Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் புங்குடுதீவு ஒன்றியங்களுடன் இணைந்து செயல்பட, நாளை புங்குடுதீவில் நடத்தப்படும் “பகிரங்கக் கூட்டம்”..!

Featured Replies

pungudu.jpgஅன்புடையீர்,

புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒன்றுபடுவோம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒரு புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.

இதற்காக பின்வரும் கூட்டம் இடம்பெறவுள்ளது. தவறாது சமூகம் கொடுக்கும்படி அன்புடன் கேட்டு நிற்கிறோம்.

இடம்: தூய சவேரியார் ஆலய மண்டபம்.

காலம்: 12.09.2014 வெள்ளிக்கிழமை

மாலை 2.௦௦ ஆரம்பம்.

2.1௦ இறைவணக்கம்

2.20 தலைமையுரை – பங்குதந்தை.

2.30 பிரதேச வளர்ச்சியில் சமூக அமைப்புக்களின் பங்களிப்பு -

திரு குகபாலன் பேராசிரியர் அவர்கள்.

2.50 “கல்வி வளர்ச்சியே, பிரதேச வளர்ச்சி”

திரு குயின்ரஸ் – தீவக கல்விப்பணிப்பாளர்

3.30 தேநீர் இடைவேளை

3.45 அமைப்புக்கான பெயர் உருவாக்கம்

இலட்சினை உருவாக்கம்

கொடி உருவாக்கம்

யாப்பு உருவாக்கம்

4.30 நிர்வாகம் தெரிவு செய்யப்படல்

5.௦௦ புதிய தலைவரின் கன்னி உரை

5.1௦ புதிய செயலர் நன்றி உரை

5.15 படம்பிடித்தல்

உங்கள் ஒவ்வொருவரினது காத்திரமான கருத்துக்களும், பிரசன்னமும் பெறுமதியானவை. எம் மண்ணின் வளர்ச்சிக்காய் இணைவோம்.

தோழமையில்….

தகவல்.. திரு,சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் (புங்குடுதீவு தேவாலாய பங்குத்தந்தை)

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கப் பார்த்தா.. புங்குடுதீவு தனி நாடா புரியும் போல இருக்குது. :lol::D

 

(புங்குடுதீவு மக்களின் முன்மாதிரியாக வைச்சுச் சொல்லுறம். தப்பா எடுக்கப்படாது.) :)

  • கருத்துக்கள உறவுகள்

Envoyé: Sat, 30 Aug 2014 13:38:48 +0200 (CEST)

 

புலன் பெயர் உள்ளூர் புங்குடுதீவு வாழ் மக்கள் இனைய வழிக்கருத்தாடல் ஊடாக புங்குடுதீவு வாழ் மக்கள் வெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களுடன் சேர்ந்து ஓர் செயற்பாட்டினை செய்வதற்கு முயல்கின்றார்கள்: அதற்கு ஓர் சமூக நலன்சார்ந்த அமைப்பினை புங்குடுதீவில் உருவாக்க முயல்கின்றார்கள், அதற்க்கு ஓர் பெயரினத் தெரிவு செய்வதற்கு உங்களின் மனதில் தோன்றும் ஒன்றினைந்த ஓர் அமைப்புக்கான நல்ல பெயிரினைத் தேடுகின்றார்கள்.
தங்களின் கருத்துக்களும் வரவேற்கப்படும்.
நன்றி.

 

சுவிஸ் ஒன்றிய செயல்லாளர் மதி அண்ணரினால் முன்வைக்கப் பட்டுள்ள பெயர் "உள்ளக, வெளியக புங்குடுதீவு மக்கள் வளமார் சங்கம்"

*** ஏனைய சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகளும், தங்களுக்கு தோன்றும் பெயர்களை உடன் (இன்றே) எழுதி அனுப்பவும்.

ஏற்கனவே கனடா ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் குமார் அவர்களினால் "புங்குடுதீவு சங்கம்" எனும் பெயர் முன்மொழியப் பட்டுள்ளது.

லண்டன் ஒன்றியத்தின் சார்பில் அதன் ஆலோசகர் கருணைலிங்கம் அவர்களினால் "புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் -இலங்கை" எனும் பெயர் முன்மொழியப் பட்டுள்ளது.

பிரான்ஸ் ஒன்றியத்தின் சார்பில் அதன் செயலாளர் சஸ்பாநிதி  அவர்களினால் "புங்குடுதீவு ஒருங்கிணைப்புச் சங்கம்" எனும் பெயர் முன்மொழியப் பட்டுள்ளது.

இவை தொடர்பாக மேலதிக கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் உடன் எமக்கு எழுதி அனுப்பவும்... 

*இவை யாவும் புங்குடுதீவில் உள்ள புத்திஜீவிகள், பெரியோர்களுக்கு அனுப்பப்பட்டு இப்பெயர்களோ, அல்லது அவர்களால் வேறு ஏதும் பெயர்கள் முன்மொழியப்பட்டோ.. எதை வைப்பது என்று அங்குள்ளவர்களால் (புங்குடுதீவில் உள்ளவர்களால்) தீர்மானிக்கப்படும். "சொல்வது நாம், தீர்மானிப்பது அவர்கள்"

**எக்காரணம் கொண்டும் தனிநபர்களின், பெயர்கள் வைப்பது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.**

 

 

நியானி; மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளன

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு ஒன்றியம்

  • கருத்துக்கள உறவுகள்

பங்குத்தந்தை லியோவுடன் நான் ஒன்றா படித்தனான். நல்ல நண்பர்,இவரின் தமையன் லெப். அல்பிரெட் ஆ.க.வெளி சமரில் வீரச்சாவடைந்தார்.நல்லதொரு மேய்ப்பரே புங்குடுதீவுக்கு கிடைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை புங்குடுதீவில் எந்த அமைப்பும் நடைமுறையில் இல்லையா?
எதுவானாலும் புலம்பெயர்ந்தவர்கள் ஊருக்கு அளிக்கும் உதவிகள்
இந்தச் சங்கத்தினூடாகப் பராமரிக்கப்படுவது சிறந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கப் பார்த்தா.. புங்குடுதீவு தனி நாடா புரியும் போல இருக்குது. :lol::D

