Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கு கூட்டமைப்பு மௌனமாக இருந்தாலே போதும். மக்களுக்குத்தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. கடந்த தேர்தலிலும் மகிந்த தோற்க வேண்டும் என்று விரும்பினோம். கூட்டமைப்பு மற்றொரு போர்க் குற்றவாளியை ஆதரித்து அறிக்கை விட்டது. விளைவு மகிந்த 2005 தேர்தலை விட அதிகமான வாக்குகளால் வென்றார்.

  • Replies 74
  • Views 3.3k
  • Created
  • Last Reply

முள்ளிவாய்க்கால் படுகொலையில் புலிகள் தலமையின் பங்கும் கணிசமான அளவில் உள்ளது. புலிகள் தலமை நினத்திருந்தால் முள்ளிவாய்க்கலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளில் பெருந்தொகை உயிருடன் தப்பியிருக்கலாம். இதில் எழிலனின் பங்கும் உள்ளது. 

செம்மணி என்பது பாகம் இரண்டு. பாகம் ஒன்று முல்லைத்தீவு முகாமில் சரணடைந்த நூற்றுக் கணக்கான சிங்களச் சிப்பாய்களைக் கொன்றது.
 
ஈசன் தயவு செய்து இப்படியான கருத்துக்கள் வேண்டாம். ஆனந்தி, ரவிகரன் போன்ற கீழ்நிலை மனிதர்களை விமர்சிக்கும் போது எமது போராளிகளை நாம் கொச்சைப் படுத்த வேண்டாம்.

ஈசன் தயவு செய்து இப்படியான கருத்துக்கள் வேண்டாம். ஆனந்தி, ரவிகரன் போன்ற கீழ்நிலை மனிதர்களை விமர்சிக்கும் போது எமது போராளிகளை நாம் கொச்சைப் படுத்த வேண்டாம்.

போராளிகளை கொச்சைப்படுத்தும் நோக்கம் ஒரு போதும் இல்லை. அப்படி கனவிலும் செய்யப் போவதில்லை. அனால் ஆனந்தி போன்றவர்களைத் தூண்டி விடுப‌வர்களுக்கு அவர்களின் எல்லை தெரிய வேண்டும். தொடர்ந்து எம்மினம் அழிவுகளைச் சந்திக்க முடியாது. எந்த நோக்கமும் அடையப்படக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அடையப்பட முடியாத ஒன்றுக்காக மக்கள் மீட்சி இன்றி அழிந்து கொண்டிருக்க‌ முடியாது.  
 
என் வார்த்தைகள் போராளிகளைக் கொச்சைப் படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கு கூட்டமைப்பு மௌனமாக இருந்தாலே போதும். மக்களுக்குத்தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. கடந்த தேர்தலிலும் மகிந்த தோற்க வேண்டும் என்று விரும்பினோம். கூட்டமைப்பு மற்றொரு போர்க் குற்றவாளியை ஆதரித்து அறிக்கை விட்டது. விளைவு மகிந்த 2005 தேர்தலை விட அதிகமான வாக்குகளால் வென்றார்.

இல்லை புலவர்,  கூட்டமைப்பின் மவுனத்தை கடைசியில் மகிந்த கொம்பனி தமக்கு சாதகமாக பயண்படுத்துவார்கள், கடந்த தேர்தலின் போது யாழிலிருந்து ஒளிபரப்பாகும் டி.வி மூலம் தேர்தல் தினத்தன்று புலிகள் தேர்தலை புறக்கணிக்கச் சொல்கிறார்கள் என 5 நிமிடத்துக்கு ஒரு முறை அறிவித்தார்கள். அதே போல் இம்முறையும் தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி கூட்டமைப்பின் பெயரில் துண்டுப் பிரசுரம் தேர்தல் நாளில் வெளியிட்டால் என்ன செய்யமுடியும்.
மகிந்த அதிக  பட்சம் தமிழர்களிடம் எதிர் பார்ப்பது தேர்தல் புறக்கணிப்பு தான், இதை யாவரும் அறிவர், இன்று ஆனந்தியும் , ரவிகரனும் மகிந்த வின் விருப்பத்தினை நிறைவேற்றவே செயலாற்றுகிறார்கள் .

