Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது – மாவை சேனாதிராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன சார்பு ஆட்சி என்பதிலும் பார்க்க அமெரிக்க எதிர்ப்பு ஆட்சியை மாற்றவே இந்த தேர்தல் நடக்கிறது. ஆனால் மிகப்பெருமளவில் நீண்ட கால நோக்கில் கடன் வழங்கி அதற்கு மாற்றீடாக நிலங்களையும் வளங்களையும் இலங்கையில் பெற்றுள்ள சீனா இலகுவில் இலங்கையை விட்டு வெளியேறாது. ஆட்சி மாறினாலும் அது நடக்க போவதில்லை.

புதிய ஆட்சியில் மைத்திரி ஜனாதிபதியாக நீண்ட காலம் நிலைக்க போவதில்லை. ரணிலை பிரதமராக கொண்ட கூட்டாட்சி அமையும். அமெரிக்க சார்பு ஐக்கிய தேசிய கட்சியும் அமெரிக்க எதிர்ப்பு சுதந்திர கட்சி மற்றும் கூட்டணிகளும் இழுபறிப்பட்டு எந்த முன்னேற்றமும் இலங்கையில் ஏற்படாது. இதற்குள் சீனா சந்திரிக்கவுடனும் அமெரிக்க எதிர்ப்பு கூட்டணி கட்சிகளுடனும் ஏற்கனவே இரகசிய தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கலாம். பண்டாரநாயக்கா நினைவு மண்டபத்தை கட்டிக்கொடுத்த சீனாவுக்கும் சந்திர்க்காவுக்கும் தொடர்பு இல்லை என்று நினைக்க முடியாது. சீனாவுக்கு இலங்கையில் இன்று சட்டரீதியான சொத்துக்களும் உரிமைகளும் கோடிக்கணக்கில் உள்ளன. அமெரிக்கா விரும்பவில்லை என்ற ஒரே காரணத்துக்காக சட்டவிரோதமாக சீனாவின் உரிமைகளை ஸ்ரீ லங்கா மறுக்க கூடிய நிலை இல்லை. ஆகவே புதிய ஆட்சி இன்றைய ஆட்சியிலும் பார்க்க வலிமை குறைந்த குழப்பமான ஆட்சியாகவே இருக்கும்.

 அதே வேளை இப்படி ஒரு புதிய ஆட்சி அமையுமா என்பதே கேள்விக்குறி. இராணுவ புரட்சி மூலம் இராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியை தொடர்வர். இதற்கு காரணம் அமெரிக்க பிரஜையாக இருந்து கொண்டு அமெரிக்க நலன்களுக்கு பாதகமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அமேரிக்கா ஒருபோதும் தண்டிக்காமல் விடுவதில்லை. அமெரிக்காவில் தேச துரோகம் மிக மோசமான குற்றம். ஆகவே இதில் இருந்து தப்ப இராஜபக்ச சகோதரர்களுக்கு உள்ள ஒரே வழி இராணுவ ஆட்சியே.

இந்த நிலையில் எந்த பக்கம் வாக்களிப்பது? 

மைத்திரிக்கு வாக்களித்தால் பலவீனமான ஸ்ரீ லங்காவை தமிழரின் பொருளாதர இராஜதந்திர பலத்தின் மூலம் கட்டுப்படுத்த சந்தர்ப்பம் உண்டு.

மைத்திரி வென்றதால் இராணுவ ஆட்சி வந்தால், அமெரிக்க இந்திய கூட்டு ஐ.நா. போர்க்குற்றம் என்ற சட்ட வரையறையை பயன்படுத்தி இராணுவ ரீதியாக தலையிட வாய்ப்பாக அமையும்.

  • Replies 75
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிலில் எனக்கு புரிந்தவைகளுக்கு பதில் எழுதுகின்றேன்....

மகிந்த காலம் பூரா போர் வெற்றியையும் புலிப் பூச்சாண்டியையும் காட்டி காட்டி சனாதிபதியாக இருக்கலாம் என்று கனவு கண்டார். ஆனால் அவரின் குடும்ப ஆட்சியும் மோசமான ஊழலும் தன் கட்சிக்குள்ளேயேயும் மக்களிடத்திலும் எதிர்ப்பை சம்பாதித்ததால் சிங்கள மக்களைக் கவர அவரிடம் வேறு எதுவும் இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே தெரிவு புலிகள் மீண்டும் தலை தூக்குவார்கள் என்றும், போர்க்குற்றம் என்றும் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான். முக்கியமாக கிராமப்புற மக்களிடம் போய் போர்க்குற்றம் என்றால் உங்கள் பிள்ளைகளுக்கும் (இராணுவத்தினருக்கும்) தண்டனை கொடுப்பார்கள் என்றும் படையினரயும் குற்றவாளிகளாக கைது செய்வார்கள் என்றும் பிரச்சாரம் செய்வது தனக்கு ஓரளவுக்கு சாதகமான சூழலை தோற்றுவிக்கும் என்பது அவருக்கு தெரியும். எனவே தான் போகும் இடம் எங்கும் அதையே உளறுகின்றார்.

சரி

அப்போ  எதிரணியினர் எதற்கு உளருகின்றனர்

தமிழருக்கு  எதுவும் கொடுக்கமாட்டோம் என ஒவ்வொரு கூட்டங்களிலும் எதிரணியினர் சொல்லவேண்டிய அவசியம் என்ன?

மகிந்த சொல்வதால்  இவர்களும் சொல்லவேண்டி இருக்கு என்று வைத்துக்கொண்டால்

சிங்களவர் மனங்களில் அதற்கு முக்கிய  இடமிருக்கு என்று தானே அர்த்தம்

அப்படியாயின் ஆட்சி  மாறி தமிழருக்கு என்ன பிரயோசனம்???

மகிந்தவுடன் அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பதுக்கு அப்பால் அவர்கள் இலங்கை அரசுடன் தான் இருக்கின்றார்கள்.

