Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இபோலா".... உலகை கதிகலங்க வைக்கும். புதிய வகை நோய்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

06-1407333259-ebola-virus-600.jpg

 

"இபோலா".... உலகை உலுக்கும், புதிய வகை நோய்.

 

வாஷிங்டன்: எபோலோ ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் இதுகுறித்து யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி. டொனால்ட் டிரம்ப் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளார். நமது நாட்டுக்கு நாம் எபோலோவை இறக்குமதி செய்யக் கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இவர் மத்திய அமெரிக்காவிலிருந்து வரும் அகதிக் குழந்தைகள் மூலம் அமெரிக்காவிலும் எபோல பரவி விடுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

 

இவர் மட்டுமல்லாமல் டிவிட்டரில் இப்படித்தான் பல அமெரிக்கர்கள் பீதியுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். பலர் எபோலா நோயாளிகளை அமெரிக்காவில் அனுமதிக்கக் கூடாது, அவர்களுக்கு சிகிச்சை தரக் கூடாது என்றும் பேச ஆரம்பித்துள்ளனர்.

 

ஆனால் உண்மையில் எபோலா குறித்து இப்படி பீதி அடையத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். நிச்சயம் எபோலா அபாயகரமானதுதான். இது பாதித்தவர்களில் 90 சதவீதம் பேரைக் காப்பாற்ற முடியாதுதான். அதேசமயம் பீதி தேவையில்லை. இதற்கு சில காரணங்களைச் சொல்கிறார்கள்.

 

நீ்ண்ட தூரம் பரவாது...

எபோலா வைரஸானது மிகவும் தளர்வானது, பலவீனமானது. நீண்ட தூரம் அது காற்றில் பரவாது. மேலும் தும்மல் மூலமோ அல்லது இருமல் மூலமோ அது பரவாது. ஜலதோஷம் பிடித்தவர்களிடமிருந்து அது மற்றவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் இடம் மாறாது.

 

தொற்று நோய் இருந்தால்...

யாருக்காவது நோய்த் தொற்று இருந்தால் மட்டுமே அவர்களுக்கு எபோலா வைரஸ் எளிதில் தொற்றிக் கொள்ளும். மற்றபடி அனைவருக்கும் அதை பரவாது.

 

ரத்தம் மூலம் மட்டுமே...

எபோலா வைரஸானது ரத்தம் மூலம் மட்டுமே நேரடியாக பரவும். அதேபோல மலத்திலிருந்தும் அது பரவும். மேலும் உடலில் காயம் இருந்து, சீழ் கட்டியிருந்தால் அதன் மூலமாக பரவும். மேலும் ஊசிகள் மூலமும் இது பரவும்.

 

தடுப்பு மருந்து இல்லை...

எபோலாவைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல சிகிச்சை அளிப்பதும் கடினம். ஆனால் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை மட்டும் டாக்டர்கள் அறிந்து வைத்துள்ளனர். இது மட்டும்தான் சாதகமானது.

 

பொது சுகாதாரம் முக்கியம்.

பொது சுகாதார அறிவும், விழிப்புணர்வும் இருந்தாலே போதும் இது பரவுவதைத் தடுக்க முடியும். மருத்துவமனைகளில் இது பரவாது. காரணம், அங்கு சுத்தம், சுகாதாரம் நிச்சயம் இருக்கும். அதேபோல எல்லா இடங்களையும் நாம் பார்த்துக் கொண்டாலே போதும் பரவுவதைத் தடுக்க முடியும்.

 

தனிமையில் வைத்துத் தடுக்கலாம்.

எபோலா பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்துவது அவசியம். அதைச் செய்து அவர்களை மற்றவர்களிடமிருந்து தனித்து வைத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். எனவே பீதி தேவையில்லை என்பது டாக்டர்களின் கருத்து.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

இபோலா.. குறிப்புக்கள்:

 

9873706.jpg

 

இபோலா என்பது ஒரு வைரஸ் நோய்.

 

இது பழ வெளவால்கள் மூலம் பரப்பப்படுகின்றது.

 

இது மனிதரில் இருந்து மனிதரில்.. பிரதானமாக உடற்திரவ பரிமாற்றங்கள் மூலம் கடத்தப்படுகிறது.

 

இபோலாவால் பாதிக்கப்பட்ட.. இறந்த மனிதரை தொடுவதன் மூலமாகவும் தொற்றுக்கு வாய்ப்புள்ளது.

 

இபோலா தாக்கினால்.. அது உடலக அங்கங்களில் உள்ளக குருதி கசிவு மற்றும் மூளை முண்ணானை பாதிக்கச் செய்து மரணத்தை விளைவிக்கும்.

 

இது தொற்றியதில் இருந்து 2 தொடங்கி 21 நாட்களுக்குள் குணம்குறிகளை வெளிப்படுத்தும். காய்ச்சல்.. வாந்தி.. பசியின்மை.. தலையிடி.. மூட்டுக்களில் தசைகளில் நோவு.. பலவீனம்.. வயிற்றுப்போக்கு.. இரத்தக்கசிவு என்று பல அறிகுறிகள் ஒரு நேர இருக்கலாம்.

