Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடுத் திட்டத்துக்குப் பதிலாக கடல்நீரை குடிதண்ணீராக மாற்றும் திட்டம் குறித்து இன்று ஆராய்வு

Featured Replies

ingaranesan987678.jpg

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து உயர்மட்டக் குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்ந்தது.
 
வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திட்ட நிதி வழங்குநர்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களான குருகுலராஜா, சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் எடுத்துவரும் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு மாற்றீடாக கடல்நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டத்துக்கு உதவுமாறு வட மாகாண சபை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருந்தது. இதன்பின்னர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை திட்டத்தை மாற்றியமைத்து கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்ட அறிக்கையை வட மாகாண சபையிடம் சமர்ப்பித்திருந்தது.
 
இன்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு வடமாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஐங்கரநேசனும் ஆதரவு தெரிவித்தார். எனினும் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தில் இன்னும் சில திருத்தங்கள் செய்யவேண்டி இருப்பதால் இம்மாத இறுதிக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு வட மாகாண சபை தனது கருத்துக்களை அனுப்பிவைக்கும் என இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் தொடர்பாக திட்டமிடுதல் மற்றும் செயற்படுத்தலில் வட மாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இணக்கம் தெரிவித்தது. -
 
http://malarum.com/article/tam/2014/09/16/5486/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html#sthash.jKF8Eoin.dpuf
 
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நாங்க அப்பவே சொன்னோம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் வாசிக்கப்படுகுது போல. :)

நல்ல யோசனையும் கூட..! தகுந்த திட்டமிடலுடன் ஆரம்பிக்கப்பட்டால்.. மக்களுக்கு சிறப்பு நிச்சயம் வரும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திட்டம். ஆனால் யாழ் கடனீரேரியை நன்னீராக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்த படணும். நிலத்தடி நீர் மிக முக்கியம். தோட்டத்துக்கு கடல் நீரை நன்னீராக்கி ஊத்துவது கட்டுபடியாகாது.

மிகவும் நடைமுறைச் செலவு கூடிய திட்டம். உயர் அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே கடல் நீர் மென்சவ்வினூடாக நன்னீராக வடிகட்டப் படுகிறது. இந்த உயர் அழுத்தம் உருவாக்க அதிக மின் சக்தி செலவாகும்.
 
அயனமண்டல பிரதேசத்தில் உள்ள யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு மழை நீரை சேகரிக்கும் திட்டங்களே பொறுத்தமானவை.
 
அவுஸ் போன்ற பணம் படைத்த நாடுகளே இத்தகைய திட்டங்களை ஒரு எமர்ஜன்ஸி திட்டங்களாத்தான் வைத்திருக்கின்றன. அவர்களின் முதலாவது நீர் திட்டம் மழை நீரை சேகரிப்பது தான். இரண்டு வருட மழை நீர் சேகரிப்பு வைத்துள்ளார்கள். மழை பொய்த்து சேகரிப்பு அளவு 6 மாதங்கள் மட்டுமே போதுமானதாக மாறும் போது இந்த எமர்ஜன்ஸி திட்டம் உடனடியாக அமுழுக்கு வரும். அப்போதுதான் இந்த கடல் நீர் சுத்திகரிப்பு ஆலையை கட்டவே ஆரம்பிப்பார்கள்!! ( 6 மாதத்தில் கட்டி முடித்து நீர் சுத்திகரிக்க ஆரம்பிக்கும் போது நீர் சேமிப்பும் முடியும் தருவாயில் இருக்கும்)
  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடு உபரி நீரை தருவது தான் பொருத்தமாக இருக்கும் ..... மறுக்கும் பட்சத்தில் யாழ்ப்பாண மக்கள் மாபெரும் போராட்டத்திற்கு தயாராக வேண்டும் .....சிங்களவனே கிழக்கு மாகாணத்தில் தன்னுடைய பிரதேச குளங்களில் இருந்து தண்ணி குடுக்கும் போது இவைக்கு என்ன பிரச்சனை?

