Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.

Featured Replies

தயா அதில் சந்தேகமே இல்லை...நிறைய தப்பி ஓட இடம் தெரியாமல் இருந்த வன்னி டெலோ பெடியங்களை தான் tire போட்டு எரித்தது....

 

ஏன் tire போட்டு உயிரோடு எரித்தீர்கள் என்று சொல்லுவீரா?

 

என்ன ஒரு "flow" இல எரித்தீர்களா?

 

எரித்தது சாவகச்சேரி கண்ணாடிபிட்டியிலை தான் நடந்தது...   எரித்தவர்கள் புலிகளின் தென்மராட்சிக்கு பொறுப்பாக இருந்தவர்களில் மிக முக்கியமான மூவர்...    பாக்கி , குஞ்சன் , மேத்தா...  புலிகளிலை இருந்து விலக்க பட்டவை ஐரோப்பாவிலை தான் இருக்கீனம்... 

 

தேடி பிடிச்சு கேழுங்கோ...   

 

ஒருவர் மீது ஒருவர் கொண்ட பயத்தினால் நடந்த கொலைகள் இவை...  இதை புலிகள் எப்போதும்  நியாயப்படுத்தியதும்    கிடையாது...   

 

மற்றும் படி புலிகள் அப்பாவிகளை சுட்டவை எண்டது உங்கள் சிலரின் கற்பனைக்கு மட்டுமே  எட்டக்கூடியது...  அந்தக்காலங்களில் TELO  ஆடிய ஆட்டம்  உங்களுக்கு தெரிய நியாயம் இல்லை தான்... 

ஆனால் கடைசியில் பின்னால் இருந்து குத்தியவர்கள் இப்படி முடிவார்கள் என்று எதிர்பாத்ததுதான்.

 

இதிலை கேவலமான நிலை என்ன எண்டால்  நீங்கள் அம்மணமாக நிண்டு கொண்டு கோவணத்தோடை போறவனை பாத்து கொக்கரிக்கிறீர்கள்... 

  • Replies 200
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விடுதலைப்புலிகள் சுதந்திரமாக திரிந்தபோதும் வாந்தியெடுத்தார்கள்.....தடை செய்யப்பட்ட போதும் வாந்தியெடுத்தார்கள்....அவர்கள் மீது இருந்த தடையை சிறிது நகர்த்திய போதும் வாந்தியெடுக்கின்றார்கள்.
 
ஒட்டுமொத்த ஈழத்தமிழினம் அழிந்தால் இவர்களிற்கு தினசரி தீபாவளி.

எல்லாம் சரி ஆனால் ஜப்பான் காரனுக்கும் புலிகள் தான் தற்கொலை தாக்குதல் செய்ய காட்டிக்கொடுத்தது என்று நீங்கள் சொல்லக்கூடாது.....அது புலி ஆதரவு

 

உலகில் புலிகளுக்கு முற்பட்ட காலத்தில் சாவு நிச்சயம் எனத் தெரிந்து நடந்த போர்கள் ஏராளம். தற்கொலைக்கு நிகரான சம்பவங்கள் ஏராளம். இவற்றை கொண்டு எந்த நியாயத்தையும் கற்பிக்க முடியாது. அதே போல் அமரிக்கக் காரன் ஈராக்கில் ஆப்கானிஸ்தானில் வியட்நாமில் செய்யாத மனித உரிமை மீறல்களா பயங்கரவாதமா  இஸ்ரேல்காரன் செய்யாததா இந்தியன் செய்யாதா பிரித்தானியா காலனித்துவக் காலத்தில் செய்யாதா என்ற வாதங்களை கொண்டும் நியாயப்படுத்த முடியாது. இவ்றான பேச்சுக்களை யாழ்களத்தில் நாலுபேர் வரிந்து கட்டி மல்லுக்கட்டலாம் தவிர அதற்கு அப்பால் எதுவும் இல்லை. புலியை நியாயப்படுத்தியவருக்கு நாலு பச்சைப் புள்ளியை விட வேறென்ன கிடைக்கப்போகின்றது?