 

இதற்கு மருந்து என்று இன்னும் எதுவும் இல்லை. குரங்குகளில் பரீட்சைக்கப்பட்ட மருந்துகளை இப்போது தீவிர நோய் தொற்றாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

 

தொற்றின் ஆரம்பத்தில்.. இந்த நோய் கண்டறியப்பட்டால் அன்றி குணப்படுத்துவது கடினம்.

 

140404150128-01-ebola-in-west-africa-hor

 

தொற்றுள்ளவர்கள் மற்றும் மரணமானவர்கள் மூலமும் தொற்று நிகழலாம் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டே சிகிச்சை அளிக்கப்படுவார்கள் அல்லது இறந்த பின் எரிக்கப்படுவார்கள்.

 

இது நீண்ட காலமாக ஆபிரிக்க நாடுகளில் உள்ள போதும்.. தற்போதைய தொற்று கூடிய அளவு மரணங்களை விளைவித்து வருவதோடு.. குறிப்பாக மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருவோர் மூலம்.. உலகலாவிய அளவுக்கு இது பரவிடுமோ என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

 

8dbde-ebola.jpg

 

இபோலா வைரஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொடும் வியாதியை படித்தவுடன் சில வருடங்களுக்கு முன் பார்த்த அவுட்பிரேக் (Outbreak)  என்ற 1995ல் வெளியான ஆங்கில படமே ஞாபகத்திற்கு வந்தது. ஏறக்குறைய இபோலா போன்றே "மோட்பா" என்ற கற்பனையான வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவிலிருந்து குரங்கு மூலம் அமெரிக்க கலிபோர்னியா பகுதிக்கு எப்படி பரவி, பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது என்ற சுவாரசியமான படம்.

 

முடிந்தால் பாருங்கள்.

 

 

220px-Outbreak_movie.JPG

 

 

http://youtu.be/Mj9SUJdpJS4

Edited by ராசவன்னியன்

ஸ்கோர் போர்ட் ஒன்று போட்டு லைவ் அப்டேட் செய்யும் அளவுக்கு இபோலா நிலவரம் வந்து விட்டது.
 
