Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் வல்வை சகாறாவின் இரு நூல்கள் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும்.. ஆதியை தற்கொலைக்கு தூண்டியது.. அபந்தம்..!! பாவம் ஆதி. எனி அவனை(ளை) திட்டவும் மனசு வராது..!! :lol::D

ஆதி.. ஆதியின் அடரவையில் அடித்த கூத்தை மறக்குமா நெஞ்சம்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12235

Edited by nedukkalapoovan

  • Replies 157
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆதி கேட்டுக்கொண்டதுக்கு இணங்க இத்தகவலை மறத்த எம் இரானுவப்பிரிவு செய்திகள் சுஜின்ந்தன் மூலம் கசிந்ததன் காரணமாக வால் வெட்டப்பட்ட அவரின் படங்களை பிரசுரிக்கின்றோம்

வால் வெட்டமுதல்

monkey_tail_form_ampersand_lg_wh-1.gif

1285436100447e7ea0daa69-1.gif

வால் வெட்டியபின்

aathji.gif

1285436100447e7ea0daa69-1-1.gif

வெட்டும்போது எடூக்கப்பட்ட படம் இது கொடூரமாக இருப்பதனால் சித்திரவடிவிலேயே தருகின்றோம்

notail.jpg

அடுத்த குறியான சின்னப்புவை நோக்கி எம் இராணூவப்பிரிவின் தளபதியில் ஒருவரான கோணல் ஜமுனா நகர்ந்துகொண்டு இருக்கிறார் வெற்றி செய்தியை வெகுவிரைவில் அவரே அறிவிப்பார்

அன்புடன்

ஈழவன்

ஆதிக்கு வால்வெட்டிய யாழ் உறவுகள்.. ஆதியை கண்டுபிடிக்க முடியல்லையே..???!!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேளையில் தமிழச்சியிடம் நானுமே மன்னிப்புக் கேக்க வேண்டியவள் ஆகி விட்டேன்.காரணம் இந்தப்  பகுதியில் எல்லாரும் வந்த படங்கள் இணைக்கபட்டு  இருந்ததைப் பார்த்து விட்டு தான் என்  பக்கத்திலும் படங்களை இணைத்துக் கொண்டேன்.
அதற்காக தமிழச்சியிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக்  கேட்டுக்கொள்கிறேன் தமிழச்சி...நீங்கள் மிகுந்த புரிந்துணர்வுள்ளவர் விளங்கிக் கொள்வீர்கள் என்று நம்பிறன்.
மற்றப்படி சகாராக்காக என்னைத் தொடர்பு கொண்டு பட இணைப்பு பற்றி கேட்டு இருந்தார்..
நான் எடுத்த உடன் வேண்டாம் அக்கா என்று மறுத்து கொண்டாலும் பின் சகாராக்கா ஏன் யாயினி இப்படி இருந்து என்ன செய்யப் போறீர் போன்ற கேள்விகளை, விளக்கங்களைத் தந்த பின் தான் சரி என்னாச்சும் செய்யுங்கோ என்று விட்டு போணை வைத்தேன்..வேண்டாம் என்று மறுத்துக் கொண்டே இருந்திருந்தேன் என்றால் அங்கே எங்கள் உறவுமுறைக்குள் ஒரு சின்ன இடைவெளியை ஏற்படுத்தி இருக்கும்,..

என்ன இந்த யாயினி யாரு என்ன கேட்டாலும் சொல்வளி கேட்பதில்லை.என்ற எண்ணப்பாடே பலர் மத்தியில் இருக்கிறதனால் இப்போ யாரு என்ன சொன்னாலும் ம்ம்ம் போட்டு விட்டால் பிரச்சனை  முடிந்து விட்டது என்ற எண்ணபாடே என் மனதில் உள்ளது....

நானாக முடிவு எடுக்க முடியாத காரணங்களில் சில நல்ல பல விடையங்களை இளந்தும் இருக்கிறேன்..எதிர் வரும் காலத்திலும் இப்படியான தவறுகளை நான் செய்யக் கூடாது.
எது எப்படி இருப்பினும் யாழில் எங்களுக்கு மட்டுறுத்தினர் மார் இருக்கும் மட்டும் பயம் குறைவு...எங்களுக்கு எழும் பிரச்சனைகளில் அரைப் பகுதியையாவது அவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்  நான் உலாவுகின்றேன்.ஆகவே பட இணைப்பு பற்றி எல்லாம் மற்றவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்று எல்லாம் வருத்தப்படாதீங்க தமிழச்சி..

