Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். கிறிஸ்மஸ் வாழ்த்தை முகநூலில் மட்டுமன்றி தொலைபேசியிலும் பலர் கிறீத்தவர்கள் அல்லாத பலருக்கும் கிறீத்தவர்கள் அல்லாதவர்கள் அனுப்புகின்றனர். எனக்கு அதில் உடன் பாடு இல்லை. ஏனெனில் ஒவ்வொருவரின் மதமும் தனித்துவமானது அவரவர்க்கு. நாம் மற்றைய மதத்தினரை மதிக்கவேண்டும். ஆனால் மற்ற மதத்தவரின் ஒரு கொண்டாட்டத்தை அந்த மதம் அல்லாதவர்கள் ஏன் கொண்டாட வேண்டும்????  பல இந்து சமயத்தைப் பின்பற்றும் குடும்பங்கள் மரம் வைத்து அலங்கரித்து பரிசுப்பொருட்கள் வாங்கிக் குவித்து, அவர்கள் உண்பதுபோலவே உணவுகள் சமைத்து......

அதே வேளை தமிழர்களுக்குப் பொதுவான பொங்கல் விழாவைக் கூடக் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை. அது ஏன் ???

மற்றைய மதத்தவர் பலர் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வந்து வசிக்கவில்லையா??? அவர்கள் எல்லாம் எமது விழாக்களைக் கொண்டாடினார்களா ???? இது நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. ஆனால் காலப்போக்கில் எமது பிள்ளைகள் மொழியை மறந்தது போல எந்த மதம் என்பதையும் மறந்து கிறித்தவ மதத்தினராக வாழ வழிவகுக்காதா என்னும் ஆதங்கம் தான்.

  • Replies 140
  • Views 16.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தப்பான அபிப்பிராயம் சுமே.... :(

மதம் மீது பற்றிருக்கலாம்

மதவெறி  இருக்கவே கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் மதவெறிக்கும் என்ன தொடர்பு அண்ணா. நான் கேட்டதுக்கு பதில் எழுதாமல் உங்களை நல்லவர் என்று மற்றவருக்குக் காட்டுவது மட்டுமானதாகவே உங்கள் பதில் உள்ளது அண்ணா.

ஓரு கிறித்தவ நாட்டில் இருந்து கொண்டு

தாய் மொழியில் அல்லாத பிறமொழியில்  பேசிக்கொண்டு

அவனது பாடசாலையில் படித்துக்கொண்டு

அவனது கொண்டாட்டத்தையே நாம்  ஏன் கொண்டாடணும் என்ற கேள்விக்கு என்ன பதில் தரமுடியும் சுமே..

இதில் வேறு நான் நல்லவனா??

கெட்டவனா?.? :(  :(

தனது மண்ணில்

எங்களது கொண்டாட்டங்களை அனுமதிக்கும் அவன் எங்கே??

நாம் எங்கே....??

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவர்களையும் அதிகமாகவும் கிறிஸ்து மதத்தை முன்னிலைப்படுத்தும் மேற்குநாடுகளில் வசிப்பவர்கள் அந்த அந்த நாடுகளின் கலாச்சாரங்களில் பங்கெடுப்பது நல்லதுதானே. கிறிஸ்மஸ் பண்டிகைக்காலம் விடுமுறைக்காலம் என்பதால் இதனை சமயக்கொண்டாட்டமாகப் பார்க்காமல் விடுமுறையை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மகிழ்ந்திருந்து கொண்டாடும் நாட்களாகப் கருதவேண்டியதுதானே.

அது சரி. ஏன் சைவர்கள் எல்லாம் ஆங்கிலப் புதுவருடம் பிறக்கும் ஜனவரி முதலாம் திகதி நள்ளிரவு சைவக் கோயில்களுக்கு முண்டியடித்துப் போய் சாமிகளைக் கும்பிட்டு கலண்டர் வாங்கி வருகின்றார்கள்? இதற்கும் ஏதாவது சமய விளக்கம் இருக்குது என்று சொல்லவேண்டாம்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுக்கு அண்ணா அவர்கள் எமது நாட்டில் வந்து இருந்தபோது நாம் அவர்களுக்கு எம் மதத்தைத் திணித்தோமா ?? விதண்டாவாதத்துக்குக் கருத்தெளுதாமல் எழுதுங்கள் அண்ணா. அவர்கள் எப்பவாவது எங்கள் மதத்தைப் பின்பற்றுங்கள் என்றார்களா???