ஐய்யோ கிளம்பிட்டாங்க  :(  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

"இரணைமடுக்குளத்திலிருந்து தண்ணீர் பெற்றுக்கொள்வதற்கு அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு"

எனும் செய்தியைத் தவிர்க்கவும்.

இப்போது வன்னி நிலப்பரப்பின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான இரணைமடு உட்பட அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டுவிட்டன.

சாதாரணமாக கால்நடைகளுக்கே குடிநீர் கிடைப்பது அரிதாக உள்ளது.

சுண்டல் நானும் யாழ் நகர்ப்பகுதியில் வாழ்ந்தவந்தான் அப்போ ஒன்று செய்வோமா உங்களது தலைமையில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை யாழ்குடாநாட்டில் ஒழுங்குசெய்வோமா?

அல்லது நீங்கள் வாழும் அவுஸ்ரேலியாவில் ஒரு ஆயிரம்பேருடன்கூடிய அறிமுக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்யுங்கோவன் ஏலுமெண்டால் நானும் வாறன்.

யாழ்குடாநாடே கூடிநின்று கூத்தடித்துக் கும்மியடிச்சாலும் இரணைமடுவிலிருந்தோ அன்றேல் வன்னியின் எந்தப்பிரதேசத்திலிருந்தோ தண்ணீர் கொடுக்கமுடியாது.

உங்களால முடிஞ்சதைச் செய்யுங்கோ.

சுண்டல், முடிஞ்சால் "உங்கடை" அவுஸ் பிரதமரிடம் ஏதாவது உதவி கேட்டுப்பாருங்கோவன், நீங்கள்தானே அவுஸுடன் அந்தமாதிரி ஒன்றிப்போனீர்கள். நீங்கள் சொன்னால் செய்தாலும் செய்வினம்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

இரணை மடுவில் இருந்து தண்ணி கொண்டுவாறது எப்பிடி என்று அவர்களுக்கு தெரியும்.... வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் இலங்கை அரசு நிபுணர்களே ஆராய்ந்து அறிக்கை சமர்பித்து விட்டார்கள் வன்னி மக்கள் பாதிக்க பட போறதில்லை என்று உங்களுக்கு என்ன பிரச்சனை?

இதுக்கு ஐங்கரநேசன் எதிரா இருந்தா அடுத்த வாட்டி யாழ்ப்பாணத்தில போட்டியிட சீட்டே கிடைக்காது.... தெரிவு செய்த மக்களுக்கு கொஞ்சம் விசுவாசமா இருக்கட்டும்....

ஸ்ரீ தரன் எதிர்த்தால் எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சி தலைவர் ஆகும் கனவு கனவாகவே போய்டும்....

இது இலங்கை அரசாங்கத்தின் திட்டம்

இரணைமடுக்கு குறுக்கே நீங்கள் படுத்து கிடந்தாலும் வார தண்ணி வரும்... அதுக்கான பணிகளில் யாழின் முக்கிய அதிகாரிகள் பல்வேறு மட்டங்களில் இருந்து செயல்ப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடுத் திட்டத்துக்குப் பதிலாக கடல்நீரை குடிதண்ணீராக மாற்றும் திட்டம் குறித்து இன்று ஆராய்வு

இந்த  திட்டம் பற்றி  ஏற்கனவே  இங்கு எழுதியுள்ளேன்..

இந்த திட்டம்  ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால்

எமது ஊரில் அது  நிறைவேற்றப்படும்..

அதற்கு எந்த வங்கியையோ

வெளிநாட்டு உள்நாட்டு உதவிகளையோ எதிர்பார்த்து நில்லாது

எமது  ஊர் மக்களின் உதவியுடன் ஒன்றியங்கள் இதைச்செய்து முடிக்கும்

.மாகாண  அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் உள்ளோம்...

  • கருத்துக்கள உறவுகள்

இரணை மடுவில் இருந்து தண்ணி கொண்டுவாறது எப்பிடி என்று அவர்களுக்கு தெரியும்.... வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் இலங்கை அரசு நிபுணர்களே ஆராய்ந்து அறிக்கை சமர்பித்து விட்டார்கள் வன்னி மக்கள் பாதிக்க பட போறதில்லை என்று உங்களுக்கு என்ன பிரச்சனை?