வாய் இருக்கும் மட்டும் சனம் கதைக்கவே செய்யும்..நேற்று ஒரு பெண்மணி என்னை அழைத்துக் கேட்டார் ஆ...படங்கள் எல்லாம் இணையங்களில் அந்த மாதிரி கிடக்கு...ஏற்கனவே 27 பேர் எலைக்ஸன் கேக்கீனமாம் நீங்கள் 28 ஆவது ஆளாக போவதற்கு ஒத்திகையா என்று கேட்டார்..இவ்வாறன சங்கடங்கள் எப்போதும் வரத் தான் போகிறது....என்ன செய்வது....இப்படி எத்தனையைத் தாங்க வேண்டிய சூழ் நிலை என் பக்கம் இருக்கிறது. நினைத்துப் பார்த்தால் தமிழச்சி ஓகே ஆகிடுவா..    
 
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை இவ்வளவு நாளும்..... ஆதிவாசி என்ற பெயரில் வந்து முழு யாழ் உறுப்பினர்களையும் ஏமாற்றியதை ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்ததை நினைக்க வெட்கமாக உள்ளது.

l :icon_mrgreen:

2011 களின் இறுதிப்பகுதிகளில் என்று நினைக்கிறேன் ஆதி யாரென்று தெரியவந்தது... அதனால் ஆதியுடன் அப்பொழுதில் இருந்தே குரங்கு சேட்டைகள் விடுவதில்லை.. :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் இரண்டு உறவுகள் அல்ல இதுவரை யாழில் முகங்காட்டாத 5 உறுப்பினர்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. யாயினியிடம் அனுமதி வாங்கி இணைத்தேன் மற்றையோர் எவரிடமும் அனுமதியைப் பெறாதது என்னுடைய தவறே... ஆர்வக்கோளாறு காரணமாக மற்றைய நால்வரின் படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. படங்களை இணைத்துவிட்டேன் என்று சங்கடப்பட்டுக்கொண்டு இருக்கும் உறவுகளிடம் நான் என்னுடைய ஆர்வக்கோளாறினால் ஏற்பட்ட தவறுக்காக பகிரங்க மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் இந்தப்படங்கள் இணைத்த பின்னர் என்னுடன் பேசிய உறவு ஒருவர் அதனை அகற்றும்படி கேட்டுக் கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு முகங்காட்ட பிரியமில்லாத இடத்து ஈக்குருவியின் புகைப்படச்சுருளுக்குள் அகப்படாமல் தவிர்த்திருக்கலாம். அவர்களின் எச்சரிக்கை உணர்வு என்னையும் எச்சரித்திருக்கும். முன்னெப்போதுமே செய்யாத ஒரு தவறை என்னுடைய நூல் வெளியீட்டில் செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வு என்னை ஆக்கிரமிக்கத்தான் செய்கிறது. யாயினி தவிர்த்து மற்றைய நால்வரும் என்னை மன்னிப்பார்களாக.

stock-photo-sorry-emoticon-73086553.jpg

மன்னிப்பு கேட்பதன் மூலம் அவ்வளவு இலகுவில் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் தீர்ந்து போகப்போவதில்லை அக்கா... இனி எதுவும் செய்ய முடியாது நடந்தது நடந்துவிட்டது :( .. நாங்கள் இலகுவாக மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையுடன் கடந்து விடுவோம் ஆனால் எல்லாவற்றையும் எதிர்கொள்வது அவர்கள் தானே அக்கா.. :( ஒருவரின் ப்ரைவசி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும் மற்றைய வரின் ப்ரைவசியையும் மதிக்கவும் எனக்கு கற்று தந்ததே இந்த யாழ் தான் முன்னர் விவசாயி விக்கின் தோட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பிலும் தமிழச்சி அக்கா தனது படங்கள் வெளியாவதை விரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.. யாயினி அக்காவும் தனது வருத்தத்தை இங்கு பதிவு செய்துள்ளார் என்பதையும் கவனத்தில் எடுக்க....

