Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக போராட்டங்களால் பலன் இல்லை; பிரச்னை தான்: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் பளீச் பேட்டி

Featured Replies

Tamil_News_thumb_1101000.jpg
 
சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
தமிழ் இதழியல் கருத்தரங்குசென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையுடன், இலங்கை, யாழ்ப்பாண பல்கலையின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இணைந்து, கடந்த 20ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரையிலான, 12 நாள், தமிழ் இதழியல் கருத்தரங்கை நடத்துகின்றன. அதில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து, 25 மாணவர்கள், ஒரு இயக்குனர் பங்கேற்றுள்ளனர்.
 
யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
 
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழகம் வருவதாக திட்டமிட்ட போது எப்படி உணர்ந்தீர்கள்? 
 
கயிலைநாதன் கார்த்திக்: தமிழ் இதழியல் பற்றி, அதன் ஆணிவேரான தமிழகத்தில் கள ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததால், அதற்கான ஏற்பாடுகளை செய்யும் போது மனதுக்குள், தமிழகத்தை பற்றிய இனிய கற்பனைகள் விரிந்தன.
 
இலங்கையில், தற்போது தமிழ் மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழலோ, இருட்டடிக்கப்படும் சூழலோ உள்ளதா? 
 
செபஸ்தியம்பிள்ளை காளிஸ்தான்: எங்கள், யாழ்ப்பாண பல்கலையை பொறுத்தவரை, அது போன்ற எந்த சூழலும் இல்லை. சில இடங்களில் இருக்கலாம்.அதை பற்றிய புள்ளி விவரங்கள் கிடைக்காத போது, தெளிவாக சொல்ல முடியாது. 
வேலைவாய்ப்புகளில் அப்படிப்பட்ட சூழல் இருப்பதாக, பலர் தெரிவித்து உள்ளனர்.
 
யாழ்ப்பாண பல்கலையில் சிங்கள மாணவர்கள் படிக்கின்றனரா, அவர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி உள்ளது? 
 
கிருத்திகா: போருக்கு பின் வந்த காலங்களில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், சிங்கள மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள், எங்களையோ, நாங்கள் அவர்களையோ வெறுக்கும் சூழல் ஏதும் இல்லை.படிப்பு இயல்பாகவே இருக்கிறது. அவர்களும், எங்களுக்கு தோழர்களாகவே இருக்கின்றனர்.
 
இலங்கையில், தற்போது தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா, அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கிறதா? 
 
சிவரேஸ்வரன் சுமணன்: நாங்கள் இருக்கும் பகுதி யாழ்ப்பாணம். அங்கு, ஓரளவு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. மற்ற இடங்களின் நிலை பற்றி எங்களுக்கு தெரியாது.பொதுவாகவே, எல்லா கால கட்டத்திலும் கல்வி, மருத்துவ சேவைகள் மறுக்கப்பட்டதாக எனக்குதெரியவில்லை. முகாம்களில் இருந்து மீள் குடியமர்த்தப்படுவதில் நிறைய இழுபறியும், பல அரசியல் குறுக்கீடுகளும், ஊழல்களும் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. அதில், பல இடங்களில் பெயரளவுக்கே நடத்திருப்பதாகவும் சொல்லலாம்.
 
தமிழக அரசியல்வாதிகளின் கண்டனங்களுக்கும் தீர்மானங்களுக்கும், இலங்கை அரசிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அப்போது, அங்குள்ள தமிழர்களின் நிலைப்பாடு என்ன? 
 
