Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

Featured Replies

parathy%205475565.jpg

 

தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்தார். இவருக்கான வரவேற்பு நிகழ்வு யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக பிரதித் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி, இலங்கை தமிழரசுக்கு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். -
 
 
 

கோட்டபயாவின் நண்பர்களால் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட திரைப்பட இயக்குநர் பாரதிராஜா!!!

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து சந்துள்ளார்கள் சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டபயாவின் நண்பர்கள்.

barathiraja_jaffna_03.png

நேற்று சனிக்கிழமை (20-12-2014) வந்தடைந்த பாரதிராஜாவைவுக்கான வரவேற்பு நிகழ்வு யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக பிரதித் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி, இலங்கை தமிழரசுக்கு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

barathiraja_jaffna_01.png

தமிழ்ச் சிறார்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் உள்ளிட்ட பல அராஜகங்களைத் தமிழர் தாயகத்தில் இராணுவப் பாதுகாப்புடன் அரங்கேற்றிவரும் இக்கும்பல் கூட்டமைப்பினரைக் கைக்குள் கொண்டுவர இப்போது பாரதிராஜாவை தருவித்துள்ளார்களா என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

barathiraja_jaffna_02.png

 

http://www.pathivu.com/news/36218/57//d,article_full.aspx

பாவம் புலம் பெயர் கொடி தூக்கிகள்.

கை கொடுத்து வரவேற்பது  நம்ம நண்பர்தான் .

பாவம் புலம் பெயர் கொடி தூக்கிகள்.

கை கொடுத்து வரவேற்பது  நம்ம நண்பர்தான் .

 

உங்கள் நபரால் உங்களுக்கு சகல பாக்கியங்களும் வந்துசேர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.  :D

  • தொடங்கியவர்

இயக்குநர் பாரதிராஜா, யாழ். விஜயம்; அபிவிருத்தியில் மகிழ்ச்சி

barathi60(1).jpg

தென்னிந்தியாவின் இயக்குநர் இமயம் என்ற புகழைப்பெற்ற இயக்குநர் பாரதிராஜா, யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

 
இந்நிலையில் அவர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து கலந்துரையாடியுமுள்ளார். 
 
ஈ.பி.டீ.பி.யுடனான சந்திப்பின் போது, கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜா, 'யுத்தத்துக்குப் பின்னர் வடமாகாணம் கண்டுள்ள முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சியடைவதாக' தெரிவித்துள்ளார்

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/136305-2014-12-21-07-29-23.html

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு என்ன யாழ்ப்பாணத்து கருத்தம்மாவை வைச்சு ஒரு படம் எடுக்க வேண்டியதுதான்.....

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் புலம் பெயர் கொடி தூக்கிகள்.

கை கொடுத்து வரவேற்பது நம்ம நண்பர்தான் .

கோத்தாவின் நண்பர்கள் கைகொடுத்து வரவேற்றனர்.

நான் எழுதியதற்கும் அர்யூன் அண்ணா எழுதியதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை:)

பாவம் புலம் பெயர் கொடி தூக்கிகள்.

கை கொடுத்து வரவேற்பது நம்ம நண்பர்தான் .

அவர் உங்க நண்பரா? நினைச்சேன் மூஞ்சைய பாக்கவே தெரியுது.
  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தாவுடன் கைக்குலுக்கிய பாரதிராஜா! 

 

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் சென்ற இயக்குனர் பாரதிராஜா, இலங்கை அமைச்சரும், தமிழகத்தில் கொலை வழக்கில் சிக்கியவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கைக்குலுக்கி பேசியுள்ள படம் வெளியாகியுள்ளது.

