Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்லுறது.. கரண்ட் கம்பியிலேயே கைவச்சிட்டீங்க.. :o:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் விழுப்புண் என்னாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில். இத் திரி முற்றுப் பெற உள்ளது.

அதற்கிடையில்.... வாசகர்களின் கருத்துக்கள், வரவேற்கப் படுகின்றது. :D

உங்களைப் போன்றவர்கள்... ஆண்குலத்துக்கே.. ஒரு முன்மாதிரி..! :D

 

அதுவும் மற்றவர்களுக்காக, உங்களை நீங்கள் 'தண்டித்துக்' கொள்வதென்பது..ஒரு மகத்தான 'தியாகம்' என்றே கூறுவேன்!

 

உங்கள் சுயநலம் இதில் இருந்தாலும் கூட..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொல்ல அடிமடியிலேயே கையை வைச்சீட்டீங்களே!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தானா.சினா, முதலாவதாக எழுதப் பட்ட பதிவைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன், உங்களை judge பண்ணவில்லை, ஆனால் கலைக்க நினைத்தீர்கள் என்று அறிந்ததும் அதிர்ந்து போனேன். குழந்தைகள் கடவுளின் வரங்கள்! நமக்கு அவர்களை நன்றாக வளர்க்க முடியாது என்ற பயத்தினால் தவிர்க்க நினைக்கிறோம். அவ்வளவு தான். ஆனால், இரண்டு பேரும் சத்திர சிகிச்சை செய்யாமலே கருத்தரிக்கும் வாய்ப்பை நன்கு குறைக்கும் இயற்கையான வழிகள் இருக்கின்றன. நிரந்தரமாக கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாதோர் அவற்றைப் பின்பற்றலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தானா.சினா, முதலாவதாக எழுதப் பட்ட பதிவைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன், உங்களை judge பண்ணவில்லை, ஆனால் கலைக்க நினைத்தீர்கள் என்று அறிந்ததும் அதிர்ந்து போனேன். குழந்தைகள் கடவுளின் வரங்கள்! நமக்கு அவர்களை நன்றாக வளர்க்க முடியாது என்ற பயத்தினால் தவிர்க்க நினைக்கிறோம். அவ்வளவு தான். ஆனால், இரண்டு பேரும் சத்திர சிகிச்சை செய்யாமலே கருத்தரிக்கும் வாய்ப்பை நன்கு குறைக்கும் இயற்கையான வழிகள் இருக்கின்றன. நிரந்தரமாக கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாதோர் அவற்றைப் பின்பற்றலாம்.

 

ஜஸ்ரின்,

அந்த இயற்கையான, வழிகளை.... நீங்கள் மருத்துவர், என்ற கண்ணோட்டத்தில் பதிந்தால்... பலருக்கும் பிரயோசனமாய், இருக்கும் என எண்ணுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் தன் வம்ச விருத்திக்காக பாடாய் பாடு பட்டுக்கொண்டிருக்க
தமிழ் சிறி   அண்ணைக்கு என் இந்த வேலை. :D:lol::icon_mrgreen:

இருந்தாலும் உங்கள் அனுபவம் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி நீங்கள் கோடியில் ஒரு தமிழ் மகன்.உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்.தைரியமாக எழுதியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தடை ஆபரேசன் செய்து இறப்போர் எண்ணிக்கையில்,

தமிழகத்துக்கு முதலிடம்.

 

சென்னை: கருத்தடை ஆபரேஷன் செய்துகொள்ளும் பெண்கள் இறந்துபோகும் சம்பவங்கள் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் நடப்பதாக மத்திய சுகாதாரத்துறை புள்ளிவிவரம் அம்பலப்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை ஆபரேசன் செய்த பெண்கள் பலர் மரணமடைந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது. ஆனால் நாட்டிலேயே இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம்தான் என்பது அதிர்ச்சியான சோகமே.