கயிலைநாதன்: தமிழக தலைவர்களின் கண்டனங்களுக்கும், தீர்மானங்களுக்கும், இலங்கையில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தியதாக எங்களுக்கு தெரியவில்லை. இலங்கை அரசை கண்டித்து, எப்போதெல்லாம் 
 
 
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறதோ, அப்போதெல்லாம் தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப்போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்.தமிழக தலைவர்கள் இணைந்து, ஒருமித்த குரலில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாததால், இந்திய அரசின் அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதில்லை. எனவே, தீர்மானங்கள், இலங்கை தமிழர்கள் மேல் உள்ள பற்றை காட்டுவதாக அமைகின்றனவே தவிர, உதவுவதாக இல்லை.அறிக்கைகளை விட்டு விட்டு, ஆக்கங்கள் தொடர்ந்தால், தமிழக தலைவர்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.
 
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது பற்றி? 
 
கிருத்திகா: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி, தமிழக ஊடகங்களின் வழியாகத் தான் நாங்கள் அறிந்து கொள்கிறோம்.ஆனாலும், இலங்கை தமிழ் மீனவர்களின் எல்லையில், தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட மடிவலைகளுடன் வந்து மீன்பிடிப்பதால், இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்கு கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், மீனவர்கள் தாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
 
தமிழகத்திற்கு வந்ததில் இருந்து நீங்கள் சந்தித்த இடர்பாடுகள் என்னென்ன? 
 
இயக்குனர் தேவானந்த்: சென்னை விமான நிலையத்தில், நாங்கள் விசாரிக்கப்பட்டோம். எங்கள் மாணவர்கள், இங்குள்ள உளவுத் துறையினரால், துருவித்துருவி விசாரிக்கப்படுவதாக உணர்கிறோம். அதற்கு, ஆதாரம் இல்லை.சென்னை பல்கலையில் தான், நான் உயர்கல்வி முடித்தேன். தமிழகம் போன்ற பரந்துபட்ட மாநிலத்தில், தமிழ் மாணவர்களுடன் இணைந்து யாழ் மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்கும் போது, பண்பாடு, கலை, கலாசாரம், வாழ்வியல், மொழி உள்ளிட்ட கூறுகளை கவனிக்கும் திறன் ஏற்படுகிறது.இங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது.மேலும், இது போன்ற பல கருத்தரங்குகளை இரு நாடுகளும் நடத்துவதால், மாணவர்களுக்கு இயல்பான புரிந்துணர்வும், உறவும் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

பளீச்.. பளீச் பேட்டி, 'ப்ளீச்சிங் பவுடர்' போட்டது போல் தெளிவாக இருக்கு.

தமிழகத்திலிருந்து யாரும் குரல், கறல், கூவுதல் யாரும் கொடுக்கக் கூடாது.

யாழ் மக்கள் பிரச்சனையின்றி நிம்மதியாக, சிறப்புடன் வாழட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பேட்டி. உண்மைதான், தாரளமாக மது, ஏராளமாக மாது (விலைமாதர்) ஈழம் கிடைத்தாலும் இப்படியான வால்வு கிடைக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்

தினமலர் பேட்டி என்றவுடன் உஷாராகிவிட்டேன்.. :icon_idea:

பேட்டியை தயார் செய்தவர்கள் கொஞ்சம் கவனமெடுத்து இயற்கையான பேட்டியாக அமையுமாறு தயார் செய்திருக்கலாம். முழுவதுமாக சொதப்பிவிட்டார்கள். மாணவ நடிகர்களுக்கு வசனங்களை எழுது கொடுத்தவர்கள் அடுத்தமுறை இதில் கவனமெடுப்பார்கள் என நம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாண பல்கலையில் சிங்கள மாணவர்கள் படிக்கின்றனரா, அவர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி உள்ளது? 
 
கிருத்திகா: போருக்கு பின் வந்த காலங்களில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், சிங்கள மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள், எங்களையோ, நாங்கள் அவர்களையோ வெறுக்கும் சூழல் ஏதும் இல்லை.படிப்பு இயல்பாகவே இருக்கிறது. அவர்களும், எங்களுக்கு தோழர்களாகவே இருக்கின்றனர்.
 