 

புலம்பெயர் தேசத்தில் புலி அடயாளம் லாபநோக்கில் பயன்படுத்தப்படுகின்றது. தேசீயம் லப நோக்கில் பயன்படுத்தப்படுகின்றது. தவிர தாயகத்தில் உள்ள மக்களின் விடுதலைக்காக இல்லை. அந்த வகையில் இந்த தீர்ப்புக்கு காரணம் நாம் தான் என நாலு தரப்பு அடயாளம் தேடிக்கொள்ளும். தேசீயத்துக்கு நாம் நாம் தான் தலைகள் என்று நப்பது பேர் அடயாளம் தேடிக்கொள்வார்கள். நாடுகடந்த அரசுகளும் சிம்மாசனங்களும் கடந்த ஐந்து வருடங்களாக இந்த அடயாளத் தேடல்களை கடந்து ஒரு துளியும் தாயக விடுதலை குறித்து முன்னேற வில்லை. முன்னேறவும் முடியாது. தாயக விடுதலையை தாயகத்தில் உள்ளவன் தான் முயற்சிக்க முடியும்.

 

புலம்பெயர் தமிழன் பாதுகாப்பாக இருந்துகொண்டு அவ்வப்போது புலிக்கொடியை தூக்கிப்பிடிப்பான். சிங்களத்துக்கு புலி இன்னும் இருக்கின்றது பிறண்டப்போகின்றோம் என்ற பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பான். அப்போதுதான் சிங்களம் தனது அடக்குமுறைக்கு காரணத்தை காட்ட முடியும். தொடர்ந்து வறிய மக்களை ராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்க முடியும். இங்க ஒரு தடையை நீக்கி அதனால் நாலு குழுக்களும் கோஸ்டிகளும் அடயாளம் தேடுவதால் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன லாபம்? என்ன பிரயோசனம்?

 

இதே நக அரசு என்ற பயித்தியக்காரத்தனத்தை ஆரம்பிக்கும் போது அதற்குப் பதிலாக மனித உரிமை மீறல்கள் போக்குற்றங்களுக்கான நீதி கேட்டல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பை கேட்கும் அமைப்பே காலத்துக்கேற்ப பொருந்தும் என்ற வாதத்தை வைத்தபோது இல்லை சிம்மாசனமும் பட்டும் பீதாம்பரமும் கொடியும் ஆசனமும் அமர்வுகளுமே தீர்வு என்று ஐந்துவருடமாக கிழி கிழி என்று கிழிக்கினம். அதுபோல்தான் இந்த தடையை நீக்கிக் கிழிப்பதும் புலிக்கொடியை பிடித்துக் கிழிப்பதும். தாயக மக்களுக்கு சல்லிக் காசுக்கும் பிரயோசனமில்லாத விசயங்கள். பணமும் கொள்ளையடித்தலும் தாயகத்துக்காக உயிர்விட்டவர்களின் தியாகங்களை யாவரம் செய்வதும் தேசீயத்தை வைத்து பிழைப்பு நடத்துவதும் என பொறுக்கித் தனம் பண்ணுவதுக்கே இந்தத் தீர்புகள் பயன்படுத்தப்படும் தவிர ஒரு வீதமேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இல்லவே இல்லை.