 

bharathiraja-%20duglass%201.jpg

யாழ்ப்பாணம் சென்றுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. அவரை கவுரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ. சேனாதிராஜா, சி.சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினரான பா.கஜதீபன், இந்திய பிரதி தூதுவர் மூர்த்தி மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இயக்குனர் பாரதிராஜாவை நட்பின் நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, டக்ளஸ் தேவானந்தா, எதிர்ப்பு அரசியலால் எதையும் செய்ய முடியாது. இணக்க அரசியல் மூலமே எதையும் சாதிக்க முடியும். 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே நாம் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். அத்துடன் அப்போது அதனை எதிர்த்தவர்கள் இப்போது மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டதானது காலம் கடந்த ஞானமாகும்.
 

bharathiraja-%20duglass%202.jpg

அரசில் அங்கம் வகித்திருப்பதன் காரணமாக நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. பிழைகள் இருப்பின் அதை தெரியப்படுத்துமிடத்து அதனை சரிசெய்யவும் நாம் தயாராகவிருக்கின்றோம்.

கடந்த காலங்களில் எதிர்ப்பு அரசியலால் எமது மக்களுக்கு எவையும் கிடைக்கவில்லை. அந்த நிலையில் தான் நாம் இணக்க அரசியலை தெரிவு செய்து அரசுடனான நல்லுறவைப் பயன்படுத்தி மக்களுக்கானவற்றை பெற்றுக் கொடுத்து வருகின்றோம். இது இணக்க அரசியல் மூலம் எதையும் செய்ய முடியுமென்பதுடன் செய்யலாம் என்பது குறித்தும் நாம் நம்புகிறோம்.
 

bharathiraja-%20duglass.jpg

ஐ.நாவில் தமிழ் மொழியில் பேசிய ஒரேயொரு ஜனாதிபதி ராஜபக்சே. அவர் இதன் மூலம் அவரது உணர்வு வெளிப்படுகிறது என்றார்.

இதற்கு குறித்து கருத்துத் தெரிவித்த பாரதிராஜா, யுத்தத்திற்குப் பின்னர் வடபகுதி முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இவர்களுக்கு புலிகளின் ஆதரவாளர்கள் வேண்டும் என்பதை நிறுவுகிறார்கள்....புலிகளிண்றி சிறிலங்கா அரசியல் அசையாது

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மேடைகளில் புலி ஆவேசம்.

 

தமிழகத்தில்.. தமிழீழ கோசம்.

 

யாழ்ப்பாணத்தில்.. தமிழர்களின் எலும்புக்கூட்டின் மேல் அமைந்த அமைக்கப்பட்ட அபிவிருத்தியில்.. கொலைக்கும்பல் முன் மகிழ்ச்சி.

 

போற இடத்துக்கு ஏற்ப வேடம் போட சினிமாக்காரங்களுக்கு சொல்லிக்கொடுக்கனுமா என்ன.

 

இவங்களை நம்பி.. தமிழக மக்களை எடை போடக் கூடாது. அதேவேளை இவர்களை பாவிக்கிற இடத்தில பாவிக்க தவறவும் கூடாது. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு விடுதலைப்புலிகளின் காலத்தில் பாரதிராஜா யாழ்ப்பாணம் சென்ற போது http://www.yarl.com/forum3/index.php?/topic/13727-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு நல்ல டைரக்டர் என்டால் என்டால் எப்படி நல்ல படங்கள் எடுப்பது என்று ஈழத்தில் போய் பாடம் எடுக்கலாம்.அதை விடுத்து ஊரில் போய் அரசியல் கதைக்க இவர் என்ன அரசியல் பிரமுகரா? அல்லது சமூக சேவகரா?...எல்லாம் புலிகள் விட்ட பிழை "இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே" என்று பெரியவர்கள் தெரியாமலா சொன்னார்கள்

அவர் உங்க நண்பரா? நினைச்சேன் மூஞ்சைய பாக்கவே தெரியுது.

கை கொடுப்பவர் அல்ல முதுகில் தட்டி கொடுப்பவர் . :icon_mrgreen:

அவர் எப்படி வடிவா . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு சர்ச்சைக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு சர்ச்சைக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மை

  100 வீத உண்மை .

இந்த வயதில் நான் சோரம் போவேனா? கௌதமனிடம் விளக்மளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா

gowthemn3008131.pngஉலகமுழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் என் உயிருக்கு நிகரான தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

உங்களை போலவே இயக்குனர். பாரதிராசா அவர்களின் இலங்கை பயணத்தை கண்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் சொன்னது போல "தவறு யார் செய்தாலும் அது தவறு தான்".