 

சுகாதாரத்துறையில் மேம்பட்டு உள்ளதாக மார்தட்டும் தமிழகம், கருத்தடை செய்யும் பெண்களின் உயிரை காப்பாற்ற தவறி வருகிறது என்பது நிதர்சனம். மத்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 2008-2012 வரையில் 130க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை செய்து கொண்டதால் மரணமடைந்துள்ளதாக அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

 

16-surgical-instruments-506989.jpg

 

தமிழகத்தில் நகர்ப்புறங்கள் பெருகிவிட்ட நிலையிலும், கருத்தடை ஆபரேசன்களால் பெண்கள் அதிகம் இறந்துபோக இரு காரணங்கள் கூறப்படுகிறது. கருத்தடை ஆபரேசனில் இறந்தவர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கணக்கெடுக்கும் முறை வித்தியாசமானது. அதாவது, கருத்தடை ஆபரேசனால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரண தொகை வழங்கினால்தான் அதை கருத்தடை ஆபரேசனால் நிகழ்ந்த மரணம் என்று மத்திய சுகாதாரத்துறை கணக்கெடுக்கிறது.

 

அப்படிப்பார்த்தால், பிற மாநிலங்களைவிட தமிழகம் அதி விரைவாக நிவாரண தொகையை பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு அளித்துவிடுகிறது. பல மாநிலங்கள் அப்படி செய்வதில்லை, அல்லது பல ஆண்டுகள் கழித்து அந்த தொகையை அளிக்கின்றன. இதுவும் தமிழகத்தில் கருத்தடை சாவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட காரணமாக இருக்க கூடும்.

 

மற்றொரு காரணம், தமிழகத்தில் கருத்தடை செய்துகொள்வது பெரும்பாலும் பெண்கள்தான். அதாவது, கருத்தடை ஆபரேசன் செய்வோரில் 99.4 சதவீதம் பெண்கள்தான். ஆண்களுக்கான கருத்தடை முறையைவிட பெண்களுக்கானது கொஞ்சம் சிக்கல் நிறைந்தது என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் பதிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

 

2010-11ல் 41 பேரும், அதற்கடுத்த ஆண்டில் 29 பேரும், 2012-13ல் 5 பேரும் கருத்தடை ஆபரேசனின்போது தமிழகத்தில் இறந்துள்ளனர். அதேபோல 2010-11ல் 318 பேருக்கும், அதற்கடுத்த ஆண்டில் 297 பேருக்கும் கருத்தடை ஆபரேசன் பலனளிக்காமல் போயுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கருத்தடை ஆபரேசன் பாதிப்பாளர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளித்துள்ள நிவாரண தொகை ரூ.3.2 கோடிகளாகும்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

 

மற்றொரு காரணம், தமிழகத்தில் கருத்தடை செய்துகொள்வது பெரும்பாலும் பெண்கள்தான். அதாவது, கருத்தடை ஆபரேசன் செய்வோரில் 99.4 சதவீதம் பெண்கள்தான். ஆண்களுக்கான கருத்தடை முறையைவிட பெண்களுக்கானது கொஞ்சம் சிக்கல் நிறைந்தது என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் பதிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

கருத்தடை விடயத்தில் ஆண்கள் 99% அப்பட்டமான சுயநலவாதிகள் தான்.. 

தமிழ்சிறி மாதிரி அப்பாவிகள்(?? :))  மீதமிருப்போர்.

ஆனால் இயற்கையாகவே வழிமுறைகள் இருக்கும்பொழுது இந்த அறுவை சிகிச்சை தேவையற்றது என்பது கருத்தாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவில். இத் திரி முற்றுப் பெற உள்ளது.

அதற்கிடையில்.... வாசகர்களின் கருத்துக்கள், வரவேற்கப் படுகின்றது. :D

 

கதை முடியும் மட்டும் பாத்துக்கொண்டிருக்கிறன்....அதுக்குபிறகு ஒரு பயங்கர கேள்வியொண்டு கேட்பமெண்டிருக்கிறன்.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலையிடத்துக்குச் சென்று, வேலையை ஆரம்பிக்க முதல்,

சக ஊழியரிடம் விடயத்தைச் சொல்லி,

இன்று அதிக வேலையே என்னிடம் எதிர் பார்க்க வேண்டாம் என்ற போது....
அவனும், அதிர்ச்சியாகி.... தான் சமாளித்துக் கொள்கின்றேன் என்றான்.
 