இன்னும் 48 மணித்தியாளத்தில் 1000 புள்ளியைத் தாண்டலாம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WHO-chart.jpgebola_crisis_002.jpgebola-viras.jpgvai.jpgeblo-vairus.jpg76127641_76127404-484-x-272.jpgebola_virus_005.jpgEbola-virus-360x309.jpgimages.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ebolainwestafrica.pngWHO-chart.jpgebola.jpgebola_virus-1024x660.jpg1397510646237.jpeg ஏதோ ஆப்பிரிக்க நாட்டில் பரவும் நோய் என்று அலட்சியமாக நாம் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் கட்டுரை. எபோலா காய்ச்சல்பற்றி பீதி கிளம்பியிருக்கும் வேளையில், முதலில் நம்மில் பலர் நினைப்பது: “அதெல்லாம் ஆப்பிரிக் காவுலேர்ந்து இங்க வராது, வந்தாலும் நாம சமாளிக்க முடியாதா?” இவை இரண்டுமே தவறான கருத்துகள். WHO-chart.jpg முதலாவது, கொடிய தொற்றுநோய்கள் ஆப்பிரிக்கா விலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. ஈரான், உக்ரைன், கஜகஸ்தான் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகள் குறைந்த நாடுகளிலும் எபோலா போன்ற நோய்கள் தோன்றிப் பரவியுள்ளன. இரண்டா வது, நமது மருத்துவ வசதியெல்லாம் இதுபோன்ற தொற்றுநோய்களை வென்றுவிட முடியாது. எபோலா, கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல் (சி.சிஹெச்.எஃப்), லஸ்ஸா போன்ற சில தொற்றுநோய்களுக்கு இன்று வரை மருந்து இல்லை. அவை, மிக வேகமாகப் பரவக் கூடியவை. இந்தக் கொடூர நோய்களில் ஒன்றான கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல், சமீபத்தில் அகமதாபாதின் அருகே தோன்றியது என்றால், நம்மில் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அகமதாபாத் அதிர்ச்சி! டிசம்பர் 31, 2010 அன்று, அகமதாபாதின் ஷேல்பி மருத்துவமனையில் ஒரு பெண் தீவிரக் காய்ச்சலோடு அனுமதிக்கப்பட்டாள். நான்கு நாட்களாகக் காய்ச்சலும் தலைவலியும் மூச்சுத் திணறலுமாக இருந்த அந்தப் பெண், அதற்கு முன் மற்றொரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தவள். ஒரு சிகிச்சையும் பயனளிக்காமல் இறந்துபோனாள். 7 நாட்கள் கழித்து, ஷேல்பி மருத்துவமனையின் ஒரு செவிலி, அங்கேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிரக் காய்ச்சல், தலைவலி, வாந்தி என அறிகுறிகள் பதிவாயின. இறந்துபோன பெண்ணுக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் பராமரிப்பு செய்துவந்ததால், மருத்துவர்களுக்குச் சந்தேகம் தோன்ற, அவரது ரத்த மாதிரியை, புணேவில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு (என்.ஐ.வி.) அனுப்பி வைத்தனர். Ebola-death-rate.jpg இந்தியாவில் வைரஸ் குறித்த ஆய்வுகளில் என்.ஐ.வி. முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் அதற்கு உயிரிய பாதுகாப்பு நிலை 4 என்ற அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது. உலகிலேயே மிகக் குறைவான ஆய்வகங்களே இந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. அவற்றில் , மிக அபாயகரமான தொற்றுநோய்க் கிருமிகள் பராமரிக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரியம்மை, எபோலா, சி.சி.ஹெச்.எஃப்., லிஸ்ஸா போன்ற தொற்றுநோய்களை உருவாக்கும் கொடிய நுண்ணுயிரிகள் இங்கு பாது காப்பாக வைக்கப்படுகின்றன. அத்துடன், எங் காவது இந்த நோய்கள் தோன்றினால், அவற்றை மரபணுரீதியாகக் கண்டறியும் ஆர்.டி. பி.சி.ஆர். போன்ற நவீனக் கருவிகள் இந்த ஆய்வகங்களில் இருக்கின்றன. ஆய்வக அறிக்கையின்படி, நாட்டின் பிற ஆய்வகங்களும், மருத்துவ, சுகாதார நிலையங்களும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும். தொடர் மரணங்கள் WHO-chart.jpg என்.ஐ.வி., அந்தச் செவிலியின் ரத்த மாதிரியின் சி.சி.ஹெச்.எஃப். வைரஸ் இருப்பதை மரபணு ஆய்வில் கண்டறிந்தது. ஷேல்பி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டார். உடலின் ஒவ்வொரு துவாரத்திலும் ரத்தம் கசிய, அவரும் எந்த சிகிச்சையும் பயனளிக்காது ஐந்தாம் நாளில் இறந்துபோனார். முதலாவதாக இறந்த பெண்ணுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணித்த இளம் மருத்துவர் ஒருவர், மற்றொரு மருத்துவமனையில், அவள் இறந்த 7 நாட்களில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் அதே அறிகுறிகள். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அவரும் மிகுந்த வலியுடன், ரத்தக்கசிவில், உள்உறுப்புகள் சிதைந்த நிலையில் மரணமடைந்தார். தொற்றுநோய் சந்தேகம் வராததாலும், தகவல் பரிமாறப்படாததாலும் அவரது ரத்த மாதிரிகள் ஆராயப்படவில்லை. இதே நேரத்தில் மற்றொரு ஆண், காய்ச்சல், உடல் வலி, பேதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நோய் அறிகுறிகள், ரத்தக்கசிவு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கையான மருத்துவர்கள், அவரது வீட்டு நிலையை ஆராய்ந்தனர். அவரது மனைவி 9 நாட் களுக்கு முன்புதான் பெயர் அறியாத ரத்தப்போக்குக் காய்ச்சலால் மரணமடைந்திருந்தார். அந்தப் பெண் ணுக்குப் பணிவிடை செய்த செவிலி ஒருவரும், மற்றொரு மருத்துவமனையில் ரத்தப்போக்குக் காய்ச்சலில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவர, அவரையும் உடனடியாகத் தனி அறையில் வைத்துத் தீவிர சிகிச்சையைத் தொடங்கினார்கள். அவரது ரத்த மாதிரியை என்.ஐ.வி. பரிசோதித்து சி.சி.ஹெச்.வி இருப்பதாக உறுதிப்படுத்தியது. அவருக்கு ரிபாவிரின் என்ற மருந்து கொடுக்கப்பட்டு, பல நாட்களுக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறினார். அந்தச் செவிலியோ சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக இறந்துபோனார். கால்நடை உண்ணிகள் குஜராத் அரசுக்கு இந்த நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தொற்றுநோய் மையம் முடுக்கிவிடப்பட்டது. சி.சி.ஹெச்.எஃப். நோய், பொதுவாக உண்ணிகள் மூலம் பரவுகிறது. கால்நடை உண்ணிகள் இந்த வைரஸின் தாங்கிகள். அந்த உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இவை மனிதர்களுக்குப் பரவுகின்றன. முதலில் இறந்துபோன பெண்ணின் வரலாற்றை ஆராய்ந்த அரசு அதிகாரிகள், அவள் சானந்த் என்ற இடத்தினருகே ஒரு கிராமத்திலிருந்து வந்தவள் எனவும், ஆடு மாடு மேய்ப்பில் ஈடுபட்டிருந்தவள் எனவும் அறிந்தனர். அங்கு உண்ணிகள் பரவுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், மாநில அளவிலும், தேச அளவிலும் எச்சரிக்கை விடுக் கப்படவில்லை. அதற்குப் பின் வேறு நிகழ்வுகள் நடந்த தாகத் தெரியவில்லை. ஒரு வருடம் கழித்து, 2012 மே மாதம், மற்றொரு மருத்துவர், அகமதாபாதின் வாடிலால் மருத்துவ மனையில், இதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார். மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, பத்து நாட்களுக்கு முன், அகமதாபாதை அடுத்த பாவ்லா கிராமத்திலிருந்து அதீதக் காய்ச்சல், ரத்தக்கசிவுடன் வந்த ஒரு பெண்ணுக்கு அவர் மருத்துவம் செய்திருக்கிறார் என்பதும், அவள் மூச்சுத் திணறியபோது, வாயில் குழாய் இட்டபோது ரத்தம் பீய்ச்சியடித்து அவரது கண்களில் தெறித்தது எனவும் அறிந்தனர். கண்களின் வழியே அந்த வைரஸ் அவருக்குள் புகுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணும் மரணமடைந்திருந்தாள். குஜராத் தொற்றுநோய்ப் பிரிவு மையத்தினரும், மாநில சுகாதார அதிகாரிகளும் பாவ்லா கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன், அங்கு தொழுவத்தில் இருந்த கால்நடைகளின் ரத்த மாதிரிகளையும் உண்ணிகளையும் சேகரித்து என்.ஐ.வி-க்கு அனுப்பிவைத்தனர். அவற்றை ஆராய்ந்த என்.ஐ.வி. ஒரு கன்றின் ரத்தத்திலும், சில உண்ணிகளிலும் சி.சி.ஹெச்.எஃப். நுண்ணுயிரி இருப்பதாகக் கண்டறிந்தது. எங்கிருந்து? WHO-chart.jpg எங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கக் கூடும்? 90-களில் பாகிஸ்தானில் சி.சி.ஹெச்.எஃப். பரவியது. அங்கிருந்து உண்ணிகள் காற்றிலோ, கால்நடைகள் மூலமாகவோ எல்லைப் பகுதிகள் வழியாக வந்திருக்கக் கூடும் என்று ஊகிக்கிறார்கள். 1940-களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரிலும் தென்னக மாநிலங்களிலும் சி.சி.ஹெச்.எஃப். இருந்ததாக ஆவணப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. சி.சி.ஹெச்.எஃப். எப்படி இந் நாட்டில் வந்தது என்பது புதிராகவே உள்ளது, அந்தக் காய்ச்சல்போலவே. சி.சி.ஹெச்.எஃப். நோய்ப் பரவலைத் தடுக்க, குஜராத் மாநிலம் மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்ப நிலையிலானவை. பெரிய அளவில் அது பரவியிருந்தால், அந்த நடவடிக்கைகள் போதாது. இந்தியாவில் எத்தனை மாநிலங்களின் தொற்று நோய்ப் பிரிவுகள் இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்ந்திருக்கின்றன என்பது தெரியவில்லை. அப்படி உணர்ந்த மாநிலங்களில், மிக வேகமாகப் பரவும் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எந்த அளவுக்கு முன் தயாரிப்புடன் இருக்கின்றன என்பது தெரியவில்லை (கர்நாடகம் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உள்கட்டமைப்பிலும் செயல்பாட்டிலும் முன்னணியில் இருக்கிறது). ஒருங்கிணைந்த தகவல்தொடர்பையும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிமுறைகளையும், பேரிடர் தடுப்புக் காப்பு முறைகளையும் மாநில அரசுகள் முக்கியமாகக் கருதிச் செயல்படுத்தும்வரை… நாம் ஒரு தீப்பற்றிய வெடிகுண்டின் மேல்தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்! WHO-chart.jpg
 

