Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் செல்ல அனுமதி பெறுவது எப்படி?

Featured Replies

  • Replies 64
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  நாட்டுக்குள் செல்வதற்கான  அத்தனை  கேள்விகளும் உண்டு

அப்போ

வடக்கு

தமிழீழம் தான்....

தமிழ் ஈழம் என்று பேசுவதே தவறு என்றும் மற்றவர்களுக்கு ஜனநாயகம், பன்முகதன்மை,மக்கள் உரிமை என்று வகுப்பு  எடுக்கும், பக்கம்பக்கமாக சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும்,  பிரசங்கிகள் எவரும் மகிந்த அரசின் இந்த ஜனநாயக விரோத செயலை அவர்களின் வழமையான பாணியான "ஒப்புக்கு கண்டித்தல்"  என்ற ரீதியில் கூட கண்டிக்கவில்லை. எமது அபிவிருத்திகளை நாமே எமது மக்களின் வரிப்பணத்தில் செய்யகூடிய பலம் எமக்கு இருந்தும் அந்த உரிமையை பிடுங்கி கொண்டு சிங்கள அரசு வீசியெறியும் சிறிய  சலுகை அபிவிருத்திகளை விழுந்து விழுந்த ஆதரித்து அதற்காக நேரத்தை ஒதுக்கி பக்கம் பக்கமாக வக்காலத்து வாங்குபவர்கள்  இப்படிபட்ட திரிகள் பக்கம் தலை வைத்தும் பார்ப்பதில்லை. அப்படி வந்தாலும் ஜனநாய வகுப்பிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு  சிங்கள அரசுக்கு இலவசமாக முண்டு கொடுக்கும் கொத்தடிமை வேலைகளை தான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

லங்காவுக்கு திரும்பும்  ஜே வி பி சிங்களவருக்கும் மட்டும்.. எதுவும் இல்லையே..??!! :lol::D

  • தொடங்கியவர்
வடக்கு செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள்
 
வடக்கு செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
 
வடக்கிற்கு பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் தங்களது விபரங்களை மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் மூலம் சமர்ப்பிக்க முடியும் என  பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 
 
1094112328109 என்ற இலக்கத்தின் ஊடாக தொலைநகர் வாயிலாகவும்,   modclearance@yahoo.com என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தகவல்களை அனுப்பி வைக்க முடியும்.
 
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள், மன்னார் மாவட்டத்தின் வெடத்தல்தீவு பிரசேதம் மற்றும் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை வழியாகவும் வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டு கடவுச் சீட்டு உடையவர்கள் முன் கூட்டிய அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 
 
விண்ணப்பத்தாரியின்பெயர்
 
 
வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம்
 
 
பயணம் ஆரம்பிக்கப்படும் திகதி
 
 
பயணம் முடிவடையும் திகதி
 
 
பயணத்திற்கான காரணம்
 
 
பயணம் செய்வது தனியார் வாகத்திலா அல்லது வேறும் வழியிலா
 
 
தனியார் வாகனம் என்றால் அதன் பதிவிலக்கம், சாரதி பற்றிய விபரம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
 
 
பிரதேசத்தில் முதலீடு அல்லது அபிவிருத்தித் திட்டமொன்றினை மேற்கொள்ளும் நோக்கில் பயணித்தால் அந்த நிறுவனத்தின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டுமென அசராங்கம் தெரிவித்துள்ளது.
 
 
இது தொடாபில் பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாவட்டம் போறவைக்கு விசா  எடுக்கத்  தேவையில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாவட்டம் போறவைக்கு விசா  எடுக்கத்  தேவையில்லையோ?

 

வடக்கிலதான் எலிகள் இருக்குதாம்......கிழக்கில் புலிகள் இருப்பதால் தேவையில்லயாம்

கிழக்கு மாவட்டம் போறவைக்கு விசா  எடுக்கத்  தேவையில்லையோ?

 

வடக்கிலதான் எலிகள் இருக்குதாம்......கிழக்கில் புலிகள் இருப்பதால் தேவையில்லயாம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறந்த தற்போதைய வெளிநாட்டு பிரஜைகளுக்கு இதில் விதிவிலக்கு உண்டு. இந்த நடைமுறை வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கே.

