Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரத்தை எடுத்துக்காட்டியவர்கள் தமிழ்ப் பெண்களே’ விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கு வீரத்தை எடுத்துக்காட்டியதும் தமிழ்ப் பெண்களே என்பதுடன், இதை வரலாற்றில் இன்று காணக்கூடியதாகவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 46 மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கு ஒந்தாச்சிமடம் கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (04) தலா 100,000 ரூபாய் படி நிதியுதவி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான் வழிநடத்தியுள்ளேன். பெண்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள், உணர்வு, சோர்வு, திடகாத்திரம், செயற்பாடுகள் அனைத்தையும் நான் நன்கு அறிவேன். உலகத்துக்கு வீரத்தை எடுத்துக்காட்டியதும் எமது தமிழ்ப் பெண்களே. இது வரலாற்றில் இன்று காணக்கூடியதாகவுள்ளது. இந்த நிலையில், பெண்களின் கௌரவத்தை என்றும் நாம் பேணவேண்டும்.

சோர்வு, பாதிப்புக்கள், குடும்பச்சுமைகள், வறுமை, குழந்தைகளின் பாரங்கள், இழப்புக்கள் எது வந்தாலும், சோர்ந்து போகாமல் திடகாத்திரமாக இருந்து எமது பெண்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது அனைத்து உதவிகளும் என்றென்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

எமது தமிழ்ப் பெண்கள் விழிப்படைய வேண்டும். அப்போதே மாற்றங்கள் வெளிவரும். ஆனால், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட பெண்கள் அவற்றைச் செயல் வடிவத்தில் காட்டுகின்றனர்.

பெண்களின் சாதனைகள் உலகத்தில் போற்றப்பட வேண்டியவை. இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த பெண்மணியே உலகத்தில் முதல் பிரதம மந்தரியாக இருந்தார். இதுபோல் பெண்கள் உலகத்தில் பல சாதனைகள் படைத்துள்ளனர். இவை வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. இஸ்ரேல் என்ற நாடு இருப்பதற்கு காரணமும் ஒரு பெண்மணியே.

அன்னை திரேசாவும் உலகிலுள்ள அநாதைச் சிறுவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்குமாக குரல் கொடுத்த பெண்மணியாக திகழ்ந்தார். அந்த வகையில், பல பெண்கள் உலகில் சாதனை புரிந்து இரும்புப் பெண்மணிகளாக இருந்த வரலாறுகள் உள்ளன.

பெண்கள் பாரிய சக்தியாகும் இந்தச் சக்தியை திறம்பட கட்டியெழுப்பினாலேயே, சமூகத்தில் மாற்றங்களும் ஒழுக்கங்களும் மேலோங்கும். எமது பகுதியில் சிறுவர்; துஷ்பிரயோகங்கள், இளவயது திருமணங்கள் போன்ற பல பிரச்சினைகளை காணக்கூடியதாகவுள்ளது. இவற்றுக்கு எமது பெண்கள் உறுதியாக இருந்தால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இவற்றுக்கு பெண்கள் சக்தியை அணிதிரட்டி எடுக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் முதன்மையானவள் பெண்ணே என்பதை எமது பெண்கள் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும். சோர்வடையக் கூடாது.

துரிதமாகச் செயற்பட்டால் கல்வி வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் போன்ற அபிவிருத்திகளும் வந்து குவியும்.

மட்டக்களப்பு பெண்கள் அதிகம் கவனமெடுத்து செயற்படுவீர்களேயானால், பல திறமைமிக்க தலைவர்களை உருவாக்கலாம். முஸ்லிம் சகோதரர்கள் தங்களுடைய கிராமத்துக்கென தலைவர்களை உருவாக்கி விடுவர். அங்கே அமைச்சர்கள் அதிகம் இருப்பர். இந்த வெற்றிடத்தை எமது பெண்கள் அணிதிரண்டு செயற்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையும் திடகாத்திரமும் கொண்டது பட்டிருப்புத்தொகுதியே. எனவே பட்டிருப்புத்தொகுதி மக்கள் விழிப்படைய வேண்டும். அதற்காக வேண்டி நான் பட்டிருப்புத்தொகுதியில் அதிக அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன்.

எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் துறைநீலாவணையிலிருந்து கிரான்குளம் வரைக்கும் மற்றும் படுவான்கரைப் பிரதேசத்துக்குமான குடிநீர் வழங்கும் திட்டம் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு பாரிய பல அபிவிருத்திகளை மேற்கொண்டாலும், மக்கள் மனங்களில் மாற்றம் வேண்டும். இதுவே எமக்குத் தேவை அனைத்து துறைகளும் வளர்ந்தாலே எமது சமூகம் வளர்ச்சியடையும்.

மட்டக்களப்பிலிருக்கின்ற இருக்கின்ற கல்குடாத்தொகுதி, மட்டக்களப்புத்தொகுதி, பட்டிருப்புத்தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் மூன்று அமைச்சர்களை உருவாக்க வேண்டும். எந்த அரசாங்கம் வருகின்றதோ, அந்த அரசாங்கத்தில் எமது அமைச்சர்கள் இருக்க வேண்டும்.

கடந்த யுத்த காலத்தில் எமது மக்கள் அனைவரையும் விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒளிந்தவர்களே இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து மக்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இனிமேலும், தொடர்ந்து ஏமாறும் மக்களாக இருக்கக்கூடாது’ என்றார்.

http://www.jvpnews.com/srilanka/83309.html

  • Replies 125
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா.. 50,000 பேரை வழிநடத்தினவராம்..???! :o:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஓமண்ணே, தன்னை தானே சரியா வழிநடத்த தெரியாத நாதாரி. பிறகு 50000 பேரை வழிநடதினாராம்.

என்னமோ சொல்லுவாங்களே என்னது:

கேக்கிறவன் கேணையனேன்னா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓடுது என்பானாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில அண்ணா சொன்னது உண்மையா? பொய்யா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில அண்ணா சொன்னது உண்மையா? பொய்யா?

முரளீதரன் சொல்வது  உண்மையா? பொய்யா? என்பதற்கப்பால் அவர் எதற்காக இப்படியான பேச்சுக்களிற்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்பதே அவதானிக்கப்படவேண்டியது.

முரளீதரன் இப்போது அரசியல்வாதியாகி விட்டார். எங்கே சென்றால், யாரிடம் எவ்வாறு,  எப்படிப் பேசினால் தனது செல்வாக்கு உயரும் என்பதைப் புரிந்து பேசியிருக்கின்றார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு இன்னும் நித்திரையில் மூழ்கியிருந்தால்

டக்கிளஸ் வடக்கை  ஆழுவதைப் போன்று முரளீதரன்  கிழக்கை மீண்டும் 

ஆழும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தன்னைநம்பிவந்த மனைவியையே வழிநடத்தத்தெரியாத *** எப்படி போராளிகளை வழிநடத்தினான்...ஐயோ்்்இயோ்்்

Edited by இணையவன்

நாம் விரும்பா விட்டாலும் ஒரு காலத்தில் கிழக்கு மாகாண போராளிகளை வழிநடாத்தியது கருணா தானே?  2003ல ஐரோப்பாவிற்கு வந்து இதே கதையை சொல்லேக்க கை தட்டி விசிலடித்ததும் நாங்கள் தான். 
ஆனால் இவன் செய்த துரோகத்திற்கு தமிழ் பெண்களை பற்றி அல்ல தமிழிலேயே பேச தகுதி இல்லாதவன். 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில அண்ணா சொன்னது உண்மையா? பொய்யா?

அண்ணாவிற்கு பொய் பேச தெரியுமா ??? 
அதிர்ச்சியாக இருக்கிறது! 

முரளீதரன் சொல்வது  உண்மையா? பொய்யா? என்பதற்கப்பால் அவர் எதற்காக இப்படியான பேச்சுக்களிற்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்பதே அவதானிக்கப்படவேண்டியது.