 

புலி அரசியலை எதிர்ப்பது ஒன்றே எஞ்சிய மக்களை காவுகொடுப்பதில் இருந்து காப்பாற்ற ஒரே வழி. புலி அரசியல் உயிரப்புடன் இருக்கும் வரை சிங்கள ஆக்கிரமிப்பில் இருக்கும் மக்களுக்கு விமோசனம் என்பது கிடையாது. இலங்கையில் வாழும் வறுமைப்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இரண்டு பொது எதிரிகள் ஒன்று சிங்களப் பேரினவாதம் மற்றது மையவாதமாக வளர்ந்து நிற்கும் புலி அரசியல். இரண்டும் உயிர்வாழ எப்போதும் தமிழர்களின் உயிர் உடமைகள் அவசியமாக இருந்து வருகின்றது.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு முந்திய காலத்திலை சிங்களவன் அள்ளிக்குடுத்துட்டானாம்.......புலிகளுக்கு பிந்தின காலத்திலையும்  அள்ளியள்ளி குடுக்கிறானாம்  :lol:

எரித்தது சாவகச்சேரி கண்ணாடிபிட்டியிலை தான் நடந்தது...   எரித்தவர்கள் புலிகளின் தென்மராட்சிக்கு பொறுப்பாக இருந்தவர்களில் மிக முக்கியமான மூவர்...    பாக்கி , குஞ்சன் , மேத்தா...  புலிகளிலை இருந்து விலக்க பட்டவை ஐரோப்பாவிலை தான் இருக்கீனம்... 

 

தேடி பிடிச்சு கேழுங்கோ...   

 

ஒருவர் மீது ஒருவர் கொண்ட பயத்தினால் நடந்த கொலைகள் இவை...  இதை புலிகள் எப்போதும்  நியாயப்படுத்தியதும்    கிடையாது...   

 

மற்றும் படி புலிகள் அப்பாவிகளை சுட்டவை எண்டது உங்கள் சிலரின் கற்பனைக்கு மட்டுமே  எட்டக்கூடியது...  அந்தக்காலங்களில் TELO  ஆடிய ஆட்டம்  உங்களுக்கு தெரிய நியாயம் இல்லை தான்... 

 

இதிலை கேவலமான நிலை என்ன எண்டால்  நீங்கள் அம்மணமாக நிண்டு கொண்டு கோவணத்தோடை போறவனை பாத்து கொக்கரிக்கிறீர்கள்... 

கல்வியங்காட்டில் "ஒருவரையும்" எரிக்க வில்லையா?

 

மேலேயுள்ளவர்கள் டெலோ வினரை "உயிரோடு" எரித்ததற்காகவா விலக்கப்பட்டார்கள்?

அதுதானே...உங்களோடு இருந்து உயிரை கொடுத்து சண்டைபிடித்தால் எல்லா புகழையும் தலைவரிற்கு அர்பணிப்பீர்கள்...ஆனால் விலகியவுடன் (உங்களிடம் இருந்து தப்பியோடினவன்) மேல் உங்கள் பிழைகளையும் ஏற்றி விடுவீர்கள் :)

எத்தனை டெலோ காரர்களை எரித்தீர்கள் என்று கணக்கு இருக்கா?

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் அண்ணை எந்த நீதிமன்றும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை எண்டு சொல்லவில்லை. 6ம் பக்கத்தில் நான் எழுதியுள்ள விளக்கத்தை படிச்சு பாருங்கோ.

இப்படிதான் இரணை மடுவை உடைச்சிட்டாங்கள், வவுனிக்குளத்தை உடைச்சிட்டாங்கள் 5000 ஆமி காலி, 20000 ஆமி காலி எண்டு 2009 இலயும் சும்மா சும்மா அநியாயத்துக்கு குதூகலிச்சு பின் குப்புற விழுந்தவை புலி அபிமானிகள்.

சந்த்ஹோசப்படுங்க்கோ ஆனா உண்மையை விளங்கி கொண்டு சந்த்ஹோசப் படுங்க்கோ.

உதாரணங்கள் இங்கே

 

சிங்களம் திகைத்து இருக்கும்!!!!