தற்பொழுது அவர்கள் மகிந்த அரசுடன் இல்லை

அதுவே நான் எழுதியது

அதனால் சர்வதேச அளவில் சிறீலங்கா பின்னடைவுகளைக்கண்டுள்ளது

ஆனால் மைத்திரி  வந்தால்

இவர்கள் எல்லோரும் சேர்ந்து ரணினில் நரித்தந்திரத்துடன் இணைந்து

உலகை கட்டிப்போட்டுவிடுவார்கள்...

இந்திய அரசை எடுத்துக்கொண்டால் போரின் போது உறுதுணையாக இருந்த ராஜதந்திகளை காட்டிலும் அதிகமாக இன்றும் மோடியின் அரசின் ராஜதந்திகள் இலங்கை அரசுடன் நெருக்கமாக இருக்கின்றனர். அதே போன்று தான் அன்றும் இன்றும் அமெரிக்க அரசின் இராணுவ ஒத்துழைப்பும், பயிற்சியும், ஒன்று இணைந்த கடற்படை ஒத்திகையும் நடக்கின்றன.  இவர்களுக்கு தேவை இலங்கை அரசு தம்முடன் மாத்திரம் இருக்க வேண்டும் என்பதே. அது சீனாவுடன் நெருங்குவதை தவிர்க்கவே இலங்கை அரசின் தலைமைத்துவத்தினை மாற்ற முற்படுகின்றனர்.

முதலில் ஒரு விடயத்தினை புரிந்து கொள்ளுங்கள். சர்வதேசம் இன்னும் போர்க்குற்றம் என்ற சொல்லைத் தானும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ் வருடம் நிகழ்ந்த மனிதவுரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான கூட்டத்தில் கூட போர்க்குற்றம் என்ற சொல்லை நீர்த்துப் போகச் செய்யும் மனித உரிமை மீறல் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தினர். போருக்கு முழு உடந்தையாக இருந்த மேற்கும் ஐநாவும் ஒரு போதும் போர்க்குற்றம் என்பதை ஏற்கப் போவதில்லை.

ஆரம்பத்தில் சர்வதேசம் மகிந்தவை ஓரளவுக்கு நம்பியது. ஆகக் குறைந்தது 13 பிளஸ் ஆவது தமிழர்களுக்கு கொடுப்பார்கள் என்று நம்பினர்.  ஆனால் மகிந்த எல்லாருக்கும் பெப்பே காட்டி ஏமாற்றிவிடலாம் என்று கனவு கண்டார். சர்வதேசத்துக்கு வழங்கிய எந்த ஒரு உறுதிமொழியையும் கடைப்பிடிக்க வில்லை. அதே நேரத்தில் சிங்கள பிரதேசங்களில் பெளத்தம் அல்லாத ஏனைய மதத்தினர் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், NGO க்கள் மீதான கடும் கட்டுப்பாடு என்பன சனநாயக முகமூடி போட்டுக்கொண்டு இருக்கும் நாடுகளுக்கு  கடும் எரிச்சலை தந்தன.

இதைத்தான் நானும் சொல்கின்றேன்

இதை வைத்தே நமது பிரச்சினைக்கொரு தீர்வை நாடவேண்டும்

இது தொடர்ந்தால் எமது தாகத்துக்கொரு தீர்வு வரும்

இதுக்கும் மேலாக சீனாவுடனான நெருக்கம் அவர்களை சினம் கொள்ள வைத்து இன்றைய தேர்தல் வரைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளன.

இந்த சீனாவுடனான எதிர்ப்பு என்பது பொய்யான தோற்றப்பாடு

அமெரிக்காவுக்கோ

ஐரோப்பாவுக்கோ

அவர்களின் நாடுகளில் சீனா நுளைவதை சந்தைப்படுத்தவதை தடை செய்யமுடியவில்லை

பிரான்னைப்பொறுத்தவரை இங்கு விற்கப்படும் அதிக பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.

இவர்கள் போய் சிறீலங்காவில் சீனா விற்பதை தடை செய்வதாவது....??

நேரத்துக்கும் கருத்துக்கும் நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட இனக்கொலையை நடத்தியதே மகிந்த என்கிற போது அவரின் மூலம் எமக்குத் தனிநாடு கிடைக்கும் என்பது நம்பக்கூடிய விடயமல்ல.
 
மகிந்தவை வைத்திருந்தால் தமிழருக்கு உரிமைகள் கிடைக்குமென்றால், யுத்தம் முடிந்து 5 வருடங்களாகியும் உரிமை கிடைப்பதற்கான ஏதாவது சமிக்ஞையாவது தெரிகிறதா ?? இல்லையே??
 
இந்த 5 வருடங்களில் செய்ய முடியாததை, தமிழருக்கு உரிமை எடுத்துத்தர இருக்கும் சக்திகள் (யாரென்று தெரியவில்லை) இனி மகிந்த வருவதனால் மட்டும் எப்பட்சி செய்யப் போகின்றன?
 
மகிந்தவை அகற்றுவதற்கு காத்திருக்கும் சக்திகள் என்று நம்பப்படும் இந்தியாவோ அல்லது அமெரிக்காவின் பின்னால் ஒளிந்திருக்கும் சர்வதேசமோ அல்லது ஐ. நாவோ தமிழருக்கு உரிமை கிடைத்துவிடும், அதனைத் தடுப்பதற்காக மகிந்தவை எப்பாடு பட்டாவது பதவியிலிருந்து அகற்றவேண்டும் என்று காத்திருந்தால், பின்னர் யார்தான் தமிழருக்கு உரிமை எடுத்துதர இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
 
ஆகத் தமிழருக்கு உரிமை கிடைப்பதை மகிந்தவும் விரும்பவில்லை, ஐ. நா வும் விரும்பவில்லை, இந்தியாவும் விரும்பவில்லை, அமெரிக்காவும் விரும்பவில்லை என்றால், யார்தான் விரும்புகிறார்கள்? அந்த ஐந்தாவது சக்தி யார் ?
 
மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால் குறைந்தது அவரை போர்க்குற்ற விசாரணைக்காவது அழைத்துச் செல்லலாம். ஆனால் இதுகூட எமக்கான உரிமைகளைப் பெற்றுத் தரப்போவதில்லை. ஆனால் அவர் தொஇடர்ந்தும் இருந்தால், வழக்கம்போலவே உலகமெங்கும் எங்கள் முகத்தில் கரிபூசிக்கொண்டு ராஜதந்திர சலுகைகளூடாக போர்விசாரணைகளை சுண்டுவிரலால் தட்டியெறிந்துகொண்டு வலம் வருவார்.
 
மைத்திரிபால வந்தால் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.
 
இந்த இருவரில் மகிந்த தோற்றாலிருக்கும் ஒரே நண்மை அவரை குறைந்தது போர்க்குற்ற விசாரணைக்காவது முயற்சிக்கலாம் என்பதே.

நியானி: ஒருமையில் விளித்து எழுதுவதைத் தவிர்க்கவும்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

நியானி அவர்களே,

நீங்கள் அநியாயத்துக்கு மகிந்தவுக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது !!!!! :D இனி எழுதும்போது கனம் மதிப்பிற்குரிய ஜனாதிபதி மகிந்த என்று எழுதினால்ப் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது மகிந்த அல்ல.. ரணில் வென்று வந்திருந்தாலும் இந்த அழிவு நடந்தே இருக்கும்.. காரணம், சிங்கள அரச இயந்திரத்தின் நோக்கங்களுள் ஒன்று எல்லைகளை விரிவுபடுத்துவது.. புறக்காரணிகளின் நோக்கம் உள்நாட்டுப்போரை அழிப்பது.. இவை இரண்டும் ஒரே நேர்கோட்டில் வந்தபோது மகிந்த ஜனாதிபதியாக இருந்தார். இன்று ரணில், சந்திரிகா எல்லோரும் போர் வெற்றிக்கு உரிமை கொண்டாடக் காரணம் அவர்களின் பங்களிப்புகளும் இதில் இருந்து வந்துள்ளன.

ஆகவே மைத்திரிபால வந்தால் கொஞ்சம் மூச்சுவிட இடம் கிடைக்கும் என்பதில் உண்மை இருக்கலாம். அது மேற்குலகை சமாதானப் படுத்துவதாக இருக்கலாம். ஆனால் அவை தமிழருக்கான தீர்வு அதையும் தந்துவிடப் போவதில்லை. முள்வேலி முகாம்களை விட்டு மக்களை வெளியே விட்டதை கொண்டாடியது போல் இருக்கும்..

முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை பூட்டிய அறைகளுக்குப் பின்னால் சிங்கள அதிகாரிகள் விவாதிக்கிறார்கள் என்பது. அதற்கான திட்டங்களையும் வரைகிறார்கள். அவர்களையும் மீறி மற்றையவர் வந்துவிட்டால் Plan B ஒன்று இருக்கும். இந்த அதிகார வட்டத்துக்குள் கோத்தபாயவும் உள்ளார் என்பதே சிறப்புச் செய்தி. மற்றும்படி ஜனநாயகத் தேர்தல், மக்கள் ஆட்சி என்பவை எல்லாம் வெறும் காகிதத்தில் எழுதவும், பேசிக்கொள்ளவும் பயன்படுவன மட்டுமே..!

இதைவிட எதை எழுதினால் இவ்வினம் திருந்தும்  இசை...??

எத்தனை வருடங்கள் அனுபவப்பட்டு

பழிவாங்கப்பட்டு

துடைத்தெறியப்பட்டு

ஏமாற்றப்பட்டு

கிழித்தெறியப்பட்டு......

என்ன பலன்??

அனுபவங்களூடாக என்னத்தை படித்தோம்..........??

சிங்களவனே  ஆச்சரியப்படுவான்

அட இன்னுமா இவங்க நம்மை நம்புகிறார்கள் என...??

மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால் குறைந்தது அவரை போர்க்குற்ற விசாரணைக்காவது அழைத்துச் செல்லலாம். ஆனால் இதுகூட எமக்கான உரிமைகளைப் பெற்றுத் தரப்போவதில்லை. ஆனால் அவர் தொஇடர்ந்தும் இருந்தால், வழக்கம்போலவே உலகமெங்கும் எங்கள் முகத்தில் கரிபூசிக்கொண்டு ராஜதந்திர சலுகைகளூடாக போர்விசாரணைகளை சுண்டுவிரலால் தட்டியெறிந்துகொண்டு வலம் வருவார்.

மைத்திரிபால வந்தால் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.

இந்த இருவரில் மகிந்த தோற்றாலிருக்கும் ஒரே நண்மை அவரை குறைந்தது போர்க்குற்ற விசாரணைக்காவது முயற்சிக்கலாம் என்பதே.

நியானி: ஒருமையில் விளித்து எழுதுவதைத் தவிர்க்கவும்.

இதைத்தான் பல சட்ட நிபுணர்கள் சொல்லுகின்றார்கள் ,பதவியில் உள்ளவர்கள் மீது குற்றம் சுமத்தி தண்டித்த சம்பவங்கள் இல்லை .

இதைவிட எதை எழுதினால் இவ்வினம் திருந்தும்  இசை...??

எத்தனை வருடங்கள் அனுபவப்பட்டு

பழிவாங்கப்பட்டு

துடைத்தெறியப்பட்டு

ஏமாற்றப்பட்டு

கிழித்தெறியப்பட்டு......

என்ன பலன்??

அனுபவங்களூடாக என்னத்தை படித்தோம்..........??

சிங்களவனே  ஆச்சரியப்படுவான்

அட இன்னுமா இவங்க நம்மை நம்புகிறார்கள் என...??

இனம் திருந்த முதல் நீங்கள் ?

எதை நம்புவது என்ற விவஸ்தையே இல்லையா ? எவர் எதை சொன்னாலும் தலையாட்டிக்கொண்டு நடந்த அழிவிற்கு நியாயம் கற்பிக்க நிற்கின்றீர்கள் .