இதுக்கு ஐங்கரநேசன் எதிரா இருந்தா அடுத்த வாட்டி யாழ்ப்பாணத்தில போட்டியிட சீட்டே கிடைக்காது.... தெரிவு செய்த மக்களுக்கு கொஞ்சம் விசுவாசமா இருக்கட்டும்....

ஸ்ரீ தரன் எதிர்த்தால் எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சி தலைவர் ஆகும் கனவு கனவாகவே போய்டும்....

இது இலங்கை அரசாங்கத்தின் திட்டம்

இரணைமடுக்கு குறுக்கே நீங்கள் படுத்து கிடந்தாலும் வார தண்ணி வரும்... அதுக்கான பணிகளில் யாழின் முக்கிய அதிகாரிகள் பல்வேறு மட்டங்களில் இருந்து செயல்ப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.....

அப்புறம்

தருவீங்களா?

திறப்பீர்களா?

எத்தனை கலன்கள்??..

என காவேரி  நீர்போல

இதுவும் காணல் நீராகும்...... :( 

எவரிலும் தங்கியிராத விடுதலை வேண்டும் தம்பி  காண்.. :icon_idea:

சுண்டல், இலங்கை அரசின் பிரித்தாளும் செயல்களுக்கு கருத்து மட்டத்தில் என்றில் இருந்து ஆதரவு கொடுக்கத் தொடங்கினீர்கள்?

இரணைமடு நீரை யாழுக்கு அனுப்புவது என்பதே வன்னி மக்களுக்கும் யாழ் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்க இலங்கை அரசு போட்ட ஒரு நுட்பமான திட்டம்.

இயக்கங்களுக்கிடையிலான மோதல்,  பின் முஸ்லிம்களுடன் மோதல், பின் வடக்கு / கிழக்கு மாகாணத்தில்   பிரதேசவாதத்தினை தீவிரப்படுத்தி அதன் மூலம் விடுதலைப் போராட்டத்தினை பலகீனப்படுத்தல் போன்ற அனைத்து திட்டங்களுக்கும் நாம் முட்டாள்தனமாக அகப்பட்டு மிகப் பலகீனமாகிப் போய் படுதோல்வியைச் சந்தித்தது போன்றே இத்திட்டத்திற்கான ஆதரவும் இறுதியில் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடு உபரி நீரை தருவது தான் பொருத்தமாக இருக்கும் ..... மறுக்கும் பட்சத்தில் யாழ்ப்பாண மக்கள் மாபெரும் போராட்டத்திற்கு தயாராக வேண்டும் .....சிங்களவனே கிழக்கு மாகாணத்தில் தன்னுடைய பிரதேச குளங்களில் இருந்து தண்ணி குடுக்கும் போது இவைக்கு என்ன பிரச்சனை?

இரணைமடுக்குளத்தில இப்ப மாடு மேய்க்கிறார்கள்,வாறியலா தம்பி மேய்ப்பம்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இரணைமடுத் திட்டத்துக்குப் பதிலாக கடல்நீரை குடிதண்ணீராக மாற்றும் திட்டம் குறித்து இன்று ஆராய்வு

வரண்ட பூமியிலேயே வளம் கண்டவன் யாழ்ப்பாணத்தான்......அதிலை உப்புத்தண்ணியும் நன்னீராய் வருமெண்டால் அவனை ஏணிவைச்சாலும் எட்டிப்பிடிக்கேலாது........ ஆகவே சிங்களவன் விடமாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

சரிப்பா எங்களுக்கு உங்க தண்ணியும் வேண்டாம் உங்க உறவும் வேண்டாம் ....எங்களுக்கு எங்க பிரதேசத்துக்கு எப்பிடி தண்ணி கொண்டுவாரதெண்டு தெரியும் wait n see

மிகவும் நடைமுறைச் செலவு கூடிய திட்டம். உயர் அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே கடல் நீர் மென்சவ்வினூடாக நன்னீராக வடிகட்டப் படுகிறது. இந்த உயர் அழுத்தம் உருவாக்க அதிக மின் சக்தி செலவாகும்.