நன்றி வர்ஷா.
தமிழ்நாடு ரோக். கொம்
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்க்கவே பயமாக இருக்கின்றது. :o :o :o

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை பார்க்க மனசுக்கு கஸ்ரமாக இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்க்க, இந்தக் குளிருக்கிள்ளையும் வேர்க்குது!  :o

 

இந்த இடங்களிலை எல்லாம் சீவிச்சும் 'நலமா' இருக்கிறம் எண்டதை நினைக்க, அந்த வேர்வையெல்லாம் ஆவியாகிப் பறக்குது! :icon_mrgreen:  

இந்த இடங்களிலை எல்லாம் சீவிச்சும் 'நலமா' இருக்கிறம் எண்டதை நினைக்க, அந்த வேர்வையெல்லாம் ஆவியாகிப் பறக்குது! :icon_mrgreen:  

 

 

 

வைரசுக்களின் கெட்ட குணம் வருசக்கணக்க ஒருவரின் உடலுக்குள் எந்த அறிகுறியும் காட்டாமல் ஒழிந்திருப்பது.
 
இப்ப நீங்க 'நலம்' என்று சொல்லீட்டீங்க. அது 'நலம் நலமறிய ஆவல்' என்டு சொல்லிக்கொண்டு வந்து நிக்கப்போகுது.   :D
 
அல்லது..... 
 