இயக்குனர். பாரதிராசா அவர்களிடம் உடனடியாக நான் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொது "இந்த வயதில் நான் சோரம் போவேனா" என்று பேச தொடங்கி, என் இனத்திற்கும் நான் பெரிதும் மதிக்கும் தம்பி பிரபகரனுக்கும் ஒரு போதும் தோரகம் செய்ய மாட்டேன். சம்மந்தமே இல்லாமல் நான் இருக்கும் இடத்தை தேடிவந்து டக்லசு தேவானந்தா என்னை சந்தித்த போது விருப்பம் இல்லாமலேயே பேச நேர்ந்தது. மீனவர் பிரச்சனை பற்றிப் பேச அரம்பதித்த உடனே அரசியல் இப்போது பேச வேண்டாமே என்று சொல்லிக்கொண்டடி இருக்கும்போதே அவர்களது ஆட்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். ஒரு வழியாக அவரை பேசி அனுப்பிவிட்டு, அதன் பிறகு சென்று முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களையும், அமைச்சர் ஐயங்கரன் நேசன் அவர்களையும் சந்தித்தேன்.

இவர்கள் இருவரையும் சந்திபதற்குள் அவசர அவசரமாக டக்லசு தேவானந்தா குழு எடுத்த புகைபடத்தை வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

அது மட்டும் அல்ல என்னை அழைத்தது லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தை பராமரிக்கும் மரியாதைக்குரிய கோபால் அவர்கள் தான். அவர்களை தவிர என் இனத்திற்கு எதிரானவர்களின் அழைப்பின் பேரில் நான் இலங்கைக்கு செல்லவில்லை.

என்னுடைய தாய் தமிழ்நாட்டின் மண்ணை மிதிபதற்க்குள் நான் உயிராய் நேசிக்கும் உலகமெங்கும் வாழும் என் தமிழ் உறவுகளிடம் இந்த பயணத்தை பற்றிய விளக்கத்தை சொல்லிவிட்டுத் தான் இலங்கை மண்ணில் இருந்து புறப்படுவேன், என் உயிரே போனாலும் சரி என்ற வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் இனபடுக்கொலை நடந்த காலகட்டத்தில் இயக்குனர் பாரதிராசா - என் இனத்தை அழிக்க காரணமாய் இருந்த இந்திய அரசு கொடுத்த தேசிய விருதையும், பத்மபூசன் விருதையும் பல்லாயிர கணக்கான தமிழ் உறவுகளின் முன்னால் இரு கைகளிலும் ஏந்தி உடைக்கவா இல்லை திருப்பி இந்திய அரசிடமே அனுப்பவா என்று கேட்டவர். ஆகவே அவரை பற்றி தீர ஆராய்ந்து பார்க்காமல் விமர்சனம் செய்வதை சிறிது யோசித்து செய்யுங்கள் என்று என் தாய் தமிழ் உறவுகளிடம் தாழ்மையோடும், உரிமையுடனுடம் கேட்டுகொள்கிறோன்.

அதே நேரத்தில் தவறு நடந்திருந்தால் என் தாய்க்கும், தாய் மொழிக்கும் சமமான என்னுடைய தமிழீழ் தேசிய தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் சொன்னது போல சமரசம் இல்லாமல் விமர்சனம் செய்வோம்.

இப்படிக்கு,

வ.கௌதமன்

21.12.2014 

 

http://www.pathivu.com/news/36232/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

ஈழத்தமிழ் மண்ணில் புழு கூட புலியானது: பாரதிராஜா

 

6891_content_bharathiraja%20yalpanam%20.