அயனமண்டல பிரதேசத்தில் உள்ள யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு மழை நீரை சேகரிக்கும் திட்டங்களே பொறுத்தமானவை.

அவுஸ் போன்ற பணம் படைத்த நாடுகளே இத்தகைய திட்டங்களை ஒரு எமர்ஜன்ஸி திட்டங்களாத்தான் வைத்திருக்கின்றன. அவர்களின் முதலாவது நீர் திட்டம் மழை நீரை சேகரிப்பது தான். இரண்டு வருட மழை நீர் சேகரிப்பு வைத்துள்ளார்கள். மழை பொய்த்து சேகரிப்பு அளவு 6 மாதங்கள் மட்டுமே போதுமானதாக மாறும் போது இந்த எமர்ஜன்ஸி திட்டம் உடனடியாக அமுழுக்கு வரும். அப்போதுதான் இந்த கடல் நீர் சுத்திகரிப்பு ஆலையை கட்டவே ஆரம்பிப்பார்கள்!! ( 6 மாதத்தில் கட்டி முடித்து நீர் சுத்திகரிக்க ஆரம்பிக்கும் போது நீர் சேமிப்பும் முடியும் தருவாயில் இருக்கும்)

உண்மையில் நல்ல தொரு அபிப்பிராயம்....

அதில் எனக்கு ஒரு சந்தேகம்... ?? தெரிந்தால் பதில் தாருங்கள்...

இதில் நடை முறை சிக்கலாக இருப்பது வலிகாமம் தவிர்ந்த தென்மராட்சி , வடமராட்சி பிரதேசங்கள் எல்லாம் சுண்ண பாறைகளை கொண்டு இருந்தாலும்( வெள்ளை) குருமணல் கொண்ட பிரதேசங்கள்... அங்கு நிலத்தடி நீர் உவர் தன்மை கொண்டு இருக்கிறது... குடி தண்ணீருக்கு கிணறுகளில் தண்ணீர் இருந்தாலும் நல்ல குடி தண்ணீருக்கு அலையும் நிலை தொடர்ந்தும் இருக்கிறது...

இரண்டாவது மணல் மேல் சூரிய ஒளி படாமல் இருக்க இருந்த பெருமரங்களான பனை , தென்னை , நாவல் போண்ற பிரதேச மரங்கள் எல்லாம் அழிந்து போய் வனாந்தரமாகவும் வெளிகளாகவும் இருக்கிறதாக சொல்கிறார்கள்... இதில் வெய்யில் காலங்களில் நிலத்தடி நீர் வேகமாக நீராவியாகி வற்றி போக முன்நேற்பாடுகளாக ஆவன செய்ய வேண்டியதில்லையா...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வருஷம் 300 நாளும் நொய் நொய் என்று மழை விழும் லண்டனிலேயே வீட்டை உடைச்சிகட்ட புது பிளானை கீறி கவுன்சிலிடம் அனுமதி கேட்க்க போனால் கார்டன் பக்கம் மழை நீர் சேகரிப்பு இல்லாதபடியால் பிளானை கான்சல் பன்னிவிட்டாங்கள் என நண்பர் புலம்பிக்கொன்டு இருக்கிறார் . மழை நீர் சேகரிப்பு முறைகளை மக்களிடம் கட்டாயபடுத்தபடும் பொழுது நிலக்கீழ் நன்னீர் பாதுகாக்கபடும் ஆட்ச்சியில் இருப்பவர்கள்  எப்போதுமே மக்கள் இன்னெரு இடத்தில் எதிர்பார்த்து வாழ சந்தர்ப்பங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவார்கள் ஏனெனில் அவர்களின் நீண்ட அரசியல் லாப அறுவடைகள்.

உண்மையில் நல்ல தொரு அபிப்பிராயம்....

அதில் எனக்கு ஒரு சந்தேகம்... ?? தெரிந்தால் பதில் தாருங்கள்...