அன்றைய நாளில், இடையிடையே அந்த இடத்தில் சாதுவான நோ வந்து போனாலும்,

பெரிய இடைஞ்சல் கொடுக்கவில்லை.
அடுத்த நாளும் மிக குறைவான உறுத்தல் இருந்தது.
மூன்றாம் நாள், வைத்தியரிடம் சென்று காட்டிய போது,
அவரும் காயம் ஆறி விட்டது, ஆனால் நான்கு கிழமைக்கு உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
 

இந்த அறுவை சிகிச்சை செய்த பின்,
கரு உருவாகாதே தவிர, முன்பு இருந்ததை போலவே என்னால் உணர முடிகின்றது.

இதனால்... எனக்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

 

நல்ல காலம், எனது முன்றாவது குழந்தையை கருவில் கலைத்திருந்தால்...

இன்று நான் ஒரு குற்றவாளியாக, வாழ்க்கை முழுக்க நடமாடிக் கொண்டிருப்பேன்.
எனது கடைசி மகளை இப்போ பார்க்கும் போதெல்லாம்..
"என்ன காரியம் செய்யத் துணிந்தாய் நீ..." என்று எனது மனச் சாட்சி கேட்கும்.
ஏதோ.... அந்த நேரத்தில், கடவுள் காப்பாற்றியதாகவே உணர்கின்றேன்.
 

(முற்றும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவை, ஆர்வமுடன் வாசித்து, ஊக்கம் தந்த உறவுகளான.....
பகலவன், நந்தன், ரதி, யாயினி, புங்கையூரன், ராஜவன்னியன்,

ஆதித்ய இளம்பிறையன், புலவர், மருதங்கேணி, உடையார்,

மெசொபொத்தேமியா சுமேரியர், இசைக்கலைஞன், ஜஸ்ரின்,

வாத்தியார், குமாரசாமி அண்ணா, ஆரதி, ஈசன், சுவி,

வல்வை சகாறா, தமிழினி, நிலாமதி அக்கா, சீமான்... ஆகியோருக்கு மிக்க நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

சுபம்..! :D

ஆண்கள்  செய்யத் தயங்கும் ஒரு விடயத்தினைச் செய்தது மட்டுமன்றி அதை வெளிப்படையாக எழுதிய தமிழ் சிறிக்கு மிகவும் நன்றி.

 

ஆண்கள் இதைச் செய்ய தயங்குவதன் முக்கிய காரணமே அதன் பின் முன்னரைப் போன்று உடலுறவில் ஈடுபட முடியாமல் போய்விடும் என்ற பயமே. இதன் காரணமாக பொதுவாக மனைவிமார்கள் கூட கணவன் கருத்தடை செய்வதை விரும்புவதில்லை.

 

தமிழ் சிறியின் இந்த பதிவை வாசிக்கும் பல தமிழ் வாசகர்களுக்கு இனி அந்த சந்தேகம் எழ மாட்டாது.

 

என்னைப் பொறுத்தவரைக்கும் மட்டுமன்றி மருத்துவ முறையிலும் கூட கருத்தடை செய்வது ஒன்றுதான் குழந்தை பெறுவதை தடுக்கும் சரியான வழி. இதற்கு இயற்கை வழிகள் என்று ஒன்றுமில்லை. பலர் Withdrawal முறையை கையாள முற்படுவர், ஆனால் அவ்வாறு செய்யும் போது மனசுக்குள் ஒரு அலாரத்தினை வைத்துக் கொண்டு தான் உடலுறவில் ஈடுபடல் வேண்டும். அது மனம் லயித்து செய்வதற்கு இடைஞ்சலாக அமையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுடன், பச்சைப் புள்ளிகளை வழங்கிய....
நிழலி, இணையவன், தும்பளையான், சுவைப்பிரியன், நந்தன்,

இசைக்கலைஞன், யாயினி, அர்ஜூன், தமிழினி ஆகியோருக்கு நன்றி. :)

 

இதனைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தால், தாராளமாக கேளுங்கள்.

என்னத்தை சொல்லுறது.. கரண்ட் கம்பியிலேயே கைவச்சிட்டீங்க.. :o:icon_idea:

 

 கை வைச்சது கரண்ட் கம்பியில இல்லை. கரண்டில  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.