Edited by சுபேஸ்

இதை என்னுடன் பேசும்போதே கேட்டிருக்கலாமே தமிழச்சி அல்லது உடனடியாக நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்காக விடயத்தை தெரியப்படுத்தி ஆவன செய்திருக்கலாம் இதுவரை எந்த யாழ் உறவுகளையும் அவர்கள் அனுமதியின்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியதில்லை. இம்முறை தவறுதலாக ஈக்குருவியின் இணையத்தளத்திலிருந்து நேரடியாக தரவிறக்கம் செய்ததில் சிலருடைய படங்கள் அகப்பட்டுவிட்டன. அவசரமும் ஆர்வமும் சில நண்பர்களின் கட்டுப்பாடுகளை மீறிப்பாய்ந்து விட்டது அவர்கள் எல்லோரிடமும் நான் மிகவும் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளேன். மன்னிப்பார்களாக.

 படத்தைப் பார்த்ததுமே உங்களுக்குத் தனிமடல் அனுப்ப (நாலைந்து தடவை) முயற்சித்தேன்.  ஆனால், அதிக தனிமடல்கள் இருப்பதாகவும் அதனால் அனுப்ப முடியாது எனவும் வந்தது.  உடனேயே உங்களின் முகநூலுக்குச் செய்தி அனுப்பி விட்டு உங்களுக்கும் தொலைபேசி எடுத்தேன்.  நீங்கள் பதிலளிக்கவில்லை.  நீங்கள் மீண்டும் என்னை அழைத்தபோது, எங்களது படத்தைப் போட்டு விட்டீர்களே என நான் அங்கலாய்த்த போது, நீங்கள்,  "ஆனால் நான் காட்டிக் கொடுக்கவில்லை.  உங்களது பெயரை அதில் எழுதவில்லையே" என்று கூறினீர்கள்.  அதற்குள் மற்றவர்களும் Quote செய்திருந்தபடியாலும் மற்றவர்கள் யாரும் சுட்டிக்காட்ட மாட்டார்கள் என்ற நப்பாசையிலும் சரி எனத் தலையாட்டிவிட்டேன்.   இதுவரை நடைபெற்ற அனைத்து ஒன்றுகூடல்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.  எனக்கு முகம் காட்டுபவர்களுக்கு நான் முகத்தைக் காட்டுவதற்குத் தயங்குவதில்லை.  அதேநேரம், அநாவசியமாக அனைவருக்கும் முகம் காட்டுவதையும் நான் விரும்பவில்லை.   வெளியில் நான் எனது சொந்தப் பெயரில் வலம் வருகிறேன்.  ஆனால், யாழில், முகமூடியுடன்தான் வலம்வருகிறேன்.  இப்போதைக்கு முகமூடியைக் கழட்டும் எண்ணம் இல்லை.   ஈகுருவியில் படம் பார்க்கும்போது, இவர்தான் யாழில் குறிப்பிட்ட பெயரில் எழுதுவது என்று தெரியவராது.   ஆனால், யாழில் பதிவிடும்போது யாழைப் பார்வையிடுபவர்கள் அடையாளம் காணலாம்.  அநாவசியமாக, நானே ஏன் என்னைச் சிக்கலுக்குள் மாட்ட வேண்டும்?  

இந்த வேளையில் தமிழச்சியிடம் நானுமே மன்னிப்புக் கேக்க வேண்டியவள் ஆகி விட்டேன்.காரணம் இந்தப்  பகுதியில் எல்லாரும் வந்த படங்கள் இணைக்கபட்டு  இருந்ததைப் பார்த்து விட்டு தான் என்  பக்கத்திலும் படங்களை இணைத்துக் கொண்டேன்.

அதற்காக தமிழச்சியிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக்  கேட்டுக்கொள்கிறேன் தமிழச்சி...நீங்கள் மிகுந்த புரிந்துணர்வுள்ளவர் விளங்கிக் கொள்வீர்கள் என்று நம்பிறன்.

உங்களை விளங்கிக் கொள்கிறேன் யாயினி.   நான் உங்கள் பக்கத்தை சமீபத்தில் பார்வையிடவில்லை.  அதனால், நீங்கள் உங்கள் பக்கத்தில் இணைத்தது தெரியாது.  இருந்தாலும், அந்தப் படங்களை நீக்கி விடுங்கள். 