முரளீதரன் இப்போது அரசியல்வாதியாகி விட்டார். எங்கே சென்றால், யாரிடம் எவ்வாறு,  எப்படிப் பேசினால் தனது செல்வாக்கு உயரும் என்பதைப் புரிந்து பேசியிருக்கின்றார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு இன்னும் நித்திரையில் மூழ்கியிருந்தால்

டக்கிளஸ் வடக்கை  ஆழுவதைப் போன்று முரளீதரன்  கிழக்கை மீண்டும் 

ஆழும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அவர்கள் நித்திரை கொள்கிறார்களா ??
நான் நினைத்து கொண்டு இருந்தேன் அவர்கள் விட்டு கொடுப்பு அரசியலில் விடா முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று. 

ஆயிரம் சொன்னாலும் அம்மான் அம்மான்த்தான் ....அல்லது போராட்டம் 1998 முடிச்சிருக்கும் சில உண்மை கசக்கும் ஆனால் அதுதான் உண்மையும் கூட  :(

  • கருத்துக்கள உறவுகள்
உண்மைகள் கசக்குதோ இல்லையோ ............
பொய்கள் ரொம்பவே இனிக்கும். 

துரோகியாக மாறினால் முன்னர் செய்தவை  இல்லை என்று ஆகிவிடாது ,

ஜெயலலிதாவின் இன்றைய நிலையும் ஏறக்குறைய இதுதான் வைஸ் வேர்சா. :icon_mrgreen:

ஆயிரம் சொன்னாலும் அம்மான் அம்மான்த்தான் ....அல்லது போராட்டம் 1998 முடிச்சிருக்கும் சில உண்மை கசக்கும் ஆனால் அதுதான் உண்மையும் கூட  :(

கிளிநொச்சியை விட்டுவிட்டு ஓடுவோம் என்று தலைவர் முடிவெடுக்கவும்...அம்மான் தான் அடிச்சு பிடிச்சதா ஒரு கேள்வி.....அம்மான் ஒரு வெத்துவேட்டு என்றால்.....இவ்வளவு உயரத்துக்கு வந்திருக்க முடியுமா என்றால் வாயை திறப்பார் ஒருத்தரும் இல்லை....அப்போ அம்மான் விலகினாரோ..அப்போதே புலிகளின் அச்சாணி உடைந்துவிட்டது...அதை ஒத்துக்கொள்ளவும் வெட்கமாக இருக்கிறது... :)

உண்மை அவர் வழிநடத்தலை நேரில் பார்த்தவர்கள் என்பதால் அவரை புறம்தள்ள முடியாது இங்கு சீன் போடும் ஆக்களுக்கு அது தெரியாது விடுங்கோ .. :rolleyes:

கிளிநொச்சி கட்டை வரையும் இங்கால மாங்குளம் அம்பகாமம் வரை நிண்ட ராணுவம் ஒரு மூச்சு பிடிச்சு அடிச்சு இருந்ததால் பழைய முருகண்டியால் குறுக்கு வெட்டி பார்த்தல் இரணமடு குளம் மூணு கிலோமீற்றரும் இல்லை ஜனக பெரேரா நீர் ஊந்து நடவடிக்கை அதை அமையம் வைத்தே நடந்தது அதை தடுக்க எல்லோரும் முடியாது போக ஜெயந்தன் படையணி முடிச்சு கொடுத்து அம்மான் அந்த களத்தை மிக நெருக்கமா நின்று வழிநடத்தினார் ...

ஒரு கட்டத்தில் அம்மான் மாட்டிட்டார் என்று கூட சொன்னார்கள் இவைகளை மறக்க கூடாது இப்ப ஜெயலலிதாக்கு ஒப்பாரி வைக்கினம் அவா நல்லவா என்று இவர்களை பார்க்க பாவமா இருக்கு இன்னும் எவ்வளவுகாலம் இப்படி சீனை போட்டு சினிமா காட்டி வாழப்போகிறார்கள் என்று .