கடந்த தேர்தலிலும் மகிந்த தோற்க வேண்டும் என்று விரும்பினோம். கூட்டமைப்பு மற்றொரு போர்க் குற்றவாளியை ஆதரித்து அறிக்கை விட்டது. விளைவு மகிந்த 2005 தேர்தலை விட அதிகமான வாக்குகளால் வென்றார்.

கடந்த தேர்தலில் மகிந்த வென்றதற்குக் காரணம் போர் வெற்றியலை.

https://www.youtube.com/watch?v=Sixhwd6Ueuc//

மிக அருமையான கருத்துக்கள் கேட்டுப் பாருங்கள்.

நன்றி வாலி (வாலி இதனை திண்ணையில் இணைத்திருந்தார்)

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான கருத்துக்கள் கேட்டுப் பாருங்கள்.

நன்றி வாலி (வாலி இதனை திண்ணையில் இணைத்திருந்தார்)

  • கருத்துக்கள உறவுகள்

60 ஆண்டுக்கு முன்னும் இன்றும் சிங்கள அரசியல் போக்கில் மாற்றமில்லை.அமெரிக்கா கூட கியூபாவோடு உறவு வைக்க சமிக்ஞை காட்டுது.சிங்களம்??? செம்மணி கிருசாந்தி யும் இராணுவமும் ஒன்று உங்களுக்கு..எப்ப இருந்து. மணலாறில்..சூரிய கதிரில் எமது போராளிகளை நூற்றுக்கணக்கில் கொன்று அடுக்கிய போது எங்கு போனீர்கள்...???? சும்மா கனதையும் எழுதி..சம்பந்தனின் 5 சகாப்த கால தவறுகளை மறைக்க முடியாது.இது சம்பந்தனுக்கு கடைசி காலம்.!!!!!!

Edited by nedukkalapoovan

நல்லதொரு இணைப்பு

நெடுக்கரை எதிர்பார்த்தேன் வந்துட்டார்.   :lol:

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தோற்கடிக்கப்படவேண்டியது எவ்வளவிற்கு அவசியமோ அதேயளவு அவசியமானது நாம் மீண்டும் சிங்கள இனவாதத்திற்கு அடிபணியாது இருப்பது.

சம்பந்தரின் முடிவினை எதிர்ப்பவர்களினது கருத்தைக் கேட்டிருப்பீர்கள், அதில் என்ன தவறிருப்பதாக நினைக்கிறீர்கள் ? அவர்கள் கூறுபவை யதார்த்தமானவைதானே ??

நிபந்தனையற்ற ஆதரவு என்பதன் மூலம் எமக்குக் கிடைக்கும் நண்மை என்ன ??

சம்பிக்க ரனவக்கவும், ஜே. வீ. பீ யும், இன்னும் இதர சிங்களப் பேரினவாத பெளத்த கட்சிகளும் இருக்கும் கூட்டணியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவின்மூலம் தமிழருக்குச் சாதகமாக எவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறீர்கள் ?

சந்திரிக்காவும் ரணிலும் ஏற்கனவே தமிழர்கள் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை உடையவர்கள் என்பது நாம் அறிந்ததுதானே?? கூட்டணியிலிருக்கும் மற்றைஅயவர்கள் பற்றிப் பேசவே தேவயில்லை, அவ்வளவிற்கு பச்சை இனவாதிகள். அவர்களுடன் கூட்டமைப்பும் நிபந்தனையற்ற ஆதரவின் மூலம் இணைகிறதென்பது சரியான முடிவுதானா??

கூட்டமைப்பு இந்த முடிவை மக்களிடம் விட்டிருக்கலாம். மக்களுக்குத் தெரியும் யாரை ஆதரிக்க வேண்டுமென்று. மைத்திரிபாலதான் பதவிக்கு வருகிறார் என்று வைத்துக்கொண்டாலும், அது கூட்டமைப்பின்  ஆதரவினால் வந்ததாக இருக்கக் கூடாது என்பதுதான் எனது விருப்பம்.