மற்றப்படி சகாராக்காக என்னைத் தொடர்பு கொண்டு பட இணைப்பு பற்றி கேட்டு இருந்தார்..

நான் எடுத்த உடன் வேண்டாம் அக்கா என்று மறுத்து கொண்டாலும் பின் சகாராக்கா ஏன் யாயினி இப்படி இருந்து என்ன செய்யப் போறீர் போன்ற கேள்விகளை, விளக்கங்களைத் தந்த பின் தான் சரி என்னாச்சும் செய்யுங்கோ என்று விட்டு போணை வைத்தேன்..வேண்டாம் என்று மறுத்துக் கொண்டே இருந்திருந்தேன் என்றால் அங்கே எங்கள் உறவுமுறைக்குள் ஒரு சின்ன இடைவெளியை ஏற்படுத்தி இருக்கும்,..

என்ன இந்த யாயினி யாரு என்ன கேட்டாலும் சொல்வளி கேட்பதில்லை.என்ற எண்ணப்பாடே பலர் மத்தியில் இருக்கிறதனால் இப்போ யாரு என்ன சொன்னாலும் ம்ம்ம் போட்டு விட்டால் பிரச்சனை  முடிந்து விட்டது என்ற எண்ணபாடே என் மனதில் உள்ளது....

நானாக முடிவு எடுக்க முடியாத காரணங்களில் சில நல்ல பல விடையங்களை இளந்தும் இருக்கிறேன்..எதிர் வரும் காலத்திலும் இப்படியான தவறுகளை நான் செய்யக் கூடாது.

எது எப்படி இருப்பினும் யாழில் எங்களுக்கு மட்டுறுத்தினர் மார் இருக்கும் மட்டும் பயம் குறைவு...எங்களுக்கு எழும் பிரச்சனைகளில் அரைப் பகுதியையாவது அவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்  நான் உலாவுகின்றேன்.ஆகவே பட இணைப்பு பற்றி எல்லாம் மற்றவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்று எல்லாம் வருத்தப்படாதீங்க தமிழச்சி..

காவிச் செல்பவர்களை மட்டுறுத்தினர்களால் எதுவும் செய்ய முடியாது யாயினி.   நாம் வைக்கும் கருத்துக்கள் முரண்பாடாக இருக்கும் சமயத்தில் காவிச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.   நாமாகவே ஏன் நம்மைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டும்.  எல்லோருக்கும் எல்லா நேரமும் சூழ்நிலை ஒன்றாக இருப்பதில்லையே யாயினி?   

வாய் இருக்கும் மட்டும் சனம் கதைக்கவே செய்யும்..நேற்று ஒரு பெண்மணி என்னை அழைத்துக் கேட்டார் ஆ...படங்கள் எல்லாம் இணையங்களில் அந்த மாதிரி கிடக்கு...ஏற்கனவே 27 பேர் எலைக்ஸன் கேக்கீனமாம் நீங்கள் 28 ஆவது ஆளாக போவதற்கு ஒத்திகையா என்று கேட்டார்..இவ்வாறன சங்கடங்கள் எப்போதும் வரத் தான் போகிறது....என்ன செய்வது....இப்படி எத்தனையைத் தாங்க வேண்டிய சூழ் நிலை என் பக்கம் இருக்கிறது. நினைத்துப் பார்த்தால் தமிழச்சி ஓகே ஆகிடுவா..    

உண்மைதான் யாயினி, ஆனால், நாமே பொல்லைக் கொடுத்து ஏன் அடிவாங்குவான்?  

உங்களைச் சந்தித்தது மிகவும் சந்தோசமாக இருந்தது யாயினி.   பேசுவதற்குத்தான் நேரம் போதவில்லை.  உங்கள் கருத்துக்கள் மூலம், நான் உங்களை வயதில் மிகவும் குறைந்தவர் என்று நினைத்திருந்தேன்.  உங்களை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.  நீங்கள் நிச்சயம் வாழ்வில் முன்னேற வேண்டும்.  அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  