மகிந்த இடத்தில் ரணில் வந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் ?பரிசோதனை செய்தா பார்த்தீர்கள் :icon_mrgreen: சிங்களவனை  நம்புகின்றார்கள் ? யார் நம்பியது .நீங்களே எழுதி அதற்கு பதிலும் எழுதுகின்றீர்கள் .

புலிகள் செய்த அரசியலை நியாயப்படுத்த தொடர்ந்தும் கற்பனையில் கதை வடிக்கின்றீர்கள் .

எதை எழுதினாலும்  அரசியல்ரீதியாக அதற்கு ஒரு விளக்கம் வையுங்கள்.

அதைவிட்டு  சிங்களவன் இப்படித்தான் இந்தியா இப்படிதான் சர்வதேசம் இப்படிதான் என்று சப்பை கட்டிக்கொண்டு.

இவர்கள் எல்லாம் இப்படிதான் என்றால் ஏன் நாங்கள் அரசியல் செய்வான் .போர்த்திக்கொண்டு படுக்கலாமே . 

எனக்கு  வகுப்பெடுக்க முதல்...

1- ரணில் வந்திருந்தால் இது நடந்திருக்காது என்பதை பரிசோதனை செய்யாமல் நிறுவுங்கள்

2- எதிரணியிலுள்ளவர்களில்

தமிழருக்கு எதையாவது தரக்கூடியவர் என நீங்கள் கருதும் ஒருவரையாவது காட்டுங்கள்.... :(

புஞ்சி பாண்டா கட்டாயம் தருவார் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்போராட்டம் முளைவிட்ட காலத்தில் மிகப்பெரிய இரண்டு இன அழிவுகளை சிங்களம் நடத்திக்காட்டியபோது ஆட்சியில் இருந்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. அந்தக் கட்சியில் அப்போதும் இருந்தவர்தான் ரணில். அவர் எந்த அடிப்படையில் ஒரு ஒப்பீட்டளவில் நல்லவராக இருந்திருக்க முடியும்? மகிந்த ஆட்சிக்கு வரும் முன்னர் தமிழர்களின் ஆயுதப்போரை பலவீனப் படுத்தும் முயற்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டவர்தான் ரணில். ஆகவே வெறும் முகங்களை வைத்து அலசி ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

சிங்கள அரச இயந்திரத்தின் தந்திரங்கள் ஆயுதப் போராட்ட காலத்துக்கு முன்பிருந்தே சிறப்பாக செயற்பட்டு வந்திருக்கின்றன. அவையெல்லாம் இந்தியாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதையே நோக்கமாக கொண்டிருந்திருக்கின்றன. சீனப்போரைப் பயன்படுத்தி மலையகத் தமிழரின் உரிமைகளைப் பறித்த விடயம். பாகிஸ்தான் போர்களைப் பயன்படுத்தி கச்சைதீவைப் பறித்த விடயம் என பட்டியல் நீள்கிறது. இவற்றைச் செய்து முடித்தது அன்று இருந்த சிங்கள ஆட்சியாளர்கள் அல்லர். அவர்களை இயக்கிய அரச அதிகாரிகள்தான்.

சர்வதேச உதாரணத்தைப் பார்த்தோமானால், ஃபுளோரிடாவில் மறு எண்ணிக்கை உத்தரவிடப்பட்டு அல் கோர் தோற்று, புஷ் வென்றது இன்றளவும் திரைமறைவு வேலையாகவே பேசப்படுகிறது. புஷ் ஆட்சிக்கு வந்து என்னவெல்லாம் நடந்தது என்பது தெரிந்ததே. குடியரசு கட்சி சண்டைக்குப் போகும்; ஜநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து நாட்டைக் கட்டியெழுப்பும் என்பது பேச்சுவழக்கு.

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வரப்போகிறார் என்பது அவரின் பெயர் அடிபடத் தொடங்கியபோதே ஓரளவு தெரியவர ஆரம்பித்துவிட்டது. மோடி அலை என்றார்கள்; குஜராத் வளர்ச்சி என்றார்கள். இவ்வளவுக்கும் ஜேர்மனியால், அமெரிக்காவால் விசா தடை செய்யப்பட்ட ஒருவர். அவரை ஆட்சிக்கு கொண்டுவந்து தடையை எல்லாம் நீக்கியுள்ளார்கள்.

மோடி அலை ஆரம்பித்துவிட்டது என்று பூதாகரமாக்கி ஆளை முன்னுக்கு கொண்டுவந்தபோது தடையாக நின்ற அத்வானி ஒதுக்கப்பட்டார். இதற்காக கட்சித்தலைவர் என்கிற முறையில் ராஜ்நாத் சிங் வேலை செய்தார். இன்று உள்துறை அமைச்சராக உள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றிய முடிவுகளையெல்லாம் எடுக்கிறார். இவருக்கு எவ்வாறு அவ்வாறான முடிவுகளை எடுக்க வருகிறது?! காரணம் இலகு. முடிவுகளை எடுத்து பரிந்துரை செய்வது அதிகாரிகள்தான். இவர் வெறும் முகம் மட்டுமே.

சுஷ்மா ஸ்வராஜ் பதவிக்கு வருமுன் இலங்கை செல்கிறார். சுற்றுப்பயணம் செய்கிறார். மகிந்த விலையுயர்ந்த இரத்தினங்களைப் பரிசளிக்கிறார். இவர் பிறகு "மோடி அலை"யில் வென்று வெளியுறவு அமைச்சர் ஆகிறார். லெட்டர்பேட் கட்சி நடத்திய‌ சுப்பிரமணிய சாமி பாஜகவில் இணைகிறார். இன்று ஆளும்கட்சியில் முக்கியமான ஒருவராக‌ உள்ளார். இவையெல்லாம் எதார்த்தமாக நடந்தவை என்று கூற இடமில்லை. இவற்றுக்குப் பின்னால் எல்லாம் மிகப்பெரிய பின்னணி உண்டு. அவற்றை நடக்கும் சம்பவங்களுடன் இணைத்துப் பார்த்து நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

.........??