 

(புங்குடுதீவு மக்களின் முன்மாதிரியாக வைச்சுச் சொல்லுறம். தப்பா எடுக்கப்படாது.) :)

 

யப்பாடி.... நமக்கும் தலை சுத்துது...  :D

  • கருத்துக்கள உறவுகள்

யப்பாடி.... நமக்கும் தலை சுத்துது...  :D

தமிழீழ மீட்புப் போராட்டம் இப்ப புங்குடுதீவு மீட்பு போராட்டமாக மாறி நிற்குது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சிலவற்றை  நான் இங்கு சொல்லவேண்டியுள்ளது...

 

சிங்கப்பூராக்குவோம் என்று நாம் சொல்லவில்லை

பட்டினியற்ற பூமியாக்குவோம் என்று தான் சொல்கின்றோம்

முயல்கின்றோம்

 

எல்லாம் முடிந்தது என்று விட்டுவிட்டு  இருக்கமுடியாது

ஏனெனில் அது எமது மண்

எமது தாயகம்...

முழுத்தாயகத்தையும் நிமிர்த்துவது தான் குறி

ஆனால் அகலக்கால் வைக்க உதவி தேவை

ஆட்கள்தேவை

அது பெரும் அமைப்புக்களினால் மட்டுமே முடியும்

அதற்காக

அது நடக்கும்வரை  காத்திருக்கமுடியாது

மக்களை  கவனிக்காது விட்டுவிடமுடியாது

முயல்கிறோம்

தடைகள்

அவப்பெயர்கள்

வரலாம்

வரும்

வந்து கொண்டிருக்கு...

 

தளராது முயல்வோம்...

 

சில  வருடங்களுக்கு முன்..

(முள்ளிவாய்க்குப்பின்)

பேராசிரியர் குகநாதன் பிரான்சுக்கு வந்திருந்தார்

அவரை  சந்தித்து பேசியிருந்தோம்

 

அடுத்து

பாதர் அவர்கள்  இருமுறை  பிரான்சுக்கு வந்திருந்தார்

அவருடனும்   பேசியிருந்தோம்..

 

அங்கு

கமநல அமைப்பு

மீன்பிடி அமைப்பு

விவசாய அமைப்பு

இந்து அமைப்பு

கத்தோலிக்க அமைப்பு

பள்ளிக்கூட அமைப்பு

இசை இயல் நாடக அமைப்பு

சர்வோதயம்......   என பல அமைப்புக்கள் இருக்கின்றன

 

ஆனால் இவ்வளவு அமைப்புக்களைச்சார்ந்தவர்கள் இருந்தும்

அவர்களால் திட்டங்களை உருப்படியாகத்தரமுடியவில்லை..

 

எனவே 

உண்மையில் மக்களுக்காக உழைப்பது என்றால்

உண்மையில் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன

எமது உதவி தேவையென்றால்

எல்லோரும் ஒன்று கூடி

ஒரு சங்கத்தை உங்களுக்குள் உருவாக்கி

மக்களின் குறைகளைக்கேட்டறிந்து

ஒரு குரலில் திட்டங்களைத்தாருங்கள்

உதவுகின்றோம் என்கேட்டிருந்தோம்

 

அதுவே  பல சுற்றுக்களாக நடந்தது

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சும்  SKYPE  மூலமாக இவற்றில்  நேரடியாக பங்குபற்றி

எமது கருத்தை வைத்திருந்தோம்..

 

இன்று வெள்ளியாதலால் எம்மால் பங்குபற்றமுடியாமையை அறியத்தந்திருந்தோம்..

 

இன்று உண்மையில் புங்குடுதீவு மக்களுக்கு ஒரு பொன்நாள்...

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்

பிரிந்து நின்று நான் வேறு நீ வேறு என்பவர்களை ஒரு குடையில் கொண்டுவர நாம் பல மாதிரி போராடவேண்டி இருந்தது அதுக்கா பல சிரமம் சிக்கலை சந்தித்தோம் முடிவில் சாதித்தோம் இங்கு பேசுவதை விட எங்கு ஒரு அடித்தளம் பலமா அமைத்தால் நல்லது என்னும் ஒரு சிந்தனை திறனில் வந்ததுதான் இந்த ஒருங்கிணைப்பு ...

 

எவர் என்னவும் செய்யலாம் ஆனால் அது அங்கு உள்ள ஒரு நிர்வாகத்தின் ஊடாக அப்படி செய்தால் யாரு யாரு யாருக்கு என்ன செய்யினும் என்பதை ஒரு நிர்வாகம் இலகுவா தெளிவு படுத்தும் வீண் சண்டை வீண் வாதம் இவைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் ..

 

ஒரு நிர்வாகம் கிணறு சுத்தம் செய்தால் ,மற்ற நிர்வாகம் தொட்டி கட்டட்டும் செலவு வரவு சுகமா கையாளப்படும் கணக்கு பொதுவெளியில் வைத்து கொள்ளப்படும் இதை பார்க்கும் உதவ முன் வராத ஒதுங்கி போகும் மக்களும் சேர்த்து வருவார்கள் என்பதால் ஒருங்கிணைப்பு முக்கியம் ஆகுது இங்கு ...

 

அதை விடுத்து அவரிடம் கேள் இவரிடம் கேள் என்று இல்லாமல் போனை போட்டு அங்கயே கேட்டா பிரச்சினை முடிச்சு இல்லையா .