இந்தியாவுக்கு வீசா எடுத்தால், கஸ்மீர், அந்தமான், லட்சதீவு மணிப்பூர் உட்ப கிட்டத்தட்ட 10 மாநிலங்களுக்கு போக முடியாது.

சீனாவில் சீனர்களே மாகாணம் விட்டு மாகாணம் போக அனுமதி எடுக்கணும்.

இவ்வளவு ஏன் ஜேர்மனியிலே தஞ்சம் கோரியவர்கள் கவுன்சில் விட்டு கவுன்சில் போக முடியாது.

இதை சொன்னா நம்மளை கைக்கூலி என்பீர்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறந்த தற்போதைய வெளிநாட்டு பிரஜைகளுக்கு இதில் விதிவிலக்கு உண்டு. இந்த நடைமுறை வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கே.

இந்தியாவுக்கு வீசா எடுத்தால், கஸ்மீர், அந்தமான், லட்சதீவு மணிப்பூர் உட்ப கிட்டத்தட்ட 10 மாநிலங்களுக்கு போக முடியாது.

சீனாவில் சீனர்களே மாகாணம் விட்டு மாகாணம் போக அனுமதி எடுக்கணும்.

இவ்வளவு ஏன் ஜேர்மனியிலே தஞ்சம் கோரியவர்கள் கவுன்சில் விட்டு கவுன்சில் போக முடியாது.

இதை சொன்னா நம்மளை கைக்கூலி என்பீர்கள்.

கனடாவுக்கு விசா எடுத்தால் எந்த மாகாணத்துக்கும் போகலாம்.. அமெரிக்காவுக்கு விசா எடுத்தால் எந்த மாநிலத்துக்கும் போகலாம்.. மலேசியாவுக்கு விசா எடுத்தால் எந்த மாகாணத்துக்கும் போகலாம்.. இப்பிடியும் யோசிக்கலாமே.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு, அமெரிக்காவுக்கு, மலேசியாவுக்கு விசா "கிடைத்தால்" -போகலாம்.

இங்கதான் இருக்கு சங்கதி. இவர்கள் தமக்கு வேண்டப்படாத வெளிநாட்டவருக்கு விசாவே கொடுக்க மாட்டாங்கள். ஒரு கம்யூனிஸ்ட் அமெரிகாவுக்குப் போக முடியுமா?

கூட்டமைப்பு சுரேஸ்தான் கனடாவுக்குப் போக முடியுமா?

ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத முல்லா போகமுடியுமா? முடியாது.

இலங்கை அப்படி செய்யாமல் கிட்டத்தட்ட எல்லோர்க்கும் ET கொடுக்கிறது. தமது நாட்டுக்கு ஆப்படிப்பாவர்களை மட்டும் வடக்குக்கு போகவிடாமல் தடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு, அமெரிக்காவுக்கு, மலேசியாவுக்கு விசா "கிடைத்தால்" -போகலாம்.

இங்கதான் இருக்கு சங்கதி. இவர்கள் தமக்கு வேண்டப்படாத வெளிநாட்டவருக்கு விசாவே கொடுக்க மாட்டாங்கள். ஒரு கம்யூனிஸ்ட் அமெரிகாவுக்குப் போக முடியுமா?

கூட்டமைப்பு சுரேஸ்தான் கனடாவுக்குப் போக முடியுமா?

ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத முல்லா போகமுடியுமா? முடியாது.

இலங்கை அப்படி செய்யாமல் கிட்டத்தட்ட எல்லோர்க்கும் ET கொடுக்கிறது. தமது நாட்டுக்கு ஆப்படிப்பாவர்களை மட்டும் வடக்குக்கு போகவிடாமல் தடுக்கிறது.

இலங்கைக்கு Bob Rae போகமுடியுமா? இலங்கைக்கு ஐநா விசாரணையாளர்கள் போகமுடியுமா? இருக்கு சங்கதி.. :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரியாக மாட்டை கொண்டு வந்து மரத்தில் கட்டியாச்சு. இனி மரத்தை பற்றி கட்டுரை எழுதினால் விளங்கும் என நினைக்கிறேன்.