இதில் நடை முறை சிக்கலாக இருப்பது வலிகாமம் தவிர்ந்த தென்மராட்சி , வடமராட்சி பிரதேசங்கள் எல்லாம் சுண்ண பாறைகளை கொண்டு இருந்தாலும்( வெள்ளை) குருமணல் கொண்ட பிரதேசங்கள்... அங்கு நிலத்தடி நீர் உவர் தன்மை கொண்டு இருக்கிறது... குடி தண்ணீருக்கு கிணறுகளில் தண்ணீர் இருந்தாலும் நல்ல குடி தண்ணீருக்கு அலையும் நிலை தொடர்ந்தும் இருக்கிறது...

இரண்டாவது மணல் மேல் சூரிய ஒளி படாமல் இருக்க இருந்த பெருமரங்களான பனை , தென்னை , நாவல் போண்ற பிரதேச மரங்கள் எல்லாம் அழிந்து போய் வனாந்தரமாகவும் வெளிகளாகவும் இருக்கிறதாக சொல்கிறார்கள்... இதில் வெய்யில் காலங்களில் நிலத்தடி நீர் வேகமாக நீராவியாகி வற்றி போக முன்நேற்பாடுகளாக ஆவன செய்ய வேண்டியதில்லையா...

மழை நீர் சேகரிப்பு என்பது வீடுகளில் மேற்கொள்ளும் நடவடிக்கை மட்டும் அல்ல. 
 
இதை ஒரு பெரிய அளவிலான திட்டமாகத் தான் சொன்னேன். 
 
யாழ்பாணத்தின் மேல் விழும் மழை வீழ்ச்சியின் பெரும்பகுதி கடலினுள் ஓடுகிறது. இதை பொறுத்தமான முறையில் திசை திருப்பி யாழின் மத்தியில் இருக்கும் கடல் நீர் ஏரியில் சேகரிப்பது தான். இது பழைய திட்டம் தான். ஆனால் பழைய திட்டம் ஏரியை நன்னீராக்குவது பற்றியது. இத்திட்டம் நீரை சேகரிப்பது பற்றியது.
 
இதற்கு மூன்று முக்கிய மான வேலைகள் செய்யப்பட வேண்டும்.
  1. ஏரியின் தொண்டமானாறு, கைதடிப்பகுதிகளில் கடலை அண்டிய இடங்கள் கடல் நீர் ஊறுவதை தடுக்கும் வகையில் அகலாமாக மண்ணால் நிரவப்பட வேண்டும். (சீமேந்து அணைகளினால் மீண்டும் கடல் நீர் உள்ளே ஊறும்)  
  2. ஏரி இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும். இந்த மண்ணையே பாவித்து மேற் சொன்ன பகுதிகள் நிரவப்படலாம். 
  3. கால்வாய்கள் ஏரிய நோக்கி அமைக்கப்பட வேண்டும்.
 
இதன் மூலம் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி ஒரு catchment area ஆக‌மாறும்.
 
6 மாதங்களிற்குள் இதை முடிக்கலாம். 10 - 20 கோடி (ரூபா) செலவாகலாம்.
 
இது மழை நீர் சேகரிக்கும் திட்டம்.
  • கருத்துக்கள உறவுகள்

10650018_10204728916486700_5245550948884

10612699_10204728917086715_2208471864671

10396294_10204728918806758_6501231997497

Edited by nunavilan

  • தொடங்கியவர்

நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் அறுவடை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144183

Edited by Athavan CH

மழை நீர் சேகரிப்பு என்பது வீடுகளில் மேற்கொள்ளும் நடவடிக்கை மட்டும் அல்ல. 

இதை ஒரு பெரிய அளவிலான திட்டமாகத் தான் சொன்னேன். 

யாழ்பாணத்தின் மேல் விழும் மழை வீழ்ச்சியின் பெரும்பகுதி கடலினுள் ஓடுகிறது. இதை பொறுத்தமான முறையில் திசை திருப்பி யாழின் மத்தியில் இருக்கும் கடல் நீர் ஏரியில் சேகரிப்பது தான். இது பழைய திட்டம் தான். ஆனால் பழைய திட்டம் ஏரியை நன்னீராக்குவது பற்றியது. இத்திட்டம் நீரை சேகரிப்பது பற்றியது.