நன்றி இதை உறுதிப்படுதியதுக்கு...எங்களவர்களுக்கு இது ஒரு வருத்தம் பிடித்தவர்களை தலைக்கு மேல் வைத்து வணங்குவதும்..இல்லையென்றால் கேவலமாக தூற்றுவதும்....இதை நாம் விட்டொழிக்க வேண்டும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் சொன்னாலும் அம்மான் அம்மான்த்தான் ....அல்லது போராட்டம் 1998 முடிச்சிருக்கும் சில உண்மை கசக்கும் ஆனால் அதுதான் உண்மையும் கூட  :(

என்னதான் இருந்தாலும் அம்மான் காக்கைவன்னியனாக மாறியிருக்கக்கூடாது. :(

பிடிக்கா விட்டால் விலகி தனிப்பட்ட வாழ்க்கை வாழ்திருக்க வேண்டும் (ஆயிரம் வழிகளுண்டு)....இல்லையேல் உயிரை மாய்த்திருக்க வேண்டும். :)

"கு.சா அய்யா தலைவர் செய்வது பிழை என்பதால் தானே கருணா விலகினார்"...அப்படி யோசிக்க மாட்டீங்களா?

எல்லாமே உங்களுக்கு ஆதரவாக இருக்கணும்...இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்கனுமா???? ஏன்????

கருணா தலைவரையும் தனது இயக்கத்தையும் தெரிந்த படியால் தானே திரும்பி போகவில்லை....

இங்கே நான் இவர்களுக்கிடையிலான சரி பிழையை கதைக்க வரவில்லை.

எமது போராட்டம் பற்றியே கதைக்கின்றேன். அம்மான் பிரபாகரனுக்காக போராடப்போனாரா இல்லையேல் தமிழீழத்திற்காக போராடப்போனாரா?

இங்கே நான் இவர்களுக்கிடையிலான சரி பிழையை கதைக்க வரவில்லை.

எமது போராட்டம் பற்றியே கதைக்கின்றேன். அம்மான் பிரபாகரனுக்காக போராடப்போனாரா இல்லையேல் தமிழீழத்திற்காக போராடப்போனாரா?

தமிழீழத்துக்காக போனார் ..பிரபாகரனின் கையால் சாகாமல் தப்பி பிரபாவுக்கு வேட்டு வைத்தார்....

தமிழீழம் இனி காணமுடியாதா?

தமிழீழத்தை பிரபாகரனே தான் கானனுமா?

உமாM..80இல் செய்து அழிந்து போனதை...பிரபா 2000 இல் செய்து அழிந்து போனதாக நினைக்கவேண்டியது தான்.....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்துக்காக போனார் ..பிரபாகரனின் கையால் சாகாமல் தப்பி பிரபாவுக்கு வேட்டு வைத்தார்....

நாடும் இனமும் அழிந்து போனாலும் பரவாயில்லை....பிரபாகரன் சாகவேண்டும்...அதுதான் அம்மான் கொள்கை.
 
தமிழீழம் இனி காணமுடியாதா?

தமிழீழத்தை பிரபாகரனே தான் கானனுமா?

இன்றைய நாட்டு நிலவரங்களும் சிங்கள குடியேற்ற திட்டங்களும் தெரியாமல் கதைக்கின்றீர்கள்!!! 2009 முடிந்து கனகாலமாகி விட்டது. பிரபாகரனை தடுத்து நிறுத்தியவர்கள் இப்போது என்ன செய்கின்றார்கள்? பாட்டி வடைசுட்டகதையை திருப்பியும் சொல்கின்றார்கள்.

உமாM..80இல் செய்து அழிந்து போனதை...பிரபா 2000 இல் செய்து அழிந்து போனதாக நினைக்கவேண்டியது தான்.....

நாடும் மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை...பழிக்குப்பழி......நல்ல முன்னேற்றம்.

கருணா வன்னி போய் தான் செய்தது பிழை..போராட்டத்திலிருந்து விலகி ஊரில் ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைத்து கொள்ளுகிறேன் என்றால் மன்னித்து விட்டிருப்பார்களா??