மன்னிப்பு கேட்பதன் மூலம் அவ்வளவு இலகுவில் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் தீர்ந்து போகப்போவதில்லை அக்கா... இனி எதுவும் செய்ய முடியாது நடந்தது நடந்துவிட்டது :( .. நாங்கள் இலகுவாக மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையுடன் கடந்து விடுவோம் ஆனால் எல்லாவற்றையும் எதிர்கொள்வது அவர்கள் தானே அக்கா.. :( ஒருவரின் ப்ரைவசி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும் மற்றைய வரின் ப்ரைவசியையும் மதிக்கவும் எனக்கு கற்று தந்ததே இந்த யாழ் தான் முன்னர் விவசாயி விக்கின் தோட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பிலும் தமிழச்சி அக்கா தனது படங்கள் வெளியாவதை விரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.. யாயினி அக்காவும் தனது வருத்தத்தை இங்கு பதிவு செய்துள்ளார் என்பதையும் கவனத்தில் எடுக்க....

மிகவும் நன்றி சுபேஸ்.  உங்களின் புரிந்துணர்வையும் பொறுப்புணர்வையும் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை.  உங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி.  

தம்பி தம்பிதான்  :)

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையா?? :unsure:

அடப்போங்கையா.. :huh:

ஜூன் ஜூலையா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  படங்களின் இணைப்பைப்பார்த்ததும்

முதலில் அதிர்ச்சி  வந்தது எனக்குத்தான்...

அதிலும் யாயினி

அவர் இங்கு கள உறவு

ஆனால் எனக்கு உறவு.

அவரை எப்பொழுதுமே  ஒரு துள்ளித்திரியும் ஆட்டுக்குட்டி என்று தான் நான் இங்கு எழுதுவது வழமை

அவ்வாறே அவர் மீதான பார்வையும்

விம்பமும்  எல்லோருக்கும் இருக்கணும் என விரும்பியிருந்தேன்...

அதனாலேயே  அவருடன் சண்டைகளில் ஈடுபடுவேன்..

என்னிடம் யாயினியின் படம் பலவருடங்களாக உண்டு

ஆனால் கவனம் என எழுதிய யாயினி

தற்பொழுது எவ்இவாறு சம்மதித்தார் என புரிந்து கொள்ளமுடியவில்லை...

முகம் காட்டாத யாழ் உறவுகள் சார்ந்து

உறவுகள் 200 வீத பொறுப்புடன்  நடந்து கொள்ளவேண்டும்..

பல நாடுகளுக்கும் சென்ற போதும்

பலருடன்  படம் எடுத்துக்கொண்ட போதும்

எனது படத்தை இதுவரை நான் எங்கும் போட்டதில்லை..

படம் எடுப்பவர்களும் அதை  என் அனுமதியின்றி போட்டதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விளங்கிக் கொள்கிறேன் யாயினி.   நான் உங்கள் பக்கத்தை சமீபத்தில் பார்வையிடவில்லை.  அதனால், நீங்கள் உங்கள் பக்கத்தில் இணைத்தது தெரியாது.  இருந்தாலும், அந்தப் படங்களை நீக்கி விடுங்கள். தமிழச்சியின் விருப்பிற்கு இணங்க எனது பக்கத்தில் இணைக்கபட்டு இருந்த படங்கள் நீக்கபட்டாயிற்று.சரி இது ஒரு சின்னத் தப்பு இப்படியே விட்டுடுவம்..ஒரு சந்தோச நிகழ்வில் நடந்த சின்னத் தப்பு அதை ஏன் பெரிதுபடுத்துவான்.

Edited by யாயினி

யாழ் கள உறுப்பினர்களின் படங்கள் அவர்கள் அனுமதியில்லாமல் யாழில் பகிரப்படுவது தவறு. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் நானும்.

நிழலி, அந்தரப் படுவதைப் பார்க்க.... சிரிப்பாக உள்ளது :D.

ஆரம்பத்திலேயே.... அவர், இதுதான்...முதல் மேடைப் பேச்சு என்று குறிப்பிட்டதால்...

சொதப்பப் போறாரோ என்று யோசித்தேன். ஆனால் பரதூரமாக எதுவும் நடக்கவில்லை.