மொழி என்பது ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கு. ஆகவே இருவருக்கும் தெரிந்த மொழியில் உரையாடினால் அன்றி மற்றவர் புரிந்து கொள்ள முடியாது. எதையும் எதையும் முடிச்சுப்போடுகிறீர்கள். எத்தனை காலம் என்றாலும் தமிழரிடம் ஊறியிருக்கும் அடிமைப்புத்தி மாறவே மாறாது. 

கிறிஸ்தவர்களையும் அதிகமாகவும் கிறிஸ்து மதத்தை முன்னிலைப்படுத்தும் மேற்குநாடுகளில் வசிப்பவர்கள் அந்த அந்த நாடுகளின் கலாச்சாரங்களில் பங்கெடுப்பது நல்லதுதானே. கிறிஸ்மஸ் பண்டிகைக்காலம் விடுமுறைக்காலம் என்பதால் இதனை சமயக்கொண்டாட்டமாகப் பார்க்காமல் விடுமுறையை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மகிழ்ந்திருந்து கொண்டாடும் நாட்களாகப் கருதவேண்டியதுதானே.

அது சரி. ஏன் சைவர்கள் எல்லாம் ஆங்கிலப் புதுவருடம் பிறக்கும் ஜனவரி முதலாம் திகதி நள்ளிரவு சைவக் கோயில்களுக்கு முண்டியடித்துப் போய் சாமிகளைக் கும்பிட்டு கலண்டர் வாங்கி வருகின்றார்கள்? இதற்கும் ஏதாவது சமய விளக்கம் இருக்குது என்று சொல்லவேண்டாம்!!!

விடுமுறையை மனைவி பிள்ளைகள், நண்பர்கள் அனைவருடனும் கொண்டாடுங்கள், உண்டு மகிழுங்கள், ஆடிப்பாடுங்கள் யார் வேண்டாம் என்றது ??? அதற்காக கிறிஸ்மஸ் மரம் வைத்து வீட்டில் .........

ஆங்கிலப் புதுவருடத்துக்கு சைவக்கொவில்களுக்குப் போவோரை எல்லோ உந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் கிருபன். கோவிலுக்கே போகாத என்னிடம் கேட்கிறீர்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறையை மனைவி பிள்ளைகள், நண்பர்கள் அனைவருடனும் கொண்டாடுங்கள், உண்டு மகிழுங்கள், ஆடிப்பாடுங்கள் யார் வேண்டாம் என்றது ??? அதற்காக கிறிஸ்மஸ் மரம் வைத்து வீட்டில் .........

ஆங்கிலப் புதுவருடத்துக்கு சைவக்கொவில்களுக்குப் போவோரை எல்லோ உந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் கிருபன். கோவிலுக்கே போகாத என்னிடம் கேட்கிறீர்கள்.

இரண்டுக்கும் விடை ஒன்றுதான் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு கிறித்தவ நாட்டில் இருந்து கொண்டு

தாய் மொழியில் அல்லாத பிறமொழியில் பேசிக்கொண்டு

அவனது பாடசாலையில் படித்துக்கொண்டு

அவனது கொண்டாட்டத்தையே நாம் ஏன் கொண்டாடணும் என்ற கேள்விக்கு என்ன பதில் தரமுடியும் சுமே..

இதில் வேறு நான் நல்லவனா??

கெட்டவனா?.? :( :(

தனது மண்ணில்

எங்களது கொண்டாட்டங்களை அனுமதிக்கும் அவன் எங்கே??

நாம் எங்கே....??

நல்ல பதில் விசுகர்.

சுமே அக்கா, கனடா, அமெரிக்கா குடியேறிகள் நாடு. அதனால் அங்கே' happy holiday' என்றே சொல்வார்கள்.

ஆனால் ஐரோப்பவில் நாம் வாழ்வது சுதேசிகளின் நாடுகளில். ஆகவே கிறிஸ்மஸ், புதுவருட விடுமுறைக்காலம் என்கின்றனர்.

ஊரில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவ நண்பர்களுடன் பாடசாலைகளில் சரஸவதி பூசை கொண்டாடி இருக்கிறோம்.

ரம்ஜான் சாப்பாடு, அரக்கப் பறக்க, நண்பர்கள் வீடு செல்வோம், ஒரு கை பார்க்க...

அதே போல் தான் கிறிஸ்மஸ் பண்டிகையும்.