மேலே நீங்களும் நானும் கூறிய உதாரணங்களில் இருந்து புலனாவது யாதெனில், எல்லா நாடுகளும் வெளிநாட்டவர் தம் நாட்டில் உலவுவதை கட்டுப்படுத்தியே வைக்கிறன.

கடந்த நூறு வருடங்களாக பிரிவினை கோரி ஆயுத உள்நாட்டு கிளர்சி ஏதும் நடவாத அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளும் ஆசியாவின் அமைதிப்பூங்கா மலேசியாவும் தமது நாட்டிற்கேற்ப ஒரு தளர்வு போக்கையும்,

ஆயுத கிளர்சியை அண்மையில் சந்தித்த, சந்திகிற நாடுகள் ஒரு இறுக்கமான போக்கையும் கடைப்பிடிக்கிறன.

2ம் உலகயுத்த நேரத்தில் வகை தொகை, விசாரணை இன்றி அப்பாவி ஜப்பானியர்கள் பலரை internment என்று தேசிய பாதுகாப்பும் கருதி அமேரிக்கா அடைத்துவைத்தது. ஜப்பானியர்கள் அனுமதியின்றி பிரயாணிக்கவும் தடை விதித்தது. அப்போ வெளிநாட்டவர்களால் அமெரிக்காவுக்கு பிரச்சினை இருந்தது - தடை இருந்தது.

அப்போ இலங்கையில் வெளிநாட்டினர் எங்கும் போய்வர முடிந்தது.

இப்போ நிலைமை மற்றமாரி மாறியுள்ளது. நாளை இன்னொருமாரி மாறும்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த தடை உத்தரவானது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத செயல் என்பதை உலகில் உள்ள எந்த ஆரோக்கியமான மனிதனாலும் புரிந்து கொள்ள முடியும். அதன் நோக்கம் தனது நாட்டில் வாழும் மற்றய இனத்தை அடக்கி ஒடுக்கி அடிமைகளாக வாழ பழக்கப்படுத்துவது தான். தனது நாட்டில் வாழும் ஒரு இன மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளபட்ட பல்வேறு நடைமுறைகளில் இதுவும் ஒன்று. Jeder gesunde Mensch weiß das.ஒவ்வொரு ஆரோக்கியமான மனிதனாலும் புரந்து கொள்ளக்கூடிய ஒரு விடயத்திற்கு இவ்வளவு நீண்ட விவாதம் தேவையில்லை என நினைக்கிறேன்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ் அப்போ எங்களை என்ன சீக்காளி எண்டிறியளா?

  • கருத்துக்கள உறவுகள்

இது மோசமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். புலத்தில் இருக்கும் மாற்றுக் கருத்தாளர்களும் விசா எடுத்துத்தான் போக வேண்டும் னெ;பதில் எனக்கு சிறிய மகிழ்ச்சி.நாங்கள் எவ்வளவுதான் சிங்களவனின்---யைக் கழுவினாலும் அவன் எல்லாத் தமிழரையும் ஒரேமாதிரியாய்தான் வைச்சிருக்கிறான்

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் - இலங்கையில் பிறந்த வெளிநாட்டுக்காரருக்கு பதிவு தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ... எமக்குப், பிறந்த பிள்ளைகளுடன்,
ஊரில்,உள்ள... தாத்தா, பாட்டி,  மச்சான், மச்சாள் மாரை பார்க்க விரும்பும்..... பிள்ளைகள் விசா... எடுக்க வேணுமா? அண்ணை....

  • கருத்துக்கள உறவுகள்

18 வயதுக்கு மேற்ப்பட்ட எந்த இனத்தை சேர்ந்த வெளிநாட்டில் பிறந்தவையும் அனுமதி எடுக்கோணும் அண்ணை. உங்கள் பிள்ளைக்கும், பாட்டி தாத்தா இலங்கையில் ஓய்வு வாழ்வுக்கு சென்றிருக்கும் வெள்ளைத்தோலர்களின் பேரப்பிள்ளைகளும் சட்டத்தின் முன் சமமே.

