்துக்கள உறவுகள்

இதில் பின்னூட்டம் வைத்தவர்களில் அநேகர் தமது குடும்பப்பெண்களை வேலைக்குச் செல்லவிடுவதில்லை என்றுதான் தெரிகின்றது. அதுதான் மற்றப் பெண்கள் தங்களைப் பார்த்து சபலப்படுகின்றார்கள் என்று நினைக்கின்றார்கள்.

நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

p428-full.jpg

my family tree எண்டு எழுதிப்போட்டு மேசையிலை வைச்சு விடுங்கோ.... :D

சின்ன வயதிலை கலைஞர் குடும்பம் போலத் தெரிகிறது. எவ்வளவு எடுப்பாய் இருக்கிறார். குமாரசாமித் தம்பியருக்கு எப்படி இந்தப்படமெல்லாம் கிடைக்கிறது.??? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

விடயத்திற்கு வருவோம்,

பணி இடத்தில் - சபல புத்தி உடைய ஆண்களை சமாளிப்பது எப்படி?

வெகு சுலபம்.... :D

அவர்களுடைய மனைவிமாரையும் அங்கு பணியில் அமர்த்திவிட்டால் பிரச்சனை தீர்ந்தது, :icon_idea:

உது முதலுக்கே மோசம்...
 
மனிசியை யாரும் தள்ளிக் கொண்டு போக வெளிக்கிட்டால்..... :icon_mrgreen:  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

எட்ட நின்டு பிளையிங் கிஸ் கொடுக்க வேண்டியதுதான்...! :lol:  :)

  • கருத்துக்கள உறவுகள்

எட்ட நின்டு பிளையிங் கிஸ் கொடுக்க வேண்டியதுதான்...! :lol:  :)

யாருக்கண்ணை..... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

சபல புத்தி ஆண்களுக்கு மட்டும் தான் வருமா..??! பெண்களுக்கு சபல புத்தி வராதோ..??!

அப்ப எப்படி கலியாணம் கட்டி பிள்ளை பெத்துக்கிறாங்க. சபல புத்தி இல்லாமலா..??! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்படி கலியாணம் கட்டி பிள்ளை பெத்துக்கிறாங்க. சபல புத்தி இல்லாமலா..??! :lol::D

சபலம் என்றால் நிலையற்ற உள்ளம் என்று தமிழ்-தமிழ் அகராதி சொல்கின்றது. நிலையில்லாத உள்ளம் கொண்டவர்கள் திருமணம் முடித்திருந்தும் பிற பெண்களை (பெண்களாக இருந்தால் ஆண்களை) அடைய ஆசைப்படுகின்றார்கள் என்று கொள்ளலாம். நிலையுள்ள உள்ளம் கொண்டவர்கள், அதாவது சபலபுத்தி இல்லாதவர்கள், தங்களது துணையுடன் சேர்ந்து பிள்ளை குட்டிகளைப் பெற்றுக்கொள்ளலாம். அப்படித்தான் நெடுக்ஸும் இந்த அவனியில் அவதரித்திருப்பார் :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. குளோனிங் மூலம் வந்தவர். :lol:

சபலம் பெண்களுக்கும் வரலாம் தானே. ஆண்களுக்கு மட்டுமான இயல்பா அது. இல்லையே..???! :D

  • கருத்துக்கள உறவுகள்

உது முதலுக்கே மோசம்...

மனிசியை யாரும் தள்ளிக் கொண்டு போக வெளிக்கிட்டால்..... :icon_mrgreen:  :icon_mrgreen:

கணவன்: நான் இறந்துவிட்டால் நீ முன்வீட்டுக் கந்தசாமியை மறுகல்யாணம் செய்துகொள்ள வேண்டும்.

மனைவி: அவர் உங்களுடைய பரம விரோதியல்லவா!

கணவன்: அவனைப் பழிதீர்ப்பதற்கு எனக்கு வேறுவழி தெரியவில்லையடி.!! :lol: :lol:

நாதமுனி அவர்களே! விளங்கியதா!! அல்லது இன்னமும் விளக்கம் வேண்டுமென்றால் உறவுகள் உதவுவார்கள். கவலையை விடுங்கள். :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: என்னங்க நான் இறந்துவிட்டால் நீங்கள் பக்கத்துவீட்டு கோமளாவை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்.

கணவன்: அவள் உன்னோட  பரம எதிரியல்லவா? அடிக்கடி சண்டை போடுவாயே?

மனைவி: அவளை பழிதீர்ப்பதற்கு எனக்கு இதை விட வேறு அருமையான வழி தெரியவில்லையோவ் பேக்கு...!

இப்படியும் எழுதலாம்! :icon_mrgreen: :icon_mrgreen: :)

  • கருத்துக்கள உறவுகள்

கணவன்: நான் இறந்துவிட்டால் நீ முன்வீட்டுக் கந்தசாமியை மறுகல்யாணம் செய்துகொள்ள வேண்டும்.

மனைவி: அவர் உங்களுடைய பரம விரோதியல்லவா!

கணவன்: அவனைப் பழிதீர்ப்பதற்கு எனக்கு வேறுவழி தெரியவில்லையடி.!! :lol: :lol:

நாதமுனி அவர்களே! விளங்கியதா!! அல்லது இன்னமும் விளக்கம் வேண்டுமென்றால் உறவுகள் உதவுவார்கள். கவலையை விடுங்கள். :D :D

பஞ்ச் அவர்களே! 
 
கந்தசமியாரிண்ட பிளான் படி தான், இந்தாளிண்ட மனிசி அவரை வதை பண்ணி இருக்கலாமே.....
 
:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.