 

6891_content_bharathiraja%20yalpanam%202

 

 

 

 

புழுகூட புலியான ஈழத்தமிழ் மண்ணில் என் பாதங்கள் படும் போது தமிழன் என்ற நிலையின் நான் பரவசமடைகிறேன் என்று யாழ்ப்பாணத்தில் இயக்குனர் பாரதிராஜா பெருமிதத்துடன் கூறினார். யாழ்ப்பாணத்தில் யாழ். மாவட்ட கலைஞர்களுடனான சந்திப்பின்போது பேசிய பாரதிராஜா, தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது. இப்பூமிப்பந்திலே உலகெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் ஈழத்திலே வாழ்கின்ற உத்தமர்கள் செய்த தியாகங்கள் விடுதலை வேண்டிய அர்ப்பணிப்பான பயணங்கள். கட்டுக்கோப்பான தலைமைத்துவத்தில் தலை நிமிரச் செய்த ஆட்சி முறை என்பவற்றால்தான் தமிழர்களை பற்றிய எண்ணத்தால் உலகத்தவர்கள் உவகை கொள்கிறார்கள். புழுகூட புலியான ஈழத்தமிழ் மண்ணில் என் பாதங்கள் படும் போது தமிழன் என்ற நிலையின் நான் பரவசமடைகிறேன்.

 

உலகத்தமிழருக்கு தமிழன் என்ற அடையாளத்தை தந்தவர்கள் ஈழத்தமிழர்கள். நீங்கள் கடந்து வந்த பாதைகளை, வாழ்ந்த வாழ்க்கை முறைகளை எண்ணிப்பார்க்கிற போது எங்கள் ஒவ்வொருவரின் இதயவேதனையை யாராலும் இலகுவில் மாற்றமுடியாது. எதிர்ப்பு சக்தி இல்லாத எந்த உயிரினமும் இந்த உலகில் வாழமுடியாது என்பது கூர்ப்புக்கொள்கையாகும். புழு பூச்சி கூட எதிர்க்கும் ஆற்றலை பெறுகின்ற போதுதான் தன் வாழ்வியலை பெற்றுக்கொள்கிறது. ஈழத்தமிழர்களும் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருந்தமையால்தான் தம் வாழ்வியலுரிமைக்காக யாரையும் எதிர்க்கும் சக்தியாக அவர்கள் உருவெடுத்தார்கள் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

http://thinakkural.lk/article.php?local/rvqvolhwtt3702a928731e1014295jupsa3dfc64c0027fa84709689ejfbl0#sthash.aaZmnAbm.dpuf

விட்டால் தலைவருடன் கதைத்துவிட்டுதான் டக்கிளசுக்கு கை கொடுத்தேன் என்பார் ,அதை நம்ப இங்கு ஒரு கூட்டம் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
இயக்குனர் பாரதிராஜா யாழ் விஜயம்; சி.வி.விக்னேஸ்வரனையும், டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்தார்!

bhara.jpg

தென்னிந்திய தமிழ்ச் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ளார். 

யாழ்ப்பாணம் வந்துள்ள அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை நட்பு ரீதியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதனிடையே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பின் போது இயக்குனர் பாரதிராஜா, யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மாகாணம் கண்டுள்ள முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிராஜா வாயிலை விரலை வைச்சால் கடிக்க தெரியாத சின்ன பப்பா <_< ஒன்றும் தெரியாமல் ஊருக்குப் போனாராம் அங்கே அவரை ஏமாத்திப் போட்டார்களாம்.அதை நம்பவும் இங்கே ஒரு கூட்டம் இருக்குது...இப்படியான அட்கள் இருக்கும் மட்டும் அவற்ற பிழைப்பு நன்றாப் போகும்

10292523_707755602665654_754224864452082

150746_873365936041363_50318649483461591


பாரதிராஜாவை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பதே செவ்வேள்தான்.இவர் மகிந்தா சார்பில் தேர்தலில் வேறு நின்றவர் .

பாரதிராஜா படம் காட்டுகின்றார்கள் எங்கட ஆட்களும் வாயை பிழக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிராஜாவும் ஒரு சராசரி சினிமா இயக்குனர். அவர் அரசியல்வாதி அல்ல, அவரை சம்மந்தப்படுத்தி அரசியல் பேசுவது எமது தவறு என்பது எனது கருத்து 

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிராசா ஒரு தமிழர்

அவர் யாழுக்கு போகும் போது

இன்னாரைத்தான் சந்திப்பேன் என்று போகும்நிலை தற்பொழுது அங்கில்லை

ஆனால் அப்படியான நிலை இருந்தபோதும் போயிருக்கிறார்

தான் விரும்பியோரை சந்தித்திருக்கிறார்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.