இதற்கு மூன்று முக்கிய மான வேலைகள் செய்யப்பட வேண்டும்.

  • ஏரியின் தொண்டமானாறு, கைதடிப்பகுதிகளில் கடலை அண்டிய இடங்கள் கடல் நீர் ஊறுவதை தடுக்கும் வகையில் அகலாமாக மண்ணால் நிரவப்பட வேண்டும். (சீமேந்து அணைகளினால் மீண்டும் கடல் நீர் உள்ளே ஊறும்)  
  • ஏரி இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும். இந்த மண்ணையே பாவித்து மேற் சொன்ன பகுதிகள் நிரவப்படலாம். 
  • கால்வாய்கள் ஏரிய நோக்கி அமைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி ஒரு catchment area ஆக‌மாறும்.

6 மாதங்களிற்குள் இதை முடிக்கலாம். 10 - 20 கோடி (ரூபா) செலவாகலாம்.

இது மழை நீர் சேகரிக்கும் திட்டம்.

நண்றி..

மழை நீர் வடிகால்கள் அமைத்தால் கழிவு நீர் கலக்காமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்... நீங்கள் சொல்வதை பார்த்த போது ஒருகாலத்தில் சேறும் சகதியுமாக இருந்த யாழ் ஆரிய குளம் மற்றும் புல்லுக்குளம் தான் ஞாபகத்தில் ஏனோ வந்தது...

மற்றும் அரியாலைமுனைப்பதில் சிறுகடல் உப்பு செரிமானம் உள்ள நீர் உள்ளே நாவற்குழி கைதடி கோப்பாய் பகுதிகளுக்கு வராதபடி அணை கட்டி உப்பு உற்பத்தி செய்யலாம்.. யில் கைதடி , கோப்பாய், பகுதிகளின் கரைகளை அண்டி நெல்லின் உமியும் சாம்பலும் கொண்டு வந்து கொட்டுவதின் மூலம் மண்ணின் உவர் தன்மையை நீக்க முடியும் எண்று தமிழீழ பொருண்மிய கண்காட்சி ஒன்றில் சொன்னார்கள்...

இதன் நடைமுறை சாத்தியம் என்ன...? சும்மா அறியும் ஆவலில் கேக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

மழை நீர் சேகரிப்பு என்பது வீடுகளில் மேற்கொள்ளும் நடவடிக்கை மட்டும் அல்ல. 
 
இதை ஒரு பெரிய அளவிலான திட்டமாகத் தான் சொன்னேன். 
 
யாழ்பாணத்தின் மேல் விழும் மழை வீழ்ச்சியின் பெரும்பகுதி கடலினுள் ஓடுகிறது. இதை பொறுத்தமான முறையில் திசை திருப்பி யாழின் மத்தியில் இருக்கும் கடல் நீர் ஏரியில் சேகரிப்பது தான். இது பழைய திட்டம் தான். ஆனால் பழைய திட்டம் ஏரியை நன்னீராக்குவது பற்றியது. இத்திட்டம் நீரை சேகரிப்பது பற்றியது.
 
இதற்கு மூன்று முக்கிய மான வேலைகள் செய்யப்பட வேண்டும்.
  1. ஏரியின் தொண்டமானாறு, கைதடிப்பகுதிகளில் கடலை அண்டிய இடங்கள் கடல் நீர் ஊறுவதை தடுக்கும் வகையில் அகலாமாக மண்ணால் நிரவப்பட வேண்டும். (சீமேந்து அணைகளினால் மீண்டும் கடல் நீர் உள்ளே ஊறும்)  
  2. ஏரி இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும். இந்த மண்ணையே பாவித்து மேற் சொன்ன பகுதிகள் நிரவப்படலாம். 
  3. கால்வாய்கள் ஏரிய நோக்கி அமைக்கப்பட வேண்டும்.
 