ஹி ஹி.. சிங்கம் சிக்கிக் கொண்டாலும் விக்கல் எடுத்தாவது வெளியில் வந்துவிடும். கனடா உறவுகளில் ஒருவராவது கண்டிப்பாக மேடையில் ஏறுவர் என்று வாக்கு கொடுத்ததால் ரிஸ்க் எடுத்து றஸ்க் சாப்பிட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி.. சிங்கம் சிக்கிக் கொண்டாலும் விக்கல் எடுத்தாவது வெளியில் வந்துவிடும். கனடா உறவுகளில் ஒருவராவது கண்டிப்பாக மேடையில் ஏறுவர் என்று வாக்கு கொடுத்ததால் ரிஸ்க் எடுத்து றஸ்க் சாப்பிட்டன்.

உங்களுக்கு, வியர்த்துக் கொட்டியதைப் பார்க்கவே....

சிங்கம் வாக்குக் கொடுத்து விட்டு, சிக்கித் தவிக்குது என்று நாம் புரிந்து கொண்டோம். :D

நிழலி அண்ணாவின் யாழ்கள கருத்துக்களை மட்டுமே பார்த்திருந்ததால் உண்மையில் தான் உரையாற்றும் போது நடுங்கியதாக அவர் கூறிய போது நான் நம்பவில்லை. ஆனாலும் வீடியோவை பார்த்ததும் தான் விளங்கிச்சு, கையை எத்தனை விசுக்கு விசுக்கியிருக்கிறார் என்று. :) யாழ்களத்தில் உள்ள பகுதிகளையே எழுதி வைத்து வாசிக்குமளவுக்கு தடுமாற்றம் இருந்திருக்கிறது. :)

ஆனாலும் யாழ் இணையம் சார்பாக துணிந்து உரையாற்ற சென்றமை பாராட்டத்தக்கது. :) தனது உரையில் மோகன் அண்ணா பற்றி குறிப்பிட்டமையும் மகிழ்ச்சி. மோகன் அண்ணா இல்லாமல் யாழ் இணையம் உருவாகியிருக்காது. :)

Edited by துளசி

தனது நூல் வெளியீட்டின் போது யாழ் இணையம் சார்பாக ஒருவர் உரையாட வேண்டும் என நினைத்து அழைப்பு விடுத்த சகாறா அக்காவுக்கும் பாராட்டுக்கள். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

------

ஆனாலும் யாழ் இணையம் சார்பாக துணிந்து உரையாற்ற சென்றமை பாராட்டத்தக்கது. :) தனது உரையில் மோகன் அண்ணா பற்றி குறிப்பிட்டமையும் மகிழ்ச்சி. மோகன் அண்ணா இல்லாமல் யாழ் இணையம் உருவாகியிருக்காது. :)

அந்த மேடையில்.... மோகன் அண்ணாவை குறிப்பிட்டது மகிழ்ச்சியான விடயம் துளசி.

அத்துடன் அவர் "காகம் பற, பற... என்று, தொடங்கிய போது....

இந்த கிறுக்குப் பயலை, இங்கை ஏன் குறிப்பிடுகிறார் என்று... யோசித்தேன்.

பிறகு தான்.... விஷயம் விளங்கீச்சுது.  :D

. :) யாழ்களத்தில் உள்ள பகுதிகளையே எழுதி வைத்து வாசிக்குமளவுக்கு தடுமாற்றம் இருந்திருக்கிறது. :)

பின்ன.. கோடிப்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை என்று பெயர்கள் வைத்தால் எப்படி மனனம் செய்றதாம்.. :lol:

உண்மையில் இவை பாலை தரும் பாலை மரங்களின் பெயர்கள் மட்டுமல்ல தொன்மையான தமிழ் இசையின் ஏழ்பெரும் பாலைகள். யாழ் வாத்தியம் கூட பாலைமரத்தினாலும் கருங்காலி மரத்தினாலும் ஆக்கப்படும் ஒரு இசைக் கருவி. யாழ் இணையத்தின் பகுதிகளிற்கு மிகவும் அர்த்தம் கொண்டதாக  பெயர் வைத்துள்ளார் மோகன்.