 
???????????????
  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாய் இப்படியான திரிகளில் தமிழுக்கு எதிரானவர்களுக்கு வக்காலத்து வேண்டுபவர்களை காணவில்லை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாண பல்கலையில் சிங்கள மாணவர்கள் படிக்கின்றனரா, அவர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி உள்ளது? 
 
கிருத்திகா: போருக்கு பின் வந்த காலங்களில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், சிங்கள மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள், எங்களையோ, நாங்கள் அவர்களையோ வெறுக்கும் சூழல் ஏதும் இல்லை.படிப்பு இயல்பாகவே இருக்கிறது. அவர்களும், எங்களுக்கு தோழர்களாகவே இருக்கின்றனர்.
 
 
???????????????

 

 

அபி ஒக்கம எக்க யாலுவோ  :D

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை வாழ்வியலுக்கு நடைமுறை வாழ்வியல் கசப்பாகத்தான் இருக்கும்!

யாழ் பல்கலையில் படிப்பவர்கள் முட்டாள்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை வாழ்வியலுக்கு நடைமுறை வாழ்வியல் கசப்பாகத்தான் இருக்கும்!

யாழ் பல்கலையில் படிப்பவர்கள் முட்டாள்களா?

நிச்சயமாக இல்லை. ஆனால் அனுபவத்தில் குறைந்தவர்கள்.

ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு போட்டு வாங்குவது கைவந்த கலை. இதே பேட்டியை விகடன் செய்திருந்தால் சற்று வித்தியாசமாக வந்திருக்கும். மாணவர்கள் என்னவோ ஒன்றுதான்.

பளீச்.. பளீச் பேட்டி, 'ப்ளீச்சிங் பவுடர்' போட்டது போல் தெளிவாக இருக்கு.

தமிழகத்திலிருந்து யாரும் குரல், கறல், கூவுதல் யாரும் கொடுக்கக் கூடாது.

யாழ் மக்கள் பிரச்சனையின்றி நிம்மதியாக, சிறப்புடன் வாழட்டும்.

 

ராசவன்னியன் அவர்களின் பதிலை மீண்டும் பார்க்கவும். தமக்காக குரல் கொடுக்க வேண்டாம் என்று எங்கு சொல்லியுள்ளார்கள்?

 

//

 

தீர்மானம் நிறைவேற்றப்படுகிறதோ, அப்போதெல்லாம் தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப்போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்.தமிழக தலைவர்கள் இணைந்து, ஒருமித்த குரலில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாததால், இந்திய அரசின் அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதில்லை. எனவே, தீர்மானங்கள், இலங்கை தமிழர்கள் மேல் உள்ள பற்றை காட்டுவதாக அமைகின்றனவே தவிர, உதவுவதாக இல்லை.அறிக்கைகளை விட்டு விட்டு, ஆக்கங்கள் தொடர்ந்தால், தமிழக தலைவர்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

 

//

 

அவர்கள் சரியாகத்தானே சொல்லியுள்ளார்கள்? தமக்காக அறிக்கைகளை மட்டும் வெளியிடாது தகுந்த செயற்பாடுகளையும் செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்கள். அதுவும், தம்மை உளவுத் துறையினர் பின் தொடர்வதாக சந்தேகித்துக் கொண்டு இப் பதிலை வழங்கியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை வாழ்வியலுக்கு நடைமுறை வாழ்வியல் கசப்பாகத்தான் இருக்கும்!

யாழ் பல்கலையில் படிப்பவர்கள் முட்டாள்களா?