இதன் மூலம் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி ஒரு catchment area ஆக‌மாறும்.
 
6 மாதங்களிற்குள் இதை முடிக்கலாம். 10 - 20 கோடி (ரூபா) செலவாகலாம்.
 
இது மழை நீர் சேகரிக்கும் திட்டம்.

நல்லதொரு கருத்தை முன் வைத்திருக்கின்றீர்கள்..

தண்ணிப்பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்ட மண்ணைச்சார்ந்தவன் என்ற ரீதியிலும்

புலம் பெயர்ந்த மண்ணில் அதற்கான செயற்பாடுகளில் இருப்பவன்  என்ற ரீதியிலும்

இது பற்றி  சில விடயங்களைச்சொல்லலாம் என நினைக்கின்றேன்..

சுற்றிவர பெரும் கடல்களால் சூழப்பட்ட தீவு என்பதாலும்

மேட்டுப்பிரதேசம் என்பதாலும்

கீழே கொழுக்கி  கல்லுப்பூமி  என்பதாலும்

எமது மழைநீர் வடிந்து கடலுக்குள் சென்றுவிடுகிறது..

இதை தடுக்க பல வழிகளிலும் முயற்சித்து

தோற்ற நிலையே  தொடர்கிறது..

இதில் சர்வோதய அமைப்பாளர் தொண்டர் திருநாவுக்கரசு அவர்கள் எனது கண் முன்னாலேயே  பல முயற்சிகளை  எடுத்திருந்தார்.

ஆனால் அவர் கட்டிய  அணைகளை வெள்ளம் வீட்டுக்குள் வந்துவிடும் என்பதால் மக்கள் ஒரு அளவுக்கு மேல் அணையை உடைத்து திறந்து விட்டுவிடுவார்கள்.

குளங்களை  சேறு எடுத்தல்

ஆளப்படுத்தல் சம்பந்தமாக வேலை செய்தபோது

சேறு எடுக்கமட்டுமே எம்மால் முடிந்தது

ஒரு அளவுக்கு மேல் ஆழப்படுத்தமுடியாது...

அப்படி செய்வது என்றால் ஒவ்வொரு குளத்துக்கும் பெரும் செலவு (25 லட்சம்) ஏற்படும் என கணிப்பீடு ஒன்றை  பெற்றிருந்தோம்.. 

ஆனால் ஒவ்வொன்றாக செய்யும் திட்டம் உள்ளது.

அடுத்து

மழை நீரைச்சேமிக்கும் திட்டம் தொடர்பாக

எமது யாழ் பல்கலைக்கழகம்  மற்றும் இலங்கை ரீதியாக 

அதில் தேர்ச்சி  பெற்றவர்களுடன்   பேசியிருந்தோம்....

யாழ் பல்கலைக்கழகத்தின் பயிற்சி  மாணவர்களால் சில தரவுகள் தரப்பட்டன

ஆனால் அவை செயற்பாட்டு முறைகள் அல்ல

அவர்கள் தங்கள் படிப்புக்கான ஒருபகுதி ஆராய்ச்சிக்கு மட்டுமே எடுத்திருந்தனர்

ஆனால் கொழும்பிலுள்ள ஒரு பேராசிரியர் (சிங்களவர்)  உதவியுடன்

சில கணிப்புக்களையும்  எமது மண்ணுக்கு ஏற்ற நீண்டகால அடிப்படையில்

தண்ணீரைச்சேமிப்பது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வந்தோம்...

அதன்படி

முதலில்

பாடசாலைகளில்  கூரைகளினூடாக வழிந்தோடும் நீரை

நிலத்துக்குள் தாக்கப்படும் கலன்களில் சேமிக்கும் திட்டத்தையும்

அதை அடுத்து

ஒவ்வொரு வீடுகளிலும் இதே முறையை  அறிமுகப்படுத்தி

மக்களுக்கும் அறிவுரைகளை  வளங்கி செயற்படுத்தவும் அவரது ஆலோசனையையும்

திட்டத்தையும் பெற்றோம்..