பண்டிகைகள் சிறுவர்களுக்கே. இதிலே மதம் எங்கே அவர்களுக்கு தெரியப் போகிறது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா நாங்க தமிழர். அக்கா நாங்க அப்படிதான் எல்லா விழக்களையும் கொண்டாடுவோம் அதுதான் வாஙவன் போறவன் எல்லம் ஏறி மிதிச்சிட்டுபோறான்.

பண்டிகைகள் சிறுவர்களுச்கே. இதிலே மதம் எங்கே அவர்களுக்கு தெரியப் போகிறது?

அவ்வளவு தான் :)

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் Merry Christmas and Happy Holidays! என்றுதான் வாழ்த்து சொல்லுகிறார்கள்.. நானும அவர்களுக்கு சொல்லுவேன்.. மற்றும்படி, மரம் வைத்து இன்னும் கொண்டாடியதில்லை. பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு ஆர்வம் வந்து கேட்கிறார்கள்.. சில பெற்றோர்கள் செய்கிறார்கள்.. சிலர் மத விடயம் என்பதால் செய்வதில்லை.. வேறும் சிலர் பஞ்சிபிடித்து செய்வதில்லை.. :D

அலுவலகத்தில் வேலை செய்யும் சில வெள்ளைகளுக்கு அறவே கடவுள் பக்தி கிடையாது. ஆனாலும் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிப்பார்கள்.. அவர்களுக்கு மதம் என்பதைவிட விடுமுறைக்காலம்; மலிந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்; நண்பர்களுடன் கூடிக் களிக்கலாம்; உறவினர்களை சந்திக்கலாம்; தண்ணியடிக்கலாம் என்பதினாலேயே கூடுதல் மகிழ்ச்சி. :D இந்த விடயம் மிகவும் வியாபாரமயப்படுத்தப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பது.... மதத்திற்கு அப்பால்பட்டு, பொதுவாக எல்லோருக்கும் விடுமுறை நாளாக அமைவதால்... அதனை எம்மவரும் கொண்டாடுகிறார்கள்.
இதனை யாருடைய வற்புறுத்தலும் இல்லாமலே... செய்கிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டியது.
 
எமது கொண்டாட்டமான ... தைப்பொங்கல், புதுவருடப் பிறப்பன்று இங்கு லீவு கிடைக்காது... வேலை செய்து கொண்டிருப்போம். அதனை ஈடுகட்ட, கிறிஸ்மஸ் விடுமுறையை கொண்டாடுகின்றோம்.
 
அத்துடன்.. எதிர்த்த வீடு, அயல் வீடு, மேல் வீடு, கீழ் வீடு  எல்லாம் அலங்கரித்து கொண்டாடும் போது...
நம்ம வீடு... அலங்காரம் இல்லாமல், வழமையான சோறையும், கறியையும் சமைத்து சாப்பிட்டால்... பிள்ளைகளுக்கும் ஒரு ஏமாற்றமாக.... நமக்கும் நல்லாவா இருக்கும். :D

வேலை செய்யும் இடத்தில்.... கிறிஸ்மஸ் அலவன்சை கூச்சப் படாமல் கை நீட்டி வாங்கும் நாம் :lol:, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் கொண்டாடுவதில் தவறில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எமது தமிழீழம் அமைந்து வெளிநாட்டவர் அங்கு வரும்போது பொங்கல் வைக்கச் சொல்லுவோம்.. :D வெள்ளைப் பெண்களை குலவையிடச் சொல்லுவோம்.. சரியா!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கொண்டாட்டங்களில் தைப்பொங்கல், ஆடிப்பெருக்குத் தவிர்ந்த ஏனைய கொண்டாட்டங்கள் அனைத்துமே தமிழர்மரபுவழி வந்ததா என்ற சதேகம் உறுதியாகத் தீர்க்கப்படாமலே அவற்றைக் கொண்டாடிவருகிறோம். இந்நிலையில் ஏனைய இனங்களின் மதக் கொண்டாட்டங்களில் பங்குபற்றுவதை ஏன் தவறாக நோக்கவேண்டும். பாதிரியார் புதுப்பானைவைத்துப் பொங்கித் தைப்பொங்கலை தேவாலயத்தில் கொண்டாடியபோது நானும் அதில் பங்குபற்றியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே வேளை தமிழர்களுக்குப் பொதுவான பொங்கல் விழாவைக் கூடக் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை. அது ஏன் ???

மிகவும் பிழையான கருத்து.
 