இதெல்லாம் அற்ப லாபங்களுக்காக பிறந்த நாட்டின் பிரஜா உரிமையை தூக்கி எறியும் போது யோசிச்சிருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறந்த தற்போதைய வெளிநாட்டு பிரஜைகளுக்கு இதில் விதிவிலக்கு உண்டு. இந்த நடைமுறை வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கே.

இந்தியாவுக்கு வீசா எடுத்தால், கஸ்மீர், அந்தமான், லட்சதீவு மணிப்பூர் உட்ப கிட்டத்தட்ட 10 மாநிலங்களுக்கு போக முடியாது.

காஸ்மீரில் பல படுகொலைகளை இந்தியா அரங்கேற்றி வருகிறது செய்திகள் வெளியே செல்ல முடியாத வாறு தடுப்பதற்காக. அங்கே போவோர்கள் மீது தடை விதித்து வைத்திருக்கிறது. மனிபூருக்கும் இதே நிலைதான்.
காஸ்மீர் மனிபூருக்கு செல்ல வேறு விதமான விசாக்கள் இல்லை. இந்தியா விசா இருந்தால் போகலாம். அனால் போவதற்கு தடை.
அங்கு மற்றைய மாநிலங்களை விட ஒரு அசாதாரண நிலை இருக்கிறது. 
அவை மற்றைய மாநிலங்களை விட வேறு பட்டு இருக்கிறது.
 
அந்தமான் நிகோலோபர் தீவுகள் இந்திய ஆட்சிக்கு உட்பட்டு இருக்கிறதே தவிர அவை இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல. அதிகார போக்கில் .. பிரித்தானியா போக அங்கே சிறை இருந்தவர்கள் இந்தியர்கள் என்பதால் இந்தியாவிற்கு சொந்தம்.
அங்கும் எல்லா இடமும் போக முடியாது .... குறிப்பிட்ட இடங்களுக்கு போகலாம்.
( visa on arrival  ) 

 

 

சீனாவில் சீனர்களே மாகாணம் விட்டு மாகாணம் போக அனுமதி எடுக்கணும்.

சீனாவில் மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கு மட்டும் தடை அல்ல ....... அங்கே ஜெனாயகத்திட்கே தடை.
சர்வதிகார போக்கின் இனொரு வடிவமாகவும் இதை பார்க்கலாம். 
அங்கும் மற்றைய நாடுகளுக்கும் சீனவிட்கும் வேறுபாடு நிறைய இருக்கிறது.
 
 

இவ்வளவு ஏன் ஜேர்மனியிலே தஞ்சம் கோரியவர்கள் கவுன்சில் விட்டு கவுன்சில் போக முடியாது.

 

அரசியல் தஞ்சம் கோருவோர்களை மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் ஏற்று கொள்கிறார்கள். அரசியல் தஞ்சம் அடைபவர்கள் பெருத்த பயங்கரவாதிகளாகவும் இருக்கலாம். அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியின் பிரகாரம் அவர்களை ஏற்று கொள்கிறார்கள். உண்மை நிலை பற்றி அறிய அவர்களின் சொந்த நாடுடனான தொடர்பு அந்த நாட்டின் உண்மை தன்மை என்பன அவசியம் ஆனவை.
அதலால் அங்கே குறிபிட்ட காலம் வாழ்ந்து ஒரு நன்மதிப்பை பெற்ற பின்பு அவர்களுடைய கட்டுபாடிலும் அவர்களுக்கான் மேலதிக வசதிகளையும் வழங்குகிறார்கள்.  
உயிருக்கு உத்தரவாதம் தேடியவர்களுக்கு ...... அதற்கான உத்தரவாதம் கொடுக்கிறார்கள்.
சுற்றுலா செல்ல போகிறவர்கள் ............ வேறு விசா எடுத்து போகலாம். 

இதை சொன்னா நம்மளை கைக்கூலி என்பீர்கள்.