2009 வரை சிங்களப் போர் வெறியனாகவிருந்து ஒரு இனக்கொலையை அரங்கேற்றிய நாயகனான சரத் பொன்சேக்காவை சம்பந்தர் ஆதரித்ததற்கும் இப்போது மைத்திரியை ஆதரிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

முடிவாக, மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும், ஆனால், தமிழர்கள் அவருக்கு நிகரான இன்னொரு இனவாதியை நிபந்தனையற்று, பகிரங்கமாக ஆதரிப்பதனால் இது நடக்கக் கூடாது. மாறாக தமிழர் யாரையும் வெளிப்படையாக ஆதரிக்காது தம்மைக் கருவருத்தவனை அகற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு முகாமில் சரண்டைந்த இராணுவத்தினர் பற்றிய விபரங்களை இங்கே பதிந்து விடுங்கள் ஈசன் (செவி வழிக்கதை வேணாம்)

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது நின்ற போராளிகளே தெரிவித்த விடயமாச்சே.

அதாவது, அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

அன்று சரணடைந்த இராணுவத்தினர் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டபோது விடுதலைப் புலிகளின் தலைமையின் உத்தரவுப்படி தாம் நடக்க வேண்டியதாக இருந்ததாக பின்னர் கவலையுடன் தெரிவித்தனர்.

இதேபோன்று கிளிநொச்சியில் சரணடைந்த இராணுவ மேஜர் தரத்திலான அதிகாரியை செல்வராஜா மாஸ்டர் தலைமையிலான போராளிகள் பின் பிடரியால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கதை தெரியுமா?

அந்த மேஜர் தனது பொக்கட்டில் இருந்த மனைவி, பிள்ளையின் படத்தினை காட்டி இவர்களுக்காகவேனும் தன்னை விடுவிக்குமாறு கெஞ்சி இருந்தாராம்.

மேலும், கிளிநொச்சியில் சரணடைந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினரை என்ன செய்வது என்று "பால்ராஜ், தீபன் போன்ற தளபதிகள் கேட்டபோது உவங்களை வைத்து சாப்பாடு போட சாப்பாடு வைத்திருக்கிறியோ, போட்டுத் தள்ளு" என்றாராம் பிரபாகரன்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கையளிப்பதுதான் பால்ராஜ், தீபன் போன்றவர்களின் விருப்பமாக இருந்தது.

எமது முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று.

ரகுநாதன்,

உந்த சிங்கள கடும்போக்காளர்கள் எந்த கூட்டத்தில் இருந்தாலும் விளைவு ஒன்றுதான். இரண்டாவது எந்த நிபந்தனையும் வைக்கலாம் அனால் அதெல்லாம் நடைமுறை படுத்தப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

நிபந்தனையின் பேரில் ஆதரவளித்து பின்னர் வாபஸ் வாங்க இங்கே இடமில்லை. நிபந்தனைக்கு உடன்பட்டால் அதையே மகிந்த தூக்கிப்பிடித்து வென்றும் விடுவான் அப்பிடியான ஒரு நிபந்தனை நோக்கத்தை உடைத்து விடாதா? அப்படியே மைத்திரி வென்று பின்னர் நிபந்தனையை பறக்கவிட்டால் கூட்டமைப்பை என்ன சொல்லுவோம்? 

இன்னுமொன்று, மைத்திரி ஒரு குறுகிய கால திட்டத்துடன் தான் தேர்தலில் நிக்கிறார் அவர்களின் நேக்கம் மகிந்தவை மாற்றுவது அதுவே எமக்கும் நன்மை என்றால் அதை ஆதரிப்பதில் என்ன நிபந்தனை வைக்கமுடியும்? 

கூட்டமைப்பு மக்களிடம் விட்டிருந்தால் என்பது வாதம்தான், இருந்தாலும் தமிழ்மக்களின்  பிரதிநிகள் முக்கியமான தேர்தலில் மகளை கைவிட்டமாதிரி இராதா? அப்படி மகள் முடிவெடுத்தால் கூட்டமைப்பு எதற்கு. 

தமிழ் மக்கள் புறகனித்தால் மகிந்தவுக்கு சாதகமாக இராதா? 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

செவ்லராசா வாத்தி 90இல் வீரச்சாவு

  • கருத்துக்கள உறவுகள்

நிபந்தனையான ஆதரவு, நிபந்தனையற்ற ஆதரவு என்று எதுவுமே கூறாமல் மக்களிடமே யாரை ஆதரிப்பதென்கிற முடிவை விட்டிருக்கலாம்.