கௌண்ட மணி ஓமக்குச்சிக்கு சொன்ன மாதிரி "ஒரு பாடில மூட்டப் பூச்சி கடிச்சி ரத்தமேயில்லாத பஞ்ச பாடின்னு திட்டிச்சின்னா அது உம் பாடிதான்யா.. " என்ற நிலமையாகக் கூட இருக்கலாம் பூங்கை..    :D
  • கருத்துக்கள உறவுகள்

 

வைரசுக்களின் கெட்ட குணம் வருசக்கணக்க ஒருவரின் உடலுக்குள் எந்த அறிகுறியும் காட்டாமல் ஒழிந்திருப்பது.
 
இப்ப நீங்க 'நலம்' என்று சொல்லீட்டீங்க. அது 'நலம் நலமறிய ஆவல்' என்டு சொல்லிக்கொண்டு வந்து நிக்கப்போகுது.   :D
 
அல்லது..... 
 
கௌண்ட மணி ஓமக்குச்சிக்கு சொன்ன மாதிரி "ஒரு பாடில மூட்டப் பூச்சி கடிச்சி ரத்தமேயில்லாத பஞ்ச பாடின்னு திட்டிச்சின்னா அது உம் பாடிதான்யா.. " என்ற நிலமையாகக் கூட இருக்கலாம் பூங்கை..    :D

 

இவ்வளவு காலத்துக்கு 'மூச்சுக் காட்டாத' வைரஸ் இனியா ' ஹலோ' சொல்லப்போகுது? :D

 

அப்படிச் சொன்னால், உங்களிட்டைக் கூட்டிக்கொண்டு வாறன்...! :o

 

உடம்பா இது... ஈசன்......?

 

கருங்காலிக்ககட்டைக்கு  நாணாத 'கோடாலியாக்கும்! :D   

WO-AT287_EBOLA_G_20140806143306.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவுத்துக்கும் ஏதாவது துவக்கு தூக்கினவங்களை அடிக்கோணுமெண்டால் பிரான்ஸ் லண்டன் ஜேர்மனி அமெரிக்கா எல்லாம் உடனை போய் குதிச்சிருப்பினம்....வந்தது இபோலா எல்லே....மேலாலையும் போய் அடிக்கேலாது. :icon_mrgreen:

பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா காரரிட்ட இபோலா நிறைய இருக்கு. சின்ன சின்ன‌ கண்ணாடிக் குமிழ்களில் ஈச்சம் பழக் குழை மாதிரி வடிவமைக்கப்பட்ட குண்டுகள் நிலத்தின் மேல் அரை கிலோமீற்றர் உயரத்தில் வெடிக்கும் வகையில் விமானத்தில் இருந்து போடுவார்கள். குண்டின் நடுவில் இருக்கும் வெடிமருந்து வெடிக்க கண்ணாடிகள் உடைந்து இபோலா உள்ள திரவச் சிதறல்கள் காற்றோடு பரவி குறிப்பிட்டளவு பிரதேசத்தின் மேல் விழும்.
 
ஜேர்மன் காரர் மண்டை கழண்டவர்கள் என்பதால் அவர்களை நம்பி இபோலா குண்டுகளைக் குடுத்திருக்க மாட்டார்கள்.
 
இங்கிலாந்திலையும் ரஷ்யாவிலையும் இந்த ஆயுத ஆய்வுகூட இபோலா தாக்கி இருவர் பலியாகி உள்ளார்கள்.
 
இந்த ஓகஸ்ட் மாசம் மட்டும் ஆயிரம் பேர் பலியானால் உலக பொருளாதாரம் நீளமா பாய் விரிச்சு படுக்கும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா காரரிட்ட இபோலா நிறைய இருக்கு. சின்ன சின்ன‌ கண்ணாடிக் குமிழ்களில் ஈச்சம் பழக் குழை மாதிரி வடிவமைக்கப்பட்ட குண்டுகள் நிலத்தின் மேல் அரை கிலோமீற்றர் உயரத்தில் வெடிக்கும் வகையில் விமானத்தில் இருந்து போடுவார்கள். குண்டின் நடுவில் இருக்கும் வெடிமருந்து வெடிக்க கண்ணாடிகள் உடைந்து இபோலா உள்ள திரவச் சிதறல்கள் காற்றோடு பரவி குறிப்பிட்டளவு பிரதேசத்தின் மேல் விழும்.
 
ஜேர்மன் காரர் மண்டை கழண்டவர்கள் என்பதால் அவர்களை நம்பி இபோலா குண்டுகளைக் குடுத்திருக்க மாட்டார்கள்.
 
இங்கிலாந்திலையும் ரஷ்யாவிலையும் இந்த ஆயுத ஆய்வுகூட இபோலா தாக்கி இருவர் பலியாகி உள்ளார்கள்.
 