இலங்கை என்ற நாட்டில் இருக்கும் மற்ற பிரதேசங்கள் போல வடக்கு இல்லை.
அது வேறு பட்டு இருக்கிறது.
அங்கு மற்றைய இடங்களில் இருக்கும் சாதாரன நிலைமைகள் இல்லை. நிறைந்த அசாதாரணம் இருக்கிறது.
 
யாழ்தேவியில் போய் போத்தல் எடுத்து குடித்துவிட்டு வருபவர்கள் கண்களுக்கு ஒரு தள்ளாடல் தனமான காட்சிகள் தெரிகிறது. அதனால்தான் இங்கும் தள்ளாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் ஒரு அசாதரண நிலமை இருக்கிறது என்பதை இந்த விசா வடிவம் வெட்ட வெளிச்சமாக சொல்லி நிற்கிறது. 
 
வடக்கு மற்றைய பிரதேசங்களை விட வேறு பட்டு இருக்கிறது. அங்கே போவதற்கு வெளிநாடு பிரஜைகள் ..... ஊடக கார்கள் அனுமதி பெறவேண்டும். 
அங்கே நடக்கும் விடயங்கள் வெளியே செல்லவிடாமல் தடுக்க இந்த யுத்தியை இந்தியா சீனா போன்ற அடக்குமுறை நாடுகள்போல் பாவிக்கிறார்கள்.
 
இங்கிருந்து வெறியில் போய்வரும் சிலருக்கு அது தெரியவாய்ப்பில்லை என்பது எனது தனிபட்ட கருத்தாகும். 

இலங்கை என்ற நாட்டில் இருக்கும் மற்ற பிரதேசங்கள் போல வடக்கு இல்லை.

அது வேறு பட்டு இருக்கிறது.

அங்கு மற்றைய இடங்களில் இருக்கும் சாதாரன நிலைமைகள் இல்லை. நிறைந்த அசாதாரணம் இருக்கிறது.

 

யாழ்தேவியில் போய் போத்தல் எடுத்து குடித்துவிட்டு வருபவர்கள் கண்களுக்கு ஒரு தள்ளாடல் தனமான காட்சிகள் தெரிகிறது. அதனால்தான் இங்கும் தள்ளாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு அசாதரண நிலமை இருக்கிறது என்பதை இந்த விசா வடிவம் வெட்ட வெளிச்சமாக சொல்லி நிற்கிறது. 

 

வடக்கு மற்றைய பிரதேசங்களை விட வேறு பட்டு இருக்கிறது. அங்கே போவதற்கு வெளிநாடு பிரஜைகள் ..... ஊடக கார்கள் அனுமதி பெறவேண்டும். 

அங்கே நடக்கும் விடயங்கள் வெளியே செல்லவிடாமல் தடுக்க இந்த யுத்தியை இந்தியா சீனா போன்ற அடக்குமுறை நாடுகள்போல் பாவிக்கிறார்கள்.

 

இங்கிருந்து வெறியில் போய்வரும் சிலருக்கு அது தெரியவாய்ப்பில்லை என்பது எனது தனிபட்ட கருத்தாகும்.

வடக்கில் அசாதராண நிலை இருக்கின்றது கிழக்கில் சாதராண நிலை நிலவுகின்றது?

வடகிழக்கு என்று இருந்த பிரச்சனை இன்று வடக்கு என்று பாதிநிலைக்கு வந்துவிட்டது. அதை தமிழர்களாகிய நீங்கள் ஒத்துக்கொள்வதே சிங்களத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி.

நாளை வடக்கும் குறுகி வவுனியா முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி விலத்தி யாழ்ப்பாணம் மட்டும் அசாதராணமாகவும் மற்றதெல்லாம் சாதராணமாகவும் தெரியும்.

சிங்களத்தின் சிந்தனை முறையும் உங்களின் சிந்தனை முறையும் இறுதியில் ஒன்றாகவே இருக்கின்றது.