கருணாவுக்கு மண்டையில் போடுவது தான் உங்களது ஒரே கொள்கையா? (கருணாவோடு சேர்ந்து பிரிந்து போனவர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்...பெண்கள் உட்பட)

உயிரை பணயம் வைத்து இருபது வருடமாக போராடி...எல்லாருமாக சேர்ந்து இலங்கையரசுக்கு நிகராக தமிழர்தரப்பையும் உயர்த்திய பிறகு ..வெளியாட்களிடம் இருந்தோ அல்லது புலிகளின் பணத்தையே சுருட்டினார் என்பது நம்பத்தகுந்த குற்றச்சாட்டா? அல்லது உண்மையான பிரச்சனை வேறா? இது எதுவுமே தெரியாமல் எப்படி கருணா மேல் மட்டும் குற்றம் கூற முடியும்???

தனது உயிருக்கு ஆபத்து என்றவுடன் பரமஎதிரி இலங்கையரசுடன் சேரக்கூடிய மனநிலையை யார் உருவாக்கியது?  இது கருணா மட்டும் செய்யவில்லை...புலிகளிடம் இருந்து தப்பியவர்கள் இலங்கையரசிடம் தஞ்சம் புகுந்தோர் மட்டுமே.....ஒதுங்கியிருந்தவர்கள் பலர் பல சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டு தப்பியோடுபவர்களுக்கு ஒரே யொரு வழியை யார் காட்டியது??????

சாவு வரும் போது நாடும் நாட்டு மக்களுமா உங்களின் கண் முன் வரும்??

(மகாபரதத்தில் தான் துரோணரும் பீஸ்மரும் தாம் செய்த பிழையை எண்ணி தமது ஆயுதங்களை துறப்பார்கள் எதிரிகள் தம்மை கொல்ல அனுமதிப்பார்கள்.....மற்றவர்கள் "வெள்ளை கொடி" தான் காட்டுவார்கள் ;) )

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்
அருமையான உண்மை பேசிகினம் இரண்டு பேர் வந்து உலக அரசியலை வளர்த்து போங்கள்.
 
(இலங்கை கூட்டுப்படை தலைமையகத்தில் இருந்து எடுக்கும் முடிவுகளுக்கு ஊடாகவே சிங்கள இராணுவ படை நகர்வு இருந்திருக்கிறது. உலகில் எல்லா இடமும் இப்படிதான். அமெரிக்க படையணி ஓரிடத்தில் இறக்க படுவதில் இருந்து ஏற்றும் வரை பெண்டகோன் கீழ்தான் கட்டளை பீடங்கள் இருக்கும். காரணம் இராணுவ வெற்றி தோல்விகள் எதிர்பாரா விதமாக மாறிவிடும். அப்போ எந்த அணியை துணைக்கு அனுப்புவது ..... எதை உதவி படையணி ஆக்குவது என்பது வெளியில் இருந்து பார்க்கும்போதே தெரியும். தவிர எல்லாம் ஒரு கட்டுபாட்டில் இருக்கும். ஆப்கனிஸ்தானில் இரண்டு முறை அங்கிருந்த கட்டளை பீடத்திற்கு (தெரியாமல்) எதிர்பாராமல் பெண்டன்கானின் நேரடி வழி  நடத்தலில் படையணிகள் தரை இறங்கி இருக்கிறார்கள்.)

முரளிதரனது துரோகத்தையும்

யெயலலிதாவின் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு

முரளிதரன் பெரியவர்  நல்லவர் வல்லவர் என்கின்ற போதே  தெரியவில்லையா?

சும்மா வீம்புக்கு

வம்பிளுக்க எழுதுகிறார்கள் என..

போய்வேலையை  பாருங்க ராசா

நேரம் பொன்னானது......

என்ன ஒன்று

எம்மை வசைபாடவேண்டி

தங்களை  தாங்களே  தரமிறக்கிக்கொள்கிறார்கள்

ஒரு நாள் தேவைப்படும்

பதிவிலிருக்கட்டும் 

அருமையான உண்மை பேசிகினம் இரண்டு பேர் வந்து உலக அரசியலை வளர்த்து போங்கள்.
 