 

 

நல்ல  மகிழ்ச்சியான செய்தி...! ஆனால் நம்ம யாழ் கள மாற்றுகருத்தாளர்கள் நித்திரையற்று உள்ளது போல் இருக்கு கருத்துக்கள் பதியபட்ட நேரங்களை கவனியிங்கள். :lol:

 

 

 

இவர்கள் என்ன தான் உருண்டு புரண்டாலும்.. மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ள புலிகளின் பின் தான் மக்கள் எப்போதும் நிற்பார்கள். அதுதான் யதார்த்தம். அதனை உலகம் இன்று உணர ஆரம்பித்திருக்கிறது..! எனவே மக்கள் தெளிவோடு இருந்தால்.. விவேகத்தோடு செயற்பட்டால்.. இந்த ஓலமிடல்களுக்கு செவிமடுக்கத் தேவையில்லை. இவை வழமையான சுடுகாட்டு.. நாலு கால் ஜீவராசிகளின் ஓலமிடலுக்கு ஒப்பானது..!! :):icon_idea:

 

 

புலிகள் ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கு தேசிய தலைவர் பக்கத்தில் இருக்கனுன்னு அவசியம் இல்லை.

 

மக்கள் புலிகளை ஜனநாயக ரீதியில் அங்கீகரிக்கத் தயாராக உள்ளதோடு.. தேசிய தலைவரின் வழிகாட்டலோடு.. அதே இலட்சிய உறுதியோடு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு அரசியல் சூழலையே இன்று விரும்பி நிற்கிறார்கள். அந்த இடத்தை புலிகளை ஜனநாயக மயப்படுத்துவதன் மூலம்.. சில மேற்கு நாடுகள் இந்தியா - சிறீலங்கா மீது அழுத்தங்களை பிரயோகித்து தமது பிராந்திய நலன்களை அதனூடாக நகர்த்த முனையலாம்.

 

 

 

இல்லாத புலிக்கும் தலைவருக்கும் பின்னால மக்கள் வர தயாரா இருக்கிறாங்களா? :lol:

Edited by தெனாலி

.

Edited by naanthaan

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியம்! இந்திய மத்திய அரசே! தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனே நீக்கு!

16.10.2014

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நீதிமன்றம் இன்று நீக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க போற்றுதலுக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த விடுதலைப் போரை ஒடுக்குவதற்காக இந்தியா- இலங்கை கூட்டுச் சதியால் இந்த தடை விதிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியமே இந்தியா விதித்த தடையின் அடிப்படையில்தான் புலிகள் மீதான தடையும் விதித்தது.

இதனாலேயே தமிழீழ விடுதலைப் போர் பெரும் பின்னடைவுக்குள்ளானது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் நிராயுதபாணிகளாக 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த களத்தில் இனப்படுகொலைக்குள்ளாக நேரிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளுமைக் காலத்தில் எந்த ஒரு வெளிநாட்டிலும் எந்த ஒரு தாக்குதலையும் மேற்கொள்ளாத நிலையில் உலக நாடுகள் தடை மேல் தடை விதித்து தமிழர்களை தனிமைப்படுத்தியது. இந்த தடைகளை உடைக்கும் விதமாக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு தொடர்ந்தது

இவ்வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதிதான் விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான அனைத்து தடை கட்டுப்பாட்டுகளையும் நீக்கி உத்தரவிட்டது.

இதன் மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டுவிட்டது என்ற செய்தி உலகத் தமிழினத்தை பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தர உழைத்த அனைத்து புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்துள்ள தடையை நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பண்ருட்டி வேல் முருகன்

https://m.facebook.com/story.php?story_fbid=860704170631204&id=100000748877773

Edited by துளசி

ஐரோப்பிய நீதிமன்றத்தின் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் எதிரிகளுக்கு மட்டுமல்ல செருப்படி, இதுவரை தமிழீழக் கொடியை ஏற்க மறுத்து அதற்கு கூச்சமில்லாமல் வெள்ளைக்காரனுக்கு பிடிக்கவில்லை என்று கூறிய அனைவருக்கும் இத்தீர்ப்பு செருப்படிதான்.....இனி எத்தடையும் இல்லாமல் இயங்குவோம்..........