ஆனால் அவருடனான தொடர்பு கிடைப்பது  பெரும் சிரமமாக உள்ளது..

முதலில் ஒரு பெரிய பாடசாலையில் செய்யலாம் என்ற திட்டம் பேச்சுவார்த்தையில் உள்ளது

(5 லட்சம் லீற்றர்கள் தண்ணீரை சேமிக்கும் திட்டம்)

நண்றி..

மழை நீர் வடிகால்கள் அமைத்தால் கழிவு நீர் கலக்காமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்... நீங்கள் சொல்வதை பார்த்த போது ஒருகாலத்தில் சேறும் சகதியுமாக இருந்த யாழ் ஆரிய குளம் மற்றும் புல்லுக்குளம் தான் ஞாபகத்தில் ஏனோ வந்தது...

மற்றும் அரியாலைமுனைப்பதில் சிறுகடல் உப்பு செரிமானம் உள்ள நீர் உள்ளே நாவற்குழி கைதடி கோப்பாய் பகுதிகளுக்கு வராதபடி அணை கட்டி உப்பு உற்பத்தி செய்யலாம்.. யில் கைதடி , கோப்பாய், பகுதிகளின் கரைகளை அண்டி நெல்லின் உமியும் சாம்பலும் கொண்டு வந்து கொட்டுவதின் மூலம் மண்ணின் உவர் தன்மையை நீக்க முடியும் எண்று தமிழீழ பொருண்மிய கண்காட்சி ஒன்றில் சொன்னார்கள்...

இதன் நடைமுறை சாத்தியம் என்ன...? சும்மா அறியும் ஆவலில் கேக்கிறேன்..

யாழ் கடல்நீர் ஏரி மாரி வெள்ளம் வடிந்தோட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்து உருவான இயற்கை வடிகால். வெள்ளம் வடிந்தோடிய பின் கடல் உள் நுழைகிறது. நாம் செய்ய வேண்டியது வெள்ளம் ஓடுவதையும் கடல் உட்புகுவதையும் தடுப்பதே. ஆழப் படுத்தும் போது கூடுதல் நீர் சேமிக்கப்படும்.
 
கடல் நீருக்கும் நன்னீருக்கும் இடையில் அகன்ற இடைவெளி வேண்டும். இதற்கே கைதடி, தொண்டமானாறு பகுதிகளில் ஏரிக்குக் குறுக்காக அகல மண் நிரவப்பட வேண்டும்.
 
ஏலவே உள்ள உவர் தன்மையை அகற்ற மேற்படி திட்டம் நிறைவேற்றினால் மாரி காலத்தில் நீர் சேரும் போது அந்த நீரை வெளியே கடலுக்குள் இறைப்பதன் மூல உவர் தன்மையைக் குறைக்கலாம். உமியும் சாம்பலும் உவர் தன்மையை அகற்ற மாட்டா.

நீங்கள் சொல்லும் போதுதான் ஒண்று ஞாபகத்தில் வருகிறது... ஆனையிறவு பகுதியில் தட்டுவன்கொட்டி , ஊரியான் , கொம்படி வண்ணாங்குளம் இடைப்பட்ட பகுதியில் மழை வெள்ளைம் வந்து வெளியாக இருக்கும் பகுதியை நிரப்பி ஆளமாக தண்ணீர் நிற்கும் போது பலநாட்களுக்கு நன்னீராகவே இருக்கும்..

இறால் பிடிப்புக்காக பூனைதொடுவாய் பகுதியில் உடைப்பை ஏற்படுத்தி கடல் நீரை உள்ளே வர வைப்பார்கள் அதோடு நன்னீர் உப்பு கலந்த நீராக மாறி விடும்.. இதை நான் அனுபவத்தில் கண்டு இருக்கிறேன்... அதோடை ஆனையிறவு உப்பள பகுதியாலும் அந்த பகுதிக்கு சிறுகடல் நீர் உள்ளே வர ஆரம்பிக்கும்..

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கடல் நீர் உற்செல்வதை தடுக்கும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி ஆரம்பம்
 
Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.