கொழும்பில் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்களன்று கோலம் போட்டு, பொங்கி தமிழர்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

வயசுக்கு அண்ணா

1- அவர்கள் எமது நாட்டில் வந்து இருந்தபோது நாம் அவர்களுக்கு எம் மதத்தைத் திணித்தோமா ?? விதண்டாவாதத்துக்குக் கருத்தெளுதாமல் எழுதுங்கள் அண்ணா.

2- அவர்கள் எப்பவாவது எங்கள் மதத்தைப் பின்பற்றுங்கள் என்றார்களா???

அவர்களும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நாமும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நீங்கள் தான் இரண்டையும் எழதியுள்ளீர்கள்

இப்போ திணிப்பில்லாமல் அவரவர் சுயமாக எடுக்கும் முடிவுகளை நீங்கள் எப்படி சரியில்லை எனத்திணிப்பீர்கள்

3-மொழி என்பது ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கு. ஆகவே இருவருக்கும் தெரிந்த மொழியில் உரையாடினால் அன்றி மற்றவர் புரிந்து கொள்ள முடியாது. எதையும் எதையும் முடிச்சுப்போடுகிறீர்கள். எத்தனை காலம் என்றாலும் தமிழரிடம் ஊறியிருக்கும் அடிமைப்புத்தி மாறவே மாறாது. 

அதாவது தேவையென்றால் மாற்றிக்கொள்ளலாம்

சுயநலமில்லையா இது...??

விடுமுறையை மனைவி பிள்ளைகள், நண்பர்கள் அனைவருடனும் கொண்டாடுங்கள், உண்டு மகிழுங்கள், ஆடிப்பாடுங்கள் யார் வேண்டாம் என்றது ??? அதற்காக கிறிஸ்மஸ் மரம் வைத்து வீட்டில் .........

ஆங்கிலப் புதுவருடத்துக்கு சைவக்கொவில்களுக்குப் போவோரை எல்லோ உந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் கிருபன். கோவிலுக்கே போகாத என்னிடம் கேட்கிறீர்கள்.

உங்கள் வாழ்வில் இதுவரை எந்த மற்ற மதக்கோயிலவ்களுக்கும் போகவில்லை என்பதை உறுதிப்படுத்தமுடியுமா??

ஒன்றுக்கு 100 தரம் யோசிக்கவும்

இங்கு எழுதினால்  எழுதியது தான்.. :icon_idea: 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதில் விசுகர்.

சுமே அக்கா, கனடா, அமெரிக்கா குடியேறிகள் நாடு. அதனால் அங்கே' happy holiday' என்றே சொல்வார்கள்.

ஆனால் ஐரோப்பவில் நாம் வாழ்வது சுதேசிகளின் நாடுகளில். ஆகவே கிறிஸ்மஸ், புதுவருட விடுமுறைக்காலம் என்கின்றனர்.

ஊரில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவ நண்பர்களுடன் பாடசாலைகளில் சரஸவதி பூசை கொண்டாடி இருக்கிறோம்.

ரம்ஜான் சாப்பாடு, அரக்கப் பறக்க, நண்பர்கள் வீடு செல்வோம், ஒரு கை பார்க்க...

அதே போல் தான் கிறிஸ்மஸ் பண்டிகையுன்.

பண்டிகைகள் சிறுவர்களுச்கே. இதிலே மதம் எங்கே அவர்களுக்கு தெரியப் போகிறது?

விடுமுறை காலம் தேவை இல்லை என்றா நான் எழுதியுள்ளேன் ???

நீங்கள் தான் சரஸ்வதி பூசை கொண்டாடினீர்களே தவிர உங்கள் இஸ்லாமிய நண்பனோ அல்லது கிறித்தவ நண்பனோ சரஸ்வதி பூசையைக் கொண்டாடவில்லை. அல்லது நீங்கள் ரம்லானைக் கொண்டாடவில்லை. நான் எழுதியிருப்பதை வாசிக்காமல் பதில் எழுதியுள்ளீர்களோ நாதமுனி ???

சுமே அக்கா நாங்க தமிழர். அக்கா நாங்க அப்படிதான் எல்லா விழக்களையும் கொண்டாடுவோம் அதுதான் வாஙவன் போறவன் எல்லம் ஏறி மிதிச்சிட்டுபோறான்.