10571965_809530895763928_327047317254097

- பரமேஸ்வரன்

https://m.facebook.com/photo.php?fbid=809530895763928&id=100001210740730&set=a.100287666688258.57.100001210740730&source=57

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனவாத சிங்களவனை விட மிகுந்த காழ்ப்புணர்வுடன் தடை எடுபடபோவுதாம் என்றவுடன் பிறசர் ஏறி விடிய விடிய கீப்பர் இல்லாத கோல்போஸ்ருக்குள் பந்தை அடிச்சிருக்கினம்.நம்மைடை மாற்றுகருத்துக்கள்.

ஆனாலும் சிறு திருப்பத்தை கூட சகித்துக்கொள்ளமுடியாத மனநிலை பிறள்வுள்ளவர்களாக நம்முடைய சமூகத்தில் வாழ்ந்து  கருத்தாடல் யாழில் எழுதுகிறம் என்று உறுதிபடுத்தபடாத விஷக்கருத்துக்களை யாழில் எழுதுவது தமிழர் சேனையை கொடூரமிக்கவர்களாக காட்ட ஒரு விம்பத்தை கஸ்டபட்டு உருவாக்குகிறார்கள், அதில் வெற்றியும் கண்டு வருகிறார்கள். .........

 

  • கருத்துக்கள உறவுகள்

புலி அரசியலை எதிர்ப்பது ஒன்றே எஞ்சிய மக்களை காவுகொடுப்பதில் இருந்து காப்பாற்ற ஒரே வழி. புலி அரசியல் உயிரப்புடன் இருக்கும் வரை சிங்கள ஆக்கிரமிப்பில் இருக்கும் மக்களுக்கு விமோசனம் என்பது கிடையாது. இலங்கையில் வாழும் வறுமைப்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இரண்டு பொது எதிரிகள் ஒன்று சிங்களப் பேரினவாதம் மற்றது மையவாதமாக வளர்ந்து நிற்கும் புலி அரசியல். இரண்டும் உயிர்வாழ எப்போதும் தமிழர்களின் உயிர் உடமைகள் அவசியமாக இருந்து வருகின்றது.

 

சிறிலங்காவில் நாங்கள் புலி அரசியலை விட்டாலும் சிங்களவர்களுக்கு அது தேவை காலத்தில் தமிழர்கள் என்று சொல்லி அரசியல் நடத்தினார்கள் இப்ப கொட்டி என்று சொல்லி அரசியல் நடத்துகிறார்கள் http://www.yarl.com/forum3/index.php?/topic/147418

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இது முதல் படி.. இதற்குப் பிறகு தடையை நீக்கினால்.. வரக்கூடிய கருத்துக்கள்.

"ஹிஹி.. இது இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கும் ஐரோப்பிய யூனியன்தானே.."

"அமெரிக்கா, யூகே இன்னும் நீக்கவில்லை. நீக்கவும் மாட்டார்கள்"

"செத்த ஆட்டுக்கு சத்திரசிகிச்சை எதுக்கு?" :o

"அன்றே சொன்னோம்." :icon_mrgreen:

"கந்தன் கருணையின் போஹ்தே தடை செய்திருக்க வேணும்.." :wub:

இதையெல்லாம் தாண்டி நடக்கவேண்டியது எல்லாம் நடக்கத்தான் போகுது. :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரத்தில் புளொட் ஆறு புலிகளைக் கொலை செய்து புதைந்த படங்கள் வெளி வந்த பின்னர்தான் புளொட்டுக்கு சப்போர்ட் பண்ணிய சனம் எல்லாம் புலிக்குச் சப்போர்ட் பண்ணத் தொடங்கியது.

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரத்தில் புளொட் ஆறு புலிகளைக் கொலை செய்து புதைந்த படங்கள் வெளி வந்த பின்னர்தான் புளொட்டுக்கு சப்போர்ட் பண்ணிய சனம் எல்லாம் புலிக்குச் சப்போர்ட் பண்ணத் தொடங்கியது.