சிங்களவனே  ஆச்சரியப்படுவான்

அட இன்னுமா இவங்க நம்மை நம்புகிறார்கள் என...??

உங்களுக்கு பதில் எழுத வாய்ப்பான விதத்தில் நாம் சொல்வதை திசை திருப்ப வேண்டாம் விசுகு.

இங்கு யார் சிங்களவர்களை நம்புகின்றோம் என்று எழுதியது அல்லது மைத்திரியை நம்புகின்றோம் என்று எழுதியது? அல்லது மைத்திரி வந்தால் தீர்வு கிடைக்கும் என்று எழுதியது?

மகிந்தவின் இத்தனை வருட ஆட்சி தமிழர்கள் வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்சி. முட்டாள்தனமாக மேற்கின் திட்டங்களுக்கும் மாறாக மகிந்தவை கொண்டு வந்து ஆட்சியில் இருத்தி பட்ட பாடுகளை நன்கு அறிந்தும் மேலும் மகிந்ததான் வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் இல்லை. ஈசன் குறிப்பிட்டு உள்ளது போன்று எமக்கு இருக்கும் ஒரே வழி, மேற்கின் திட்டங்களுக்கு எம்மை பங்காளியாக்குவதன் மூலமும்  மாறும் அரசியல் சூழ்நிலையை தக்கவாறு பயன்படுத்துவதும் தான் எமக்கு இருக்கும் தற்போதைக்கான ஒரே வழி.

ஆயுதப்போராட்டம் முளைவிட்ட காலத்தில் மிகப்பெரிய இரண்டு இன அழிவுகளை சிங்களம் நடத்திக்காட்டியபோது ஆட்சியில் இருந்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. அந்தக் கட்சியில் அப்போதும் இருந்தவர்தான் ரணில். அவர் எந்த அடிப்படையில் ஒரு ஒப்பீட்டளவில் நல்லவராக இருந்திருக்க முடியும்? மகிந்த ஆட்சிக்கு வரும் முன்னர் தமிழர்களின் ஆயுதப்போரை பலவீனப் படுத்தும் முயற்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டவர்தான் ரணில். ஆகவே வெறும் முகங்களை வைத்து அலசி ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

ரணிலை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வெல்ல வைக்க வேண்டும் என்று விரும்பியது அமெரிக்காவும், மேற்கும். இவற்றின் அனுசரனையில் தான் சமாதானப் பேச்சுவார்த்தையும் ரணிலின் மூலம் நடந்தது. புலிகள் ரணில் வந்தால், மேற்கின் அனுசரனையுடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட வேண்டி வந்துவிடும் என்பதாலும் தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டி வந்துவிடும் என்பதாலும் தான் மேற்கின் எண்ணங்களுக்கும் எதிராக மகிந்தவை வெல்ல வைக்க தமிழ் மக்களை வாக்களிப்பதை தடுத்தனர். அதன் பின் புலிகளும் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் இருந்து தாமகவே விலகி தமக்கும் தம் மக்களுக்கும் மேல் மண்ணை தூவினர்.

ரணில் வந்திருந்தால் போர் உடனே ஏற்பட்டு இருக்காது ஒஸ்லோ பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து ஒரு குறைந்த பட்ச தீர்வை நோக்கியாவது நகர்த்து இருக்கும். அப்படியான ஒரு குறைந்தபட்ச தீர்வை சிங்கள் பேரினவாத சக்திகள் கண்டிப்பாக கிழித்தெறிய வைத்து இருக்கும். அதன் பின்னான சூழ்நிலை தமிழர்களுக்கு மேற்கின் அனுசரனையை மேலும் கொடுத்து இருக்கும். இவையனைத்தும் மகிந்தவை கொண்டு வந்தமையால் இல்லாமல் ஆன விடயங்கள்.

---

ரணில் ஒரு மிக குள்ளநரியாக இருக்கலாம். ஆனால் மேற்குலகு அவர் மூலம் தான் இலங்கையில் வன்னிக்கு அப்பாலும் இப்பாலும் என்று இரண்டு ராட்சியங்கள் இருக்கு என்பதையும், இரண்டு கடற்படை உள்ளன என்பதையும் மறைமுகமாவது அங்கீகரித்தன. ஈற்றில் மேற்கின் முகத்திலும் காறி உமிழ்ந்து விட்டு மகிந்தவை கொண்டு வந்து பேரழிவுக்குள்ளானோம். மேலும் அழிவுகளை வரவேற்கின்றோம்.

 சரியான கருத்து. நாமே எமது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டதுதான் அன்று நடந்தது. இன்னொருமுறை இது நடக்கக் கூடாது. புரிந்தவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பதில் எழுத வாய்ப்பான விதத்தில் நாம் சொல்வதை திசை திருப்ப வேண்டாம் விசுகு.

இங்கு யார் சிங்களவர்களை நம்புகின்றோம் என்று எழுதியது அல்லது மைத்திரியை நம்புகின்றோம் என்று எழுதியது? அல்லது மைத்திரி வந்தால் தீர்வு கிடைக்கும் என்று எழுதியது?

மகிந்தவின் இத்தனை வருட ஆட்சி தமிழர்கள் வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்சி. முட்டாள்தனமாக மேற்கின் திட்டங்களுக்கும் மாறாக மகிந்தவை கொண்டு வந்து ஆட்சியில் இருத்தி பட்ட பாடுகளை நன்கு அறிந்தும் மேலும் மகிந்ததான் வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் இல்லை. ஈசன் குறிப்பிட்டு உள்ளது போன்று எமக்கு இருக்கும் ஒரே வழி, மேற்கின் திட்டங்களுக்கு எம்மை பங்காளியாக்குவதன் மூலமும்  மாறும் அரசியல் சூழ்நிலையை தக்கவாறு பயன்படுத்துவதும் தான் எமக்கு இருக்கும் தற்போதைக்கான ஒரே வழி.