இந்த ஓகஸ்ட் மாசம் மட்டும் ஆயிரம் பேர் பலியானால் உலக பொருளாதாரம் நீளமா பாய் விரிச்சு படுக்கும்.

 

 

அடப் பாவி.... ஜேர்மன்காரர் மண்டை கழண்டவர்களா........

பொறுத்திருந்து பாருங்கள்,  இபோலாவுக்கு..... மருந்து கண்டுபிடிக்கப் போறதே..... ஜேர்மன்காரன் தான். :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கும் வந்தது எபோலா...? :o 

நைஜீரியாவிலிருந்து திரும்பிய வாலிபர் மருத்துவமனையில் அனுமதி.

 

சென்னை: நைஜீரீியாவில் இருந்து சென்னை திரும்பிய வாலிபர் ஒருவருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதாகவும், அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சரிவர தடுப்பு மற்றும் நோய்க்குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நோயான எபோலா உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

 

இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நோயை கட்டுப்படுத்தும் வகையில் நாடுகள் தடுப்பு வகைகளில் ஈடுபட்டு வருகின்றன.

 

10-ebola-11600.jpg

 

இந்நிலையில், நைஜீரியாவிலிருந்து சென்னை வந்த வாலிபருக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

தேனி மாவட்டம் சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்ற 26 வயது வாலிபர். இவர் நைஜீரியாவிலிருந்து நேற்று தமிழகம் திரும்பினார். அப்போது அவருக்கு எபோலா நோய்க்கான அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பார்த்திபன். அங்கு நோய் பரவாவண்ணம் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அவருக்கென தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

-தற்ஸ் தமிழ்.-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் எபோலா நோய் பாதிப்பு இல்லை:

அரசு விளக்கம் - தேனி வாலிபர் டிஸ்சார்ஜ்!

 

சென்னை: தமிழகத்தில் எபோலா நோயின் பாதிப்பு இல்லை என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் எபோலா அறிகுறிகளுடன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேனி மாவட்ட வாலிபர் பார்த்திபனும் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

 

அவரை 21 நாட்களுக்கு கண்காணிக்குமாறு தேனி அரசு மருத்துவமனைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பார்த்திபன் தேனி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சரிவர தடுப்பு மற்றும் நோய் குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நோயான எபோலா உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

 

10-ebola-govt-hospital-chennai-600.jpg

 

இந்நோயை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவிலிருந்து சென்னை வந்த வாலிபருக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

தேனி மாவட்டம் சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்ற 26 வயது வாலிபர். இவர் நைஜீரியாவிலிருந்து நேற்று தமிழகம் திம்பினார். அப்போது அவருக்கு எபோலா நோய்க்கான அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

எபோலா இல்லை - அரசு

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த பயணி, எபோலா குறித்த சோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பப்புவா நியூகினியாவில் இருந்து நாடு திரும்பிய அவர் அந்நோய் பரவி உள்ள பகுதியில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து தான் வந்துள்ளார் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

னி வார்டில் சிகிச்சை

எனினும் எபோலா நோய் பரவாவண்ணம் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பார்த்திபனுக்கென தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மற்றொரு தகவல் வெனியாகின.

 

ஆனால் பாதுகாப்பு வசதிகள் இல்லை

அதேசமயம் எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வரும் பார்த்திபன் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் பணியில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இல்லை என்று தகவல்கள் வெளியாகின. எபோலோ வைரஸ் தாக்கப்பட்டவர் அருகில் செல்லும் போது கண் உட்பட உடல் மொத்தமும் மறைக்கும் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அது சம்பந்தமான மருத்துவ ஆய்வுக் குறிப்புகளில். ஆனால், சென்னையில் தற்போது சிகிச்சை அளித்து வரும் மருத்துவக்குழு அந்த வசதிகளோடு இருப்பதாய்த் தெரியவில்லை என்று கூறப்பட்டது.

 

திடீர் டிஸ்சார்ஜ்

இந்த நிலையில் தற்போது பார்த்திபன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது ரத்தப் பரிசோதனையில் எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், 21 நாட்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருமாறு தேனி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு போயுள்ளதாம்.

 

-தற்ஸ் தமிழ்-

  • கருத்துக்கள உறவுகள்

 

கருங்காலிக்ககட்டைக்கு  நாணாத 'கோடாலியாக்கும்! :D   

 

கருங்காலிக்கட்டைக்கு நாணாத கோடாலி இருங்கதலித்தண்டுக்கு நாணுமெல்லோ ரோமியோ கவனம் :lol: :lol: :icon_mrgreen:

 

Who Owns the Rights on Tamiflu: Rumsfeld To Profit From Bird Flu Hoax

We bring to the attention of Global Research readers this important commentary by Dr.Joseph Mercola.

The fundamental issue is who owns the intellectual property rights over Tamiflu. The media reports suggest that the Swiss pharmaceutical company Roche will make billions.

While the drug is produced by Roche, it was developed by Gilead Sciences Inc.which owns the intellectual property rights. Gilead, which has maintained a low profile, has outsourced the production to Roche.