மற்றவர்களுக்காக எங்கள் சுயத்தை இழப்பவன் தமிழன். அதற்காகவே தமிழனை வருடாவருடம் கௌரவிக்கவேண்டும்

அவ்வளவு தான் :)

உங்கள் காலத்துக்குப் பின்னரும் எம் பிள்ளைகள் இங்குதான் வேரூன்றப் போகின்றனர். நீங்களே உங்கள் பிள்ளைகளுக்குத் தவறான வழிகாட்டி ?? எங்கள் வாழ்வைப்பற்றி யார் அவர்களுக்குக் கூறுவது ???

கனடாவில் Merry Christmas and Happy Holidays! என்றுதான் வாழ்த்து சொல்லுகிறார்கள்.. நானும அவர்களுக்கு சொல்லுவேன்.. மற்றும்படி, மரம் வைத்து இன்னும் கொண்டாடியதில்லை. பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு ஆர்வம் வந்து கேட்கிறார்கள்.. சில பெற்றோர்கள் செய்கிறார்கள்.. சிலர் மத விடயம் என்பதால் செய்வதில்லை.. வேறும் சிலர் பஞ்சிபிடித்து செய்வதில்லை.. :D

அலுவலகத்தில் வேலை செய்யும் சில வெள்ளைகளுக்கு அறவே கடவுள் பக்தி கிடையாது. ஆனாலும் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிப்பார்கள்.. அவர்களுக்கு மதம் என்பதைவிட விடுமுறைக்காலம்; மலிந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்; நண்பர்களுடன் கூடிக் களிக்கலாம்; உறவினர்களை சந்திக்கலாம்; தண்ணியடிக்கலாம் என்பதினாலேயே கூடுதல் மகிழ்ச்சி. :D இந்த விடயம் மிகவும் வியாபாரமயப்படுத்தப்பட்டுவிட்டது.

நன்றி :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க பிறப்பால் சைவர்கள். ஆனால்.. ஊரிலேயே.. கரோல் ஆராதனைகளில் பங்கெடுத்திருக்கிறேன். தேவாலய திருவிழாக்களில் பங்கெடுத்திருக்கிறேன். நத்தார் தினம் ஊரிலும் பொதுவாக எல்லோராலும் கொண்டாடப்படும் ஒன்று தானே. வீதி உலா வரும் நத்தார் தாத்தாக்களுக்கு எல்லா மக்களும் வீதியில் இறங்கி மதிப்பளிப்பது.. எல்லாம் நடக்கிறது தானே. அவரை வரவேற்க வீடுகள்.. வீடுகளின் முன்னாள் உள்ள மரங்கள் எல்லாம் வண்ண மின் விளக்குகள் ஒளிர விட்டு.. கொண்டாடுவார்கள். கிறிஸ்தவர்கள்.. இந்துக்கள் என்ற வேறுபாடின்றி. ஆனால் முஸ்லீம்கள் இவற்றைச் செய்வது மிகக் குறைவு..!! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன திரியை  ஆரம்பித்தவரைக்காணோம்.....???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பது.... மதத்திற்கு அப்பால்பட்டு, பொதுவாக எல்லோருக்கும் விடுமுறை நாளாக அமைவதால்... அதனை எம்மவரும் கொண்டாடுகிறார்கள்.

இதனை யாருடைய வற்புறுத்தலும் இல்லாமலே... செய்கிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டியது.

எமது கொண்டாட்டமான ... தைப்பொங்கல், புதுவருடப் பிறப்பன்று இங்கு லீவு கிடைக்காது... வேலை செய்து கொண்டிருப்போம். அதனை ஈடுகட்ட, கிறிஸ்மஸ் விடுமுறையை கொண்டாடுகின்றோம்.

அத்துடன்.. எதிர்த்த வீடு, அயல் வீடு, மேல் வீடு, கீழ் வீடு  எல்லாம் அலங்கரித்து கொண்டாடும் போது...

நம்ம வீடு... அலங்காரம் இல்லாமல், வழமையான சோறையும், கறியையும் சமைத்து சாப்பிட்டால்... பிள்ளைகளுக்கும் ஒரு ஏமாற்றமாக.... நமக்கும் நல்லாவா இருக்கும். :D

வேலை செய்யும் இடத்தில்.... கிறிஸ்மஸ் அலவன்சை கூச்சப் படாமல் கை நீட்டி வாங்கும் நாம் :lol:, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் கொண்டாடுவதில் தவறில்லை.