(இலங்கை கூட்டுப்படை தலைமையகத்தில் இருந்து எடுக்கும் முடிவுகளுக்கு ஊடாகவே சிங்கள இராணுவ படை நகர்வு இருந்திருக்கிறது. உலகில் எல்லா இடமும் இப்படிதான். அமெரிக்க படையணி ஓரிடத்தில் இறக்க படுவதில் இருந்து ஏற்றும் வரை பெண்டகோன் கீழ்தான் கட்டளை பீடங்கள் இருக்கும். காரணம் இராணுவ வெற்றி தோல்விகள் எதிர்பாரா விதமாக மாறிவிடும். அப்போ எந்த அணியை துணைக்கு அனுப்புவது ..... எதை உதவி படையணி ஆக்குவது என்பது வெளியில் இருந்து பார்க்கும்போதே தெரியும். தவிர எல்லாம் ஒரு கட்டுபாட்டில் இருக்கும். ஆப்கனிஸ்தானில் இரண்டு முறை அங்கிருந்த கட்டளை பீடத்திற்கு (தெரியாமல்) எதிர்பாராமல் பெண்டன்கானின் நேரடி வழி  நடத்தலில் படையணிகள் தரை இறங்கி இருக்கிறார்கள்.)

இப்ப தான் உலக அரசியல் எல்லாம் தெரியுது போல உங்களுக்கு நாங்கள் எல்லாத்திலும் சரியா இருந்தம் என்பது தப்பு என்றுதான் சொல்ல வாரம் அம்மானின் மாற்றம் யாரால் வந்தது ஏன் வந்தது என்பதுதான் கேள்வி இங்கு ஒழுக்கம் பற்றி பேச எவருக்கும் தகுதி இல்லாமல் போகும் ...

புதுசா அம்மான் ஒழுக்கம் கேட்டவர் என்று கண்டுபிடிப்பது சிரிப்பு வருது வழமையா நாங்க எடுத்த ஆயுதம் துரோகி ..ஒழுக்கம் என்பதே நடந்தவை எல்லாம் வேறு அவர் இறுதியா சொல்லி இருந்தார் தலைவரை தாயிக்கு நிகரா நேசிப்பதா ஆனால் இந்த சீனை போட்டும் கூட்டம் கடைசிவரை பேசவிடாது மேசையை போட்டு நாடகம் ஆடி இப்ப தெருவில் நிப்பது யாரு அம்மனா நாங்களா ...

அதி உச்ச விசுவாசிகளை நம்புவது இல்லை படம் காட்டுபவன் ..சினிமா காட்டுபவன் எல்லோரையும் நம்பி  இங்க இணையத்தில நாடுபிடிப்பவர்கள் போலதான் அவர்களும் ஆனையிறவில் சண்டை நடந்தால் மல்லாவியில் வேட்கியை இழுத்து விடுட்டு ஓடித்திரியும் ஆக்கள் சண்டை என்று வந்தால் எப்படி பிடிப்பாங்கள் ...

பாப்பா தனக்கு தானே சுட்டுபோட்டு முதலே பின்னாடி போட்டான் அவன் கெட்டிக்காரன் அரசியல் துறை எல்லோரையும் லைனுக்கு அனுப்புங்க சண்டைக்கு விடுங்க என்று சொன்ன அம்மான் துரோகி ..

போங்கையா உங்க அரசியல் இதை எல்லாம் வன்னி தெரியாத ஆக்களுக்கு ஓகே அங்க தவண்டு வந்தவங்களுக்கு தெரியும் யாரு ஒழுக்கம் உள்ளவர்கள் என்று .

கருணா சிறீலங்கா அரசுடன் சேர்ந்தது மன்னிக்கமுடியாத குற்றம் ஆனால் அதற்காக அதற்கு முதல் செய்த நல்ல விடயங்கள் இல்லை என்று ஆகாது .