Donald Rumsfeld was appointed Chairman of Gilead Sciences, Inc. in 1997, a position which he held in the years prior to becoming Secretary of Defense.in the Bush adminstration. Rumsfeld had been on the Board of Directors from the establishment of Gilead in 1987.

As confirmed in a company press statement in 1997, Donald H. Rumsfeld assumed the position of Chairman, of GILEAD: :

http://www.globalresearch.ca/who-owns-the-rights-on-tamiflu-rumsfeld-to-profit-from-bird-flu-hoax/1148

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப் பாவி.... ஜேர்மன்காரர் மண்டை கழண்டவர்களா........

பொறுத்திருந்து பாருங்கள்,  இபோலாவுக்கு..... மருந்து கண்டுபிடிக்கப் போறதே..... ஜேர்மன்காரன் தான். :)

 

இவங்கள் பொலிடோல்லை தண்ணியை கலந்து குடுத்தாவது வருத்தத்தை அமுக்கி போடுவாங்கள். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா காரரிட்ட இபோலா நிறைய இருக்கு. சின்ன சின்ன‌ கண்ணாடிக் குமிழ்களில் ஈச்சம் பழக் குழை மாதிரி வடிவமைக்கப்பட்ட குண்டுகள் நிலத்தின் மேல் அரை கிலோமீற்றர் உயரத்தில் வெடிக்கும் வகையில் விமானத்தில் இருந்து போடுவார்கள். குண்டின் நடுவில் இருக்கும் வெடிமருந்து வெடிக்க கண்ணாடிகள் உடைந்து இபோலா உள்ள திரவச் சிதறல்கள் காற்றோடு பரவி குறிப்பிட்டளவு பிரதேசத்தின் மேல் விழும்.
 
ஜேர்மன் காரர் மண்டை கழண்டவர்கள் என்பதால் அவர்களை நம்பி இபோலா குண்டுகளைக் குடுத்திருக்க மாட்டார்கள்.
 
இங்கிலாந்திலையும் ரஷ்யாவிலையும் இந்த ஆயுத ஆய்வுகூட இபோலா தாக்கி இருவர் பலியாகி உள்ளார்கள்.
 
இந்த ஓகஸ்ட் மாசம் மட்டும் ஆயிரம் பேர் பலியானால் உலக பொருளாதாரம் நீளமா பாய் விரிச்சு படுக்கும்.

 

 

 

வெடி செய்தவனை விட வெடி கொழுத்தினவனுக்குத்தான் பேரும் புகழும்....விக்கனங்களும். ஆனால் வெடி செய்தவனுக்குத்தான் உள்விசயம் தெரியும். அவனிட்டை மருந்தும் இருக்கும். :lol:
 
தங்களிட்டையும் இபோலா நோயாளி இருக்கெண்டு ஜேர்மனி சொல்லுது. :o
 
என்னமாதிரி சுத்திவளைச்சு வாறாங்கள். :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 லட்சத்திற்கும் அதிகமானோரை தாக்கிய, 'எபோலா' வைரஸ்.

 

ஜெனிவா: இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் எபோலா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர் கொல்லியான எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

 

இந்நிலையில் உலக சுதாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் மார்கரெட் சான் கூறுகையில்,

 

14-ebola-virus12-600.jpg

 

இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகாமானோரை எபோலா வைரஸ் தாக்கியுள்ளது. அவர்களுக்கு தினசரி தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். இம்முறை எபோலா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த அதிக முயற்சி தேவை. வைரஸ் பரவுவதை தடுக்காவிட்டால் இது மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.

 

கிராமப்புறங்களில் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களிலும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சுகாதாரத் துறையினர் அதிக அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 170 சுகாதாரத் துறையினர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 80க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கி பலியாகியுள்ளனர். வைரஸ் பரவத் துவங்கிய 6 மாதங்களில் அது குறித்த

பயத்தில் இருந்து வெளிவருவது தான் மிகவும் கடினமாக உள்ளது என்றார்.

 

வைரஸ் பரவுவதை தடுக்க உலக சுகாதார அமைப்பு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு ஐ.நா. அதிகாரிகளுக்கு ஐ.நா. தலைவர் பான் கீ மூன் உத்தரவிட்டுள்ளார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எதிர்ப்புச் சக்தியை எபோலா வைரஸ் எப்படி செயலிழக்கச் செய்கிறது? - ஆய்வில் கண்டுபிடிப்பு

 

உலகை அச்சுறுத்தி வரும் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் மனித உடலின் எதிர்ப்புச் சக்தியை எப்படிச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் அதன் செயல்பாடுகளைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று இந்த ஆய்வுக்குழுவினர் தீவிரமாக நம்புகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பதட்டத்திற்கு உள்ளாக்கிய இந்த எபோலா, முதன்முதலாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த அமரசிங்கே மற்றும் பலர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

எபோலா புரோட்டீன் விபி24 என்ற ஒன்று செல்லின் எதிர்ப்புச் சக்தியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது.