நேரடி வற்புறுத்தல் இல்லையே தவிர எம் ஆட்கள் தமக்காகச் செய்வதை விட மற்றவர்கள் எம்மை பற்றி பெரிதாக நினைப்பதர்க்கோ அல்லது தம் அறிவுக்கு அப்படிச் செய்வதை தற்பெருமையாக எண்ணியோ தான் செய்கின்றனர் சிறி.

ஏன் நீங்கள் பொங்கல் அன்று அலங்கரிக்கக் கூடாது?? பிள்ளைகளுக்கு ஏன் எமது விழாக்கள் பற்றி விளங்கப்படுத்திச் சொல்லக் கூடாது ??? மற்றவர் செய்வதை நாமும் செய்யவேண்டும் என்பதே பிள்ளைகளுக்கு ஒரு தவறான வழிகாட்டல் தானே.

ஏன் வழமையான சோறையும் கறியையும் கொடுப்பான்.  வித்தியாசமாகச் செய்து கொடுப்பதுதானே ???

உனக்கு கிறிஸ்மஸ் அலவன்ஸ் கொடுக்கிறார்களா??? கொடுத்தால் அதுவும் தவறுதான். நான் வேலை செய்த இடத்தில் கிறித்தவர் அல்லாதவர்களுக்கு இல்லை என்று 95 இல் நிறுத்திவிட்டனர். அதுபற்றி நான் கவலை கொண்டதோ அன்றி அந்தக் காசுக்காக கிறித்தவத்தில் மாறலாம் என்றோ எண்ணியது கிடையாது. ஆனால் உங்கள் கதையைக்கேட்டால் சனம் அதுக்காகவும் தான் கொண்டாடுது போல.

மிகவும் பிழையான கருத்து.
 
கொழும்பில் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்களன்று கோலம் போட்டு, பொங்கி தமிழர்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறார்கள்.

எமது ஊரில் இருந்தது ஒரு கிறித்தவத் தேவாலயம், ஒரு கிறித்தவப் பள்ளி, ஒரு கிறித்தவ மிசனால் ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலை. இத்தனை இருந்தும் ஒரே ஒரு கிறித்தவக் குடும்பமே மதம் மாறி இருந்தது நான் ஊரில் இருக்கும் வரையும். அந்தப் பெண் என்னுடன் படித்தார். ஆனால் ஒருநாள் தன்னும் பொங்கல்  கொண்டாடியதில்லை.அதனால் நான் மற்றவர்களும் கொண்டாடுவதில்லை என்ன்று எண்ணியது தவறுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நாமும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நீங்கள் தான் இரண்டையும் எழதியுள்ளீர்கள்

இப்போ திணிப்பில்லாமல் அவரவர் சுயமாக எடுக்கும் முடிவுகளை நீங்கள் எப்படி சரியில்லை எனத்திணி

நான் சரியாகத்தான் எழுதியுள்ளேன். ஒருவரோ அன்றி ஒருசிலரோ சுயமாக முடிவு எடுத்தால் அது சரி என்பது அல்ல. வருங்கால சந்ததிக்கும் எதிகால இனத்தின் நன்மைக்குமாக தூர நோக்கு வேண்டும்.

அதாவது தேவையென்றால் மாற்றிக்கொள்ளலாம்

சுயநலமில்லையா இது...??

நீங்கள் தான் மொழிபற்றி தேவை அற்று முடிச்சுப் போட்டீர்கள். மொழி என்பது வாழ்வில் மிக அத்தியாவசியமான ஒன்று. ஆனால் நத்தார் வாழ்த்துக் கூறுவதும் கொண்டாடுவதும் அதனுடன் சமமாகப் பர்ர்க்ககூடியாவ்ன்று என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறிவு.

உங்கள் வாழ்வில் இதுவரை எந்த மற்ற மதக்கோயிலவ்களுக்கும் போகவில்லை என்பதை உறுதிப்படுத்தமுடியுமா??

ஒன்றுக்கு 100 தரம் யோசிக்கவும்

இங்கு எழுதினால்  எழுதியது தான்.. :icon_idea:

உங்களுக்கு ஒருகால் வாசிச்சால் விளங்காதுபோல. நான் இதுவரை என்ற சொல்லை எங்கே பயன்படுத்தினேன் ????ஈழத்தில் இருக்கும் போது கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்.யேர்மனியில் கூட இரண்டு மூன்று தடவைகள் சென்றுள்ளேன். இங்கு வந்த இந்த பதினோரு ஆண்டுகளில் இரண்டு தடவை வணக்கச் சென்றுள்ளேன். அதன்பின் இங்குள்ள கோவில்களின் அங்கு நிற்பவர்களின் நிலை பார்த்து கோவில்களுக்குச் செல்வதை விட்டுவிட்டேன்.