நிபந்தனை போட்டல்ப் போல அவர்கள் அதை காற்றில் தூக்கிக் காடாசிவிடுவார்கள் என்பது உண்மை. அதேபோல நிபந்தனையற்ற ஆதரவு என்றாலும் கூட அவர்கள் தாம் நினைத்ததைத்தான் செய்வார்கள்.

ஆகவே கூட்டமைப்பு இதில் யாரையும் ஆதரிக்காமல் ஒதுங்கியிருந்திருக்கலாம் என்றுதான் சொல்கிறேன். அந்த முடிவை மக்களிடம் விட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் புலியெதிர்ப்பு செய்து முடிந்து இப்ப புதுசா ஈசனும் சேர்ந்திருக்கார்......புலி எதிர்ப்பு செய்தால் தான் பிரபலம் ஆகலாம்

டிசைன் அப்பிடி.....

  • தொடங்கியவர்

இன விடுதலைக்காக உயிரைக் கொடுப்பேனே தவிர துரோகியாக உயிரை விடமாட்டேன் - அனந்தி சசிதரன் Audio In

http://www.yarl.com/forum3/index.php?/topic/151484-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/

நிபந்தனையான ஆதரவு, நிபந்தனையற்ற ஆதரவு என்று எதுவுமே கூறாமல் மக்களிடமே யாரை ஆதரிப்பதென்கிற முடிவை விட்டிருக்கலாம்.

நிபந்தனை போட்டல்ப் போல அவர்கள் அதை காற்றில் தூக்கிக் காடாசிவிடுவார்கள் என்பது உண்மை. அதேபோல நிபந்தனையற்ற ஆதரவு என்றாலும் கூட அவர்கள் தாம் நினைத்ததைத்தான் செய்வார்கள்.

ஆகவே கூட்டமைப்பு இதில் யாரையும் ஆதரிக்காமல் ஒதுங்கியிருந்திருக்கலாம் என்றுதான் சொல்கிறேன். அந்த முடிவை மக்களிடம் விட்டிருக்கலாம்.

மக்கள் தங்கள் முடிவை தான் எடுப்பார்கள், அனால் கூட்டமைப்பு மகளிடமே விட்டுவிடுவதாக அறிவிப்பது சாதுரியமாக படவில்லை.

நாளைக்கே ஒரு சர்வதேச பிரதிநிகளிடம் இதை எப்படி நியாயப்படுத்துவது, மக்களை வழிகாட்ட முடியாத ஒரு அமைப்பு அந்த மாக்கள் தொடர்பான விடயத்தை எப்படி கையாளமுடியும்? 

நானும் முன்னர் அப்படித்தான் நினைத்தேன் இருந்தாலும் இது ஒரு இலகுவான முடிவாக இருந்திருக்காது என்றே படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்லராசா வாத்தி 90இல் வீரச்சாவு

உண்மை.

இந்திய இராணுவத்துக்கு எதிராக தீவிரமாக யாழில் பல தாக்குதல்களை தொடுத்த செல்வராஜா மாஸ்டர் வேறு. நான் கூறும் செல்வராஜா மாஸ்டர் வேறு.

ஒரே பெயர்களில் பல போராளிகள், தளபதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்து இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை சரியாக வழிநடத்த முடியாத அமைப்பென்று எப்படிக் கூறுகிறீர்கள் ?

மக்களிடம், நீங்கள் யாரை ஆதரிப்பதென்று எமக்கு நடந்துவரும், நடந்துவந்த அக்கிரமங்களைப் பார்த்து, அவற்றை யார் யார் செய்தார்கள் என்பதைப் பார்த்து வாக்களியுங்கள் என்று கூறுவது தான் கூட்டமைப்பு செய்திருக்க வேண்டியது. வேண்டுமென்றால், கட்டாயம் வாக்களியுங்கள், வாக்குகளை வீணாக்க வேன்டாம் என்றுகூடச் சொல்லலாம். அதுவும் ஒரு வழிகாட்டல்தானே?!

நீங்கள் கூறியதற்காக கேட்கிறேன், இதுவரை கூட்டமைப்பு மக்களை வழிநடத்திய சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கு அவை நண்மையாக முடிந்ததென்று கூறமுடியுமா?