"இவர்கள் முட்டாள்களா?" :rolleyes:

உங்கள் கேள்வி தான் அப்பாவித் தனமாக இருக்கிறது: சில நாட்கள் கருத்தரங்குக்கு ஊரில் குடும்பத்தினரை விட்டு விட்டு வந்து, திரும்பவும் போய் யாழில் வசிக்கப் போகிறவர்கள் முட்டாள் தனமாகப் பேட்டி கொடுக்க முடியாது வாலி. அவர்கள் புத்திசாலித்தனமாகத் தான் இருந்திருக்கிறார்கள்! வன்னி வைத்தியர்களின் பேட்டி, பின்னைய மறுப்பு, இதெல்லாம் பார்த்த பிறகும் எங்கட ஆட்கள் இவ்வளவு அப்பாவிகளாய் இருப்பதே சிங்களவனின் பலம்! (திரும்ப வந்து கேட்பார்கள் பாருங்கள்: "இது இந்தியாவில் கொடுத்த பேட்டி தானே, பயப்பட அவசியமில்லைத் தானே எண்டு! :lol:)

  • கருத்துக்கள உறவுகள்

....

அவர்கள் சரியாகத்தானே சொல்லியுள்ளார்கள்? தமக்காக அறிக்கைகளை மட்டும் வெளியிடாது தகுந்த செயற்பாடுகளையும் செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்கள். அதுவும், தம்மை உளவுத் துறையினர் பின் தொடர்வதாக சந்தேகித்துக் கொண்டு இப் பதிலை வழங்கியுள்ளார்கள்.

 

தமிழக அரசியலில் அறிக்கைகளும், தீர்மானங்களும் மக்களை விழிப்பு நிலை / கொதிநிலையில் ஒருங்கிணைத்து வைக்க அவசியம் நிழலி. அதன் தொடர்ச்சியாக செயலாற்றல் முக்கியம். இந்தி எதிர்ப்பு போராட்டமும் அப்படியே நடந்தது.

துரதிஸ்டவசமாக தற்போதைய அரசியல்வாதிகள் தீர்மானங்களுக்கு அப்புறம் வினைத்திறனாற்றவில்லை.

 

இந்த பேட்டி இயல்பான பேட்டி அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே தயார் செய்யபட்ட பேட்டி. அந்த அப்பாவி மாணவர்கள் பேட்டி எடுபவரால் தயாரிக்கபட்ட பதிலை வழங்கி யுள்ளனர். அதனால் இந்த பேட்டி தொடர்பான நேர்மறை எதிர்மறை விமர்சனங்களை வைக்காது விடுவது நல்லது என்பது எனது கருத்து.

இரண்டில் ஒன்றுதான் வரும் நியாயம் ஒரு போதும் வராது .

 

தமிழக மாணவர்கள் தான் எமது ஒரே நம்பிக்கை என்று பேட்டி கொடுத்தால் சும்மா அதிரும் அல்ல  :icon_mrgreen: .

 

பளீச்.. பளீச் பேட்டி, 'ப்ளீச்சிங் பவுடர்' போட்டது போல் தெளிவாக இருக்கு.

தமிழகத்திலிருந்து யாரும் குரல், கறல், கூவுதல் யாரும் கொடுக்கக் கூடாது.

யாழ் மக்கள் பிரச்சனையின்றி நிம்மதியாக, சிறப்புடன் வாழட்டும்.

போன வருடம் வந்த இந்த செய்தியையும் வாசியுங்கள்.

http://www.eelamview.com/2013/03/18/jaffna-university-support/

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி கொடுத்த மாணவர்கள் திரும்பி போன பின் நடக்கும் அடக்குமுறைக்குப் பயந்துதான் இப்படி பொய் சொன்னார்கள் என்பது நகைப்புக்கிடமானது.

அப்படியாயின் தினமலர் அணுகிய போது பேட்டி கொடுக்காமல் தவிர்திருக்கலாமே?

ஏன் நெஞ்சறிய பொய் சொல்லவேண்டும்.