“எபோலா வைரஸ் முக்கிய எதிர்ப்புச் சக்தி திரவமான இண்டெர்ஃபெரான் என்பதை கடுமையாகச் செயலிழக்கச் செய்கிறது என்பது நீண்ட காலத்திற்கு முன்னரே தெரிந்த விஷயம், இப்போது எபோலா எப்படி இந்தக் காரியத்தைச் செய்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொடிய நோய்க்கு புதிய சிகிச்சை முறைகளை வளர்த்தெடுக்க அனுகூலமான நிலை தோன்றியுள்ளது” என்று டாக்டர் அமரசிங்கே தெரிவித்துள்ளார்.

இண்டெர்ஃபெரான் என்ற அந்த திரவத்தின் எபோலா வைரஸ் எதிர்ப்புச் செய்தி அல்லது சமிக்ஞையான ஸ்டாட் 1 என்பதை எபோலா வைரஸ் தொற்று தொந்தரவு செய்கிறது. அதாவது செல் மையத்திற்கு அந்தச் சமிக்ஞை சென்றடைந்தால்தான் உடலின் இயல்பான எதிர்ப்புச் சக்தி எபோலாவை எதிர்த்துப் போராடும். ஆனால் அந்த சமிக்ஞையை எபோலா திறமையாகத் தடுத்து விடுகிறது.

சாதாரணமாக இண்டெர்ஃபெரான் என்பது ஸ்டாட் 1 என்ற அந்தச் செய்தியை செல் மையத்திற்கு அனுப்பிவிடும். அங்கு அது மரபணுக்களையும் நூற்றுக் கணக்கான எதிர்-வைரஸ் புரதங்களையும் செயல்பட முடுக்கி விடுகிறது.

ஆனால் விபி24 என்ற என்ற புரோட்டீன் ஸ்டாட் 1-உடன் சேரும்போது அது செல்மையத்திற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுகிறது. இதனால் உடலின் இயல்பான வைரஸ் எதிர்ப்புச் சக்திகள் எபோலாவினால் செயலிழந்து விடுகிறது.

எபோலா விபி24 எவ்வாறு இந்த இடையூறைச் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட்டால் எபோலாவை வீழ்த்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

 

Edited by பெருமாள்

அச்சமடையத் தேவையில்லை.

 

 

20140816_IRC100.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லைபீரியாவில் பரபரப்பு.. மருத்துவமனையில் கும்பல் தாக்குதல் -

29 எபோலா நோயாளிகள் ஓட்டம்!

 

மான்ரோவியா: எபோலா தாக்குதலால் சிக்கிப் போராடி வரும் லைபீரியாவில், ஒரு மருத்துவமனையில் திடீரென ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்குதல் நடத்தியதால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 எபோலா நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தலைநகர் மான்ரோவியாவில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு புகுந்த இக்கும்பல் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று மாலையில்தான் இந்தத் தாக்குதல் குறித்த விவரம் வெளியானது.

 

இந்த தாக்குதல் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலர் பீதியடைந்து ஓடினர். இவர்களில் 29 எபோலா நோயாளிகளும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு நோயாளி கூட இல்லை.

இதுகுறித்து கலவரத்தை நேரில் பார்த்த ரிபெக்கா வெஸ்ஸே என்பவர் கூறுகையில், உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த கதவுகளையும், ஜன்னல்களையும் சரமாரியாக அடித்து உடைத்தது. இதில் மருத்துவமனை முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது. ஒரு நோயாளி கூட அங்கு இல்லை. அனைவரும் ஓடி விட்டனர் என்றார்.

 

எபோலா நோயாளிகள் கதி என்ன?

அங்கு தனி வார்டு ஒன்றில் எபோலா பாதித்த 29 பேர் தனியாக வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தனர். அவர்களும் தாக்குதலில் தப்பி ஓடி விட்டனர். அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை.

 

அதிபர் மீது ஆவேசம்.

தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் லைபீரிய அதிபர் எல்லென் ஜான்சன் சர்லீப் மீது ஆத்திரமாக இருந்துள்ளனர். அவர் பொய் சொல்கிறார். அவருக்குத் தேவை பணம்தான். இதனால்தான் எபோலா என்று பொய் சொல்லி வருகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

 

டாக்டர்கள், நர்ஸுகளும் ஓட்டம்.

இந்தத் தாக்குதலில் பீதியடைந்து டாக்டர்களும், நர்ஸுகளும் கூட ஓடிப் போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

 

லைபீரியாவில் அதிக பலி.

கடந்த 1976ம் ஆண்டு முதல் உலகை வலம் வந்து கொண்டிருக்கும் எபோலா நோய் தற்போது ஆப்பிரிக்க நாடுகளைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. இதற்கு லைபீரியாவில் மட்டும் 413 பேர் இறந்துள்ளனர். கினியாவில் 380 பேரும், சியர்ரா லியோனில் 348 பேரும், நைஜீரியாவில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.