:)  :)  :)   கூட்டமைப்பை விடுங்கோ... தமிழ் மக்களுக்கு நன்மை செய்த ஏதாவது ஒரு அமைப்பை காட்டமுடியுமா? 

தீமை செய்யாமல் இருப்பதே நமை என்றாகிவிட்டது எங்களின் நிலைமை  :)

  • கருத்துக்கள உறவுகள்

:)  :)  :)   கூட்டமைப்பை விடுங்கோ... தமிழ் மக்களுக்கு நன்மை செய்த ஏதாவது ஒரு அமைப்பை காட்டமுடியுமா? 

தீமை செய்யாமல் இருப்பதே நமை என்றாகிவிட்டது எங்களின் நிலைமை  :)

இதில் ஒன்றும் உள்குத்து வைத்து நீங்கள் பேசவில்லையே ??

உண்மைதான், இன்றுவரை நண்மை கிடைக்கவில்லை....எப்போதுதான் கிடைக்குமோ ? :(

  • கருத்துக்கள உறவுகள்

தகுதி தராதரம் அற்றவர்களை தம்மோடு சேர்க்கும் போது இப்படியான பிரச்சனைகள் வரும். ஆனந்தியை என்ன தகுதியில் சேர்த்தார்களோ தெரியவில்லை. அறிவில்லாத  "எழிலன்" (??) செய்த காரியங்களின் பலன் எல்லருக்கும் தெரியும். இப்ப இவவின் முறை போல் இருக்கிறது.
 
பொது மக்களுக்கு அழிவுக‌ளை ஏற்படுத்துவதன் மூலம் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் புலிகள் தலமையின் சிந்தனைப் போக்கு இவர்களிடமும் இருக்கிறது. 
 
சம்பந்தன், மாவை போன்றவர்கள் இவர்களை கூட்டமைப்பில் இருந்து விலத்த வேண்டும். தமிழர்களின் எதிர்காலத்தை தம் அறிவீனத்தாலும், குறுகிய மனப்பான்மையாலும், சுய சிந்தனையில்லாமல் பிற அறிவீலிகளின் தூண்டுதலாலாலும் சிதைக்கும் இவர்கள் இனத்தின் எதிரிகளே.
 
தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் இனப்படுகொலையாளனை வெல்ல வைப்பது எப்பேர்ப்பட்ட இனத்துரோகம். தேர்தல் புறக்கணிப்பு என்று சொல்லிக் கொண்டு மஹிந்தவை வெல்ல வைப்பதுதான் இவர்களின் நோக்கம். 
 
முள்ளிவாய்க்கால் படுகொலையில் புலிகள் தலமையின் பங்கும் கணிசமான அளவில் உள்ளது. புலிகள் தலமை நினத்திருந்தால் முள்ளிவாய்க்கலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளில் பெருந்தொகை உயிருடன் தப்பியிருக்கலாம். இதில் எழிலனின் பங்கும் உள்ளது. 
 
கூட்டமைப்பு இவர்களை அகற்ற வேண்டும். மக்களும் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

இரத்தப்பொட்டு வாங்கி தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த  த.வி.கூவின் ஆரம்பகால உறுப்பினர்கள் தான் சம்பந்தரும் மாவையும். இரண்டு பேரும் கழுவின மீனுக்குள் நழுவின மீனுகள். :lol:  :lol: 

இரத்தப்பொட்டு வாங்கி தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த  த.வி.கூவின் ஆரம்பகால உறுப்பினர்கள் தான் சம்பந்தரும் மாவையும். இரண்டு பேரும் கழுவின மீனுக்குள் நழுவின மீனுகள். :lol:  :lol: 

சம்பந்தர் ஆரம்ப கால உறுப்பினர் அல்ல.
 
மாவை ஆரம்ப கால "ஆயுதப்" போராட்ட உறுப்பினர்.    :)
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது நின்ற போராளிகளே தெரிவித்த விடயமாச்சே.

அதாவது, அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

அன்று சரணடைந்த இராணுவத்தினர் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டபோது விடுதலைப் புலிகளின் தலைமையின் உத்தரவுப்படி தாம் நடக்க வேண்டியதாக இருந்ததாக பின்னர் கவலையுடன் தெரிவித்தனர்.