 

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு  :D  :icon_idea:


பங்குத்தந்தை லியோவுடன் நான் ஒன்றா படித்தனான். நல்ல நண்பர்,இவரின் தமையன் லெப். அல்பிரெட் ஆ.க.வெளி சமரில் வீரச்சாவடைந்தார்.நல்லதொரு மேய்ப்பரே புங்குடுதீவுக்கு கிடைத்துள்ளார்.

உண்மைக்கும் அண்ணே ஒரு நல்ல மனிதர் தனது சொந்த முயற்ச்சியால் கணணி வகுப்பு ஆங்கில வகுப்பு நடத்திறார் கோயிலில் ..

 

படிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல ஊக்கம் கொடுத்து நிக்கும் ஒருவரா  இருக்கிறார் .

அங்கு நிர்வாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்களும் அனைத்து வட்டாரத்தையும் சேர்ந்தவர்களாகத் தெரிவு செய்யுங்கள்.  அதேபோல், மக்களின் நலனுக்காகச் செயற்படுபவர்களாகவும் இருக்க வேண்டும்.  முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.  

  • தொடங்கியவர்

pung.meeting-000a.jpg

புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும், நிர்வாக தெரிவு நிகழ்வும் தூய சவேரியார் ஆலய முகப்பு மண்டபத்தில் 12.09.2014 அன்று (நேற்று) பிற்பகல் 2.30 மணியளவில் அருட்தந்தை சி. லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் இந்து, கிறிஸ்தவ சமய இறைவழிபாட்டுடன் ஆரம்பமானது.

மேற்படிக் கூட்டத்தில் இடையிடையே சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் இராசமாணிக்கம் இரவீந்திரன், உப செயலாளர் சுவேந்திரன் ஆகியோரும் தொலைபேசி மூலம் இணைந்து இருந்ததுடன், ஆரம்பம் முதல் இறுதிவரை “ஸ்கைப்” ஊடாக சுவிஸ் ஒன்றியத்தின் உபதலைவர் ரஞ்சன் அவர்களும் இணைந்து கருத்துக்களைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அருட்தந்தை அவர்கள், இக்கூட்டத்தின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறினார். “அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது அவ்வழைப்பினை ஏற்று வருகைதந்த அனைவரையும் வரவேற்கின்றேன்” என்று கூறி மேலும் உரையாற்றுகையில்,

“சில வருடங்களுக்கு முன்பு புங்குடுதீவு சமூக, பொருளாதார அபிவிருத்தி சங்கம் (தண்ணீர் சங்கம்) ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம் ’2030 பண்பாட்டின் தளத்தில் வளமுள்ள புங்குடுதீவு’ இதனை மாணவர்கள் ஊடாக உருவாக்குவதாகும். தனிப்பட்ட அமைப்புகளாக இயங்கி வருகின்ற நாம், அனைவரும் இணைந்து அமைக்கவிருக்கும் இவ்வமைப்பின் ஊடாக எம் மண்ணின் வளர்ச்சிக்காக புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் திட்டமிட்டு செயற்பட்டு ,வளமுள்ள மண்ணாக புங்குடுதீவை உருவாக்குவோம்”.

“அப்துல் கலாமின் வாக்கு கனவு காணுங்கள் என்பது. நாம் எம் மண்ணுக்காக கனவு காண வேண்டும். 2016ம் ஆண்டுதான் அரசாங்கம் எம் மண்ணிற்கான பாதை அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஆனால் நாம் எம்மண்ணை வளப்படுத்த அக்கறையுள்ளவர்களாக ஒன்றிணைய வேண்டும்”.

“இக்கூட்டத்திற்கான அழைப்பிதழை எமது பிரதேச செயலாளருக்கு கொடுக்கச் சென்றிருந்தபோது தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்க முடியாததால் எதிர்வரும் 16ஆம் திகதி தனது ஆலோசனையை கூறுவதாக தெரிவித்திருந்தார். இது போன்றே தீவக வலயக் கல்வி பணிப்பாளர் திரு குயின்ரஸ் அவர்களும் கூறியிருந்தார்”.

“அபிவிருத்தி செயற்பாடுகளை மக்கள் மத்தியில் செயற்படுத்த புதுவேகத்தோடு இந்த அமைப்பு செயற்பட அனைவரும் கைகொடுக்க வேண்டும்” என தெரிவித்து, “மீண்டும் அனைவரையும் வரவேற்கின்றேன்” என்று கூறி அருட்தந்தை அவர்கள் தனதுரையை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து யாப்பு உருவாக்கல், அமைப்புக்கான பெயர், இலச்சினை, கொடி, நிர்வாக குழுக்கள் தெரிவு என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. “ஊரில் இயங்கக்கூடிய பல அமைப்புக்களை அழைத்திருப்பதனால் ஒன்றுபட்டு செயற்பட வாய்ப்பாக அமைந்திருக்கின்றது” என்ற கருத்தும் இங்கு பலமாக எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து யாப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. புலம்பெயர் மக்கள் ஒன்றியத்தினால் குறிக்கப்பட்ட பெயர்கள் சில அருட்தந்தை அவர்களால் கூறப்பட்டது. அதில் எமது அமைப்பிற்கான பெயர் ‘புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியம்’ என தெரிவு செய்யப்பட்டது.

நிர்வாகம் 03 வகையான அமைப்புக்களை கொண்டது.

1. பொது சபை,

2. நிர்வாக சபை

3. போசகர் சபை.

இதில் நிர்வாக சபையின் தீர்மானத்தை போசகர் சபை அங்கீகரிக்க வேண்டும். நிர்வாக அமைப்பு இதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நிர்வாக அமைப்பில் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒன்றியங்களில் ஒருவர் எமது அமைப்புடன் இணைந்திருப்பார். ஆனால் புங்குடுதீவு அமைப்பு தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும்.