உண்மைதான் புலவர்.. அதுவரைக்கும் இவங்கள் 24 மணித்தியாலத்தில் அடிச்சுப் பிடிப்பாங்களாம் என்றுதான் ஊரில் பேசிக்கொண்டவை.. :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  ஒளி  தெரிகிறது.

 

பழையவை  எல்லாவற்றையும் மறந்து  புதிதாக பயணிப்போம் உறவுகளே..

 

தாயக  மக்களின் இன்றையநிலை  கொஞ்சம் யோசியுங்கள்

எமக்கள் எந்த பிரிவும் வேண்டாம்

அது தாயக  மக்களை  நிர்க்கதியாக்கும்........ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் குத்தி முறிந்து கதைப்பது எல்லாம் எல்லோரும் முன்னரே கதைத்தவைதான். என்ன எல்லோரும் தங்கள் கொள்கைப்பிடிப்பில் உறுதியாக இருக்கின்றார்கள்!

கோசான் சே குறிப்பிட்டமாதிரி புலிகளைத் தடைசெய்யப் பயன்படுத்திய நடைமுறைகள் தவறு என்றுதானே தீர்ப்பு சொல்கின்றது. அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்து வென்றால் தடை தொடரத்தானே போகின்றது. சிலவேளை புலிகள் அமைப்பு தற்போது இல்லை என்பதால் ஐரோப்பிய யூனியன் பேசாமல் இருக்கலாம். ஆனால் இலங்கை அரசு தனது ராஜதந்திரிகளைப் பாவித்து தடையை நீடிக்கத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை மறக்கக்கூடாது.

முன்னரும் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவர்கள் என்றபோது ஆரவாரித்து மகிழ்ந்திருந்தோம். ஆனால் அவர்கள் இன்னமும் உள்ளேதானே இருக்கின்றார்கள். அதுமாதிரி இதிலும் அவசரப்பட்டு ஆரவாரித்துக்கொண்டிருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

##தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் ஐரோப்பா சென்றார் - மகிந்த

http://www.pathivu.com/news/34680/57//d,article_full.aspx

உரிமை கோரல் போட்டி இந்தப்பக்கத்தாலும் வருமெண்டு நான் கனவிலும் எதிர்பார்க்கேல்ல.... :D

  • கருத்துக்கள உறவுகள்

Failure is an orphan but success has many fathers என்று சும்மாவா சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலறிந்து அப்படியே சாக் ஆயிட்டன்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

##தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் ஐரோப்பா சென்றார் - மகிந்த

http://www.pathivu.com/news/34680/57//d,article_full.aspx

உரிமை கோரல் போட்டி இந்தப்பக்கத்தாலும் வருமெண்டு நான் கனவிலும் எதிர்பார்க்கேல்ல.... :D

 

 

Failure is an orphan but success has many fathers என்று சும்மாவா சொன்னார்கள்.

 

 

பல மில்லியன் யூரோ சொத்துக்களை KPயிடம் இருந்து மடக்கும் அரசாங்க கனவு கலைந்து போனது என்கிறார் மங்கள:-

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:-

mangala-samaraweea_CI.jpg

ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட்டால், சொத்துக்கள் முடக்கமும் நீக்கப்படும் என அரசாங்கம் எதிர்பார்த்தது, பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான சொத்துக்கள் கே.பியிடமேயுள்ளன, பிரபாகரன் திரும்பி வந்து உரிமை கோரப்போவதில்லை என்பதும் அரசிற்க்கு தெரியும்,

கே.பி ஊடாக அந்த சொத்துக்களை தாங்கள் அனுபவிக்கலாம் என எதிர்பார்த்தே அரசு தடைநீக்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது எனஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர  குற்றம்சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன், விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடகளில் பெருமளவு சொத்துக்கள் உள்ளது.   இந்த சொத்துக்கள் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்பட்டதால் இதனை கட்டுப்படுத்தவேண்டிய தேவை காணப்பட்டது.