மேற்குலகம்  இவ்வாறு  நகர்கிறது என்பதும் வெறும் ஊகமே.. :(  :(  :(

நிழலி எழுதியது தான் எனது கருத்தும் ,

அதைவிட சிங்களம் எமக்கு எந்த தீர்வையும் எழுத்தில் தந்தாலும் நடைமுறைப்படுத்தமாட்டார்கள்  .மூன்றாம் தரப்பின் அனுசரணையுடன் நடந்த பேச்சுவார்தைகளை நாங்கள் ஒரு போதும் குழப்பாமல் சிங்களத்தை இந்தியாவுடன் ,சர்வதேசத்துடன் முரண்பட வைத்திருந்தால் அது எமக்கு ஒரு பெரிய ராஜதந்திரவெற்றி . 

தற்செயலாக சிங்கள அரசுகள் சர்வதேசத்திற்கு பயந்து அவற்றை நிறைவேற்றிவிட்டால் தமிழ்ஈழம் பின்னர் சாத்தியம் இல்லாமல் போய்விடும் என்ற எண்ணமே எந்த பேச்சுவார்த்தையிலும்  உண்மைநிலை  பேணப்படவில்லை ,சிங்கள அரசின் நிலையும் ஓரளவு அதே போலிருந்தாலும் தங்களால் குழப்பப்படதாக இருக்ககூடாது என்பதில் மிக தெளிவாகஇருந்தார்கள் .

(புலிகளின் இந்த முடிவிற்கு ஒரு சரித்திர காரணமும் இருந்திருக்கலாமோ தெரியாது .வட அயர்லாந்து இன்று வரை பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர அயர்லாந்துடன் இணையமுடியாமல் இருப்பதற்கு காரணம்  அன்று அவர்கள் கைசாத்திட்ட ஒரு ஒப்பந்தமும் காரணம் )  

ஆரோக்யமான கருத்திடல்களிற்கு நன்றி
 
இங்கு பதியப்பட்ட கருத்துக்கள் யாவும் மகிந்தவிற்கு அல்லது மைத்தரிக்கு வாக்களிப்பதில் உள்ள நன்மை தீமைகளை அலசுபவைகளாகவே உள்ளன. யாருக்கு தமிழர்கள் வாக்களிக்கலாம் என்பதில் உறுதியான கருத்துக்களை பார்க்கமுடியவில்லை. புலவர் வேறு ஒரு திரியில் தமிழர் ஒருவரை நிற்க வைத்து சர்வதேசத்திற்கு புரிய வைத்தருக்கலாம் என்று கூறியிருந்தார். அதுவும் ஒரு விதத்தில் பகிஸ்கரித்தலிற்கு சமனானதே. அதாவது தமிழர்களது வாக்குகள் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக்கப்பட்டுவிடும்.
 
தமிழர்கள் ஏற்கனவே ஒரு தடவை யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை தம்மால நிர்ணயிக்க முடியும் என்பதை பகிஸ்கரிப்பின் மூலம் சர்வதேசத்திற்கும் இலங்கைக்கும் புரியவைத்துள்ளார்கள்.
 
இதன்படி பார்ப்போமாயின் தமிழர்களது வாக்குகளே ஜனாதிபதியை நிர்ணயிக்கப் போகின்றது. அதாவது தமிழர்கள் king makers. எம்மைப் பொறுத்தவரையில் இரு வேட்பாளர்களும் ஒன்றுதான். இங்குள்ள முக்கியமான கேள்வி பேயா அல்லது பிசாசா என்பதுதான். கூட்டமைப்பு காலம் தாழ்த்தாது ஒரு முடிவை எடுத்து மக்களிற்கு அறிவித்து விளக்கம் கொடுக்க வேண்டும். பந்து எமது கையில் என்பதனை மறந்து விடலாகாது. 

ஏற்கனவே சில பதிவுகளில் குறிப்பிட்டதைப் போல தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிக்காது மகிந்தருக்கு எதிராக அந்த வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது.

இதற்கான காரணங்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

தேர்தலை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்து  தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேசத்திற்குக் காட்டுவோம் என்ற ஒரு கருத்தும் உலவுகிறது. தமிழர்களின் ஒருமித்த முடிவு என்ன என்பதை தமிழர்கள் பல தடவைகள் காட்டியாயிற்று. ஏன் வடமாகாண சபைத் தேர்தலில் கூட சுமார் 80 சதவீத வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்திருந்தனர்.

இன்னமும் சர்வதேசத்திற்கு எதுவுமே தெரியாதது போலவும் இந்த முறை புறக்கணித்துத் தான் காட்ட வேண்டும் என்பதுவும் எவ்வளவு முட்டாள்தனம்...

முதலில் மகிந்தரின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து...

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் ராஜதந்திரம் என்பது மேற்கும் இந்தியாவும் விரும்பும்  அரசியல் திட்டங்களுக்கு அமைவாக எம்மை தயார் படுத்துவதேயாகும்.சம்பந்தர் ஐயா இந்தியாவின் திட்டம் இல்லாமல் இலங்கையில் காலடி வைக்க மாட்டார்.  :)
தமிழர்களுக்கான வெற்றிகள்  இனிமேல் deal களினால் மட்டுமே சாதுரியமாக பெற முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி எழுதியது தான் எனது கருத்தும் ,

அதைவிட சிங்களம் எமக்கு எந்த தீர்வையும் எழுத்தில் தந்தாலும் நடைமுறைப்படுத்தமாட்டார்கள்  .மூன்றாம் தரப்பின் அனுசரணையுடன் நடந்த பேச்சுவார்தைகளை நாங்கள் ஒரு போதும் குழப்பாமல் சிங்களத்தை இந்தியாவுடன் ,சர்வதேசத்துடன் முரண்பட வைத்திருந்தால் அது எமக்கு ஒரு பெரிய ராஜதந்திரவெற்றி . 

தமிழர்களின் ராஜதந்திரம் என்பது மேற்கும் இந்தியாவும் விரும்பும்  அரசியல் திட்டங்களுக்கு அமைவாக எம்மை தயார் படுத்துவதேயாகும்.சம்பந்தர் ஐயா இந்தியாவின் திட்டம் இல்லாமல் இலங்கையில் காலடி வைக்க மாட்டார்.  :)
தமிழர்களுக்கான வெற்றிகள்  இனிமேல் deal களினால் மட்டுமே சாதுரியமாக பெற முடியும்.