நான் வணங்கச் செல்வதோ அன்றி எந்தத் ஹ்டினத்துக்கும் செல்வதில்லை. ஏனெனில் எனக்கு என்னில்னம்பிக்கை உண்டு. வீட்டில் இருந்தவாறே இறைவனை வழிபட முடியும் என்பதும் தெரியும். கிருபன் எழுதியதையும் நான் அதற்குக் கொடுத்த பதிலையும் மீண்டும் வாசியுங்கள் விளங்கும். :icon_idea: :icon_idea:

தமிழர் கொண்டாட்டங்களில் தைப்பொங்கல், ஆடிப்பெருக்குத் தவிர்ந்த ஏனைய கொண்டாட்டங்கள் அனைத்துமே தமிழர்மரபுவழி வந்ததா என்ற சதேகம் உறுதியாகத் தீர்க்கப்படாமலே அவற்றைக் கொண்டாடிவருகிறோம். இந்நிலையில் ஏனைய இனங்களின் மதக் கொண்டாட்டங்களில் பங்குபற்றுவதை ஏன் தவறாக நோக்கவேண்டும். பாதிரியார் புதுப்பானைவைத்துப் பொங்கித் தைப்பொங்கலை தேவாலயத்தில் கொண்டாடியபோது நானும் அதில் பங்குபற்றியிருக்கிறேன்.

அண்ணா தைப்பொங்கல் மதம் சார்ந்த கொண்டாட்டம் அல்ல. எம்மவர்க்கு எது மத விழா எது பொதுவிழா என்பதுகூட தெளிவு இல்லை. அதுதான் பிரகுச்ச்சனையே.

நாங்க பிறப்பால் சைவர்கள். ஆனால்.. ஊரிலேயே.. கரோல் ஆராதனைகளில் பங்கெடுத்திருக்கிறேன். தேவாலய திருவிழாக்களில் பங்கெடுத்திருக்கிறேன். நத்தார் தினம் ஊரிலும் பொதுவாக எல்லோராலும் கொண்டாடப்படும் ஒன்று தானே. வீதி உலா வரும் நத்தார் தாத்தாக்களுக்கு எல்லா மக்களும் வீதியில் இறங்கி மதிப்பளிப்பது.. எல்லாம் நடக்கிறது தானே. அவரை வரவேற்க வீடுகள்.. வீடுகளின் முன்னாள் உள்ள மரங்கள் எல்லாம் வண்ண மின் விளக்குகள் ஒளிர விட்டு.. கொண்டாடுவார்கள். கிறிஸ்தவர்கள்.. இந்துக்கள் என்ற வேறுபாடின்றி. ஆனால் முஸ்லீம்கள் இவற்றைச் செய்வது மிகக் குறைவு..!! :):icon_idea:

கூழுக்கும் பாடி கஞ்சிக்கும் பாடுபவரா நீங்கள் நெடுக்ஸ் :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நாமும் திணிக்கவில்லை என்கிறீர்கள்

நீங்கள் தான் இரண்டையும் எழதியுள்ளீர்கள்

இப்போ திணிப்பில்லாமல் அவரவர் சுயமாக எடுக்கும் முடிவுகளை நீங்கள் எப்படி சரியில்லை எனத்திணி

நான் சரியாகத்தான் எழுதியுள்ளேன். ஒருவரோ அன்றி ஒருசிலரோ சுயமாக முடிவு எடுத்தால் அது சரி என்பது அல்ல. வருங்கால சந்ததிக்கும் எதிகால இனத்தின் நன்மைக்குமாக தூர நோக்கு வேண்டும்.

அதாவது தேவையென்றால் மாற்றிக்கொள்ளலாம்

சுயநலமில்லையா இது...??

நீங்கள் தான் மொழிபற்றி தேவை அற்று முடிச்சுப் போட்டீர்கள். மொழி என்பது வாழ்வில் மிக அத்தியாவசியமான ஒன்று. ஆனால் நத்தார் வாழ்த்துக் கூறுவதும் கொண்டாடுவதும் அதனுடன் சமமாகப் பர்ர்க்ககூடியாவ்ன்று என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறிவு.