மொத்த ஒன்றிய உறுப்பினர்கள் 17 பேர். பொதுக் கூட்டத்திற்கு மூன்றில் இரண்டு பங்கினர் வருகைதர வேண்டும். நிதி நிர்வாகம் பொருளாளருடன் தலைவர் அல்லது செயலாளர் கணக்காய்வை மேற்கொள்வார்.

காலம் – 02 வருடங்களுக்கு ஒரு முறை நிர்வாகம் மாற்றப்படும்.

அமைப்புக்கான கொடி, இலச்சினை (நிறம்), கீதம் போன்றவை போட்டி ஊடாக தெரிவு செய்யப்படும்.

நிர்வாக சபை…. 

தலைவர் :- திரு. சண்முகலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்)

உப தலைவர் :- செல்வி செல்வவதனா (கூட்டுறவுச் சங்கம்)

செயலாளர் :- செல்வி யமுனாதேவி (சர்வோதய அறங்காவலர்)

உப செயலர் : தெ. வேளவேந்தன் (தபால் அதிபர்)

பொருளாளர் : சுலோசனா தனம்

நிர்வாக உறுப்பினர்கள் – வட்டார ரீதியாக…

01ம் வட்டாரம் – கை.சிறிஸ்காந்தன்

02ம் வட்டாரம் – இ.தேவதாஸ்

03ம் வட்டாரம் – சி.கலாநிதி

04ம் வட்டாரம் – தி.பரமேஸ்வரன்

05ம் வட்டாரம் -

06ம் வட்டாரம் – க.பரமேஸ்வரன்

07ம் வட்டாரம் – க.சதீபன்

08ம் வட்டாரம் -

09ம் வட்டாரம் – கனகரெட்ணம்

10ம் வட்டாரம் – வீ.சந்திரபாலன்

11ம் வட்டாரம் – ம.றஜீவன்

12ம் வட்டாரம் – நா.நாகராஜா

(விரைவில் 5ம், 8ம் வட்டாரத்துக்கும் நியமிக்கப்பட உள்ளனர்.

அதேபோன்று இவ்வமைப்புடன் இணைந்து நிர்வாக அமைப்பில் செயலாற்றக் கூடிய வகையில் வெளிநாடுகளில் உள்ள புங்குடுதீவு ஒன்றியங்களும், தத்தமது சார்பில் “தமது ஒன்றியங்களை சேர்ந்த ஒருவரை, பிரதிநிதியாக தெரிவு செய்து தரவேண்டுமெனவும், அவர் எமக்கான தொடர்பாளராக இருப்பார்” எனவும் கோரப்பட்டது.

இதனை அடுத்து புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்களின் பெயரை அதன் தலைவர் இராசமாணிக்கம் இரவீந்திரன் அவர்களால் வழங்கப்பட்டு எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதேபோல் எம்முடன் தொடர்பில் உள்ள கனடா, பிரான்ஸ், லண்டன் ஒன்றியங்களும் மிகவிரைவில் தத்தமது சார்பில் ஒருவரின் பெயரை வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டதுடன், ஏனைய வெளிநாடுகளில் உள்ள புங்குடுதீவு ஒன்றியங்களும் எம்முடன் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது.

கணக்காய்வாளராக புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் திரு. கணேஸ்வரன தெரிவு செய்யப்பட்டார்.

போசகர் சபையில் 1. அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் 2. பேராசிரியர் திரு. குகபாலன் 3. கிராம சேவகர் தி.சந்திரா 4. அதிபர் திரு. கலைநாதன் 5. குருக்கள் ஐயா வேணு போன்றவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

தொடர்ந்து ஒன்றியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற தலைவர் திரு. சண்முகலிங்கம் அவர்கள் தனது கன்னி உரையாற்றுகையில்..,

“முதலில் அனைவரையும் வரவேற்று வணக்கத்தை கூறிக்கொண்டு, இது அருட்தந்தையின் அயராத முயற்சி எனவும், சிறந்த திட்டத்தை அமுல்படுத்தி செயற்படுத்த பக்கபலமாக அருட்தந்தையும், பேராசிரியர் குகபாலன் அவர்களும் இருப்பீர்கள் எனவும் நிதி நிலவரங்கள் கணனிமயப்படுத்தப்பட்டு யாவரும் பார்க்கக் கூடிய விதத்தில் இருக்கும் என்றும், அதிபர் பணியில் இளைப்பாறியிருப்பதால் இப்பணியை நான் சிறப்புடன் செய்வேன்” எனவும் கூறினார்.

தொடர்ந்து உப தலைவர் செல்வி செல்வவதனா உரையாற்றுகையில், “எம் மண்ணின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்” என கூறினார்.

பொருளாளரான திருமதி சுலோசனா கருத்துக் கூறுகையில், “தற்போது 03 கிணறுகளை சுவிஸ் ஒன்றியத்தின் உதவியில் துப்புரவு செய்திருக்கின்றோம். தொடர்ந்தும் எமது பணிகளை முன்னெடுப்போம்” என்றார்.

அதிபர் சார்பாக திரு. பஞ்சலிங்கம், “கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தும்படியும், கல்வி, விளையாட்டு இவற்றில் கூட்டு முயற்சியாக இணைந்து செயற்படுவது சிறந்ததாகும்” என்றும் குறிப்பிட்டார்.

உப தபாலக அதிபர் திரு. க.சதீபன், “கடந்த 03 மாதங்களுக்கு முன்பு புங்குடுதீவு இளையோர் கழகம் ஒன்றை உருவாக்கி இருப்பதுடன், இப்போது உங்களுடன் இணைந்து செயற்பட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் நூறு வீதம் ஒத்துழைப்பை வழங்குவதாகவும்” கூறினார்;.

அங்கத்தவர்களில் ஒருவரான சி.கலாநிதி, “10 வீட்டுத் திட்டத்தில் உள்ள குளம் ஒன்று வீசியுடன் இணைந்திருப்பதனால் அது ஆபத்தானதாக இருக்கின்றது. மழைக்காலத்திற்கு முன்பு அதை புனரமைத்து தரும்படி வேண்டுகோள்” விடுத்திருந்தார்.