யதார்த்ததில் சாதாரணநிலை அசாதராணநிலை என்று பார்க்கப்போனால் ஏனைய பிரதேசங்களை விட யாழ்ப்பாணத்துக்கே சிங்களம் அதிக பணத்தை செலவுசெய்து அபிவிருத்திகளை செய்கின்றது. வசதிவாய்புகளை செய்கின்றது. புலம்பெயர் தேசத்தில் இருந்து அதிகமானவர்கள் யாழ்பாணம் சென்று வருகின்றனர். எப்போதும் தொடர்பில் இருக்கின்றனர். அங்கு நடக்கும் விடயங்கள் இங்கு தெரியாமல் இருப்பது என்பதற்கு ஆக்கபூர்வமான தடை எதுவும் இல்லை.

உங்கள் சிந்தனை முறை யாழைவிட்டு வெளியில் இல்லை. உங்கள் பழக்கவழக்கங்களும் அணுகுமுறையும் யாழ் மையவாதத்துக்குள்ளாகவே கட்டியமைக்கப்பட்டது. இயக்கங்களின் தலமைகளும் சரி இன்றய அரசியல் தலமைகளும் சரி புலம்பெயர் தேசத்து குழுக்கள் அமைப்புகள் அரசுகள் எதுவானாலும் சரி இந்தச் சிந்தனைமுறைக்குள் இருந்து வெளியில் வந்த சரித்திரம் கிடையாது. இதன் விழைவுதான் மதவாரியான பிழவும் பிரதேசவாரியான பிழவும் அழிவுகளும் என எல்லாம் நிழகழ்ந்து இன்று நீங்களாகவே வடக்கு என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டீர்கள். நாளை யாழ்ப்பாணம் என்ற உண்மையான பிரதேசவாரி வட்டத்துக்குள் வந்துவிடுவது தவிரக்கமுடியாத நிகழ்வு. இன்று வடக்கிற்கு அனுமதி பெறவைக்கும் சிங்களம் நாளை அதை சுருக்கி யாழுக்காக மாற்றும். அதை நீங்கள் அணுகும் விதம் சிங்களத்திற்கு வெற்றியாக அமையும்.

சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதுபோலவே எந்த ஒரு மையவாதியின் விடுதலை முயற்சியும் விடுதலை நோக்கி துளியும் நகராது.

சிங்களம் எப்போதும் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் முயற்சிகளை முக்கியப்படுத்துவதுபோல், அதைப்பார்த்துப் பயப்படுவதுபோல் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும். அது உங்களை உசுப்பேத்துவது மட்டுமே. ஏனெனில் சிங்களத்துக்கு நன்கு தெரியும் புலம்பெயர் தேசத்தில் தமிழ்தேசீயம் என்ற முகமூடிக்குள் இருப்பது மையவாதம் என்பது. முகமூடிக்குள் இருப்பவர்கள் தாங்களாகவே சொல்வார்கள் வடக்கைத் தவிர ஏனைய இடங்கள் சாதாரணமாக இருக்கின்றது என்று. நாளை யாழ்பாணத்தை தவிர எல்லாம் சாரதாணம் என்பார்கள். மிஞ்சிய யாழ்ப்பாணத்திற்க வெள்ளையடித்து உலகிற்கு பளிச் என்று காட்டுவது எப்படி என்பது சிங்களத்திற்கு நன்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகள் சண்டமாருதன். முன்பெல்லாம் எனக்கு கருணாவை நினைத்தாலே கோபம் பொத்துக்கொண்டு வரும். அண்மையில் கடைசி வரை ஜெயந்தனில் இருந்த ஒரு போராளியிடம் பேசக்கிடைத்தது. இப்போ யோசித்துப்பார்த்தால் அவருக்கு வேறு தெரிவு எதையும் சில உள்வீட்டு நரிகள்விட்டு வைக்கவில்லையோ என்றும் தோன்றிகிறது.

தமிழ்தேசியம் எனும் பசுத்தோலை சில மையவாத ஓநாய்கள் போர்திக்கொண்டதே எம் போராட்டத்தோல்வியின் முதற்காரணம்.

அந்தமான் இந்தியாவின் பகுதி இல்லை என்பது நெடுந்தீவு யாழ்பாணத்தின் பகுதியில்லை என்பதைப்போல் அபத்தமானது.

