Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

 

சென்னை: மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடிருந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

 

https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10470955_819412018096933_500634717372297573_n.jpg?oh=ef7f5904ec30b8a3448fa12aaaf83175&oe=54EB021B

 

10470955_819412018096933_500634717372297

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வசனங்களை சிறப்பாக உச்சரித்துப் பேசக் கூடியவர். ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.எஸ்.ஆர், விஜய குமாரி ஜோடி .. நேற்றுப் பார்த்தது போல நினைவில் இருக்கின்றது!

 

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

s,s-rajendran-pasaway-241014-300-seithyc

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார். அவருக்கு வயது 86. ஸ்ரீ ஆண்டாள், பராசக்தி, பூம்புகார், சிவகங்கை சீமை, தெய்வப்பிறவி, ஆலயமணி, சாரதா உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில், எஸ்.எஸ்.ராஜேந்தின் நடித்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என, திரையுலகில் பரபரப்பாக இருந்து வந்தார். பின், குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர், சிலம்பரசனுடன், தம் படத்தில் நடித்த பின், நடிப்பதையும் தவிர்த்துவிட்டார். பட விழாக்கள், முக்கிய விழாக்களில் மட்டும் கலந்து கொண்டார். கடந்த ஓராண்டாக, விழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்து விட்டார்.

   

சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு, இரண்டு தினங்களுக்கு முன், மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே, ஆழ்வார்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூச்சு திணறல் அதிகமானதால், நேற்று, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(அக்., 24ம் தேதி) காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

1928-ம் ஆண்டு மதுரையை அடுத்த சேடப்பட்டியில், சேடப்பட்டி சூர்யநாராயண தேவர் ராஜேந்திரனாக பிறந்தவர் எஸ்.எஸ்.ஆர். நடிப்பின் மீது ஆசை கொண்டு சினிமாவுக்கு வந்தார். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்திலேயே தானும் அறிமுகமானார். தொடர்ந்து மனோகரா, ரத்தக்கண்ணீர், குல தெய்வம், முதலாளி, தைபிறந்தால் வழிபிறக்கும், சிவகங்கை சீமை, ராஜா தேசிங்கு, குமுதம், முத்து மண்டாம், ஆலய மணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார், மணி மகுடம், தெய்வப்பிறவி, ஆலயமணி, சாரதா உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சிவாஜியுடன் ஏராளமான படங்களில் நடித்தவர் பின்னர் குணச்சித்திர நடிகராகவும் மாறினார். நடிகராக மட்டுமல்லாது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் எஸ்.எஸ்.ஆர்., கடைசியாக சிம்பு நடித்த தம் படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அவ்வப்போது சினிமா விழாக்களில் மட்டும் பங்கேற்று வந்தார்.

லட்சிய நடிகர் பட்டம்

பெரியார் மற்றும் அண்ணாதுரையின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். மேலும் தனது எழுச்சி மிகு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு லட்சிய நடிகர் என்று பட்டமும் கொடுக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.,-ஆன முதல் இந்திய நடிகர்

நடிகராக மட்டுமல்லாது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் அரசியல் ஈடுபாட்டை பார்த்து எஸ்.எஸ்.ஆரும் அரசியலுக்கு வந்தார். ஆரம்பகாலத்தில் திமுக., வில் இருந்த ராஜேந்திரன், 1962-ம் ஆண்டு, திமுக., சார்பில் தேனி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தியாவில் எம்.எல்.ஏ.ஆன முதல் இந்திய நடிகர் என்ற பெருமை எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு. தொடர்ந்து திமுக சார்பில் எம்.பி.யாகவும் இருந்தவர், பின்னர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக., கட்சியில் இணைந்தார். 1981-ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

உடல் அஞ்சலிக்காக வைப்பு

மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பங்கஜம், நடிகை விஜயகுமாரி, தாமரைச்செல்வி என்ற மூன்று மனைவிகளும், இளங்கோவன், ராஜந்திர குமார், கலைவாணன், செல்வராஜ், பாக்யலட்சுமி, ரவிக்குமார், கண்ணன் என்ற 7 குழந்தைகளும் உள்ளனர். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடல், சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது மறைவு செய்தியை கேட்டு ஏராளமான திரைபிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று மாலையே எஸ்.எஸ்.ஆரின் இறுதிசடங்குகள் நடக்கிறது.

சச்சு இரங்கல்

சொர்க்கவாசல் படத்தில் தான் முதலில் பார்த்தேன். ராஜாஜி படத்தில் தங்கையாக நடித்தேன். மூத்த நடிகர்கள் ஒவ்வொருவாராக இறந்து வருவதாக வருத்தமாக இருக்கிறது. அவரது நடிப்பில் சோகம் , சிரிப்பு எல்லாமே இருக்கும். யாருக்கும் பயந்தவர் கிடையாது. அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை, இன்றைக்கு அவர் நம்மிடம் இல்லாதபோது மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பாக்யராஜ் இரங்கல்

லட்சிய நடிகர் என்ற பெயருக்கு ஏற்றபடியான கொள்கைகளை உடையவர் எஸ்.எஸ்.ஆர். அவரது நிறைய படங்களை பார்த்துள்ளேன். பெண்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர். அவரது படங்கள் மீண்டும் மீண்டும் நம்மை ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கும். அவருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=119306&category=EntertainmentNews&language=tamil

ஆழ்ந்த இரங்கல்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

எஸ். எஸ். ஆர். அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் (1928 - அக்டோபர் 24, 2014) தமிழகத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. 1962 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 

ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த ராஜேந்திரன் 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். எம். ஜி. ராமச்சந்திரன் ஒரு சில காட்சிகளில் தோன்றி நடித்த இத்திரைப்படத்தில் ராஜேந்திரன் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தின் பின்னர் நடிக்க வாய்ப்பின்றி இருந்தவருக்கு கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த தை பிறந்தால் வழி பிறக்கும் வெற்றிகரமாக ஓடியது.

 

எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

 

பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம் சாரதா போன்ற திரைப்படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ். எஸ். ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் தோன்றி நடித்தார்கள்.

 

சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் சின்னத்திரையில் தோன்றி நடித்தார். 1980களில் மோகன் பிரபலமாக இருந்த நேரத்தில் அன்பின் முகவரி என்ற படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றி நடித்தார்.

 

1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார்.

 

அரசியல்

1962 இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி. மு. க.வின் சார்பில் 1970 ஏப்ரல் 3 ஆம் நாள் முதல் 1976 ஏப்ரல் 2 வரை பணியாற்றினார்.

1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மறைவு

மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்எஸ்ஆர் அக்டோபர் 24, 2014 காலை 11 மணிக்கு சென்னையில் காலமானார்.

 

ஆதாரம் விக்கிப்பீடியா

 

எனக்கு மிகவும் பிடித்த இவரது பாடல் .

ஆழ்ந்த இரங்கல்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நடிகர்.
இவரை தமிழ் திரையுலகம், இன்னும் கூடுதலாக பயன்படுத்தி இருக்கலாம்.
ஆழ்ந்த.... அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.