முக தீவிரமான முயற்சிகளின் பின்னரே 2006 இல் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்தது, சொத்துக்களை முடக்கியது. பலத்த சிரமத்தின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் காப்பாற்ற தவறியுள்ளது.

ஆரசாங்கத்திடம் ஒழுங்கான வெளிவிவகார கொள்கை இல்லாததே அதற்கு காரணம்,

கே.பி, கருணா போன்றவர்களுக்கு ஆடம்பரவ  வாழ்க்கை வழங்கப்பட்டுள்ள அதேவேளை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டடின் பெயரில் அப்பாவி தமிழ்மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதன் மூலம் உலகிற்க்கு இலங்கை அரசாங்கம் தெரிவிக்கும் செய்தி என்ன? இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் அரசசார்பற்ற அமைப்புகளை நடத்துவதற்க்கு அரசாங்கம் அனுமதியளித்துவிட்டு , உலக நாடுகள் தடைவிதிக்கவேண்டும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

விடுதலைப்புலிகளின் மீதான தடை தொடர்ந்து ஜரோப்பாவில் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் வெளிவிவகார அமைச்சு எடுக்கவில்லை , இதற்கான காரணமுள்ளது, தடைகள் நீக்கப்பட்டால், சொத்துக்கள் முடக்கமும் நீக்கப்படும் என அரசாங்கம் எதிர்பார்த்தது, பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான சொத்துக்கள் கே.பியிடமேயுள்ளன, பிரபாகரன் திரும்பி வந்து உரிமை கோரப்போவதில்லை என்பதும் அரசிற்க்கு தெரியும்,

கே.பி ஊடாக அந்த சொத்துக்களை தாங்கள் அனுபவிக்கலாம் என எதிர்பார்த்தே அரசு தடைநீக்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112653/language/ta-IN/article.aspx

விடுதலைப்புலிகளை தடை செய்யப்பட்ட  வழிமுறைகள்  தவறு ...........
 
இங்கே இந்தியாவின் குரோதத்தன்மையே முக்கிய இடம் வகிக்கின்றது,இந்த தடையை இந்தியாவைக்கொண்டே சிறிலங்கா நடை முறைப்படுத்தியது ,அதுவும் அப்போது அவர்களுக்கு இருந்த சாதகமான நிலையை பயன்படுத்தி  . 
நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி இந்தியாவின் செல்வாக்கு  இந்த விடயத்தில் எடுபடமாட்டாது என்பது நிச்சயமாகின்றது .  அதேபோல தற்போது இலங்கை அரசிற்கு சர்வதேச ரீதியாக  இருக்கும் நெருக்கடிகள் மத்தியல் அவர்களால் அவர்களின் பொய் இராஜ தந்திரங்கள் எடுபடாது  என்ற நிலையம் உள்ளது 
 
இந்தநிலையில் எம் போராட்டம் ஆயுத போராட்டமாக தள்ளப்பட்டிருந்த அவ்வேளையில் ஏற்பட்ட இந்த தடை தற்போது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு அரசியல் போராட்டமாக  விஸ்தரிக்கப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என்பதே மிக முக்கியமான விடயம் .......

சிறிலங்காவில் நாங்கள் புலி அரசியலை விட்டாலும் சிங்களவர்களுக்கு அது தேவை காலத்தில் தமிழர்கள் என்று சொல்லி அரசியல் நடத்தினார்கள் இப்ப கொட்டி என்று சொல்லி அரசியல் நடத்துகிறார்கள் http://www.yarl.com/forum3/index.php?/topic/147418

 

நிச்சயமாக.. இங்கே அற்தமற்றுத் தூக்கிப்பிடிக்கும் புலிக்கொடி சிறிலங்காவில் பேரினவாதத்தை வலுவாக்கிக்கொண்டிருக்கும்.