தொண்டர் ஆசிரியர் இ.தேவதாஸ், “இவ்வமைப்பானது எம் மண்ணில் சகல வளங்களையும் பெறக்கூடிய வளமான மண்ணை உருவாக்கும்” என்று கூறினார்.

பிரதேச சபை உறுப்பினர் திரு. தயாபரன், “நன்னீர் கடல்நீருடன் சேராத வண்ணம் அணைகளை அமைத்துக் கொள்வதால் கோடை காலத்தில் நிலக்கீழ் நீர் வற்றாதிருக்கலாம் எனவும் தடுப்புமனை அமைப்பது பற்றியும்” கூறினார்.

அங்கத்தவர் திரு. ஸ்ரீஸ்காந்தன், “அணைக்கட்டுக்கள் பற்றியும், விவசாயத்தை ஊக்குவிப்பது தொடர்பாகவும்” கூறினார்.

இதனை அடுத்து புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் தலைவர் இராசமாணிக்கம் இரவீந்திரன் அவர்கள் “இந்த அமைப்பு ஒற்றுமை ஒன்றையே முதலில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” எனவும் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தில் சார்பில் “ஸ்கைப்” மூலம் நேரடியாகக் கருத்து தெரிவித்த சுவிஸ்ரஞ்சன் அவர்கள் “புத்திஜீவிகள், சமயப் பெரியோர், சமூக ஆர்வலர்கள் என்று பெருமளவில் குழுமி, ஊருக்காக ஒன்றுபட்டு செயல்படுவதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும், ஒருவருக்கொருவர் தமது கருத்துக்களை, வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் முன்வைக்கின்ற போதிலும் “ஊர்” எனும் பொதுநோக்கில் `விட்டுக் கொடுப்புக்கு` முதலிடம் கொடுத்து கதைத்ததையும், செயற்பட்டதையும் பார்க்க சந்தோசமாக உள்ளது” எனவும், “அதேபோல் சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் என்னால் வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் உள்வாங்கியதுக்கு நன்றி” எனவும் தெரிவித்ததுடன்,

“திருமதி.கலாநிதி அவர்களின் கோரிக்கையை ஏற்று, அவ்வீதியால் செல்லும் மாணவர்களினதும், பொதுமக்களினதும் உயிராபத்தைக் கருத்தில் கொண்டு, மழைகாலத்துக்கு முன்பாகவே 10வீட்டுத்திட்ட (சன்காத்தானை) குளத்தை (அணைக்கட்டை) உடனடியாகப் புனரமைக்க, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் உதவி புரியும் எனவும், அதேபோல் வட்டாரத்துக்கு ஒரு கிணறு என்று பாராமல் நீங்கள் எமக்கு எழுத்து மூலம் தந்துள்ள முப்பதுக்கு மேற்பட்ட கிணறுகளை புனரமைக்கும் நடவைக்கையையும் விரைவில் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் மேற்கொள்ளும்” எனவும், இதற்காக “ஏனைய செயற்பாடுகள் அனைத்தையும எழுத்துமூலம் தரும்படியும், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்தின் தீர்க்கமான பதிலைப் பெற்றுத் தருவதாகவும்” தெரிவித்தார்.

தொடர்ந்து அருட்தந்தை அவர்கள் உரையாற்றுகையில், வெளிநாட்டு ஒன்றிய தொடர்பு முன்பிருந்தே இருப்பதாகவும், திரு.ரஞ்சன் அவர்களுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் கூறி வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததைத் தொடர்ந்து இறுதியாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வுடன் கூட்டம் நிறைவுற்றது.

நன்றி.

தகவல்… 

அருட்திரு.சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் (புங்குடுதீவு தேவாலய பங்குத்தந்தை)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,
புங்குடுதீவு மக்கள் பால் அக்கறை கொண்டு, சமூகஅக்கறை கொண்ட,

தாய்நாட்டினை நேசிக்கும்  புலன்பெயர் தாயக உறவுகளின் 
அயராத முயற்சியினால் பிறந்த "புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியம்"  அமைப்பிற்கு

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 
சார்பில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் இவ்வமைப்பானது புங்குடுதீவு மக்களின் கல்வி,பொருளாதாரம்,பாதுகாப்பு, என்பனவற்றைக் கருத்திற்கொண்டு மக்களுக்குப் பயன்படக்கூடிய குறுகிய, நீணடகாலத்திட்டங்களை வகுத்து செயற்பட வாழ்த்துகின்றோம்.

 

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் புங்குடுதீவில் பல திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றோம். அந்தவகையில் தங்கள் ஒன்றியத்தினூடாக வரும் திட்டங்கள் எமது ஒன்றியத்தில் மிகுந்த கரிசனையுடன் ஆராய்ந்து எமது நிதிநிலைக்கேற்ப உதவி செய்வோம் என்பதனை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
அந்தவகையில் எமது ஒன்றியத்துடனான தொடர்புகளுக்கான பிரதிநிதியினை விரைவில் அறியத்தருகின்றோம். 

நன்றி.

சஸ்பாநிதி.
http://www.pungudutivu.fr/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மீட்புப் போராட்டம் இப்ப புங்குடுதீவு மீட்பு போராட்டமாக மாறி நிற்குது.. :D

 

புங்கிடுதீவு ராமநாதபுர ஜமீனின் சொத்து என்று வரலாற்றை மாற்றி, கச்சதீவுடன் தமிழ்நாட்டுடன் சேர்த்துவிட வேண்டியதுதான். :)

 

சோகமென்னவெனில், 'விசு பண்ணை' இந்தியராகி(??????)  விடுவார்...! :(:o:icon_mrgreen::lol::D

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மீட்புப் போராட்டம் இப்ப புங்குடுதீவு மீட்பு போராட்டமாக மாறி நிற்குது.. :D

 

உண்மையில்  இந்தக்கேள்வி  எம்மிடையே  பலமுறை  எழுந்துள்ளது

 

ஆனால் மனதுக்கு கடினமான உண்மை என்னவென்றால்  இன்றைய நிலை இது தான்..