இதேபோன்று கிளிநொச்சியில் சரணடைந்த இராணுவ மேஜர் தரத்திலான அதிகாரியை செல்வராஜா மாஸ்டர் தலைமையிலான போராளிகள் பின் பிடரியால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கதை தெரியுமா?

அந்த மேஜர் தனது பொக்கட்டில் இருந்த மனைவி, பிள்ளையின் படத்தினை காட்டி இவர்களுக்காகவேனும் தன்னை விடுவிக்குமாறு கெஞ்சி இருந்தாராம்.

மேலும், கிளிநொச்சியில் சரணடைந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினரை என்ன செய்வது என்று "பால்ராஜ், தீபன் போன்ற தளபதிகள் கேட்டபோது உவங்களை வைத்து சாப்பாடு போட சாப்பாடு வைத்திருக்கிறியோ, போட்டுத் தள்ளு" என்றாராம் பிரபாகரன்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கையளிப்பதுதான் பால்ராஜ், தீபன் போன்றவர்களின் விருப்பமாக இருந்தது.

எமது முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று.

உண்மைதான்.. புலிகளிடம் மாட்டிய இன்னொருத்தர் சரத் பொன்சேகா.. அவரும் கைடெுத்து கும்பிட போராளிகள தலைமையிடம் கேட்டார்கள்.. பொன்சேகா குடியிருக்க பங்களா ஏதும் வச்சிருக்கிறீங்களா என்று தலைமை கேட்டதை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை.. ஆனாலும் தலைமையின் ஆணையை மீறி அவரை விடுவித்தார்கள்.. பிறகு என்ன நடந்தது என்பது வரலாறு.

எல்லாரும் புலியெதிர்ப்பு செய்து முடிந்து இப்ப புதுசா ஈசனும் சேர்ந்திருக்கார்......புலி எதிர்ப்பு செய்தால் தான் பிரபலம் ஆகலாம்

டிசைன் அப்பிடி.....

நாங்க எப்பவோ புலி எதிர்ப்புத்தான் சுண்டல்.

இப்பதான் நீங்க நான் எழுதினத வாசிக்கிறீங்க போலை இருக்கு.  :D

  • கருத்துக்கள உறவுகள்

60 ஆண்டுக்கு முன்னும் இன்றும் சிங்கள அரசியல் போக்கில் மாற்றமில்லை.அமெரிக்கா கூட கியூபாவோடு உறவு வைக்க சமிக்ஞை காட்டுது.சிங்களம்??? செம்மணி கிருசாந்தி யும் இராணுவமும் ஒன்று உங்களுக்கு..எப்ப இருந்து. மணலாறில்..சூரிய கதிரில் எமது போராளிகளை நூற்றுக்கணக்கில் கொன்று அடுக்கிய போது எங்கு போனீர்கள்...???? சும்மா கனதையும் எழுதி..சம்பந்தனின் 5 சகாப்த கால தவறுகளை மறைக்க முடியாது.இது சம்பந்தனுக்கு கடைசி காலம்.!!!!!!

செல்வநாயகம் முதல் பிரபாகரன் வரை தலைவர்களாக இருந்து செய்த தவறுகளை எல்லாம் இன்று தலைவராக இருக்கும் சம்பந்தன் மேல் போடாதீர்கள். ஐந்து தசாப்த தலைவர்கள் அனைவரும் செய்த தவறுகளை அவர்கள் செய்த தவறுகள் என்று முதலில் நீங்கள் ஏற்று கொள்வதானால் சம்பந்தன் செய்த தவறுகளை பற்றி நீங்கள் சொல்வதில் நேர்மை இருக்கும்.

சம்பந்தனிற்கு இது கடைசி காலம் என்று சொல்கிறீர்கள். செல்வநாயகத்திற்கும் பிரபாகரனுக்கும் கடைசிக்காலம் பற்றி இனி கதைப்பதில் பயனில்லை என்றா அது பற்றி நீங்கள் எதுவும் எழுதவில்லை? சம்பந்தனிற்கு பிறகு சுமேந்திரன் தலைமையுடன் நீங்கள் வாழ வேண்டி இருக்கும். அதை புரிந்து கொண்டால் சம்பந்தனே நீண்ட காலம் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.