இலங்கையில் இன்று வரை அழிவு தொடர்வதற்கும் அது முடிவுக்கு வராமல் இருக்க போவதற்கும் முக்கியமான காரணம், இந்த அழிவுகளுக்கான காரணத்தை தமிழ் மக்கள் இன்னமும் சரியாக புரிந்து கொள்ளாததேயாகும்.

இந்தியா - சீனா - அமெரிக்காவுக்கு இடையேயான புவியியல் மேலாண்மை போட்டியில், தமிழர்களையும் சிங்களவர்களையும் பகைவர்களாக நீண்ட காலத்துக்கு வைத்திருக்க வேண்டிய தேவை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இருக்கிறது. அமெரிக்காவின் நிலைப்பாடு சரியாக அறியப்படுவது கடினம்.

இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் அயலாவர்களாகவோ அல்லது ஒன்றாகவோ வாழ வேண்டியது தவிர்க்க முடியாத யதார்த்தம். ஒருவரை ஒருவர் கொன்று கொண்டும் அழித்துக்கொண்டும் நிம்மதியாக வாழ முடியாது. ஆகவே தொடர்ச்சியாக இந்த மேலாண்மை போட்டியில் பகடைக்காய்களாக தமிழர்களும் சிங்களவர்களும் இருக்கும் வரை  இந்த பிரச்சினைக்கு முடிவு கிடையாது. இதனால் சிங்களவர்களுக்கு ஏற்படும் பாதிப்பிலும் பார்க்க தமிழர்களுக்கு உண்டாகும் பாதிப்பு மிக மோசமானது.

ஆகவே  இந்த மேலாண்மை போட்டியில் தொடர்ந்தும் பலியாகாமல் இருப்பது எப்படி என்பது பற்றி தமிழர் தலைமை ஏற்படப்போகும் புதிய அரசுடனாவது ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும். இந்த பிரச்சினையை தமிழர் - சிங்களவர் பிரச்சினையாக தமிழரும் சிங்களவரும் பார்க்க வேண்டும் என்பதே இந்த மேலாண்மை போட்டியில் உள்ளவர்களின் தேவை. அது அவர்களின் நோக்கத்துக்கு அவசியமானது. தமிழர் - சிங்களவர் பிரச்சினைக்கு மேலே சென்று இதை சர்வதேச மேலாண்மைக்கான போட்டியில் ஏற்படும் பொதுவான அழிவாக பார்த்து இந்த மேலாண்மை போட்டியில் தொடர்ந்தும் அழிந்து போகும் திட்டங்களை போடாமல் எப்படி இதில் இருந்து விடுபடுவது என்று பார்க்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் ஆதரவை சாட்டாக வைத்தே இந்தியா இந்த மேலாண்மை போட்டிக்கு இலங்கை மக்களை பலி கொடுக்கிறது. ஆகவே இதில் இருந்து விடுபட முதலில் தமிழ் மக்கள் முன்வர வேண்டும். தமிழர்கள் முன்வராமல் தொடர்ந்தும் மேலாண்மை போட்டியில் பகடைக்காய்களாக இருக்க விரும்பும் வரை சிங்களவர்கள் அதற்கு எதிரான செயற்பாடுகளுக்கு தேவையாக ஆதரவை தேடுவார்கள். ரணிலின் ஆட்சியில் இந்த ஆதரவு அமெரிக்க அரசின் ஆதரவாகும்.

ஆகவே தமிழர்கள் இந்த மேலாண்மை போட்டியில் பகடைக்காய்களாக இருக்க விரும்பும் வரை எந்த தீர்வும் சாத்தியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய காணொளி ஆனாலும் எத்தனைபேர் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. மீள் இணைப்பிற்கு நன்றி நொச்சி.

குறிப்பாக 40:00 நிமிடங்களில் இருந்து தமிழகத்தில் நடைபெறுவது குறித்து பேசுகிறார். ஜெயலலிதாவை முன்னுக்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பதை 2011 இல் சொல்லியிருக்கிறார். ஹிலரி கிளின்ரன் ஜெயாவை சந்தித்த விடயமும் ஞாபகத்துக்கு வருகிறது.

இதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் மகிந்தவா மைத்திரியா என்கிற கேள்வி எழாது.. :D

உலகத்தில் அக்கம் பக்கம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை கண்திறந்து பார்ப்பதில்லை. சும்மா சர்வதேச அரசியல் மேற்கு  நாடுகள் என்று ஒன்று விட்ட ஒரு சொல்லுக்கு வர்ணம் அடிச்சு கருத்தை எழுதினால் சர்வதேச அரசியல் கருத்தாகிவிடும் என்ற நிலையில்தான் பலர் இங்கு எழுதுகிறார்கள்.
 
நான்கு நாட்கள்முன்பு மோடி அறிவிக்கிறார் ....
இந்தியாவின் ஆதரவு பாலஸ்தீனத்திட்கு  இனி இருக்காது என்றும் இஸ்ரெலுடன் உறவு புதுப்பிக்கப்படும் என்றும்.
 
இதில் எந்த அரசியலும் இல்லை இஸ்ரேல் பைனான்சியல் இன்ஸ்ட்டியுட் தனியாக மோடியுடன் செய்த பணமாற்று வேலை மட்டுமே அது.
ஆனால் இஸ்தரேல் மென்பொருள் தயாரிப்பு இந்தியாவிற்கு இறக்குமதி ஆகும்போது வேலைவாய்ப்பு கொஞ்ச பேருக்கு வரும். 
இஸ்ரேல் இப்போது அமெரிக்காவில் செய்வதுபோல் முதலில் வருத்தத்தை மக்களுக்கு கொடுப்பது பின் மருந்தை கொடுப்பது என்ற சித்து விளையாட்டு (பன்றி காய்ச்சால) இந்தியாவில் தொடங்கினால் மருத்துவ துறை ஸ்டாக் இன்டெக்ஸ் ஏறும். மோடிக்கு விளம்பரம் ஆகும்.
அவர்களது கெமிக்கல் விவசாய முறை இறக்குமதி ஆகும் இதில் விவசாயிகள் இலாபம் அடைவர் (மக்கள் நோய் அடைவர்) பெரும் விளம்பரம் மோடி அடைவார்.
 