இதற்கு மேல் எதுவும் அசையுதில்லை

அசையமுடியாது

 

அடுத்த கட்டம்.......???

அதுவரை

இதையாவது காப்பாற்றுவோம்..........

 

தமிழனால்  கைவிடப்பட்ட எமது கிராமங்களைப்பாருங்கள் :(

அதன் பின் எம்மைப்பாருங்கள்  

நன்றி......

புங்கிடுதீவு ராமநாதபுர ஜமீனின் சொத்து என்று வரலாற்றை மாற்றி, கச்சதீவுடன் தமிழ்நாட்டுடன் சேர்த்துவிட வேண்டியதுதான். :)

 

சோகமென்னவெனில், 'விசு பண்ணை' இந்தியராகி(??????)  விடுவார்...! :(:o:icon_mrgreen::lol::D

 

தமிழ் நாட்டுடன் என்று சொல்லியிருந்தால் சந்தோசப்படடிருப்பேன்..  :D  

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

..

இந்தியாவுக்கு இதுவரை  நான் வந்ததில்லை

வரவும் மாட்டேன்

---

 

எப்பவோ மதுரை வர விருப்பமுள்ளதாக நீங்கள் யாழில் கூறிய ஞாபகம்...! :icon_idea:

அந்த திட்டம் 'அம்போ' தானா? :D:)

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவோ மதுரை வர விருப்பமுள்ளதாக நீங்கள் யாழில் கூறிய ஞாபகம்...! :icon_idea:

அந்த திட்டம் 'அம்போ' தானா? :D:)

 

 

மதுரை  எனது ஊர்

அதை இந்தியா என்றால் எப்படி???

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு நிர்வாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்களும் அனைத்து வட்டாரத்தையும் சேர்ந்தவர்களாகத் தெரிவு செய்யுங்கள்.  அதேபோல், மக்களின் நலனுக்காகச் செயற்படுபவர்களாகவும் இருக்க வேண்டும்.  முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.  

 

 

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்  வட்டாரப்பிரதிநிதிகள்....

 

1ம் வட்டாரம் - திரு. நாகரத்தினம்  அன்பமுதன்

2ம் வட்டாரம் - திருமதி. மாலினி சிவநாதன்

3ம் வட்டாரம் - திரு.  சுதன் கண்ணையா

4ம் வட்டாரம் - திரு. செல்லையா  குகதாசன்

5ம் வட்டாரம் - திரு. திவாகரன்

7ம் வட்டாரம் -  திரு. விஐயகுமார் கிருஸ்ணபிள்ளை

8ம் வட்டாரம் - திரு. ராசகுமார் தர்மலிங்கம்

9ம் வட்டாரம் - திரு. செல்வகுமார்

10ம் வட்டாரம் - திரு. யோகேஸ்வரன் 

11ம் வட்டாரம் - திரு. பீற்றர் அம்புறூஸ்

12ம் வட்டாரம் - திரு. கிருபா  நடராசா

 

(தேவையானால் இவர்களது தொலைபேசி  இலக்கங்கள் தனி  மடலில் தரப்படும்)

 

மேலதிக தகவல்களுக்கு இங்கு சென்று பார்க்கவும்..

http://www.pungudutivu.fr/

சுவிஸ் ரஞ்சனுக்கு வாழ்த்துகள் .

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மக்களின் தேவை எதுவோ அதுவே நமது சேவை களத்தில் இன்று குள புனரமைப்பு மாரி மழைக்கு முன்னர் சில வேலை வேகமா நடக்கு .

புங்குடுதீவு சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் ஆதரவுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஈச்சங்குள புனரமைப்பு வேலைகள். அடாது மழை பெய்தாலும் விடாது எம் பணி தொடரும் என்ற மன உறுதியோடு மக்களும் நிலைய உறுப்பினர்களும் மாதர் சங்க உறுப்பினர்களும் இப்பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

10710810_10204900097612897_1305668186849

10440975_10204900097932905_4065962203227

 

10712756_10204900098052908_6299414677383

10174838_10204900098372916_1663573387516

10593031_10204900104693074_2249870229334

 

10402447_10204900099132935_3477245252043

நன்றி ஜீவன் .

  • தொடங்கியவர்

pung-06.10-002-640x480.jpg“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால்” கடந்த காலத்தில் (நான்கு மாதத்துக்கு முன்னர்) அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், முதற்கட்டமாக பொதுக்கிணறுகளை தூர்வாரி சேறு, பாசி எடுத்து, தொப்பிக்கட்டு கட்டி, தளம் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, புங்குடுதீவில் அமைக்கப்பட்டுள்ள “புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத்துடன்” இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

இதன் முதல்கட்டமாக புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் சந்தையடியில் அமைந்திருக்கும் சத்திரம் கிணறு உட்பட மூன்று கிணறுகள் (கூட்டுறவுச் சங்கத்துக்கு அருகாமையில் உள்ள கிணறுகள்) கடந்த10.09.2014இல் தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது.

கடந்த10.09.2014இல் அதேபகுதியில் அமைந்திருந்த ஒரு குடிதண்ணீர் கிணறு, இரண்டு குளிக்கும் கிணறென மொத்தமாக மூன்று கிணறுகள் தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது நீங்கள் அறிந்ததே. ஆயினும் இக்கிணற்றைச் சுற்றி தளம் அமைப்பது உட்பட மேலும் சில வேலைகள் இக்கிணறுகளில் நடைபெற உள்ளது.