உங்கள் வாழ்வில் இதுவரை எந்த மற்ற மதக்கோயிலவ்களுக்கும் போகவில்லை என்பதை உறுதிப்படுத்தமுடியுமா??

ஒன்றுக்கு 100 தரம் யோசிக்கவும்

இங்கு எழுதினால்  எழுதியது தான்.. :icon_idea:

உங்களுக்கு ஒருகால் வாசிச்சால் விளங்காதுபோல. நான் இதுவரை என்ற சொல்லை எங்கே பயன்படுத்தினேன் ????ஈழத்தில் இருக்கும் போது கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்.யேர்மனியில் கூட இரண்டு மூன்று தடவைகள் சென்றுள்ளேன். இங்கு வந்த இந்த பதினோரு ஆண்டுகளில் இரண்டு தடவை வணக்கச் சென்றுள்ளேன். அதன்பின் இங்குள்ள கோவில்களின் அங்கு நிற்பவர்களின் நிலை பார்த்து கோவில்களுக்குச் செல்வதை விட்டுவிட்டேன்.

நான் வணங்கச் செல்வதோ அன்றி எந்தத் ஹ்டினத்துக்கும் செல்வதில்லை. ஏனெனில் எனக்கு என்னில்னம்பிக்கை உண்டு. வீட்டில் இருந்தவாறே இறைவனை வழிபட முடியும் என்பதும் தெரியும். கிருபன் எழுதியதையும் நான் அதற்குக் கொடுத்த பதிலையும் மீண்டும் வாசியுங்கள் விளங்கும். :icon_idea: :icon_idea:

இல்லை சுமே..

மதம் என்பது ஒரு இனத்தின் குறியீடு அல்ல

மொழியே அதன் அடிநாதம்

அதையே  குறிப்பிட்டேன்

அதையே தேவைகள் கருதி விட்டுக்கொடுக்க தொடங்கிவிட்டோம்...

ஆனால் நண்பர்கள் உறவுகளின் மதவிடயங்களில் இறுக்கமாக இருக்க விரும்பவதையே குறிப்பிட்டேன்

மற்றும்படி

நானும்  ஒரு இந்துமத வெறியன் தான்

ஆனால் பல தலைமுறை அதிலிருந்து தூரப்போயாச்சு.......

அது சரியாகவே படுகிறது

யாரும் எந்த மதத்திலும் வெறியுடன் இருக்கவே தேவை இல்லை. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை மற்றைய மதங்களிலும் விட அதிக வெறி கொண்டவர்கள் மதத்தின் பெயரால் பெண்களை வதைப்பதிலும். ஆழ்ந்த தூரநோக்குச் சிந்தனை அற்ற இனம் எம்மினம். அதனால்த்தான் எம்மால் நீண்ட காலமாக எதையும் ஒருமனதாய் நின்று சாதிக்க முடியவில்லை.

உங்கள் காலத்துக்குப் பின்னரும் எம் பிள்ளைகள் இங்குதான் வேரூன்றப் போகின்றனர். நீங்களே உங்கள் பிள்ளைகளுக்குத் தவறான வழிகாட்டி ?? எங்கள் வாழ்வைப்பற்றி யார் அவர்களுக்குக் கூறுவது ???

நன்றி :D:lol:

சுமோ, கிறிஸ்துமஸ் பரிசு பொருள் வாங்கி கொடுத்தவுடன் எனது பிள்ளைகள் மதம் மாறிவிடபோவதில்லை. அவர்களுக்கு எமது பண்டிகை நாட்களும்

தெரியும். நாங்கள் மறந்தாலும் அவர்கள் நினைவூட்டிய நாட்களும் உண்டு. :o

உங்கள் எழுத்தை பார்த்தால் நீங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கபட்டு இருக்கிறீர்களோ என்று எண்ண தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கரம்பனில் ஒரு வேளாங்கன்னி கோயில் இருந்தது.ஒவ்வொரு வியாழக்கிழமையும் 5,6 மைல் தொலைவில் இருந்து ஆயிரக்கணக்கான சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் அந்தக்கோயிலுக்கு போய்வருவார்கள்,ஆனால் கடைசிவரையும் யாரும் கிறித்தவ மத்த்திற்கு மாறவில்லை.இறுக்கமான உலகில் வாழும் எங்களைப் போன்றோருக்கு ஒரு விடுதலை நாளாக இதை கொண்டாடுகிறோம்.அது எந்த மத்த்தின் விழாவாக இருந்தால் எமக்கென்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.