Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் ஈச்சமோட்டையில் அட்டகாசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

a3695fa7922674ac60a58273f1e6e533.jpg

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நேற்று இரவு 10 மணிக்கு பின்னர் குறித்த பகுதிக்கு வந்தவர்கள் சனசமூக நிலைய கதவினை உடைத்துக் கொண்டு உட்சென்றவர்கள் அங்கிருந்த கதிரைகள் , மேசைகளை , அலுமாரிகளை உடைத்து எறிந்ததுடன் விளையாட்டு பொருட்களையும் எடுத்து வெளியில் வீசியுள்ளனர். 

மேலும் அங்கிருந்த கதிரைகளை எடுத்துச் சென்று ஈச்சமோட்டை குளத்திற்குள் வீசிவிட்டும் சென்றுள்ளனர்.இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து இராணுவத்திற்கு இணைந்த இளைஞர்கள் தற்போது விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்கள் தாங்கள் ஆமி என்றும் தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற சிந்தனையில் அங்குள்ள பெண் பிள்ளைகளுடன் சேட்டை விட்டுள்ளனர்.

இதனையறிந்த பெற்றோர் ஈச்சமோட்டை சனசமூக நிலைய நிர்வாகத்திடம் தெரிவித்தனர் இதனையடுத்து அவர்களை சனசமூக நிர்வாகம் தட்டிக்கேட்டனர்.

அதனையடுத்து ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் இளைஞர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டே இந்த சனசமூக நிலையம் உடைக்கப்பட்டதுடன் தளபாடங்களும்  பொருட்களும் சேதமாக்கப்பட்டதுமாகும். 

மேலும் தங்களுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டால் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்றும், நாங்கள் இராணுவம் எங்களுக்கு இங்குள்ள இராணுவத்தினர் உதவிகளை மேற்கொள்வார்கள்  எள்றும் அவர்கள் மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளதுடன் குறித்த விடயங்களை பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்துள்ளனர்.

photo%201(15).jpg

photo%202(13).jpg

photo%203(6).jpg

photo%204(4).jpg

photo%205(5).jpg

http://onlineuthayan.com/News_More.php?id=886803330014619822

  • கருத்துக்கள உறவுகள்

தமிழேண்டா......... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் என்றால் அப்படித்தான்....அது தமிழனாக இருந்தாலென்ன சிங்களவனாக இருந்தாலென்ன?

இராணுவம் இல்லாத நாடுகள் குறைவு. நாடுகள் இல்லாத இனங்கள் இருக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா ராணுவத்தில் இணைந்தவர்கள், முன்னைய ஒட்டுக்குழு உறுப்பினர்களாகவே இருப்பார்கள்.
ஒட்டுக்குழுவில் இருந்த போதும்... இதனையே செய்தவர்கள்.
ஸ்ரீலங்கா இராணுவத்தில் இணைந்த பின்பும்... அதனையே செய்கிறார்கள்.
சாதாரண தமிழன் இப்படியான... நாய்வேலை செய்ய மாட்டான்.

இப்ப இராணுவத்துடன் ஒட்டி திரிவது முன்னாள் புலிகள் தான் அதிகம் .பலர் நாமலின் அடியாட்கள் .

முப்பது வருடங்களாக புலிகள் என்ற பெயரில் செய்ததை இப்ப இராணுவம் என்ற பெயரில் செய்கின்றார்கள் அதுதான் வித்தியாசம் .

இரன்டு கருத்தும் பிழை.தமிழனின் குணம் அது.இப்படி பிழைகளால்தான் இங்கு தேவை இல்லாத மனத்தாங்ஙல்கள் வாறது.என்ரை அறிவுக்கு எட்டிய வரை தமிழர் திரவம் மாதிரி.எந்தப் பாத்திரத்தில் உள்ளார்களோ அந்ந வடிவத்தை பெறுகிறார்கள் போல.

உண்மை சுவைப்பிரியன்  நன்றி. இதனால் தான் நான்  கூறினேன்.       ----->  -----> -----> -----> ----->

கருத்துக்கள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இராணுவத்துடன் ஒட்டி திரிவது முன்னாள் புலிகள் தான் அதிகம் .பலர் நாமலின் அடியாட்கள் .