அந்தமான், காஸ்மீர் மணிப்பூருக்கு போகவே முடியாது என்பதும் பிழை. இந்தியா போய் டெல்லியில் வெளிவிவகார அமைச்சில் அனுமதி எடுத்துப் போகலாம்.

அந்தமானுக்கு ஒன் அரைவல் வீசா என்பதும் சுத்த பீலா. போர்ட் பிளேயருக்கு தமிழ் நாடுபோய் அங்கிருக்கும் மத்திய அரசாத்ஜிகாரிகளிடம் அனுமதி பெற்றே போகணும்.

பிரச்சினையில்லாத அருணாச்சல், சிக்கிம், ஹிமாச்சலின் பலபகுதிகள், லட்சதீவுக்கும் மேலதிக அனுமத்ஜியின்றி போக முடியாது.

ஓ மறந்து போனேன் இதெல்லாம் இந்தியாவின் பகுதியில்லை - செவ்வாய்கிரகத்தின் பகுதிகள் என்பதை.

ஶ்ரீலங்கா மகிந்த அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காக அளவிற்கு அதிகமாக உங்கள் நேரத்தை செலவிட்டு பக்கம் பக்கமாக எழுதி தள்ளுகின்றீர்கள் கோசான். இனவாத அரசிற்காக தர்ம நியாயத்தை கூட புறம் தள்ளி, முறையற்ற பொருந்தாத உதாரணங்களுடன் உங்கள் நேரத்தை செலவிடுவது வீண் என்றே நான் நினைக்கின்றேன்.ஏனென்றால் இந்த விடயத்தில் இலங்கை அரசிற்கு ஆதரவாக ஆயிரம் பக்கங்களுடன் நீங்கள் ஒரு நூலை எழுதினாலும் மகிந்த - கோத்தாவின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும நோக்கியான ஜனநாயக விரோத நடவடிக்கை என்பது உண்மை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை

அறிவாளியான நீங்கள் மகிந்த கோத்தாவிற்காக உங்களை ஏன் தாழ்த்தி கொள்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சில தனி நபர்கள் மீது உங்களுக்கு உள்ள கோபம் உங்கள் அறிவுக் கண்ணை மறைக்குமளவுக்கு போய்விட்டது என்பதே என் கணிப்பு.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமான்,நிக்கோபார் தீவுகளுக்கு இந்தியாவில் இருந்து போவதற்கு விசாவோ,அனுமதியோ தேவையில்லை என்று சொன்னார்கள் அது பொய்யா?

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ்,

கோத்த அபய மகிந்தவின் மனித குல விரோத நடவடிக்கைக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.

இரட்டை குடியுரிமை முறையை தடுத்தமை போன்று இதுவும் தமிழ் இனப்பரம்பலுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக இருக்கும் எனும் உங்கள் சந்தேகம் அர்த்தமற்றது என்பதே என் வாதம்.

இலங்கையில் பிறக்காதவர்களுக்கு மட்டும் இந்த நடைமுறையை கொண்டு வந்தது - புலம் பெயர்ந்தவருக்காக இல்லை. இது வெளிநாடுகளுக்கு சொல்லபடும் செய்தியின் ஒரு அங்கம். ஜெனிவாவை மனதில் வைத்து, ஈயூ எடுக்கவிருக்கும் முடிவை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட diplomatic posturing. இதற்கான பதில் உடனடியாகவே travel advisory ஐ மாற்றியதன் மூலம் காட்டப்பட்டிருக்கிறது.

இதன் தாற்பரியம் இப்படி இருக்க எல்லாத்தையும் தமிழர் மீதான அடக்குமுறை எனும் கண்ணாடியால் பார்ப்போமாயின் என்ன செய்வது.

இவர்கள் அடக்குமுறை செய்பவர்கள், இதை விட மோசமாக, ஆனால் இங்கே நடப்பது வேறு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமானுக்கு போவதுக்கு ஒரு சிறப்பு அனுமதி தேவை என்று இணையத்தில் போட்டுள்ளார்கள். இது வெளிநாட்டவர்களுக்கு மட்டும். இந்தியர்களுக்கு தேவையில்லை. ஆனால் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்குச் செல்ல தடை உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.