தினமணி பேட்டி கொடுக்கும் படி மிரட்டியது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

Edited by goshan_che

ஈழ தமிழ்மக்களுக்கு எதிராக எந்த அடக்கு முறையும் இல்லை ஏதே சாதாரணமான சில நடைமுறை பிரச்சனைகள் மட்டுமே அவர்களுக்கு இருக்கிறது என்ற என்ன கருத்துருவாக்கத்தை உருவாகுவதற்காக தயார் செய்யபட்ட பேட்டி போலவே இது காணப்படுகிறது. மாணவர்களின் ஒவ்வொரு கேள்விக்கான பதிலிலும் கேள்வி கேட்டவருக்கு பிரச்சனையில் இருந்த அக்கறையை விட பதிலில் அலட்சியம் தெரிகிறது. மாணவர்கள் தாங்களாக கொடுத்த பேட்டி என்றால் அந்த அலட்சியம் பதிலில் தெரியாது.

 

அப்படி மாணவர்கள் சரியாக உண்மையை தான் தெரிவித்துள்ளார்கள் இதுவே அங்கு உண்மை நிலை  என்றால் எதிர்வரும் தேர்தலில்  இலங்கை தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கிறது ஒற்றுமையாக எமது தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள். எமது ஒற்றுமையை எடுத்துகாட்டுவோம்  என்று கூறும் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கோ, ஐக்கிய தேசிய கட்சிக்கோ வாக்களித்து அவர்கள் தமது பிரதிநிதிகளாக ஈழத்தமிழ் மக்கள்  தெரிவு செய்யவேண்டும். இதற்கு மேலும்  அரசியல்வாதிகள் இனப்பிரச்சனை என்று ஒன்று இருக்கிறது என்று பொய் கூறி தமிழ்மக்களை ஏமாற்ற இடமளிக்க கூடாது.

Edited by tulpen

ஊடகமாணவர்களது கருத்து அரை வேக்காடானது! மாணவர் ஒன்றியம் அறிக்கை!!

 

university_students%20union_jaffna.png

 

தமிழக மக்களின் எம் சார்ந்த உதவிகளுக்கும் உணர்வுகளுக்கும் எமது தமிழ்ச் சமூகம் உயரிய மதிப்பையும் நன்றியையும் எப்போதும் காண்பித்து வருகின்றதென யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்:-

 

தமிழக தலைவர்களின் கண்டனங்களும் தீர்மானங்களும் இலங்கையில் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை. தமிழகத்தில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது தங்களுக்கான தீர்வுகள் தள்ளிப்போவதாகவே இலங்கைத் தமிழர்கள் கருதுகின்றனர் என யாழ்.பல்கலைக்கழகத்தில் வெளி அங்கமாக இயங்கும் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் சில தரப்பினர் இந்திய தமிழக ஊடகமொன்றிற்கு பேட்டி வழங்கியுள்ளனர்.

 

மேற்படி கருத்தினை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பல்கலை சமூகமும் முற்றாக நிராகரிப்பதுடன் அவர்களது சிறுமைத்தனமான பேச்சிற்கு கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

தமிழக மக்களின் எம் சார்ந்த உதவிகளுக்கும் உணர்வுகளுக்கும் எமது தமிழ்ச் சமூகம் உயரிய மதிப்பையும் நன்றியையும் எப்போதும் காண்பித்து வருகின்றது.

 

எனவே தமிழர்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் பாதுகாக்க நமக்குள் பிளவுகள் ஏற்படாத வகையில் கருத்து பரிமாற்றங்களில் ஒன்றித்த நிலையில் இருப்பது அவசியமாகும்.

 

கருத்துச் சுதந்திரம் உண்டென கூறி தவறான தகவலை முன்னிலைப்படுத்துவது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். இனி வருங்காலங்களில் இத் தவறுகள் ஏற்படாத வகையில் உரிய தரப்பினர் கவனமெடுக்க வேண்டும்.

 

மேலும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களுக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தோடு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் என்றும் துணை நின்று பாடுபடும் என தெரிவித்துக் கொள்கிறோம் என்றுள்ளது.

 

jaffna%20uni.jpeg

 

http://www.pathivu.com/news/35085/57//d,article_full.aspx

----

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.