இது கருணாவிற்கு மட்டும் அல்ல அனைத்து இயக்கங்களிலும் இருந்து விட்டு பிரிந்த பல தோழர்களுக்கும் பொருந்தும் . நீங்கள் விடுதலை போராட்டம் என்ற பேரில் என்ன கூத்தும் ஆடுவீர்கள் அதற்கு உங்களுடன் சேர்ந்த குற்றத்திற்கு சிஞ்சிஞ்சா போடவேண்டும் என்பது என்ன விதத்தில் நியாயம் .

வாயை திறந்தால் இயக்கத்தை உடைக்க பார்க்கின்றான் ,விட்டு விட்டி ஓடினால் துரோகியாக்கி இல்லாத பொல்லாத குற்றங்கள் அனைத்தயும் தலையில் கட்டிவிடுவார்கள் .

அவர்கள் எதிர்பார்ப்பது இயக்கத்தில் சேர்ந்து விட்டீர்கள் தலைமை எதுசெய்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அல்லது சாகவேண்டும் .

இதற்குள் உயிருக்கு பயந்து அப்பவே ஓடிவந்தவன் கருத்துக்களை  யாரும் கணக்கெடுக்கதேவையில்லை .

மையவாதத் திமிரின் விழைவே கருணாவின் உருவாக்கம். அதிகாரத்தில் பலமுள்ளவன் எவன் மீது வேண்டுமானாலும் அதை பிரயோகிக்கலாம் என்ற மையவாத எச்சக் கோட்பாடு விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் தொடர்ந்தது. இயக்கங்கள் மீது கைவைத்தார்கள் மாற்றுத் தெரிவின்றி செத்தவர்கள் போக ஏனையவர்கள் அரசுடன் இணைந்துகொண்டார்கள் தொடர்ந்து துரோகி என்று கைவரிசையை காட்டிக்கொண்டிருந்தார்கள். சொந்த இயக்கத்துக்குள்ளும் அதிகாரத்துக்கு அயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள். கருணா  பலியாகவில்லை மாறாக பதிலடியாக மாற்றம் கண்டார். அதன் விழைவு அதிகாரம் முற்றாக அழிந்தபோனது. கருணா விசயத்தில் யார் துரோகி எது துரோகம் என்ற கேள்விக் குறியுடனேயே அதை அணுக முடியும். ஒரு போராளி துரோகியாக மாற்றப்பட்டான். மாறியவன் துரோகியா மாற்றியவன் துரோகியா என்ற எண்ணம் காலம் முளுக்க இருந்துகொண்டே இருக்கும்.

கருணா அரசுடன் இணைவதற்கு முன்பு விடுதலைப்போராட்டத்துக்கு செய்த பங்களிப்புக்களை அற்பம் என தூக்கி எறிய முடியாது. அதே போல் பிரிந்த பின் ஒரு சகோதர சண்டையை தவிர்த்து ஆயிரத்துக்கம் மேற்பட்டவர்கள் உயிர்ப்பலியை தவிர்த்து விலகிச் சென்றதையும் மறக்க முடியாது.

கடந்த காலத்தில் நடந்த அதிகாரத்த் துஸ்பிரயோகங்களும் முட்டாள்தனங்களும் ஆயிரமாயிரம். அதற்குள் ஒன்றுதான் கருணாவின் பிரச்சனை. இதை தியாகி துரோகி என்று கறுப்பு வெள்ளைக் கண்ணாடிக்குள்ளால் பார்த்து பிரயோசனம் இல்லை. ஒட்டுமொத்த அதிகாரத்த் திமிருக்கும் அதன் எதிர்விழைவுகளுக்கும் இந்த இனமும் அதன் விடுதலைப்போராட்டமும் பலிக்கடவாகியது என்ற உண்மையில் இருந்து எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால் அதில் எதாவது பிரயோசனம் இருக்கும். அவ்வாறு இல்லாமல், நீ துரோகி , நீ தியாகி, என்ற அணுகுமுறையை தொடர்ந்தால் அவைகள் குட்டிபோட்டுக்கொண்டே இருக்கும். குட்டிகள் மேலும் குட்டிபோடும். எஞ்சியிருப்பவர்களுக்கு தற்கொலையை தவிர வேறு தெரிவே கிடையாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.