அதேபோல் நேற்றுமுன்தினம் (05.10.2014 அன்று) புங்குடுதீவு 10இல் மணியகாரம் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள இரண்டு கிணறுகளும், புங்குடுதீவு 12இல் அம்பலவாணர் பகுதியில் அமைந்துள்ள இரண்டு கிணறுகளும் தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது.

புங்குடுதீவு தேவாலயப் பங்குத்தந்தை திரு.சின்னதுரை லியோ ஆம்ஸ்ரோங், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுவிசில் இருந்து தனிப்பட்ட பிரயாணமாக இலங்கை சென்று இருந்த திரு.சவுந்தரராஜன், மின்சாரசபை ஊழியரும், புங்குடுதீவு சவேரியார் தேவாலய பொருளாளருமான திரு.ரிச்சேர்ட் டானியலும், திருமதி.சுலோசனா தனம், ஆகியோர் முன்னிலை வகித்து இருந்தனர்.

இவ்வண்ணம்..,

பங்குத்தந்தை அருட்திரு சி.லியோ ஆம்ஸ்ரோங் 

போஷகர்,

புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 யார் குத்தினாலும் அரசியானால் சரி. நல்லபடியாக தொடர்ந்து மக்களுக்கு நல் வாழ்வழிக்க வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

புங்குடுதீவு ப.நோ.கூ.சங்கம் பல ஆண்டுகளாக மக்களுக்கு பல இன்னல்களுக்கு மத்தியிலும் சேவை செய்து வந்தது. போர் கால சூழலிலும் மக்களுக்கான தேவைகளை திறம்பட செய்து வந்த ப.நோ.கூ.சங்கங்களில் புங்குடுதீவு சங்கமும் ஒன்று. இப்போது இச்சங்கம் பல வசதிகள் இருந்தும் சரியான ஒரு நிர்வாக அலகை ஒழுங்குபடுத்தி செயல்பட முடியாமல் ஒரு சில நபர்களின் கைகளில் இச்சங்கம் அகப்பட்டு, இன்று சங்கத்தின் உடமைகளை விற்க முற்படுகின்றார்கள்.ஆகவே புங்குடுதீவு வாழ் மக்களே ஒப்புக்கு மாரடிக்கும் கூட்டத்தை கலைத்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இருக்கும் நபர்களை உள்வாங்கி சங்கத்தை சிறந்த முறையில் இயங்க எல்லோரும் இணைவோம்.

10342418_859226920768199_130836903045616

 

10646671_859226897434868_101503063389679

  • தொடங்கியவர்

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால்” கடந்த காலத்தில் (நான்கு மாதத்துக்கு முன்னர்) அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், முதற்கட்டமாக பொதுக்கிணறுகளை தூர்வாரி சேறு, பாசி எடுத்து, தொப்பிக்கட்டு கட்டி, தளம் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, புங்குடுதீவில் அமைக்கப்பட்டுள்ள “புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத்துடன்” இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 10.09.2014இல் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் சந்தையடியில் அமைந்திருக்கும் சத்திரம் கிணறு உட்பட மூன்று கிணறுகள் (கூட்டுறவுச் சங்கத்துக்கு அருகாமையில் உள்ள கிணறுகள்) கடந்த10.09.2014இல் தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது.

இதையடுத்து 05.10.2014 அன்று புங்குடுதீவு 10இல் மணியகாரம் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள இரண்டு கிணறுகளும், புங்குடுதீவு 12இல் அம்பலவாணர் அரங்கு பகுதியில் அமைந்துள்ள இரண்டு கிணறுகளும் தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது.

இதையடுத்து 06.10.2014 அன்று புங்குடுதீவு 10ம் வட்டாரத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலடியில் உள்ள இரண்டு வயல்வெளிக் கிணறுகளும் தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது.

அத்துடன் புங்குடுதீவு 9ம், 10ம் வட்டாரத்தை உள்ளடக்கிய மாவுதடல் பகுதியில் அமைந்துள்ள இரண்டு கிணறுகளும் (06.10.2014 அன்று) தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது.

அதேபோல் (06.10.2014 அன்று) புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை உள்ளடக்கிய வல்லன் கிராம முன்னேற்றக் கழகத்தால் அமைக்கப்பட்ட இரண்டு கிணறுகள் தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது.

இதையடுத்து (07.10.2014 அன்று) புங்குடுதீவு 9இல் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவிலடிக் கிணறு, புங்குடுதீவு 11இல் அமைந்துள்ள தல்லமி குணமாலை வாத்தியார் கிணறு, புங்குடுதீவு 7இல் அமைந்துள்ள மடத்துவெளி முருகன் கோயிலடிக் கிணறு தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது.

இதையடுத்து மீண்டும் நேற்றுமுன்தினம், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த சங்கத்தாகேணி எனும் இடத்தில் அமைந்துள்ள இரண்டு குடிநீர்க் கிணறும், இரண்டு குளிக்கும் நீர்க் கிணறும் தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைக்கப் பட்டது.

இதனை “புங்குடுதீவு சன்ஸ்ரார்” விளையாட்டுக் கழகப் பொறுப்பாளர் திருமதி.கலாஅக்கா தலைமையில் “புங்குடுதீவு சன்ஸ்ரார்” உறுப்பினர்கள், இன்றையதினம் தூர்வாரி, சேறு, பாசி எடுத்து புனரமைத்தனர். (மேற்படி கிணறுகள் நான்கும் இவர்களால் “கோரம்” கோரப்பட்டது குறிப்பிடத் தக்கது.)

இவ்வண்ணம்..,

பங்குத்தந்தை அருட்திரு சி.லியோ ஆம்ஸ்ரோங்

போஷகர்,

புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியம்.

pung.Sangattaanai-006a-640x480.jpg

pung.Sangattaanai-013-640x480.jpg

10153078_358605270980793_556036415090210

  • தொடங்கியவர்

புங்குடுதீவு ‘சொக்கலிங்கம் அக்கடமி’யின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, ‘விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்வுகள்..