வாழ்த்துக்கள் சகாறா..... அருமையான நிகழ்ச்சியாக இருந்திருக்கின்றது உங்கள் நூல் வெளியீட்டு விழா.... மென்மேலும் எழுத்துத் துறையில் வளர வாழ்த்துக்கள்....  :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தமிழ்ச்சியிடம் என் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். குறுப் போட்டோவில் போஸ் கொடுத்த படியால் அவர் விரும்பித் தான்[அனுமதியோட] படத்தை இணைத்தார்கள் என நினைத்து பெயரைக் குறிப்பிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் மேடை பயத்தில் நடுக்கத்துடன் தள்ளாடுவதை பார்க்க அவ்வளவு ஆசை...  :)

பின்ன ? என்னத்தை சொன்னாலும் நீங்கள் நாயகன் தான் தோழா.

பின்ன.. கோடிப்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை என்று பெயர்கள் வைத்தால் எப்படி மனனம் செய்றதாம்.. :lol:

உண்மையில் இவை பாலை தரும் பாலை மரங்களின் பெயர்கள் மட்டுமல்ல தொன்மையான தமிழ் இசையின் ஏழ்பெரும் பாலைகள். யாழ் வாத்தியம் கூட பாலைமரத்தினாலும் கருங்காலி மரத்தினாலும் ஆக்கப்படும் ஒரு இசைக் கருவி. யாழ் இணையத்தின் பகுதிகளிற்கு மிகவும் அர்த்தம் கொண்டதாக  பெயர் வைத்துள்ளார் மோகன்.

இவை மோகன் அவர்கள் வைத்த பெயர்கள் என்றூ நினைக்கவில்லை, அவை இளாஞன் வைத்த பெயர்கள் என்றூ நினைக்கிறேன். யாழின் வளார்ச்சியில் இளாஞன்  உழைப்பும் வெகுவாக இருந்தது.  .

சாகராவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவை மோகன் அவர்கள் வைத்த பெயர்கள் என்றூ நினைக்கவில்லை, அவை இளாஞன் வைத்த பெயர்கள் என்றூ நினைக்கிறேன். யாழின் வளார்ச்சியில் இளாஞன்  உழைப்பும் வெகுவாக இருந்தது.  .

சாகராவுக்கு வாழ்த்துக்கள்.

ஓம் நாரதர் இளைஞன் யாழின் ஆரம்ப வளர்ச்சியில் முக்கியமான பங்காளி.இப்பெயர்களை இளைஞனே வைத்தார். மற்றும் சுரதா அவர்களும் யாழின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு கேட்பதன் மூலம் அவ்வளவு இலகுவில் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் தீர்ந்து போகப்போவதில்லை அக்கா... இனி எதுவும் செய்ய முடியாது நடந்தது நடந்துவிட்டது :( .. நாங்கள் இலகுவாக மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையுடன் கடந்து விடுவோம் ஆனால் எல்லாவற்றையும் எதிர்கொள்வது அவர்கள் தானே அக்கா.. :( ஒருவரின் ப்ரைவசி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும் மற்றைய வரின் ப்ரைவசியையும் மதிக்கவும் எனக்கு கற்று தந்ததே இந்த யாழ் தான் முன்னர் விவசாயி விக்கின் தோட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பிலும் தமிழச்சி அக்கா தனது படங்கள் வெளியாவதை விரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.. யாயினி அக்காவும் தனது வருத்தத்தை இங்கு பதிவு செய்துள்ளார் என்பதையும் கவனத்தில் எடுக்க....

சரி இந்தத்தவறுக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்களே தீர்ப்பையும் கூறிவிடுங்கள் கட்டுப்படுகிறேன்.... இதுவரை படங்களில் உள்ள இருவரை மட்டுமே நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் இன்னும் 3 இருக்கிறார்கள் அவர்களை உங்களுக்கு தெரியாதபடியால் கண்டு பிடிக்க முடியவில்லை முடிந்தால்' அவர்களையும் கண்டு பிடித்து அவர்களுக்காகவும் நான் மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்து இன்னும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலுக்கு மேலதிகமாக இம்மன்னிப்பிற்கு அப்பால் நான் ஏது செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியப்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும் சுபேஸ்

நிழலி, அர்யூன், மீராபாரதி, காவலூர்கண்மணி, யாயினி, சசிவர்ணம், சகாறா ஆகியோரைத் தவிர ஐவர் அதில் இருவரை மாத்திரமே உங்களால் அடையாளங்காண முடிந்தது மற்றைய மூவர் இன்னும் வெளிப்படாமல் தங்களைப்பறைசாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ... சுபேஸ் கண்டு பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் இணைய உறவுகளே..