 

இத் தடை நீக்கல் குறித்த செய்திகளும் அதற்காக ஏதோ தமிழீழம் கிடைத்த ரேஞ்சில் துள்ளிக்குதிப்பதும் மகிந்த கோத்தா போன் பேரினவாதத் தலமைகளின் வாக்கு வங்கியை நிரப்பும். கடும்போக்கு பேரினவாதத் தலமைகளை சிங்கள மக்கள் தொடர்ந்து தேர்ந்தெடுக்க வழிவகுக்கும்.

 

கிளிநொச்சியில் மகிந்தர் ...

புலம்பெயர் தமிழர்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசிப்பதற்கு தாம் தயாரென்று கிளிநொச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்

 

.

தம்மால் எந்த ஒரு துரும்பைத் தன்னிலும் செய்ய முடியாது என்று தெரிந்தும் நாடுகடந்த அரசு அமைக்கப்பட்டதன் நோக்கம் "தனி நாடு" என்று குரைத்துக்கொண்டிருப்பதற்கே. அப்போதுதான் மகிந்த கோத்தா போன்றவர்கள் தொடரந்து பேரினவாத அரசியலை தொடர முடியும்.

 

அது போல்தான் புலி அரசியலும் புலிக்கொடி தூக்குதலும். இவை நூறு வீதம் சிங்களப் பேரினவாதத்திற்கே சாதகமானது தவிர போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கல்ல.

 

இறுதி யுத்தத்தில் மக்களை பலிகொடுத்து புலிகளை காப்பாற்ற முனைந்தோம். இப்போதும் அதையே தொடர முனைகின்றோம்.

 

புலம்பெயர் தமிழன் சிங்கள பேரினவாத அக்கிரமங்களை எடுத்துரைப்பவனாக படுகொலைகளை எடுத்துரைப்பவனாக அதற்கான நீதிகேட்பவனாக தனது பணியை தொடர்வது வேறு குழுவாதங்களாக அடயளத் தேடல்களாக அதிகாரத் தேடல்களாக தேசீய வியாபராம் செய்வது ஆட்சி அதிகாரம் அமர்வுகள் என்ற பயித்தியக்காரத்தனங்கள் வேறு.

 

புலியின் உயிர்ப்பு மகிந்த கோத்த போன்றவர்களின் ஆட்சிக்கதிரையை பலப்படுத்துவதாக இருக்கும்போது இவ்விரு சக்திகளும் நட்பு சக்திகளே. இதனால் மக்களுக்கு துன்பமே. மக்கள் மீதும் அவர்கள் விமோசனத்தின் மீதும் பற்றுள்ளவன் ஒருபோதும் புலிப் பயங்கரவாத அரசியலுக்கு புத்துயிர் கொடுக்க மாட்டான்.

 

 

புலிகள் மீதான தடை நீக்கத்தை வரவேற்கிறது கூட்டமைப்பு!

[saturday 2014-10-18 19:00]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவது அவசியம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான நீதியான - நியாயமான விடயங்களை ஆராய்ந்து அந்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக தடையை நீக்கியுள்ளது.

தமிழரசுக் கட்சி மாநாட்டின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்காது விட்டால் திட்டமிட்டபடி தொடரப்படும் அறவழிப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர் சமூகம் ஜனநாயக ரீதியில் தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தின் போது நான் கோரிக்கை விடுத்திருந்தேன் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=118953&category=TamilNews

ஐரோப்பிய யூனியனிலை இப்ப கிட்டடியிலை இணைஞ்ச  குரோசியாவோடை சேர்த்து  28 நாடுகள் ஆகின்றன...  இதில் இருக்கும் எத்தினை நாடுகளிலை இலங்கை அரசாங்கத்துக்கு தூதரகங்கள் இருக்கு...?? 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.