இப்போதும் அங்கு சீன கப்பல் வருது .... இங்கு அமெரிக்க ராக்கெட் வருது ... இப்போது மைத்திரி வந்தால் மற்ற கப்பலில் சுதந்திரம் வருது என்று சர்வதேச அரசியல் எழுதிகொண்டிருக்கிறார்கள் சிலர்.
வாசிச்சா சிரிப்புதான் வரும். 

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் ஆதரவை சாட்டாக வைத்தே இந்தியா இந்த மேலாண்மை போட்டிக்கு இலங்கை மக்களை பலி கொடுக்கிறது. ஆகவே இதில் இருந்து விடுபட முதலில் தமிழ் மக்கள் முன்வர வேண்டும். தமிழர்கள் முன்வராமல் தொடர்ந்தும் மேலாண்மை போட்டியில் பகடைக்காய்களாக இருக்க விரும்பும் வரை சிங்களவர்கள் அதற்கு எதிரான செயற்பாடுகளுக்கு தேவையாக ஆதரவை தேடுவார்கள். ரணிலின் ஆட்சியில் இந்த ஆதரவு அமெரிக்க அரசின் ஆதரவாகும்.

ஆகவே தமிழர்கள் இந்த மேலாண்மை போட்டியில் பகடைக்காய்களாக இருக்க விரும்பும் வரை எந்த தீர்வும் சாத்தியம் இல்லை.

தமிழ் மக்கள் எப்படி முன்வர முடியும்?
எந்த வழிமுறையை நீங்கள் நம்புகிறீர்கள்?
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் அக்கம் பக்கம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை கண்திறந்து பார்ப்பதில்லை. சும்மா சர்வதேச அரசியல் மேற்கு  நாடுகள் என்று ஒன்று விட்ட ஒரு சொல்லுக்கு வர்ணம் அடிச்சு கருத்தை எழுதினால் சர்வதேச அரசியல் கருத்தாகிவிடும் என்ற நிலையில்தான் பலர் இங்கு எழுதுகிறார்கள்.
 
நான்கு நாட்கள்முன்பு மோடி அறிவிக்கிறார் ....
இந்தியாவின் ஆதரவு பாலஸ்தீனத்திட்கு  இனி இருக்காது என்றும் இஸ்ரெலுடன் உறவு புதுப்பிக்கப்படும் என்றும்.
 
இதில் எந்த அரசியலும் இல்லை இஸ்ரேல் பைனான்சியல் இன்ஸ்ட்டியுட் தனியாக மோடியுடன் செய்த பணமாற்று வேலை மட்டுமே அது.
ஆனால் இஸ்தரேல் மென்பொருள் தயாரிப்பு இந்தியாவிற்கு இறக்குமதி ஆகும்போது வேலைவாய்ப்பு கொஞ்ச பேருக்கு வரும். 
இஸ்ரேல் இப்போது அமெரிக்காவில் செய்வதுபோல் முதலில் வருத்தத்தை மக்களுக்கு கொடுப்பது பின் மருந்தை கொடுப்பது என்ற சித்து விளையாட்டு (பன்றி காய்ச்சால) இந்தியாவில் தொடங்கினால் மருத்துவ துறை ஸ்டாக் இன்டெக்ஸ் ஏறும். மோடிக்கு விளம்பரம் ஆகும்.
அவர்களது கெமிக்கல் விவசாய முறை இறக்குமதி ஆகும் இதில் விவசாயிகள் இலாபம் அடைவர் (மக்கள் நோய் அடைவர்) பெரும் விளம்பரம் மோடி அடைவார்.
 
இப்போதும் அங்கு சீன கப்பல் வருது .... இங்கு அமெரிக்க ராக்கெட் வருது ... இப்போது மைத்திரி வந்தால் மற்ற கப்பலில் சுதந்திரம் வருது என்று சர்வதேச அரசியல் எழுதிகொண்டிருக்கிறார்கள் சிலர்.
வாசிச்சா சிரிப்புதான் வரும். 

மோடியினுடைய  தொகுதி இஸ்ரேலின் ஒரு தொகுதியாகிவிட்டது என்கிறார்கள்

இப்போ மோடி பிரதமராக வந்ததிலிருந்து

இந்தியாவே இஸ்ரேலின் மாகாணமாகிவிட்டது

எல்லாம் ஒட்டகத்துக்கு கழுத்துவைக்க இடம் கொடுத்த கதைதான்..

இஸ்ரேல் ரிஸ்க் எடுத்து விதை போட்டது 3 வருடம் முன்பு.
இப்போ மரம் வளர்ந்து பழம் தொங்குது .........
இனி அவர்கள் புடுங்கி சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள்.
 
சில அரசியல் மேதைகள்.
இப்போதைய உலக அரசியலில் உக்ரைனில் பிரச்சனை  கஷ்மீரில் குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தான் அதிர்கிறது. இப்போதைய அரசு சரியான நேரத்தில் காயை நகர்த்துகிறது. இதுதான் இந்தியாவிற்கு முநேற்றத்தை கொடுக்கும் அது இது என்று எழுதி கொட்டி விடுவார்கள். 
வாசிப்பவர்களும் ஜோசியம் மாதிரி .....
உண்மைதான் உக்ரைனில் பிரச்சனை ....
காஸ்மீரில் குண்டு வெடிக்கிறது. எல்லா சர்வதேச அரசியலையும் அலசி ஆராய்ஞ்சு ஒரு கட்டுரை வரைஞ்சு இருக்கிறார் என்று. தங்கள் அரசியல் அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டியதுதான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.