மேற்படி ‘சொக்கலிங்கம் அக்கடமி’ என்கிற இலவச கல்வி நிலையத்தின் சார்பில், “உலக சிறுவர் தினத்தினையும், நவராத்திரி விழாவினையும்” முன்னிட்டு கடந்த 04.10.2014 சனிக்கிழமை அன்று ‘புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தின் ஜே-26 கிராமப் பிரிவிலுள்ள “சொக்கலிங்கம் அக்கடமி”யால் ஆரம்பிக்கப்பட்ட “நந்தவனம் சிறுவர் கழகத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு மைதானத்தில் கலை நிகழ்வுகளும், விளையாட்டுப் போட்டியும், சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

“நந்தவனம் சிறுவர் கழகத்தின்” தலைவர் திரு. அருள்ராசா மெண்டன் பயஸ் மற்றும் செயலாளர் செல்வி தேவதாஸ் மேரிகொன்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், மேற்படி கலைநிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டன.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புங்குடுதீவு தேவாலய பங்குத்தந்தை அருட்திரு சின்னத்துரை லியோ ஆம்ஷ்ரோங் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் ஜெசாட் நிறுவன தீவுப் பகுதிக்கு பொறுப்பான திரு. நதீஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி போட்டிகளுக்கு மத்தியஸ்தர்களாக செல்வி.கிருஷ்ணமூர்த்தி ஜீவிதா, செல்வி சூரியகுமார் கஜலக்ஷி, செல்வி அன்ரா ரெக்ஷி ஆகியோர் கடமையாற்றியதுடன், அவர்களுடன் உதவியாளர்களாக திருமதி அமலரட்ணம் டெலா குணவதி, செல்வி நடராஜா பிருந்தா, திருமதி சத்தியசீலன் கோமேஸ்வரி, திரு. ஓங்காரநாதன் ஜெகதாஸ், திரு திலீப்குமார் ஆகியோரும் பணியாற்றியிருந்தனர். குறிப்பாக விளையாட்டுக்களுக்கு பொறுப்பாக செல்வி மேக்டலின் டயானா, திருமதி நடராஜா சத்தியதேவி, திருமதி சுலோசனா தனம் ஆகியோர் கடமையாற்றியதோடு, மேற்படி விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலி ஒளி அமைப்புக்கான உதவியை திரு. சுரேஷ் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய பிள்ளைகளுக்கும், நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டதுடன், குடும்பத் தலைவிகளுக்கான ஓட்டப் போட்டிகள், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான ஓட்டப் போட்டிகளும் இடம்பெற்று அவர்களுக்கான பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள், நாட்டிய நடன நிகழ்வுகளை “சொக்கலிங்கம் அக்கடமி”யில் ஆசிரியைகளாக பணியாற்றி வருகின்ற செல்வி காஞ்சனா றோஸஸ் அவர்களும் திருமதி ரூபிகா திலீப்குமார் அவர்களும் நெறியாள்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வந்து கலந்து கொண்டிருந்த புங்குடுதீவு தேவாலய பங்குத்தந்தை அருட்திரு சின்னத்துரை லியோ ஆம்ஷ்ரோங் அவர்கள் உரையாற்றுகையில்..,

“பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், புலம்பெயர்ந்து வாழும் சொக்கலிங்கம் அவர்களின் குடும்ப உறவுகள், இந்த இலவசக் கல்விச் சேவையினை பிள்ளைகளுக்காக ஆற்றி வருகின்றனர். இந் நிலையில், இங்கு கல்வி கற்கின்ற மாணவ, மாணவியரும் தமது கல்வியினை திறம்படப் பயின்று வெற்றி பெறுவதே, அவர்கள் செய்த சேவைக்கு மதிப்பளிப்பதாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து, “சொக்கலிங்கம் அக்கடமி”யின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகின்ற திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் உரையாற்றுகையில்..,

இந்நிகழ்விற்கு வருகை தந்து கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் “விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான மற்றும் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கான அன்றையதின அனைத்து செலவுகளையும், சொக்கலிங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியான பரமகுமார் விஜயகுமாரியின் மகனான செல்வன் கிசாந்த் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஏற்றுக் கொண்டதையிட்டு அக்குடும்பத்தினருக்கும்; மிகுந்த நன்றியினைத்” தெரிவித்துக் கொண்டார்.

மேலும், “இதுபோன்ற நல்லதொரு நிகழ்ச்சியினையும், விளையாட்டுப் போட்டியினையும் நடாத்தியமைக்காக புங்குடுதீவு சொக்கலிங்கம் இலவச கல்வி நிலையத்திற்கும், சொக்கலிங்கம் குடும்ப உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதாகவும், எதிர்காலத்திலும் சிறுவர்களுக்கான கல்வி, விளையாட்டுச் சேவையை தொடர்ந்தும், மனம்கோளாது சொக்கலிங்கம் அவர்களின் குடும்ப வாரிசுகள் செய்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என உறுதிபட நம்புகிறேன்” எனவும் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி “சொக்கலிங்கம் அக்கடமி”யில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் மாலைநேர இலவசக் கல்வி கற்பிக்கப்படுவதுடன், வெள்ளிக்கிழமைகளில் நாட்டிய நடன பயிற்சி வகுப்புகளும், ஒவ்வொறு ஞாயிறு தினங்களிலும் மதிய உணவுடன் அறநெறிப் பாடசாலையும் நடாத்தப்பட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இவ்வண்ணம்…

திருமதி. தனபாலன் சுலோசனாம்பிகை

புங்குடுதீவு.

pung.hisant-001a-640x360.jpg

pung.hisant-004-640x360.jpg

 

pung.hisant-008-640x360.jpg

pung.hisant-013-640x360.jpg

pung.hisant-021-640x360.jpg

pung.hisant-022-640x360.jpg

pung.hisant-034-640x480.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.