முப்பது வருடங்களாக புலிகள் என்ற பெயரில் செய்ததை இப்ப இராணுவம் என்ற பெயரில் செய்கின்றார்கள் அதுதான் வித்தியாசம் .

இராணுவத்திலை இருக்கிற புலியள் குணம் மாறி திருப்பி அடிச்சால் உங்கடை பாடு கோவிந்தா... :icon_mrgreen:

இரன்டு கருத்தும் பிழை.தமிழனின் குணம் அது.இப்படி பிழைகளால்தான் இங்கு தேவை இல்லாத மனத்தாங்ஙல்கள் வாறது.என்ரை அறிவுக்கு எட்டிய வரை தமிழர் திரவம் மாதிரி.எந்தப் பாத்திரத்தில் உள்ளார்களோ அந்ந வடிவத்தை பெறுகிறார்கள் போல.

யாழுக்கு வந்ததே அப்படி எழுதுபவர்களுக்கு  எதிர் கருத்து எழுதத்தான் .அவர்கள் நிறுத்த மட்டும் நான் நிறுத்தமாட்டன் .

உள்ள பிழைகளை எல்லாம் தாங்களும் விட்டுவிட்டு நல்ல பிள்ளைகளுக்கு நடிக்கும் போது வட்டியுடன் சேர்த்து கொடுத்து விடவேண்டும் . :icon_mrgreen:

நீங்க தி.மு.க எண்டு முதல்ல நினைச்சேங்க. இப்ப தெரியுது நீங்க உண்மையில அ.தி.மு.க தானுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளைஜர்களையும் யுவதிகளையும் இராணுவதில் சிங்கள அரசு இணைத்தது இதுக்குதானே? நாட்டுக்கு சேவை செய்வதற்க்கு அல்ல தமிழனுக்கு உபத்திரவம் கொடுக்க.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளைஞர்கள்.. பிள்ளை பிடிக்கப்பட்டு.. இந்திய இராணுவத்தால்.. தமிழ் தேசிய இராணுவம் என்று இணைக்கப்பட்ட போதும்.. மக்கள் அவர்களால் துன்பட்டப்பட்டார்கள். இப்போதும் அதே. எங்கெல்லாம்.. ஒட்டுக்குழுக்கள் உள்ளனவோ அங்கெல்லாம் மக்களுக்கு நிம்மதியில்லை. அது எமது போராட்டம் முழுவதும்.. தொடர்ந்து வருவது... எமது விடுதலைப் போராட்டத்தின் சாபக்கேடுகளில் ஒன்று..!

ஒட்டுக்குழுக்களை அழிக்க வெளிக்கிட்டால்.. அதுகளுக்கு அடைக்கலம் கொடுக்க எதிரிகள் இருக்கும்.. போது.. எதிரிகள் பலமாக உள்ள காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பது கடினம்.

இந்தியப் படைகள் காலத்தில்.. மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து பெண் பிள்ளைகளை பாலியல் துன்புறுத்தியது.. கொள்கைகளில் ஈடுபட்டது.. என்று நடக்கப் போய் பின்னர் மக்கள் விழிப்புக்குழுக்களை அமைத்து கோவில் மணிகளை எச்சரிக்கை மணிகளாக்கி வாழ்ந்து வந்த பயங்கரம்.. மீண்டும் மீளுமோ என்ற அச்சத்தையே இது ஏற்படுத்தி உள்ளது.

இதெல்லாம் ஆக்கிரமிப்புப் படைகளும் அதன் கூலிகளும்.. மக்களை அச்சத்தில் வைத்திருக்க செய்யும் கைங்கரியமே. தமிழ் கூலிகள் சில இதில் எடுபடுவது பெரிய விடயம் அல்ல. அன்று புலிகள் இருந்த போதே எடுப்பட்ட கூலிகள்.. இப்போது அதை விடக் கூடச் செய்வார்கள். அவர்களுக்கு நல்ல புத்திமதியை சொல்ல வேண்டியது.. சமூக ஆர்வலர்களின் பணியாகும்..! மீண்டும் விழிப்புக்குழுக்களை மக்கள் தமது பாதுகாப்பிற்காக அமைப்பதும் இங்கு வரவேற்கத்தக்கது..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.