என்னுடைய "வேங்கையன் பூங்கொடி"  "காவியத்தூது" ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்விற்கு நீங்கள் அனைவரும் வழங்கிய ஊக்கம் என்பது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. இந்த இணைய வெளியில் என்னுடனான உங்கள் அனைவரதும் தோழமைபூர்வமான கருத்தாடல்கள் அதற்கும் அப்பால் முகம் காட்டும் சந்திப்புகள் என்பன என்னுடைய எழுத்துப்பயணத்தில் மிக ரம்மியமானவை. இந்த நூல்களின் வெளியீடு தொடர்பாக மனமுவந்து வாழ்த்துக்களையும் கருத்துரைகளையும் பகிர்ந்து என்னை மேன்மை செய்த உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். அத்தோடு இந்த யாழ் இணைய முகப்பில் என்னுடைய நூல் வெளியீடு பற்றிய அறிவித்தலை ஏற்று அதனை விளம்பரமாக ஏற்காமல் நட்புரீதியாக பதிவிட்டு ஆதரவளித்த யாழ் இணையத்திற்கும் மிகுந்த நன்றி உரைக்க கடமைப்பட்டுள்ளேன். மேலும் என்னுடைய நூல் வெளியீட்டுக்கு வந்திருந்த அனைத்து யாழ் உறவுகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் இவ்விடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் எனது நூல்களின் வெளியீடுபற்றி அறிந்து தொலைதூரத்தில் கண்டங்கள் கடந்து வாழும் உறவுகளும் என்னை அழைத்து வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்திருந்தார்கள் யாழ் என்னும் இணையத்தினூடாக கண்டங்கள் கடந்தும் எனக்கான தோழமைகளும் உறவுகளும் பரந்திருக்கிறார்கள் என்ற உண்மையை உணர வைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள் பல. இவ்விடத்தில் எவரையேனும் நான் தவற விட்டிருப்பின் மன்னிப்பார்களாக அப்படி யாரேனும் விடப்பட்டிருந்தால் அதனை அவர்கள் பெரிது பண்ணாமல் பெரு மனதோடு மன்னித்து என்னுடைய நன்றிகளை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனிதர்கள் மன உழைச்சலுக்கு உள்ளாகும்போது தாங்க முடியாது... ஏண்டா நான் இதை துவக்கினேன் என்பதை நினைத்து தூங்க முடியவில்லை... :( சகாறா அக்காவும் புத்தக வெளியீடு முடித்து சந்தோசமாக இருக்கும் தருணம் தேவையில்லாமல் தமிழச்சி அக்காவுக்கும் சகாறா அக்காவுக்கும் மன உழைச்சல்களை கொடுப்பவன் ஆகி விட்டேன்.. இருவருமே என் பிரியத்துக்கு உரியவர்கள்.. சகாறா அக்காவுடன் பேசியதில் அவர் அதை இணையத்தில் வெளிவந்த புகைப்படங்களைத்தான் இணைத்திருந்திருக்கிறார் இப்படி ஆகும் என்று கடைசி வரையோசிக்கவே இல்லை என்று மிகுந்த மன வருத்தப்பட்டு பேசினார்... தமிழச்சி அக்காவும் சகாறா அக்காவும் பேசி இதை தீர்த்திருக்கலாம் அல்லது நிர்வாகத்துக்கு றிப்போட் பண்ணி நீக்கி இருக்கலாம்.. உண்மையில் சகாறா அக்கா வஞ்சக எண்ணம் எதுவும் இல்லாமல் இணையத்தில் வந்தவற்றை இணைத்திருப்பார் எனில் நாம் அவரை பொது வெளியில் எல்லோருமாக அசிங்கப்படுத்தி விட்டோம்... :( இது என்னை பல நாட்களுக்கு நெஞ்சுக்குள் அறுத்துக்கொண்டே இருக்கும்.. தமிழச்சி அக்காவும் சகாறா அக்காவும் மனம் விட்டு பேசிக்கொள்ளுங்கள்.. இருவரிடமும் மிகுந்த சங்கடங்களுடனும் மன உழைச்சல்களுடனும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்... :(

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.